Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சதந்திரம் – தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் – தொடர்

– நூல்வரலாறு

க்ருஷாங்கினி

panchatantra.jpg

நூல் வரலாறு

உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது.

இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது கி.பி. முன்றாவது நூற்றாண்டில் நூல் வடிவத்தில் இந்தியாவில் இருந்தது என்கிறார். என்றாலும், நூல் வடிவம் பெறுவதற்கு முன்பே, இந்திய மக்களிடையே பல நூற்றாண்டுகளாகப் பஞ்சதந்திரம் கர்ணபரம்பரையாக வழங்கி, மக்களின் கருத்திலும் கற்பனையிலும் கலந்து விட்டிருக்கிறது என்பது உண்மை.

இதன் மூலநூல் சம்ஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புள்ள பைசாச-பிராகிருதம் என்ற மொழியில் இருந்தது. அந்நூல் என்றோ அழிந்து மறைந்து போயிற்று.

இந்த மூலநூல் பண்டைக்கால பாரசீக மொழி (பஹ்லாவி மொழி) யில்தான் முதன் முதலாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு மத்தியிலே, மொழிபெயர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவிலேயே கி.பி. 570ம் ஆண்டில் சிரியாக் மொழியிலும் அரபு மொழியிலும் மொழிபெயர்ப்புக்கள் வெளியாயின. பல பாட பேதங்களுடன் பாரசீக மொழியில் ஏழு திருத்தப் பதிப்புக்களும், அரபு மொழியில் பத்துத் திருத்தப் பதிப்புக்களும் வெளிவந்தன.

பஹ்லாவி மொழிபெயர்ப்பை மூல நூலாகக்கொண்டு கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரலாயின. பதினைந்தாவது நூற்றாண்டு முடிவதற்குள் கிரேக்கம், லத்தீன். ஸ்பானிஷ், இத்தாலி, ஜெர்மன், ஆங்கிலம், பண்டை ஸ்லவொனிக், செக், மொழிகளில் பஞ்சதந்திரம் வெளி வந்தது. தற்சமயம் 200 திருத்தப் பதிப்புக்களுடன் ஐம்பது மொழிகளின் பஞ்சத்திரம் உலகமெங்கும் வழங்கி வருகிறது.

பஞ்சதந்திரத்தின் மூலநூல் காஷ்மீரத்தில் தோன்றியது என்கிறார் ஹெர்டல் அவர்கள். தென்மேற்கு இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்று பிராங்கிலின் எட்கர்டன் அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால், இதைப் பற்றி எட்கர்டன் அவர்களுக்கே ரொம்பவும் சந்தேகம் உண்டு. இருவருடைய அபிப்பிராயங்களுக்கும் போதிய திடமான ஆதாரங்கள் இல்லை.

மூலநூல் மறைந்த பிறகு, அதன் திருத்தப் பதிப்புக்களாக, பல பேதங்களுடன், வெளிவந்த நான்கு தனித்தனி நூல்களில் பஞ்சதந்திரம் இடம்பெற்று வந்திருக்கிறது. அவையாவன: (1) தந்த்ராக்யாயிகா என்கிற நூல், இந்நூலை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து 1909-ம் ஆண்டில் ஹெர்டெல் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். (2) தென்னாட்டு பஞ்சதந்திரம் என்கிற பிரதியொன்றும் உண்டு. இது தெற்கு, தென் மேற்கு இந்தியாவில் வழங்கி வந்தது. இதற்கு நேபாள மொழியில் ஒரு கிளை நூல் உண்டு. இவ்விரண்டையும் ஆதாரமாகக் கொண்டு வங்காளத்தில் 14-வது நூற்றாண்டில் ஹிதோபதேசம் வெளிவந்தது. இதை நாராயணர் என்பவர் இயற்றினார். இதில் பஞ்சதந்திரக் கதைகள் எல்லாம் இடம்பெற்றிருக்கவில்லை. பல மாறுபாடுகளும் காணப்பட்டன. சில புதிய கதைகள் வேறு நூல்களிலிருந்து எடுத்துப் புகுத்தப் பட்டிருந்தன. இருந்தபோதிலும், ஹிதோபதேசம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிம் மிகவும் பிரபலமடைந்தது. (3 மற்றும் 4) அழிந்துபோன பிருஹத் கதை என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டு எழுந்த பிருஹத் கதா மஞ்சரி என்கிற நூலும், கதா சரித் சாகரம் என்கிற நூலும் பஞ்சதந்திரக் கதைகளைத் தாங்கி வெளிவந்தன.

இவற்றில் §க்ஷமேந்திரர் எழுதிய பிருஹத் கதா மஞ்சரி என்கிற நூல் பஞ்சதந்திரக் கதைகளை ஒரு சில பக்கங்களில் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறது. பல கதைகள் இல்லை. ஆகவே பஞ்சதந்திரத்தின் முழு உருவத்தையும் அதிலிருந்து தெரிய முடியாது.

சோமதேவர் எழுதிய கதா சரித் சாகரம் என்கிற நூலைப் பார்ப்போமானால், அதில் பஞ்சதந்திரதில் முகவுரையாகக் கூறப்படும் கதை இடம் பெறவில்லை. ‘மித்ரபேதம்’ (நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரத்தில் மூன்று கதைகளும், ‘அசம்பிரேக்ஷ்ய காரித்வம்’ (கவனமற்ற செய்கை) என்கிற ஐந்தாவது தந்திரத்தில் இரண்டு கதைகளும் அந்த நூலில் இடம் பெறவில்லை. பிருஹத்கதாமஞ்சரியிலும் கதாசரித்சாகரத்திலும் பஞ்சதந்திரத்திலுள்ள நீதிவாக்கியங்களும், பழமொழிகளும் அநேகமாக அறவே நீக்கப்பட்டு கதைகள் மட்டும் கூறப்பட்டுள்ளன.

இவ்விரு நூல்கள் போக, ஜைனத் திருத்தப் பதிப்புகள் என்று இரண்டு பதிப்புகள் வேறு உண்டு. “டெக்ஸ்டஸ் சிம்பிளிசியோர்” (Textus Simplicior) என்கிற முதலாவது பதிப்பு கி.பி. 900-1199ம் ஆண்டுகளுக்கு இடையே நிலவி வந்தது; மத்திய, மேற்கு இந்தியாவில் பிரபலமாக இருந்துவந்தது. இந்நூலில் ஐந்தாவது தந்திரம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. மூலக்கதை கிளைக்கதையாக மாற்றப் பட்டும், கிளைக்கதைகள் மூலக்கதைகளாகவும் மாற்றப்பட்டும் காணப்படுகிறது. பஞ்ச தந்திரத்தில்லாத வேறு கதைகள் சில, ‘காமண்டகி’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டு புகுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது ஜைனத் திருத்தப்பதிப்பு பூர்ணபத்திரர் என்கிற ஜைன முனிவர் இயற்றியது. இது கி.பி. 1199-ம் ஆண்டில் இயற்றப்பெற்றது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட தந்த்ராக்யாயிகா என்கிற நூலையும், கடைசியில் குறிப்பிட்ட “சிம்பிளிசியோர்” பதிப்புப் பிரதியையும், அடையாளம் தெரியாத வேறு சில நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு பூர்ணபத்திரர் இந்தத் திருத்தப்பதிப்பை இயற்றினார். இதனை 1908-ம் ஆண்டில் ஹெர்ட்டல் அவர்கள் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.

இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூல நூலாக அமைந்துள்ளது.

http://puthu.thinnai.com/?p=2533

  • Replies 72
  • Views 19.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகவுரை

உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான்.

இது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

தெற்குப் பிரதேசத்தில் மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்றிருக்கிறது. அதை அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். வலிமை பொருந்திய வேந்தர்கள் பலர் அவனை முடி தாழ்த்தி வணங்குவார்கள். அப்படி வணங்குகையில் அவர்கள் அணிந்த மணி மகுடங்களில் பதித்த ரத்தினங்கள் சிந்தும் ஒளியிலே அமரசக்தியின் பாதங்கள் பிரகாசித்தபடி இருக்கும். அமரசக்தி சகல கலைகளையும் கரை கண்டவன். அவனுக்கு வசுசக்தி, உக்கிரசக்தி, அனந்தசக்தி என்று மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூவரும் பரம முட்டாள்கள். அவர்கள் கல்வி கற்க விருப்பமில்லாமலிப்பதைக் கண்ட அரசன், தனது மந்திரிமார்களை அழைத்து, ”பெரியோர்களே! எனது புத்திரர்கள் கல்வியை வெறுக்கிறார்கள், விவேகமின்றி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லா இடுக்கண்களையும் களைந்து சீர் மிகுந்து விளங்கும் இந்த ராஜ்யம் எனக்கு இருந்தும் என்ன பலன்? இவர்களைப் பார்க்கும் போது இந்த ராஜ்யமெல்லாம் எனக்குச் சந்தோஷம் தரவில்லை. ஏனென்றால், ஒரு பழமொழி கூறுவதுபோல,

ஒரு குழந்தை பிறக்காமலிருந்தாலும் அல்லது பிறந்து செத்தாலும் அல்லது மூடக் குழந்தையொன்று செத்துப் பிறந்தாலும் நமக்கு ஏற்படுகிற துன்பம் கொஞ்சந்தான். ஆனால் புத்தியில்லாத குழந்தையைப் பெற்றவனுக்கு வாழ்க்கை முழுவதுமே துன்பம்தான்.

கன்றும் ஈனாமல் பாலும் சுறக்காமல் இருக்கிற பசுவால் யாருக்கு என்ன லாபம்? சொந்தப் புத்தியுமில்லாமல் சொல்கிற புத்தியையும் கேட்காத பிள்ளையினால் என்ன பயன்?

ஆகவே இவர்களுக்குப் புத்தியுண்டாகி வளர்வதற்குத் தகுந்த உபாயம் செய்ய வேண்டும்” என்றான்.

”அரசே! முதலில் இலக்கணத்தைக் கற்க வேண்டும். அதற்குப் பன்னிரெண்டு வருஷங்கள் பிடிக்கும். அதை ஓரளவுக்குக் கற்றபின், அறம் பொருள் என்கிற இரண்டு சாஸ்திரங்களையும் கற்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அறிவு மலர்ச்சியடைகிறது” என்று மந்திரிகள் ஒவ்வொருவராகப் பதில் சொன்னார்கள்.

அவர்களில் சுமதி என்கிற மந்திரி மட்டும் பின்வருமாறு சொன்னான்: “அரசே! இந்த வாழ்க்கையோ நிலை இல்லாதது. இலக்கணம் கற்பதற்கோ ரொம்பக்காலம் வேண்டியிருக்கிறது. ஆகவே, அவர்கள் அறிவு பெற்று வளர்வதற்குச் சுருக்கான மார்க்கங்கள் தேடுவதுதான் நல்லது. ஒரு பழமொழி உண்டு:

இலக்கண சாஸ்திரம் முடிவற்றது. ஆனால், ஆயுளோ குறைவானது. அதிலும் அநேகத் தடங்கல் வந்து போகும். எனவே, அன்னப்பறவை நீரில் கலந்த பாலை மட்டும் பிரித்துக் குடிப்பதுபோல் சாரமுள்ள விஷயங்களை மட்டுமே நினைவில் பதிய வைக்க வேண்டும்.

பல சாஸ்திரங்களில் நிபுணர் என்று புகழ் பெற்ற விஷ்ணு சர்மன் என்ற பிராம்மணர் ஒருவர் இங்கு இருக்கிறார். அவரிடம் இவர்களை ஒப்படையுங்கள். நிச்சயமாக இவர்களை வெகு சீக்கிரத்தில் புத்திசாலிகளாக ஆக்கிவிடுவார்” என்றான்.

அரசன் விஷ்ணுசர்மனை வரவழைத்தான். ”சுவாமி! தயை செய்யுங்கள். என் புதல்வர்களை உலக அறிவில் இணையற்றவர்களாகச் செய்ய வழி பாருங்கள். அதற்குக் கைம்மாறாக நூறு வேலி நிலம் தங்களுக்குத் தருகிறேன்” என்று அரசன் கூறினான்.

”அரசே, கேளுங்கள், நான் பேசுவது உண்மை. நூறு வேலி நிலத்துக்காக நான் கல்வியை விற்பவனல்ல. ஆறுமாத காலத்தில் இவர்களை நீதி சாஸ்திரங்களில் தேர்ச்சி பெறச் செய்யாவிட்டால் என் பெயர் விஷ்ணுசர்மன் இல்லை. பேச்சை வளர்ப்பானேன்? எனது சிம்ம கர்ஜனையைக் கேளுங்கள். பணத்தாசை பிடித்துப் பேசவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியவன் நான். வயதும் எண்பது ஆகிவிட்டது; எனக்குப் பணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே, இதை ஒரு விளையாட்டு என்று கருதி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்குள் உமது குமாரர்களை நீதி சாஸ்திரங்களில் இணையற்று விளங்கும்படி செய்யாமற் போனால் பிறகு என்னை அவமானப்படுத்துங்கள்” என்றார் விஷ்ணுசர்மன்.

மந்திரி பிரதானிகள் புடைசூழ அமர்ந்திருந்த அரசன் விஷ்ணு சர்மனின் பிரதிக்ஞையைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். அவரிடம் தன் குமாரர்களை ஒப்படைத்து மிகுந்த மனநிம்மதி அடைந்தான். அரசகுமாரர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுசர்மன் வீடுபோய்ச் சேர்ந்தார். நட்பறுத்தல்; நட்படைதல்; காகங்களும் ஆந்தைகளும்; அடைந்ததை அழித்தல்; கவனமற்ற செய்கை என்கிற ஐந்து தந்திரங்களைப் புனைந்து விஷ்ணுசர்மன் அவர்களுக்குப் போதித்தார். அரச குமாரர்களும் அவற்றை மனப்பாடம் செய்து, அவர் வாக்குப்படி ஆறுமாத காலத்திற்குள் புத்திசாலிகளாக ஆனார்கள். அன்று முதல், பஞ்சதந்திரம் என்கிற இந்த நீதி சாஸ்திரம் குழந்தைகள் அறிவு வளர்ச்சி பெறும் பொருட்டு உலகெங்கும் பரவியது.

அதிகம் சொல்வானேன்?

இந்த நீதி சாஸ்திரத்தை யார் மனப்பாடம் செய்கிறார்களோ அல்லது காது கொடுத்துக் கேட்கிறார்களோ அவர்களுக்கு இந்திரனே எதிரியாக வந்து குறுக்கிட்டாலும் வாழ்க்கையில் தோல்வி கிடையாது.

http://puthu.thinnai.com/?p=2689

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 1 – நட்பு அறுத்தல்

அன்னபூர்னா ஈஸ்வரன்

இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு:

காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுமுள்ள ஒரு நரி நாசம் செய்தது.

அது எப்படி என்று பார்ப்போம்:

தெற்குப் பிரதேசத்தில், இந்திரலோகத்துக்கு ஈடாக மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்று உண்டு. அது சகல சுப லட்சணங்களும் பெற்றிருந்தது: பூதேவியின் கிரீடத்திலிருக்கும் சூடாமணி போல் சிறப்புற்றிருந்தது; கைலாசத்தில் முடி போன்ற ரூபத்துடன் இருந்தது. அந்நகரின் கோபுரங்களிலும், அரண்மனைகளிலும் பலவகையான இயந்திரங்கள், ஆயுதங்கள், ரதங்கள் நிரம்பியிருந்தன. அதன் பிரதான வாயில் இந்திரகில மலைபோல் பிரம்மாண்டமானதாகத் தெரிந்தது. தாழ்ப்பாள்களும், நாதாங்கிகளும், பலகணிகளும், வளைவுகளும் அதில் பொருத்தப்பெற்றிருந்தன. வாயில் புறத்தின் உட்சுவர்கள் கனத்த மரப்பலகைகளாலான மேற்கவசம் அணிந்து யாரும் அதைத் தகர்த்து வெற்றி கொள்ள முடியாதபடி விளங்கியது. சதுரமான பிராகாரங்களுக்கும் நெடிய சாலைகளுக்கும் நடுவே அலங்காரமிக்க தேவாலயங்கள் நிமிர்ந்து நின்றன. வளையமிட்ட அகழியோடு கூடியதாய், நகரின் வெளிச்சுவர்கள் நெடிதுயர்ந்து இமயமலை போல் காட்சியளித்தன.

