Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா அதுவும் பெங்கு தமிழ் நடாத்த வேண்டும் ?

Featured Replies

ஓ... மைகாட்...

2007 ஓ...2008 இலோ...சரியா ஞாபகத்திற்கு வருகுதில்லை.... கறுப்பு யூலையிலயும் கனெடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கறுப்புயூலையை களங்கப்படுத்தினவங்கள்தான் இப்பவும் பொங்குதமிழை தூக்கிக் காவடி ஆடுகினமோ?..... போங்கப்பா போய் மாவீரர் நாளை குழப்பமில்லாமல் நேர்த்தியா செய்யுங்கோ.... :icon_idea:

இங்கே அந்த குழப்பம் இல்லை அதுதான் பொங்குதமிழை எடுத்துள்ளார்கள்,குழப்ப

  • Replies 52
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D

விசுகு அண்ணா..

கோமகன் விடுற பிழை எனக்கு அடிக்கடி வாறது.. :D அது தமிழ் இலக்கணம் தெரியாமல் இல்லை.. shift key யை இரண்டுதரம் அழுத்திப் பிடிக்காததால் வாற வில்லை..! :lol:

180 கனடியத் தேசிய அமைப்புக்கள் பொங்குதமிழுக்கான ஆதரவு தெரிவிப்பு

கனடியச் சமாதானக் கூட்டமைப்பானது (Canadian Peace Alliance - CPA) ஒரு மில்லியன் கனடிய மக்கள் சார்பாக 180ற்கு மேற்பட்ட அமைப்புக்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனமாகும்.

இக்கட்டமைப்பானது வருடத்திற்கு இருமுறை நடாத்தும் மாநாட்டை இம்முறை ரொறன்ரோவில் உள்ள றயர்சன் (Ryerson University) பல்கலைக்கழகத்தில் போர் மற்றும் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக என்ற தலைப்பில் நடாத்தினார்கள்.

கனடியத் தமிழர் தேசிய அவையாலும் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்சார் பட்டறைக்கு அங்கு வந்திருந்த அனைவரதும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இப்பட்டறையில் சிறிலங்காவின் கொலைக்களம் காணொளியும் காண்பிக்கப்பட்டது. அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைத்து அமைப்புக்களின் பிரமுகர்களும் ஒருமனதாக சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலையை நிறுத்துவதற்கு தாயகம் தேசியம் தன்னாட்சியை அங்கீகரிப்பதே ஒரே தீர்வாகுமென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

எமக்கு நீதி வேண்டி சர்வதேசச் சமுதாயத்திடம் கேட்பதற்கும் மேலாக இனப்படுகொலைக்கெதிராக நாங்கள் துணிந்தெழுவோமென கனடியத் தமிழர் தேசிய அவையின் பேச்சாளர் திரு. கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்தார். இச்சரித்திரப் பிரசித்தி வாய்ந்த தீர்மானத்தின் போது 2011 ஒக்டோபர் 29 நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்விற்கான முழுமையான ஆதரவும் அவர்களால் வழங்கப்பட்டது. தாயகம் தேசியம் தன்னாட்சி வேண்டி தமிழர் சார்ந்த அனைத்து அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்படும் பொங்குதமிழ் நிகழ்வில் தமிழ் சமூகத்திற்கப்பால் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலர்களும் பேச்சாளர்களாகப் பங்குபற்றி தமிழருக்கான தமது ஆதரவினை தெரிவிக்கவுள்ளார்கள்.

நாம் அமைதிக்கும் நீதிக்குமான கனடியர்களாக ஒன்றிணைந்து உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென்றும் தமிழரின் தாயகப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் தமிழ் மக்கள் விரும்பியவாறு பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும் யுத்தநிறுத்தத்திற்கான ரொறன்ரோ ஒழுங்கமைப்பாளர் திரு.ஜேம்ஸ் கிளாக் தெரிவித்தார்.

