Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு எமாற்றமளித்த கனடாவின் முயற்சி

Featured Replies

இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும், பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இவையாவற்றையும் எழுதுவதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது ““வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு'' ஆகையால் யதார்த்தங்களை முன் வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன்.

ஐ.நா. மனித உரிமை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபையில் கியூபா, சீனா, பாகிஸ்தான் என்பன இலங்கைக்காக வக்காலத்து வாங்கியதும் உண்மை. அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஐ.நா. ஜெனீவா தூதுவராலயத்தினால் ஐ.நா. மண்டபத்தில் ஓர் பிரசாரக் கூட்டம் நடத்தி அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு கொழும்பிலிருந்து வருகை தந்த மாபெரும் குழு பதில் கூறாமல் சமாளித்ததும் உண்மை.

இதேவேளை, கனடாவில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை மீதான ஓர் தீர்மானம் இச் சபையில் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியும் உண்மைதான். அப்படியானால் கனடா எதற்காக இந்த பிரேரணையை முன்வைத்தது? எதற்காக வாபஸ் பெற்றார்கள்? இதற்காக மற்றைய நாடுகளின் ஆதரவு இருந்ததா? இதில் தமிழர் பங்கு என்ன இவைபோன்ற முக்கியமான கேள்விகள் இங்கு எழுகின்றன. இந்த வரிசையில் நாம் ஒவ்வொன்றாக இக் கேள்விகளை ஆராய்வது மிக முக்கியம். எதற்காக கனடா இப்படியாக ஓர் தீர்மானத்தை இலங்கை மீது முன் வைக்க முனைந்ததுவென நாம் ஆராய்வோமானால் அதற்கான விடையை நாம் மிக இலகுவாக அமெரிக்காவின் பிரதிநிதி றொபேர்ட் ஓ பிளேக்கின் கடந்த வார இலங்கை விஜயத்துடன் நாம் இணைத்துப் பார்க்க முடியும்.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி.யினால் செய்யப்பட்ட றொபேர்ட் பிளேக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் அத்துடன் இலங்கை அரசினால் மிகைப்படுத்தப்பட்ட இடம்பெயர்ந்தோர் அரசியல் பேச்சுவார்த்தை போன்றவை அமையலாம்.

அப்படியானால் கனடா விசேடமாக கடைசி நேரமான கடந்த வியாழக்கிழமை எதற்காக தாம் முன்வைக்கவிருந்த பிரேரணையை வாபஸ் பெற்றார்களென்று கூறும் பொழுது இதை நாம் தற்பொழுது நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையுடன் இணைத்துப் பார்க்க முடியும். அங்கு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றுள்ளார்.

இதே இடத்தில் அங்கு இந்தியா உட்பட பல உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் உள்ளார்கள். அப்படியானால் எந்த நாட்டு தலைவரின் செல்வாக்கை பாவித்து ஜனாதிபதி ராஜபக்ஷ கனடா, அமெரிக்க நாடுகளுடன் பேரம் பேசினாரோ தெரியவில்லை.

அடுத்து கனடாவின் இந்த முயற்சிக்கு மற்றைய ஐ.நா. மனித உரிமைச் சபை அங்கத்துவ நாடுகளின் ஆதரவு இருந்ததா என ஆராயுமிடத்து நிச்சயம் இருந்தது என நான் கூறுவேன்.

காரணம் கடந்த புதன்கிழமை மாலை கனடா தூதரகத்தினால் ஐ.நா மண்டபத்தில் இப் பிரேரணை சம்பந்தமான உரையாடலில் பல ஐரோப்பிய தென் அமெரிக்க, அமெரிக்க நியூஸ்லாந்து போன்ற நாடுகள் ஆதரவு காட்டியிருந்தன. ஆனால் வழமையான சீனா, ரஷ்யா, கியூபா, அல்ஜீயா, பிலிப்பைன்ஸ், மலேசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

இப்படி எட்டு ஐ.நா. மனித உரிமை அங்கத்துவ நாடுகள் மட்டுமே எதிர்ப்புக் கூறியிருந்தால் மனித உரிமை சபையில் உள்ள 47 நாடுகளில் மிகுதி நாடுகளின் நிலை என்ன?

இதில் அங்கத்துவ நாடான லிபியா தந்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இதில் 38 நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் நடுநிலைமை வகித்தாலும் கனடாவினால் முன்மொழியவிருந்த பிரேரணை முன்மொழியப்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்பதில் எந்தவித ஐயமில்லை.

இறுதியாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் பங்கு இங்கு என்னவென கேட்குமிடத்து இதற்கு நல்ல பதில் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. முன்றலில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான புலம் பெயர் வாழ் மக்களின் எழுச்சியை நாம் இங்கு பெருமிதத்துடன் எடுத்துக் கொள்ளலாம்.

