Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


  • Published On: Thu, Nov 3rd, 2011
  • கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்- அதிர்ச்சியில் திமுக

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு

அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர்.

இந்தத் தீர்ப்பையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி, கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் டெல்லி வந்துள்ளனர். மேலும் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்த ஜாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி

நிர்வாகி சரத்குமார் ரெட்டி, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம்

மொரானி ஆகிய 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகின. ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை இன்றைக்கு (நவம்பர் 3ம் தேதிக்கு) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார்.

இந் நிலையில் கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

எழுப்பியது.இதற்கு சிபிஐ தந்த விளக்கத்தில், 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி இன்று விடுதலை ஆகிவிடுவார் என்ற திமுக தரப்பு நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இன்று கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிபதி ஷைனி விசாரித்தார். பின்னர் அனைத்து ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்த அவர் 2ஜி வழக்கின் விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிபதியின் உத்தரவைக் கேட்டதும் கோர்ட்டில் கூடியிருந்த திமுகவினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும், விரக்தியும் அடைந்தனர். அனைவரது முகங்களும் இறுகிப் போயிருந்தன.

4வது முறையாக ஜாமீன் மறுப்பு

கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்று 4வது முறையாகநிராகரிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி தரப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilulakam.com/?p=300

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை அதிர்ச்சிகளை 2009 இல் எங்களுக்கு கருணாநிதி தந்தார். அழுதம்.. புரண்டம்.. ஊன்.. உறக்கம் இன்றி சொந்தங்களை.. சொந்த தேசத்தை.. இழந்து அடிமைகளாகிறோமே என்று தவித்தம். எவன் இரங்கினான் எங்களுக்கு..???! அதுவும் இன்றி இந்தக் கனிமொழி போய் கொலைஞன் ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தியது.. இன்றும் மனதில் நழலாடுகிறது. அவாக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..! இதில் அரசியல் எல்லாம் இல்லை. சாதாரண மனித உணர்வே இதை எழுதச் செய்கிறது.

:(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி பகிர்வுக்கு, எத்தனையாயிரம் மக்களின் கண்ணீரில் இவர்களின் வாழ்கை இருக்கு, இன்னும் அனுபவிக்க இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

03.jpg 13.11.11 ஹாட் டாபிக் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லாபம் அடைந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கனிமொழியை மட்டும் ஆறு மாதங்கள் சிறையில் வைத்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதேசமயம், ‘கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வருவதில் அரசியல் பின்னணி ஏதும் இருக்குமா?’ என்றும் தி.மு.க. தரப்பில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சரத்குமாரும், கனிமொழியும் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பிறகு, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. இது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அதற்கு அடுத்து, ஜாமீன் மனு விசாரணையின் போது, கனிமொழியின் ஜாமீனுக்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால், நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்று நம்பிய தி.மு.க. தலைமை, தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பியது.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

ஆனால், இந்த வாதங்கள் எதையும், சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி ஏற்கவில்லை. கனிமொழியின் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவிக்காதது, சட்ட ரீதியாக எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டினார் நீதிபதி.

சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காத போதும், கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது தி.மு.க. தரப்பைப் படுத்தி எடுத்துவிட்டது. கனிமொழியைச் சுற்றியே இந்த வழக்கு வலம் வரக் காரணம் என்ன? ஏதேனும் அரசியல் சூழ்ச்சிகள் பின்னணியில் இருக்கிறதா? என்ற கேள்விகளுடன் தி.மு.க. வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘இந்திய நீதித்துறை மரபுகளின்படி மோசமான சூழ்நிலைகள் இருந்தாலே ஒழிய, குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதே சரி. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, ஒருவர் நிரபராதியே என்ற இந்திய நீதித்துறையின் அடித்தளமான விதியின்படியே, இப்படி ஜாமீன் வழங்கப்படுகிறது.

கனிமொழி உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தால், கடுமையான நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியிருக்கலாம். வழக்கு விசாரணை முடியும் வரை, சிறையிலேயே இருக்க வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு முரணானது.

மேலும் ‘சத்யம்’ நிறுவனர் ராமலிங்க ராஜு 2009 ஜனவரி 9-ம் தேதி தன்னுடைய நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பொய்யாக எழுதி, லாபம் இருப்பது போல கணக்குக் காட்டி பங்குச் சந்தையில் மோ03a.jpgசடி செய்திருப்பதாக ஒப்புக் கொண்டார்.

சட்டபூர்வமான நடவடிக்கைக்குத் தயார் என்று அனைத்து பங்குச் சந்தைகளுக்கும் கடிதம் எழுதினார். இப்படி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும், நியாயமான விசாரணையை நடத்தினால், சத்யம் ஊழலில், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பங்கு வெளிவந்துவிடும் என்ற காரணத் துக்காக, விசாரணையை நியாயமாக நடத்தாமல், ராமலிங்க ராஜுவை சிறையிலேயே முடக்கினர்.

