Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை: சுரேஷ் பிரேமசந்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh_MP150.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க, அமெரிக்க அரசின் ராஜாங்கத் துறையின் அழைப்பின் பேரில் வாஷிங்டன் சென்றிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இரா.சம்பந்தன் தலைமையில், வாஷிங்டன் வந்திருக்கிறது. இது குறித்து தமிழோசையிடம் பேசிய , தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26லிருந்து ராஜாங்கத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

பல மூத்த அதிகாரிகளை இதுவரை சந்தித்திருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், இனி வரும் நாட்களில் மேலும் சில முக்கிய செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இது வரை நடந்த சந்திப்புகளில், அமெரிக்க அதிகாரிகள், இலங்கையில் போருக்கு பின் , நல்லிணக்கம் என்று அரசு வெளி உலகுக்குக் கூறினாலும், நடக்கும் நடப்புகள் அதற்கு நேர்மாறாக இருப்பதைப் பற்றி விவாதித்தாகத் தெரிவித்தார்.

மேலும் அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே அமெரிக்கா , இலங்கை அரசு மீது அரசியல் தீர்வு குறித்து அழுத்தங்களை தந்து கொண்டிருக்கிறது என்று கூறிய சுரேஷ் பிரேமசந்திரன், ஆனால் இலங்கை அரசு இதை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறதா என்பதுதான் சரியாகத் தெரியவில்லை என்றார்.

அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மற்ற சர்வதேச சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை என்றார் அவர்.

-பி.பி.சி-

http://www.seithy.com/breifNews.php?newsID=51406&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைச் செய்திகள் மூலமாக, உலகத்திலேயே.... ஸ்ரீலங்காவுக்கு அதிக அழுத்தம் கொடுத்த நாடு இந்தியா தான்.

பத்திரிகைச் செய்திகள் மூலமாக, உலகத்திலேயே.... ஸ்ரீலங்காவுக்கு அதிக அழுத்தம் கொடுத்த நாடு இந்தியா தான்.

சுரேஷ் பிரேமசந்திரன் இப்போ பரம சிவன் களுத்திலிருக்கிறார். அதுதான் தைரியமாய் கருடா சவுக்கியாமா என்கிறார். இலங்கை வந்தால் திரும்பவும் என்ன சொல்வாரோ.

எங்கே மூடுண்டிருந்தது இந்த வார்த்தையெல்லாம் இலங்கையில் இந்தியா மூடி மூடி மறைக்கும் போது?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் பிரேமசந்திரன் இப்போ பரம சிவன் களுத்திலிருக்கிறார். அதுதான் தைரியமாய் கருடா சவுக்கியாமா என்கிறார். இலங்கை வந்தால் திரும்பவும் என்ன சொல்வாரோ.

எங்கே மூடுந்திருந்தது இந்த வார்த்தையெல்லாம் இலங்கையில் இந்தியா மூடி மூடி மறைக்கும் போது?

எப்போதும்... சுரேஷ் பிரேமச்சந்திரனினதும், சம்பந்தனினதும் கருத்துக்களில் சந்தேகம் வருவதுண்டு.

இந்த முறையாவது... ஏதாவது நம்பிக்கையூட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

கூட்டமைப்பு சீன - இந்திய - அமெரிக்க நாடுகள் மீது தாயக/புலம்பெயர் மக்களை இணைத்து அழுத்தங்களை கொடுக்கும் பலமுள்ள சக்தியாக வளரவேண்டும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் ஐரோப்பிய யூனியன் எனக்கூறினாலும், மேற்குலகம் எல்லாம் இணைந்தே செயல்படுகின்றனர். அமேரிக்கா தனது விருப்பப்படி ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை தனது விருப்பத்திற்கு பாவிக்கலாம்.

சீனாவிடம் அமேரிக்கா இலங்கை இணைந்து செயல்படாது. ஆனால் இந்தியாவுடன் சில இணக்கங்களை தனது இலாபத்திற்கு பாவிக்கும்.

தற்போதய நடைமுறைகளிலிருந்து இந்தியாவின் பாகம் நன்கு உணரப்பட்டுள்ளது.எந்த நாடும் இலங்கையில் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது என்பது யதார்த்தம்.

தற்போதய நடைமுறைகளிலிருந்து இந்தியாவின் பாகம் நன்கு உணரப்பட்டுள்ளது.எந்த நாடும் இலங்கையில் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது என்பது யதார்த்தம்.

சீனவைத்தவிர என பதிந்திருக்க வேண்டுமல்லவா?