அத்தோடு யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் தவபாலன் தாக்கப்பட்டதற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் கனடியச் சமாதானக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் கனடாவின் பெரிய அமைப்பாக கனடியத் தமிழர் தேசிய அவை விளங்குவதால் கனடியத் தமிழர் தேசிய அவயையும் இணைத்துள்ளார்கள் என்பதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

பணிமனை: 5310 Finch Avenue East, Unit 10

தொலைபேசி : 1.866.263.8622 - 416.646.7624

மின்னஞ்சல்: info@ncctcanada.ca

இணையத்தளம் : www.ncctcanada.ca

மூலம்: கனடியத் தமிழர் தேசிய அவை - ஐப்பசி 20, 2011

பிரசுரித்த நாள்: Oct 21, 2011 12:16:42 GMT

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே குற்றச்சாட்டை வைத்து நீங்களே விடையும் தந்துள்ளீர்கள்.

இதுதான் நீங்கள் கேட்ட ஆதாரம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93111

நீங்களே குற்றச்சாட்டை வைத்து நீங்களே விடையும் தந்துள்ளீர்கள்.

இதுதான் நீங்கள் கேட்ட ஆதாரம்.http://www.yarl.com/...showtopic=93111

உங்களின் இந்தப்பதில் உண்மையை கூறுகின்றது: குற்றச்சாட்டை ஆதாரம்c இல்லாமல் வைத்துள்ளது நீங்கள்.

ஆம், மேலே உள்ள திரி ஆரம்பிக்கப்பட்டது ஐப்பசி 17, உங்களின் இந்த திரி தொடங்கப்பட்டது அதற்கு அடுத்த நாள். காரணம் ....குழப்பல்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே குற்றச்சாட்டை வைத்து நீங்களே விடையும் தந்துள்ளீர்கள்.

இதுதான் நீங்கள் கேட்ட ஆதாரம்.

http://www.yarl.com/...showtopic=93111

மேலும்

துண்டுப்பிரசுரங்களில் தமிழ் சமுகமும் மாணவர் சமுகமும் என்று தான் நான் பார்த்தேன் இன்று தான் அதுவும் இந்த யாழ் இணையத்தினுடாகத்தான் தெரியும் இன் நிகள்வை கனடியத் தமிழர் தேசிய அவையால் முன் எடுக்கப்படுகின்றது என்று .

எதற்காக மக்களை குளப்புகின்றீர்கள் ? நேரடியாக இவர்கள் துண்டுப்பிரசுரங்களில் ஏன் இதனை அச்சிடவில்லை ?

மக்களை குளப்பவா ? எனக்கு புரியவில்லை..

தயவுசெய்து மக்களுக்கு அறியத்தரவும் யாரால் இன் நிகள்வு முன் எடுக்கப்படகின்றது என்று...

ஏனனில் ஏற்கனவே கனேடிய மக்கள் இந்த ”” தமிழ் சமுகமும் மாணவர் சமுகமும் ”” முகமுடி போட்டவர்கள் என நினைக்கின்றனர்..

தமிழ் சமுகமும் மாணவர் சமுகமும் = கனடியத் தமிழர் தேசிய அவைதான் என மக்களுக்கு தயவு செய்து சொல்லவும். ஏனனில் எமக்கு இன்று தான் தெரியும்.

நீங்களே குற்றச்சாட்டை வைத்து நீங்களே விடையும் தந்துள்ளீர்கள்.

இதுதான் நீங்கள் கேட்ட ஆதாரம்.

http://www.yarl.com/...showtopic=93111

FreeHi-Q 10-21-2011_7;57;21_PM.mp3

Edited by jeyabalan

அண்ணா சொன்னால் குறை நினைக்க கூடாது அவர் 1986 இல் தான் தனக்கு பதினாறு வயது என்று கூறியதாக ஞாபகம்

அதுதானே........... விசுகர் என்ன விளையாட்டு இது ? கூட்டிக்கழிச்சுப் பாத்தாலும் ஜெயபாலனுக்கு இப்ப 41 வயசுங்கோ :icon_idea: :icon_idea: :lol: :lol: .

