Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை ரசிப்பேன்!

Featured Replies

borneanbirdfestivalsepi.jpg

குட்டிகுட்டியாய்

குழந்தை வரைந்த

பறவைகளின்

ஓவியத்தில்

தன் குஞ்சுகளை தேடி

வந்திருக்ககூடும்

நிஜத்தில்

ஒரு தாய் பறவை!

-துங்கை செல்வா ..பெரம்பலூர்!

  • Replies 59
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இரண்டு வகை

ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் !

ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்

இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்.

-கலீல் ஜிப்ரான்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வகை

ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் !

ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்

இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்.

-கலீல் ஜிப்ரான்

நல்ல கருத்துள்ள வசனம், தூங்கிற மாதிரி நடிப்பவர்களுக்கு இரவென்ன பகலென்ன

"இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்" இது ஆபிஸில் தூங்கிறவர்களையா?

  • தொடங்கியவர்

"இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்" இது ஆபிஸில் தூங்கிறவர்களையா?

அதுக்கு எப்டி ,முழுசா எனக்கு அர்த்தம் தெரியும் உடையாரண்ணா?

ஆபீஸில வேலைபார்க்குற நீங்கதான் சொல்லணும்! <_<

  • தொடங்கியவர்

sunflower_1423839c.jpg

வண்ணமாய் வெளியில்

அலங்காரம்..

உள்ளே ..வெறும்

கூவ நிறம்..!

ஏ பாரதமே உன்

சாயல் கண்டால்..

நான்..

பூக்களைகூட

வெறுக்கும்

முதல் மனிதன்!

  • தொடங்கியவர்

சாதி!

அரசு

மருத்துவமனை

பிரசவ வார்டில்

அருகருகே பிறந்த

உள்ளூர்வாசிகள்....

இறந்தபின்பு

அடக்கம்

செய்யப்பட்டனர்

வெவ்வேறு இடங்களில்!

என்.மதியழகன்

  • தொடங்கியவர்

வழி

வேர் என்பது..

கண்ணுக்கு தெரியாத

மரத்தின் பூ..!

பூ என்பது..

கண்ணுக்கு தெரியும்

மரத்தின் வேர்!

-தாகூர்

  • தொடங்கியவர்

நட்பு

காதலித்தேன்

நண்பனை

இழந்தேன்..

ஒரு நாள்

விபத்து..

உயிர்போகும்

நிலை...

காதலி வந்தாள்

முத்தம்

கொடுத்தாள்..

நண்பன்

வந்தான்...

ரத்தம் கொடுத்தான்!!

S.Murugan

  • கருத்துக்கள உறவுகள்

ஏ பாரதமே உன்

சாயல் கண்டால்..

நான்..

பூக்களைகூட

வெறுக்கும்

முதல் மனிதன்!

எல்லாம் அருமையான கவிதைகள், ஆனா மேலே உள்ள கவிதைக்குதான்......பாரதத்தின் சாயம் எப்பவோ வெழுத்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சோறு

