Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலிசபெத் மகாராணியின் குவாட்டரும் எனது கட்டிங்'உம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று லண்டன் கட்வீக் விமான நிலையத்தில் நின்றிருந்த போது எனது விமானத்துக்கு சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த கடைகளை கண்களால் மேய்ந்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.

முதலில் electronic பொருட்கள் இருந்த கடையை வலம் வந்து பின்பு வாசனைத்திரவியங்கள் இருந்த கடையைப் பார்த்த போது தான் நண்பர் தனக்கு ஒரு மதுபான போத்தல் வாங்கி வர உத்தரவிட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது.

எனவே அருகில் இருந்த மதுபான விற்பனைநிலையத்துக்குள் புகுந்து நண்பருக்கான சந்தோஷபானத்தை சீதையை தேடிய அனுமான் போல் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்போது "Sir" என்று ஒரு குரல் எனக்கு பின்னால் கேட்க ”நம்மளை யார் இவ்வளவு மரியாதைக் கூப்பிடப்போகிறார்கள்” என்பதால் அதை கவனிக்காது நடக்க முற்பட்டேன். அப்போதும் "Sir, "Sir" என்ற குரல் கேட்டதால் திரும்பிப் பார்த்தேன். சத்தியமாக அவர் என்னைத்தான் கூப்பிடுகிறார் என்பது புரிந்தது.

தனது அழகில் நம்பிக்கையில்லாததால் முகத்தில் பலத்த ஒப்பனைகளுடன் என்னை நோக்கி வந்து ஏதும் உதவி தேவையா என்றார் ஒரு 55 - 60 வயது மதிக்கத் தக்க பெண் . ஆம் நான் ஒரு குடிவகையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றேன். அதன் பெயர் XO என்ற போது அவர் ” எங்களிடம் அந்த "Cognac" இருக்கிறது, ஆனால் நான் விட சிறப்பான "Cognac" உங்களுக்கு காட்டுகிறேன் என்று எனது பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தார். என்னடா இது புது சிக்கல் என்று நினைத்தபடியே பின்னாலேயே போனேன். ஒரு அழகான போத்தல் ஒன்றை கையில் எடுத்து அதை மிக மிக ஒயிலாக பிடித்தபடி அவரது கறுப்பாக பூச்சியரித்திருந்த பற்கள் தெரிய என்னைப் பார்த்துச் சிரித்தார்.

மேலே தொடருமுன் ஒரு நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நான் பார்த்தால் குடிகாரன் மாதிரி இருப்பேனே அன்றி உண்மையில் இந்தக் கலை பற்றி அறிவற்ற ஒரு பெரு மடையனே. ஏறக்குறை 45ஐ 365 ஆல் பெருக்கி வரும் நாட்கள் எனது வாழ்வில் வீணாகிவிட்டிருக்கிறது என்கிறார் எனது நண்பர். அது உண்மையாய் இருக்குமோ என்னும் பயம் எனக்கு வந்திருக்கிறது என்பதையும் மறைப்பதற்கில்லை.

அவர் அந்த போத்தலை கையில் பிடித்தபடியே மூச்சு விடாமல் இப்படி சொல்ல ஆரம்பித்தார்.

இந்த குடிவகை HINE என்னும் உலகப்புகழ் பெற்ற தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்து அரசிக்கும் அவரது அரச குடும்பத்துக்கும் "Cognac" வழங்கும் உரிமம் இவர்களிடம் மட்டுமே உள்ளது. HINE குடும்பத்தின் 6 வது பரம்பரை இத் தொழிலை செய்து வருகிறது. Thomas Hine தனது தந்தையின் பணிப்பின் பெயரில் 1791ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு "Cognac" தயாரிக்கும் கலையைக் கற்பதற்காக பயணமானார். மீண்டும் இங்கிலாந்துக்கு வருகை தந்த பின் பிரபல்யமான "Cognac" வியாபாரியின் மகள் எலிசபெத் என்பவரை திருமணம் முடித்து தனது 4 குழந்தைகளுடனும் இந்த வியாபாரத்தை ஆரம்பித்தார்.

