Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்

Featured Replies

Wednesday, December 14, 2011

tm_toolbar_logo.gif TMvoteup.gif 0/0 TMvotedown.gifthiraimanam.png

ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்

17.jpgஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார்.

Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன. தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பல எழில் மிகு, கட்டிடக்கலை நுணுக்க வேலைப்பாடுகளோடு அமைந்த கட்டிடங்களை அமைப்பதிலும் இவரது பங்கு இருந்திருக்கின்றது. ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.அமரர் வி.எஸ்.துரைராஜா அவர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிட்டிய பெருமிதத்தில் இருந்தேன். அவரின் குத்துவிளக்கு திரைப்படப்பிரதியும், அப்படம் குறித்து அன்றைய காலகட்டத்தில் வெளியான நாளிதழ்களின் பார்வைகள் உள்ளிட்ட கோப்புக்களை முன்னர் எனக்கு அன்போடு அளித்திருந்தார். இவற்றை வைத்து ஒரு ஆவணப்பதிவும் தயாரிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அந்தப் பணி கைகூட முன்னர் வி.எஸ்.துரைராஜா அவர்களின் மறைவுச் செய்தி எட்டியது குறித்து வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். திரு.வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் வெளியிடப்பட்ட போது நான் வழங்கியிருந்த அனுபவப் பகிர்வை மீள இங்கு பகிர்கின்றேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

10.jpgஜனவரி 19, 2007 சிட்னி, அவுஸ்திரேலியா

ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் சிட்னியில் உள்ள Strathfield நகர மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. உயர் தர வழவழப்பான தாள் கொண்டு 96 பக்கங்களை நிறைத்த ஒரு ஆவணமாக இந்நூல் படங்களோடும், யாழ் பொது நூலகத்து வரலாற்றோடும் ஆங்கில மொழியில் அமைந்து மித்ர வெளியீடாக மலர்ந்துள்ளது.

1981 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு கொடிய செயலின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா.

1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. ஓரளவு நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.

பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க நினைத்தார்கள். இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர். அன்றிருந்த கட்டிடம் போலவே மீள அமைக்கப்பட்டது.

பெரியதொரு கனமான நூலாக வந்திருக்கும் "The Jaffna Public Library Rises From Its Ashes" ஐ ஆவலோடு வாங்கி இதழ்களைப் பிரிக்கும் போது, இந்நூல் கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களும், அரிய பல புகைப்படங்களும் இயல்பாகவே வியப்பால் விழிகளை விரியச் செய்கின்றன. 7.jpg

இந்த நூலில் இடம்பெறும் புகைப்பட ஆவணங்களைப் பார்த்தோமேயானால் புதிதாக அமையப்பெற்ற நூல் நிலையத்தின் தோற்றம் முதற் புகைப்படமாகவும் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் குறுக்கும் நெடுக்குமான வரைபடங்களும் இருக்கின்றன. பின்னர் யாழ் நூலகத்தின் இரு வேறு தோற்றங்கள் தூரக் காட்சியில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

1936 ஆம் ஆண்டில் அமையப்பெற்று பின்னர் 1985 இல் முற்றாக அழியப்பெர்ற யாழ் உள்ளூராட்சி சபை, மாநகர சபை (1949 இல்) இன் மூலத் தோற்றம், அழிவதற்கு முன்னிருந்த சுப்பிரமணியம் பூங்காவின் மூலத் தோற்றம், 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைஞரால் வரையப்பெற்ற யாழ் நூலக வரைபடங்கள் நான்கும் காணக் கிடைக்கின்றன.

துரையப்பா விளையாட்டரங்கம், அழிந்த சுப்பிரமணியம் பூங்கா, 1982 ஆம் ஆண்டில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்த்திய "Jaffna Public Library Week" இன் பல்வேறு புகைப்படங்கள், மற்றும் மீள நிறுவப்பட்ட யாழ் நூலகத்தின் முழுமையான கட்டிட வரைபடத்தொகுதிகள், மற்றும் மீள நிறுவப்பட்ட நூலகத்தின் பல்வேறு கட்டிட அமைப்புக்கள், காட்சிகள் எனப் புகைப்படங்கள் விரிகின்றன.

