Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுருத்த ரத்வத்த கண்டி வைத்தியசாலையில் மரணம்

Featured Replies

சிறிலங்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் தமிழின படுகொலையாளியுமான அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார். .

.

அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி தேவாலயப் படுகொலை.. வடமராட்சி பள்ளிப் படுகொலை.. செம்மணி கூட்டுப் படுகொலை.. இப்படிப் பல தமிழினப் படுகொலைகளின் பிரதான சூத்திரதாரிகளில்.. இவரும் ஒருவர்..

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

எல்லா சிங்கள கொலைவெறியர்களும் தமிழ் மக்களைக்கொன்று குவித்துவிட்டு நல்லா அனுபவித்துவிடு கிழப்பருவத்திலதான் சாகிறாங்கள். மஹிந்த, கோத்தா குடும்பங்களும் இப்படித்தான் போகுமா அல்லது இடையில போகுமா. அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது வேண்டாம் தெய்வம் இன்றே கொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கொன்றால் அதைப் பயங்கரவாதம் என்றிடுவாங்கள். இயற்கை கொன்றால்.. பேசாம அடங்கிடுவாங்கள்..! எங்களை அவங்கள் கொன்றாலும்.. அது பயங்கரவாதமில்ல. நாங்கள் எதுவும் செய்தால் தான் அது பயங்கரவாதமா எல்லாருக்கும் தெரியும்..! எல்லாப் பயங்கரவாதமும் அழியட்டும்.. இயற்கையின் முன். :rolleyes::(:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் தின நேரமா பார்த்து தான் கிழடு மண்டைய போட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயங்கரவாதியின் அழிவு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டு மக்களை குடிபெயர்த்த முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த மரணம்

Anuruddha_11-01-26gif_CI.gif

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் நெருங்கிய உறவினரும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்தே தனது 73 வது வயதில் இன்று காலமானார்.

வீட்டில் தடுக்கி விழுந்ததில் ஏற்பட்ட சுகவீனமாக காரணமாக அவர், கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் இன்று மதியம் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வீட்;டில் விழுந்த ரத்வத்தேவின் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டிருந்தாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அனுருத்த ரத்வத்தே நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே மற்றும் கண்டி மேயர் மகேந்திர ரத்வத்தே ஆகியோரின் தந்தையாவார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருந்த ரத்வத்தே, யாழ்ப்பாணத்தை புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதில் வெற்றிப் பெற்றார் என்பதும் குறிப்பிடதக்கது.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த 73 ஆவது வயதில் மரணமடைந்தார்.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த 73 ஆவது வயதில் மரணமடைந்தார். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். 1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த, 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70550/language/ta-IN/article.aspx

பல தமிழரின் கண்ணீர் .............. உனக்கு நரகம்தான்.

ஒரு சிங்களப் பயங்கரவாதி இவ்வளவு காலம் வாழ்ந்ததே தர்மத்தின் வீழ்ச்சியைத் தான் குறிக்கிறது.

ஒரு சிங்களப் பயங்கரவாதி இவ்வளவு காலம் வாழ்ந்ததே தர்மத்தின் வீழ்ச்சியைத் தான் குறிக்கிறது.

இப்டில்லாம் ஓவரா உணர்ச்சிவசபடபடாது! உடம்புக்கு ஆகாது இல்லியா?

எத்தனை அரசியல் மாற்றம் வந்தாலும் , ..

தாங்கள் செய்த தவறுகளுக்காக ,,,

தங்கள் பதவி பட்டம், எகத்தாளம் அனைத்தையும், சக சிங்களவனால இழந்தாலும்,

எந்த சிங்களவனும் ,, தமிழனுக்கு தாம் அநியாயம் செய்தோம்னு ஒத்துக்கொள்வதோ ...........இல்ல... தமிழன் பக்கம் சேர்ந்து சிங்களவனுக்கு ஆப்பு வைக்கிறதோ இல்லை!

மாறா நாங்கதான், எத்தனை பெரிய உணர்ச்சி கந்தசாமிங்களா இருந்தாலும், தனக்கு ஒரு சுகம் வேணும்னா,, உடனே சிங்களவன் பக்கம் ஓடிகிட்டே இருக்கோம்! அவனோட சேர்ந்து ஒட்டு மொத்த இனத்துக்குமே ஆப்படிக்கிறோம்!

அவனைவிட நாங்கதான் நிஜமான பயங்கரவாதிகள்!! :)

இப்டில்லாம் ஓவரா உணர்ச்சிவசபடபடாது! உடம்புக்கு ஆகாது இல்லியா?

அவனைவிட நாங்கதான் நிஜமான பயங்கரவாதிகள்!! :)

அறிவிலி! நீங்கள் உங்களை அப்பிடிச் சொன்னா தப்பில்லை!!!

உங்களைபோல்! டக்ளசைப் போல் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதிகளாக இருப்பதில்லை!!!