விசுகு அண்ணா..

கோமகன் விடுற பிழை எனக்கு அடிக்கடி வாறது.. :D அது தமிழ் இலக்கணம் தெரியாமல் இல்லை.. shift key யை இரண்டுதரம் அழுத்திப் பிடிக்காததால் வாற வில்லை..! :lol:

நான் சொன்னால் விசுகர் கேக்கவே போறார் டங்கு :D :D .

தமிழ் மாணவர் சமூகமும் மற்றும் கனேடிய தமிழர் சமூகம் என்ற பெயரில்தான் சகல விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அதில் தொடர்பு இலக்கங்களும் இல்லை.

இவர்கள் தான் கடந்த இரண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளையும் இவ்வாறே நடாத்தினார்கள். அதில் பொதுவுடைமை கட்சி, லிபரல் கட்சி உறுப்பினர்கள் பேசினர். ஆனால், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசவில்லை. இந்த பொங்குதமிழ் நிகழ்வில் அவர்களும் பேசினால் அது எமக்கு எமது தாயக மக்களுக்கு பலம் தரும் நிகழ்வே.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகவே மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்கின்றீரா ?

இல்லை என்றால் எதற்காக இதுதான் அது அதுதான் இது என கூற முடியாது ?

கவுண்டமணி செந்திலின் வாழைப்பள கதைபோல உள்ளது ...

தமிழ் மாணவர் சமூகமும் மற்றும் கனேடிய தமிழர் சமூகம் என்ற பெயரில்தான் சகல விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அதில் தொடர்பு இலக்கங்களும் இல்லை.

இவ்வாறு செய்வதற்கு உள்ள தேவை உள்ளது. முக்கியமாக எதிரியை, சிங்கள நாட்டின் முகவர்களை தடைகளை விதிக்காமல் இருக்க.

பொதுவாக யார் செய்கிறார்கள், இடம் இவற்றை வெளியில் சொல்வதை தவிர்ப்பது மூலம் அவர்களால் பெற்ற அனுமதியை இரத்து செய்வது தவிர்க்கப்படுகிறது. இடம் எடுக்கும் பொழுது, யார்? என்ன தேவைக்கு? என பல விளக்கங்கள் தரப்பட்டே எடுக்கப்படுகின்றது. அந்த விபரங்கள் காவல்த்துறை, உளவுத்துறை ஆகியனவற்றுக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. பொதுவாக வார இறுதி நிகழ்வுகள் புதன் இல்லை வியாழக்கிழமை நாட்களில்தான் முழு விபரமாக மக்களுக்கு சொல்லப்படுகின்றது. தடைகளை, இடைஞ்சல்களை தவிர்ப்பதற்கே.

இங்கே ஏமாற்றுவது நோக்கம் இல்லை என்பது மக்களுக்கு நன்கே தெரிந்த விடயம்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் நாங்கள் இங்கு ஆயுதங்கள் கொண்டு செல்லவில்லையே ? இது ஒரு நிகள்வு...நீங்கள் கூறுவதை நான் ஏற்கின்றேன் ..நீங்கள்

வெளியிட்ட இந்த கடிதம் காவல்த்துறை, மற்றும் உளவுத்துறை ஆகியனவற்றுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என நீங்கள் நிணைக்கின்றீர்களா ?

ஏனனில் யாழ் இணையத்தில் வற்துள்ளது இது இப்போது எல்லா இடத்திலும் இருக்கும் .

மக்களுக்கு தெரியாது இது தான் உண்மை வரும் காலங்களில் நிகள்வுகளை

கனடியத் தமிழர் தேசிய அவையால் மெற்கொள்ளப்படுகின்றது என்றே கூறுவோம் . இதில் தப்பில்லை...

