Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியிலிருந்து ஒரு மடல்..

Featured Replies

“உயிரைக் கொடுத்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும்”, “வித்துடலை விதைக்க வேண்டும்” , “7ஆம் அறிவு பார்;த்து வீர ஊசி ஏற்றிக்கொள்ள வேண்டும்”, “தாகம் வடியாது – புதிய பிரபாகரன் பிறப்பான்” என்ற குரல்களை இன்றும் கேட்க நேரும் துர்ப்பாக்கியத்தை என்ன சொல்ல? போரால் நசுங்கிய இந்த மக்கள் வாழ்வுக்குப் படும் அல்லல்களைப் பார்த்தபடியே இவ்வாறான முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதன் கொடுமையை – அபத்தத்தை உங்கள் யாருக்கேனும் உணர முடிகிறதா?

நமது மக்கள் எவ்வளவு இழிநிலையில் அரைபட்டுக் கிடந்தாலும், ‘நமக்கு மற்றவர்கள் சமதையானவர்கள் இல்லை’ என்ற சிந்தனையிலிருப்பவர்களே இந்த மக்களின் அரசியல் குரலாக மேலோங்கியிருப்பது தமிழ்வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்தான்!

நமது ‘சரி’கள் பற்றியே எப்போதும் நம் நினைவிருக்கிறது. நம் சமூகத்தால் உருவாக்கிவிடப்பட்ட அந்தப் புலிகளைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான முரண்டும் பிடிவாத மறுப்புகளுமே நமக்கான அரசியல்ஞானமாகத் தேங்கிவிட்டிருக்கிறது!

நம்மிடம் சரிகள் இருப்பது போலவே எதிர்த்தரப்பும் தன் சரிகளை வைத்துக் கொண்டுதானிருக்கும் என்ற எளிய உண்மையை மறந்துவிடுகிறோம். பிரச்சினை என்னவென்றால், இந்த சரிகளைப் பேசிக் கொண்டிருப்பதால் ஒருபோதும் சமாதானம் உருவாகி விடுவதில்லை. தங்கள் தங்கள் தவறுகள், குற்றங்கள் குறித்த உணர்வும் பரஸ்பர மன்னிப்புப் பரிமாறலுமே நம்மை சமாதானம் நோக்கிச் செலுத்துவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

எதிர்த்தரப்பை இணங்க வைத்து வெல்வதற்குப் பதிலாகக் கோபப்படுத்துவதில் தற்திருப்தி அடைந்து கொள்கிறோம். குரலற்ற மக்கள் மீது துன்பங்களைச் சுமத்தியவாறே ‘ரோச அரசியலை’ தொடர்கிறோம். எதிரிக்கு வில்லங்கம் கொடுக்க முடியுமாக இருந்தால் நாம் மூக்கின்றி இருப்பது பற்றி என்ன கவலை?

நம் அறிஞர்கள் கலைஞர்கள் பிரமுகர்கள் எனப்படுவோரும், மக்களுக்காகக் குரல் தருவதாகக் காட்டிக் கொள்வோரும் வீரம், ஆண்மை, ரோசம், பழம்பெருமை என்பவற்றைச் சொல்லி வன்முறை எதிர்ப்பு உணர்வைக் கைவிடாதிருப்பதே உயர்வான மனித மதிப்பீடுகளாகப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பகைவரைப் பணிய வைத்தல் என்பதற்கான வன்முறையை ஓர் அற நடவடிக்கையாகக் காட்டும் முயற்சியையே தொடர்ந்து மேற்கொண்டு மக்களது வாழ்வுச்சிதைவை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

இப்போதும் சாதாரண மக்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பதையே இவர்கள் வீரம் எனும் பண்பாக விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். எதார்த்த நிலையை மறைத்து இவர்கள் காட்டும் பழம்பெருமை மதிப்பீடுகள் பற்றிய முழக்கங்களால் மக்களை மயக்கநிலையில் வைத்திருப்பதுடன் வாழவொட்டாமலும் வதைத்து வருகிறார்கள்.

