Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - பான் கீ மூன் சந்திப்பை நிறுத்தும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி

Featured Replies

[ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 01:18 GMT ] [ கார்வண்ணன் ] Ban-%20samarasinghe.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திப்பை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சி பலளிக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது. ஆனால் ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது ஐ.நாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் பாலித கொஹன்னவுக்கோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையிலான சந்திப்பை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூன் சந்திப்பதற்கு ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித கொஹன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பை ஐ.நா பொதுச்செயலர் கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் இந்தக்கட்டத்தில் சந்திப்பை இடைநிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் கோரிக்கையை பான் கீ மூன் நிராகரித்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை கடந்தவாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இதுதொடர்பான நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்ல என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீ மூனுக்கு எடுத்துக் கூறியுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20111030104957

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்ல என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீ மூனுக்கு எடுத்துக் கூறியுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinapp...?20111030104957

அதாவது நாடு கடந்த தமிழீழ அரசினரையும் சந்திக்க வேண்டும் என்று கேட்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல வளற்ச்சி. உலகில் இருந்து தனிமைப் பட்ட கடந்தகால அரசியல் தவற்றில் இருந்து மீழுவது இன்றைய உடனடி தேவையாகும். அதில் இருந்துதான் எமது எதிர்கால வெற்றிக்கும் மீட்ச்சிக்குமான புதிய அரசியல் முகிழ்க்க முடியும். எம்மைத் தனிமைப் படுத்தித் தோற்க்கடிக்கும் இலங்கையின் யுத்த தந்திரத்துக்கு இது பலமான அடியாகும். அண்மையில் எதிரிக்கு ஏற்பட்ட பாரிய ராஜதந்த்ர சவாலும் இதுவேயாகும். அதனால் இதனான் பிரதிவிழைவுகளையிட்டுக் கூட்டமைபினரும் நாமும் கருத்தில் கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கை இணைக்கும் அரசியல் பாலமான சம்பந்தரின் பாதுகாப்பு பற்றிய கரிசனை அவசியம். சமபந்தரதும் கூட்டமைப்பினரதும் பாதுகாப்புக்கு ஐநாவும் அமரிக்காவும் ஏனைய மேற்க்கு நாட்டுகளும் இந்தியாவும் உரிய கரிசனை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் கூட்டமைப்பினர் சிலர் வெளிநாட்டில் தங்கியிருந்து செயல்படவேண்டிய காலம் வரக்கூடும்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேல்மட்டத்தவர்கள் மட்டும் இதில் ஈடுபடுத்தப்படுள்ளார்கள். இந்த பயணத்தில் இந்திய ஆயுத குழு அரசியல்வாதிகள் ஈடுபடுத்தப்படவில்லை.

அவர்களும் குய்யோ முறையோ என்றெல்லாம் கூவி பார்த்தார்கள். அமெரிக்காவில் மூன்று நாள், ஹில்லரி உடன் சந்திப்பு, பின் பாண் கி மூனுடன் கூட சந்திப்பு என்று எதோ பெரிய விடயத்துடன் தான் இவர்களும் வெளி ஏறி இருக்கிறார்கள்.

வன்னியும் மூண்டு வருசமா தயாராகி தான் வருது......என்ன வெளியில் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது..... தெரிந்தது என்று ஒருவர் சொன்னாலே அவர் பொய் சொல்கிறார் என்னும் அளவுக்கு லாக் டவுன்.

மரபு புலி படை தான் நாலாம் யுத்தத்தில் மடிந்தது என்பதை பல தமிழ் ஆய்வாளர்கள் கணிப்பில் எடுத்து கொள்வதில்லை.

வன்னியும் மூண்டு வருசமா தயாராகி தான் வருது......என்ன வெளியில் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது..... தெரிந்தது என்று ஒருவர் சொன்னாலே அவர் பொய் சொல்கிறார் என்னும் அளவுக்கு லாக் டவுன்.

மரபு புலி படை தான் நாலாம் யுத்தத்தில் மடிந்தது என்பதை பல தமிழ் ஆய்வாளர்கள் கணிப்பில் எடுத்து கொள்வதில்லை.

சரி உங்க ஆய்வுபோதும் , (இந்த)ஏரியாவ விட்டு (மட்டும்) கெளம்புங்க!!

ஊருக்கு நல்லது!!

குளவியா நீங்க? சரியான கெழவிபோல இருக்கு உங்க கமெண்ட்!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி உங்க ஆய்வுபோதும் , (இந்த)ஏரியாவ விட்டு (மட்டும்) கெளம்புங்க!!

ஊருக்கு நல்லது!!