8.jpg

1981 இல் அழிந்து இடிபாடுகளோடு இருக்கும் யாழ் நூலகம் பல்வேறு அழிவுத் தோற்றப்படங்களுடனும் பல்வேறு புகைப்படத் தொகுதிகளாக அழிவின் சுவடுகளாகப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.

5.jpgஇந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளை எடுத்துக் கொண்டால் முன்னாள் யாழ் மேயரின் முகவுரையோடு ஆரம்பித்து, முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே சிவஞானத்தின் செய்திக் குறிப்பும், நூலாசிரியரின் முன்னுரை, யாழ் பொது நூலகத்தின் ஆதி வரலாறு தாங்கிய கட்டுரைகள், 1956 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற நூலகத்தின் இருந்த சகல கட்டிட அமைப்புக்கள் குறித்த முழுமையான கட்டுரை என விரிகின்றன.

தாவீது அடிகளாரின் திடீர் மரணம் உள்ளிட்ட பொது நூலகம் அழியப் பெற்ற கோர வடுக்கள் ஆங்கிலத்தில் வடித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. Who Burnt the precious Books? என்ற தலைப்பில் வரும் ஆக்கத்தில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் குறித்த சாட்சியங்களாக அமைகின்றன. சிறீலங்கா அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை அவர்களின் தூண்டுதலின் பேரில் காடையர்கள் நிகழ்த்திய தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலக அழிவை ஆதரங்களோடு அவை மெய்ப்பிக்கின்றன.

அழிந்தொழிந்த நூலகத்தினை நிர்மாணிக்க எப்படியான முயற்சிகள் ஈழத்தமிழின உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன, பின்னர் எப்படியான வகையில் இந்த நூலகம் மீள எழுந்தது தொடர்பிலும் சில கட்டுரைகள் அமைந்து காணப்படுகின்றன.

எனவே இந்த "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற இந்த வரலாற்று நூல் ஓவ்வோர் ஈழத்தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய, மற்றைய சமூகத்தினருக்கும் எம் இனத்திற்கு ஏற்பட்ட இன்னலின் சாட்சியமாகக் காட்ட வேண்டிய ஒரு ஆவணமாகும். 12.jpgசரி இனி இந்த நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போம்.

மாலை ஆறு மணிக்கு, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் Strathfield நகர மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொள்ள ஆரம்பமானது. மங்கல விளக்கேர்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர், அன்று யாழ் பொது நூலகம் எரிந்த போது யாழ் நகர மேயராக இருந்த திரு.ராஜா விஸ்வநாதன் அவர்கள். 15.jpg

இந்த நிகழ்வு இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நூல் ஆய்வு ஆங்கில அமர்வு, தமிழ் அமர்வு என்ற வகையில் நிகழ்ந்தன. வைத்திய கலாநிதி மனோமோகன் நூல் வெளியீட்டின் அவைத்தலைவராக அமர்ந்து கொண்டார். திரு. வி.எஸ்.துரைராஜா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நூலகம் தொடர்பான வரலாற்றுப் புகைப்படங்கள் பெரும் திரையில் காண்பிக்கப்பட்டன.

