Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்நாளை முன்னிட்டு ஆலயங்களில் மணி அடிக்கவும் தடை- ஆலயங்களில் இராணுவம் குவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்நாளை முன்னிட்டு ஆலயங்களில் மணி அடிக்கவும் தடை- ஆலயங்களில் இராணுவம் குவிப்பு!

November 23, 2011-8:44 am

army-in-kovil1.jpgதமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக யாழ். குடாநாட்டில் இந்து கிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்து கிறிஸ்தவ ஆலயங்களில் மாவீரர்நாளை ஒட்டி விடேச பூசை வழிபாடுகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கும் இராணுவத்தினர் முக்கியமான ஆலயங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்திற்கு வரும் மக்கள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவீரர் தினத்தன்று ஆலய மணி ஓசை எழுப்ப கூடாது என்றும் மாவீரர்களின் பெயர்களில் அர்ச்சனைகளை செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் ஆலய நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் கடந்தாண்டு மாவீரர் நாளன்று மணியோசை எழுப்பப்படும் நேரத்தில் சில ஆலயங்களில் இளைஞர்கள் மணிகளை ஒலிக்கச் செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு முற்கூட்டியே மாவீரர் வாரம் ஆரம்பித்தபோதே ஒவ்வொரு ஆலங்களிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயங்களின் மணிக்கூட்டு கோபுரங்களுக்கு அருகே தலா இரு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.வடமராட்சி பகுதிகளில் நேரடியாக விளையாட்டு கழகத்தினர் மற்றும் கிராமத்திலுள்ள இளைஞர்களை அழைத்த படையினரும் படைப்புலனாய்வாளர்களும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் எதையும் செய்யக்கூடாது எனஉத்தரவிட்டுள்ளனர். mahi-in-kovil.jpg

நன்றி - தினக்கதிர்

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறபோக்கிலை மாவீரர்தினத்தை சிங்களவன் தான் ஒழுங்காய் அனுஷ்டிப்பான் போலைகிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொச்சி அண்ணா இரண்டு படங்களும் அருமை.

என்னே பவ்யம்....என்னே பவ்யம்....

போறபோக்கிலை மாவீரர்தினத்தை சிங்களவன் தான் ஒழுங்காய் அனுஷ்டிப்பான் போலைகிடக்கு.

தாயகத்தில் மாவீரர்களை தெய்வங்களாக்கி விட்டனர் எதிரிகள்

நொச்சி அண்ணா இரண்டு படங்களும் அருமை.

என்னே பவ்யம்....என்னே பவ்யம்....

உண்மைதான்.

இந்த இரண்டுபடமும் எவ்வாறு தமிழனையும் சர்வதேசத்தையும் 'இளிச்சவாயனாக' மகிந்த கூட்டம் நினைத்து நடக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றது.

மாவீரர்நாளை முன்னிட்டு ஆலயங்களில் மணி அடிக்கவும் தடை- ஆலயங்களில் இராணுவம் குவிப்பு!

November 23, 2011-8:44 am

army-in-kovil1.jpgதமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக யாழ். குடாநாட்டில் இந்து கிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்து கிறிஸ்தவ ஆலயங்களில் மாவீரர்நாளை ஒட்டி விடேச பூசை வழிபாடுகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கும் இராணுவத்தினர் முக்கியமான ஆலயங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்திற்கு வரும் மக்கள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவீரர் தினத்தன்று ஆலய மணி ஓசை எழுப்ப கூடாது என்றும் மாவீரர்களின் பெயர்களில் அர்ச்சனைகளை செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் ஆலய நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் கடந்தாண்டு மாவீரர் நாளன்று மணியோசை எழுப்பப்படும் நேரத்தில் சில ஆலயங்களில் இளைஞர்கள் மணிகளை ஒலிக்கச் செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு முற்கூட்டியே மாவீரர் வாரம் ஆரம்பித்தபோதே ஒவ்வொரு ஆலங்களிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயங்களின் மணிக்கூட்டு கோபுரங்களுக்கு அருகே தலா இரு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.வடமராட்சி பகுதிகளில் நேரடியாக விளையாட்டு கழகத்தினர் மற்றும் கிராமத்திலுள்ள இளைஞர்களை அழைத்த படையினரும் படைப்புலனாய்வாளர்களும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் எதையும் செய்யக்கூடாது எனஉத்தரவிட்டுள்ளனர். mahi-in-kovil.jpg

நன்றி - தினக்கதிர்

மெண்டல் தினக்கதிர்!

