Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு!

z-ponnampalam%20%285%29.jpg

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். குருநகரிலுள்ள அவரது சிலைக்கு இன்று செவ்வாய்க்க்கிழமை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்போடு அரசியல் நடத்திய மாமேதை பொன்னம்பலம் தமிழர்களின் இதயங்களிலிருந்து என்றும் நிங்காதவர். தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு உயிரோட்டமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சலமோன் சிறில், யாழ். மாநாகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.z-ponnampalam%20%284%29.jpgz-ponnampalam%20%286%29.jpgz-ponnampalam%20%283%29.jpgz-ponnampalam%20%287%29.jpgz-ponnampalam%20%282%29.jpgz-ponnampalam%20%281%29.jpg

http://www.eeladhesa...ndex.php?option

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்போடு அரசியல் நடத்திய மாமேதை பொன்னம்பலம் தமிழர்களின் இதயங்களிலிருந்து என்றும் நிங்காதவர். தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு உயிரோட்டமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தமிழர்களின் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர். இலகுவாக அடைந்திருக்கக் கூடிய தமிழன் உரிமையை கடினப்படுத்திய சுயநலவாதி.

சோல்பரி ஆணைக் குழுவில்,

காலனித்துவத்திற்கு முன்பிருந்த தமிழர்களின் பிரதேசங்களை பிரித்துத் தரச் சொல்லிக் கேட்காமல், நடைமுறைக்கு ஒத்து வராத ஐம்பதிற்கு ஐம்பது என்று பாராளுமன்ற உறுப்பினர் உரிமையை கேட்டவர். காரணம் தனது சொத்துக்கள் சிங்கள நாட்டில் இருந்தமை. அதன்பின் டி எஸ் சேனநாயகாவின் குள்ளத்தனத்திற்கு ஒத்தூதியவர்.

பதவிக்காக பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிப்புக்கு உடன்போனவர்.

சுமார் எழுபது வருடங்களிற்கு முன் நடந்த தமிழர்களின் அரசியல் வரலாறே தெரியாமல் உள்ள இந்த இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் உரையை வெட்டி ஓட்டும் இப்படியான இணையங்கள் எல்லாம் தமிழர்களின் சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழர்களின் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர். இலகுவாக அடைந்திருக்கக் கூடிய தமிழன் உரிமையை கடினப்படுத்திய சுயநலவாதி.

சோல்பரி ஆணைக் குழுவில்,

காலனித்துவத்திற்கு முன்பிருந்த தமிழர்களின் பிரதேசங்களை பிரித்துத் தரச் சொல்லிக் கேட்காமல், நடைமுறைக்கு ஒத்து வராத ஐம்பதிற்கு ஐம்பது என்று பாராளுமன்ற உறுப்பினர் உரிமையை கேட்டவர். காரணம் தனது சொத்துக்கள் சிங்கள நாட்டில் இருந்தமை. அதன்பின் டி எஸ் சேனநாயகாவின் குள்ளத்தனத்திற்கு ஒத்தூதியவர்.

பதவிக்காக பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிப்புக்கு உடன்போனவர்.

சுமார் எழுபது வருடங்களிற்கு முன் நடந்த தமிழர்களின் அரசியல் வரலாறே தெரியாமல் உள்ள இந்த இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் உரையை வெட்டி ஓட்டும் இப்படியான இணையங்கள் எல்லாம் தமிழர்களின் சாபக்கேடு.

http://www.youtube.com/watch?v=ZLSjQ3FPhVM

http://www.youtube.com/watch?v=dB0313W97d0

:icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழர்களின் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர். இலகுவாக அடைந்திருக்கக் கூடிய தமிழன் உரிமையை கடினப்படுத்திய சுயநலவாதி.

சோல்பரி ஆணைக் குழுவில்,  

காலனித்துவத்திற்கு முன்பிருந்த தமிழர்களின் பிரதேசங்களை பிரித்துத் தரச் சொல்லிக் கேட்காமல், நடைமுறைக்கு ஒத்து வராத  ஐம்பதிற்கு ஐம்பது என்று பாராளுமன்ற உறுப்பினர்  உரிமையை கேட்டவர். காரணம் தனது சொத்துக்கள் சிங்கள நாட்டில் இருந்தமை. அதன்பின் டி எஸ் சேனநாயகாவின் குள்ளத்தனத்திற்கு ஒத்தூதியவர்.

