Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆமிக்காறருக்கும் நாங்களோ உதவி…?


Recommended Posts

ஆமிக்காறருக்கு நாங்களோ உதவி…?

சொல்லட்டோ ? சுரேன் கேட்டான். ஓம்...! சொந்த இடம்…..3பிள்ளைகள் ..மூத்த பிள்ளை 19வயது , 2வது பிள்ளை 17வயது….3வது பிள்ளை 11வயது….எழுதிக்கொண்டு வர சுரேன் அவர்களது பெயர்களை வாசித்தான்.

ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடுறதெண்டு சொல்றவையெல்லோ அந்த நிலமைலதான் நானும். அண்ணை நீங்களெனக்கு ஆக்களிட்டை அடிவாங்கித்தரத்தான் நிக்கிறியளென்ன…?

எங்களுக்கு உதவாட்டிலும் பறவாயில்லை இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவுங்கோ….நாங்கல்லாம் நாட்டை நேசிச்சுத்தான் வெளிக்கிட்டனாங்கள். எங்களுக்கு கொள்கை லட்சியமெண்டு எல்லாமிருந்தது…நாங்க உள்ளையிருக்கிறதிலயும் ஞாயமிருக்கு…!

ஆனா இந்த 50வயது மனிசன் எங்கடையாக்களுக்கு உதவப்போய்த்தான் இண்டைக்கு இந்தச் சிறையில காயுது….எங்களையும் விட இந்த மனிசன் உசத்தி தெரியுமோ ?

எங்கடையளை நம்பி உதவின மனிசனை எங்கடையளே காட்டிக் குடுத்தீட்டு வெளியில திரியுதுகள் ஆனால் எங்களுக்காக உதவ வந்து குடும்பமும் தெருவுக்கு வந்து இப்ப வாழவும் வீடில்லை அன்றாடம் சாப்பிடவும் பிச்சையெடுக்கிற நிலமையில இருக்குதுகள்.

எனது நியாயங்களை இடைமறித்து சுரேன் அந்த இராணுவ அதிகாரி பற்றி விளக்கத் துவங்கினான்.

ஒரு படையணியை வழிநடத்தின மனிசன். பேசாமல் தன்ரை இனத்துக்கு விசுவாசமா இருந்திருந்தா இண்டைக்கு போனஸ் , லச்சம் சம்பளம் , ஓய்வுபெற்றா பென்ஷன் அது இதெண்டு எத்தினையோ வசதியள் அரசாங்கம் குடுக்க இருந்ததையெல்லாம் விட்டுப்போட்டு தேவையில்லாமல் எங்களுக்கு உதவினதுதான் இந்த மனிசன் செய்த குற்றம்.

அதுதான் போச்செண்டா பெரிய வீடு வளவு காணியளெண்டு மனிசனுக்கு தெற்கில கனக்க சொத்தெல்லாம் இருந்தது. இண்டைக்கு அதையெல்லாம் பறிகுடுத்திட்டு சேரியில போயிருக்குதுகள் அந்தப்பிள்ளையளும் மனிசியும்……யோசிச்சுப் பாருங்கோ…? மனிசன்ரை அயலட்டையெல்லாம் துரோகியாக்கீட்டுது அதுகளை. இன்னொரு இனம் எங்களுக்கு என்னெண்டாலும் நடக்கட்டுமெண்டு தானும் நச்சத்திரம் வாங்கியிருக்கலாமோ இல்லையோ?

ஒவ்வொரு நாளும் மனிசன் விடுற கண்ணீர் தெரியுமே உங்களுக்கு ? இந்தப்புழுச் சேந்த சோறும் தண்ணீல நீந்தித் தேட வேண்டிய பருப்போடையும் ஏன் காய வேணும் ? ஏனெண்டா எங்களுக்காக தமிழனுக்காக வாழ்ந்த சிங்களவனெண்டதாலை இந்த விதி…..!

இப்படித்தான் சுரேன் சோகங்களைச் சொல்லி வாயைக் கட்டிப்போட்டுவிடுகிறவன்.

அப்பு ராசா என்னெண்டு எங்கடையாக்களிட்டை ஆமிக்காறன்ரை குடும்பத்துக்கு உதவுங்கோண்டு கேக்கிறது ? என்னைச் செருப்பாலை அடிக்க வராதுகளெண்டு நினைக்கிறீங்களோ ?

சரி எங்கடையாக்களிட்டைத்தான வாங்கீட்டு இந்தக் குடும்பத்துக்கு உதவுங்கோ....

சரி இன்னொரு விபரம்….எழுதிறீங்களோ ? எனது ஊடறுப்பை இடையறுத்துத் தொடங்கினான் சுரேன்.

மூத்தபிள்ளை , 2வது பிள்ளை , 3வது பிள்ளை ,4வது பிள்ளை…….சொந்த இடம் புத்தளம்……! இதென்ன கரைச்சலடா இண்டைக்கு…..உது கட்டாயம் எனக்கு அடிவாங்கித் தாற வேலைதான்….