எதற்காக அப்பாவி மக்களையும் மாணவர் பலியாக்ள வேண்டும்.

எனது மகன் கேட்டார் அப்பா நாநும் மானவன்தான் ஆனால் எங்களை யாரும் எங்களின் அனுமதியின்றி பிரதிநிதிபடுத்தமுடியாது என்று.

அவர் கூறியதும் சரிதான்.

????????????????? ??????????????? ??????????????ஃ ??????????

மக்கள் என்றார்கள் எங்களை கேட்டார்களா ? ஊர் சங்கங்களை கேட்டார்களா ? பல அமைப்புக்கள் உள்ளன அவர்களை கேட்டார்களா ?

எனக்கு தெரிந்த எந்த ஒரு அமைப்பையும் கேட்கவில்லை...

கேட்பவன் பார்ப்பவன் கேணையன் என்றால் எதையும் அவர்களின் அனுமதியின்றி செய்லாமா ?

ஒன்றிணைவோம் ஒருமித்த குரலில் எல்லோரையும் ஒன்றிணைத்து எமது இலட்சியத்துக்காய் போராடுவோம்....

நான் என்ற அகங்காரம் வேண்டாம்.

எதற்காகவும் எம்மை விற்க வேண்டாம்...

எந்த கொம்பு அரசியல் வாதியிற்கும் அல்லது ஒரு கட்சியிற்கோ தமது அமைப்பில் லாபத்திற்காக எம் ஒட்டுமொத்த இனத்தையும்

தாரைவாற்கக்கூடாது...

எம்மை தாரைவாற்றுக் கொடுக்க யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது ?

நான் எந்க காரணத்திற்காகவும் இந்த கேவலம் கெட்ட கட்சியை ஆதரிக்க மாட்டேன்...இவர்கள் 2009 எம் இனத்தின் அழிவை பார்த்து கொண்டிருந்தது...இன்று தங்கள் சுயநலத்திற்காக ( எமது வாக்குகளை அடுத்த தேர்தலில் பெறுவதற்காக) இன்று நாக்கை தொங்க போட்டுக்கொண்டு எம்பின்னால் வருகின்றனர் இதில் மாற்றுக்கருத்து இல்லை...

இந்த கட்சிதான் bill c-49 மற்றும் C-49 ஜ கொண்டுவந்தது ...இந்த bill c-49 மற்றும் C-49 என்ன என்று தெரியுமா ?

http://ccrweb.ca/en/c4 = C-4 - Anti-smuggling or anti-refugee?

http://www.troymedia.com/2010/11/08/canadas-bill-c-49-will-create-two-classes-of-refugees/ =

Canada’s Bill C-49 will create two classes of refugees

http://www.liberal.ca/newsroom/news-release/liberals-oppose-bill-c49-targeting-refugees-human-smugglers/ =

Liberals oppose Bill C-49 for targeting refugees instead of human smugglers

http://ccla.org/our-work/focus-areas/bill-c-49/

http://www.parl.gc.ca/About/Parliament/LegislativeSummaries/bills_ls.asp?ls=C49&Parl=38&Ses=1

அகதிகளுக்கு தலை இடி கொடுக்கும் கட்சியிற்கு விழா எடுப்பு ...பலே பலே ...

இப்போது கூறுங்கள் இவர்களுக்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டுமா ?

இதில் ஏதோ உள்ளது ...அதுதான் உண்மை ...

மாவீரர் நாளையும் விற்பீர்களா அல்லது தானம்தான் செய்வீர்களா ?

அவர்களையாவது விட்டுவிடுங்கள்...

மக்கள ஒற்றுமையாக அந்த புனித நாளை முன் எடக்கட்டும்

நீங்கள் தொடங்கியது ஒன்றில், 'எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா அதுவும் பெங்கு தமிழ் நடாத்த வேண்டும் ?' இப்பொழுது கேட்கும் கேள்விகளோ வேறு விடயங்களைப்பற்றி.