அந்நகரில் வர்த்தமானன் என்று ஒரு வணிகன் வசித்து வந்தான். அவன் அநேக நற்குணங்கள் உடையவன். பூர்வ ஜன்மத்தின் புண்ணியத்தால் பெருஞ் செல்வமும் உடையவன். ஒரு சமயம் நடுராத்திரியில் அவன் பல யோசனைகளில் ஆழ்ந்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். சேகரித்த செல்வம் அதிகமாயிருந்தபோதிலும், செலவழித்துக் கொண்டே போனால் அது மை போல் கரைந்து விடுகிறது. சேர்த்தது கொஞ்சமேயானாலும் அதை மேலும் மேலும் வளர்த்தால் எறும்புப் புற்றுபோல் பெருகிக் கொண்டேயிருக்கும். ஆகவே பொருள் அதிகமாக இருந்தாலும் அதை மேன்மேலும் பெருக்குவதே சரி. பெறாத பொருளைப் பெறவேண்டும்; பெற்றதைக் காக்க வேண்டும்; காத்ததை விருத்தி செய்து சரியான துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். சாதாரணமாக, சும்மா பத்திரப் படுத்தி வைக்கும் செல்வம்கூட அநேக இடையூறுகளால் நாசமடைகிறது. சந்தர்ப்பம் கிடைத்த போது முதலீடு செய்யாத பணம், கைக்கு வராத பணத்துக்குச் சமம். ஆகவே, கிடைத்த பணத்தைப் பாதுகாத்து, பெருக்கி, நல்ல துறையில் ஈடுபடுத்த வேண்டும்.

சேர்த்த பணத்தைக் காக்க வேண்டுமென்றால் அதைப் புழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். குளத்தில் நீர் அதிகமானால் அது வடிவதற்கு வடிகால் இருக்க வேண்டுமல்லவா? பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல், பணத்தைப் போட்டுத்தான் பணம் ஈட்ட வேண்டும். விருப்பம் மட்டும் இருக்கிற ஏழைக்கு வாணிபம் செய்வது சாத்தியமல்ல.

விதியால் தன்னிடம் குவிந்த தனத்தைத் தானும் அனுபவிக்காமல் நற்செய்கை களிலும் செலவிடாமல் இருப்பவன், இரு உலகங்களிலும் சுகம் பெற மாட்டான். அவன் ஒரு பணம் படைத்த முட்டாளே.

இப்படித் தீர்மானம் செய்தவுடனே, வர்த்தமானன் மதுராபுரிக்குப் போவதற்காகச் சகல விதமான வியாபாரப் பொருட்களையும் திரட்டினான். நல்ல நட்சத்திரமும் சுபமான திதியாகவும் பார்த்து, பெற்றோர்களின் உத்தரவும் பெற்றுக் கொண்டு, வேலையாட்களைக்கூட அழைத்துக்கொண்டு, உறவினர்கள் பின்தொடர, சங்கும் பேரிகையும் முன்னே முழங்கிச் செல்ல, அவன் நகரத்தை விட்டு புறப்பட்டான். வழியில் ஆறு ஒன்று வந்தடைந்ததும் தன் சிநேகிதர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு அவன் மேலே நடந்தான்.

அவனுடைய வண்டியின் நுகத்தடியில் வெண்மேகம்போல் ஒளி பொருந்திய நந்தகன், சஞ்சீவகன் என்ற இரண்டு மங்களகரமான எருதுகள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றின் கழுத்தில் தங்கச் சலங்கைகள் துலங்கின.

எல்லோரும் ஒரு காட்டை அடைந்தார்கள். இலுப்பை, வேல், பலா, சாலமரங்கள் நிறைந்த அந்தக் காடு பார்ப்பதற்கு மனோரம்மியமாயிருந்தது. இன்னும் அழகான இதர மரங்களும் அங்கே அடர்ந்து வளர்ந்திருந்தன. யானைகள், எருதுகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், மான்கள், புலிகள், சிறுத்தை, கரடி எல்லாம் நிறைந்து பயங்கரமாயுமிருந்தது. மலையிலிருந்து நீர் பெருகி நிறைந்தோட, பல விதமான புதர்களும் குகைகளும் காடெங்கும் காணப்பட்டன.

வண்டிப் பாரம் அதிகமாயிருந்ததால் சஞ்சீவகன் என்கிற எருது மிகவும் தளர்ந்து போயிற்று. ஒரு இடத்தில் மலையருவியில் பெருகிவந்த நீர் வெகுதூரம் பரவியோடி, அதனால் குழம்பியிருந்த சேற்றில் சஞ்சீவகனின் ஒரு கால் சிக்கிக் கொண்டது. எப்படியோ எருது நுகத்தடியிலிருந்து அறுத்துக்கொண்டு விழுந்தது. வண்டிக்காரன் பரபரப்புடன் வண்டியைவிட்டு இறங்கியோடி பின்னாலேயே வந்து கொண்டிருந்த வியாபாரியை நெருங்கினான். அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, ”எஜமானே! சஞ்சீவகன் களைப்படைந்து சகதியில் விழுந்துவிட்டது” என்று தெரிவித்தான்.

இதைக் கேட்டதும் வணிகன் வர்த்தமானன் மிகவும் கவலையடைந்தான். ஐந்து நாட்களுக்குப் பயணத்தை நிறுத்தி வைத்தான். என்றாலும், சஞ்சீவகன் குணமடைய வில்லை. பிறகு அதைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தீவனத்துடன் சில ஆட்களை நியமித்து அவர்களிடம், ”சஞ்சீவகன் உயிரோடிருந்தால் ஓட்டிக் கொண்டு வாருங்கள்; இறந்து போனால் கிரியைகள் செய்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று உத்தரவு போட்டு, தான் செல்ல வேண்டிய ஊருக்குப் பயணம் தொடர்ந்தான். காட்டில் அபாயங்கள் அநேகமுண்டு என்ற பயத்தால் அந்த ஆட்கள் மறுநாளே காட்டைவிட்டு நீங்கி தங்கள் எஜமானனிடம் சென்று, ”சஞ்சீவகன் இறந்து விட்டதால் அதற்குத் தகனக்கிரியைகள் செய்துவிட்டு வந்தோம்” என்று பொய் சொன்னார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட வணிகள் ஒரு கணம் துக்கப்பட்டான்; பிரேதத்துக்குச் செய்யவேண்டிய ஈமச் சடங்குகளை நன்றியறிதலோடு அவனும் செய்தான். பிறகு ஒரு தடங்கலுமில்லாமல் மதுராபுரி வந்து சேர்ந்தான்.

சஞ்சீவகன் அதிர்ஷ்டசாலி; ஆயுளும் கெட்டி போலும். மலையோடையின் நீர்த்திவலைகளிலே உடம்பைத் தேற்றிக் கொண்டு மெதுவாக நடந்து சென்று யமுனா நதிக்கரையை எட்டியது. மரகதம் பரப்பிவைத்தாற்போல் காணப்பட்ட புல்வெளிகளில் சஞ்சீவகன் நுனிப்புல் மேய்ந்து சில நாட்களிலிலேயே சிவபிரானின் நந்திபோல் பருத்துக் கொழுத்தது. திமில் வளர்ந்தோங்கி, பலசாலியாயிற்று; தனது வளைந்து வளர்ந்த கொம்புகளின் நுனியால் தினந்தோறும் எறும்புப் புற்றுக்களில் முகடுகளை முட்டிப் பெயர்த்தெறிந்து யானைபோல் விளையாடிக் கொண்டிருந்தது.

இப்படியிருக்கையில், ஒருநாள் பிங்களகன் என்ற பெயருடைய சிங்கம், சகல விதமான மிருகங்களும் புடைசூழ, யமுனா நதிக்கரைக்கு நீர் குடிக்க வந்தது. அங்கே சஞ்சீவகன் பலமாக முக்காரம் போடுவதைக் கேட்டது. சிங்கத்துக்கு ஒரே மனக் கலக்கமாய்ப் போயிற்று. அந்த உணர்ச்சியை மறைத்துக்கொண்டு, ஒரு பரந்த ஆலமரத்தின் கீழ் மிருகங்களையெல்லாம் நான்கு வட்டங்களாக அணிவகுத்து நிறுத்தியது. இதற்குச் சதுர் மண்டலாவஸ்தானம் என்று பெயர்.

சதுர் மண்டலாவஸ்தானம் என்பது இதுதான்: சிங்கம், சிங்கத்தின் மெய்க்காப்பாளர்கள், மத்தியதர சிப்பந்திகள், ஏவலாட்கள் என்ற வகையில் நான்கு வட்டங்களாக மிருக இனம் பிரிக்கப்பட்டு இருக்கும். காட்டிலுள்ள ராஜ்யங்கள், தலைநகரங்கள், பட்டணங்கள், கிராமங்கள், வியாபார ஸ்தலங்கள் குடியேற்ற ஸ்தலங்கள், எல்லையோர ஊர்கள், மான்யங்கள், மடாலயங்கள், பொது இடங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதற்குத் தனது ஸ்தானத்தில் சிங்கம் இருந்தது. சிங்கத்தின் மெய்க்காப்பாளர்களாகச் சில மிருகங்கள் இருந்தன. மத்தியதர அந்தஸ்திலுள்ளவை ரொம்பவும் குறைவாகவோ, ரொம்பவும் அதிகமாகவோ இல்லாமல் மிதமான எண்ணிக்கையில் இருந்தன. எராளமான ஏவலாட்கள் எல்லைப் புறங்களிலே வசித்தன. இம்மூன்று வர்க்கங்கள் ஒவ்வொன்றும் மேல் நிலையிலிருப்பவன், மத்திய நிலையிலிருப்பவன், கீழ்நிலையிலிருப்பவன் என்றபடி மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

மந்திரிகளும், நெருங்கிய நண்பர்களும் புடைசூழ பிங்களகன் இப்படித்தான் ராஜ்யபாரம் நடத்திவந்தது. அதன் அரசாட்சியிலே வெண்குடை, வெண்சாமரம், வாகனங்கள், கேளிக்கைகள் போன்ற படாடோபங்கள் எதுவும் இல்லை. இல்லாமற்போனாலும், நடிப்பற்ற உண்மை வீரம் தரும் பெருமையினால் அதன் ஆட்சி உயர்ந்து விளங்கியது. தோல்வியறியாத ரோஷமும், கர்வமும், நிறைவான தன்மதிப்பும், பிங்களகனின் பிறவிக் குணங்களாகும். கட்டற்ற அதிகாரத்தில் அதற்கு ஒரே மோகம்; தனக்குப் போட்டியாகத் தலைதூக்க யாரையும் விடவில்லை. பிறருக்குத் தலைவணங்கிக் குழைந்து பேசும் வழக்கம் அதற்குத் தெரியாது. பொறுமையின்மை, ஆக்ரோஷம், கோபம், பரபரப்பு ஆகியவற்றைக் கொண்டுதான் தன் காரியங்களைச் சாதித்து வந்தது. பயமின்றித் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப்பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக்கலக்கமின்றி இருப்பது- இவைதான் அதன் பௌருஷத்தின் லட்சியங்கள். இச்சகம் பேசிக் காரியத்தைச் சாதிக்கிற உபாயத்தைப் பிங்களகன் கையாண்டதில்லை. அதற்கு மாறாக, முயற்சி, வீரம், சுயகௌரவம் ஆகியவற்றை நம்புவதிலே பிறக்கும் சோபையிலே அது பிரகாசித்தது. பிறர்க்கு அடிமை செய்யாமலும், பிறருடன் சேராமலும், தன்னைப் பற்றிய கவலையெதுவும் இல்லாமலும் இருந்தது. பிறருக்கு உபகாரம் செய்து சந்தோஷமடைவதிலேயே தன் வீரத்தைக் காட்டியது. தற்காப்புப் படைகளைப் பெரிதாக்க அதற்கு எண்ணமில்லை என்றபோதிலும், அதை யாராலும் வெல்ல முடிய வில்லை.

அற்பப் புத்தியும் அதற்குக் கிடையாது; வரவுசெலவுக் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. சுற்றிவளைத்துப் பேசுவதும், காலத்திற்கேற்ற கோலம் போடுவதும் அதனிடம் கிடையாது. உயரிய நோக்கங்கள் கொண்டு உற்சாகத்தோடு இருந்தது. ஆயுதங்களையும், நகைகளையும் அது திரட்டிக் குவிக்கவில்லை; ஆறுவித உபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதிலும் நேரம் போக்கவில்லை. அதிகாரத்தின் மேல் அதற்கு அசாதாரணமான ஆசை. அது யாரையும் நிந்திக்கவுமில்லை; யாரும் அதனிடம் அவநம்பிக்கை கொள்ளவுமில்லை. தனது மனைவிகளையும், அவற்றின் கண்ணீர்ப் பெருக்கையும், கூச்சல்களையும் அது சட்டை செய்யவில்லை. மறைவிலிருந்து தாக்குபவர்களையும் அது லட்சியம் செய்யவில்லை. அது குற்றங்குறையற்றது. ஆயுதப் பிரயோகத்தில் அதற்குச் செயற்கைப் பயிற்சி கிடையாது. ஆபத்து வருவதை எதிர் பார்த்து அறியும் சக்தி அதற்கு உண்டு. ஏவலாட்களின் உதவியின்றியே அதற்கு உணவும் இருப்பிடமும் திருப்தியாகக் கிடைத்தன. வேற்றுக்காடுகளைக் கண்டு அது அஞ்சினதில்லை; நிர்பயமாய் நிமிர்ந்த தலையுடன் நடந்து திரிந்தது. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

வலிமையும் கர்வமுங்கொண்டு தனியே காட்டில் திரியும் சிங்கத்திற்கு ராஜ தந்திரமும் சாஸ்திரமும் தேவையில்லை. அதனை எல்லா மிருகங்களுமே ”ராஜா” என்று சொல்லி வணங்குகின்றனவே!

சிங்கத்திற்கு மகுடாபிஷேகமும், சடங்குகளும் மிருகங்கள் செய்து வைக்க வில்லை. சுய பராக்கிரமத்தினாலல்லவா சிங்கம் ராஜ பதவி பெற்றது?

மதநீர் பெருக்குகின்ற யானையே சிங்கத்திற்கு மாமிசம், விரும்பிய உணவு கிடைக்காவிட்டால் சிங்கம் புல்லைத் தின்னாது.

பிங்களகனிடம் கரடகன், தமனகன் என்று இரண்டு நரிகள் இருந்தன. அவை மந்திரி குமாரர்கள், தற்போது வேலையற்றிருந்தன. அவை இரண்டும் பேசிக்கொள்ள ஆரம்பித்தன:

”பிரியமுள்ள கரடகனே! அதோ பார்! நீர் குடிப்பதற்காக வந்த நம் எஜமானர் ஏன் மனங்கலங்கி நிற்கிறார்?” என்றது தமனகன்.

”நண்பனே! இந்த விவகாரம் எல்லாம் உனக்கு எதற்கு?

அனாவசியமான விஷயத்தில் தலையிட விரும்புகிறவன், ஆப்பைப் பிடுங்கிய குரங்குபோல் தன் உயிரைத்தான் இழக்கிறான் என்று வழக்கமாய்ச் சொல்வார்கள்”

என்றது கரடகன்.