இந்த இடத்தில் அவர் மூச்சு விடுவதை மறந்துவிட்டாரோ என நான் பயந்திருந்த போது ஒரு முறை மூச்சை உள்‌ளே பெரிதாய் இழுத்து தனது சுவாசப்பைகளை நிரப்பி மீண்டும் எனக்கு ஒரு பெரிய ”லெக்சர்” அடித்தார்.

என்னிடம் அவரிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. அவர் ஒரு வசனத்தை முடித்து அடுத்த வசனத்தை தொடங்க முதல் நான் எனது கேள்வியை ஆரம்பிக்க யோசிப்பேன். ஆனால் அவர் அதற்கிடையில் அடுத்த வசனத்தின் நடுப்பகுதியில் நிற்பார். அவருக்கு எப்படி எனது கேள்வியை அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர் மனனம் செய்திருந்தவை தீர்ந்து போனதால் சற்று மௌனமாகினார்.

உடனே நான் அதன் விலை என்ன என்றேன். பல ஆண்டுகள் பழமையன இதன் ருசிக்கு இந்த விலை அதிகமில்லை என்று நான் கேட்காத கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார். மீண்டும் தயவு செய்து விலையைச் சொல்லுங்கள் என்றேன். தொண்டையை கனைத்தபடியே 130 £ என்றார். எனக்கு "Cognac குடிக்காமலே தலை சுற்றத் தொடங்கியது.

எனது நண்பர் சிக்கனமானவர். அவர் என்னிடம் இந்தப் பெண் சொன்ன விலையின் 20 வீத விலையையே அதிகபட்ச விலையாக குறிப்பிட்டிருந்தார். எனவே எனது பிரச்சனையை அவரிடம் குறிப்பிட்டேன். அவர் என்னை பார்த்த பார்வை.. ”டேய் கஸ்மாலம்! இது கசிப்பு போல் 100 மில்லி, 300 மில்லி என்று விற்கும் பொருள் அல்ல”.... என்பதைப் போல் இருந்தது.

அவர் என்னை விடுவதாய் இல்லை. இங்கிலாந்து அரசி குடிக்கும் பானம் நீங்களும் அருந்திப் பாருங்கள் என்றபடியே ஒரு சிறு கிண்ணத்தில் தீர்த்தம் போல் "Hine Cognac" ஊற்றித் தந்தார். இந்த இடத்தில் எனது ”தன்மானம்” (யாரப்பா உனக்கு அது இருக்கா என்று கேட்பது?) நான் குடிப்பதில்லை என்று அவரிடம் சொல்ல இடமளிக்கவில்லை. குடிக்காமலும் இருக்கமுடியவில்லை. நாம என்ன இங்கிலாந்து அரசிக்கு குறைந்தவனா என்னும் ராங்கியும் சேர்ந்து கொள்ள.. மடக் என்று வாய்க்குள் ஊற்றிக் கொண்டேன். அய்யோ! நீங்கள் அதை மணந்து பார்க்கவில்லையா? என்றார் அவர். அப்போ தான் எனக்கு எனது நண்பர்களில் சிலர் கிளாஸ்ஐ வட்டமாக ஆட்டயபடியே மணந்து பார்ப்பது ஞாபகத்தில் வந்தது. இதற்கிடையில் அவர் இன்னுமொரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி என்னை நோக்கி நீட்டினார். இம் முறை நான் கோயிலில் நிற்பதாக நினைத்தபடியே மூன்று முறை சுற்றி மூன்று முறை மணந்து பார்த்தேன். அப்போது இப் பெண் இதன் சுவை மிக ஆழமானது என்று ஆரம்பித்து இதைக் குடிக்கும் போது உங்கள் தொண்டை எரியாது என்றும் சொன்னார். நானும் மடக் என்று அதையும் ஊற்றிக் கொண்டேன். அவர் சொன்னது போல் தொண்டை எரியவில்லை.

தற்போது எமக்கருகில் இன்னும் இருவர் வர அப் பெண்

”இந்த குடிவகை HINE என்னும் உலகப்புகழ் பெற்ற தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்து அரசிக்கும் அவரது அரச குடும்பத்துக்கும் "Cognac" வழங்கும் உரிமம் இவர்களிடம் மட்டுமே உள்ளது”

என்று தனது மனனத் திறமையை தொடங்கினார். அவர்கள் அவரின் பிளந்த வாயை பார்த்தபடியே இருந்தனர்.