இந்தியா : முள்ளிவாய்கால் பேரழிவின் பின்னர் பயங்கரவாதத்தை தோற்கடித்த மகிந்தருக்கு பாராட்டுத் தெரிவித்தவர்கள் இன்று போர்க்குற்ற விசாரணைபற்றி பேசுகிறார்கள். ஆனால், அது குறித்து இந்தியா வாய் திறப்பதில்லை என்பது வேறு விடயம். இருப்பினும் பிராந்திய சமநிலைச் சமன்பாட்டில் சரிவு ஏற்படுவதை உணரும் மேற்குலகம், வைரஸ் கிருமிகள் போல் ஆழ உடுருவும் சீனாவின் செயற்பாடுகளால் சினமடைவதை அவதானிக்கலாம். இந்தியாவின் ஆதரவுச் சமிக்ஞை இல்லாமல் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு பயணிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அமேரிக்கா : ஒருபுறம் போர்க்குற்ற விசாரணை என்கிற பிரம்பை உயர்த்தியவாறு நின்றாலும், மறுபுறமாக தடைப்பட்ட ஜீ எஸ்.பீ.பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை நீடித்து இலங்கை அரசின் முதுகைத் தடவுகின்றது அமெரிக்க அரசு.

சிங்களம்: அமெரிக்காவிற்கு அழைக்கலாம் ஆனால் கிலாரியை சந்திக்க அனுமதிக்க் கூடாது என்று மகிந்தர் எச்சரிப்பதாக செய்திகள் கூறுகின்றன. பிளேக்கை அடிக்கடி கொழும்பில் சந்திப்பதால், அனேகமாக இராஜாங்க செயலரும், ஒபாமாவிற்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியஸ்தரான கிலாரி கிளிங்டனை கூட்டமைப்பு சந்திப்பு வாய்புண்டு. கூட்டமைப்பின் எம்.பி ஒருவர், அண்மையில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெயிமை சந்தித்த விவகாரம், அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட நாடி பிடித்துப் பார்க்கும் விடயமாகத் தென்படுகிறது.

இடைக்காலத் தீர்வு : இடைக்காலத் தீர்வொன்றிற்கு இலங்கை அரசு சம்மதித்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று அமெரிக்கத் தரப்பினர் கூட்டமைப்பினரிடம் கேட்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது. இந்த ஊகத்தின் அடிப்படை எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பின் பின்னரே உருவானது.

மூலம்: http://rste.org/2011/10/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதய நடைமுறைகளிலிருந்து இந்தியாவின் பாகம் நன்கு உணரப்பட்டுள்ளது.எந்த நாடும் இலங்கையில் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது என்பது யதார்த்தம்.

இறைவன், யதார்த்தம், பதார்த்ததுக்கு அப்பால்....

இவ்வளவு நடந்த பின்பும், ஈழத்த்மிழனின் நலனில் இந்தியா எவ்வளவு மனச்சாட்சிப்படி நடந்தது என்று உங்களால் கூற முடியுமா? சும்மா.... படம் காட்டாதேங்கோ.... சொல்லும், சொல் செயலில் இருக்க வேண்டும். இந்தியாவை நம்பி சொந்த நாட்டை இழந்தவர்கள் நாங்கள். அதை முதலில் ஞாபகம் வைத்திருங்கள்.

எம்மிடம் இனி, இழக்க ஒன்றும் இல்லை என்பதாவது... உங்கள் புத்திக்கு தெரிகிறதா?

நல்லது எனக்குக் கொஞ்சம் புத்தி பேதலிக்கிறதுதான்.

இந்த யதார்த்தத்தைவிடவும் மாற்று யதார்த்த நிலை எவரிடமாவது இருந்தால் எனது அரை மண்டைக்கு ஏறக் கூடியமாதிரி புத்தி சொல்லுங்கள். அந்தப் படத்தையாவது பார்த்து நான் திருந்திக் கொள்கிறேன்.

இந்தியச் செயற்பாடுகள் ஈழத்தமிழர் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பானதாக இருந்தது என்பது உண்மை.

இனி இழப்பதை விட்டுவிட்டுப் பெறுவதற்கு ஏதாவது உண்டா என்பதை எண்ணிப் பார்ப்போம்.

கிழக்கிலும் வடக்கிலும் வேலாயுதம் வெளியீடு அமர்க்களமாக வெளியிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் தமிழர்கள் இருக்கிறார்கள் ரியூப்பில் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 6,000 பதிவுகளை நெருங்கும் உங்களுக்கு.....