”அது எப்படி?” என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்ல ஆரம்பித்தது.

http://puthu.thinnai.com/?p=2851

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கிருபன்!

அந்தக் காலத்தில் படித்த, அதே நடையில் எழுதப் பட்டிருக்கின்றது!

அவக்கு, அவக்கேன்று அவசரத்தில் சாப்பிட்ட சாப்பாட்டை இரை மீட்பது போல ஒரு உணர்வு வருகின்றது, ஆர, அமர வாசிக்கும்போது!!!

ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பஞ்ச தந்திரக் கதைகளைப் பற்றி மனதுள் சிந்தித்தேன். அதனைப்பற்றி பகிர்ந்து மனதுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிருபனிற்கு மிக்க நன்றிகள்!

தொடருங்கள்! :)1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் பலகாலமாகத் தேடிக் கொண்டிருந்தேன். அண்மையில்தான் கண்ணில் தட்டுப்பட்டது! ஒருங்குறியில் இருந்ததால் இணைக்க வசதியாகப் போய்விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 3 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

அன்னபூர்னா ஈஸ்வரன்

ஒரு பிரதேசத்திலே நகரம் ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு தோப்பில் யாரோ ஒரு வியாபாரி கோவில் ஒன்று கட்டிக்கொண்டிருந்தான். அங்கு வேலை செய்யும் ஆட்கள் மேஸ்திரி எல்லோரும் உச்சி வேளையில் சாப்பிடுவதற்காகத் தினந் தோறும் நகரத்துக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர்கள் இல்லாத நேரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பாதி கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலை அடைந்தது. அங்கு தச்சன் பாதி பிளந்து போட்டிருந்த ஒரு பெரிய கட்டை கிடந்தது. அதன் உச்சியிலே வேலமரத்தினால் செய்த ஆப்பு ஒன்று அடிக்கப்பட்டிருந்து. குரங்குகள் தங்களிஷ்டம் போல் மரத்தின் உச்சிகள், உயர்ந்த கட்டிடங்கள், மரத்தூள் குவியல்கள், எல்லாவற்றின் மீதும் ஏறி விளையாடத் தொடங்கின. அப்பொழுது கேடுகாலம் நெருங்கிய ஒரு குரங்கு ஆசையோடு அந்தக் கட்டையின் மேல் ஏறி, ”வேண்டாத இடத்தில் யார் இப்படி ஆப்பு அடித்திருக்கிறார்கள்?” என்று சொல்லி அதைக் கைகளால் பிடித்துப் பிடுங்கத் தொடங்கியது. பாதி பிளக்கப்பட்டிருந்த மரத்தின் இடைவெளியில் இறங்கியிருந்த அதன் விரைகள் ஆப்பு விடுபட்டதும் அதனிடையில் சிக்கிக் கொண்டன. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உனக்கு விவரிக்காமலே தெரியும்.

அதனால்தான், ‘புத்திசாலிகள் அனாவசியமான விவகாரத்தில் தலையிடலாகாது’ என்று சொல்கிறேன். சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கவே இருக்கிறது; இதெல்லாம் நமக்கெதற்கு?” என்று கரடகன் சொல்லிற்று.

தமனகன்: ”சாப்பாட்டை மட்டும் விரும்பி, பெருமையை விரும்பாத நீ, எப்படி உயர்வான காரியங்கள் செய்வாய்?”

மித்திரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும் செய்து புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள். வயிற்றை நிரப்புகிற வேலை யாருக்குத்தான் முடியாது?

என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும், யாருடைய வாழ்க்கையை நம்பி அநேக உயிர்கள் வாழ்கின்றனவோ அவன் வாழ்க்கையே வாழ்க்கை; அலகு உள்ள காக்கை கூடத்தான் தன் வயிற்றை நிரப்புகிறது. குருவுக்கும், உறவினருக்கும், ஏழைக்கும், வேலைக்காரர்களுக்கும், யார் தயை காட்டுவதில்லையோ அவன் இந்த உலகத்தில் வாழ்ந்தென்ன பயன்? பலியாக வைக்கிற அன்னத்தைத் தின்று காக்கை கூடத்தான் வெகு நாள் ஜீவிக்கிறது!

தசையும் பசையுமின்றி சில நரம்புகள் மட்டுமுள்ள அழுக் கடைந்த வெள்ளெலும்பைக் கடிப்பதிலேயே நாய் திருப்தியடைந்து விடுகிறது. ஆனால் அதன் பசி அதனால் தணிகிறதில்லை.

தன் காலடியில் அகப்பட்டுக்கொண்ட நரியைச் சிங்கம் பொருட்படுத்துவதில்லை. யானையை அடித்துக் கொல்வதிலேதான் அது குறியாயிருக்கிறது. அதுபோல, எவ்வளவுதான் கஷ்டமான நிலைமை ஏற்பட்டாலும், அவனவன் தன்தன் நிலைக்கேற்ற பலனைத்தான் அடையப் பார்க்கிறான்.

உணவளிப்பவனிடம் நாய் வாலையாட்டி குழைந்து குழைந்து வந்து விழுந்து புரண்டு வாயையும் வயிற்றையும் காட்டுகிறது. ஆண்யானையோ என்றால், சுயகௌரவத்தை விட்டுக் கொடுப்ப தில்லை. ரொம்பவும் வேண்டிக்கொண்டபிறகுதான் யானை தின்ன ஆரம்பிக்கிறது.

சிறிய அருவியில் சீக்கிரத்தில் நீர் நிரம்பும்; சுண்டெலியின் கையும் சீக்கிரம் நிரம்பிவிடும். அதுபோல, சின்னப் புத்தி படைத்த மனிதர்கள் அற்ப விஷயத்திற்கும் சந்தோஷம் அடைகிறார்கள்.

பல வேததர்ம சாஸ்திரங்களையும் கைவிட்டு, நன்மை தீமை களை ஆராய்வதிலும் புத்தியைச் செலுத்தாமல், வயிறு நிரப்புவதிலேயே விருப்பங்கொள்ளும் மனித மிருகத்துக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?

சமதரையிலும் கரடுமுரடான நிலத்திலும் ஏர் இழுத்தோ அல்லது கழுத்தைக் குனிந்து பாரமான வண்டியை இழுத்துக் கொண்டோ செல்கிற மாடுகள் நல்லவை, புனிதப் பிறவி பெற்றவை. புல்மேய்ந்து திருப்தியடைகிற அவற்றுடன் மனித மிருகத்தை எப்படி ஒப்பிடமுடியும்?”

என்றது தமனகன்.

இதற்குக் கரடகன், ”நமக்கோ இப்பொழுது வேலை கிடையாது. இதில் நாம் தலையிடுவானேன்?” என்று கேட்டது.

”வேலையற்றிருப்பவனுக்கும் கொஞ்ச காலத்தில் வேலை கிடைக்கும். பேச்சு வழக்காய் இதைக் கேட்டதில்லையா?

அரசனுக்கு ஊழியம் செய்தால் வேலையற்றவனுக்கும் வேலை கிடைக்கிறது. வேலையிருந்தும் அதைச் செய்யாதவன் வேலையற்றவனாகிறான்.

பிறருடைய விருப்பினாலோ வெறுப்பினாலோ ஒருவன் உயர்வு தாழ்வு அடைவதில்லை; அவன் அவன் செய்கையின் விளைவாகத்தான் மதிப்போ அவமதிப்போ அடைகிறான்.

மலையுச்சிக்குக் கற்களைக் கொண்டு போவது மிகவும் சிரமம். ஆனால், மலையிலிருந்து கற்களைக் கீழே தள்ளிவிடுவது ரொம்பச் சுலபம். அதுபோலத்தான் குணமும் தோஷமும் ஒருவனை வந்தடைகின்றன”

என்றது தமனகன்.

”சரி, விஷயத்துக்கு வா! நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்றது கரடகன்.

”இதோ பார்! எஜமானரும் அவர் பரிவாரங்களும் பயந்துபோய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நிற்கின்றனர்” என்றது தமனகன்.

”அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று கரடகன் கேட்டது.

”தெரிவதற்கு அதில் என்ன இருக்கிறது?”

வெளிப்படையாகச் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை மிருகம்கூடப் புரிந்து கொள்ளும். குதிரைகளும், யானைகளும் தூண்டிய பிறகுதான் பாரத்தைச் சுமக்கின்றன. ஆனால், வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் பண்டிதன் ஊகித்தறிந்து விடுவான். பிறர் இங்கிதத்தை அறிய முடியாவிட்டால் புத்தி இருந்து என்ன பயன்?

முகக்குறி, அங்க அசைவு, நடை, செய்கை, வார்த்தை ஆகியவற்றாலும், கண்களிலோ முகத்திலோ ஏற்படும் மாறுதலாலும் ஒருவன் மனதில் நடப்பதை நாம் அறிகிறோம். ஆகையால், இன்றே என் புத்தி சாதுரியத்தால் எஜமானரை வசப்படுத்தப் போகிறேன்”

என்றது தமனகன்.

”உனக்கு ஊழியம் செய்யவே தெரியாதே! எஜமானரை எப்படி உன் வசமாக்குவாய்?” என்றது கரடகன்.

”ஊழியம் புரிவதென்பது எனக்குத் தெரியாத விஷயமா? பாண்டவர்களின் விராடநகரப் பிவேசத்தின்போது வியாச மாமுனிவர் சேவகர்களின் தர்மத்தைப் பற்றிச் சொன்னதெல்லாம் எனக்குத் தெரியுமே!

பலசாலிக்குப் பாரம் என்று ஒன்றில்லை; முயற்சியுடையவர்களுக்குத் தூரம் என்று ஒன்றில்லை; கல்விமான்களுக்கு அந்நிய பூமி என்று ஒன்றில்லை; அன்புடன் பேசுபவர்களுக்கு அந்நியன் என்று ஒருவருமில்லை

என்று சொல்லக் கேட்டதில்லையா?” என்று பதிலளித்தது தமனகன்.

”உனக்குத் தகுதியற்ற இடத்தில் நீ நுழைந்தால் எஜமானர் ஒருவேளை உன்னை அவமதிக்கலாம்” என்றது கரடகன்.

”நீ சொல்வதும் உண்மைதான். ஆனால் நான் சமய சந்தர்ப்பத்தை அறிந்து நடப்பேன்.

சமயாசமயம் அறியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் சன்மானம் பெறாது போவதுமட்டுமல்ல, வெறுப்பையும் தேடிக் கொள்கிறான். அரசன் யோசனை செய்யும் பொழுதும், ரகசிய வேலை நிமித்தமாயச் செல்லும் பொழுதும், ஓய்வு எடுக்கும் பொழுதும், மந்திராலோசனை செய்யும் பொழுதும், அறிவாளி (வாய்ப்பு இருந்த போதிலும்) திடீரென்று அரச சந்நிதானத்தில் நுழைவதில்லை.

இன்னும்,

பேசும்பொழுதும், விவாதித்துக்கொண்டிருக்கும் பொழுதும், சாப்பிடும்பொழுதும், மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுதும், மலஜலம் கழிக்கும்பொழுதும் (யாரும் தடுக்காமற் போனாலும்) இங்கிதமறிந்தவன் இடையே நுழையக் கூடாது.

அரசமாளிகையில் ஒருவன் தினம் தினம் பயந்து நடக்க வேண்டும். குருவின் இல்லத்தில் தங்களைக் குருவின் வேலையாட்களாக நினைத்துக் கொண்டு மாணவர்கள் நடக்க வேண்டும். அப்படியில்லாமல், பயபக்தியின்றி நடக்கிறவன் துரிதமாகவும் நிச்சயமாகவும் நாசமடைவான். சந்தோஷ நேரத்தில் ஏழை வீட்டில் ஏற்றிய விளக்கு சீக்கிரமே எரிந்து அணைந்து விடுவது போல் அழிந்து போவான்.

மன்னன் மாளிகையில் நுழையும்பொழுது தலைகுனிந்து, ஆடை திருத்திக் கொண்டு, போ! அந்தந்த நேரத்தில் அரசனுடைய மனோநிலையையும் சித்தத்தின் போக்கையும் அறிந்து தக்கபடி நட!

கல்வியுமின்றி, குலமுமின்றி, புகழுக்குத் தகுதியுமின்றி இருந்தாலும் சரி, அரசன் அருகில் ஒருவன் இருந்தால் போதும்; அரசன் அவனை ஆதரிக்கிறான். அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கின்றதோ அதைப் பற்றிக் கொள்கின்றன.

அரசனின் அருகிலிருந்து அவனது கோபத்தையும் காருண்யத்தையும் அறிந்து நடக்கிற சேவகர்கள், அந்த அரசனின் கடுகடுப்பையும் சமாளித்து மேலேறிக் கொள்கின்றனர்.

வீரன், வித்வான், பணிவிடை செய்யத் தெரிந்தவன்- இம்மூவர் மட்டுமே பூமியில் பொன்மலரைப் பறிக்கிறார்கள்.

ராஜசேவை எப்படிச் செய்வது என்பதைக் கேள்!

அரசனது அன்புக்குரியவனாகி செல்வாக்குப் பெற்றுள்ளவன், அல்லது விசேஷமான நாவன்மை படைத்தவன், இவர்கள் மூலமாகத் தான் கல்விமான்கள் அரசனை அணுகுகிறார்கள். அரசனை அணுகுவதற்கு வேறு வழி கிடையாது.

பகுத்தறிவு அற்ற பிறவியிடம் பண்டிதன் உழைப்பதில்லை. கரிசல் நிலத்தை உழுவதில் பலன் சிறிதும் கிடையாதல்லவா?

பணமும் நாடு மில்லாவிட்டாலும் யோக்கியதையுள்ள அரசனுக்குச் சேவை செய்! வெகுகாலம் பிடித்தாலும், பின்னால் உன் வாழ்க்கை முழுதும் அதன் பயனை அனுபவிப்பாய்.

வேலையாள் எஜமானையே துவேஷித்தால் அதைவிட மோசமான நிலை அவனுக்கு வேறில்லை. யாருக்கு உழைக்கிறோம் என்று உணராமல் துன்பப்படுகிறவன் தன்னைத் தானே நிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அரசனிடம் நடந்து கொள்கிறமாதிரியே அரசனின் தாயார், ராணி, அரசகுமாரன், முக்கியமந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடமும் எப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும்.

ரணகளத்தில் அரசனுக்கு முன்னே செல்பவனும், நகர வீதியில் அரசனுக்குப் பின்னே போகிறவனும், அரண்மனையில் தொங்கித் திரிபவனும், அரசனுக்குப் பிரியமானவனாகிறான்.

விசாரித்தபொழுது முகஸ்துதி செய்பவனையும், கார்யா கார்யத்தை அறிந்து செய்பவனையும், சந்தேகம் கிளப்பாமல் சொன்னதைச் செய்பவனையும், அரசன் விரும்புகிறான். அரசனிட மிருந்து பெற்ற செல்வத்தை யார் பத்திரமாகத் தனியே வைத்து விட்டு அவர் அளித்த வஸ்திரத்தை மட்டும உடுத்தி நடக்கிறானோ அவனைத்தான் அரசன் விரும்புகிறான்.

குத்தலும் ஏளனமுமாக அரசன் பேசும்பொழுது யார் பதிலுரைப்பதில்லையோ, யார் அரசன் அருகில் உரக்கச் சிரிப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்.

அந்தப்புர ஆட்களுடனும், அரசனின் மனைவிகளுடனும், யார் ரகசியம் பேசுவதில்லையோ அவனை அரசன் விரும்புகிறான்.

அரசனுக்கு எப்பொழுதும் தான் வேண்டியவன் என்ற மமதையிலே, கஷ்டகாலத்தில் மரியாதைக் குறைவாக யார் நடந்து கொள்ளாமலிருக்கிறானோ அவனையே அரசன் விரும்புகிறான்.