2.jpgஆங்கில அமர்வில் முதலில் நூலாய்வை நிகழ்த்தியவர் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள். இந்த நூலை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் யாழ் பொது நூலகத்தில் அரிய ஆவணங்களைத் திரட்டிப் பேணிப் பாதுகாக்கும் நுண் படங்கள் (Micro films) தொழில்நுட்ப வசதிக்காகக் கையளிக்கப்பட இருக்கின்றது. ஆனால் அழிந்த நூலகத்தோடு போன அரிய நூல்களை இன்றும் ஒரு பிரதியாயினும் பெறமுடியாத நிலை இருக்கின்றது. ஏராளமான மூல ஏட்டுச் சுவடிகள் அழிந்தது அழிந்தது தான். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் முதல் மாணவர் ஒருவரின் அனைத்து நூல்களும் இந்த நூலகத்துக்கு முன்னர் அன்பளிப்பு செய்யப்பட்டன. அவையும் சாம்பலாகிப் போயின என்று ஆதங்கத்தோடு பொன்.பூலோகசிங்கம் பழைய நினைவுகளைத் தன் பேச்சில் மீளக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து பேசவந்த அ.பரராஜசிங்கம் அவர்கள் யாழ் பொது நூலகத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்பவறைக் கொண்டு தனது பேச்சில் பயணித்து, இந்த நூல் நயத்திலும் பின்னர் இணைத்துக்கொண்டார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தன் பேச்சை நிறைவு செய்தார். 9.jpg

பாராளுமன்ற உறுப்பினர் மேதகு Virginia Judge அவர்கள் நூல் வெளியீட்டுப் பேச்சை வழங்கிய பின்னர் முதற்பிரதிகளை சிட்னி வாழ் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினார்.

Virginia Judge ஏற்கனவே வன்னி சென்று எம்மக்களின் வாழ்வியலை அறிந்து கொண்டவர். இன்று வரை தொடர்ந்து தனது ஈழத்தமிழர் மீதான கரிசனையைக் காட்டி வருபவர். தனது பேச்சில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐரிஸ் போராட்டத்தோடு தொடர்புபடுத்தியதோடு, Schindler's Ark என்ற நாவலை (பின்னர் Schindler's List என்று படமாக வந்தது) எழுதிய Thomas Keneally என்ற அவுஸ்திரேலிய எழுத்தாளரின் The Great Shame என்ற நாவலை எடுத்து வந்து அதில் உள்ள அம்சங்களைத் தொட்டு, எமது மக்களின் சுதந்திர வேட்கை தொடர்பான தன் கரிசனையைத் தன் பேச்சில் கொண்டு வந்தார்.

இடைவேளையின் பின்னர் இந்நூல் ஆய்வின் தமிழ் அரங்காக அமைந்தது.

"யாழ் நூலகம் எம்மினத்திற்கோர் வெள்ளை மாளிகை, ஆனால் இது அழிவுக்குத் துணை போன வெள்ளை மாளிகை அல்ல, அறிவு சால் ஆக்கத்துக்குத் துணை போன வெள்ளை மாளிகை" என்று ஆரம்பித்து, தான் இளைஞராக இருந்த காலத்தில் நிகழ்ந்த அனர்த்ததை தன் பேச்சில் கொண்டு வந்தார் தமிழறிஞர் திரு.திருநந்தகுமார் அவர்கள். 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நூலக அனர்த்ததை 2001 ஆம் ஆண்டில் தான் அரச சார்பு ஆங்கில நாளேடு Daily News தன் ஆசிரியர் தலையங்கத்தில் கண்டித்த வேடிக்கையும், இந்நூலில் காணப்படும், பிரேமதாச ஒக்டோபர் 1991 ஆம் ஆண்டு புத்தளம் முஸ்லீம் கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவில் காமினி திசாநாயக்கா கூட்டணியினர் தான் இந்த நூலக எரிப்புக்கான காரணகர்த்தாக்கள் என்று சொன்ன குற்றச்சாட்டையும் திருநந்தகுமார் அவர்கள் குறிப்பிட்டார். 14.jpg

தொடர்ந்து பேசிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருமதி கலையரசி சின்னையா அவர்கள், தாம் பேராதனையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக வந்த காலகட்டத்தில் , ஈழத்து இலக்கிய முயற்சிகளை இன்னும் பெருக்க வேண்டிய அவசியத்தை பல்கலைக்கழகமட்டதினூடாக பேராசிரியர்கள் செயற்படுத்த முனைந்த வேளை யாழ் பொது நூலகம் தந்த பாரிய உசாத்துணையைக் காட்டி "நூலகமும் சமூகத் தொடர்பும்" என்ற பேச்சில் கொண்டு வந்தார்.