ஈழத்தமிழர் பற்றிய பாலபாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

உங்கள் மனதில், யாரோ... நச்சு விதை ஊன்றியுள்ளார்கள் என்பது மட்டும் தெட்டத் தெளிவாக, உங்கள் எழுத்து மூலம் அறியமுடிகின்றது.

யா"ரோ" எல்லாம் என்னை நெருங்கிவரக் கூடியளவிற்கு நான் ஒன்றும் பெரிய மனிதனல்ல. பதிவுகளின் தொகை பெரிதல்ல. மாற்றம்மட்டுந்தான். ஈழத்தமிழர் நடவடிக்கைகளில் இந்தியத் தடை இருப்பதை என்றோ தமிழ்த்தலைவர்களாயிருந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களால் கூட அத் தடைகளை மீறிச் செல்ல முடியவில்லை.இறுதியாக பலம்வாய்ந்த நிலையிலிருந்தபோது கூட அந்த நிலையை மாற்ற முடியவில்லை. அதற்கான முயற்சிகள் ஏராளம் நடந்திருந்ததை நாம் எல்லோருமே அறிவோம்.இந்தியாதான் ஈழத்தமிழர் போராட்ட சக்தியை அழிப்பதற்குத் துணையாக நின்றது என்பது வெளிப்படையான உண்மை. தமிழருக்கான ஓர் தீர்வும் இந்தியா மூலமாகத்தான் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனபதும் எதிர்பார்க்கப்படும் யதார்த்தம்.

இந்தியாவை நம்பினால்....

"கடல் வத்தும் என்று... ஒற்றைக்காலில் நின்ற கொக்கு, குடல் வத்தி செத்த" நிலை தான்... ஏற்படும்.

இந்தியாவை மீறி, சீனா ஆழமாக இலங்கையில் வந்துள்ளது. இது கடந்த ஐந்து வருடத்திலேயே அதிகமாக நடந்துள்ளது. இன்று இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு சவாலாக சீனா வந்தமை பல கேள்விகளை முன்வைக்கிறது.

இதை எவ்வாறு இந்தியா அனுமதித்தது? இந்தியா ஏமாந்து விட்டதா? இல்லை தெரிந்துதான் சீனாவை விட்டதா?

இந்தியா பலவீனம் ஆனால் அது உலக பொருளாதார / அரசியல் சீர்குலைவுகளை உருவாக்குமா?

மேற்கொண்டு இந்திய கொள்கையில் மாற்றம் வராதா? வராத நிலையில் அமெரிக்கா சில மாற்றங்களை தனது கொள்கையில் எடுக்கும் சாத்தியம் உள்ளதா?

முழுக்க முழுக்க இதுதான் காரணம். இந்தியநலன்கள் சீனாவினால் பாதிக்கப்படப்போகின்றது என்பதை இந்தியாவும் உணர்ந்திருக்கிறது. இலங்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு தமிழர் நலன் சார்ந்த விடயங்களை இந்திராகாந்தி கையில் எடுத்துக் கொண்டது பிழையான விளைவை இந்தியாவிற்குத் தற்போது திருப்பிக் கொடுத்திருக்கிறது.இந்திய எதிர்பார்ப்பிற்கு மாறான தமிழர் நடவடிக்கைகள்தான் இத்தகைய நிலையை தமக்கு ஏற்படுத்தியுள்ளது என இந்தியா நம்புகிறது. அப்படித்தான் நான் கருதுகிறேன். தமிழர் நலன்கள் இந்தியாவினால் அப்போதைய நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்குமானால் இந்தியத் தென்முனையில் நல்லதொரு நட்பு சக்தியை இந்தியா கொண்டிருந்திருக்கும்.அமெரிக்கா மட்டுமல்ல போர்க்குற்ற விசாரணையைக் கையில் எடுத்திருக்கும் அனைத்து நாடுகளும் இந்திய சார்பினராகத்தான் இருக்கின்றனர். இப்பிராந்தியம் சீனத்தவரின் ஆதிக்கத்துக்குள் செல்வதைக் காட்டிலும் இந்தியரின் ஆதிக்கத்துக்குள் இருப்பதையே இந்த நாடுகள் பெரிதும் விரும்பும். அதற்காகத்தான் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தமையும். இந்தியாதான் அவைகளின் மூலம். மற்றவைகளெல்லாம் மாயை. இந்திய அளவில் சிறிதளவேனும் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடிய ஒன்று தமிழ்நாட்டு அரசியல்தான். அதுவும் தற்போது பேசாமல் கிடக்கிறது. இன்னுமொன்று சீனத்தின் வரவு அளவுமீறிச் செல்ல வேண்டும். இப்படி ஏதாவது நடந்தால்தான் தமிழர்தரப்பு நன்மையடையும் என எதிர்பார்க்கலாம்.

