Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆணின் ஆதங்கம் :D

Featured Replies

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

வயதானால் வழுக்கை விழாது

நகரத்தில்

நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்

தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை

சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்

எப்பொழுதும் நம் செல்பேசி

பயன்பாட்டிலேயே இருக்கும்

சடங்கானால்

சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்

நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்

கல்யாணம், மருதாணி, நலங்கு,

பட்டுப்புடவை, வளைகாப்பு என

அநேக தருணங்களில்

நாயகியாகி அமர்ந்திருக்கலாம்

காமக் கவிதை எழுதினால்

இலக்கிய உலகமே திடுக்கிடும்

கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்

மூத்த இலக்கியவாதி

திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு

நம்மை அழைத்துப்போய்

கடல் பார் என்று காட்டுவார்

இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்

முகப்புத்தகத்தில்

எவனையும் கவிழ்க்கலாம்

எவனாவது ஒருவன்

நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்

கிழவியாயிருந்தாலும் ஒருவன்

அருநெல்லிக்கனி தருவான்

ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும்

கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்

மதுரையை எரிக்கலாம்

கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி

ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்

டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்

அரச விவகார அதிகாரியானால்

பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்

நம் வலைப்பூவில்

நிறைய வண்டுகள் திரியும்

திடீரென்று நம் புத்தகம்

எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்

யார் அமைச்சராக வேண்டும் என்பதை

நாம் முடிவு செய்யலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா ?

- மகுடேசுவரன்

via..buzz

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணாக பிறக்க என்றுமே நான் நினைத்ததில்லை.

அதன் கஸ்டம்

அதன் வட்டம் .....

தெரிந்ததால்...

  • தொடங்கியவர்

இதை எழுதியவர் இந்திய ஆண் அங்கு பெண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் வசதிகளை மட்டும் வைச்சு ஒரு பக்க

பார்வையாக எழுதி உள்ளார் இதில் அவர் பெண்களின் மறுபக்கம்(வலிகள் துன்பங்கள் ) எதையுமே குறிப்பிடவில்லை .. ஒரு பகிர்வுக்காக மட்டுமே

பெண்களை குறைத்து எடை போடுவதற்கு இல்லை

தம்பி நெடுக்கர்...................

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆணின் ஆதங்கம் தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை பீரியட்டுடன் கஷ்டப்படுவதை பார்க்க... ஆணாக இருப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா இணைப்பிற்கு, இதை அவர் ஒரு பொழுது போக்கிற்காக மட்டும் எழுத்தியுள்ளார்,

ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனி தனி சிறப்புகள் உண்டு, மற்றவரையும் சக மனிதனாக நினைத்தில் இப்படி ஏங்க தேவையில்லை,

  • 2 weeks later...

நான் ஆணாகப்பிறந்த்தையிட்டு மகிழ்ச்சயடைகிறேன், ஏனெனில் அழகான என் மனைவியின் அழகை ரசிப்பதையிட்டு. ஆஆஆஆஆஆஆ

  • கருத்துக்கள உறவுகள்

பெண் வாழ்வதில்லை! அவள் வாழ்விக்கப் படுகின்றாள்!

ஆனால் ஆண் வாழ்கின்றான்! அவனது தலைவிதி மட்டும் பெண்ணால் தீர்மானிக்கப் படுகின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டை களண்ட மகுடேசுவரா?

உனக்கு ஏன் நாலுபிள்ளை பெத்த தாயின் சுகத்தை அவதியை எழுதமுடியவில்லை?அவளும் பெண்தானே.ஒவ்வொரு பெண்ணும்.....தங்களின் பிரசவ நேரத்தில்...மறுபிறவி எடுத்துவருகிறார்கள்...இதைவிட இயற்கையாகவே எத்தனை உடல் ரீதியான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.இதெல்லாம் உன்ரை களிமண் மூளைக்கு என்னெண்டு தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்கர்...................

உண்மையில் இந்தக் கவிதையின் நோக்கம்.. பெண்கள் ஊரை.. ஆண்களை.. உலகத்தை ஏமாற்றி சலுகை பெற்று வாழ்வதை நிறுத்தக் கோரவதாகவே நான் உணர்கிறேன்.

நான் ஆணாகப் பிறந்ததை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். காரணம்.. பெண்ணாகப் பிறந்து இந்தளவு சலுகைகளோடு ஒரு அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதிலும்... பிணமாக இருக்கலாம்.