இதே இடத்தில் ““பூவுடன் சேர்த்த வாழை நாரும் மோட்சம் போகும்'' என்பது போல் ஐ.நா மனித உரிமை செயற்பாடுகளில் தம்மை முள்ளிவாய்க்காலின் பின்னர் இணைத்தவர்களையும் சர்வதே சமூகத்தின் ஆதரவு தமிழ் மக்களுக்குக் கிடைத்த பின்னர், தாம் முன்னின்று நடத்தினோம் என்று கூறுவதா? அல்லது ஏற்கனவே நடைபெறும் வேலையை குழப்புகிறார்களா என்பதற்கு காலம் தான் பதில் கூறும்.

இறுதியாக கூறுவதானால் கனடாவினால் கொண்டு வரவிருந்த கானல் நீரை கண்டு நாட்டிலோ, புலம்பெயர் நாடுகளிலோ தமிழ் மக்கள் சலிப்பு அடையாது தமது நீண்டகால வேலைத்திட்டங்களை முழு முயற்சியுடன் தொடர்ந்து செயற்படுத்த வேண்டும்.

---ஜெனிவாவில் இருந்து கிருபாகரன்--

http://akkinikkunchu.com/new/

எனக்கு புரிந்தது இவ்வளவுதான்.

கனடாவின் பொருளாதாரமே சீனாதான்.தற்போது உணவாகவிருக்கட்டும்,உடையாகவிருக்கட்டும்,இலத்திரனியல் இப்படிப்பல எல்லாம் சீனாவிடம் இருந்துதான் மலிவாக கிடைக்கும் கிடைகிறது.அதில் தான் கனடியரது வாழ்க்கை சுலபமாகவிருக்கிறது.இல்லையேல் எந்தகட்சியாகினும் தற்போது உள்ள சூழலில் ஆட்சி நடத்தமுடியாது இதுவே யதார்த்தம் தில் இருந்தால் ஒபாமா மாதிரி உள்ளூர் உற்பத்திகளுக்குதான் மக்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அறிக்கைவிடமுடியுமா? ஆகவே சீனாவை பகைக்க முடியாது . :D

Edited by BLUE BIRD

மஹிந்த சமரசிங்க மீண்டும் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்

இலங்கையின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 18 வது அமர்வு இடம்பெற்று வருகிறது. இன்னும் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என்று இலங்கை உறுதிப்படுத்திக் கொண்டது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9385

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை வருவதாகக் கூறுவதும் பின்னர் கைவிடப்படுவதும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதும் (சிறிலங்காவின் பேச்சுவார்த்தை போல)தொடர் கதையாகத் தொடர்கின்றது.கட்டுரையின் இறுதிப்பகுதியை தெளிவாக எழுதாததால் விளங்கிக் கொள்வதில் குழப்பமாயிருக்கிறது.கூட்டமைப்பு பேச்சு வார்த்தைக்கு இந்த குழப்பமான நேரத்தில் போனதால் அதைக்குழப்ப வேண்டாம் என்று குழம்பி விட்டார்களோ தெரியவில்லை.மௌனமாக இருப்பதுபோல் இருந்து கொண்டு இந்தியாதான் மறைமுக வேலைகள் செய்திருப்பதாய் எனக்குப்படுகிறது.மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களைக் குழப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டை ஐ.நா. விவாதத்துக்கு எடுக்காது

வீரகேசரி வாரவெளியீடு 9/25/2011 10:09:25 AM

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா.சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங்பூரி தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம்

இலங்கையின் ஈழத் தமிழருக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும் கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

ஐ.நா. சபை பொதுக்குழுக் கூட்டம் தற்போது நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் நியூயோர்க் நின்றிருக்கிறார்கள். ஐ.நா.சபையின் கூட்டத்தில் இந்திய நிலைப் பாடு பற்றியும் பொதுக்குழு விவாதிக்க உள்ள பிரச்சினைகள் பற்றியும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார் ஐ.நா. சபைக்கான இந்தி யாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி.

ஐ.நா. சபையின் பொதுக்குழு என்பது வேறு ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. சபை யின் மனித உரிமை ஆணையத்தின் செயற் பாடு வேறு. ஐ.நா. சபையின் அங்கமாக மனித உரிமை ஆணையம் இருந்தாலும் அந்த ஆணையத்தின் அறிக்கைகளும் முடிவுகளும் ஐ.நா.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை. பெருவாரியான உறுப்புரிமை நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்க வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே பொதுக்குழுவில் அந்த விவகாரம் பற் றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கும் கூட முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சினையில் நேரடியாக அக்கறை காட்டாத நிலையில் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் பற்றியோ அவர்களது மறுவாழ்வு பற்றியோ பிரச்சினை எதுவும் எழுப்பப்படும் சாத்தியமே கிடையாது என்று ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேசும்போது 95 சதவீகிதம் தமிழர்கள் சகஜவாழ்வுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரி வித்திருப்பதாலும் இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் சாதிப்பதாலும் ஈழத் தமிழர் பிரச்னையோ இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியோ தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பொதுக்குழு விவாதிக்காது என பூரி மேலும் தெரிவித்தார். _

http://www.virakesar...asp?key_c=33975

எல்லாத்துக்கும் பிண்ணணியில் இந்தியன்தானோ?????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்.. இன்றே மாப்பிளை பிடிக்க வேணும் எண்டால் நடக்காதுதானே..! :D