யராவது மக்களை ஏமாற்றினால் அவர்களை இனம்கண்டு கொள்ளும் அறிவும் பக்குவமும் மக்களுக்கு நிறையவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா சொன்னால் குறை நினைக்க கூடாது அவர் 1986 இல் தான் தனக்கு பதினாறு வயது என்று கூறியதாக ஞாபகம்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

தவறுக்கு வருந்துகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் செல்ல வந்த விடயம் என்ன வென்றால் இப்படிப்பட்ட அரசிற்கா ஒரு விழாவை அதுவும் ”பொங்கு தமிழ் ” என்ற

பெயரிலா நாம் எடுக்க வேண்டும் ?

பொங்குதமிழ் இது எங்கள் கொத்து ...யாரை கேட்டு ” பொங்குதமிழ் என்ற பெயரை தாரைவார்க்க முன்வந்தீர்கள் ?

மக்களை கேட்டீர்களா ? இவர்களை கவுரவப்படுத்த நீங்கள் ” பொங்குதமிழை ” பாவிக்கலாமா என்று ? எம்மையே விற்றது

போல ஒரு உணர்வு சிந்தியுங்கள்.

Edited by jeyabalan

ஓ... மைகாட்...

2007 ஓ...2008 இலோ...சரியா ஞாபகத்திற்கு வருகுதில்லை.... கறுப்பு யூலையிலயும் கனெடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கறுப்புயூலையை களங்கப்படுத்தினவங்கள்தான் இப்பவும் பொங்குதமிழை தூக்கிக் காவடி ஆடுகினமோ?..... போங்கப்பா போய் மாவீரர் நாளை குழப்பமில்லாமல் நேர்த்தியா செய்யுங்கோ.... :icon_idea:

அதே.... :icon_idea: :icon_idea: :icon_idea:

வேறு யாருக்கு இப்படியான நல்ல சிந்தனைகள் எல்லாம் வரும்????? அதற்கு நிதி சேர்ப்பதற்காக நூறு டொலர்களுக்கு ரிக்கற்றும் விற்கிறார்களாம் என்று கேள்வி.....

Edited by தமிழச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

100.00 ரிக்கட்டா ? எதற்கு ??? 180

180 கனடியத் தேசிய அமைப்புக்கள் பொங்குதமிழுக்கான ஆதரவு தெரிவிப்பு ??? யார் இந்த 180 அடைப்புக்கள் இவர்களை பட்டியலிடுங்கள்...

தமிழ் அமைப்புக்களா ? எனக்குத் தெரிந்தவா எந்த ஒரு அடைப்புக்களுக்கும் அழைப்பு விடப்படவில்லை முதல் நாள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட விடயம் அமைப்புக்களுக்கு அழைப்பு விடவில்லை ஆகையால் இந்த கூட்டத்தை பிற்போடப்பட்டது என்று. பின்னரும் அழைப்பு விடப்படவில்லை ... இன்நிகள்வு ஒரு அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றது. அன்று அங்கு கூட்டத்திற்கு என சென்றவர்களை ( மாணவர்களையும் கூட) பொலிசை வைத்து கலைத்தனராம்.

இது நடந்த இடம்

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

பணிமனை: 5310 Finch Avenue East, Unit 10.

இப்படி நடக்கவில்லை என்று மாத்திரம் சொல்லியோ என்னிடம் ஆதாரம் உண்டோ என கோட்கவேண்டாம்.

அணிதரண்டு சொல்வோம் ...

அதே.... :icon_idea: :icon_idea: :icon_idea:

வேறு யாருக்கு இப்படியான நல்ல சிந்தனைகள் எல்லாம் வரும்????? அதற்கு நிதி சேர்ப்பதற்காக நூறு டொலர்களுக்கு ரிக்கற்றும் விற்கிறார்களாம் என்று கேள்வி.....