குளவியா நீங்க? சரியான கெழவிபோல இருக்கு உங்க கமெண்ட்!! :)

இதை தான் சொன்னனான்.

குழவி கூட்டை கிண்டாதைங்கோ. நான் கிழம்புறன்.

சும்மா தமாசு டி.என். எ க்கு இவ்வளவு முக்கியத்துவம் எங்கேயிருந்து வருகிறது என்று நன்றாக ஆராயுங்கள்.

Edited by KuLavi

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் முன்னாள் இந்திய ஆயுதக்குழுவின் தலைவர் தானே?இந்தியாவுக்கு விசுவாசமானவர்கள் அது சொல்லிக் கோடுத்ததை மட்டும் சொல்லக் கூடியவர்கள் மட்டும் போயிருக்கிறார்கள்?ஏன் சிறிதரனைச் சேர்க்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

குழவி குறிப்பு வாசித்தேன். அவர்கள் அரசியல் மக்களுக்கு சார்பா எதிரா என்பது மட்டும்தான் இன்றய நிலையில் எமக்கு முக்கியம். இலங்கை அரசும் இராணுவமும் குழவிக்கூட்டுக்கு யாராவது கல்லெறிவார்கலா என்று ஒரு சாக்கை தேடி நிற்க்கிறது. அண்மை விக்கிலீக்ஸ் தகவல்கள்சில முள்ளிவாய்க்கால் போரின்போது அமரிக்காவின் நிலைபாட்டை புரிய வைப்பதாக உள்ளது.

இன்றய சூனிய நிலமையிலும் மக்கள் போதிய அளவு பட்டறிவோடு இருக்கிறார்கள். எனினும் அவர்கள் சிங்கள அரசுக்கும் இராணுவத்துக்கும் பணியவில்லை. அந்த மகத்தான வீரத்துக்கு தலை பணிவோம்.

1950களில் எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலத்தில் இருந்து நமது மக்கள் உறுதியான நிலைபாடே எடுத்துவருகின்றனர். 1961ல் இலங்கை அரசை ஸ்தம்பிக்க வைத்த சதியாக்கிரப போராட்டம் இராணுவத்தால் முறிஅடிக்கப் பட்ட பின்னரும் இன்றுபோல பெரும் சூனியம் நிலவியது. ஆனாலும் நமது மக்களை மிஞ்சிய மகத்துவங்கள் எதுவும் எங்கள் வரலாற்றில் இல்லை. சகல அணிதிரழுதல்களும் களத்தில் வாழும் மக்களின் அபிசாசைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படுத்தப் படவேண்டும். மக்களுக்கு வெளியில் அணிதிரண்டு மக்கள் அரசியலுக்கு வெளியில் தன்னிச்சையாகச் செயல்படுவது என்பது எதிரியை அல்ல எமது மக்களை அழிக்கும் முயற்ச்சியாகவே முடியும்.

திருமலைத் தேர்தலில் மக்களுக்கு வெளியில் அணி திரண்டவர்கள் இறுதியில் எதிரிக்குச் சாதகமான நிலையையே உருவாக்கினார்கள். . இல்லையேல் 2 பிரதிநிதிகள் கிடைக்க வாய்பிருந்திருக்கலாம். எனினும் மக்களே அங்கு வெற்றி பெற்றார்கள்.

தீவிரவாதிகள் மக்களது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கவேண்டும். இந்த தருணத்தில் மாறாக சென்றால் எதிரிக்கே அனுகூலமாகும். . எல்லாம் இழந்து தனித்துப்போன நிலமையில் நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்ப் படவேண்டிய தருணமிது என்பதை தீவிர வாதிகள் மறந்துவிடக்கூடாது. அதே சமயம் தீவிரவாதிகளைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சியும் எதிரிக்கே சாதகமாக அமையும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. எல்லாத் தரப்பினருக்கும் இடையில் குறைந்த பட்ச்ச தொடர்புகளும் பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப் படவேண்டும். ஆயிரம் மாவீரர் தினங்கள் நடக்கலாம். அது மாவீரருக்குப் பெருமைதான். ஆனால் மாவிரர்தின விழா தொடர்பான பொறுமை இன்மையும் பொறுப்பின்மையும் எதிர்பிரசாரங்களும் நமது மாவீரர்களுக்கு பெருமை சேர்க்காது.

உலகுடனான பாலங்களைத் தகர்த்ததாலேயே நாம் தோல்விஅடைந்தோம். எங்களுக்கிடையில் இருக்கும் இறுதிப் பாலங்களையும் தகர்த்துவிட்டோமென்றால் எங்களை அழிக்க எதிரி வேண்டியதில்லை.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.