அரசனுடைய எதிரியைத் தானம் வெறுத்து, அரசன் பிரியத்தைப் பெற்றவர்களுக்கு விருப்பமான காரியத்தைச் செய்கிறவனையே அரசன் விரும்புகிறான்.

அரசனுடைய எதிரியுடன் ஒட்டுறவும் கோள்சொல்லும் பழக்கமும் பேச்சு வார்த்தையும் யார் வைத்துக் கொள்ளாமல் இருக்கிறானோ அவனையே அரசன் விரும்புகிறான்.

யார் சண்டையையும் சமாதானத்தையும் பயமின்றி ஒன்றாகப் பாவிக்கிறானோ, – வெளியூரில் இருப்பதையும் சொந்த ஊரில் இருப்பதையும் ஒன்றாகப் பாவிக்கிறானோ – அவனையே அரசன் விரும்புகிறான்.

சூதாட்டத்தை யமனாகவும், மதுவை ஆலகால விஷமாகவும், பிறர் மனைவியரைச் சிலைகளாகவும் யார்பாவித்து நடக்கிறானோ அவனையே அரசன் விரும்புகிறான்

என்று பதிலளித்தது தமனகன்.

இதைக் கேட்ட கரடகன், ”சரி. அங்கே போய் முதலில் என்ன பேசுவாய்? அதைச் சொல்!” என்றது.

http://puthu.thinnai.com/?p=3113

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2

அன்னபூர்னா ஈஸ்வரன்

தமனகன் சொல்லிற்று:

காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தையறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான்.

சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான் அந்தக் குணத்தை விருத்தி செய்து காப்பாற்ற வேண்டும்.

பெருவழக்காய்ப் பேசப்படும் சொற்களை இன்னும் கேள்:

அரசன் வீழ்ச்சியை விரும்பாதவன் அரசன் உத்தரவை எதிர்பாராமலே பேசட்டும். அதுவே நல்லவனுக்குத் தர்மம்; மற்றறவையெல்லாம் அதர்மமாகும்.

இதைக்கேட்ட கரடகன், ”அரசர்களைத் திருப்தி செய்வது மிகவும் சிரமமாயிற்றே! ஒரு பழமொழி கூறுவதுபோல்:

சுகபோகத்திலும், வஸ்திரங்கள் அணிவதிலும், கொடூரத்திலும், கோணல் மாணலாகப் போவதிலும், கோபத்திலும், வசியப் படுத்துவதிலும், அரசர்கள் பாம்பைப் போலவே இருக்கிறார்கள்.

(பாம்புக்கும், அரசனுக்கும் சிலேடையாக இந்தச் செய்யுள் உள்ளது. மேலே சொன்னது அரசனைக் குறிக்கும். பாம்பைக் குறித்துச் சொல்வது பின்வருமாறு:

பாம்பு படத்தை உடையது; சட்டையை உரிப்பது; கொடூரமுள்ளது; நெளிந்து செல்வது; கோபமுடையது; வசியப்படுத்தக் கூடியது; எனவே அது அரசனைப் போலிருக்கிறது.)

அரசன் விஷமத்தனமுள்ளவன்; கடின சித்தம் உடையவன்; நீசத்தன்மையற்றவன்; கீழோரால் சூழப்பட்டுள்ளவன்; நாள்தோறும் கஷ்டங்களுக்கு ஆளாகிறவன்; எனவே அரசன் மலையைப் போல் இருக்கிறான்.

(அரசனுக்கும், மலைக்கும் சிலேடையாகச் சொல்லப்பட்டது. மலையைக் குறிக்கும் பொருள் பின்வருமாறு:

மலை அசுத்தமான பூமியுடையது; கடினமான உருவம் பெற்றது; உயர்ந்தது; கீழோரால் மிதிக்கப்படுவது; கொடூரமான மிருகங்களை உடையது. இந்த வகையில் மலை அரசனைப் போலிருக்கிறது.)

நகமுள்ள ஜீவராசிகளிடமும், நதியிடத்திலும், கொம்புள்ள மிருகங்களிடமும், ஆயுதம் தரித்தவனிடமும் நம்பிக்கைவைக்காதே! அவ்விதமே ஸ்திரீகளிடத்திலும், அரசர்களிடத்திலும் நம்பிக்கை வைக்காதே!

என்றது கரடகன்.

அதைக்கேட்ட தமனகன், “அது உண்மைதான்.

ஆனால், ஒருவன் மனத்திலுள்ள எண்ணத்தைத புத்திசாலி ஊகித்தறிந்து அவனை நிச்சயமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

ஒருவன் கோபமாயிருக்கும்போது அவனைக் கெஞ்சி முகஸ்துதி செய்! அவனது நண்பர்களை நேசி! எதிரிகளைத் துவேஷி! அவன் அளித்த வெகுமதியை வாயாரப் புகழ்! இப்படித் தான் அவனை வசியம் செய்ய வேண்டும்; அதற்கு வேறு மாயாஜால வித்தைகள் எதுவும் கிடையாது.

செயலிலோ, நாவன்மையிலோ, கல்வியிலோ சிரேஷ்ட மானவனை அணுகி அவனுக்குச் சேவை செய்! அவனிடம் அந்தத் திறன் மங்கி மறைகிறபோது அவனை விட்டு விலகிப்போ!

பயனுள்ள இடம் பார்த்து சொல்லைப் பிரயோகம் செய்! வெள்ளைத் துணியில்தான் மற்ற சாயங்கள் நன்றாய் ஏறும்.

பிறரின் பலமும் வீர்யமும் அறியாத வரையில் முயற்சி செய்யாதே! எவ்வளவுதான் முயற்சித்துப் பார்த்தாலும் இமய மலைக்கருகில் நிலா சோபிப்பதில்லை,

என்று சொல்லிற்று.

இதைக் கேட்ட கரடகன், ”அதுவே உன் முடிவு என்றால், நீ அரசனிடம் போகலாம். உன் முயற்சி வெற்றியடையட்டும். உன் விருப்பம் நிறைவேறட்டும்! அரசன் அருகிலிருக்கும்போது நீ கவனமாக இரு! உன்னையும் உன் அதிருஷ்டத்தையும் நம்பிப் பிழைப்பவனல்லவா நான்!”

என்று கூறியது.

தமனகன் கரடகனை வணங்கிவிட்டுப் பிங்களனைப் பார்க்கச் சென்றது.

தமனகன் நெருங்குவதைப் பார்த்த பிங்களகன் வாயில்காப்போனிடம், ”கொடியாலாகிய அந்தக் கதவைத் திற! அவன் நமக்கு நன்றாகத் தெரிந்தவன், மந்திரிகுமாரன் தமனகன். தடை செய்யாமல் உள்ளே வரவிடு! அவன் இரண்டாம் வட்டத்தைச் சேர்ந்தவன்” என்று சொல்லியது. பிறகு தமனகன் நுழைந்து, பிங்களகனை வணங்கி, காட்டிய ஆசனத்தில் அமர்ந்தது. பிங்களகனும் வஜ்ராயுதம் போன்ற நகங்கள் அணிந்த தனது வலது கையை உயரத் தூக்கி மரியாதையுடன், ”சௌக்கியந்தானா? உன்னைப் பார்த்து ரொம்பக் காலமாயிற்றே!” என்று கேட்டது.

தமனகன், ”அரசே! என்னால் தங்கள் சமூகத்திற்கு ஒரு பிரேயாஜனமும் இல்லா விட்டாலும் சரியான சமயம் வரும்பொழுது சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அரசர்களுக்கு உதவாதது ஒன்றும் இல்லையல்லவா? ஒரு பழமொழி கூறுவதுபோல்:

அரசே! பல்லைக் குத்துவதற்கும் காதைக் குடைவதற்கும் தங்களுக்குத் துரும்பே உபயோகப்படும்பொழுது சொல்லும் செயலுமுள்ள மனிதனைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

மேலும், நாங்கள் ராஜசமூகத்தில் பரம்பரையாக வேலை செய்பவர்கள். ஆபத்துக் காலத்திலும் அரசனைப் பின் தொடருபவர்கள். எங்களுக்கு வேறு கதி கிடையாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

வேலையாட்களையும், நகைகளையும் தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். நினைத்தபடியெல்லாம் செய்ய முடியும் என்பதற்காக சூடாமணியைக் காலில் யாராவது கட்டிக் கொள்வார்களா?

பரம்பரையாக வந்த அரசன், பணக்காரன், பெரிய குலத்தினன் யாராயிருந்தாலும் வேலையாட்களின் குண விசேஷங்களை அறிந்திராவிட்டால் அவர்களிடம் வேலையாட்கள் தங்குவதில்லை.

கீழோரால் சமமாக நடத்தப்படுபவனும், சமமானவர்களால் கௌரவிக்கப் படாதவனும், உயர்ந்த நிலையில் வைக்கப்படாதவனும் எஜமானை விட்டு விலகுகிறார்கள்.

தங்க ஆபரணத்தில் பதிக்கத்தக்க ரத்தினத்தைக் கொண்டு போய் வெள்ளீயத்தில் பதித்தால் அது விகாரமாய் விடுவதில்லை. சோபிக்காமல் போய்விடுகிறதில்லை. ஆனால் அதை அணிந்து கொள்கிறவர்களின் குணத்தை அது காட்டிவிடும்.

இவன் புத்திசாலி, இவன் இரக்கமுள்ளனவன், இவன் நம்பத்தகாதவன், இவன் முட்டாள் என்று வேலையாட்களைத் தரம் பிரிக்கத் திறமைபெற்ற அரசன் அந்தந்த வேலைக்கு லாயக்கான ஆட்களைப் பார்த்து நியமிக்கிறான்.

என்னைப் பார்த்து வெகுநாளாயிற்று என்று சொன்னீர்கள். அதற்குக் காரணமும் சொல்கிறேன்:

எங்கு இடதுசாரி வலதுசாரி என்ற வித்தியாசம் இல்லையோ அங்கு மானமுள்ள மனிதன் கணநேரம் கூடத் தங்கமாட்டான்.

எல்லா வேலையாட்களையும் பாகுபாடின்றி ஒரே மாதிரியாக எஜமானர் நடத்தினால் வேலையில் கெட்டிக்காரர்கள் உற்சாகத்தை இழக்கின்றனர்.

சிவந்த கண்ணுக்கும், சிவப்பு ரத்தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத இடத்தில் ரத்தின வியாபாரம் செய்வது எப்படி?

வேலையாட்கள் இல்லாமல் அரசனில்லை. அரசனில்லாமல் வேலையாட்களுமில்லை; ஆதலால் அவர்களின் பரஸ்பர விவகாரத்தில் ஒரு பந்தம் இருக்க வேண்டும்.

ஆனாலும் வேலைக்காரனின் தரமும் எஜமானரின் குணத்தைப் பொறுத் திருக்கிறது. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

குதிரை, ஆயுதம், சாஸ்திரம், வீணை, வார்த்தை, ஆண், பெண் ஆகியோர் பிரயோஜனப்படுவதும் படாமற் போவதும் அவர்களை உபயோகிப்பவனின் தரத்தைப் பொறுத்திருக்கிறது.

இன்னொரு விஷயம். இவன் நரிதானே என்று தாங்கள் என்னை அலட்சியம் செய்யலாம். அது சரியல்ல. எவ்விதமெனில்,

பட்டு பூச்சியிலிருந்தும், தங்கம் கல்லிலிருந்தும், தூர்வாப்புல் பசுவின் ரோமத்திலிருந்தும், தாமரை சேற்றிலிருந்தும், சந்திரன் சமுத்திரத்திலிருந்தும், நீலோற்பலம் சாணத்திலிருந்தும், நெருப்பு கட்டையிலிருந்தும், நாகரத்தினம் பாம்பின் தலையிலிருந்தும், கோரோஜனை பசுவின் பித்த ஜலத்திலிருந்தும் உதிக்கின்றன. ஆகவே, குணமுள்ளவர்கள் நம் சொந்தக் குணத்தினாலேயே பிரகாசிக்கிறார்கள். பிறப்பினால் அல்ல.

எலி வீட்டில் பிறந்ததாயிருக்கலாம்; என்றாலும் அது தீங்கு செய்வதால் அதைக் கொல்ல வேண்டும். பூனை வீட்டிலே பிறக்காமல் இருக்கலாம். என்றாலும் அது நன்மை செய்வதால் அதை ஆதரித்து வீட்டோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

திறமையற்றவன் நம்பத்தக்கவனாகவும் திறமையுள்ளவன் கெடுதி செய்பவனாகவும் இருந்தால் என்ன பயன்? அரசனே! திறமை, விசுவாசம், இரண்டுமுள்ள என்னை நீங்கள் அசட்டை செய்யலாகாது.

உலகத்தின் பரம இரகசியத்தை நன்கு அறிந்த அறிஞர்களை அவமதிக்கக் கூடாது. அவர்களுக்குச் செல்வம் புல்லுக்குச் சமானம். ஆகையால் அவர்களைச் சுலபத்தில் கட்டுப்படுத்த முடியாது. புதிதாகப் பெருகும் மத ஜலத்தினால் அழகிய கருத்த கன்னங்களையுடைய யானைகளைத் தாமரைக் கொடிகளால் கட்டிப்போட முடியாது

என்றது தமனகன்.

இதைக் கேட்ட பிங்களகன், ”அப்படி எல்லாம் சொல்லாதே! நீ நம்முடைய மந்திரிகுமாரன், வெகுகாலமாக நம்மிடம் இருப்பவன்” என்றது.

”தங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றது தமனகன்.

”நண்பனே! உன் மனதில் இருப்பதைச் சொல்!”

”ஜலம் குடிப்பதற்காக வந்த எஜமானர் இங்கேயே நின்றுவிடுவானேன்?”

பிங்களகன் முகம் மாறுபாடடைந்தது. அதை மறைத்துக்கொண்டு ”அப்படி ஒன்றுமில்லையே!” என்றது.

”பிரபுவே, சொல்லத் தகாததாக இருந்தால் சொல்லாதீர்கள்.

சிலவற்றை மனைவியிடமும், சிலவற்றை நண்பர்களிடமும், சிலவற்றைப் புத்திரனிடமும் ஒருவன் சொல்லவேண்டும். எல்லோரும் அவனுக்கு நம்பிக்கையானவர்களே; ஆனாலும் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லக் கூடாது”

என்றது தமனகன்.

இதைக்கேட்ட பிங்களகன் பின்வருமாறு எண்ணிற்று: ”இவன் யோக்கியனாகக் காணப்படுகிறான். இவனிடம் என் மனதிலுள்ளதைச் சொல்கிறேன்.

நம்பிக்கையான சிநேகிதனிடமும், குணமுள்ள வேலைக் காரனிடமும், பதிபக்தியுள்ள மனைவியிடமும், வல்லமையுள்ள எஜமானரிடமும் விஷயத்தைச் சொல்வதால் துக்கம் மறைகிறது.

தமனகனே! வெகு தூரத்திலிருந்து வரும் அந்தச் சப்தம் உனக்குக் கேட்கிறதா?” என்று கேட்டது.

”அரசே! கேட்கிறதே, அதற்கென்ன?”

”நண்பனே! இந்தக் காட்டிலிருந்து நான் போய்விட விரும்புகிறேன்.”

”ஏன்?”

”ஏனெனில், நம் காட்டில் அபூர்வமான மிருகம் ஏதோ ஒன்று நுழைந்திருக்கிறது. நாம் கேட்பது அதனுடைய சத்தத்தைத்தான். அந்த சத்தத்திற்குத் தகுந்த குணமும், குணத்திற்குத் தகுந்த பராக்கிரமும் அது பெற்றிருக்க வேண்டும்.”

”சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டு ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்?