சில ஆண்கள்.. பெண்களுக்கு அது இது.. மறுபிறப்பு என்றெல்லாம் சொல்லினம். ஆனால் மனிதப் பெண்களைப் போல வசதிகளோடு சலுகைகளோடு வாழாத எத்தனையோ உயிரினங்களின் பெண் விலங்குகளும் தான் முட்டை போட.. குட்டி போட கஸ்டப்படுகுதுகள். அதெல்லாம் இயற்கையாக அமைந்த கஸ்டங்கள். அதற்காக.. ஊரை உலகத்தை ஆண்களை ஏமாத்திப் பிழைக்கனும்.. இல்ல.. சலுகை பெற்று வாழனும்.. என்று நினைக்கிறது தப்பு.

அதேவேளை.. ஆண்கள் பெண்களிடத்தில் கவரப்பட்டு சேதாரப்பட்டால் அதற்கு ஆண்களே பொறுப்பும் ஆவர். :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கெடுத்தாலும் ஐந்தறிவுகளுடன் ஆறறிவை சமப்படுத்தும் அழகே தனியழகு?

ஐந்தறிவு விலங்குகள்...தாய்..சகோதரி..சகோதரம் என வேறுபாடில்லாமல் கலவி இன்பம் காண்கின்றன. இதனை ஆறறிவு உள்ளவன் செய்தாலும்???? இதற்கும் இயற்கை விளக்கம் வைத்திருப்பார்கள் ஒருசில பேராசிரியர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம்

வயதானால் வழுக்கை விழாது

நகரத்தில்

நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்

தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை

சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்

எப்பொழுதும் நம் செல்பேசி

பயன்பாட்டிலேயே இருக்கும்

சடங்கானால்

சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்

நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்

கல்யாணம், மருதாணி, நலங்கு,

பட்டுப்புடவை, வளைகாப்பு என

அநேக தருணங்களில்

நாயகியாகி அமர்ந்திருக்கலாம்

காமக் கவிதை எழுதினால்

இலக்கிய உலகமே திடுக்கிடும்

கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்

மூத்த இலக்கியவாதி

திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு

நம்மை அழைத்துப்போய்

கடல் பார் என்று காட்டுவார்

இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்

முகப்புத்தகத்தில்

எவனையும் கவிழ்க்கலாம்

எவனாவது ஒருவன்

நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்

கிழவியாயிருந்தாலும் ஒருவன்

அருநெல்லிக்கனி தருவான்

ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும்

கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்

மதுரையை எரிக்கலாம்

கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி

ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்

டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்

அரச விவகார அதிகாரியானால்

பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்

நம் வலைப்பூவில்

நிறைய வண்டுகள் திரியும்

திடீரென்று நம் புத்தகம்

எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்

யார் அமைச்சராக வேண்டும் என்பதை

நாம் முடிவு செய்யலாம்

பேசாமல் நாமும்

பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா ?

- மகுடேசுவரன்

via..buzz

மகுடேசு மாமூ ,,

”நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்”

இவ்ளோ பெருமை இருக்குற பொண்ணுக்கு - எதுக்குடா சிறப்பு பேரூந்து?

எவ்ளோ சலுகைகள் இருந்தாலும் ,, தனியா பயணம் செய்யுற நிலை வந்தா,,

ஆண்களால அவளுக்கு பாதுகாப்பு இல்லைனா?

மகுடு... சிந்திச்சுக்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்குத் தான் ஆறறிவு... மற்றும்படி செய்யுறது எல்லாம் ஐஞ்சறிவ விடக் கேவலம்.

ஐஞ்சறிவுக்கு பகுத்தறியும் ஆற்றல் இருந்தா நிச்சயம் அது.. அப்படி நடக்காது. ஆனால் ஆறறிவுக்கு பகுத்தறிவு இருந்தும்.. சில இடங்களில் ஐஞ்சறிவை விட மோசமா நடக்குதுங்கள்.. ஆண் பெண் என்ற வேறுபாடின்றி.

பெண்களுக்கு அதிக சலுகைகள் வழங்கிறதும்.. அவங்க தப்புச் செய்யவும் தப்பித்துக் கொள்ளவும்.. அதன் பால் மீண்டும் மீண்டும் தப்புச் செய்யவும் துணியச் செய்கிறது..! அதற்கு இந்தக் கவிதை நல்ல எடுத்துக்காட்டு. :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.