Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை ஒரு இனவாதியாகக் காட்ட முயல்கின்றன தமிழ் ஊடகங்கள்..! நான் அப்படிப்பட்டவன் அல்லன்: தமிழ் மொழிமீது வீரவன்சவும் நாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vimal-weeravansa.jpg

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள மக்களின் இதயங்கள் உடைந்து போயுள்ளன. அவர்களின் மனங்களை முழுமையாக எம்மால் வென்றெடுக்க முடியவில்லை. அனைவரும் ஒன்றுபட்டே அதனைச் செய்யமுடியும். தமிழ் ஊடகங்களில் என்னை இனவாதியாகவே காட்ட முனைகின்றனர். ஆனால், நான் அப்படிப்பட்டவன் அல்லன். இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றுக்காலை நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ் மொழியால் உரையாற்ற முடியாததையிட்டு நான் கவலையடைகின்றேன். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியை கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வேலைப்பளு காரணமாக அதில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

அந்தப் பயிற்சிகளில் கலந்து கொண்டிருந்ததால் சிறிதளவு தமிழிலாவது நான் இந்த வைபவத்தில் உரையாற்றியிருப்பேன். மாணவ சமுதாயத்தின் கைகளிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது. சர்வதேச ரீதியாக நாட்டுக்கு புகழையும் கீர்த்தியையும் கொண்டுவர வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நாட்டுக்கு சமாதானம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் தற்போது துரிதமான வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. அந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் இதயங்கள் உடைந்து போயுள்ளன.

அவற்றை முழுமையாக வென்றெடுக்க எம்மால் முடியாது போனது. அனைவரும் ஒன்றுபட்டே அதனை செய்ய முடியும். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுவதன் மூலமே இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

பிரிந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தால் எம்மால் முன்னேற்றத்தை அடைய முடியாது. சில வெளிநாட்டு சக்திகள் எமக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி அதன் மூலம் தமது சக்தியை நிலைநாட்ட முயலுகின்றன.

அத்தகைய சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை தோற்கடிக்கக்கூடிய சக்தி மாணவசமுதாயத்தினரிடையே உள்ளது. அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணலாம்.

சமாதானம் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எம்மிடம் காணப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான காலம் தற்போது எமக்கு வந்துள்ளது. தமிழ் ஊடகங்களில் என்னை இனவாதியாகவே காட்ட முனைகின்றனர். நான் அப்படிப்பட்டவன் அல்லன்.

நானும் மனித இனத்தைச் சேர்ந்தவன். இன, மத, பேதத்தை மறந்து சேவை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பவன். இந்து பௌத்த சமயத்துக்கும் கலாசாரத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. எனவே, நாங்கள் பிரிந்து நிற்காமல் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

இந்த நாள் எனது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக என்னை அழைத்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் பாடசாலைக்கும் என்னாலான உதவிகளை செய்து கொடுப்பேன் என்றார் அவர்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அட, உண்மையைச் சொன்னால், உடனே கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு வேலைப்பழு தமிழைக் கற்க முடியவில்லை.

தமிழனுக்கு மட்டும் வேலையில்லாப்பழு

அதனால் தமிழனுக்கு மட்டும் கட்டாயச் சிங்கள மொழி

இதெல்லாம் ஒரு கூத்து

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் போது வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிகள் தமிழருக்கு போக விடாமல் வழக்கு போட்டு அப்பணத்தை தமிழருக்கு கிடைக்காமல் செய்த பெருமை வீரவன்சவையே சாரும். வீரவன்ச நீங்கள் இனவாதி மட்டுமல்ல மனிதாபிமானம் அற்ற ஒரு சென்மம்.உங்களின் முதலைக்கண்ணீர் வடிப்பு தமிழருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஹெகலிய தமிழ் படிக்க ஆசையாம். இவருக்கு நேரமில்லையாம்.என்னமா நடிச்சு தள்ளுறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வீரர்கள் எதாவது போதை பொருட்களை பாவித்திருக்கிரார்களா என பரிசோதிப்பதுபோல். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கு முன்பு அரசியல்வாதிகளையும் அப்படி சோதனை செய்யும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

நாட்டு மக்களுக்கு இரத்த அழுத்தம் கொண்டுவரும் இந்த கொடிய நோய்களை கட்டுபடுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மொழியால் உரையாற்ற முடியாததையிட்டு நான் கவலையடைகின்றேன். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியை கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வேலைப்பளு காரணமாக அதில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

அந்தப் பயிற்சிகளில் கலந்து கொண்டிருந்ததால் சிறிதளவு தமிழிலாவது நான் இந்த வைபவத்தில் உரையாற்றியிருப்பேன்.