“வெள்ளம் அணையையும், பிதற்றல் ரகசியத்தையும், பகைமை நட்பையும், வெறும் வார்த்தை கோழையையும் அழித்தொழிக்கின்றன”

என்கிற பழமொழியைக் கேட்டதில்லையா? ஆகவே, முன்னோர்கள் சம்பாதித்து வைத்துப் பரம்பரையாக வந்தடைந்திருக்கிற இந்தக் காட்டை திடீரென்று விட்டுச் செல்வது எஜமானருக்கு உசிதமல்ல.

ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை எடுத்து வைப்பதுதான் புத்திசாலித் தனம். புதிய வீட்டைப் பார்த்து நிச்சயம் செய்யாமல் பழைய வீட்டைக் கைவிடலாகாது.

மேலும், இங்கே பலவிதமான சத்தங்கள் கேட்கின்றன. அவை வெறும் சத்தமே தவிர பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உதாரணமாக இடி, புல்லாங்குழல், வீணை, பணவம், மிருதங்கம், மணி, வண்டி, கதவு, இயந்திரம் முதலியவற்றின் சத்தங்கள் கேட்கின்றன. அவற்றைக் கேட்டுப் பயப்பட வேண்டியதில்லை.

சத்ரு பயங்கரமாக இருக்கும்பொழுதும், கோபமாக இருக்கும் பொழுதும், தைரியத்தைக் கைவிடாத அரசன் அவமான மடைவதில்லை

என்று சொல்லி வைத்திருப்பது சரியான பேச்சு.

பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலிகள் தைரியத்தைக் கைவிடுவதில்லை. கோடைக்கால வெய்யில் குட்டையைத்தான் வற்ற அடிக்கும். சிந்து நதியோ என்றும் பெருகியோடிக்கொண்டே இருக்கும்.

கெட்ட காலத்தில் துக்கப்படாமலும், நல்ல காலத்தில் சந்தோஷத்துடனும், போரில் தைரியத்துடனும் இருப்பவனே மூவுலகிற்கும் திலகம் போன்றவன். அப்படிப்பட்ட மகனைத் தாய் அரிதாகத்தான் பெற்றெடுக்கிறாள். பலவீனத்தால் தலைவணங்குபவனும், தன்மதிப்பு அற்றவனும் புல்லுக்கு ஒப்பான கதியை அடைகிறான்.

இதை மனத்திறக் கொண்டு தாங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும். வெறும் சத்தத்தைக் கேட்டு பயப்படக்கூடாது.

“இது கொழுப்பும், மாமிசமும் நிறைந்ததென்று முதலில் நினைத்தேன்; உள்ளே புகுந்து பார்த்தபோது வெறும் தோலும் மரக்கோல்களுமாக இருக்கக் கண்டேன்”

என்றொரு பழமொழி கூறுகிறது” என்றது தமனகன்.

”அது எப்படி?” என்று பிங்களகன் கேட்க, தமனகன் சொல்லிற்று:

http://puthu.thinnai.com/?p=3352

  • கருத்துக்கள உறவுகள்

நான் மிகவும் விரும்பி படித்த கதைகள் சிறுவயதில், தொடர்ந்து இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அண்ணா..சிறுவனாக இருந்தபோது உப்படியான கதைகள்தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்மேல் ஆர்வத்தை வளர்த்தன..எனக்கு மட்டுமல்ல பலருக்கு..வளர்ந்த கதை மறக்கலாமோ..? தொடர்ந்து இணையுங்கள்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்

அன்னபூர்னா ஈஸ்வரன்

ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப் பார்த்தது. அங்கே நரி ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதும் நரிக்கு மனக்கலக்கமும் கவலையும் உண்டாயிற்று. ”ஐயோ, ஆபத்து வந்து விட்டதே! இனி நான் செத்த மாதிரிதான். யார் இப்படிச் சத்தமிடுகிறார்கள்? என்ன மிருகமாயிருக்கக் கூடும்?” என்றது யோசித்தது. இங்குமங்கும் பார்த்தபோது மலையுச்சி போல் உருவமுள்ள ஒரு பேரிகையைக் கண்டது. ”இதிலிருந்து சத்தம் தன்னாலே வருகிறதா? அல்லது யாராவது உண்டாக்குகிறார்களா?” என்று யோசித்தது. காற்று வீசி நாணல் நுனிகள் பேரிகையின் மீது படும்போதெல்லாம் சத்தம் கிளம்பும். பிறகு சத்தம் அடங்கிவிடும். இதை நரி கண்டு கொண்டது. பேரிகைக்குச் சுயமான சக்தியில்லை என்று தெரிந்தவுடன் அதனருகில் சென்றது. ஆவலோடு பேரிகையின் இருபக்கங்களிலும் அடித்தது. பிறகு சந்தோஷமடைந்து, ”ஆஹா, ரொம்ப நேரம் கழித்து இரை கிடைத்திருக்கிறது. நிச்சயமாக இதில் மாமிசமும், கொழுப்பும் நிறைய இருக்கும்” என்று நரி எண்ணியது. இந்த முடிவுக்கு வந்தவுடன் பேரிகையின் ஒரு பக்கத்தைக் குடைந்து உள்ளே புகுந்தது. பேரிகையின் தோல் கெட்டியாகத்தான் இருந்தது. நரியின் நல்ல காலம். அதன் பல் உடைந்து போகவில்லை. புகுந்து பார்த்தபோது வெறும் தோலும் ”மரக்கோல்களுமாக இருக்கக்கண்டு நரி நிராசையுடன் இந்தச் செய்யுளைப் பாடியது.

‘பேரிகையின் பயங்கரச் சத்தத்தைக் கேட்டு அது மாமிச மலையென்று எண்ணினேன்; உள்ளே நுழைந்து பார்த்தபோது வெறும் தோலும், மரக்கோல்களுமாக இருக்கக் கண்டேன்.’

பேரிகையிலிருந்து வெளியே வந்த நரி தனக்குள் சிரித்துக் கொண்டே, ”இது கொழுப்பும் மாமிசமும் நிறைந்ததென்று நினைத்தேன்…” என்று சொல்லிற்று.

அதனால்தான், ”சத்தத்தைக் கண்டு கலக்கமடையக் கூடாது” என்கிறேன்’ என்றது தமனகன்.

”என் பரிவாரங்கள் பயமும் கலக்கமும் கொண்டு ஓடப் பார்க்கிறார்களே! தைரியத்தோடு இருப்பது எப்படி?” என்றது பிங்களகன்.

”அரசே! அது அவர்கள் குற்றமல்ல. எஜமானர்களுக்கு ஏற்ற மாதிரிதான் ஏவலாட்கள் வந்து சேருகிறார்கள். இந்தப் பழமொழி சொல்வதுபோல்:

குதிரை, ஆயுதம், சாஸ்திரம், வீணை, சொல், ஆண், பெண்- எல்லாம் பயனுள்ளவையா பயனற்றதா என்பது உபயோகிப்பவனின் திறமையைப் பொறுத்திருக்கிறது.

நான் அந்த ஜந்துவைக் கண்டு திரும்பும் வரையில் ஆண்மையுடன் இங்கேயே நில்லுங்கள். திரும்பி வந்தபிறகு உசிதம்போல் செய்யலாம்” என்றது தமனகன்.

”என்ன இது! அங்கு போகவா விரும்புகிறாய்?” என்று கேட்டது பிங்களகன்.

”அரசன் கட்டளையிடும் பொழுது நல்ல வேலைக்காரனுக்கு இது தகும், இது தகாது என்று ஒன்று உண்டா? ஒரு பழமொழி சொல்வதுபோல்:

எஜமானர் கட்டளையிடுகிறபோது நல்ல வேலைக்காரன் பயமெதுவும் கொள்வதில்லை. எரிகிற நெருப்பிலும் நுழைகிறான். கடக்கமுடியாத கடலையும் கடந்து விடுவான். அரசன் இட்ட கட்டளையைக் கேட்டு இது கஷ்டம், இது சுலபம் என்று வாதுக்கு நிற்கும் வேலையாளை அரசன் தனது மந்திரியாகக் கொள்ள மாட்டான்.

என்றது தமனகன்.

அதைக்கேட்டு பிங்களகன், ”நல்லது. அப்படியென்றால் நீ போ! உன் பயணம் மங்களமாய் முடியட்டும்” என்றது.

தமனகன் சிங்கத்தை வணங்கிவிட்டு சஞ்சீவகனுடைய சத்தத்தைப் பின் தொடர்ந்தவாறே தேடிச் சென்றது. தமனகன் சென்ற பின் பயந்த மனத்துடன் பிங்களகன் யோசிக்கத் தொடங்கியது.

”ஐயோ! என் மனதிலிருந்ததை அவனுக்குத் தெரிவித்து விட்டேனே! அப்படிச் செய்தது சரியல்ல. இருவரிடமும் லஞ்சம் வாங்க நினைத்தோ, அல்லது நான் அவனை வேலையிலிருந்து நீக்கியதற்காகவோ, தமனகன் ஒருவேளை எனக்குத் தீமை செய்தாலும் செய்யலாம். ஒரு பழமொழி சொல்லியிருக்கிறபடி:

ஒருவனை அரசன் முதலில் கௌரவித்துவிட்டுப் பிறகு அவமானப் படுத்தினால், அவன் நற்குலத்தில் பிறந்தவனானாலும் அரசனை என்றைக்கும் ஒழிக்கவே விரும்புவான்.

ஆகவே, அவன் நோக்கம் தெரியும் பொருட்டு வேறு இடத்துக்குப் போய்க் காத்திருப்போம். நம்மைக் கொல்வதற்காக அந்த மிருகத்தைத் தமனகன் அழைத்து வந்தாலும் வரலாம். ஒரு பழமொழி கூறுகிறபடி,

ஒரு ஆளைச் சுலபத்தில் அப்படியே நம்பிவிடும் பல சாலியைப் பலமில்லாதவனும் வென்றுவிடுகிறான். அப்படி சுலபத்தில் நம்பாத பலவீனனை பலசாலியாலும் வெல்ல முடியாது.

இப்படி தனக்குள் முடிவு செய்து கொண்டு பிங்களகன் வேறிடம் சென்றது. தமனகன் போன வழியைப் பார்த்தபடியே தன்னந்தனியாக நின்றது.

தமனகன் சஞ்சீவகன் அருகில் சென்று, அது எருதுதான் என்று தெரிந்து கொண்டு, குதூகலத்தோடு பின்வருமாறு நினைத்தது: ”பேஷ் எனக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இந்த எருதைக் கொண்டு சண்டை மூலமோ சமாதானத்தின் மூலமோ பிங்களகனை என் வசப்படுத்துகிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல:

விடாமல் சங்கடங்களில் அரசன் மாட்டிக்கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்குச் சுகம். அதனால்தான் எப்பொழுது பார்த்தாலும் அரசனுக்குச் சங்கடங்கள் இருந்துவர வேண்டும் என்று மந்திரிகள் விரும்புகின்றனர்.

ஆரோக்கியமுள்ளவன் ஒருபொழுதும் வைத்தியனைத் தேட மாட்டான்; அதேமாதிரி சங்கடங்கள் இல்லாத அரசன் மந்திரியைத் தேடுவதில்லை.

இப்படியெல்லாம் எண்ணியபடியே தமனகன் பிங்களகனிடம் திரும்பிச் சென்றது. பிங்களகன் அது வருவதைப் பார்த்ததும், முகபாவத்தை மறைப்பதற்காக முன் நின்றிருந்த மாதிரியே நின்று கொண்டது. தமனகன் பிங்களகனை நெருங்கி வணங்கிவிட்டு உட்கார்ந்தது.

”நண்பனே! அந்த மிருகத்தைப் பார்த்தாயா?” என்று பிங்களகன் கேட்டது.

”தங்கள் கிருபையால் பார்த்தேன்.”

”நிஜமாகவா?”

”நிஜமில்லாமல் தங்களிடம் வேறுவிதமாகச் சொல்வேனா? ஒரு பழமொழி கூறுகிறபடி:

அற்பமான பொய்யானாலும் அதை அரசன்முன் சொன்னால், சொல்கிறவனின் தெய்வங்களுக்கும் குருவுக்கும் அழிவு ஏற்படும்.

தெய்வத்தின் அவதாரமே அரசன் என்று முனிவர்கள் பாடுகின்றனர். ஆகையால் அவரைத் தெய்வம்போல் கருதவேண்டும். அரசனிடம் பொய் சொல்லக் கூடாது.

தெய்வத்தின் அவதாரமான அரசனுக்கும், தெய்வத்திற்கும் வித்தியாசம் இதுதான். செய்கிற பாவ புண்ணிங்களுக்கான பயனை அரசன் அன்றே அளிப்பான்; தெய்வமோ ஒரு ஜன்மத்திற்குப்பின் அளிக்கும்.”

பிங்களகன், ”சரி! நீ உண்மையில் பார்த்ததாகவே இருந்து விட்டுப் போகட்டும்! சிறியோரிடம் பெரியோர் கோபப்படுவதில்லை. ஒரு பழமொழி கூறுவது போல்:

வளைந்து குனிகிற மிருதுவான நாணல் புல்லைச் சூறைக்காற்று பிடுங்கி எறிவதில்லை. ஓங்கி வளர்ந்த மரங்களைத்தான் பிடுங்கி எறிகிறது. அதுபோல் பெரியவர்கள் பெரியவர்களிடத்திலேதான் தமது பராக்கிரமத்தைக் காட்டுவார்கள்.”

”அப்படிச் சொல்வீர்கள் என்று எனக்கு முன்னமேயே தெரியும். பேச்சை வளர்ப்பானேன்? அந்த மிருகத்தையே நேரில் அழைத்து வந்து விடுகிறேன்” என்றது தமனகன்.

பிங்களகன் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது, மனத்திருப்தியைக் காட்டியது.

தமனகன் திருப்பிப்போய் சஞ்சீவகனைப் பார்த்தது. நிந்தனை கலந்த குரலில், ”துஷ்ட எருதே! வா இங்கே! ‘உடம்பில் பயமில்லாமல் ஏன் இப்படி அடிக்கடி அனாவசியமாகக் கத்துகிறாய்’ என்று எஜமானர் பிங்களன் உன்னை அதட்டுகிறார்.” என்றது. “நண்பரே, யார் அந்தப் பிங்களன்?” என்றது சஞ்சீவகன். தமனகனுக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. “என்ன, எஜமானர் பிங்களகனைக் கூட உனக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டு, மிகுந்த கோபத்துடன் தொடர்ந்தது: ”உனக்கு ஏற்படப்போகும் கதியிலிருந்து அவர் யாரென்று தெரிந்து கொள்வாய், பார்! சகல மிருகங்களும் அவரைச் சூழ்ந்து நின்று சேவிக்கின்றன. கர்வமிக்க நெஞசுடையவர்; மிருகங்களுக்கும் இதர செல்வங்களுக்கும் அரசர் அவர். பிங்களகன் என்ற பெயருள்ள பெரிய சிங்கம். பரந்து கிடக்கும் ஆலமரத்தடியில் அவர் வசிக்கிறார்” என்றது.

இச் செய்தியைக் கேட்டதும், ‘நான் செத்தேன்’ என்று சஞசீவகன் பயந்து போயிற்று. மிகுந்த மனக்கவலையுடன், ”நண்பரே! நீங்கள் தயையுள்ளவராகவும், வாக்குச் சாதுரியமுள்ளவராகவும் காணப்படுகிறீர். என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரிடம் அபயம் கேட்கிறேன்” என்றது.

தமனகன், ”அதுதான் சரி! அதுதான் நியாயம்! ஒரு பழமொழி கூறுவதுபோல்:

பூமிக்கு ஒரு எல்லையுண்டு. கடலுக்கும் மலைக்கும் கூட எல்லையுண்டு. ஆனால் அரசனின் எண்ணங்கள் எப்படிப்பட்டவை, யாரைப்பற்றியவை, எதைப்பற்றியவை, என்று சொல்வதற்கு எல்லையே கிடையாது.