ஒரு அலுவலை செய்வதற்கு பணம் தேவை. யாரும் விரும்பினால் கொடுக்கலாம். விரும்பாவிட்டால் கொடுக்கத்தேவையில்லை. அது அவரவர் தெரிவு. யாரும் யாரையாவது மிரட்டினால், காவல்துறையிடம் முறையிடலாம்.

100.00 ரிக்கட்டா ? எதற்கு ??? 180

180 கனடியத் தேசிய அமைப்புக்கள் பொங்குதமிழுக்கான ஆதரவு தெரிவிப்பு ??? யார் இந்த 180 அடைப்புக்கள் இவர்களை பட்டியலிடுங்கள்...

தமிழ் அமைப்புக்களா ? எனக்குத் தெரிந்தவா எந்த ஒரு அடைப்புக்களுக்கும் அழைப்பு

180 கனடியத் தேசிய அமைப்புக்கள் பொங்குதமிழுக்கான ஆதரவு தெரிவிப்பு

கனடியச் சமாதானக் கூட்டமைப்பானது (Canadian Peace Alliance - CPA) ஒரு மில்லியன் கனடிய மக்கள் சார்பாக 180ற்கு மேற்பட்ட அமைப்புக்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனமாகும்.

Canadian Peace Alliance - யார் இந்த 180 அடைப்புக்கள் இவர்களை பட்டியலிடுங்கள்...

http://www.acp-cpa.ca/en/group_directory.html

தமிழ் மாணவர் சமூகமும் மற்றும் கனேடிய தமிழர் சமூகம் என்ற பெயரில்தான் சகல விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அதில் தொடர்பு இலக்கங்களும் இல்லை.

இவர்கள் தான் கடந்த இரண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளையும் இவ்வாறே நடாத்தினார்கள். அதில் பொதுவுடைமை கட்சி, லிபரல் கட்சி உறுப்பினர்கள் பேசினர். ஆனால், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசவில்லை. இந்த பொங்குதமிழ் நிகழ்வில் அவர்களும் பேசினால் அது எமக்கு எமது தாயக மக்களுக்கு பலம் தரும் நிகழ்வே.

கனேடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் எனும் வரும்போது, அனைத்து தமிழ் அமைப்புக்களையும் உள்ளடக்கும். ஆனால், இப்போது பொங்கு தமிழ் செய்வதோ மக்களவை மற்றும் இளையோர் அமைப்பு என்ற பெயரில் உலகத்தமிழர் இயக்கமே. ஊர்ச்சங்கங்களோ அல்லது வேறு மாணவர் அமைப்புக்களோ இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் உள்ளடக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது, நீங்கள் எப்படித் தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் என விளம்பரம் கொடுக்க முடியும்? இது மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் விடயம்தானே?

இவ்வாறே கனேடியன் சமாதான அமைப்பையும் (Canadian Peace Alliance) நீங்கள் இதற்குள் கொண்டு வருகிறீர்கள். அவர்களின் கீழ் 180 அமைப்புக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு மறுக்கவில்லை. பல தேவைகளுக்காக அவர்கள் ஒரே குடையின் கீழ் இணைந்திருக்கிறார்கள். அதற்காக அந்த 180 அமைப்புக்களும் இவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று கொள்ள முடியாது. அந்த 180 அமைப்புக்களையும் சேர்ந்த 180 பேரும் சமூகமளித்தால் மட்டுமே அந்த 180 அமைப்புக்களும் இவர்களுக்கு ஆதரவு என்று கொள்ளமுடியும்.

பொங்குதமிழ் செய்யக் கூடாது என்று நான் இங்கு கூறவரவில்லை. அதனைச் செய்வதற்கு ஒரு வலுவான காரணமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் ஏற்பட்டால் செய்யத்தான் வேண்டும். ஹார்ப்பரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்ட காரணத்திற்காக பொங்கு தமிழைச் செய்வது சரியா? அவருக்கு நன்றி சொல்வதற்கு உங்களுக்கு வேறு வழிகளே தெரியவில்லையா?

