Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கிரிக்கட் தொடரின் போது சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???

அல்லது புலம் பெயர் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது நல்லதா!!!!!!!!!!!

உங்கள் கருத்தை ஆவலாக காத்திருக்கிறேண்??

தலைப்பில் இருந்த எழுத்து பிழையை திருத்தியுள்ளேன் - மதன்

  • Replies 94
  • Views 14.2k
  • Created
  • Last Reply

ரொம்ப ஆளமா எங்க மனசில சிறிலங்காவுடன் உள்ள உறவு பச்சையா இன்னும் இருக்கிறது. அது போகப்போக மறைஞ்சு போயிடும். எங்களுக்கென்று ஒரு கிரிக்கெட் அணி இருந்தால் நிச்சயமா எவரும் அவர்கள் கொடியைத்தூக்க மாட்டார்கள்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் கிரிக்கட் தொடரின் போது சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???

அல்லது புலம் பெயர் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது நல்லதா!!!!!!!!!!!

உங்கள் கருத்தை ஆவலாக காத்திருக்கிறேண்??

தலைப்பில் இருந்த எழுத்து பிழையை திருத்தியுள்ளேன் - மதன்

உங்களின் முதலாவது கேள்வி விளங்குகிறது-!

-பொதுவாய்தான் சொல்கிறேன் -

விளையாட்டுக்கு பேதம் இல்லை - யாரும் ரசிக்கலாம்-!

ஆனால் பகை நாட்டின்(சிறிலங்கா) கொடியை ஏந்திப்பிடிப்பவர்கள்- கொஞ்சம் அந்த கொடியை நிமிர்ந்து பார்க்க சொல்லுங்கள்- அதிலுள்ள சிங்கத்தின் கையிலுள்ள வாள்- எங்களின் கழுத்தைதான் குறிவைக்கிறது என்று உணர சொல்லுங்கள்-!

இரண்டாவது கேள்வி - புலம்பெயர்ந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்பதென்று வருமா-?

இல்லை- தாயகத்துக்கு விசுவாசமாய் இருப்பதென்று வருமா?

என்ன அர்த்ததில் கருத்தை எதிர்பார்க்கிறீர்களென்பதில

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயகத்திற்கு (தமீழிழம்) இதில் விசுவாசமாக இருப்பதில் எவ்வித கருத்து முரண்பாடும் இல்லை.

நான் கேட்டிருப்பதோ நாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டிற்கு(அவுஸ்திரேலியா).

விளையாட்டை விளையாட்டா ரசிக்க...கொடி தூக்க வேண்டிய அவசியமில்லை..! சிங்கமும் தேவையில்லை..அசோகமும் தேவையில்லை..பிறையும் தேவையில்லை..! ரசிக்கப் போவது வீரர்களின் ஆட்டத்திறமைகளை மட்டுமே..! அது எவரிடம் எந்த அணியில் இருந்து வந்தாலும் ரசிக்கலாம்..! :P :idea:

இது அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கிறது அதில் நான் எப்பிடி கருத்து கூறுவது பொதுவாகக் கேட்டிருந்தால் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் நான் அவர்களுக்குத்தான் சப்போட் பண்ணுவேன் ஒருநாளும் அவுஸ்ரேலியாவின் கொடியை பிடிக்கமாட்டேன்

அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ இந்தியாக்கு எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கனடவில் கூடஓரு சிலர் எந்த நிகழ்வுகளுக்குப்போனாலும் சிறீலங்கா பெயர் பொறித்த சட்டைதாங்களும் போட்டு தமது சிறுகுழந்தைகளுக்கும் போட்டிருப்பர்கள். ஏன் இவர்கள் இப்படிச்செய்கின்ரனர் எனத்தெரயவில்லை. இப்போதுகோட சிலர் தாங்கள் யார் என்று புரியவில்லையா? புரிங்துகொள்ள விரும்பவில்லையா? தயவுசெய்து மாறுங்கள். தாயகத்தை வெறுப்பது தாயை வெறுப்பதுக்குச் சமம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னிங்க நித்தியா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.இங்கு கனடவில் கூடஓரு சிலர் எந்த நிகழ்வுகளுக்குப்போனாலும் சிறீலங்கா பெயர் பொறித்த சட்டைதாங்களும் போட்டு தமது சிறுகுழந்தைகளுக்கும் போட்டிருப்பர்கள். ஏன் இவர்கள் இப்படிச்செய்கின்ரனர் எனத்தெரயவில்லை. இப்போதுகோட சிலர் தாங்கள் யார் என்று புரியவில்லையா? புரிங்துகொள்ள விரும்பவில்லையா? தயவுசெய்து மாறுங்கள். தாயகத்தை வெறுப்பது தாயை வெறுப்பதுக்குச் சமம்...