பதவிக்காக பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிப்புக்கு உடன்போனவர்.

சுமார் எழுபது வருடங்களிற்கு முன் நடந்த  தமிழர்களின் அரசியல் வரலாறே தெரியாமல் உள்ள இந்த இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் உரையை வெட்டி ஓட்டும் இப்படியான  இணையங்கள் எல்லாம் தமிழர்களின் சாபக்கேடு.

பொன்னர் பிளான் வெறும் பாதகச் செயல்....

தோழர்

இது இலங்கை சுதந்திரம் பெற முன், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுப் போகும் முன் நடந்த சோல்பரி ஆணைக் குழுவில் ஜீ ஜீ நடத்திய விவாதம் பற்றியது. அது ஈழத் தமிழர்களின் கோணல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. ஜீ ஜீ காலனித்துவ ஆட்சிக்காலத்தின் முன்பிருந்த தமிழர்களின் உரிமையையே கேட்டிருக்கலாம். போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் இலங்கையில் மூன்று இராசதானிகள் இருந்தன. கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்பன. தமிழர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. அதன்படி பிரித்துத் தரச் சொல்லிக் கேட்டிருக்கலாம். அதை விட்டு ௦பத்துப் பன்னிரண்டு வீதம் இருந்த சிறுபான்மை இனத்திற்கு நியாயமற்ற ஐம்பது வீத பாராளுமன்ற நியமத்துவம் கேட்டார். காரணம் நாட்டைப் பிரித்தால் தனக்கு நட்டம். அவரது சொத்துக்களும் சிங்கள் நாட்டிற்குள் இருந்தது. அப்பொழுது ஜீ ஜீ யின் 'பிப்டி பிப்டி' தீர்வை எதிர்த்தவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். கடைசியில் சோல்பரி ஆணைக் குழுவும் ஒற்றை ஆட்சியை இலங்கையில் நிறுவிச் சென்றார்கள்.

அதே நேரத்தில்தான் முகமட் அலி ஜின்னா, எந்த வித பாரம்பரியமோ நிலங்களோ அற்ற முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து பிரித்து 'பாக்கிஸ்தான்' எனும் தனி நாடு பெற்றுக் கொடுத்தார். அதைக் கூட ஜீ ஜீ உதாரணமாக எடுக்கவில்லை.

நீங்கள் இணைத்துள்ள இணைப்பு, டி எஸ் சேனநாயக்காவின் காலத்தில் இருந்துதான் தொடங்குகிறது. இலங்கை சுதந்திரம் பெற முன் தமிழர் தரப்பில் ஜீ ஜீ பொன்னம்பலமும் சிங்களவர்கள் தரப்பில் டி எஸ் சேனநாயக்காவும் அரசியல் தீர்வுக்கு முயற்சித்தார்கள். ஜீ ஜீ யின் சுயநலத்தைப் பாவித்து டி எஸ் சேனநாயக்கா ஒற்றை ஆட்சியை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதன் பின் டி எஸ் சேனநாயகா தமிழர் தாயகத்தைப் பிரிப்பதற்காக , கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை வெகு செம்மையாகச் செய்தார்.

பிரச்சனை என்னவென்றால் தமிழன் தனது வரலாறை சில பத்து வருடங்களிற்கு முன்பிருந்துதான் தொடங்குகிறான். சரியோ பிழையோ சிங்களவர்கள் மகாவம்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே அப்போ ராமனநாதன் யாரு எங்கிட்டோ பல்லக்கில் தூக்கி சென்றதாக கூட கேள்வி பட்டேன் :D:)

தோழரே அப்போ ராமனநாதன் யாரு எங்கிட்டோ பல்லக்கில் தூக்கி சென்றதாக கூட கேள்வி பட்டேன் :D:)

ஜீ ஜீ யைப் பற்றிய விஷயம் எழுதி முடிக்கவே ஒரு மணித்தியாலம் ஆயிட்டு. :(

ஸ்ஸ்ஸ்... சட..சட... சட...... யப்பா! கண்ணைக் கட்டுதே.