எனக்கு ”ஜிவ்” என்று ஏதோ மண்டைக்குள் ஏறிக் கொண்டிருந்தது. சற்றே ”உசார்” வந்திருந்து. (அந்தப் பெண் மிக மிக அழகாகத் தெரிந்தார். அவரின் குரல் தேன் போல் இனித்தது, உதடு சீச்சீ... அப்படி நான் கற்பனை பண்ணவில்லை .... ).

இவளின் 130 £ பெருளை நான் எனது நண்பனுக்கு வாங்கிப் போனால் அவன் சொந்த வீட்டிலேயே அகதியாகிவிடும் நிலை இருப்பதால் மெதுவாய் நகர்ந்து 18 £ க்கு ஒரு XO வாங்க்கிக் கொண்டேன். இதை நண்பனின் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு தெரியாமல் நண்பரிடம் ஒப்படைப்பது எப்படி என்ற கவலையும் தற்போது என்னுடன் சேர்ந்து கொண்டது.

பணம் செலுத்தி வெளியில் வந்தேன். இப்போது அந்தப் பெண்ணைச் சுற்றி புதிதாய் பலர் நின்றிருந்தனர். அவர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

கடையை விட்டு வெளியேறினேன். இங்கிலாந்து அரசின் குடிபானம் என்னை ஒரு பேரரசனின் மனநிலைக்கு கொண்டுபோயிருந்தது. உலகம் பஞ்சாய் இருந்தது. நெஞ்சை நிமிர்த்தி காற்றில் நடந்தேன். கிழவிகள் குமரிகளாய் தெரிந்தார்கள். எல்லோரையும் பார்த்து நான் மட்டும் சிரித்தேன். எனக்கு முன்னால் வந்த இருவர் என்னில் மோதினார்கள். அவர்கள் ”மன்னியுங்கள்” என்று சொல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் மன்னியுங்கள் என்று சொல்லாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி‌யே போனார்கள்.

நான் இங்கிலாந்து அரசிக்கு சமமாக குடித்தது அவர்களுக்கு பொறாமையைத் தூண்டியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இன்றைய நாளும் நல்லதே.

HINE 'குடி'மக்களுக்கு இது சமர்ப்பணம்

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை தீர்ந்துவிட்டது! வசனங்களிடையே இடைவெளி விடாமல் பேசப் பழகிய அந்தப் பெண்ணுக்கும் தண்ணி காட்டி இலவசமாக இங்கிலாந்து அரசிக்கு சரிசமமாகக் Hine குடித்த உங்களிற்கு நாளை ஒரு பச்சையாவது குத்தவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்று சஞ்சயன்.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்பவர்கள் குடித்துவிட்டே சொல்கின்றார்கள்.

என்னைப்போல்..... உங்களுக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்று சஞ்சயன்.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்பவர்கள் குடித்துவிட்டே சொல்கின்றார்கள்.

என்னைப்போல்..... உங்களுக்கு ஒரு பச்சை

என்ன செய்வது வாத்தியார்!

குடித்த பின்பு தானே, தத்துவங்கள் பிரசவிக்கப் படுகின்றன!

நல்ல ஒரு படைப்புக்கு நன்றிகள், சஞ்சயன்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சஞ்சயன் பகிர்வுக்கு, நல்ல கதை

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் குடிமகன் என்று சொல்லுறீயள் ...தொடருங்கோ குடியை அல்ல படைப்பை....

:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சஞ்சயன் பகிர்வுக்கு....

>இந்த இடத்தில் எனது ”தன்மானம்” (யாரப்பா உனக்கு அது இருக்கா என்று கேட்பது?) நான் குடிப்பதில்லை என்று அவரிடம் சொல்ல இடமளிக்கவில்லை

நீங்கள் குடிப்பதில்லை என்பது உதைக்கிறது. இங்குதான் உங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்கிறதோ?

Edited by கறுவல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.