இவர்களது “துரோகி” வாழ்த்துரைக்குப் பயந்து நம் பெரும்பான்மைக் குரல்களை அடைத்துவிட்டு “Nஙூ” என விழித்தபடி இருக்கிறோம்.

வன்முறையின் தோல்வியை இவ்வளவு குரூரமாக அனுபவித்த பிறகும், அதைவிட்டு வேறு வழிமுறைகளை யோசிக்க மாட்டாதவர்களாக அல்லது யோசிக்க விடாதவர்களாக இன்னும் பலர் இருப்பது ஒருவகையில் நம் சமூகத்தின் சாபக்கேடுதான்.

வெறுப்பை ஒருபோதும் வெறுப்பினால் சாந்தப்படுத்த முடியாது. பகையை பகையினால் வெல்வது சாத்தியமில்லை என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்து கொண்டுவிட்டதுதான் என்றாலும், இன்னமும் வன்முறையை நியாயப்படுத்தக் கிடைக்கும் ஊகங்களையும் உணர்ச்சி வேகங்களையும் கொட்டி அழிவதிலேயே முனைப்பாயிருக்கிறோம் நாம்.

மிகப் பயங்கரமான சூழல் மாசு நம் மனங்களினுள்ளேதான் மறைந்து கிடக்கிறது. எமது அறியாமையிலும், ஆணவத்திலும், ஆத்திரத்திலும், அடையாளங்களை முன்னிறுத்தி ரோசப்படுவதிலும், பழிக்குப் பழி வாங்குவதிலும், பகை வளர்த்து அழிவதிலும் இதை வெளிப்படுத்தி வருகிறோம். காந்தி சொன்னது போல, திருப்பித் தாக்குவதுதான் உயிர் வாழ்வதற்கான நியதி என்று நம்புவது போல நடிக்கின்றோம்.

எங்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அந்த நெருக்குதல்களிலிருந்து மீள வேண்டிய தேவை உண்டு. இதையெல்லாம் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நமது தீர்வுக்காக நாம் வன்முறை வழியை நாடி அதில் மிகப் பலமும் அடைந்து வருகிறோம் என்று நம்பியது எவ்வளவு பெரிய மாயையாகப் போயிற்று? அந்த வன்முறைப் பலத்தை நசுக்கிவிடக் கூடிய பெரிய வன்முறைப் பலத்தை மிக எளிதாக எதிர்;த் தரப்பு திரட்டிக் கொண்டுவிட முடிந்ததைக் கண்டோம். பேரளவிலான அழிவுகளையும், சமூக மனோபலத்தின் வீழ்ச்சியையுமே அந்த வன்முறை வழி மிச்சம் வைத்துவிட்டு முடிந்தது.

உலகில் உண்மைகளும் நம்பிக்கைகளும் பலவாறாக உள்ளன. ஒரு உண்மைக்குப் பின்னாலுள்ளவர்கள் இன்னொரு உண்மையை நம்புகிறவர்களோடு ஒத்துப்போக முடிந்தால் முரண்பாடு ஏற்படாது. ஆனால் யதார்;த்தத்தில், தங்களது நம்பிக்கைதான் முற்றுமுழுதான உண்மை என்று நம்புவதே ஒவ்வொருவரினதும் இயல்பாயிருக்கிறது. தாம் நம்பாத மற்றையதைச் சகித்துக்கொள்ள முடியாமல் போவதால் மோதல் உருவாகிறது. அவரவர் உண்மையை நிலைநாட்ட வன்முறையும் சரி என்றாகிவிடுகிறது. முற்றுண்மை இதுதான் என்ற நம்பிக்கையே வேறுபாடுகளைத் தாங்க முடியாமல் செய்துவிடுகிறது.