பல்கலைக்கழகமாக ஆகுவதற்கு முன் இருந்த பரமேஸ்வராக் கல்லூரி, மற்றும் ஹாட்லி கல்லூரியின் பாரிய, அரிய நூற் தொகுதிகள் அழிவதற்கு முன்னிருந்த நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் அவை யாவும் அழித்தெரிக்கப்பட்டன என்று கவலையோடு தெரிவித்தார். நீங்கள் எல்லோருமே உங்களிடம் ஒரு பிரதியோ கூட இருக்கும் அரிய நூல்களை இந்த புதிய நூலகத்தின் Micro film வடிவச் சேமிப்புக்கு கொடுத்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 11.jpg

நூலாய்வின் தமிழ் அமர்வில் நிறைவாக திரு எம்.தனபாலசிங்கம் அவர்களின் "ஒரு மக்களின் பாரம்பரியத்தின் கருமூலமே நூலகங்கள்" என்ற அரியதொரு ஆய்வுப் பேச்சை வழங்கிச் சிறப்பித்தார். ' எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர் "

"ஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாகும்,

" Where they have burned books, they will end in burning human beings " –Heinrich Heine (1797-1856)

என புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரஞ்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படையெடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை. " the burning is but a prologue: where books are burned, people in the end are burned too " என அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர் என்று தன் பொருள் பொதிந்த பேச்சினை ஆரம்பித்துத் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டு, இறுதியில் எம் மக்களின் சுதந்திர வேட்கையையும் தொடர்புபடுத்தி நிறைவான ஒரு விழாவை நிறைவாக்கினார் மா.தனபாலசிங்கம் அவர்கள்.

நன்றியுரையை நூலாசிரியரின் பேரன் ரிஷ்யன் வழங்க, இந்நூல் வெளியிடு இனிதே நிறைவேறியது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் பதிவு செய்து இப்பதிவை முடிக்க நினைக்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரை அழித்தொழிக்கப்பட்ட யாழ் பொது நூலகம் அநியாயத்தின் கோரமுகமாக அப்படியே இருக்க, இன்னொரு நூலகம் அதே வடிவமைப்பில் கட்டியிருக்கலாம் என்பது என் கருத்து.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்

1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்க வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.

1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.

1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.

2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகம், சிட்னி முருகன் கோவில் உட்பட பல கட்டிடங்களை வடிவமைத்தவர் திரு வி.எஸ்.துரைராஜா .அத்துடன் குத்துவிளக்கு என்ற ஈழத்து திரைப்படத்தினைத் தயாரித்தவர்.

யாழ்ப்பாணத்தில் நவாலியை பிறப்பிடமாகக் கொண்ட இவரின் ஈமைக்கிரிகைகள் சனிக்கிழமை 17 ம் திகதி டிசம்பர் 2011, Delhi and Plassey Road, North Ryde, NSW 2113 sydney , Australia இல் உள்ள Macquarie Park Crematorium, Palm Chapel மண்டபத்தில் மதியம் 12.15 மணி முதல் நடை பெறும். அன்பர்கள் விரும்பினால் trajah@optusnet.com.au மின் அஞ்சல் விலாசத்தில்

தொடர்பு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலப்பறவை இணைத்த ஆக்கத்தினை எழுதியவர் கானாபிரபா அவர்கள். எழுதியவரின் பெயரை அல்லது மூலத்தினை கட்டாயம் இணைக்கவேண்டும்

http://kanapraba.blogspot.com/2011/12/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர நவீன சந்தையும், வி.எஸ். துரைராஜா அவர்களது கைவண்ணத்தால் ஆனது என நினைக்கின்றேன்.

நல்ல, ஒரு கட்டடக் கலைஞனை இழந்துவிட்டோம். அன்னாருக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

03108.gif

- உதயன்

03108.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.