இதே கோலம் தான் சிட்னியிலும் குலொத்.

அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ இந்தியாக்கு எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்

உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை :lol::lol:

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது.

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் பலர் இலங்கை அணி வெல்லவேண்டும் என நினைக்கிறார்கள். சிலர் இந்தியா வெல்லவேண்டும் எனவும், பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் இங்கிலாந்து அணிக்கும், ஒஸ்ரேலியாவில் வாழும் சிலர் ஒஸ்ரேலியாவுக்கும் ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் சிங்கக்கொடி பிடித்துக்கொண்டு, இலங்கை அணி பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து பலர் சிட்னியில் கிறிக்கேட் பார்க்கப்போயிருந்தார்கள். இவர்களில் பலர் ஈழத்தமிழர்கள். அதில் என்னவேடிக்கை என்றால் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக மேடைகளில் கலந்து கொள்பவர்களில் சிலரும் சிங்கக்கொடி பொறுத்திய உடை அணிந்திருந்தார்கள். விளையாட்டில் அரசியல் பார்க்கக்கூடாது என்று பலர் சொல்வதுண்டு. விளையாட்டினைப்பார்க்க விரும்பினால் சாதாரண உடையில் சென்றிருக்கலாமே?

அண்மையில் ஒஸ்ரேலியா தினத்தில்(ஜனவரி 26) சிட்னிவாழ் தமிழர்கள் நடத்திய தமிழர் திருனாலுக்கு சிறுவர்கள் சிலர் இலங்கை அணி பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து போட்டியில் கலந்து கொண்டார்கள். அந்த மைதானத்தில் அன்னியசதியினால் இறந்த கிட்டுவினது படம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. இச்சிறுவர்களின் பெற்றோர்களில் சிலர் ஈழவிடுதலைக்கு ஆதரவான முக்கிய தமிழ் அமைப்புக்களினைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் இது பற்றி சிந்திப்பதில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை :lol::lol:

தெரியும் தானே உங்களிற்க எவருடைய ஆதரவும் தேவையில்லை என்று.........

:lol::lol::D:D:D:D

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !! :lol::lol:

சிரிப்பு வேறயா?

தமிழ்நாடு எங்களுக்கு வேற இல்ல- அதுவும் எங்கட தாய் நிலம் -

ஆனா-தமிழ்நாட்டில் ஒரு சில அரசியல் கோமாளிகள் பேச்சை வைத்து - இந்த வரிகளை - உங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க -நண்பா-!

எங்கள் தேச சட்டத்தில் துரோகிகளுக்கு - மன்னிப்பு இல்ல-ஒன்லி மரண தண்டனைதான்! 8)

தயகத்திற்கு (தமீழிழம்) இதில் விசுவாசமாக இருப்பதில் எவ்வித கருத்து முரண்பாடும் இல்லை.

நான் கேட்டிருப்பதோ நாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டிற்கு(அவுஸ்திரேலியா).

சகோதரா - புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் - உங்கள் விசுவாசத்தை அவர்கள் என்றுமே- கணக்கில் கொள்வதில்லை- !

நீங்கள் விபரீதமான ஆளாய் இருக்கிறீர்களா- இல்லையா- என்பதைதான் -கண்ணுக்குள் எண்ணையை விட்டு - கவனித்துக்கொண்டு இருப்பார்கள்-! 8)

சிரிப்பு வேறயா?

தமிழ்நாடு எங்களுக்கு வேற இல்ல- அதுவும் எங்கட தாய் நிலம் -

ஆனா-தமிழ்நாட்டில் ஒரு சில அரசியல் கோமாளிகள் பேச்சை வைத்து - இந்த வரிகளை - உங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க -நண்பா-!