ஒவ்வொருவருக்குமோ அல்லது ஒவ்வொரு குழுவுக்குமோ தனித்தனி உண்மை இருக்கும்போது, அந்த இருதரப்பும் வாழ்வதற்குரிய நியாயம் வன்முறையால் எப்படி உருவாகும்? ஒரு உண்மையை அழித்து மறு தரப்பை நிலைநாட்டுதல் எப்படி நாகரிகமடைந்த மனிதகுலத்தின் ஏற்பாடாக இருக்க முடியும்? வன்முறையின் பலவீனத்தையும், மனிதவிரோத பிற்போக்குத் தன்மையையும் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்ளாமல் நம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது, வாழ்வுக்கு வழிகாண முடியாது.

-

வன்னியிலிருந்து அருள் ஆப்தீன் இணையத்தில் பதிந்தது!

பொதுவாக 'வன்னியில் இருந்து ஒரு கடிதம்... ' என்றால் வாசகர்கள், குறிப்பாக புலம்பெயர் மக்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த நோக்கம் கொண்டவனாக இதை வாசித்தேன்.

வாசிக்கும்பொழுது பொதுவாக அங்கு மக்கள் வாழ்பியல் இல்லை ஏதாவது உதவிகள் பற்றி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், முழுக்க முழுக்க 'புலம்பெயர் மக்களுக்கு அறிவுரை' வழங்க வரையப்பட்டுள்ள இந்த மடல் என்ற - ஆப்தீன் இணையத்தில் பதிந்தது! - மூலத்தை மேற்கோள் காட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதையும் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை, இது மட்டுமே கிடைத்தது: https://abedheen.wordpress.com/2011/11/08/sivakumar-kanaiyazhi/

  • தொடங்கியவர்

பொதுவாக 'வன்னியில் இருந்து ஒரு கடிதம்... ' என்றால் வாசகர்கள், குறிப்பாக புலம்பெயர் மக்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த நோக்கம் கொண்டவனாக இதை வாசித்தேன்.

வாசிக்கும்பொழுது பொதுவாக அங்கு மக்கள் வாழ்பியல் இல்லை ஏதாவது உதவிகள் பற்றி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், முழுக்க முழுக்க 'புலம்பெயர் மக்களுக்கு அறிவுரை' வழங்க வரையப்பட்டுள்ள இந்த மடல் என்ற - ஆப்தீன் இணையத்தில் பதிந்தது! - மூலத்தை மேற்கோள் காட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதையும் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை, இது மட்டுமே கிடைத்தது: https://abedheen.wor...mar-kanaiyazhi/

அந்த இணையத்தில் வந்த பின்னோட்டத்தில் வந்த கருத்தே... பொறுமையுடன் 26 வன்னியிலிருந்து அருள் சொன்னது என்ற கருத்தைதான் இங்கு பதிந்துளளேன்...

பலரும் பலவிதமான 'செய்திகளை' ஊர்ப்புதினத்தில் இணைக்கின்றோம். ஒரு பின்னூட்டத்தை செய்தி போன்று பதியப்பட்டுள்ளது (ஒருவர் எழுதிய கதைக்கே இவ்வாறான பின்னூட்டம் பதியப்பட்டுள்ளது) - புதிதாக தெரிகின்றது.

மொட்டை மனிதனின் முடியில் மயிர் புடுங்கும் வேலையாக இருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து குழப்பமாக ஆதாரம் இல்லாத செய்திகளை போட்டு மக்களை

குழப்பிவருகின்றீர் ஏற்க்கனவே வேறு திரியில் சுட்டிக்காட்டியுள்ளேன் தொடர்ந்தும் இந்த தவறை செய்து புலம்பெயர் தமிழர்கள் இடையே மோதலை உருவாக்க துணைபோகாதீர்.

அரோகரா.........

கேபிக்காக, கேபியின் இன்ரநாசினல் செக்கட்டரி இங்கு இணைத்திருக்கிறார்!!! ... அவருக்கு கொடுக்கப்படும் ஊதியத்துக்கு அவர் பாவம் வேலை செய்யத்தானே வேண்டும்!

... பூனையாம் கண்ணையாம் மூடிக்கொண்டாம் பாலையாம் குடித்ததாம்!!!!! ... நினைத்துதாம் பூலோகமாம் இருண்டாம் விட்டுட்டுதாம் எண்டாம் ...

