Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் குங்கும பொட்டு வைப்பதற்கான காரணங்கள் ..............

Featured Replies

23938715.jpg

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத் துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல காரண ங்கள் உள்ளன.

வசியத்தில் இருந்து தப்பலாம்:

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப் னாடிசம், போன்றவை வழக்கத் தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப் பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக் கொண் டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ் நிலை க்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த மு டியாது.

aabyz.jpg

யோகசாஸ்திரம் கூறும் உண்மை:

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிற உள் ஒளி கண்டத்தில் தங் குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிற து. அகவொளி நிலைக்கும் இடங் களைப் பொட்டு வைத்து புலப்ப டுத்து வதாக சாஸ்திரங்கள் தெரி விக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.

திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத் திற்கு முரனானது ஆகும்.

http://vidhai2virutc...ங்கும-பொட்டு-வ/

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு - 1

பொட்டு அல்லது திலகம் என்பதற்கு மங்கல அழகுச் சின்னமாக நெற்றியின் நடுவில் (புருவ மத்தியில்) குங்குமம் போன்றவற்றால் வைத்துக் கொள்ளும் சிறு வட்ட வடிவக் குறி என்கிறது தமிழ் அகராதி. அது அதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. பொட்டு வைத்தல் என்பது இந்தியப் பண்பாட்டுக்குரிய முக்கிய அம்சமாகும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நெற்றியில் திலகமிடுவது நெடுங்காலமாக இந்திய மரபில் காணப்பட்டு வருகிறது. தாம் சார்ந்த இந்து மதப் பிரிவின் அடையாளத்தைக் குறிப்பதற்காக ஆண்கள் நெற்றியில் திலகமிடும் வழக்கம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நிலவி வந்திருக்கிறது. சக்தியை வழிபடும் சாக்தப் பிரிவினர் சிவந்த குங்குமத் திலகத்தாலும், வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் ஊ வடிவில் அமைந்த நாமம் எனப்படும் வெள்ளை நிறப் பொட்டாலும், சூரியனை உயர் தெய்வமாக வழிபடும் சௌர மதப்பிரிவினர் செஞ்சந்தனத்தாலான பொட்டாலும் தம்மை அடையாளப்படுத்தினர்.

இந்து சமய ரீதியாக பொட்டணிதல் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான மரபாகும். பொட்டிடுவதற்குப் புருவமத்தி தெரிவு செய்யப்பட்டமைக்குச் சில காரணங்கள்f கூறப்படுகின்றன. தியானம் செய்யும் போது பார்வையும் மனமும் புருவ மத்தியில் குவிந்து ஒடுங்குகிறது. அவ்வாறு ஒடுங்கும் போது அந்த இடத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், புறத்தில் இருந்து வரும் சக்திகளiன் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் புருவ மத்தியில் பொட்டணிவதாகக் கூறப்படுகிறது.

உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளiயில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ஆறாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக் கூர்மை, மனம், புத்தி, ஆன்மசக்தி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்வதும் முக்கியமானதாக எண்ணப்பட்டதால் அந்த இடத்தில் பொட்டு வைக்கும் மரபு ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண்கள் பொட்டணிவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பெண்களைத் தீய எண்ணத்துடன் பார்ப்பவரது பார்வையை அது தூய்மைப்படுத்துகிறது. ஒருவர் ஒரு பெண்ணின் கண்களை வேறுபட்ட எண்ணத்துடன் பார்க்கும் போது பொட்டு அவரது கவனத்தைத் திசை மாற்றுவதுடன், அது சிவனது மூன்றாவது கண்ணை நினைவூட்டுவதால் அவரது தீய எண்ணங்கள் மறைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.