துண்டுப்பிரசுரங்களில் தமிழ் சமுகமும் மாணவர் சமுகமும் என்று தான் நான் பார்த்தேன் இன்று தான் அதுவும் இந்த யாழ் இணையத்தினுடாகத்தான் தெரியும் இன் நிகள்வை கனடியத் தமிழர் தேசிய அவையால் முன் எடுக்கப்படுகின்றது என்று .

எதற்காக மக்களை குளப்புகின்றீர்கள் ? நேரடியாக இவர்கள் துண்டுப்பிரசுரங்களில் ஏன் இதனை அச்சிடவில்லை ?

மக்களை குளப்பவா ? எனக்கு புரியவில்லை..

தயவுசெய்து மக்களுக்கு அறியத்தரவும் யாரால் இன் நிகள்வு முன் எடுக்கப்படகின்றது என்று...

ஏனனில் ஏற்கனவே கனேடிய மக்கள் இந்த ”” தமிழ் சமுகமும் மாணவர் சமுகமும் ”” முகமுடி போட்டவர்கள் என நினைக்கின்றனர்..

தமிழ் சமுகமும் மாணவர் சமுகமும் = கனடியத் தமிழர் தேசிய அவைதான் என மக்களுக்கு தயவு செய்து சொல்லவும். ஏனனில் எமக்கு இன்று தான் தெரியும்.

ஒரு முக்கிய மாணவர் அமைப்பான 'தமிழ் இளையோர் அமைப்பு - கனடா' இதில் இணைப்பாளராக உள்ளது: http://www.canadatyo.org/tyo/index.php

இந்த 180 அமைப்புக்களும் தமிழர்களின் அமைப்புகளா?

அல்லது

கனடாவில் உள்ள வேற்று இனத்தவர்கள் / வெவ்வேறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட உள்ளூர் பிரஜைகளின் அமைப்புகளா?

கனேடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் எனும் வரும்போது, அனைத்து தமிழ் அமைப்புக்களையும் உள்ளடக்கும். ஆனால், இப்போது பொங்கு தமிழ் செய்வதோ மக்களவை மற்றும் இளையோர் அமைப்பு என்ற பெயரில் உலகத்தமிழர் இயக்கமே. ஊர்ச்சங்கங்களோ அல்லது வேறு மாணவர் அமைப்புக்களோ இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் உள்ளடக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது, நீங்கள் எப்படித் தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் என விளம்பரம் கொடுக்க முடியும்? இது மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் விடயம்தானே?

உலகத்தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு. கனேடிய தமிழர் அவை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் சட்டபூர்வமான அமைப்பு.

இவ்வாறே கனேடியன் சமாதான அமைப்பையும் (Canadian Peace Alliance) நீங்கள் இதற்குள் கொண்டு வருகிறீர்கள். அவர்களின் கீழ் 180 அமைப்புக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு மறுக்கவில்லை. பல தேவைகளுக்காக அவர்கள் ஒரே குடையின் கீழ் இணைந்திருக்கிறார்கள். அதற்காக அந்த 180 அமைப்புக்களும் இவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று கொள்ள முடியாது. அந்த 180 அமைப்புக்களையும் சேர்ந்த 180 பேரும் சமூகமளித்தால் மட்டுமே அந்த 180 அமைப்புக்களும் இவர்களுக்கு ஆதரவு என்று கொள்ளமுடியும்.

கனேடிய பிரதமர் லிபியாவுக்கு படையை அனுப்பினார். அது கனேடிய மக்கள் எடுத்த முடிவே, அது தான் உலக நியதி.