எங்கள் தேச சட்டத்தில் துரோகிகளுக்கு - மன்னிப்பு இல்ல-ஒன்லி மரண தண்டனைதான்!

நண்பர் வாமனாரே!! கிரிக்கேட் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஆதரவு தர மாட்டேன் என்று சொன்னார்கள். நான் உங்கள் ஆதவர்வை நாங்கள் யாரும் கேட்கவில்லையே என்று சொன்னேன். ஆதர்வு கேட்காமலயே ஆதர்வு தர மாட்டேன் என்று சொன்னது சற்று நகைப்பை ஏற்படுத்தியது.

உங்களுக்கு தமிழ் நாடு தாய நிலமாக இருக்கலாம்,ஆனால் அது இந்தியாவின் ஒரு பகுதி. நீங்கள் சொன்னது எப்படி இருக்கிறது என்றால் எனக்கு உடலில் கை மட்டும்தான் பிடிக்கும் , உயிர் , கால், கண் இவை எல்லாம் வேண்டாம் என்பது போல . தமிழ் நாட்டில் பிறந்து வள்ர்ந்த எனக்கு அங்கு கோமாளிகள் யார் என்பதை உம்ம விட நன்றாகவே தெரியும். உம் சட்டம் எல்லாம் உங்களிடையே வைத்து கொள்ளவும். அது எனக்கு தேவை இல்லாதது. அறிந்து கொள்ளவும் ஆசை படவில்லை. :lol::lol::lol:

மேற்கோள்:

தமிழ் நாட்டில் பிறந்து வள்ர்ந்த எனக்கு அங்கு கோமாளிகள் யார் என்பதை உம்ம விட நன்றாகவே தெரியும். உம் சட்டம் எல்லாம் உங்களிடையே வைத்து கொள்ளவும். அது எனக்கு தேவை இல்லாதது.

ஓ அந்த கோமாளிகளில நீங்களும் ஒன்றா?

அதை பற்றி அறிந்து கொள்ள நிறைய தெரியவேணுமா?

ஏன் உங்கள பார்த்தே அறிந்து கொள்ள முடியவில்லையா-என்று சொல்லுறீங்களா? அதுவும் சரிதான் -!

அட போங்க நீங்க குறும்பு-! 8)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி வர்ணா.இதே கருத்தை தான் அவுஸ்திரேலியாவில் பல ஆட்கள் கொண்டுள்ளனர்

தாய் நிலத்தில் எமது நிலையை நாம் விமானம் ஏரியவுடன் ஏன் மறந்து விடுகிறோம்.எப்படி எமது அன்றாட வாழ்வு பாதிக்கபட்டது என்று சிந்தித்து பாருங்கள்,உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

சைக்கிளில் டபிள் போட்டு கொண்டு,திருவிழாவுக்கு போய்,சனசமூகநிலையத்தில்(நூலகம

இந்தியாவின் பகுதி இல்லனு யார் சொன்னாங்கப்போ- ?

ஆனாலும் - நடிகைக்கு - மஹாகமம் - நடத்தி- அதை பார்க்க ஓடிப்போய் - நெருக்குண்டு செத்துப்போயும் - பள்ளி மாணவிகள பஸ்ஸோட சேர்த்து கொளுத்தினா போலயும் - புரட்சிதலைவிதான் எல்லாம் என்னு - நாக்கை அறுத்து - அவ தேர்தல வெல்லணும் என்னு கோவில் உண்டியல போடுறவங்கள பத்தி பேசல - ராஜா-

எங்களை உயிரா நினச்ச-நினைக்கிற எம்-ஜி-ஆர் - வை-கோ -

போல மானமுள்ள மனிதரை நினச்சு சொன்னேனுங்க நானு-

சரி சம்பந்தம் இல்லாத விசயத்த உங்க கூட பேசி என்னாக போகுது? அதுதான் - மானம் பத்தி 8)

புத்தன் உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லணும் என்பதற்காக அதை நான் சொல்லல- உண்மையான விடயம் அதுதான் என்று பொதுவாய் நாங்கள் அறிந்ததை சுட்டி காட்டினேன்! 8)