ஞானக் கண்ணை அடையாளப்படுத்தும் பொட்டு அதை அணிபவருக்கு நல்லதிஷ்டத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

இந்து சமயம் பொட்டணிதல் பற்றி இவ்வாறு பல விதமான கருத்துக்களைக் கூறிய போதும் தமிழரைப் பொறுத்தவரையில் ஆரம்பகாலத்தில் அழகுக்காகவே பெண்கள் திலகமிட்டதாக சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரமும் அழகுக்காகப் பொட்டிடுதல் பற்றிக் குறிப்பிடுகிறது. நெற்றியில் பொட்டிடுதல் என்பது எப்போது பெண்களiன் மங்கலச் சின்னமாகக் கருதப்பட ஆரம்பித்தது என்பதும் தமிழ்ப் பண்பாட்டின் அம்சமாக அது எப்போது மாறியது என்பதும் தனியாக ஆராயப்பட வேண்டிய விஷயங்களாகும். பண்டைக்கால ஆரிய சமுகத்தில் திருமணத்தின் போது மணமகன் தனது இரத்தத்தை திருமணம் முடித்ததன் அடையாளமாக மணமகளiன் நெற்றியில் பொட்டாக வைத்தது பற்றிச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கம் பின்னர் மணமகள் திருமணத்தின் போது சிவப்பு நிறத்தில் பொட்டணியும் முறைக்கு வித்திட்டிருக்கலாம்.

தமிழர் வாழ்வுடன் பல நிறங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றுள் சிவப்பு வெள்ளை நிறங்கள் முக்கியமானவை. சமூகவியல் ரீதியாக இந் நிறங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. தமிழருக்குரிய சூடு, குளiர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் குளiர்மையையும், சிவப்பு நிறம் சூட்டையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாக நம்பப்படுகிறது. இவ்வியல்புகளை வெளiப்படுத்தும் வகையிலேயே திருமணத்தின் போது ஆண்களதும் பெண்களதும் ஆடைகள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆண் குளiர்மையான இயல்பு உள்ளவனாகக் கருதப்படுவதால் வெள்ளை நிற ஆடை அணிகிறான், சந்தணத் திலகமிடுகிறான். பெண் சூடுள்ளவளாக எண்ணப்படுவதால் சிவப்பு நிறச் சேலையணிந்து சிவப்பு நிறத்தில் பொட்டிடுகிறாள். சிவப்பு நிறம் சூட்டை மட்டுமல்ல, குருதியின் நிறம் என்பதால் வளத்தையும் குறிக்கும். வளம் என்னும் போது அது சந்ததி விருத்தியைக் குறிக்கும். சந்ததியை உடல் ரிதியாக விருத்தி செய்யும் வளம் பெண்ணிடம் இருப்பதாலும், அது சூடான இயல்புள்ளது என்று கருதப்படும் காமத்துடன் தொடர்புள்ளதாலும் அதைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சிவப்பு நிற ஆடையை அவள் திருமணத்தின் போது அணிகிறாள். அத்துடன் அன்றே அவள் முதன்முதல் சிவப்பு நிறத்தில் பொட்டணிகிறாள். திருமணத்தின் பின் சந்ததியை விருத்தி செய்யும் நிலைக்கு அவள் தயாராகிவிட்டாள் என்பதை அவளது சிவப்பு நிற திருமண சேலையும் பொட்டும் குறிப்பாகக் காட்டி நிற்கின்றன.

தமிழ் பெண்ணின் வளம் கற்பு நெறியுடனும் தொடர்பு பட்fடிருக்கிறது அதனாலேயே கணவன் மரணணமடைய நேரிட்டால் அவள் தனது சிவப்பு நிறப் பொட்டை நீக்கித் தனது வளமின்மையைப் பிரதிபலிக்கிறாள். அதே போல அதன் பின் அவள் வெள்ளை நிறச் சேலையணிந்து குளiர்மையடைந்துவிட்ட நிலையைக் காட்டுகிறாள். எத்தனையோ நிறங்கள் இருக்க பொட்டுக்கு குருதி நிறமான சிவப்பு நிறம்f தெரிவு செய்யப்பட்டமைக்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.