ஆகையால் முதலில் நான் போய் அவரோடு நேரம் குறித்து வந்து உன்னை அழைத்துப் போகிறேன். அதுவரை இங்கேயே இரு!” என்றது.

பிறகு தமனகன் பிங்களகனிடம் சென்று, ”அரசே! அது மண்ணுலகைச் சேர்ந்த மிருகமல்ல. அது சிவபிரானுக்கு வாகனமாயிருந்திருக்கிறது. நான் அதை விசாரித்த போது, ”பரமசிவன் என்மேல் சந்தோஷமடைந்து யமுனா நதிக்கரையில் புல் மேய்வதற்கு என்னை அனுப்பியிருக்கிறார். சுருங்கச் சொன்னால், நான் விளையாடு வதற்காக இந்தக் காட்டையே எனக்குப் பகவான் அளித்தருளியிருக்கிறார்’ என்று பதிலளித்தது” என்று சொல்லிற்று.

பிங்களகன் பயந்துபோய், ”ஆஹா, இப்போதுதான் புரிகிறது! கடவுள் அருள் இல்லாவிட்டால் மனிதவாசனையற்ற இந்தக் காட்டில் புல் மேய்ந்தபடி இப்படி அவர் கத்திக்கொண்டு திரியமாட்டார். சரி, நீ என்ன சொன்னாய்?” என்றது.

”அரசே! நான் சொன்னேன், ‘இந்தக் காடு சண்டீதேவியின் வாகனமான பிங்களகனுடையது. ஆகையால் அவருடைய விருந்தாளியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள்? அவரை நெருங்கி, சகோதர வாஞ்சையோடு அவருடன் இருந்து, உண்டு குடித்து, வேலை செய்து, விளையாடி ஒரேயிடத்தில் காலங்கழிக்க வேண்டும்’ என்றேன். அவரும் ஒத்துக் கொண்டார். தங்களிடம் அபயம் கோரவேண்டும் என்றும் சொன்னார். அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் தாங்கள்தான்” என்றது தமனகன்.

பிங்களகன் மிகுந்த சந்தோஷத்துடன், ”ரொம்ப நல்லது. நற்புத்தியுள்ளவனே! என் மனமறிந்து நீ பேசியிருக்கிறாய். அவருக்கு அபயமளிக்கிறேன். ஆனால் என் விஷயத்திலும் அவரிடம் ஒரு சபதம் வாங்கிக்கொள். வாங்கிக்கொண்ட பிறகு சீக்கிரம் கூட்டிவா!

நாகரிகமும், நேர்வழியும், தூயநட்பும் உள்ள செயலிலே சோதித்தறியப்பட்ட மந்திரிகள்தான் அரசாட்சி நடத்தத் தகுதி யுடையவர்கள். வீட்டுக்குத் தூண் மாதிரி அரசாட்சியின் தூண்கள் அவர்கள்.

(இந்தச் செய்யுளில் தூணுக்கும் மந்திரிக்கும் சிலேடை, பளபளப்பாயும், மரத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டும், கெட்டியாயும், நேராயும் இருக்கிற தூண்தான் வீட்டைத் தாங்கி நிற்கும் தகுதியுடையது.)

நட்பு முறிந்தபோது அதைச் சீர்படுத்திச் சேர்ப்பதிலே மந்திரிகளின் மதி நுட்பம் வெளியாகிறது. பெருநோய் வரும்போது வைத்தியனின் அறிவு வெளிப் படுகிறது. நெருக்கடியற்ற சாதாரண காலங்களில் யார்தான் அறிவாளியாக இருக்க முடியாது?

என்று சொல்லி வைத்திருப்பது சரிதான்” என்றது பிங்களகன்.

சஞ்சீவகனைக் காணச் சென்ற தமனகன் வழியில் இவ்வாறு யோசிக்கத் தொடங்கியது: ‘ஆஹா, அரசர் என்மேல் கிருபை கொண்டு விட்டார். என் வார்த்தை வசமாகிவிட்டார். என்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை ஒரு பழமொழி கூறுவதுபோல்,

குளிர் காய்வதற்கு நெருப்புக் கிடைப்பது: தனக்குப் பிரிய மானவர்களைத் தரிசிப்பது; அரசனின் கொடையை பெறுவது; பால் சோறு சாப்பிடுவது; இவை நான்கும் அமுதம் கிடைத்த மாதிரிதான்”

என்று சிந்தித்தது தமனகன்.

சஞ்சீவகனை நெருங்கியதும் தமனகன் மரியாதையோடு, ”நண்பனே! உன் விஷயத்தைச் சொல்லி அரசனைத் திருப்பதிப் படுத்தி அபயவாக்கு வாங்கி வந்திருக்கிறேன். நீ கவலையில்லாமல் போகலாம். ஆனால் ஒன்று. நீ அரசனின் அபிமானத்தைப் பெற்றபிறகு எனக்கு இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும். கர்வங் கொண்டு அதிகாரம் செய்யக்கூடாது. நானும் உன்னோடு சேர்ந்து கொண்டு, மந்திரிப் பதவி பெற்று, எல்லா ராஜ்ய பாரத்தையும் வகித்து வருவேன். இருவரும் சேர்ந்து ராஜ்ய லட்சுமியை அனுபவிக்கலாம்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்:

அதர்மத்தால் பாவங்கள் குவிவது போல் அரசனிடத்தில் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. ஒருவன் அரசனின் ஆதரவு பெறுகிறான்; மற்றவன் அவனை மிருகம் போல் கொன்று விடுகிறான்.

கர்வத்தால் சேவகர்களைச் சரியாக நடத்தாதவன், (கதையில் வரும்) தந்திலன் அரசனிடம் அனுபவித்ததுபோல், காலிடறி விழுகிறான்”

என்றது தமனகன்.

”அது எப்படி?” என்று சஞ்சீவகன் கேட்கவே, தமனகன் சொல்லத் தொடங்கியது.

http://puthu.thinnai.com/?p=3523

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக போகின்றது தொடர்ந்து இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

அன்னபூர்னா ஈஸ்வரன்

மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர். அதிகமாகச் சொல்வானேன்? அவனைப் போல் கெட்டிக்காரனை யாரும் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. விவேகம் நிறைந்த ஒரு பழமொழி கூறுவதுபோல்:

அரசனுக்கு நன்மை செய்பவன் மக்களின் வெறுப்பைப் பெறுகிறான்; மக்களுக்கு நன்மை செய்பவனை அரசன் கைவிடுகிறான். இப்படி ஒரு பெரிய முரண்பாடு இருக்கும்போது, அரசனுக்கும் மக்களுக்கும் சமமாகக் காரியம் பார்க்கிறவனைக் காண்பது அரிய பெரிய விஷயந்தான்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் அவன் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. அந்த வைபவத்துக்கு எல்லா நகர ஜனங்களையும், அரச பரிவாரங்களையும் அவன் அபிமானத்தோடு வரவழைத்து உபசரித்தான்; உணவும் உடையும் தந்து பெருமைப் படுத்தினான். கல்யாண வைபவம் முடிந்தபிறகு அரசனையும் அந்தப்புர ஸ்திரீகளேயும் வீட்டிற்கு அழைத்து வந்து மரியாதைகள் செய்தான்.

வீடு பெருக்கும் வேலையாள் ஒருவன் அரசனிடம் இருந்தான். அவன் பெயர் கோரபன். அவனையும் வியாபாரி அழைத்திருந்தான். அழைப்புப்படி வந்த கோரபன் தன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு ஆசனத்தில் ராஜகுருவுக்கு எதிரே அமர்ந்துவிட்டான். இதைக் கண்ட தந்திலன் அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான் அன்று முதல் கோரபன் தனக்கேற்பட்ட அவமானத்தால் மனோ வேதனையடைந்து, ‘இந்த வியாபாரியின் மீது அரசர் வைத்துள்ள அபிமானத்தை ஒழிப்பதற்கு வழியுண்டா?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான். இரவில் அவனுக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. பின்பு ஒரு சமயம், அவனுக்குத் துளியளவு தீமை செய்தவற்குக் கூட எனக்குத் திராணி கிடையாதே! பிறகு ஏன் அதைப்பற்றி விணே நினைத்து ஏங்கி நான் இளைத்துப் போகவேண்டும்?

தீமை செய்யத் திராணி இல்லாதவன் வெட்கமின்றிக் கோபிப்பதில் என்ன லாபம்? உயர உயரக் குதித்தாலும் பருப்பு வாணலியை உடைக்க முடியுமா?

என்கிற பழமொழி ரொம்பச் சரிதான்’ என்று எண்ணமிட்டான்.

பிறகு ஒருநாள் விடியற்காலையில் அரசன் அரைத்தூக்கத்தில் இருக்கும் பொழுது, அரசனின் படுக்கையருகில் குப்பை பெருக்கிக் கொண்டே வந்த கோரபன், ”அட அநியாயமே, தந்திலன் செய்கிற அக்கிரமத்தை என்னவென்று சொல்வது! பட்டமகிஷியைச் சுகிக்கிறானே!” என்று சொன்னான். இந்தச் சொற்களைக் கேட்டதும் அரசன் பரபரப்போடு எழுந்து உட்கார்ந்து, ”கோரபனே! இப்போது நீ முணுமுணுத்து விஷயம் உண்மைதானா? தந்திலன் ராணியை அணைக்கிறானா?” என்று கேட்டான்.

”அரசே! சூதாட்டத்தில் ஆசை மிகுதியால் இரவெல்லாம் கண் விழித் திருந்தேன். பெருக்கும்போது பலமாகத் தூக்கம் வந்துவிட்டது. தூக்கத்தில் என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியாது. மன்னியுங்கள்” என்று கோரபன் பதிலளித்தான்.

அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. யோசித்தான். ”இவனோ அரண்மனையில் தங்கு தடையின்றி வந்து போய்க்கொண்டிருப்பவன் தந்திலனும் அப்படியேதான் வந்து போகிறான். ஆகையால் அவன் ராணியை ஆலிங்கனம் செய்வதை இவன் ஒருவேளை பார்த்திருக்கலாம். ஒரு பழமொழியில் சொல்லியிருக்கிறதே!

பட்டப்பகலில் எதை விரும்புகிறோமோ அல்லது பார்க்கிறோமோ அல்லது செய்கிறோமோ அதையே நினைந்து நினைந்து, கனவிலும் அதையே சொல்கிறோம் அல்லது செய்கிறோம்.

நல்லதோ, கெட்டதோ மனித மனத்திலுள்ள இரகசியங்கள் எல்லாம், தூக்கத்தில் பேசும்போதும், குடிபோதையிலிருக்கும் போதும் வெளிப்பட்டு விடுகின்றன.

மேலும், ஸ்திரீகள் விஷயந்தான் தெரிந்ததாயிற்றே!

ஒருவனோடு வம்பளப்பாள்; இன்னொருவனைக் கனிவுடன் பார்ப்பாள்; மூன்றாமவனை மனத்தில் நினைத்துக்கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலிக்கிறாள்?

எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தி இல்லை; எத்தனை நதிகள் நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்துக்குத் திருப்தி யில்லை; எத்தனை ஜீவராசிகளைக் கொண்டாலும் யமனுக்குத் திருப்தியில்லை; எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்குத் திருப்தியில்லை.

நாரதரே! இடவசதி, காலவசதி மட்டும் இல்லாமற் போகட்டும்; அல்லது, விரும்பிச் சேர்வதற்கு ஒரு ஆண்பிள்ளை இல்லாமற் போகட்டும். பிறகு ஸ்திரீகள் பதிவிரதைகளாகி விடுகிறதை நீ பார்ப்பாய்!

‘என் மனைவி என்னைக் காதலிக்கிறாள்’ என்று எந்த முட்டாள் எண்ணுகிறானோ அவன் கூண்டுப் பறவை போல் என்றென்றும் தன் மனைவிக்கு அடிமையாவான்.

இப்படியெல்லாம் அரசன் துயரப்பட்டு பிரலாபித்தான். அன்று முதல் தந்திலனிடம் பராமுகமாயிருந்தான். அதிகம் சொல்வானேன்? அரண்மனைக்குள் நுழையாதபடி அவனைத் தடுத்துவிட்டான்.

திடீரென்று அரசன் தன்னைத் திரஸ்கரிப்பதைக் கண்ட தந்திலன் யோசனையில் ஆழ்ந்தான்.

”ஆஹா, சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்! செல்வம் சேர்ந்தவரினடம் செருக்கும் சேரும்; உணர்ச்சி வசப் படுகிறவன் ஆபத்தின் வசமாவான்; பெண்ணால் துயரப் படாதவன் உண்டா? யாரைத்தான் மன்னன் மனதார நேசிக்கிறான்? காலனின் எல்லையைத் தாண்டியவன் யார்? ஏழையை மதிக்கிறவன் யாராவது உண்டா? துஷ்டனுடன் சகவாசம் வைத்தவன் §க்ஷமமாய்த் திரும்பியதும் உண்டா?

காக்கையிடம் சுத்தத்தையும், சூதாடியிடம் சத்தியத்தையும், பாம்பினிடம் இரக்கத்தையும், பெண்களிடம் காம வேட்கைத் தணிவையும், அலியினிடத்தில் தைரியத்தையும், குடிகாரனிடம் தத்துவ ஞானத்தையும், அரசனிடத்தில் நேசத்தையும், யாராவது பார்த்தோ, கேட்டோ இருக்கிறார்களா?

அது இருக்கட்டும். மன்னனுக்கோ, மற்றவருக்கோ நான் கனவில் கூட, வார்த்தையால்கூட, கெடுதல் ஒன்றும் செய்யவில்லையே! பிறகு ஏன் என்னிடம் பராமுகமாயிருக்கிறார் அரசர்?” என்றெல்லாம் யோசித்தான்.

ஒருநாள் அரண்மனை வாயிலில் தந்திலனைக் காவலாளிகள் தடுத்து நிறுத்தினார்கள். அவனைக் கோரபன் பார்த்துவிட்டு உரக்கச் சிரித்தான். வாயில் காவலாளிகளைப் பார்த்து, ”வாயில் காப்போர்களே, ஜாக்கிரதையாயிருங்கள்! அரசனின் அருள் பெற்றிருப்பதினால் இந்த முரட்டுத் தந்திலன் தன்னிஷ்டம்போல் ஒருவனைத் தண்டிக்கவோ சன்மானிக்கவோ செய்கிறான். நீங்கள் அவனைத் தடுத்தால் என்னைச் செய்தமாதிரி உங்களையும் அவன் கழுத்தையும் பிடித்து வெளியே தள்ளுவான்” என்று சொன்னான்.

இதைக் கேட்டதும் தந்திலனுக்கு ஒரு எண்ணம் உண்டாயிற்று. ”இது நிச்சயமாகக் கோரபனின் வேலைதான்.

அரசனருகிலிருந்து வேலை செய்கிறவன் குலமற்றவனாகவோ, மூடகனாகவோ,கொடைக்குத் தகுதியில்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.

அரச சேவகன் கீழோனாகவிருந்தாலும், பேடியாயிருந்தாலும், தன்னைப் பிறர் அவமதிப்பதைச் சகிக்க மாட்டான்

என்று அறிவுறுத்துகிற பழமொழி சரிதான்” என்று நினைத்து புலம்பினான்.

அவமானமுற்ற உள்ளத்தோடும் மனக்கலக்கத்தோடும் வீடுபோய்ச் சேர்ந்தான். மாலையில் கோரபனை வரவழைத்து இரண்டு ஆடைகளைச் சன்மானம் செய்து, ”நண்பனே! ஏதோ உணர்ச்சி வசப்பட்டு நான் உன்னைப் பிடித்து வெளியே தள்ள வில்லை. ராஜகுருவின் முன்னால் உன் தகுதிக்கு மிஞ்சிய ஆசனத்தில் நீ உட்கார்ந்தாய். அதைப் பார்த்துத்தான். அவமானப் படுத்தினேன்” என்று தெரிவித்தான்.