விமல் வீரவன்ஸ

இதை வாசிக்க....வாசிக்க......என்ரை கண்ணிலையிருந்து ஒரே ஆனந்தக்கண்ணீராய் வழியுது.

இவங்கள் எல்லோருக்கும் ஒருகுளுவோ அல்லது ஒருவரோதான் பேச்சு எழுதுவது. மகிந்தா ரபர் ஸ்டாம் போட்ட பிறகு வாசிக்கிறாங்கள்.

அமெரிக்கா பொன்சேக்காவை விடுவிக்க முயற்சிகளை ஆரம்பித்திருந்தது. . அரசு "பொன்சேக்கவை விடுவிக்க முடியும். ஆனால் அமெரிக்கா அதில் பங்கு பற்றவில்லை" என்று அறிக்கை விடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் போலிருக்கு. அமெரிக்க அதிகாரி முதலில் தான் பொன்சேக்காவுக்காக கதைத்ததாக தானே கூறி விட்டு இப்போ தனது சந்திப்பில் பேசப் பட்டவை வேறு விடயங்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறார். பொன்சேக்க மாசியில் அமெரிக்கா ஐ.நா தொடருக்கு போர்குற்றங்களை முன்னெடுக்க ஆயதங்கள் செய்யாதபடி கடைசி நேரம் வரை காவலில் இருத்தி பின்னர் விடுவிக்க படுவர்.

அதற்கு பதிலாக சவேந்திர சில்வாவுக்கு முடிச்சு இறுகிக் கொண்டு வருகிறது போலிருக்கு. போன ஸ்ரீ லங்காவின் கொலைக்கள திரையீட்டின் போது ரவுடி தனத்தில் நியு யோர்க் தெருக்களை அதிரவைத்த சவேந்த்திரா இந்த முறை முகத்தை கூட காட்டவில்லை. சவேந்திராவை அமெரிக்காவின் விருப்பத்திற்கு அவர்களிடம் கொடுத்து இனிமேல் போர்குற்றத்தை பற்றி அமெரிக்கா கதை திரும்ப எடுக்காமல் பண்ண முயலலாம்.

மகிந்தா, அமெரிக்க ராசாங்க அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போவதில்லை என்று வேறு கூறியிருக்கிறார். இப்படி மிக நுணுக்கமாக அமெரிக்க உள்விவகாரங்களை ஆராய்ந்து வைத்திருப்பது அமெரிக்காவை கையாள தமது மிகத்திறமையான ஆட்களைத்தான் பாவித்து இந்தியாமாதிரியே எளிதில் ஒன்றும் துள்ளி குதிக்க விடாமல் கட்டுப்படுத்திக்கொண்டு வருகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. அந்த அதிகாரி தூதுவர் இல்லாமல் போய் மந்திரியை சந்தித்த பின்னர், அரசின் அமெரிக்க அணுகுமுறையில் வேறுபாடு தெரிகிறது. பழைய முறைகளுக்கு அமெரிக்கா பழக்கபட்டு விட்டதாக உணருகிறார்கள் போலிருக்கு. பொன்சேக்கா, அரசை போர் குற்றவாளிகள் என்று கூறியதற்கெதிராக வழக்கு தொடர்ந்து வென்ற பின்னர் தம்மை குற்றவாளிகளாக ஒத்து கொள்ள்வது போல் பொன்சேக்கவை சுதந்திர தினத்தன்று விடுதலை செய்வதும், போர்குற்றவாளி சவேந்திராவை அமெரிக்காவில் தன்னந்தனியாக விட்டு விட்டதும், இந்த மந்திரிகளின் ஒரேமாதிரியான பேச்சும், அமெரிக்கவை கையாள பாவிக்க தொடங்கியிருக்கும் புது உத்திகள் என்றுதான் கொள்ள வேண்டும். இவை தமிழ் மக்களை நோக்கி அவர்கள் மனங்களை உண்மையில் திருப்ப பேசும் பேச்சுக்கள் அல்ல. இப்படி பேசுவதால் தாம் போரில் வென்று பெற்ற பலத்தை அழித்து சயித்தை பலமாக்குகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதைவிட ஆபத்தான தூங்கும் அமெரிக்கா என்ற பூதம் எழுந்துவிடாமலிருக்க பாடும் பய் பக்க பய் பய் தொய் தக்க தொய் தொய் தாலாட்டுக்களே இவை என்பது வெட்ட வெளிச்சம்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.