1930 களில் தமிழ் நாட்டிலிருந்து சஞ்சிகைகள் யாழ்ப்பாணத்திற்கு வர ஆரம்பித்த பின்னர் இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்கள் பொட்டிடும் வழக்கத்தைப் பரந்த அளவில் ஆரம்பித்திருக்கலாம். ஆயினும் காலப் போக்கில் இலங்கை அரசியலில் தமிழரைப் பாதிக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய பின்னர் பொட்டிடுதல் என்பது தமிழ் இனத்தைக் குறிப்பிடும் ஒரு குறியீடாக மாறியது. இதன் காரணமாகவே தமிழருக்கு எதிரான போக்கு கூர்மையடைந்த காலத்தில் கொழும்பில் வாழும் பெண்கள் தமது அடையாளத்தை மறைப்பதற்காக பொது இடங்களiல் பொட்டிட்டுச் செல்வதைத் தவிர்த்தனர்.

வெளiநாட்டில் வாழ வந்த தமிழ் அல்லது இந்துப் பெண்கள், ஏன் பொட்டு அணிகிறீர்கள்? இதற்கு உங்கள் சமயத்தில் அல்லது பண்பாட்டில் ஏதும் முக்கியத்துவம் உள்ளதா? இது சாதியைக் குறிக்கும் அடையாளமா? என்று பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே பொட்டிடுதல் பற்றி அறிய விரும்புபவர்களுக்குச் சரியான விளக்கத்தை கொடுப்பதற்காக நாம் இதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நான் சுவீடனில் வாழ்ந்த காலத்தில் இந்தக் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது. ஒரு தடவை புகை வண்டியில் பிரயாணம் செய்த போது ஒருவர் எனது பொட்டைப் பார்த்து விட்டு விளக்கம் கேட்டார். திருமணமான பெண்களுக்கு இது ஒரு அடையாளமாக விளங்குவதாக நான் கூறியதும் அவர் உடனே கேட்டார் traffic lightஇல் உள்ள red lightபோல எதிரே வருபவரை இவள் திருமணமான பெண் தூரத்தில் நில் என்று எச்சரிக்கின்றதா இந்தச் சிவப்புப் பொட்டு? என்று. அது ஓரு வகையில் நல்ல விளக்கமாகவே எனக்குப் பட்டது.

இன்று அழகுக்காக பொட்டணியும் வழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அதன் வடிவம் மட்டுமல்ல அளவும் மாறிவிட்டது. வட்டப் பொட்டு என்ற நிலை போய் சதுரம், மெல்லிய கோடு, நீள்வட்டம் (oval shape) நீர்த்துளi, சதுரம் போன்ற வடிவங்களiலும், பாம்பு, மயில், கிளi, ஏன் யானை வடிவத்தில் கூட பொட்டணியும் நாகரிகம் பரவியுள்ளது. இந்துக்கள் மட்டுமல்ல மற்றையோரும் விரும்பி அணியும் வகையில் நெற்றியிலும் உடலின் வேறு பல பாகங்களiலும் அணியும் விதமாக பல்வேறு வகைப் பொட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. பாடகியான Madonna ஆரம்பித்து வைக்க 'No Doubt' என்ற பொப் குழுவின் தலைமைப் பாடகியான Gwen Stefani தனது அடையாளமாகவே (trademark) பொட்டை ஏற்றுள்ளார்.

பொட்டு ஆரம்பத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பெண்களால் மட்டும் அணியப்பட்டது. இதனால் இந்நாடுகளுக்குச் செல்லாத பிறநாட்டவர் இது பற்றிச் சிறிதே அறிந்திருந்தனர். ஆனால் இந்திய இலங்கைப் பெண்கள் புலம் பெயர்ந்து வாழ ஆரம்பித்ததிலிருந்து பொட்டு பல நாட்டவர் இனத்தவர் அறியும் ஒன்றாகி விட்டது. பெண்களiன் ஆடை மாறிய போதும் பொட்டுக்களiன் வர்ணங்களும் வடிவங்களும் மாறிய போதும் பொட்டணிதல் என்பது பெருமளவில் மாறவில்லை. பிறநாடுகளiல் பிறந்து வளர்ந்த இளம் இந்திய இலங்கைப் பெண்கள்f தமது பண்பாட்டின் பல விஷயங்களை கைவிட்டுவிட்ட போதும் விசேட தினங்களiல் நவீன வடிவங்களiல் வந்துள்ள பொட்டை அணிவதை விடவில்லை. ஆயினும் பொட்டு வைத்தலுடன் இணைந்துள்ள பல விளக்கங்கள், காரணங்கள் என்பன முற்றாக மறக்கப்பட்டு வெறும் அழகுக்காகவும் அடையாளத்துக்காகவுமே பொட்டு இன்று அணியப்படுகிறது.