சொர்க்கலோகத்தைப் பெற்றவன்போல் அவ்விரு வ1திரங்களையும் கோரபன் பெற்றுக் கொண்டான். மிகுந்த மனத் திருப்தியுடன், ”உத்தமனே! அதை மறந்து விட்டேன். நீ செய்த சன்மானத்திற்கு விரைவில் அரசரின் அருளும் பிறவும் கைம்மாறாக உனக்குக் கிடைக்கும், பார்!” என்று சொல்லிவிட்டு, நிறைந்த உள்ளத்தோடு வீடு திரும்பினான்.

சின்னஞ்சிறு விஷயமே உயர்வும் அளிக்கிறது, தாழ்வும் அளிக்கிறது. தராசின் முள்ளும், துஷ்டனும் ஒரே மாதிரியான வர்களே!

என்கிற பழமொழி ரொம்பவும் சரி.

மறுநாள் காலை கோரபன் அரண்மனைக்குச் சென்றான். அரசன் கட்டிலருகில் குப்பை பெருக்கிக்கொண்டே, அரைத் தூக்கத்திலிருக்கும் அரசன் காதில் விழும்படியாக, ”அடபாவமே! நம் அரசருக்குத்தான் என்ன பகுத்தறிவு! மலஜலம் கழிக்கிற நேரத்திலல்லவா வெள்ளரிக்காய் சாப்பிடுகிறார்!” என்று சொன்னான்.

அதைக் கேட்டதும் ஆச்சரியத்துடன் அரசன் எழுந்து உட்கார்ந்தான்.

”கோரபனே! என்ன, அவமரியாதையாகப் பேசுகிறாய். அரண்மனை வேலைக்காரன் என்பதினால் கொல்லாமல் விட்டேன். அப்படிப்பட்ட காரியம் நான் செய்ததை என்றைக்காவது பார்த்திருக்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டான்.

”அரசே! சூதாட்டத்தின் மேலுள்ள மோகத்தால் இரவெல்லாம் கண்விழித்திருந்தேன். பெருக்கிக்கொண்டிருந்த போதிலும் தூக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. தூக்கத்தில் என்ன உளறினேன் என்று எனக்கே தெரியாது. தூங்கியதற்காக மன்னியுங்கள்!” என்று அவன் விடையளித்தான்.

அரசன் யோசிக்கலானான். ”பிறந்தது முதல் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் வெள்ளரிக்காய் தின்றதில்லை. இந்த முட்டாள் நம்மைப் பற்றி நடக்காததையெல்லாம் உளறிவைத்த மாதிரிதான் அன்றைக்குத் தந்திலனைப் பற்றியும் உளறியிருக்க வேண்டும். இது நிச்சயம். தந்திலனுக்குக் கொடை அளிப்பதை நாம் நிறுத்திவிட்டது பிசகு. அவனைப் போன்றவர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். மேலும், அவன் இல்லாமல் அரசாங்க வேலைகளும், நகராட்சி வேலைகளும் சீர்கெட்டுத் தாறுமாறாக நடந்து வருகின்றன” என்று எண்ணங்கள் ஓடின.

பிறகு அரசன் ஒரு முடிவுக்கு வந்தான். தந்திலனை அரண்மனைக்கு வரவழைத்தான். தான் அணிந்திருந்த வஸ்திரங்களையும், ஆபரணங்களையயும் எடுத்து அரசன் அவனுக்குக் கொடையாக வழங்கினான். பழையபடியே அவனை அதிகாரத்தில் வைத்தான்.

அதனால்தான், ‘கர்வத்தால் சேவகர்களைச் சரியாக நடத்தாதவன் காலிடறி விழுகிறான்…’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்று தமனகன் கூறி முடித்தது.

”நண்பனே! நீ சொல்வது சரிதான். அதன்படியே செய்கிறேன்” என்று சஞ்சீவகன் பதிலளித்தது.

பிறகு சஞ்சீவகனை அழைத்துக்கொண்டு தமனகன் பிங்களகனிடம் சென்றது. ”அரசே! இதோ சஞ்சீவகனை அழைத்து வந்திருக்கிறேன். இனி தங்கள் இஷ்டம்!” என்றது.

சிங்கத்தை மிகுந்த மரியாதையோடு சஞ்சீவகன் நமஸ்கரித்து விட்டு பணியுடன் எதிரே நின்றது.

வஜ்ஜிராயுதம் போன்று நகங்கள் அணிந்த திடமான அகன்ற தன் வலது கையைப் பிங்களகன் உயரத் தூக்கியவாறே, ”தாங்கள் சௌக்கியந்தானா? ஏன் இந்த மனித நடமாட்டம் இல்லாத காட்டில் வசிக்கிறீர்கள்?” என்று மரியாதையுடன் விசாரித்தது.

வியாபாரி வர்த்தமானன் முதலியவர்கள் தன்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற முழு விருத்தாந்தத்தையும் சஞ்சீவகன் சொல்லியது. இதைக்கேட்ட பிங்களகன், ”நண்பனே, பயப்படாதே! என் கை வல்லமையின் பாதுகாப்பிலே தங்கி, இங்கே உன்னிஷ்டம் போல் இரு. ஆனால் ஒரு விஷயம். நீ என் அருகிலிருந்துகொண்டே விளையாடிக் கொண்டிரு. இந்தக் காட்டில் பல துஷ்ட மிருகங்கள் இருக்கின்றன. பல அபாயங்கள் நேரிடலாம்” என்று கூறிற்று.

”தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்” என்றது சஞ்சீவகன்.

இப்படிப் பேசி முடித்து, மிருகராஜன் யமுனைக் கரைக்குச் சென்றது. விருப்பம் போல் ஸ்னானமும் பானமும் செய்துவிட்டு, மீண்டும் காட்டில் புகுந்த தன்னிஷ்டம் போல் சுற்றித் திரியலாயிற்று.

இப்படியே காலம் சென்றது. அவ்விரண்டுக்குமிடையே அன்பும் வளர்ந்து கொண்டே போயிற்று. சஞ்சீவகன் பல சாஸ்திரங்கள் படித்து அறிவு வளர்ச்சி பெற்றிருந்தது. முட்டாளாகிய பிங்களகனுக்கு அவற்றைப் போதித்துச் சில நாட்களிலேயே அறிவாளியாக்கியது. காட்டு தர்மத்திலிருந்து சிங்கத்தை மீட்டு கிராமிய தர்மத்தில் ஈடுபடச் செய்தது. மிருகங்களை அடித்துக் கொல்லும் வழக்கத்தைச் சிங்கம் விட்டொழித்தது. சுருங்கச் சொன்னால், தினந்தோறும் சஞ்சீவகனும் பிங்களகனும் இரகசியமாகப் பேசிக்கொண்டேயிருந்தன. இவையிரண்டும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது மற்ற மிருகங்களெல்லாம் தூரத்தில் நின்றன. கரடகன் தமனகன்கூட உள்ளே நுழைய முடியவில்லை. சிங்கத்தின் பராக்கிரமம் வெளியிடப்படாமலே போனதால் அவ்விரு நரிகளும் இதர மிருக பரிவாரங்களும் சாப்பிடுவதற்கு வழியின்றி பசியால் வாடிப்போய் ஓரிடத்தில் கூடி நிற்கின்றன. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

உயர் குலத்தவனாகவும், பெருமை மிகுந்தவனாகவும் அரசன் ஒருவன் இருக்கலாம். ஆனபோதிலும், அவனிடமிருப்பதில் லாபமில்லை எனறாலும் வேலையாட்கள் அவனைவிட்டு விலகி விடுகின்றனர். பட்டுப்போன மரத்தைப் பறவைகள் விட்டுச் செல்கின்றன அல்லவா?

மரியாதையுள்ளவர்களாகவும், உயர்குலத்தினராகவும், எஜமான் விசுவாசமுள்ளவர்களாகவும் வேலையாட்கள் இருக்கலாம். ஆனால் சம்பளம் கொடுக்காத அரசனை அவர்கள் கூடத்தான் விட்டுச் செல்கிறார்கள்.

குறித்த காலத்தில் சம்பளம் கொடுக்கும் அரசன் எவ்வளவுதான் கோபித்தாலும் அவனை வேலையாட்கள் ஒருபொழுதும் விட்டுச்செல்ல மாட்டார்ககள்.

இது என்னமோ உண்மைதான்!

அரசர்கள் நாடுகளை விழுங்குகின்றனர்; வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகின்றனர்; வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள், பண்டிதர்கள் முட்டாள்களை விழுங்குகின்றனர்; திருடர்கள் ஏமாந்த பேர்வழிகளை விழுங்கு கின்றனர்; பிச்சைக்காரர்கள் குடும்பஸ்தர்களை விழுங்குகின்றனர்; வேசிகள் காமுகர்களை விழுங்குகின்றனர்; வேலை எல்லோரையும் விழுங்குகிறது.

அரசர்கள் நான்கு உபாயங்களையும் கையாள்வார்கள்; இராப்பகலாகத் தருணம் பார்த்திருப்பார்கள்; சமயம் வரும்போது சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவதுபோல், தமது பலத்தால் ஜீவிக்கிறார்கள்.

கரடகனுக்கும் தமனகனுக்கும் ராஜகிருபையும் இல்லாது போயிற்று, இரையும் இல்லாது போயிற்று-. பசியால் தொண்டை வறண்டு போய் உட்கார்ந்து அவ்விரு நரிகளும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.

”நண்பனே! அரசருக்கு இப்பொழுதெல்லாம் நாம் முக்கியமில்லை என்றாகி விட்டது. சஞ்சீவகனின் பேச்சில் மோகங்கொண்டு அதில் அவர் மூழ்கிக்கிடக்கிறார். தன் சொந்த விவகாரங்களில்கூட அசிரத்தைக் காட்டுகிறார். அரச பரிவாரங்கள் எங்கெங்கோ பிரிந்து கலைந்து போய்விட்டன. இனி நாம் என்ன செய்வது?” என்று கேட்டது தமனகன்.

”உன் பேச்சை அரசர் காதில் போட்டுக்கொள்ளாவிட்டாலும் சரி. நீ அவரை எச்சரித்துத் திருத்த வேண்டும். ஒரு பழமொழி கூறுவதுபோல்:

அரசர்கள் காதில் போட்டுக் கொள்ளாவிட்டாலும் சரி, அவர்களின் குற்றங்களைத் தவிர்க்கும் பொருட்டு, விதுரன் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்த மாதிரி, மந்திரிகள் அரசனுக்குப் புத்திமதிகள் சொல்ல வேண்டும்.

கர்வங்கொண்ட மன்னனை மந்திரிகளும், மதயானையைப் பாகனும், கைவிடமாட்டாரர்கள்.

மேலும், இந்தப் புல்தின்னும் பிறவியை மன்னருடன் சேர்த்து வைத்தது உன் குற்றம். உன் கையாலேயே கட்டைக்கு நெருப்பு வைத்தாய்?” என்றது கரடகன்.

”வாஸ்தவம், குற்றம் என்னுடையதுதான். அரசருடையதல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

ஆட்டுச் சண்டையால் குள்ளநரியும், ஆஷாடபூதியால் நம்மைப் போன்றவர்களும், பிறர் காரியங்களில் பிரவேசிக் கிறவர்களும், தமக்குத்தாமே தீங்கு விளைத்துக் கொள்கின்றனர்”

என்று குறிப்பிட்டது தமனகன்.

”அது எப்படி?” என்று கரடகன் கேட்க, தமனகன் சொல்லத் தொடங்கியது.

http://puthu.thinnai.com/?p=3742

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் - 6 நெடுக்ஸுக்கும் அவர்போன்றவர்களுக்கும் மிகவும் பிடிக்கும் :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்

அன்னபூர்னா ஈஸ்வரன்

ஒரு காட்டில் தனியே ஓரிடத்தில் மடாலயம் ஒன்று இருந்தது. அதில் தேவ சர்மா என்னும் சந்நியாசி யொருவன் இருந்தான். அவன் பல யக்ஞங்கன் நடத்தியதற்குப் பிரதியாக பக்தர்கள் பலர் அவனுக்குப் பல நேர்த்தியான ஆடைகள் அளித்திருந்தனர்.

அவற்றை விற்று அவன் நாளடைவில் பெருஞ்செல்வம் திரட்டினான். பணம் சேரவே, அவன் யாரையும் நம்பவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பணப்பையைத் தனது அக்குளில் வைத்துக் கொண்டபடியே திரிந்தான். இரவும் பகலும் அது அவனைவிட்டு நீங்கவே நீங்காது.

பணம் சேர்ப்பதிலும் துக்கம்; சேர்த்தபின் காப்பதிலும் துக்கம்; இழந்தாலும் துக்கம்; செலவழித்தாலும் துக்கம்; சீச்சீ, எப்பொழுது பார்த்தாலும் துக்கந்தான்

என்கிற பேச்சு ரொம்பவும் சரி.

அவன் பணப்பையை அக்குளில் வைத்துப் பத்திரமாகத் தூக்கித் திரிவதை ஆஷாடபூதி என்ற துஷ்டத் திருடன் ஒருவன் கவனித்துவிட்டான். அதை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். ”மடாலயம் கனமான கற்களால் கட்டப் பட்டிருக்கிறது. எனவே, அதை உடைத்துக்கொண்டு செல்ல முடியாது. இவனோடு பேசி நம்ப வைத்து இவனுக்குச் சிஷ்யனாகிறேன். என்னிடம் நம்பிக்கை கொள்ளும்படி செய்து என் வசமாக்குகிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்:

பற்றறுத்தவன் அதிகார பீடத்தில் அமர மாட்டான்; காம மற்றவன் அலங்காரப் பிரியன் ஆகமாட்டான்; புத்தியற்றவன் முகஸ்துதி செய்யமாட்டான்; சத்தியம் பேசுபவன் வஞ்சகனாக மாட்டான்.

என்றெல்லாம் யோசித்து ஆஷாடபூதி ஒரு முடிவுக்கு வந்தான். சந்நியாசி அருகில் போய், ”ஓம் நமோ சிவாய!” என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். மரியாதையோடு, ”சுவாமி! இந்த உலகம் சாரமற்றது. வாலிபமோ மலையருவியின் வேகத்துக்கொப்பானது. வாழ்க்கையோ புல்லில் பிடித்த நெருப்புக்குச் சமமானது, சுகபோகங்களோ மேகத்தின் நிழலுக்கு ஒப்பானவை, புத்திரன், மித்திரன், வேலையாள், மனைவி முதலியோரின் பாசமோ கனவு போன்றது. இவை யாவும் எனக்கு நன்றாகத் தெரியும். தங்களிடம் வந்திருக்கிறேன். சம்சார சாகரத்தைக் கடக்க நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

இந்தச் சொற்களைக் கேட்டதும், தேவசர்மா ஆதரவுடன், ”குழந்தாய்? இவ்வளவு சிறிய வயதிலேயே இப்படி விரக்தியடையந்த நீதான் பாக்கியசாலி. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

இள வயதில் யோகியாகிறவன் தான் உண்மையான யோகி. ஐம்புலன்களும் நலிந்துபோன பின் எவனுக்குத்தான் புலனடக்கம் சாத்தியமில்லை? நல்லவர்களிடம் முதலில் மனமும் பிறகு உடலும் முதுமையடைகின்றன. கெட்டவர்களிடம் உடல் முதுமையடைகிறதே யொழிய, மனம் முதுமை அடைவதேயில்லை.

சம்சார சாகரத்தைக் கடக்கும் உபாயம் கேட்டாய். சொல்கிறேன் கேள்?