1. இந்திரா காந்தி கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்து சமாதானமாக சிறிமா சீனாவுடன் வைத்திருந்த தொடர்புகளை அழிக்க முனைந்தா. ஜே.வி. பி. யை அடக்க ராணுவ உதவி வழங்க பட்டது. பதவி மாறியவுடன் ஜே ஆர் அவவை பெண் பிசாசு என்று அழைத்து வலிய தொடங்கினார். அவ சோவியத்துறவுக்காறி. ஜே ஆர் அமெரிக்க பிரித்தானிய உறவுகளிடம் ராணுவ உதவியகளுக்கு சென்றார். ஆனால் அவர்கள் அப்போதே இலங்கை இந்தியாவின் கையில் இருப்பதை தான் விரும்பினார்கள். ஒரு தடவை இங்கிலாந்து நேரடியாகவே (மாகிரட் தட்சர்) இலங்கை உதவி எடுக்க வேண்டிய நாடு இந்தியா மட்டும்தான் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டா. ஜே.ஆர் அரசியல் அமைப்பை மாற்றி தன்னைத்தான் சர்வாதிகாரியாக்கியிருந்தார். அப்போதைய அரசியல் அமைப்பின் படி இனி U.N.P. மாட்டும் தான் பதவிக்கு வர முடியும் போலிருந்தது. இந்திரா காந்தி, ஒரு யதார்த்த அரசியல் வாதி. இலங்கை என்ற தாசி சீனா இல்லாவிடில் மேற்குலகமறென்று தன் பகைவர்களிடம் தான் செல்கிறாள். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று வீட்டில் அடைய தயாரிலை என்பதை அவதானித்தா. அதனால்த்தான் தன் கொள்கையை மாற்றினா. இருந்தும் அவ இலங்கை மீது படை எடுக்க வில்லை.

2. ரஜிவ் இலங்கை மீது படை எடுத்தார். அவரைச்சுற்றியிருந்த மலையாளிகளை அவருக்கு அடையாளம் கண்டு இந்தியாவிற்கான பாதுகாப்பை பலப்படுத்த தெரிந்திருக்க வில்லை.அவர் புலிகளைத்தான் மிரட்டுவது மூலம் இலங்கையை கைக்குள் போட பார்த்தார். அவருக்கு ஜே,ஆர். பிறெமதாச இருவரையும் சாடையாய் விளங்கியிருந்தது

3.சோனியாவின் நடத்தைகள் பழிவாங்கல்கள் என்பதை ராயப்பு நன்கு விளங்கபடுத்தியிருந்தார். இலங்கையை சமாதானம் மூலம் திருப்பி எடுப்பது சோனியாவின் யோசனை அல்ல. தமிழர்களை பழிவாங்க நல்ல யோசனைகள் கொடுத்த மலையாளிகளை நம்பி நடக்கிறா. இவவும் மலையாளிகளும் இந்தியாவின் பாதுகாப்புக்குத்தான் ஊயிர்கொடுக்கிறார்கள் என்பது எங்கேயும் இல்லாததொன்று.

ஆகவே தமிழ்சிறியின் வசனம் மிக பொருத்தம்.

"கடல் வத்தும் என்று... ஒற்றைக்காலில் நின்ற கொக்கு, குடல் வத்தி செத்த" நிலை தான்... ஏற்படும்.
இனியும் இந்தியாவிடம் கையெந்தும் காட்சி "மூள்ளும் மலரின்" தொடக்கத்தில் தப்பியோடிய சிறுவர்களை சாப்பாடு காட்டி ஏய்த காட்சியைத்தான் நினைவு படுத்துகிறது.