ஞாபகப்படுத்திப் பாருங்கள்.. மே 2009 இல் போர் ஓய்வுக்கு வந்த பின்னால எல்லோரும் என்ன நினைத்தோம்.. சாட்சியே இல்லாமல் எல்லாம் செய்து போட்டான் என்றுதானே..

இன்றைய நிலையைப் பார்ங்கள்.. எவ்வளவுதூரம் முன்னேறி வந்திருக்கிறது.. காலம் செல்லும்.. ஆனால் முடிவு ஒன்றே..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புரிந்தது இவ்வளவுதான்.

கனடாவின் பொருளாதாரமே சீனாதான்.தற்போது உணவாகவிருக்கட்டும்,உடையாகவிருக்கட்டும்,இலத்திரனியல் இப்படிப்பல எல்லாம் சீனாவிடம் இருந்துதான் மலிவாக கிடைக்கும் கிடைகிறது.அதில் தான் கனடியரது வாழ்க்கை சுலபமாகவிருக்கிறது.இல்லையேல் எந்தகட்சியாகினும் தற்போது உள்ள சூழலில் ஆட்சி நடத்தமுடியாது இதுவே யதார்த்தம் தில் இருந்தால் ஒபாமா மாதிரி உள்ளூர் உற்பத்திகளுக்குதான் மக்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அறிக்கைவிடமுடியுமா? ஆகவே சீனாவை பகைக்க முடியாது . :D

கனடா மட்டுமல்ல...இன்று உலகில் சகல மூலைமுடுக்குகளிலும் அவர்களின் தயாரிப்புகள்தான்....ஆகக்குறைந்தது Made In China என முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு கரண்டியாவது இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் , சீனா இரு நாடும் கிட்டதட்ட ஒரே மாதிரியான வெளினாட்டு செலாவனிக்கொள்கையெ பின்பற்றுகின்றன முதலாவது தனது நாண்யத்தை மிதக்க விடாது நாணயப்பெறுமதிக்குறைப்பையும் இரண்டாவது தனது நாண்யத்தை உள்னாட்டு வர்த்தகத்திற்கு மட்டுமே பாவிக்கிறது. இதனாலாயே தமது பொருட்களை மிக மலிவாக வெளினாட்டுச்சந்தைகளில் சந்தை படுத்த முடிகிறது . மேற்குலகம் இதன் மூலம் தமது உள்னாட்டு உற்பத்திகலை பாதுக்காக்க முடியாது திண்டாடுகிறது

சமயம் கிடைக்கும் போதெல்லாம் இதர்கெதிராக மெற்குலகம் நடவடிக்கை எடுக்கிறது ஜப்பான் தனது நாண்யத்தை மிதக்கவிட வேண்டும் என்றும் அண்மையில் சீனாவின் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் குறைந்தளவான பாதுகாப்பு பொறிமுறையை கூட கடைப்பிடிக்கவில்லை என்று தடை செய்தமை குறிப்பிடலாம் மற்றது மேற்குலகின் கார்பன் வரி விதிப்பு சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலான தீர்வைகளை விதிப்பதை மையமாக கொண்டது இதன் மூலம் தமது உள்னாட்டு உற்பத்தியைக்காப்பதன் மூலம் உள்னாட்டு பொருளாதார நிலைத்தன்மையே மேற்குலகின் நோக்கம்.சீனாவிடம் வர்த்தகம் செய்பவர் யாரயிருப்பினும் அது சீனாவுக்கெ இலாபம் அவர்களுக்கல்ல ஏனெனில் சீனாவின் பணத்தை எங்கும் எடுத்து செல்ல முடியாது. அவர்கள் பாவிப்பது இரட்டை நாணய கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கொண்டு வர முயன்றமைக்கு முதலில் நன்றிகள். உண்மையில் எம் மக்கள் காட்டாத ஆர்வமே இதற்குக் காரணம் என்று சொல்லலாம். இன்று எம்மால் உழைக்க்க கூடிய விடயம், மனித உரிமை அமைப்புக்களோடு சேர்ந்து இயங்குவதன் மூலம் எம் மக்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை வெளிப்படுத்தக்கூடியதே. கனடியத் தமிழர்கள் காட்டுகின்ற அழுத்தங்கள் தெளிவான எதிர்காலம் நோக்கிய சிந்தனை முதலானவை நிச்சயம் எம் மக்களுக்கு அவசியம். என்ன செய்தால், என்ன விளைவுகள் வரும் என்பது தொடர்பான தெளிவும் அவசியமாகும்.