ஏற்கனவே , ஊரெல்லாம் ஆர்மிதானே அங்கே..

அப்புறம் எதுக்கு ஓவ்வொரு ஆலயத்துக்கும் , விசேடபாதுகாப்பு?

ஆலயத்துக்கு வரும் மக்கள் , ஆயுததோட வந்தா சிங்களவன் போட்டு தள்ளலாம்,, அங்கே வாறவங்க பூஜை தட்டோட வரும்போது , ...

என்னத்தடா அவன் கண்காணிக்க போறான்?

ஐய்ரு ,,என்ன மந்திரம் சொல்லபோறார் எங்கிறத வைச்சா?

அப்புறம் ,,,ஒவ்வொரு ஆலயத்திலும் இராணுவம்,,,

அதுக்கப்புறம்,

மணிகூண்டு கோபுரத்துக்கு அடியில எக்ஸ்ராவா,, இரண்டு சிங்களவனா?

எங்களுக்கு உள்ள பேரழிவு & பெரிய சாபக்கேடே,,,

வெறும் கிளுகிளுப்பு + தங்களோட இணையதளங்களுக்கு ,

பிரபலம் தேடும் பொறுக்கிகளை, நாங்க உணராம விட்டதுதான்!

வெறுமையான இந்த உணர்ச்சிகளுக்கு , எங்களுக்கு நாங்களே விசிலடிக்க,,, சத்தம்போடாமலே, எங்க வீக்னஸ சிங்களவன் தனக்கு சாதகமாக்கிட்டான்...

எப்டீன்னா...

அவன் கோடிக்கணக்கா செலவளிச்சு பெறவேண்டிய ...., எங்க நேச்சரை...& டேட்டாவை..

நம்மாளுங்க தவளை வாயைவைத்தே ,,, செலவு குறைந்தவழியில் ... சேகரித்து ....

எங்களை கொண்டே ஆப்பு சீவீ..... எமக்கே இறுக்கிறான்!!

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கிலை மாவீரர்தினத்தை சிங்களவன் தான் ஒழுங்காய் அனுஷ்டிப்பான் போலைகிடக்கு.

:D
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் பெயரைச் சொல்லிப் 'பிரித்' ஓதாமல் விட்டாலே காணும்! :icon_mrgreen:

இணைப்புக்கு நன்றிகள், நொச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

karainagar-temple.jpg

காரைநகரில் உள்ள ஆலயங்களில் மணியோசை எழுப்பவும், தீபாராதனை செய்வதற்கும் சிறிலங்கா கடற்படையினர் தடைவிதித்துள்ளனர்.

தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவாக கடைப்பிடிக்கப்படும் மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளதை அடுத்தே சிறிலங்கா கடற்படையினர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

காரைநகரில் அடுத்து வரும் ஒரு வாரத்துக்கு கோயில்களில் மணியோசை எழுப்பக் கூடாது என்றும் தீபம் காட்டக் கூடாது என்றும் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும் சிறிலங்கா கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயம், பண்டத்தரிப்பான்குளம் சிறி சுந்தரேசப், பெருமாள் கோயில் ஆகியவற்றின் அர்ச்சகர்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் நேரில் சென்று அறிவித்துள்ளனர்.

இதனால் கடந்த மூன்று நாட்களாக இந்த ஆலயங்களின் நாளாந்த பூசைகளின் போது, மணியோசை எழுப்பப்படுவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20111124105092

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு பெயர் தான் சனநாயகம்!

இதுக்குள்ள தேர்தல் வைக்கினமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.