ஐயாம் சிலீப்பிங்கு. :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ ஜீ யைப் பற்றிய விஷயம் எழுதி முடிக்கவே ஒரு மணித்தியாலம் ஆயிட்டு. :(

ஸ்ஸ்ஸ்... சட..சட... சட...... யப்பா! கண்ணைக் கட்டுதே.

ஐயாம் சிலீப்பிங்கு. :lol:

யோவ் இந்த வரலாறு எல்லாம் எனக்கு தெளிவாக சொன்னால் தானே எங்களுக்கு புரியும் ....அப்பதானே நான் நாடாளுமனறத்தில் தெளிவாக எடுத்து பேச இயலும்??

டிஸ்கி:

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக அல்லது தமிழ் தேசிய சக்திகளின் சார்பாக நிக்கலாம் என்று இருக்கன்.. ஒரு ஓட்டு தவறாது பிக்காரி பயலுகல பிச்சுடவன் பிச்சு.. வார்டு பூத்து சிலிப்பில் இருந்து எவனவன் யார் என்று ஏ டூ இசட் கண்கெடுத்திருக்கேன் தோழரே,,,,

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்பலம் அருணாச்சலம், பொன்னம்பலம் இராமநாதன் போன்ற நிலப்பிரபுத்துவ தலைமைகள் சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில்; தமிழர்களும் சிங்களவர்களும் அடங்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸில் தலைமைப் பொறுப்பை வகித்தாலும் குறுகிய காலகட்டத்தில் வெளியேற வேண்டி வந்தது. இதற்கிடையில் 1915ம் ஆண்டு சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் காரணிகளாக அறியப்பட்டு   பிரித்தானியப் படைகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிங்களவர்கள் பண்டாரநாயக்க , சேனநாயக்க இன்னும் பலரை ராமநாதன் அவர்கள் பிரித்தானியாவுடன் போராடி விடுதலை செய்தார்.    சிங்களவர்கள் ராமநாதன் அவர்களைத்  தங்கள் தோளில்  சுமந்து காலிமுகத்திடலில் பெரும் வரவேற்புக் கொடுத்தனர். இராமநாதன் சிங்களவர்கள் பக்கம் நின்றதனால் தமிழ், முஸ்லீம் உறவில் பெரும் பிளவு ஏற்பட்டது.

அடுத்த காலகட்டத்தில் முதலாவது பிரதமரான சேனநாயக்க மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குடியியல் உரிமைகளைப் பறிக்கும் பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த போது, இலங்கைத் தமிழ் கொங்கிரஸின் தலைவரும் பேரறிவு படைத்த வழக்கறிஞர் என மக்களால் புகழப்பட்டவருமான ஜி.ஜி. பொன்னம்பலம் எந்தவொரு அரசியல் முன்நோக்குமின்றி பேரினவாதிகளுடன் சேர்ந்து இந்தியத் தமிழ் வம்சாவழி தொழிலாளர்களின் குடியுரிமை பறி போக துணை நின்றார். இதற்குப் பரிசாக இவரிற்கு மந்திரிப் பதவி வழங்கப் பட்டது.

இந்தியத் தமிழ் வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டதை எதிர்த்து, இன்று இவர்களிற்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும் என்று செல்வநாயகம் தமிழ் கொங்கிரஸில் இருந்து விலகி, தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். தீவிரம் அடைந்து வந்த இன முரண்பாடுகளின் விளைவாக டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம் என்பன எழுதப் பட்டன. ஆனால் அவை பேரினவாதிகளின் எதிர்ப்பினால் குப்பையிலே வீசப் பட்டன. பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெயவர்த்தன கண்டிக்கு பாதயாத்திரை செய்தது, தமிழ் மக்களிற்கு சிறு உரிமைகள் தன்னும் கிடைப்பதை பேரினவாதிகள் அனுமதிக்கப் போவதில்லை என்பதை உறுதிபடக் காட்டியது.

தமிழரசுக் கட்சி, தமிழ் கொங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் என்பவற்றின் கூட்டான தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப் பட்டது. கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டின் போது தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து 1977ம் ஆண்டு தேர்தலை சர்வசன வாக்கெடுப்பு என்ற வகையிலே போட்டியிடுவது என்று தீர்மானிக்கப் பட்டது. 1977ம் ஆண்டு கூட்டணி பெருவெற்றி பெற்றது.