... மொட்டை, கேட்கிறது கேணையெண்டால் .. கேற்பை மாட்டிலும் ஏறோப்பிளேன் விடுவீயள்! :icon_mrgreen:

இணைப்பிற்கு நன்றிகள்.

யார் எங்கு எழுதியது என்ற ஆராய்சியை கடந்து கருத்துக்களை உள்வாங்கிக்கொள்கின்றேன். மேலும் பல பின்னூட்டங்கள் அவ்விணயத்தில் இவ் இணைப்பினுடே வாசிக்க முடிந்தது.

வீரத்தின் வளைநிலம் வன்னி, தமிழர்களின் இதயபூமி வன்னி இதை நான் சொல்லவில்லை. காலங்காலமாக அங்கு வாழ்ந்த,வாழ்ந்துகொண்டிருக்கிற நம் உறவுகள் தம் வீர வாழ்வால் எமக்கு நிரூபித்துக்காட்டி வரலாறு படைத்தவர்கள்.அங்கிருந்துவரும் குரல் அல்லது மடல் வீரத்தையும், தன்மானத்தையும் விற்றுப்பழைத்து ஒருபோதும் ஒலித்த துமில்லை, ஒலிக்கப்போவதுமில்லை..............................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை ... சராசரி புலத்தமிழன் கையறு நிலையிலே இருக்கின்றான். நீங்கள் கூவுவது போல் அவன் இனியோரு போர் வெடிக்கும். சிங்கள இராணுவத்தை விரட்டியடித்து தமிழீழம் எடுக்கலாம் என பகல் கனவு காணவில்லை. அதே நேரத்தில் சிங்களத்திடம் சரணடைவிலும் அவனுக்கு நம்பிக்கையில்லை. மாறாக போர் குற்றத்தை முன்னெடுத்து தமிழனுக்கு நடந்த இனப்படுகொலையை உலகில் வெளிக்கொணர்ந்து அதன் மூலம் ஒரு தீர்வு என்பதில் தான் சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டுள்ளான். அவனுக்கு சின்னதோர் ஒளிக்கீற்றை உங்களால் காட்டமுடியுமானல் அவன் உங்கள் பின்னால் தாராளமாக வருவான். ஆனல் அதை விடுத்து கே.பி சொல்வதை கேளுங்கள் கோத்தாவின் காலில் விழுங்கள் என்பதை அவனால் என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நன்றி அகுத உண்மையை கண்டு பிடித்தமைக்கு.

யாழில் முறையாகப்பதிந்து அங்கதவராகாதவரின் கருத்தை யாழில் பதிவோர் அதை தனது கருத்தாக பதியவேண்டும். யாழின் விதியான செய்தி மூலத்தை குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனையை சுற்று மாற்று செய்து ஏமாற்றுவோர் மீது யாழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திரி இங்கே பதிய பட்டதின் நோக்கம் ஆரோக்கியமான விவாதங்களை உற்சாகப் படுத்த அல்ல. பதிதலில் கையாளப்பட்ட ஏமாற்று தந்திரம், மக்களின் மனங்களில் அவர்களுக்கு விருப்பமல்லாத கருத்துக்களை தாழ்வான உத்திகளை பாவித்து பரப்ப முய்லும் செயல் பாடு. இலவச யாழை மூலைச் சலவை செய்வோர் தமது மலிவான ஆயுதமாக பாவிப்பதை யாழ் நிர்வாகம் தடுக்க வேண்டும். நேர்மையான கருத்துகள் ஏமாற்று வழிகளைப் பாவியாமல் தெளிவான வகையில்(Transparent ஆக) பதியப்பட வேண்டும்.

இந்த திரியை நீக்குவதே யாழில் இனிமேல் மூலைச்சலவை முயற்சிகளை விடுத்து ஆரோக்கிய பதிவுகளை வரவழைக்கும்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அடடா என்னாமா எழுதுறாங்கப்பா வன்னியிலிருந்து ஒரு மடல்னு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.