சில விடயங்கள் எழுதக் கூடியதல்ல. ஆனாலும் மனிதஉரிமைகளில் ஆர்வம் காட்டி உழைக்கின்ற அனைத்து மக்களுக்கும் நன்றிகள். தொடர்ந்துஎம் மக்கள் அவற்றில் பங்காளியாக மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனகெண்டால் யாரும் எதுவும் செய்வினம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போகிறது நாம்தான் எம்முடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனகெண்டால் யாரும் எதுவும் செய்வினம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போகிறது நாம்தான் எம்முடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

உங்களுக்கு என்ன பிரச்சனை எனத் தெளிவுபடுத்தாமல் உங்களுக்கு உதவுவார்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். எத்தனை பேர் உங்களின் பிரச்சனைக்காக கதைத்திருக்கின்றீர்கள்? அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பது உங்களின் பலவீனம். எனக்கும் பாலஸ்தீனம், லிபியா பிரச்சனை பற்றித் தெரியும். அதற்காக ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்பது என்பது ஒரு சாதாரண குடிமகனின் சிந்தனை. அது ஒவ்வொருநாட்டின் தலைவர்களுக்கும் ஏன் இருக்காது? ஏற்கனவே அவர்களுக்குத் தலைக்கு மேல் பிரச்சனை. உங்களின் பிரச்சனையையும் ஏற்ற வேண்டுமா?

அத்தோடு நேரடியாக நாங்கள் எங்களின் பிரச்சனையைச் சொல்வதிலும் பார்க்க ஒரு நம்பகத்தன்மையான அமைப்புக்களின் ஊடாகத் தெரிவிப்பதும் ஒரு வகையில் நன்மையானதே!

தமிழீழத்தைத் தங்கத்தட்டில் வைத்துத் தருவார்கள் என்ற சிந்தனையில் இருந்து மாறவில்லை போலுள்ளது.

சரி. ஒவ்வொரு தமிழனின் சாராசரி விடுதலைப் போராட்டத்துக்கான உழைப்பு எவ்வளவு??

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன பிரச்சனை எனத் தெளிவுபடுத்தாமல் உங்களுக்கு உதவுவார்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். எத்தனை பேர் உங்களின் பிரச்சனைக்காக கதைத்திருக்கின்றீர்கள்? அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பது உங்களின் பலவீனம். எனக்கும் பாலஸ்தீனம், லிபியா பிரச்சனை பற்றித் தெரியும். அதற்காக ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்பது என்பது ஒரு சாதாரண குடிமகனின் சிந்தனை. அது ஒவ்வொருநாட்டின் தலைவர்களுக்கும் ஏன் இருக்காது? ஏற்கனவே அவர்களுக்குத் தலைக்கு மேல் பிரச்சனை. உங்களின் பிரச்சனையையும் ஏற்ற வேண்டுமா?

அத்தோடு நேரடியாக நாங்கள் எங்களின் பிரச்சனையைச் சொல்வதிலும் பார்க்க ஒரு நம்பகத்தன்மையான அமைப்புக்களின் ஊடாகத் தெரிவிப்பதும் ஒரு வகையில் நன்மையானதே!

தமிழீழத்தைத் தங்கத்தட்டில் வைத்துத் தருவார்கள் என்ற சிந்தனையில் இருந்து மாறவில்லை போலுள்ளது.

சரி. ஒவ்வொரு தமிழனின் சாராசரி விடுதலைப் போராட்டத்துக்கான உழைப்பு எவ்வளவு??

பெரும்பாலான நாடுகள் தமிழர்களை அழிக்க உதவியது அதை நீங்கள் ஏற்று கொள்கின்றீர்களா ? நீங்கள் சொல்வது போல் 2009 மே க்கு முன்பு இந்த நாடுகளுக்கு எமது நிலை தெரியாதிருந்திருக்கலாம் இப்போது நிலைமை மாறியுள்ளது பெரும்பாலான நாடுகளில் சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படம் காண்பிக்கபட்டுள்ளது தமிழர்கள் வாழும் நாடுகளில் எம்மவர்கள் ஜனநாய முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர் இதைவிட என்னதான் செய்ய வேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் நம்பகத்தன்மையான அமைப்பு யார் ? என்னை பொறுத்தவரையில் விடுதலை புலிகளை தவிர வேறுயாரையும் நம்ப முடியாது என்பதே யதார்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.