Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரும், சுரேசும் மகிந்தவின் சதியில் வீழ்ந்து விட்டனரா?- இரா.துரைரத்தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கூட்டமைப்பையும், மகிந்த அரசையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உண்டான 13வது திருத்தச் சட்டமூல அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துகின்றது. இதனால் இணைக்கப்படாத வடக்கு, கிழக்கு மாகாணசபைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துடன் அரசியல் தீர்வு எட்டிவிட்டதாக அறிவிக்கப்படும். 87க்குப் பின்னர் 22 வருட காலம் நடாத்தப்பட்ட யுத்தத்திற்குகும், அழிவுகளுக்கும் கிடைத்த பலன்!!!!

அதுக்குப் பிறகு மகிந்தர் ஜேவிபியை விட்டு கேஸ் போட்டு இந்தியத் தீர்வை உடைப்பாரா மாட்டாரா? :rolleyes:

  • Replies 79
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குப் பிறகு மகிந்தர் ஜேவிபியை விட்டு கேஸ் போட்டு இந்தியத் தீர்வை உடைப்பாரா மாட்டாரா? :rolleyes:

இலங்கை அரசியல் அமைப்பின்படி எதையும் உடைக்கிறது இலகுவானதுதானே. வடக்கிலும் கிழக்கிலும் மகிந்தவால் நியமிக்கப்படுபவர்கள் ஆள்பவர்களால் இருந்தால், கேஸ் போடவேண்டிய தேவை வராது.

இந்தியாவுக்கு அப்பால் சிங்களம் மீது அழுத்தங்களை அதிகரிப்பதே கூட்டமைப்புக்கு புலம்பெயர் தமிழர் செய்யும் பேருதவி.

பிளேக்கின் பிரயாணமும்;
ஹேக்கின் காலக்கேடுப்பும்;
மூனின் ஐ.நா. அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அனுப்பப்படதும்;

நாம் இந்தியாவுக்கு அப்பால் சென்று, 13வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் எமது மக்களுக்கு தீர்வு பெறலாம் என்பதை துல்லியமாக காட்டுகின்றது இந்த நகர்வுகள்.

கண்ணுக்கு முன்னால் உள்ள சந்தர்ப்பங்களை சமயோசிதமாக பாவித்து இலக்கை நோக்கி நகர்த்துவதே இன்றைய தேவை.

அதையும் மீறி கூட்டமைப்பு ஊடாக இந்தியா ஒரு தீர்வை திணித்தால், அதைக்கூட ஒரு படிக்கல்லாக பார்க்கலாம், இறுதி தேர்வை நோக்கியதாக.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனின் கருத்தை பார்த்து கொஞ்சம் கொதிப்பாக இருந்தேன். அகோதாவின் கருத்து அதை நிவர்த்தி செய்தது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா சொல்லுவதில் அவருக்கு நம்பிக்கை இருக்குதோ தெரியவில்லை! :icon_mrgreen:

அகூதா சொல்லுவதில் அவருக்கு நம்பிக்கை இருக்குதோ தெரியவில்லை! :icon_mrgreen:

நன்றி கிருபன். நீங்கள் 'கடுப்பேத்தும்' விதமாக எழுதினாலும், தேசியத்திலும் மக்களிலும் பாசமும் அன்பும் கொண்டவர் என்பது வெட்டவெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நீங்கள் எழுதுவது மதில்மேல் பூனை போன்றது. நான் புத்திசாலி என்றோ நான் இதற்குள் மாட்டுப்படவில்லை என்றோ சொல்ல மட்டுமே உதவும் கிருபன்.

அந்த மக்களுக்கு ஏதாவது சிறு துரும்பு கிடைக்காதா என்ற ஏக்கமே எமது எழுத்துக்கள்

ஏக்கத்தில் இருந்தால் துக்கம்தான் மிஞ்சும்.