--------

பணக்காரன்

நாக்கு ருசிக்கு

ஏழைகளின்

வயிற்று பசிக்கு

-----------------------------------------------

மன்னிப்பு

----------

மனிதத்தின்

பிரதிபளிப்பு

மன்னிப்பு

-----------------------------------------------

இரக்கம்

---------

உள்ளத்தின்

இருக்கம்

அறுக்கும்

இரக்கம்

------------------------------------------------

பொறுமை

-----------

உணர்ச்சிகளின்

உச்சத்தில்

நிதானம்

அதில்தான்

உண்மை பொறுமையின்

பெறுமை

-------------------------------------------------

போர்

-------

மனித சடலங்கள் மேல்

மகுடம் சூட

மனிதநேயமே இல்லாத

மனித வேட்டை

--------------------------------------------------

பரிசல்

--------

தண்ணீரில்

தவழும்

தாரகை

--------------------------------------------------

புல்லாங்குழல்

--------------

காற்று

தீண்டினால்

கவிதைகள்

பிரசவிப்பாள்

இந்த

காட்டு மூங்கில்

----------------------------------------------

வயல்வெளி

------------

பூமி தாய்

உடுத்திய

பச்சை புடவை

---------------------------------------------

வசந்த காலம்

--------------

வானவில் போல்

நீ

வந்து மறைய

வாசலில் தவம்

கிடந்த நாட்கள்

என்

வசந்த காலம்

---------------------------------------------------

பேருந்து

---------

சாலையில்

ஒரு

சமத்துவபுரம்

------------------------------------------------------

பேருந்து

---------

ஒரு இயந்தரத்தின்

ஓட்டத்துக்குள்ளே

பல இதயங்களின்

ஓட்டம்

-----------------------------------------------------

அடை மழை

---------------

பூமி மீது

மேகத்தின்

தீராத

மோகம்

------------------------------------------------------

சுடர்

-------

திரியில் பூத்த

திவ்ய மலர்

தீ சுடர்

--------------------------------------------------------

பயணம்

---------

வலியோடு துடங்கி

வழிகள் பல சென்று

வலிகள் பல கண்டு

வலியோடு முடிகிறது

வாழ்க்கை பயணம்

------------------------------------------

சிறுவர்கள்

-----------

மலர்ந்தால்

இறைவனுக்கா

இரங்களுக்கா

தெரியாத

மலர்

மொட்டுக்கள்.....

--------------------------------------------

விறகு வெட்டி

---------------

வறுமை கரையான்

அரித்த மரம்

---------------------------------------------

சுற்றி திரிந்த நாட்கள்

-------------------------

மலரில்

தேன் தேடிய

பட்டாம்பூச்சி நாட்கள்......

-----------------------------------------------

காந்தி சாலை

--------------

சாலை நடுவே

பொக்கை வாய் சிரிப்பு

பெயரை பார்த்தால்

காந்தி சாலை

நன்றி - Rafiq

  • தொடங்கியவர்

பாசம!

குழந்தை சாப்பிட்டது..

நிறைந்தது..

தாயின் வயிறு!

*ராஜா பாரதி

  • தொடங்கியவர்
tamil.jpg

நல்ல கவிதைகள் அறிவிலி!

அத்தனை கவிதைகளும் ஆயிரம் அர்ததங்கள் சொல்லுகின்றன. பகிர்விற்கு நன்றி அறிவிலி.

  • தொடங்கியவர்

ஆகா உடையாரண்ணாக்கப்புறம்,,, நானு ஒட்டிய கவிதைகள...

சின்னப்பொடியனும்,,, தமிழினியும்தான் ரசிச்சிருக்கீங்க....

உங்க சார்பில.. இந்த கவிதைய எழுதினவனுங்களுக்கு நன்றி!

இன்னுமொண்ணு ..

கோவம்!

பச்சைவிளக்கு

எரிவதை...

கோவத்தோடு

பார்த்தான்...

சிக்னலில்

நிற்கும்

வாகனத்தில்

பிச்சை

எடுக்கும்..

பிச்சைகாரன்!!

-சொக்கம்பட்டி..தேவதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

போட்ட ஈரம் காய முதல் வாசிக்கறனான் அறிவிலி (, நன்றி பகிர்வுக்கு, நல்ல தரமான இதயத்தை தொடுகின்ற கவிதைகளை இணைக்கிறீர்கள்,

உங்கள் தரமான சேவை யாழுக்கு தேவை

அதை வாசிக்க எங்களையும் தேவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு பதிவு அறிவிலி. அரபுக் கவிஞர் கலீல் ஜிப்ரான் மற்றும் பாரசிகக் கவிஞர் உமர் கையாம் இருவரிலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அந்தரங்கம்...

இருவர் பேசிக்கொண்டிருந்த

இடத்தருகே

எதேச்சையாய் போய் நின்றேன்.

அப்படியே பேச்சு நின்று

அமல்படுத்தப்பட்டது அமைதி.