ஆனா இந்தக் குடும்பத்தை நாங்கதான் யாழ்ப்பாணத்திலயிருந்து 1990இல வெளியேத்தினம். பெரிய கடையளெல்லாம் வைச்சிருந்த மனிசன். பிறகு வெறுங்கையோடை புத்தளத்தில குடியேறி தன்ரை முயற்சியாலை முன்னேறி 2வான் ஒரு புடவைக்கடையெண்டு பணக்காரனானது.

அந்த மனிசன் சிவனேண்டு இருந்திருக்கலாம். தேவையில்லாமல் தன்ரை வாகனத்தையும் எங்கடை தேவையளுக்குத் தந்தது மட்டுமில்லாமல் நாங்கள் இருக்க உலாவ தன்ரை வீட்டிலயும் இடம் தந்து தன்ரை பணத்தையும் தந்து தனக்கும் தமிழீழத்தில பங்கிருக்கெண்டு பணி செய்தது.

கடைசீல மனிசன் சேத்ததெல்லாத்தையும் பறிகுடுத்திட்டு வீடு வாசல் எல்லாத்தையும் மொத்தமா பறிச்சிட்டாங்கள் இப்ப வாடகை வீடொண்டில பிள்ளையளை வைச்சுக் கொண்டு ஊரில வீடுகளிலை மாவிடிச்சு கழுவித்துடைச்சு மனிசி கஸ்ரப்படுது.

எங்கடையாக்களும் பயன்படுத்தீட்டு கையை உதறீட்டுப் போட்டினம்…..இண்டைக்கு இந்தக் குடும்பங்கள் போராலை பாதிச்ச சனத்தைப்போல இதுகளும் வறுமையிலதான் வாழு(டு)துகள்.

கனக்கச் செய்ய வேண்டாம் பிள்ளையள் படிக்க உதவி செய்யுங்கோண்டு கேக்குது மனிசன். முஸ்லீமெண்டு யோசிக்காதையுங்கோ. தமிழினத்துக்காக முஸ்லீம் சிங்களச் சனமும் கஸரப்படுதுகள் சிறையில இருக்குதுகள்.

அந்த அந்தாள் பின்னேரத் தொழுகை முடிச்சிட்டு நிக்குது ஒருக்கா கதைச்சுப் பாருங்கோ….எனது அனுமதியில்லாமலேயே சுரேன் அந்த முஸ்லிம் சகோதரனிடம் பேசியைக் கொடுத்தான்.

தங்கைச்சி…..என்ர புள்ளையள்….சொல்லத் தொடங்க முன்னமே அந்த மனிதர் அழத் தொடங்கீட்டார். நிலமை சங்கடமாப் போட்டுது. உங்களைக் கடவுளா நம்பறம்….என்ரை புள்ளையள படிப்பிச்சு விடுங்க….அவுங்கள் என்னை வெளியில எடுப்பாங்கள்…..அவர் உடைந்த குரலோடு தனது கதைகளைச் சொல்லத் தொடங்கினார்.

எங்கள் இனத்திற்காக இன்னொரு இனமாக இருந்து எங்களுக்காக அந்த மனிதர் இழந்தவற்றில் எதைத்தான் எங்களால் திருப்பிக் கொடுக்க முடியும்…?

அந்த ஐயாவுடன் கதைக்கும் வரை தென்னிலங்கையிலிருந்து தமிழர்களுக்கு தமிழீழ விடுதலைக்காக உதவிய உழைத்தவர்களுக்காக உதவ வேணுமெண்ட எண்ணமே இருக்கவில்லை. மனசு கனக்கவில்லை நெஞ்சுக்குள் முள்ளாய் அவர்களது கதைகள் பதிந்து கொண்டிருந்தது.

இன்னும் கனக்கத் துயரங்கள் இங்கையிருக்கு..! எங்கடை மண்ணின்ரை நிறம் தெரியாத எத்தினையோ பொடியள் எங்களுக்கு உதவி இண்டைக்குசுரேன் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆர் திட்டினாலும் அடச் சனியனேயெண்டு பேசினாலும் பறவாயில்லை மனிதமுள்ளவர்கள் கட்டாயம் இவர்களுக்காகவும் கண் திறப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவர்களது துயரங்களிலிருந்து ஒருதுளியைச் சொல்லியிருக்கிறேன்.

இனி…??????????

20.10.2011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்கள இராணுவ குடும்பம் ஒன்றிற்கு நான் பல முறை காசு அனுப்பி இருக்கிறேன். எனது உறவினர் ஒருவருடன்தான் அவரும் சிறையில் இருந்தார். இப்போது இருவரும் வெளியேறி விட்டார்கள்.

மனிதாபிமானம் என்பது ஒரு மனிதனை என்னொரு மனிதன் தனது சகாவாக பார்ப்பதுதான்.