தமிழ்மக்களுக்கு எந்தவித உதவிகளும் புரியாத அமைப்புக்கள், இன்றும் மக்களுக்காக உழைக்கின்றோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி தமது சுயலாபங்களுக்காகவே இயங்குகிறார்கள் என்ற தெளிவு மக்கள்மத்தியில் உண்டு. பல கட்சிகளாகச் சிதறுண்டுள்ள தமிழர்களின் அமைப்புகளை வைத்துக்கொண்டு, பலவீனமான நிலையில் இருந்துகொண்டு, ஐ.நா.வும், அமெரிக்காவும், பிற சர்வதேச நாடுகளும் மகிந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தரும் என்று நம்புவது, முள்ளிவாய்க்காலில் கப்பல் வந்து காப்பாற்றும் என்று நம்பியதைப் போன்றதாகும்.

முதலில் ஒற்றுமையுள்ள வலுவான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கினால்தான் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்புண்டு!

நன்றி கிருபன். நீங்கள் 'கடுப்பேத்தும்' விதமாக எழுதினாலும், தேசியத்திலும் மக்களிலும் பாசமும் அன்பும் கொண்டவர் என்பது வெட்டவெளிச்சம்.

தேசியத்திலும், மக்களிலும் உள்ள அன்பை எந்தவொரு அமைப்பு மீதும் வைக்கமுடியாத நிலை ஏனெனில் எல்லா அமைப்புக்களுமே நம்பகத்தன்மையற்றவைகள்.

நம்பிக்கை தரும் பதில்கள்:

1. ஏன் அமெரிக்கா பிளேக்கை அனுப்பவேண்டும்?

2. ஏன் பிரித்தானியாவின் ஹேக் மூன்று மாத கால அவகாசம் தர வேண்டும்?

3. ஏன் பான் கி மூன் அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பவேண்டும்? ஏன் சிறப்பு பிரதிநிதியை நியமிக்கவேண்டும்?

4. உலகின் பலம் பொருந்தி மனித உரிமை குழுக்கள் (AI, HRW, ICG) சிங்களத்தின் மீது விடாப்பிடியாக உள்ளன?

5. காங்கிரஸ் ஆளும் இந்தியாவில் எவ்வாறு சனல் நாலின் 'போர்க்களம்' காண்பிக்கப்பட்டது?

6. 1987ஆம் இருந்த இந்திய - இலங்கை உறவை விட இன்றைய சீன - இலங்கை உறவு பலமானது. இதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும்?

7. அம்பாந்தோட்டையில் உள்ள சீனாவின் கண்காணிப்பு நிலையம் இந்தியாவின் கப்பல் பிரயாணம் உட்பட்ட சகல இந்து சமுத்திர நகர்வுகளையும் கண்காணிக்கின்றது. மாலைதீவில் உள்ள அமெரிக்காவின் கண்காணிப்பு வசதிகளும் சீனாவின் அச்சுறத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இந்திய அமெரிக்கா அரசுகள் இன்றைய காலத்தில் பிறிதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனரா?

இந்தியாவுக்கு அப்பால் சிங்களம் மீது அழுத்தங்களை அதிகரிப்பதே கூட்டமைப்புக்கு புலம்பெயர் தமிழர் செய்யும் பேருதவி.

பிளேக்கின் பிரயாணமும்;
ஹேக்கின் காலக்கேடுப்பும்;
மூனின் ஐ.நா. அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அனுப்பப்படதும்;

நாம் இந்தியாவுக்கு அப்பால் சென்று, 13வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் எமது மக்களுக்கு தீர்வு பெறலாம் என்பதை துல்லியமாக காட்டுகின்றது இந்த நகர்வுகள்.

கண்ணுக்கு முன்னால் உள்ள சந்தர்ப்பங்களை சமயோசிதமாக பாவித்து இலக்கை நோக்கி நகர்த்துவதே இன்றைய தேவை.

அதையும் மீறி கூட்டமைப்பு ஊடாக இந்தியா ஒரு தீர்வை திணித்தால், அதைக்கூட ஒரு படிக்கல்லாக பார்க்கலாம், இறுதி தேர்வை நோக்கியதாக.

