Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொடிப்பசங்க என்னத்தை செய்திடுவாங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ரீன் ஏஜ் பசங்க.. 12 முதல் 20.. 22 வயது வரைதான் இருக்கும். உலகின் சில மூலைகளில் இருந்து வந்து.. லண்டனில் ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டி சந்திக்கிறாங்க. ஏன் இந்த ரகசிய சந்திப்பு.. காரணம்.. அவங்களுக்கு தரப்பட்டுள்ள பெயர்.. jailbreakers.

என்ன இந்த வயசிலேயே ஜெயிலை பிரேக் பண்ணி தப்பிடுறாங்களா என்று நீங்கள் நினைக்கக் கூடும்... ஆனால் அவங்க பிரேக் பண்ணுறது சாதாரண ஜெயில் இல்லை. அப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன் தொடங்கி.. ஐபாட்.. ஐபொட்.. என்று போய் சொனி பி(p)எஸ் 3 மற்றும் கூகிள் அன்ராயிட் வரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்தப் பையன்களின் பொழுதுபோக்கே.

இதனால் என்ன நன்மை.. அவங்களுக்கு.. என்று கேட்கிறீங்களா. இந்த ஜெயில்பிரேக் செய்யப்பட்ட அப்பிள் மற்றும் இதர இலத்திரனியல் பொருட்கள் மீது அந்தந்த நிறுவனங்கள் விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறி நாங்கள் அவற்றை எமது விருப்புக்குரிய அப்பிளிகேசன்களை தரவிறக்கி பாவிக்கலாம். இதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட எதுவும் இல்லை. ஆனால் இந்தப் பையங்களுக்கோ.. இந்த மென்பொருட்களை விற்பதன் மூலம் வருவாய் கிடைக்கிறது. இவர்களிடம் பெரிய இணையத்தளங்கள் கிடையா. வெறும் புளக்குகளை வைத்தே.. தங்கள் மென்பொருட்களை அறிமுகம் செய்து விடுகின்றனர். அவையோ..மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை இழுத்து வந்துவிடுகின்றன. அப்புறம் என்ன.. ஒரு சிறிய கட்டணத்தோடு.. ஊடுருவல் மென்பொருட்களை மெருகேற்றி சந்தையில் விடுகின்றனர். போதிய வருவாயும் கிடைக்கிறது.

_56157575_jameswhelton1.jpg

James Whelton

சரி.. இதைச் செய்ய இவர்கள் என்ன பெரிசா படிக்கிறாங்க. எதுவும் இல்லை. செய்வது.. என்னவோ.. ஆன்லைனில் சாட்டிங். அதுவும் சும்மா பெட்டையளோட இல்லை. காரியத்தோட.. தகவல்களைப் பரிமாறிக் கொண்டு.. ஹாக்கிங் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அந்த அறிவைப் பயன்படுத்தி.. ஊடுருவல் மென்பொருட்களை தயாரித்து.. பெரிய பெரிய நிறுவனங்களின் உற்பத்திகளை கணப்பொழுதில் ஊடுருவ வழி செய்துவிடுகிறார்கள்.. இந்தப் பொடிப் பசங்க.

இந்தப் பொடிப்பசங்களின் செயலைக் கண்டு அப்பிள் நிறுவனமே ஆடிப்போய் இருக்கிறது. இதனைத் தடுக்க என்ன வழி என்று.. கவுண்டு கிடந்து யோசித்துப் பார்த்த அப்பிள்.. இப்படியான பசங்களின் திறமையை தான் பாவிச்சா என்ன என்ற முடிவுக்கு வர.. இப்போ.. இவர்களைத் தேடி ஓடுகிறது அப்பிள். பள்ளிப் படிப்பு முடித்து பல்கலைக்கழகம் போய்.. ஒரு வாரம் கூட ஆக முதலே.. பெரிய பெரிய நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்தோடு.. முதன்மை நிர்வாகிகள் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.. இந்தப் பொடிப்பசங்க. இதை இப்படி வர்ணிக்கிறான் James Whelton என்ற பொடியன்..

"I did my final exams on a Friday, and became a chief executive on Monday.”

இது அவங்க திறமைக்கு கிடைத்த பரிசு மட்டுமே.

_56157573_aaronash2.jpg

இவன் பெயர் Aaron Ash. இவனின் ஊடுருவல் மென்பொருளை பாவிக்கிறவங்க தொகை என்ன தெரியுமா.. 3.5 மில்லியன் வாடிக்கையாளர்கள். எல்லோரும் அவனின் மென்பொருளுக்கு காசு கொடுப்பதில்லை. இருந்தாலும் இவன் தனது மென்பொருள் மூலம்.. சுமார் 100,000 டொலர்களை உழைத்து அதன் மூலம் கணணி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு படிக்கிறான்.