இன்னொருவனுக்கு

அனுமதியில்லாத

இருவரின் அந்தரங்கத்தின்

இடையே புகுந்ததறிந்து

வெறுமே சிரித்துவைத்தேன்

வேறெதுவும் தோன்றாமல்.

பிரிவின் சாசனம்...!

ஏதாவது சொல் என்றேன்

என்ன சொல்ல என்றாய்?

எதையாவது சொல்லி

இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்

ஒரு பதிலாவது

எஞ்சியிருக்கும்

நமக்குள்.

சொல்லுதல்.....!

சிலதை

சொல்லத் தெரியவில்லை.

சிலதை

சொல்வதா தெரியவில்லை.

சிலதை

சொல்வதற்கில்லை.

சிலதை

சொல்லித் தெரிவதில்லை.

சிலதை

சொல்லாமல் இருக்க முடிவதில்லை.

சிலதை

சொல்லி ஒன்றும் ஆவதில்லை.

சிலதை

சொல்வதால் பெரும் தொல்லை.

இப்படிப் போகும்

சிலதை

எப்படி முடிக்க

என்றும் தெரியவில்லை

நன்றி - செல்வராஜ் ஜெகதீசன்

www.uyirmmai.com

  • தொடங்கியவர்
268864_176892389039289_100001555869268_447248_7618794_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் போது தாயின் அருமை தெரியா, இல்லாத போது கவிதைகள்,... அம்மா இருந்தா என்ற கதை........,

வாழும் கலை

வாழும் கலை என்பது வேறல்ல;

அடுத்தவரைப் பார்த்துப்

புன்னகைப்பதே

அவசரம்

ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் அவசரம்

யாராலும் நகர முடியவில்லை

சாலையில், ட்ராபிக் ஜாம்!

விழிநீர் சேகரிப்புத் திட்டம்!

சோகங்கள் தரும் அழுகைத் துளிகளை சேமித்து வை.....

சந்தோசம் தரப் போகும் "ஆனந்த கண்­ணீருக்காக"!!

www.koodal.com

  • கருத்துக்கள உறவுகள்

பசியில் வயிறு பத்தி எரியும்

ஏழைகள் பலர் இருக்க

கற்பூரம் பத்தி எரியும்

தட்டிற்கு பத்து டலர்

பக்கத்தில் நிற்கும் மாமிக்கு

வயிறு பத்தி எரிவதற்காக

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் பலர் இருக்க ............பச்சை :D என்னுடையது. பாராட்டுக்கள். மேலும்தொடர்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! ஒவ்வொரு கவிதையும் மாசற்ற முத்துக்கள்! மென்மேலும் தேடிப் போடுங்கள்!

பசியில் வயிறு பத்தி எரியும்

ஏழைகள் பலர் இருக்க

கற்பூரம் பத்தி எரியும்

தட்டிற்கு பத்து டலர்

பக்கத்தில் நிற்கும் மாமிக்கு

வயிறு பத்தி எரிவதற்காக

ம்...........................உடையார் நல்லாய் தான் பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகளுக்குப் படிப்பிக்கின்றார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...........................உடையார் நல்லாய் தான் பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகளுக்குப் படிப்பிக்கின்றார் :lol:

அலைமகள் எனக்கு இப்பதான் 14 ஆக போகுது, இன்னும் ரீன் ஜஸ் ஏஜ் தாண்டல, பிசா தந்தா தான் நம்புவிங்க போல

ஏழைகள் பலர் இருக்க ............பச்சை :D என்னுடையது. பாராட்டுக்கள். மேலும்தொடர்க.

நன்றி நிலாமதி அக்கா & சுவி

அக்கா நன்றி திருத்தியதிற்கு, இப்பதான் கீபோட் கட்டைகள் பழக்கதிற்கு வருகுது,

இன்னும் 4 வருசத்தில் சாத்தண்ணா மாதிரி பிச்சு உதறுகிறனா இல்லையா பாருங்க, என் கீ போர்ட்டை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.