... இன்று, அங்குள்ள மக்கள் சற்றேனும் நிம்மதியாக மூச்சு ஒர் இடைக்கால தீர்வு, சர்வதேச அங்கீகாரத்துடன் தேவைப்படுகிறது!! .. அந்த சர்வதேச அங்கீகாரத்துடன் தீர்வை, கூட்டமைப்பு எட்டும்?? அல்லது கூட்டமைப்புக்கு எதிராக இன்று பலரால் கிளப்பப்படும் சந்தேகங்களை உண்மைதான் என்று நிரூபிக்க போகிறதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்???

... கடந்த காலங்களில் உலக ஓட்டங்களுக்கு எற்பவோ, நெளிவு சுளிவுகளுக்குள்ளாகவோ செல்ல தவறி விட்டோம்!! நாம் 87ல் இந்திய/இலங்கை ஒப்பந்தத்தை தற்காலிகமாவது ஏற்றிருக்க வேண்டும்!! தவற விட்டு விட்டோம் ..

... இனியாவது ...????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

பலர் தொட அஞ்சும் இடத்தில் இருந்து ஒரு உண்மையான ஒரு விவாதத்தை ஆரம்பிது வைத்தமைக்கு நன்றி.நெல்லியான்

கிருபன்,

அமைப்புக்கள் மீது மக்கள் நம்பிக்கையற்று உள்ளன எனக்கூறுகின்றீர்கள். அமைப்புக்கள் யாருக்காக? அமைப்பில் உள்ளவர்கள் யார்?

அந்த அமைப்புக்களில் உள்ளவர்கள் எம்மவர்கள் என்பதையும் அந்த அமைப்புக்கள் எமது மக்களுக்காக என்பதையும் ஏற்றுகொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.

இன்று நாம் உள்ள நிலையில், அவநம்பிக்கையை மக்கள் மத்தியில் நீக்குவதற்காக யாவரும் உழைக்கவேண்டும்.

எம்மவர் மத்தியில் உள்ள அமைப்புக்களை அணைத்து பிழைகளை உள்ளுக்குள் இருந்து திருத்தி சரியானபாதையில் மக்களுக்கு நம்பிக்கை தரும்வகையில் பயணிப்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

சனல் நாலின் பின்னாலும் பிளேக் - ஹேக் நகர்வுகளின் பின்னாலும் கூட எமது அமைப்புக்கள் உள்ளன என்பதை எதிரி கூட அறிவான். எனவே சரியான அமைப்புக்களும் எம்மத்தியில் உள்ளன, அதை மறுக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

சனல் நாலின் பின்னாலும் பிளேக் - ஹேக் நகர்வுகளின் பின்னாலும் கூட எமது அமைப்புக்கள் உள்ளன என்பதை எதிரி கூட அறிவான்.

எனவே சரியான அமைப்புக்களும் எம்மத்தியில் உள்ளன, அதை மறுக்காதீர்கள்.

நன்றி அகோதா

என் கருத்தும் எதிர்பார்ப்பும் இதுதான்

கனடாவில் பெருமளவு தமிழர்களின் வெறுப்புக்கு உள்ளான பத்திரிகை 'நசனல் போஸ்ட்' (National Post) அதன் ஒரு நிருபரான ச்ரூவார்ட் பெல் (Stewart Bell) எமக்கு தடை வருவதற்கும், பயங்கரவாதம் பற்றிய நிபுணராகவும் கணிக்கப்பட்டவர். இறுதிப்போரின் போது வன்னியில் நின்றவர், சிங்கள அரசால் 'நன்றாக' கவனிக்கப்பட்டவர். இன்று அவர்கூட அதே அரசுக்கு எதிராக எழுதியுள்ளது கனடா வாழ் சிங்கள ஆதரவாளர்களையே ஆச்சரியமும் வேதனையும்பட வைத்துள்ளது.