4.அமெரிக்கா இலங்கையை தன் கையாலாகதனத்தால் இந்தியா சீனாவின் கைகளுக்குள் விழ விட்டதை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அமெரிக்கா இந்தியாவில் தானும் தனது கொள்கைகளில் தோல்வி கண்டிருக்கிறது. ஆகவே இனி எப்படி நடந்து கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கில்லாரி சென்னை போனது இந்தியாவின் விருப்பத்தோடு நடந்ததொன்றல்ல. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரின் கூட்டுசேர்வில்லமல் அவ தனியே சென்னை வந்திருந்தா. இது ராஜதந்திர பழக்கம் என்று கூற முடியாது. இந்தியாவின் வெளிவிவகார அதிகாரி கூட்டமைபின் பயணத்திற்குமுன் வடக்கு சென்று நிலைமைகளை சீர் செய்ய பார்த்தது, பயணத்தில் அவர்களுக்கிருக்கும் ஐயப்பாட்டின் வெளிப்பாடு. அமெரிக்கா தான் எப்படி நடந்து கொள்ளும் என்பதை இதுவரையில் இலகுவில் வெளியில் தெரிய விடவில்லை.

Edited by மல்லையூரான்

சீனாவுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று - சிங்களத்தின் அரசியல் பொருளாதார நிலைமை. சிங்களமோ சீனா ஒன்று தான் 'வாயை மூடிக்கொன்டு' உதவும் நாடு எனக்கூறி அந்த பொறிக்குள் ஆழமாகவே சென்றுவிடுகின்றது. இதைத்தடுக்கவே இந்தியாவும் மேற்குலகமும் சில எலும்புத்துண்டுகளை வீசி வருகின்றன. இரண்டு பக்கத்திலும் உதவிகளை பெறும் சிங்களம், இதை தமது 'அரசியல் சாணக்கியம்' என்கிறன.

இந்த நிலைமை நீடிப்பதை மேற்குலகமும் இந்தியாவும் விரும்பாது. நீடிக்க நீடிக்க அது சீனாவின் ஆதிக்கத்தை இலங்கை தீவில் வேரூண்ட வழி கொடுத்துவிடும். எனவே இதை நிறுத்த ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டிய நிலைக்கு இந்த நாடுகள் தள்ளப்படுகின்றன. அதை அவர்கள் எவ்வாறு சாதிக்க முனைகிறார்கள் என்ற நகர்வுகள் மத்தியில் நாங்கள் எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ நமெ='ஈரைவன்' டிமெச்டம்ப்='1319855320' பொச்ட்='701009']

தற்போதய நடைமுறைகளிலிருந்து இந்தியாவின் பாகம் நன்கு உணரப்பட்டுள்ளது.எந்த நாடும் இலங்கையில் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது என்பது யதார்த்தம்.

[/ஃஉஒடெ]

இல்லை இந்தியா இந்தியாவில் கூட இலங்ககையை மீறி செயற்பட முடியாது,இந்தியா இலங்கையின் வெறும் அடியாள் அதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட யதார்த்தம் இந்த இடியப்ப சிக்கலுக்குள் இருந்து தமிழினம் தலை எடுப்பது எப்படி?

கண்ணுக்கு முன் தெரிவதெல்லாம் வல்லூறுகளும் நரிகளும் ஓணான்களுமே.

இதில் எது கொஞ்சம் சிறந்தது என்று தெரிவு செய்வதைவிட எதைக்கொடுத்தால் கவ்விக்கொண்டு பேசாமலாவது கிடக்கும் என்று தமிழினம் சிந்திக்கவேண்டும். அத்துடன் இதையே பல நூற்றாண்டுகளாக சிங்களம் செய்து வெற்றிக்கு மேல்வெற்றியீட்டி வருகிறது. இனியும் இழப்பதற்கு எதுவுமற்ற தமிழினம் மதியைக்காட்டப்போகிறதா?

விதியே என விழுந்து நக்கப்போகின்றதா?

சீனரின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அதன் மூலம்தான் தமிழருக்கு மீட்சிகிட்டும்.

இழப்பைப் பற்றிக் கதைக்கும் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் ஊதுகுழல்கள் எதிர்மறையாகவே சிந்திக்கப் பழகிவிட்டார்கள்.

இறைவன், யதார்த்தம், பதார்த்ததுக்கு அப்பால்....

இவ்வளவு நடந்த பின்பும், ஈழத்த்மிழனின் நலனில் இந்தியா எவ்வளவு மனச்சாட்சிப்படி நடந்தது என்று உங்களால் கூற முடியுமா? சும்மா.... படம் காட்டாதேங்கோ.... சொல்லும், சொல் செயலில் இருக்க வேண்டும். இந்தியாவை நம்பி சொந்த நாட்டை இழந்தவர்கள் நாங்கள். அதை முதலில் ஞாபகம் வைத்திருங்கள்.