ஆனாலும் - நடிகைக்கு - மஹாகமம் - நடத்தி- அதை பார்க்க ஓடிப்போய் - நெருக்குண்டு செத்துப்போயும் - பள்ளி மாணவிகள பஸ்ஸோட சேர்த்து கொளுத்தினா போலயும் - புரட்சிதலைவிதான் எல்லாம் என்னு - நாக்கை அறுத்து - அவ தேர்தல வெல்லணும் என்னு கோவில் உண்டியல போடுறவங்கள பத்தி பேசல - ராஜா-

எங்களை உயிரா நினச்ச-நினைக்கிற எம்-ஜி-ஆர் - வை-கோ -

போல மானமுள்ள மனிதரை நினச்சு சொன்னேனுங்க நானு-

சரி சம்பந்தம் இல்லாத விசயத்த உங்க கூட பேசி என்னாக போகுது? அதுதான் - மானம் பத்தி

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் , அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான். நான் இதே மாதிரி உங்க ஊர் சமாசாரம் ஏதாவது எழுதினா கத்திரி போட்றுவாங்க !! எங்களுக்கு மானம் இருக்கா அல்லது ரோசம் இருக்காங்கஙிற ஆராய்ச்சி உங்களுக்கு தேவை இல்ல்லாதது !! உங்களுக்கு மானம் ரோசம் இருந்தா உங்க ஊர்லயே அதான் ஈழதிலியே இருந்து நீங்களும் போராடியிருப்பீங்க !! முடியாம தானே ஏதோ ஒரு மூலைக்கு போய் இப்படி இந்த களத்தில் எழுதி பொழுது போக்கிரீங்க !! எங்க நாட்டை எப்படி சரி படுத்தனும்னு எங்களுக்கு தெரியும். கொன்சம் இந்திய ஆங்கில நாளிதழ்கள் பாருங்க!! பத்திரிக்கை சுதந்திரம் எப்படி ஓங்கி ஒலித்து ஊழல் அரசியல்வாதிகளை கையும் களவும்மாக பிடிக்கிறதை பாருங்க !! சும்மா உங்களை ஆதரிக்காதவங்களை துராகின்னும் கோமாளின்னும் சொல்லி உங்க மதிப்பை கெடுத்து கொள்ள வேண்டாம்.நீங்க என்ன தான் தாய் மண் என்று சொன்னாலும் விசா இல்லாமல் உள்ளே வர முடியாது. அதுதான் உண்மை.கற்பனை கதைகளை விட்டு நிஜத்துக்கு வாங்க !! இதுக்கு மேல இந்த பகுதியில் தலைப்பு சம்பந்தம் இல்லாமல் எழுத எனக்கு விருப்பம் இல்லை.

எழுதினாலும்... தலைப்பை விட்டு வெளியேற்றப் படுவீர்கள் ராஜாதி ராஜா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமஸ்தே ஜீ புரிகிறதா???புரியும் என்று நினைக்கிறேன்.........

இந்தியன் என்று பெயர் சூட்டியது ஒரு அந்நியன்(வெள்ளைகாரன்) அதை கூடி உங்களாள் புரிந்துகொள்ளமுடியவில்லை ,அதை புரிந்து கொள்ள முயற்சியும் எடுக்கவில்லை.

உங்களது அரச சின்னத்தில் இருக்கும் நான்கு சிங்க முகமும் (புத்த பகவானின் நான்கு கொள்கைகளை குறிக்கிறது)இப்ப உங்க நாட்டில் புத்த மதம் இருக்கிறதா???அதை வழிபடும் மக்களாவது ஏதாவது மாநிலத்தில் பெருபாண்மையாக இருக்கிறார்களா??

உங்களுடைய தேசியத்தை நீங்கள் அடையாளபடுத்தின பிறகு எங்களூடைய தேசியத்தை பற்றி எழுதுங்கோ........

இன்னும் அகிம்சையாக இருப்பதனால் தான் தண்ணி பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை...முதலில் அர்ப்ப தண்ணி பிரச்சினக்கு தீர்வு கண்ட பின்பு எங்கள் தேசியத்தை பற்றி கதையுங்கோ???

சனத்தொகையில முன்னுக்கு வாரது முக்கியமில்லை அறிவிலும் முன்னேற பாருங்கோ!!!!

அதுவரை கப்சிப் கப்சிப் கப்சிப்..

வாழ்க விடுதலை சிறுத்தை அமைப்பு.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.