பல தமிழர்கள் இவரை தாகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர், ஒரு சிலர் இவருடன் தொடர்புகளை பேணிவந்தனர், வருகின்றனர். அதன் பலனே இது என்றால் மிகையாகாது.

Sri Lanka's dirty secret

http://www.nationalp...7334/story.html

இது சொல்லும் செய்தி என்னவென்றால், மனம் தளராமல் எமது பக்க நீதியை உரைக்கவேண்டியவர்கள் நாம், எம் ஒவ்வொருவரினதும் கடமை. செய்யும்பொழுது நன்மைகள் நடக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

அமைப்புக்கள் மீது மக்கள் நம்பிக்கையற்று உள்ளன எனக்கூறுகின்றீர்கள். அமைப்புக்கள் யாருக்காக? அமைப்பில் உள்ளவர்கள் யார்?

அந்த அமைப்புக்களில் உள்ளவர்கள் எம்மவர்கள் என்பதையும் அந்த அமைப்புக்கள் எமது மக்களுக்காக என்பதையும் ஏற்றுகொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.

இன்று நாம் உள்ள நிலையில், அவநம்பிக்கையை மக்கள் மத்தியில் நீக்குவதற்காக யாவரும் உழைக்கவேண்டும்.

எம்மவர் மத்தியில் உள்ள அமைப்புக்களை அணைத்து பிழைகளை உள்ளுக்குள் இருந்து திருத்தி சரியானபாதையில் மக்களுக்கு நம்பிக்கை தரும்வகையில் பயணிப்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

சனல் நாலின் பின்னாலும் பிளேக் - ஹேக் நகர்வுகளின் பின்னாலும் கூட எமது அமைப்புக்கள் உள்ளன என்பதை எதிரி கூட அறிவான். எனவே சரியான அமைப்புக்களும் எம்மத்தியில் உள்ளன, அதை மறுக்காதீர்கள்.

சுயநலவாதிகளின் அமைப்புக்கள் மக்கள் நலன்களைக் காக்கும் என்று சொன்னால் நம்புவதற்குப் பலர் இல்லை. அத்துடன் சிதறுண்ட அமைப்புக்கள், பலம் பொருந்திய நாடுகளின் வேலைத்திட்டத்திற்கு அமையத்தான் செயற்படவேண்டும் என்பதும், இவர்களால் சுயாதீனமாகச் செயற்படமுடியாது என்பதும், கிடைக்கின்ற சிறு முன்னேற்றங்களை (சலுகைகளை) பெருவெற்றியாகக் காட்டவேண்டிய தேவை இவ்வமைப்புக்களின் இருப்புக்கு அவசியமானது என்பதும் தெளிவாக மக்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் "காலம் வரும்" என்று மக்கள் காத்திருக்கப் பழகி ஆண்டுகள் பலவாகிவிட்டன..

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனின் கருத்தை பார்த்து கொஞ்சம் கொதிப்பாக இருந்தேன். அகோதாவின் கருத்து அதை நிவர்த்தி செய்தது. நன்றி.

asher-cool-buddy-11226.png

சுயநலவாதிகளின் அமைப்புக்கள் மக்கள் நலன்களைக் காக்கும் என்று சொன்னால் நம்புவதற்குப் பலர் இல்லை. அத்துடன் சிதறுண்ட அமைப்புக்கள், பலம் பொருந்திய நாடுகளின் வேலைத்திட்டத்திற்கு அமையத்தான் செயற்படவேண்டும் என்பதும், இவர்களால் சுயாதீனமாகச் செயற்படமுடியாது என்பதும், கிடைக்கின்ற சிறு முன்னேற்றங்களை (சலுகைகளை) பெருவெற்றியாகக் காட்டவேண்டிய தேவை இவ்வமைப்புக்களின் இருப்புக்கு அவசியமானது என்பதும் தெளிவாக மக்களுக்குத் தெரியும்.