இனம் மொழி எல்லாம் நாம் பிறக்கும் இடத்தை வைத்து வருகிறது.

Link to comment
Share on other sites

மனிதாபிமானம் என்பது ஒரு மனிதனை என்னொரு மனிதன் தனது சகாவாக பார்ப்பதுதான்.

இனம் மொழி எல்லாம் நாம் பிறக்கும் இடத்தை வைத்து வருகிறது.

உங்களுக்கொரு பச்சை.

உண்மைதான் மருதங்கேணி. ஆயினும் சிலரிடம் இத்தகையவர்களுக்கு உதவி கேட்டுப்போய் வாங்கிய அடி அனுபவமாக இருக்கிறது. அவர்கள் இனத்தால் மதத்தால் வேறுபட்டாலும் அவர்களும் எங்களுக்காக ஏதோ ஒருவகையில் இழப்போடு வாழ்கிறார்கள். இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் தானே.

விடயங்களை காதால் மட்டும் கேட்டிருந்தவரை அவ்வளவு அவசியமாகத் தெரியவில்லை. அவர்களுடன் பேசிய பின்னர் அவர்கள் சொன்ன கதைகள் எல்லார் மீதான கருணையையும் அவர்களுக்காக வேண்ட வேண்டிய தேவையாயிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் என்றால் சிங்களவனையும் அணைக்கலாம்.

சிங்களவன் எங்கடையள அணைச்சு தான் அதுகள் எங்களுக்கு அலுப்பு குடுக்குதுகள்.

சகோதரி நான் உங்களுக்கு ஜனவரி மாதத்தில் இருநூற்றி ஐம்பது பவுண்ட்ஸ் அனுப்புகிறேன். இப்போது பல நிகழ்வுகள் வருவதால் பட்ஜெட் டைட்.

இவர்களில் யாராவது ஒருத்தருக்கு உதவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நேற்றே, நான் இதற்கு பச்சை குத்திவிட்டேன். உங்களின் சேவைக்கு வார்த்தையில்லை, எங்கட ஆட்கள் சிங்களவனுடன் நின்று செய்த அட்டூழியங்களை விட, அவன்களில் ஒரு நல்லவன் எங்களுக்காக உதவியது பெரியது. எனக்கு வரவேண்டிய ஊக்குவிப்பு பணம் இன்னும் மூன்று கிழமைக்குபின்தான் வரும், என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்வுக்கு..இப்படி நிறைய்ய நெஞ்சைத்தொடும் கதைகள் இருக்கின்றன அக்கா...எங்களுக்காக சிறையிருப்பவர்கள்.. அவர்களை எப்படி மறக்க முடியும்...

Link to comment
Share on other sites

நல்லவன் என்றால் சிங்களவனையும் அணைக்கலாம்.

சிங்களவன் எங்கடையள அணைச்சு தான் அதுகள் எங்களுக்கு அலுப்பு குடுக்குதுகள்.

சகோதரி நான் உங்களுக்கு ஜனவரி மாதத்தில் இருநூற்றி ஐம்பது பவுண்ட்ஸ் அனுப்புகிறேன். இப்போது பல நிகழ்வுகள் வருவதால் பட்ஜெட் டைட்.

இவர்களில் யாராவது ஒருத்தருக்கு உதவுங்கள்.

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு. நிச்சயம் உங்கள் உதவி ஒரு குடும்பத்திற்கு ஒளியேற்றும் என நம்புகிறேன்.

எங்கட ஆட்கள் சிங்களவனுடன் நின்று செய்த அட்டூழியங்களை விட, அவன்களில் ஒரு நல்லவன் எங்களுக்காக உதவியது பெரியது. எனக்கு வரவேண்டிய ஊக்குவிப்பு பணம் இன்னும் மூன்று கிழமைக்குபின்தான் வரும், என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்

எங்களுக்காக இப்படி பலநூறுபேர் இலங்கையில் பல சிறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிச்சிலர் வறுமை தாங்க முடியாமல் கேட்கிறார்கள். சிலர் மற்றவர்களிடம் எப்படி உதவிகேட்பதென்ற பயத்தில் பேசாமல் வறுமையோடு வாழ்ந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிக்க நன்றிகள் உடையார்.

Link to comment
Share on other sites

அக்கா! இப்படியான உதவிகளை நிச்சயம் செய்யத்தான் வேண்டும்! ஒரு கோணத்தில் சிந்திக்கும் போது, அது சரியாகத்தான் படுகின்றது.................! ஆனாலும்... "எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்" போராடியவர்களுக்கு உதவுவதற்கே...... எம் மகாஜனங்கள் நிறைய யோசிக்கின்றார்கள்! :) அப்படி இருக்கையில்.... இதற்கு எவ்வளவு யோசிப்பார்களோ???

உதவி என்பது .... எவ்வகையிலேனும்,அது தேவைப்படுபவர்களை சென்றடைந்தால் சரி!

நன்றி அக்கா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.