Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் குண்டுவெடிப்பு

Featured Replies

நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது.

கொழும்பில் இன்றிரவு இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. இரவு எட்டு மணியளவில் இடமம்பெற்ற இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தால் உயிரழப்புக்கள் ஏற்பட்டவில்லை என முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்..

நன்றி நிதர்சனம்

இது உறுதிப்படுத்தப்பட தகவலா? கொழும்புக்கு தொலைபேசியின் ஒரு சிலரை தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு சரிவர தெரியவில்லை. கொழும்பில் உள்ள கள நண்பர்கள் உறுதிப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

5 இடங்களில் குண்டுகள் வெடித்ததாக சற்றுமுன்னர் ஒரு வானொலியில் தெரிவித்தார்கள். இதனை உறுதிப்படுத்தமுடியவில்லை..மே

ஓம் மதன் ஆனால் சேதம் ஒன்றுமில்லை என்று கூறுகிறார்கள்.

Five explosions in and around Sri Lankan capital

Shimali Senanayake in Colombo, January 24th, 2006, 9:30 pm. At least five explosions took place in and around the Sri Lankan capital Colombo on Tuesday, the military and police said.

There were no casualties but police believe the explosions were synchronize d.

"The blasts appear to be organized," said military spokesman Brig. Prasad Samarasinghe. "We can't say immediately who is responsible."

One explosion in the heart of the city took place in a garbage dump, he sai d.

Two others in the suburban towns of Mt. Lavinia and Nugegoda were near railway tracks, police in the area said, when contacted by telephone. It was not immediately clear if the explosions damaged the tracks.

The other two blasts were near a bus stand and a fertilizer store. Police had commenced investigations.

The explosions took place hours ahead of Norway's top peace envoy Erik Solheim heading to the rebel capital of Kilinochchi for talks with Tiger leader Velupillai Prabhakaran, to save Sri Lanka from sliding back to war

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருக்கின்ற ஒரு நண்பர் உண்மை என்று சொன்னார்....

இந்த இரண்டு இணைப்புகளிலும் செய்தி போட்டிருக்கின்றார்கள் ...

http://www.hindu.com/thehindu/holnus/00120...00601242131.htm

http://www.alertnet.org/thenews/newsdesk/COL136424.htm

தகவல் தந்த நண்பர்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி அல்லது ஹெல உறுமையாவின் வேலையாக இருக்கலாம்,, ஏற்கனவே இலங்கை குத்துமதிப்பு புலனாய்வு பிரிவு பல முறை எச்சரிக்கை விடுத்தது, அதனைவிட அமெரிக்கா, நோர்வே தூதுவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள், புலிகள் மீது பழி போடுவதற்கு செய்யப்பட்டவேலையாக இருக்கலாம், :idea:

டக் அங்கிள் சொன்ன மாதிரிதான் கொழும்பில் இருப்பவர்கள் சொன்னார்கள் ஆனா சிங்கள அரசு யாரை கை காட்டும் எண்டு தெரிஞ்ச விடயம்தானே :roll:

புலி வைச்சாலும் உருப்படியா வைக்குமே தவிர இப்படி வெடி கொழுத்திப் போடாது.. என்றீங்கள்...! :wink: :idea:

புலி வைச்சாலும் உருப்படியா வைக்குமே தவிர இப்படி வெடி கொழுத்திப் போடாது.. என்றீங்கள்...!

யார் அப்படிச் சொன்னது??

கொழும்பில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு!!!

றுசவைவநn டில Pயயனெலையn வுரநளனயலஇ 24 துயரெயசல 2006

சிறீலங்கா தலைநகர் கொழும்பில் இன்று ஐந்து இடங்களில் சிறிய குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இக்குண்டு வெடிப்புக்களால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். (மேலதிக விபரம் இணைப்பு)

இக்குண்டு வெடிப்புக்கள் திட்டமிட்டே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவதாக தெரிவித்துள்ள சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, இக்குண்டு வெடிப்புக்களிற்கு யார் பொறுப்பு தாங்களால் குறிப்பிடமுடியவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மூன்று குண்டு வெடிப்புக்களும், கல்கிசை மற்றும் நுகேகொடப் பகுதிகளில் தலா ஒரு குண்டு வெடிப்பும் நடந்துள்ளது.

கொழும்பு நகரில் குப்தைத்தொட்டி ஒன்றிலும், பேரூந்து தரிப்பிடம் மற்றும் கடை ஒன்றிற்கு அருகிலுமே வெடித்துள்ள அதேவேளை கல்கிசை மற்றும் நுகேகொடப்பகுதிகளில் தொடரூந்து பதைகளிற்கு அண்மையிலே குண்டுகள் வெடித்துள்ளன.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி அல்லது ஹெல உறுமையாவின் வேலையாக இருக்கலாம்,, ஏற்கனவே இலங்கை குத்துமதிப்பு புலனாய்வு பிரிவு பல முறை எச்சரிக்கை விடுத்தது, அதனைவிட அமெரிக்கா, நோர்வே தூதுவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள், புலிகள் மீது பழி போடுவதற்கு செய்யப்பட்டவேலையாக இருக்கலாம், :idea:

இது ஜேவிபியின் மூன்றாம் கிளர்ச்சியின் ஆரம்பமாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகத் தான் இருக்கின்றது. இப்போது உள்ளுரில் மகிந்தாவிற்கு எதிரான பிரச்சார மேடைகளை நடத்தி வருகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் 5 இடங்களில் குண்டு வெடிப்புகள்: பின்னணி என்ன?