http://uyirppu.blogd...chive/o-32.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே ஒரு சேஃப்டிக்கு தான்... இதுக்கெல்லாமா போய் ஆராந்ச்சி????? :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் குங்குமப் பொட்டை கைவிட்டாலும். நீங்கள் விடமாட்டிங்க போல இருக்கே. பெண்கள் குங்குமப் பொட்டு வைப்பதை கைவிட்டு பல காலம் ஆச்சுது. இப்ப எல்லாம்.. திருமணமான பெண்களும் சரி ஆகாதவர்களும் சரி பொட்டு வைப்பதில்லை. அப்படி இல்ல கலாசாரம் காக்கிறம் என்ற பெண்களும்.. ஒரு சிவப்பு சிறிய ஸ்ரிக்கர் பொட்டை வைச்சிக்கினம். அவ்வளவே.

இந்தப் பாடல் வந்த காலத்தோடு ஒப்பிட்டு பாருங்க... பெண்கள் குங்குமத்தை விட்டு சில தசாப்தங்கள் கடந்திட்டு என்பது தெரிய வரும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி காலத்தில் பெண்கள் சிவந்த நிறத்தில் பொட்டு வைப்பது அவர்கள் பருவமைடைந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளார்கள் என்பதைக் குறிப்பதற்காக என்று முன்னர் எங்கோ படித்திருக்கின்றேன்!

செந்தூரப் பொட்டு என்பது பெண்கள் தூரமாக இருக்கும் போது இடும் சிவப்புப் பொட்டு எனவும் உண்டு. உண்மை/பொய் எனக்குத் தெரியாதுங்க சாமிகளே! :icon_mrgreen:

இட்ட குங்குமம் கலைந்து போக கலவி கொள்ளுதலும், கலந்த குங்குமத்தின் மிச்சம் ஆணின் உடம்பில் பட்டு இருப்பதும் அற்புதமான ஒரு அனுபவம் என்று இந்த நிழலி சொல்லுகின்றான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கழுத்தோரம் உன் குங்குமகோலங்களை......காலைநேரம் கண்ணாடியில் கண்ணுறும் போது நானே நாணத்தால்...கூனிக்குறுகி விட்டேனடி என் பரிமளமே

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றியில் இருந்த பொட்டை எடுத்து .................

உடம்பிலே ஓட்டியாச்சு ................. இனி என்ன திரியை நீட்டவேண்டியதுதான்.

பொட்டு வைக்கிறவை வந்து இன்னும் புள்ளி வைக்கவில்லைபோல?

  • கருத்துக்கள உறவுகள்

இட்ட குங்குமம் கலைந்து போக கலவி கொள்ளுதலும், கலந்த குங்குமத்தின் மிச்சம் ஆணின் உடம்பில் பட்டு இருப்பதும் அற்புதமான ஒரு அனுபவம் என்று இந்த நிழலி சொல்லுகின்றான்

குங்குமம் மட்டுமா ஒட்டிக் கொள்ளும். ஸ்ரிக்கர் பொட்டும்.. ஒட்டிக் கொள்ளும் தானே..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் கழுத்தோரம் உன் குங்குமகோலங்களை......காலைநேரம் கண்ணாடியில் கண்ணுறும் போது நானே நாணத்தால்...கூனிக்குறுகி விட்டேனடி என் பரிமளமே

:wub:

காலை நேரம்மட்டுந்தானா! :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்றியில் இருந்த பொட்டை எடுத்து .................

உடம்பிலே ஓட்டியாச்சு ................. இனி என்ன திரியை நீட்டவேண்டியதுதான்.

பொட்டு வைக்கிறவை வந்து இன்னும் புள்ளி வைக்கவில்லைபோல?

சும்மாசொல்லக்கூடாது உங்களுக்கும் வைச்சுத்தான் இருக்கினம் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.