எம்மிடம் இனி, இழக்க ஒன்றும் இல்லை என்பதாவது... உங்கள் புத்திக்கு தெரிகிறதா?

கற்பனையில் வாழ்பவர்களை திருத்த முடியாது. அதுபோலவே ஊதுகுழல்களும் இலகுவில் திருந்திவிடாது.

தமிழ் சிறி எனினும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள்.

ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளும் அமெரிக்காவின் செயலால் ஆடிப்போய்யுள்ளார்கள் என்பது அதுகளின் ஊதுகுழல்களின் கருத்துகளிலும் பிரதிபலிக்கிறது.

ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் நம்பிக்கைக்குரிய சம்பந்தன் அதன் ஜால்ரா சுமந்திரன், மற்றும் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் மேல் நம்பிக்கையுள்ள சுரேஷ், மாவை ஆகியோரே அமெரிக்கா சென்றிருந்தாலும் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் குழம்பிப் போயுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷுக்கு இந்தியாவிலிருந்து தினமும் பல தொலைபேசி அழைப்புக்களாம் - நிலவரத்தை அறிந்து குழப்பும் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் முயற்சியாக இருக்கலாம்.

மற்றவர்களைத் திருத்துவதற்குப் புறப்பட்ட மாவீரர் வர்றார் வர்றார் பராக் பராக்.

தமிழர் நலன் என்று எதனை இவர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை. நின்று நிதானிக்க முடியாத நிலையில் தமிழினம் இருக்கையில், யாரிடம் எதைக் கோருவது என்று தெரியாத நிலையில் ஊழையிடும் காட்சிகள் வேதனையானவை.

அமெரிக்கா தீர்வைத் தரப்போகிறதென்று அங்கலாய்க்கும் ஏமாளிகளால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை.

தீர்வை அமெரிக்கவோ இந்தியவோ தரப் போவதில்லை அதனை நாம் தான் பெற வேண்டும்.தமிழர் வேண்டும் தீர்வை எதிர்க்கப் போகிறவர்கள் இந்தியாவும் சிறிலங்காவுமே. அமெரிக்காவுக்கு தனது நலங்களே முக்கியம் தமிழருக்கான தீர்வு விடயத்தில் தமிழருக்கும் அம்ரிக்காவுக்கும் எந்தப் பிணக்கும் கிடையாது.ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் அதன் எதிர்காலாம் இருப்பு ஆகியவ்ற்றினூடாக பார்த்து எப்போதும் தமிழருக்கு விரோதமாகவே இருந்து வந்துள்ளது இனியும் இருக்கும்.

மற்றவர்களைத் திருத்துவதற்குப் புறப்பட்ட மாவீரர் வர்றார் வர்றார் பராக் பராக்.

தமிழர் நலன் என்று எதனை இவர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை. நின்று நிதானிக்க முடியாத நிலையில் தமிழினம் இருக்கையில், யாரிடம் எதைக் கோருவது என்று தெரியாத நிலையில் ஊழையிடும் காட்சிகள் வேதனையானவை.

அமெரிக்கா தீர்வைத் தரப்போகிறதென்று அங்கலாய்க்கும் ஏமாளிகளால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை.

"மற்றவர்களைத் திருத்துவதற்குப் புறப்பட்ட மாவீரர் வர்றார் வர்றார் பராக் பராக்."

ஏவலாளிகளின் சேவகர்களின் தொழில் - பழக்க தோஷம்.

"தமிழர் நலன் என்று எதனை இவர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை. நின்று நிதானிக்க முடியாத நிலையில் தமிழினம் இருக்கையில், யாரிடம் எதைக் கோருவது என்று தெரியாத நிலையில் ஊழையிடும் காட்சிகள் வேதனையானவை."

பிச்சைக்காரர்களின் சேவகர்களுக்கு மற்றவர்களிடம் எதையாவது பிச்சைகோரி வாழும் மனநிலை என்பது உறுதியாகிறது. தாமாக உழைத்து வாழ நினைக்காதவர்கள்.

அமெரிக்கா தீர்வைத் தரப்போகிறதென்று அங்கலாய்க்கும் ஏமாளிகளால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை.

சேவகர்கள், ஏவலாளிகள் மந்திரி / ஆலோசகர் பதவிக்கு ஆசைப்படுவது தெரிகிறது. சிறுவயதில் சம சம்பளம் கேட்ட "மந்திரி - ஏவலாளி" கதை படித்த ஞாபகம். பெயரை ராஜா என்று வைத்தால் மட்டும் ராஜாவாகிவிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.