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் கொழும்பிற்கு வெளியேயும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.10 மணி முதல் 9 மணிவரை 5 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.

இதனால் அந்த பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

பொரளையில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் (காசில் வீதிச் சந்தி) உள்ள குப்பைத் தொட்டியிலும் கல்கிசை மற்றும் நுகேகொடையில் கட்டிய ஹண்டிய தொடரூந்து பாதையில் 8.25 மணியளவிலும் கிரிபத்கொடையில் பேரூந்து தரிப்பிடத்திலும் ஹெந்தளையில் உரக் களஞ்சியத்திற்கு பின்புறமாகவும் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

நுகேகொடை தொடரூந்து நிலையத்தை அவிசாவளை தொடரூந்து கடப்பதற்கு சற்று முன்பாக இந்தக் குண்டு வெடித்தது. இதில் தொடரூந்து பாதையினது கட்டைகள் சேதமடைந்தன. இதையடுத்து அந்தத் தொடரூந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்தக் குண்டுவெடிப்பால் நுகேகொட பகுதி இருளில் மூழ்கியது. அந்தப் பாதையினூடாகச் செல்லும் அனைத்து தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.

இதையடுத்து அனைத்து தொடரூந்து நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொடரூந்து சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது குண்டு கல்கிசை தொடரூந்து நிலையம் அருகே உணவகம் அருகில் 8.30 மணியளவில் வெடித்தது.

இதையடுத்து 30 ஆவது நிமிடத்தில் வத்தளையில் மக்கிளாரன்ஸ் வீதியில் 9 மணியளவில் குண்டு வெடித்தது. இந்தக் குண்டிவெடிப்பில் அந்த வீதியில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. எவருக்கும் காயமேற்படவில்லை.

அதன் பின்னர் கிரிபத்கொட நகரின் மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் குண்டு வெடித்தது.

இச்சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கொழும்பின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இரவு முழுமைக்கும் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சிறிலங்கா காவல்துறையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் சந்திரா பெர்னாண்டோ கூறினார்.

மேலும் இவை அதிசக்தி வாய்ந்த குண்டுகள் அல்ல என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

இந்தக் குண்டுவெடிப்புகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் அண்மைய தேடுதல்கள் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா பாதாள உலகக் குழுவினரே இந்தக் குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்கக் கூடும் என்றும் சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து நகரில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்கு விரைந்தனர்.

தகவல் மூலம்- புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை அடுத்து மேல் மாகாணம் முழுவதும் சோதனை.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து மேல் மாகாணம் முழுவதும் சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு மேலதிகமாக படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.எனினும் எவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது சில வீதிகள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 7.45 முதல் 9.15 க்கு இடைப்பட்ட நேரத்தில் பொரல்ல, நுகேகொட கல்கிஸ்ஸை கிரிபத்கொட, வத்தளை ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.

நேற்று இரவு 7.45 க்கு பொரல்ல பெண்கள் வைத்தியசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.எனினும் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

நுகெகொடை பழைய கெஸ்பாவ வீதி தொடரூந்து கடவையில் 8.10 அளவில் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இதன்காரணமாக அந்த இடத்தில பாரிய குழி ஏற்பட்டது.

கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளைக்கு செல்லவிருந்த இரவு 8 மணி தொடரூந்து 8.30 அளவில் நுகெகொடை தொடரூந்து மையத்தை வந்தடையவிருந்தது.

இந்தநிலையில் இந்த தொடரூந்தை இலக்கு வைத்து குண்டு வெடிக்கவைக்கப்பட்டிருக்கலா

கொழும்பிலை தானே பெரியதொரு தேடுதல் நடவடிக்கையை செய்திருந்தார்கள் அந்த நேரம் பொரளைப் பகுதியில் பொலிஸ்காரர் அடிவாங்கின சம்பவமும் நடந்ததுதானே.... பாதாளலோகத்தினர் கொழும்பில் செய்யும் கொலைகளை கூட வெளிநாடுகளுக்கு யாருடைய பேரிலை போட்டு தெரிவிச்சவை அரசாங்கம்.... இண்டைக்கு சமாதான தூதுவர் வந்து நிக்கிற சமயம் இந்த குண்டு வெடிப்பு இலங்கை அரசாங்கத்துக்கு நல்ல பேரை எடுத்துக் குடுக்கும் இனியாவது உலக நாடுகள் விளங்கி கொள்ளதா பாப்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.