இன்னும் சிலரோ.. பல்கலைகழகம் போய் என்னத்தை வெட்டிக்கிழிக்கப் போறன்.. பேசாம.. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சா என்ன என்று பெரிய மென்பொருள் வியாபார நிறுவனங்களோடு கூட்டு அமைக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

ரீன்ஏஜ் பசங்க என்றால்... ஏதோ.. றோட்டில போற பெட்டையளோட சேட்டை விட்டுக் கொண்டு.. சண்டியன்களா.. திரியுற வயசு என்று நினைக்கிறவங்க உள்ள இந்த உலகத்தில.. ரகசியமா இருந்து.. வெளி உலகிற்கு தங்களை அடையாளம் காட்டாம.. பெரும் செல்வந்தர்களாக மாறிக் கொண்டிருக்கும் இப்படிப் பசங்களும் இருக்காங்க.. என்றதை நீங்கள் உணரனும்.. பாருங்க.

சரி நான் ஏன் இதனை இங்க பகிர்ந்து கொள்ளுறன் என்று நினைக்கிறீங்களா.. நமக்கெல்லாம் ஹாக்கிங் செய்ய பயம். அதுவும் இன்றி அந்தத் தொழில்நுட்பத்தை அறிஞ்சு அதில மிணக்கடப் பஞ்சி வேற. இந்தப் பொடிப்பசங்க... விடுற மென்பொருட்களை சுட்டு பாவிக்கிறதே நம்ம தொழில்.அதுதான்.. நாம பயன்பெற நமக்கு தெரியாம.. நமக்காகவும் உழைச்சவங்க பற்றி கொஞ்சம் சொல்லத்தானே வேணும்.. அது தான் ஒரு செஞ்சோற்றுக் கடனுக்காக இதனை பதிகிறேன்.

மூலப் பதிவு இங்கு..

http://www.bbc.co.uk...nology-15340326

(மூலப் பிரதியில் இருந்தான ஆக்கம்.. நெடுக்ஸ்.)

Edited by nedukkalapoovan

காலத்திற்கேற்ப கைத்தொழில் பழகுவது எதிர்காலச் சந்ததிக்கு நல்லது.

மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்.

'ஜெயில் பிரேக்கிங்' கூட தேவையானால் குற்றமாக அறிவிக்கப்படலாம். அது மேற்குலக நாடுகளில் அந்த நிறுவனங்கள் செய்யும் அழுத்தத்தில் தங்கியுள்ளது. (ஆனால் நிறுவனங்களும் அரசுகளும் இதை செய்கின்றன)

முன்பு பாட்டுக்கள் தரவிறக்கம் செய்வது வழமையாக இருந்தது. இப்பொழுது அது குற்றமாக பார்க்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மகனும் சொன்னான்.அப்பா 50 பவுண்ஸ்சுக்கு ஐ போன் விற்கப் போறதா ஒரு பொடியன் சொல்லுறான் வாங்குவமா?பழைய போன் எண்டா பற்றறி பட்டை அடி அடிச்சிருக்கும் வேண்டாம் என்று சொன்னேன்.அப்பா அது ஜெயில் பிறேக் பண்ணிணது என்று சொன்னான்.அப்படின்னா என்ன?என்றேன் மேற் கண்டவாறு சொன்னான்.உன்னுடைய பள்ளிக்கூடத்தில் கமரா போன் பாவிக்கவே தடை எதற்கு இது என்று சொல்லி கடத்தி விட்டேன்.இந்தக் கால இளசுகள் ரொம்பவும் தான் முன்னேறிட்டாங்க.

Edited by புலவர்

  • தொடங்கியவர்

சரியான லூசு அப்பாவா இருக்கீங்களே. அதை 50 பவுணுக்கு வாங்கிட்டு.. IOs ரவுன் கிரேட் அல்லது அப்கிரேட் பண்ணினா.. ஜெயில் பிரேக் போயிடும். அப்புறம்.. நீங்கள் பாவிக்கலாம்.. அல்லது.. ebay or Amazon இல் போட்டால் இப்ப 2 அல்லது 3 மடங்கு விலைக்கு விற்கலாம்..! ஐயோ.. பிழைக்கத் தெரியாத டாடி..! :lol::icon_idea:

சரியான லூசு அப்பாவா இருக்கீங்களே.