நீங்கள் 'சிறுவெற்றிகள்' என வர்ணிப்பது உலக அரசியலை அதில் மாற்றங்களை கொண்டுவருவது எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தும் உணராதவர் போல எழுதுவதாகவே தெரிகின்றது.

எல்லாவற்றிற்கும் "காலம் வரும்" என்று மக்கள் காத்திருக்கப் பழகி ஆண்டுகள் பலவாகிவிட்டன..

தாயக மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் எப்படி வாக்களித்தனர் என்பது உங்களுக்கும் தெரியும்.

Edited by akootha

... இது ஒரு சந்தர்ப்பம்!!! ... நாளை சிங்களவன், சீனாவை அம்போ என்று கை விட்டு மேற்குலகின் காலில் வீழ்ந்தால் ... நாம் மீண்டும் நட்டாற்றில்!!!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

10 fl;l Ngr;R thu;j;ij Kbtpy; $l;likg;G epge;jidfisg; Nghl;L Ngr;Rthu;j;ijapy; ,Ue;J tpyfpapUe;jJ.,g;nghOJ epge;jidfs; Vw;Wf; nfhs;sg;glhkNy Ngr;Rthu;jijfs; kPz;Lk; Muk;gpf;fg;gl;Ls;sd. Ngr;Rthu;jijfs; elg;gJ Nghd;w Njhw;wg;ghL ,d;iwa epiyapy; rpwpyq;fhtpw;F rhjfkhfNt mikAk;.rpwpyq;fhit NkYk; neUf;fbf;Fs; js;sf; $ba Nghu;f;Fw;wk; njhlu;ghd Kf;fpa tplaq;fis ru;tNjr kl;lj;jpy; gug;Giu nra;tjpy; $l;likg;gplk; ,Ue;J ve;jtpjkhd nraw;ghLfSk; ,Jtiu cUg;gbahf eilngw;wjw;fhd Mjhuq;fs; ,y;iy. Mdhy; ,g;nghOJ Ngr;Rthu;ijf;Fr; nry;tJ(n[dpthtpy; rpwpyq;fhtpd; kdpj cupik rk;ge;jkhfg; ftdj;jpw;nfLf;fg;gLk; Ntisapy;) rpwpyq;fh muirf; fhg;ghw;Wtjw;Nf cjtg; NghfpwJ.,jw;F Ke;ija Ngr;Rthuj;ijfspd; epiyjhd; ,jw;Fk; epfog;NghfpwJ.,J Nghu;f;Fw;wj;jpy; <Lgl rpwpyq;fhtpw;F kpfTk; cWJizahf ,Ue;j ,e;jpahtpd; mDruizapy; elg;gjhfNt re;Njfpf;fg;gLfpwJ.Nkw;F ehLfs; rpwpyq;fhtpw;F vjpuhf vLf;Fk; jPu;khdq;fis Neubahf vjpu;f;fhky; kiwKfkhfg; Fog;Gk; eltbf;ifahfNt ghu;f;fg;gLfpwJ.Ngr;Rthu;jijapy; fye;J nfhz;L rpwpyq;fhtpd; Kfj;jpiuiaf; fpopf;fyhk; vd;w thjj;ij vj;jidjuk; ntspf;fhl;b tpl;Nlhk;.gytPdkhd epiyapy; ,Uf;Fk; ehk; Ngr;Rthu;j;;ijf;F ,g;NghJ Nghftpl;lhy; ve;j el;lKk; tug;Nghtjpy;iy. Ngrj;jhd; Ntz;Lk; Mdhy; mjw;fhd Neuk; ,Jty;y vd;gJ vd; fUj;J. rpwpyq;fhit cyf muq;fpy; gytPdkhf;Fk; murpaw; nraw;ghLfisr; nra;af; fhyk; fdpe;jpUf;Fk; Ntisapy; mijr;nra;Jtpl;Lg; Ngr;Rf;Fr; nry;tNj fhw;Ws;s NghNj Jhw;Wk; nrayhFk;.