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சிறில் மத்தியூ போன்றவர்களும் இயற்கை மரணமே அடைந்தார்கள். கடவுள் நின்றும் கொல்லாது படுத்தும் கொல்லாது. தமிழர்களைத்தான் கொல்லும். சிங்கள இந்திய இனவாதிகளுக்கு சார்பாகவே நடந்து கொள்ளும்.

முள்ளிவாய்க்காலில் நாலாபுறமாக பாய்ந்து வரும் எறிகணைகளுக்கு மத்தியில் உயிரைக் காப்பாற்ற நிச்சயம் அங்குள்ள மக்கள் அவர்கள் நம்புகிற( கடவுள்களான????? )சிவனையோ, ஜேசுவையோ, சாய்பாபாவையோ, முருகனையோ கும்பிட்டிருப்பார்கள். அப்பொழுது வராத கடவுளா இனி வரப்போகிறார். கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் கொடுக்கிற காசுகளை வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு கொடுத்தீர்கள் என்றால் கொஞ்சம் புண்ணியமாகப் போகும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சிறில் மத்தியூ போன்றவர்களும் இயற்கை மரணமே அடைந்தார்கள். கடவுள் நின்றும் கொல்லாது படுத்தும் கொல்லாது. தமிழர்களைத்தான் கொல்லும். சிங்கள இந்திய இனவாதிகளுக்கு சார்பாகவே நடந்து கொள்ளும்.

முள்ளிவாய்க்காலில் நாலாபுறமாக பாய்ந்து வரும் எறிகணைகளுக்கு மத்தியில் உயிரைக் காப்பாற்ற நிச்சயம் அங்குள்ள மக்கள் அவர்கள் நம்புகிற( கடவுள்களான????? )சிவனையோ, ஜேசுவையோ, சாய்பாபாவையோ, முருகனையோ கும்பிட்டிருப்பார்கள். அப்பொழுது வராத கடவுளா இனி வரப்போகிறார். கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் கொடுக்கிற காசுகளை வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு கொடுத்தீர்கள் என்றால் கொஞ்சம் புண்ணியமாகப் போகும்

அன்று அப்படி இருந்த சரத் பொன்சேக்கா இன்று இப்படி இருக்கிறார்.........

சந்திரிக்கா தான் செய்த அனியாயைத்துக்கு ஒரு கண்னை இழந்து ஒரு அசிங்கமான முகத்தோடை திரியுது ..........

இந்த நாயும் ஏதோ படுக்கேல படுத்து இருந்து போயிட்டுது.........

லக்ஸ்மன் கதிர்காமர் தன்ர இனத்துக்கு செய்த துரோகத்துக்கு இப்ப அவர் இந்த உலகில் இல்லை....‌

மகிந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்ச மாய் எல்லாத்தையும் இழந்து காடாபின்ட நிலைக்கு வருவினம் ........... அது ஒரு நாள் நடக்கும்....... அதை நீங்களும் பார்க்க தான் போறீங்கள் நானும் அதை பார்க்கத் தான் போறேன்.............

நினைக்க வேண்டாம் காற்று சிங்களவன் பக்கம் தான் அடிக்குது என்று......... தமிழன்ட பக்கமும் அடிக்கும் ஒரு நாள் , அடிச்சா சூறாவளியாத் தான் இருக்கும் ,

கடவுள் இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, சரியாகச் சொன்னீர்கள்.

தெய்வம் நின்றறுக்கும் என்றெல்லாம் சொன்னார்கள், அறுந்துபோனது என்னவோ நாங்கள்தான்.

2009 இல் வன்னியில் நரவேட்டையாடப்பட்டபோது வராத தெய்வங்களையா நாம் இன்னும், நின்றறுக்கும், வந்தறுக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்?? அவைகள் வரவே மாட்டா!!!!! ஏனென்றால் அப்படியொன்று இருந்தால்த்தானே??

இருக்கும் தெய்வங்களெல்லாம் சிங்களவனையும் இந்தியனையுமல்லவா ஆதரிக்கின்றன??

புலத்தில் கோயில்களுக்கு குசினி கட்ட, சாப்பாட்டுக் கூடம் கட்ட என்று 3, 4 மில்லியன் டொலரில சனம் செலவழிக்குது, ஆனால் ஊருக்கு அனுப்பத்தான் காசில்லை (என்னையும் சேர்த்துத்தான்). எங்கட சனத்தைப் போல கடவுள்களுக்கும் காசு மெத்திப் போச்சுது. அதுதான் பணக்காரரோட நின்று கொள்ளீனம் போல கிடக்கு, கஷ்ட்டப்பட்ட வன்னிச்சனத்தை எட்டிக் கூடப் பாக்க எங்கட பணக்காரக் கடவுள்களுக்கு நேரமில்லையெண்டு நெய்க்கிறன், என்ன நான் சொல்லுறது சரிதானே??!!

  • கருத்துக்கள உறவுகள்
:D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.