யானைக்கு ஒருகாலம் என்றால் பூனைக்கும் வராமலா போய்விடும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானைக்கு ஒருகாலம் என்றால் பூனைக்கும் வராமலா போய்விடும் :D

பிள்ளைகளோட அதிகாரமுள்ள அப்பாவா இருக்கக் கூடாது. அவங்க லெவலில.. குழந்தையா.. சிறுவனா.. வாலிபனா.. இருக்கனும். அப்பதான்.. அவங்க மனசில.. நடத்தையில நிகழுற மாற்றங்கள கண்டறிய முடியும். அதோட சேர்ந்து பெற்றோர்கள் பயணிக்க முடியும். இது அப்பா எண்டா... அம்மா எண்டா.. அதிகார தோறணை உள்ள ஆக்கள் போல.. காட்டினா.. எப்படி பிள்ளைகளின் எண்ண ஓட்டதோட.. நிகழ்வோட்டத்தோட கூட ஓட முடியும்.

அன்றைய அப்பாக்கள் போலவே இன்றைய அப்பாக்களும் அப்படியே அச்சுப்பிசகாம மாறி இருக்காங்க என்பது கொஞ்சம் வருத்தமளிக்கத்தான் செய்து. இது மாறனும். இல்ல பசங்க மாத்துவாங்க.. இல்ல மாறிடுவாங்க. அப்புறம் அப்பாக்கள்.. இந்தக் காலப் பிள்ளைகள்.. வெரி பாஸ்ட்.. என்று.. அதிர்ச்சியை தான் அடைய வேண்டி இருக்கும். :lol::icon_idea:

நான்னா.. சப்போஸ்.. ஒரு அப்பாவா.. இருக்கிற நிலைமை வந்தா.. நிச்சயமா நல்ல அப்பாவா விட நல்ல நண்பனாவே இருக்க விரும்பிறன்..! அதிஸ்டவசமா அந்த நிலை வரக்கூடாது என்றும் கடவுளை வேண்டிக்கிறன். ஏன்னா பிள்ளைகளுக்கு நண்பனா இருக்கிறதற்காக.. ஒரு பிசாசை கட்டிக்க வேணுமே.. அதுதான்..! :(:D

மனசிலை ஆசை வைத்துக்கொண்டு கடவுளை எல்லாம் துணைக்கு கூப்பிடக்கூடாது பிறதர்... :D<_<

பிள்ளைகளோட அதிகாரமுள்ள அப்பாவா இருக்கக் கூடாது. அவங்க லெவலில.. குழந்தையா.. சிறுவனா.. வாலிபனா.. இருக்கனும். அப்பதான்.. அவங்க மனசில.. நடத்தையில நிகழுற மாற்றங்கள கண்டறிய முடியும். அதோட சேர்ந்து பெற்றோர்கள் பயணிக்க முடியும். இது அப்பா எண்டா... அம்மா எண்டா.. அதிகார தோறணை உள்ள ஆக்கள் போல.. காட்டினா.. எப்படி பிள்ளைகளின் எண்ண ஓட்டதோட.. நிகழ்வோட்டத்தோட கூட ஓட முடியும்.

செயல்வடிவம் கொடுப்பது தான் கடினம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ போனினை சமத்துவம் தொடங்கி கடைசியிலை தண்ணி அடிக்கிறதிலை சமமாய் வந்து நிக்கும்.ஊரிலை ஐ போன் இல்லாமலே கன தாய்தகப்பன் மகள்மகன் சமத்துவங்களை கண்டு களிச்சனாங்கள்....பிள்ளையளை சொல்லுற இடத்திலை சொல்லி வளக்கோணும்..தட்டுற இடத்திலை தட்டி வளக்கோணும்...... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சரியான லூசு அப்பாவா இருக்கீங்களே. அதை 50 பவுணுக்கு வாங்கிட்டு.. IOs ரவுன் கிரேட் அல்லது அப்கிரேட் பண்ணினா.. ஜெயில் பிரேக் போயிடும். அப்புறம்.. நீங்கள் பாவிக்கலாம்.. அல்லது.. ebay or Amazon இல் போட்டால் இப்ப 2 அல்லது 3 மடங்கு விலைக்கு விற்கலாம்..! ஐயோ.. பிழைக்கத் தெரியாத டாடி..! :lol::icon_idea:

இல்லை நெடுக்கு, புலவர் செய்தது சரி, இப்படி லாபமா கிடைக்கிறது என்று இப்ப வாங்கினால், அந்த பழக்கம் அவனை தப்பான வழியில் பொருட்களை வாங்க தூண்டும், விலை கூடினாலும் நல்ல பொருட்களை நேர் வழியில் வாங்கினால் தான் நிலைத்து நிற்கும், சில வேளை ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.