ஏறக்குறைய 3 வருடங்கள் ஆன பிறகும், சி.பி.ஐ. தனது விசாரணையை முடிக்காத காரணத்தால், உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகள் பலர் இன்னும் வெளியே இருக்கிறார்கள். அவர்களை இந்த வழக்கில் சாட்சிகளாகக் கூட விசாரிக்க சி.பி.ஐ. தயாராக இல் லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஜப்பானிய நிறுவனமான டோகோமோவிற்கு டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்று கொள்ளை லாபம் பார்த்தவர் ரத் தன் டாடா. அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று நற்சான்றிதழ் அளித்துள்ளது சி.பி.ஐ.

2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே 2008-ம் ஆண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யலாம் என்பது அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், ஆ. ராசாவும் சேர்ந்து எடுத்த முடிவு. இந்த முடிவை முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரிவித்து பின்னரே ராசா முடிவை இறுதி செய்தார். ஆனால், மன்மோகன் சிங்கோ, சிதம்பரமோ சாட்சிகளாகக் கூட விசாரிக்கப்படவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லாபம் அடைந்த லூப் டெலிகாம், வீடியோகான், ஷ்யாம் சிஸ்டெமா நிறுவனங்கள் மீதும் விசாரணை செய்ய சி.பி.ஐ. தயாராக இல்லை. இந்த நிலையில், கனிமொழி உள்ளிட்டோரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

இதைப் போலவே, கனிமொழி உள்ளிட்டோர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸின் பங்கு வெளி வந்துவிடும் என்பதற்காகவே, கனிமொழியை நிரந்தரமாக சிறையிலேயே அடைத்து வைக்க காங்கிரஸ் ஆடும் நாடகம் இது’’ என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த தி.மு.க. வழக்கறிஞர்.

சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் கனிமொழி. இந்த விவகாரத்தில் கனிமொழியைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே யாராலும் யூகிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதற்கு விடை கிடைத்தால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே தி.மு.க. தரப்பின் தற்போதைய நிலை.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்வதில் தனது கட்சியினரே ஈடுபடுகிறார்களோ என்ற எண்ணமும் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் உள்ள தி.மு.க. முன்னணித் தலைவர்கள் பலர் இன்னும் ஆசை வார்த்தை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

கனிமொழிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று கருணாநிதியை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள் சில வழக்கறிஞர்கள். கருணாநிதியையே ஏமாற்றியவர்கள் கனிமொழிக்கும், அவரையே நினைத்து வாடும் மகன் ஆதித்யாவுக்கும் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?

சட்டப்பிரச்னை எல்லாம் கனிமொழியின் மகன் ஆதித்யாவுக்குத் தேவையில்லாதது. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் தாய்ப்பாசம் தான். பத்து மாதம் சுமந்த தாயைப் பார்க்க ஆறு மாதம் காத்திருக்கிறான் ஆதித்யா. யாரும் ஆறுதல் சொல்ல வேண்டாம்... ஆசை வார்த்தை காட்டாமல் இருக்கலாமே?

அருணாச்சலம் - குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

03.jpg

சட்டப்பிரச்னை எல்லாம் கனிமொழியின் மகன் ஆதித்யாவுக்குத் தேவையில்லாதது. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் தாய்ப்பாசம் தான். பத்து மாதம் சுமந்த தாயைப் பார்க்க ஆறு மாதம் காத்திருக்கிறான் ஆதித்யா. யாரும் ஆறுதல் சொல்ல வேண்டாம்... ஆசை வார்த்தை காட்டாமல் இருக்கலாமே?

ஆதித்யாவுக்காவது ஒரு தாய் உயிரோடு இருக்கிறாள் என்றாவது ஒரு ஆறுதல் இருக்கின்றது!

காங்கிரஸ் பிரச்னை, உங்கள் மகளோடு விளையாடுகின்றது என்று இன்று கொதிக்கும் நீங்கள், காங்கிரஸ் பிரச்சனை ' நாற்பதினாயிரம்' உயிர்களோடு விளையாடியபோது, தந்திக் கம்பங்களில் நடந்து திரிந்தது மீண்டும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது!!! ஈழக்குழந்தைகள், மீசையுடனா பிறக்கின்றன கலைஜரே? அவர்களும் குழந்தைகள் தானே!!!

  • கருத்துக்கள உறவுகள்

tamilmakkalkural_blogspot_kanimozhi_rajapaksa.jpg

இந்தப் படத்தைப் பார்த்தபின்... கனிமொழிமீதோ. கருணாநிதி மீதோ... எந்த அனுதாபமும் ஏற்படவில்லை.

திகார் ஜெயிலை நன்றாக அனுபவிங்க.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சந்தோசத்தில இது தான் வருது :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen::D :D :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.