பொங்குதமிழ் செய்யக் கூடாது என்று நான் இங்கு கூறவரவில்லை. அதனைச் செய்வதற்கு ஒரு வலுவான காரணமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் ஏற்பட்டால் செய்யத்தான் வேண்டும். ஹார்ப்பரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்ட காரணத்திற்காக பொங்கு தமிழைச் செய்வது சரியா? அவருக்கு நன்றி சொல்வதற்கு உங்களுக்கு வேறு வழிகளே தெரியவில்லையா?

தனியவே அந்தக்கட்சி மட்டுமே அழைக்கப்பட்டால் நீங்கள் சொல்லுவது சரி.

இந்த 180 அமைப்புக்களும் தமிழர்களின் அமைப்புகளா?

அல்லது

கனடாவில் உள்ள வேற்று இனத்தவர்கள் / வெவ்வேறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட உள்ளூர் பிரஜைகளின் அமைப்புகளா?

கனடாவில் உள்ள வேற்று இனத்தவர்கள் / வெவ்வேறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட உள்ளூர் பிரஜைகளின் அமைப்பு - கனடா என்ற நாடு தழுவிய ரீதியில் உள்ள அமைப்புக்கள். இதில் எல்லா கலாச்சார பல்லின மக்களும் உள்ளனர். இது ஒரு பலமான அமைப்பு. அரசியல் செல்வாக்கும் உள்ளது இதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பொங்குதமிழ் நிகழ்வு கனெடிய அரசுக்கு நன்றி சொல்வதற்காக முன்னெடுக்கப்படுகிறதா?

உண்மையில்பொங்கு தமிழுக்கான அர்த்தம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பொங்குதமிழ் நிகழ்வு கனெடிய அரசுக்கு நன்றி சொல்வதற்காக முன்னெடுக்கப்படுகிறதா?

உண்மையில்பொங்கு தமிழுக்கான அர்த்தம் என்ன?

எனது கேள்வியும் அது தான். யாரால் என்ன நோக்கத்துக்காக பொங்கு தமிழ் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறித்து ஒரு தெளிவும் இல்லாமல் பம்மாத்து மேற்குலகுக்கு நன்றி சொல்ல "பொங்குதமிழ்" எனும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.

உலகத்தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு. கனேடிய தமிழர் அவை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் சட்டபூர்வமான அமைப்பு.

கனேடிய பிரதமர் லிபியாவுக்கு படையை அனுப்பினார். அது கனேடிய மக்கள் எடுத்த முடிவே, அது தான் உலக நியதி.

தனியவே அந்தக்கட்சி மட்டுமே அழைக்கப்பட்டால் நீங்கள் சொல்லுவது சரி.

கனடாவில் உள்ள வேற்று இனத்தவர்கள் / வெவ்வேறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட உள்ளூர் பிரஜைகளின் அமைப்பு - கனடா என்ற நாடு தழுவிய ரீதியில் உள்ள அமைப்புக்கள். இதில் எல்லா கலாச்சார பல்லின மக்களும் உள்ளனர். இது ஒரு பலமான அமைப்பு. அரசியல் செல்வாக்கும் உள்ளது இதற்கு.

ஆக, இது உலகத்தமிழர் இயக்கம்தான் நடத்துகிறது என்பது தெளிவாகிவிட்டது.

எனது கேள்வியும் அது தான். யாரால் என்ன நோக்கத்துக்காக பொங்கு தமிழ் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறித்து ஒரு தெளிவும் இல்லாமல் பம்மாத்து மேற்குலகுக்கு நன்றி சொல்ல "பொங்குதமிழ்" எனும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.

இதிலிருந்தே மக்களவை, மற்றும் இளையோர் அமைப்பின் சிந்தனைத் திறனும் நோக்கமும் விளங்குகிறது. கனடாவிலுள்ள இளையோரை மழுங்கடிப்பதில் இவர்களுக்கு நிகர் வேறு எவரும் இருக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.