  • கருத்துக்கள உறவுகள்

... இது ஒரு சந்தர்ப்பம்!!! ... நாளை சிங்களவன், சீனாவை அம்போ என்று கை விட்டு மேற்குலகின் காலில் வீழ்ந்தால் ... நாம் மீண்டும் நட்டாற்றில்!!!!! ...

அப்படியே நாம் என்ன செய்யலாம் என்றும் திருவாய் மலர்ந்தால் நாமும் எங்கள் தனிப்பிரச்சினைகளுடன் ஒதுக்கிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

can u help me?i can't wri;te in tamil.

10 கட்ட பேச்சு வார்த்தை முடிவில் கூட்டமைப்பு நிபந்தனைகளைப் போட்டு பேச்சுவார்த்தையில் இருந்து விலகியிருந்தது.இப்பொழுது நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படாமலே பேச்சுவார்ததைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்ததைகள் நடப்பது போன்ற தோற்றப்பாடு இன்றைய நிலையில் சிறிலங்காவிற்கு சாதகமாகவே அமையும்.சிறிலங்காவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக் கூடிய போர்க்குற்றம் தொடர்பான முக்கிய விடயங்களை சர்வதேச மட்டத்தில் பரப்புரை செய்வதில் கூட்டமைப்பிடம் இருந்து எந்தவிதமான செயற்பாடுகளும் இதுவரை உருப்படியாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆனால் இப்பொழுது பேச்சுவார்தைக்குச் செல்வது(ஜெனிவாவில் சிறிலங்காவின் மனித உரிமை சம்பந்தமாகப் கவனத்திற்கெடுக்கப்படும் வேளையில்) சிறிலங்கா அரசைக் காப்பாற்றுவதற்கே உதவப் போகிறது.இதற்கு முந்தைய பேச்சுவாரத்தைகளின் நிலைதான் இதற்கும் நிகழப்போகிறது.இது போர்க்குற்றத்தில் ஈடுபட சிறிலங்காவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இந்தியாவின் அனுசரணையில் நடப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது. மேற்கு நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கும் தீர்மானங்களை நேரடியாக எதிர்க்காமல் மறைமுகமாகப் குழப்பும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்ததையில் கலந்து கொண்டு சிறிலங்காவின் முகத்திரையைக் கிழிக்கலாம் என்ற வாதத்தை எத்தனைதரம் வெளிக்காட்டி விட்டோம்.பலவீனமான நிலையில் இருக்கும் நாம் பேச்சுவார்த்தைக்கு இப்போது போகவிட்டால் எந்த நட்டமும் வரப்போவதில்லை. பேசத்தான் வேண்டும் ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்பது என் கருத்து. சிறிலங்காவை உலக அரங்கில் பலவீனமாக்கும் அரசியற் செயற்பாடுகளைச் செய்யக் காலம் கனிந்திருக்கும் வேளையில் அதைச்செய்துவிட்டுப் பேச்சுக்குச் செல்வதே காற்றுள்ள போதே தூற்றும் செயலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

thanks akootha!!!!!!!!!!!!

... இது ஒரு சந்தர்ப்பம்!!! ... நாளை சிங்களவன், சீனாவை அம்போ என்று கை விட்டு மேற்குலகின் காலில் வீழ்ந்தால் ... நாம் மீண்டும் நட்டாற்றில்!!!!! ...

மகிந்த கூட்டத்தின் கீழ் இது சாத்தியமில்லை, இது இந்தியா, சீனா, மேற்குலகம் அறிந்தவை.

அதேவேளை அங்கே எந்த எதிர்க்கட்சியும் பலமான நிலையில் இல்லை மகிந்தாவை கலைக்க.

சீனாவை விட்டு இலங்கை வெளியேற பல பில்லியன்கள் செலவழிக்கவேண்டும். அதை செய்ய மேற்குலகம்-இந்தியா தயாரில்லை, வசதியும் இல்லை.

can u help me?i can't wri;te in tamil.

இந்த இணைப்பில் எழுதி, பின் வெட்டி இங்கே கொண்டு ஒட்டுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.