கூட்டணியின் தலைவராக தமிழ் கொங்கிரசைச் சேர்ந்த சிவசிதம்பரம் இருந்தார். அவர் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தமிழ் பிரதேசம் முழுவதும் ஒப்பிடும் போது அவரே மிகவும் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். காங்கேசந்துறை தொகுதியில் வென்ற தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க் கட்சித் தலைவரானார். தேர்தலில் வென்ற பின் இவர்கள் தமிழீழம் என்ற கோஷத்தை முன்வைத்து எந்த விதமான போராட்டங்களையும் முன்னெடுக்காமல் வெறும் உணர்ச்சி மயமான பேச்சுக்களால் மக்களை ஏமாற்றி வந்தனர்.

மேலும் இத்தலைமைகள் தமிழ் மக்களின் உள்முரண்பாடுகளை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் விரிசல் அடையச் செய்தனர். 1960களில் சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை தமிழர் மகாசபை என்பவற்றின் வழிகாட்டுதலில் தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்கள் தீவிரமாக எழுந்தன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது, தாழ்த்தப் பட்ட மக்களை உள்ளே விடாமல் தடுப்பதில் சாதி வெறி பிடித்த பலர்  முன்னின்றனர். அக்காலகட்டத்தில் அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரின் தொகுதிக்கு உட்பட்ட சங்கானையில் பொலிசாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு தாழ்த்தப் பட்ட மக்களது போராட்டம் தீவிரமாக இருந்தது. சாதி வெறியர்களுக்கு எதிராக போராடிய மக்களின் சார்பில் பேச வேண்டிய அமிர்தலிங்கம்,  இது சங்கானைப் போராட்டமல்ல சங்காய் போராட்டம் என தாழ்த்தப் பட்ட மக்களையும் சீன கொம்யூனிஸ்ட் கட்சியையும் கிண்டலடித்து பாராளுமன்றத்தில் பேசினார். :)

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவரே !... இந்த எளியவனையும் மதித்து இவ்வளவு பெரிய கட்டுரை எழுத வேண்டுமா.. எனிவே டேங்க்ஸ்

பெரியவரே !... இந்த எளியவனையும் மதித்து இவ்வளவு பெரிய கட்டுரை எழுத வேண்டுமா.. எனிவே டேங்க்ஸ்

தோழர்

வாத்தியார் மிக அழகாக எளிமைப்படுத்தியுள்ளார்

இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையிலிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் இடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியவர்களில் முக்கியமான்வர் என்று கேள்விப் பட்டுள்ளேன்

கேள்வி பட்டதென்ன முழு உண்மை .அதே மாதிரி தமிழர்களுக்கிடையில் முழுப்பிளவை உண்டாக்கியது அவரும் அவர் பேரனும் .முதல் பக்க படத்தை பார்த்தாலே தெரியும்

தேவாரம் பாடினால் சரியென்று நினத்துவிட்டோம்.

கடுமையான தவறுகளை விட்டுள்ளார் என அறிகிறோம். ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் சரியானவற்றை செய்யாது இருந்தது ஏனைய தமிழரின் தவறு. ஆனால் அவரது புதல்வர்கள் அந்த தவறை செய்ய முனையவில்லை. சில விடயங்களில் மிக உறுதியாக இருந்ததால் தான் குமார் பொன்னம்பலத்தை சிங்கள அரச பயங்கரவாதிகள் படுகொலை செய்தார்கள். எனவே இப்போது ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தவறுகளை மட்டும் பேசி தமிழினத்தை கேவலப் படுத்துவது நல்லதல்ல.

இன்று சம்பந்தனும் சுமந்திரனும் அதுபோன்ற தவறுகளை இன்னொரு வடிவில் செய்ய முனைகிறார்கள். அவர்களை உடனடியாக தூக்கி வீசாது, அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, கடிவாளம் போடவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமை என நினைக்கிறேன். வெறுமனே மேடையில் வாழ்த்துப் பாடி, காசை வழங்கிவிட்டு, மேடைக்கு பின்னால் எனக்கு இன்ன இன்னது நடக்க வேண்டும் (உதாரணமாக ஈழத்தில் தனது காணியில் இருப்பவரை வெளியேற்றி விக்க வேண்டும்) என ஒரு பட்டியலைக் கொடுப்பது அழகல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.