”சூத்திரன், அந்நியன், சண்டாளன், ஜடைதரித்தவன் என்றபடி யாராயிருந்தாலும் சரி, சிவ மந்திரங்களால் உபதேசம் பெற்று விட்டால் அவன் விபூதி தரித்த பிராம்மணனாகிறான்.

ஆறு எழுத்து மந்திரத்தைச் சொல்லி, கூடவே ஒரு பூவை லிங்கத்தின் முடியில் வைக்கிறவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.”

என்றான் தேவர்மா.

இதைச் செவியுற்ற ஆஷாடபூதி அவன் பாதங்களைப் பிடித்துக்கொண்டு மரியாதைமிக்க சூரலில், ”சுவாமி! எனக்கு ஒரு விரதம் அருளிச் செய்து அனுக்கிரகியுங்கள்” என்று வேண்டினான்.

”அப்படியே செய்கிறேன். இரவில் நீ மடாலயத்தில் நுழையக் கூடாது. ஏனெனில் ஒன்று சேராமலிருக்கும்படி சந்நியாசிகளுக்கும் உனக்கும் எனக்கும், சொல்லப்பட்டிருக்கிறது.

துர்ப்போதனையால் அரசன் கெடுகிறான்; சகவாசத்தால் சந்நியாசி கெடுகிறான்; செல்லம் கொடுப்பதால் குழந்தை கெடுகிறது; கல்வி கற்காமையால் பிராம்மணன் கெடுகிறான்; கெட்டபுத்திரனால் குலம் கெடுகிறது; முட்டாளின் பேச்சால் குணம் கெடுகிறது; மரியாதைக் குறைவால் சிநேகம் கெடுகிறது; பிரிவால் பாசம் கெடுகிறது; மதுவினால் ஸ்திரீ கெடுகிறாள்; அசிரத்தையால் வயல் கெடுகிறது; துன்மார்க்கத்தனத்தால் தனம் கெடுகிறது; ஊதாரித் தனத்தாலும் அசிரத்தையாலும் பொக்கிஷம் கெடுகின்றது.

ஆகையால் நீ விரதம் எடுத்துக்கொண்டு மடத்தின் வாயிற்புறத்திலுள்ள புல் குடிசையில் படுக்க வேண்டும்,” என்று சந்நியாசி கூறினான்.

”சுவாமி! உங்கள் கட்டளைப்படியே செய்கிறேன். மறுமையில் பலன் கிடைக்கும்” என்றான் அவன். படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் தேவசர்மா அவனுக்கு உபதேசம் செய்து தனது சிஷ்யனாக்கிக் கொண்டான். ஆஷாடபூதி குருவுக்குக் கால் பிடித்துவிட்டான். காகிதம் முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான், இன்னும் பல உபசாரங்கள் செய்து சந்தோஷமுண்டாக்கினான். ஆனால் என்னதான் எவ்வளவுதான் செய்தபோதிலும் சந்நியாசி மட்டும் பணப்பையை அக்குளிலிருந்து எடுக்கவேயில்லை.

இப்படியே காலம் சென்றது. கடைசியில், ”அட கஷ்டகாலமே! இவனுக்கு என்மேல் நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறதே! பகலிலேயே இவனைக் கொன்றாலென்ன? விஷம் தந்தாலென்ன? பசுவைச் சாகடிப்பது போல் சாகடித்தால் என்ன?” என்றெல்லாம் சிஷ்யன் சிந்தித்தான்.

இப்படி யோசனையிலாழ்ந்திருக்கும் பொழுது, தேவசர்மாவின் இன்னொரு சிஷ்யனின் புத்திரனொருவன் குருவை அழைத்துச்செல்ல கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தான். ”சுவாமி! உபநயனச் சடங்குகளுக்காக என் வீட்டுக்குத் தாங்கள் வந்தருள வேண்டும்” என்றான்.

அதற்கிணங்கிய தேவசர்மா உடனே ஆஷாடபூதியுடன் பயணம் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு நதி வந்தது. அதைப்பார்த்ததும் அவன் தன் அக்குளிலிருந்த பணப்பையை எடுத்து ஒரு கந்தல் துணியில் மறைத்து வைத்து, தெய்வார்ச்சனை செய்துவிட்டு ஆஷாடபூதியிடம் வந்தான். ”சிஷ்யனே! நான் மலஜலம் கழித்துவிட்டு வரும் வரை இந்தக் கந்தையையும் இதர சாமான்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று கூறி அவற்றை அவனிடம் ஒப்படைத்துச் சென்றான். கண்ணிலிருந்து அவன் மறைந்தானே இல்லையோ ஆஷாடபூதி பணப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

http://puthu.thinnai.com/?p=3986

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்

அன்னபூர்னா ஈஸ்வரன்

சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். மந்தையின் இடையே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் கண்டான். ஆடுகளிரண்டும் ஆங்காரத்துடன் விலகிப் பின் வாங்குவதும், மீண்டும் ஓடிவந்து அகன்ற நெற்றி மண்டைகளோடு ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வதுமாயிருந்தன. மண்டையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. பேராசை பிடித்த குள்ளநரியொன்று இந்த சண்டையைப் பார்த்தது. மாமிசம் தின்ன விரும்பிய நரி அவற்றிற்கிடையே புகுந்து ரத்தத்தைப் பருகி ருசித்தது. இதைத் தேவசர்மா கவனித்தான், ”அடபாவமே! இந்தக் குள்ளநரியின் மடத்தனத்தைப் பார்! ஆட்டுச்சண்டையினிடையே சிக்கிக் கொண்டால் இந்த நரி நிச்சயம் சாகும். வேறெதுவும் நடக்கப்போகிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை” என்று சிந்தித்தான்.

மீண்டும் ஒருமுறை ஆடுகள் முட்டிக்கொள்ள நெருங்கின. ரத்தத்தை ருசி பார்த்து ருசி பார்த்து ஆவலோடு நெருங்கி வந்து கொண்டேயிருந்த குள்ள நரி இடையே சிக்கிக்கொண்டது. கீழே தள்ளப்பட்டு உயிர் விட்டது. ”ஆட்டுச் சண்டையிலே குள்ளநரி செத்தது” என்று சொல்லி அதைப் பற்றிச் சிந்தித்தபடியே தேவசர்மா நடக்கலானான், பணப்பையைப் பெற்றுக் கொள்வதற்காகத் திரும்பி வரலானான்.

யோசனையிலே மூழ்கிப்போய் மெதுவாக நடந்துவந்த தேவசர்மா, ஆஷாடபூதி கண்ணில் தட்டுப்படவில்லை என்று கண்டதும் அவசர அவசரமாகக் கால் கழுவிக் கொண்டு திரும்பிவந்து கந்தையைப் பிரித்துப் பார்த்தான். பணப்பை காணவில்லை. ”ஐயையோ, திருடிவிட்டானே! திருடிவிட்டானே!” என்று கூக்குரலிட்டுக் கொண்டே மூர்ச்சை போட்டுத் தரையில் விழுந்தான். ஒரு கணப் பொழுதில் மீண்டும் நினைவு பெற்று எழுந்து உட்கார்ந்தான். ”ஆஷாடபூபதியே! என்னை வஞ்சித்து விட்டு எங்கே போனாய்? பதில் சொல்!” என்று பலபடி அலறினான். கடைசியில் அவனுடைய காலடி அடையாளங்களைத் தேடிப் பின்பற்றியவாறு ”ஆஷாடபூதியால் வஞ்சிக்கப் பட்டோம்” என்று முணுமு1துக்கொண்டே மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினான்.

நெசவாளியின் மனைவி

போகிற வழியில் பக்கத்து நகரத்தில் கள் குடிப்பதற்காகத் தன் மனைவியோடு சென்று கொண்டிருந்த ஒரு நெசவாளியைத் தேவசர்மா சந்தித்தான். ”நண்பனே! அஸ்தமன வேளையில் விருந்தாளியாக உன்னிடம் வந்திருக்கிறேன். இந்தக் கிராமத்தில் யாரும் எனக்குத் தெரியாது. அதிதி தர்மத்தைச் செய்வாவாயாக! ஒரு பழமொழி கூறியிருப்பதுபோல்:

அந்திப் பொழுதில் வந்த விருந்தாளியைக் குடும்பஸ்தர்கள் தள்ளக்கூடாது. விருந்தாளியைப் பூஜிப்பதால் ஒருவன் தெய்வாம்சம் பெறுகிறான்.

நல்லவர்கள் இல்லத்தில் கோரைக்கும், தரைக்கும், நீக்கும் நல்ல சொல்லுக்கும் எனறும் குறைவில்லை.

விருந்தாளியைக் கண்டு ”வருக” என்று வரவேற்பதால் அக்னியும், ஆசனமளிப்பதால் இந்திரனும், கால் கழுவுவதால் கிருஷ்ணபகவானும், அன்னமளிப்பதால் பிரஜாபதியும், திருப்தியடை கின்றனர்.

என்றான் தேவசர்மா.

இதைக்கேட்ட நெசவாளி தன் மனைவியைப் பார்த்து, ”அன்பே! இந்த விருந்தாளியை அழைத்துக்கொண்டு நீ வீட்டுக்குப் போ. கால் கழுவி, ஆகாரம், படுக்கை முதலியவை தந்து உபசரித்து நீ அங்கே இரு. நான் போய் உனக்கு நிறைய மதுவும் மாமிசமும் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

தேவசர்மாவை அழைத்துக்கொண்டு, யாரோ பரபுருஷனை மனதில் எண்ணியபடி சிரித்த முகத்தோடு அந்த வேசி மனைவி வீடுநோக்கி நடந்தாள். ஒரு பழமொழி கூறுவதுபோல்:

அமாவாசையன்று இருட்டிக் கிடக்கிற போதும், நகர் தெருக்களில் சேறு குழம்பி நிற்கும்போதும், கணவன் வெளியூருக்குச் சென்றிருக்கும்போதும் சோரம் போகிறவளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

கள்ளக்காதலனைக் கொண்ட பெண்கள் கட்டிலில் கணவனோடு படுத்து இன்பமாய்த் தூங்குவதை புல்லுக்குச் சமானமாகக் கருதுகிறார்கள்.

பரபுருஷனைச் சேரும் மனைவி தன் குலநாசத்திற்கும், ஊராரின் பழிச் சொல்லுக்கும், சிறை வாசத்திற்கும், ஏன், மரணத்திற்கும் கூடத் துணிந்துவிடுகிறாள்.

நெசவாளியின் மனைவி வீடு அடைந்ததும் தேவசர்மாவுக்கு ஒரு உடைந்த கட்டிலைக் காட்டி, ”உத்தமரே! கிராமத்திலிருந்து என் சிநேகிதியொருத்தி வந்திருக்கிறாள். அவளைக் கண்டு பேசிவிட்டு சடுதியில் வந்து விடுகிறேன். வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினாள். தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு யாரோ ஒரு புருஷனை நாடி வெளியே சென்றாள்.

போகிற வழியில், கள் குடித்து உடல் தளர்ந்து போய் கையில் ஒரு கள் பானையைப் பிடித்துக்கொண்டு தலைவிரி கோலமாய் தள்ளாடி தள்ளாடி நடந்தபடி அவளுடைய புருஷன் எதிரே வந்தான். அவனைக் கண்டதும் அவள் சரேலென்று வீடு நோக்கி ஓட்டம் பிடித்தாள். உள்ளே போய் அலங்காரத்தையெல்லாம் கலைந்து விட்டு முன்போலவே இருந்து கொண்டாள். அலங்காரங்களுடன் ஓடுகிற மனைவியை நெசவாளி பார்த்துவிட்டான். அவள் நடத்தையைப் பற்றி ஜனங்கள் பேசிக்கொள்வதை ஏற்கனவே பராபரியாகக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, வருத்தமும், கோபமும் அடைந்து வீட்டில் நுழைந்தான். ”அடி பாவி! வேசி! எங்கே புறப்பட்டாய் வெளியே?” என்று கத்தினான்.

”உன்னை விட்டு வீட்டுக்கு வந்தபின் நான் எங்கும் போகவில்லையே? குடிபோதையிலே ஏன் என்னைத் திட்டுகிறாய்? ஒரு பழமொழி கூறுவது போல்:

உடல் நடுக்கம், தரையில் சாய்தல், தகுதியற்ற பிதற்றல், இவை எல்லாம் குடிபோதைக்கும் காயச்சலுக்கும் உள்ள அடையாளங்கள்.

கையோங்குவது, உடை நழுவவிடுவது, பலம் குறைவது, கோபப்படுவது, – இவை எல்லாம் குடிகாரனின் அவஸ்தைகளாகும்.

கிரணங்கள் வீசுவது, வானதத்தைத் துறப்பது, ஒளி மங்குவது, செந்நிறம் கொள்வது, இவை எல்லாம் அஸ்தமிக்கிற சூரியனுக்கு உண்டு.

(சூரியனுக்கும் குடிகாரனுக்கும் சிலேடையாக இந்தச் செய்யுள் அமைந்துள்ளது.)

எதிர்த்துப் பேசுகிற மனைவி உடை மாற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்த நெசவாளி, ”விபச்சாரி! வெகுநாளாக உன்னைப் பற்றி ஊரில் பல அபவாதங்களைக் கேட்டு வருகிறேன். இன்றைக்கு எனக்கே ருஜு கிடைத்துவிட்டது. இப்பொழுதே தகுந்தபடி தண்டிக்கிறேன், பார்!” என்று சொல்லி ஒரு தடியெடுத்துவந்து அவளை அடி அடி என்று அடித்தான். தூணோடு சேர்த்துக் கெட்டியாகக் கட்டிப் போட்டான். பிறகு குடிபோதையிலே உடல் சோர்ந்து படுத்து அயர்ந்து தூங்கினான்.

அந்த நேரத்தில் அவள் சிநேகிதியான நாவித ஸ்திரீ ஒருத்தி வந்து, நெசவாளி தூங்குவதைக் கண்டு வீட்டில் நுழைந்தாள்.

”என்னடீ, அந்த ஆள் அங்கே உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானே! சீக்கிரம் போ!” என்று கூறினாள்.

”என் அவஸ்தையைப் பார்! நான் எப்படிப் போவேன்? இப்போது அவனைச் சேரமுடியாது என்று போய்ச் சொல்லிவிடு!” என்றாள் நெசவாளியின் மனைவி.

”அப்படிச் சொல்லாதேடீ! அது வேசிகளின் தர்மமல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

சிரமத்தையும் தூரத்தையும் பாராமல் இன்பமனுபவிக்கிறவன் இருக்கிறானே, அவன் ஒரு ஒட்டகம் மாதிரி, எதைக் காண்கிறானோ அதையே விடாமல் பின் தொடர்கிறான்.

மறு உலகம் என்பது சந்தேகமான விஷயம். உலகத்தின் பழிச் சொல்லோ விந்தையானது. எனவே, பிறத்தியாரின் கணவன் தன் கைவசமாகும்போது அவன் சுகததை அனுபவிக்கிறவளே பாக்கியசாலி.

காதலன் என்று இருந்தால் போதும், அவன் குரூபியாயிருந்தாலும் கஷ்டங்கள் யாவற்றையும் சகித்துக்கொண்டு சோரம் போனவள் அவனை இரகசியத்தில் கூடுகிறாள்.

”என்னைக் கட்டிப்போட்டிருக்கிறதே, எப்படிப் போவேன்? அந்தப் பாவி புருஷனும் இங்கேயே தூங்குகிறானே!” என்றாள் நெசவாளியின் மனைவி.

”அவன் குடிபோதையிலே சோர்ந்து தூங்குகிறான். விடிந்த பிறகுதான் விழித்துக்கொள்ளப் போகிறான். உன்னை விடுவித்து உன் இடத்தில் நான் இருந்து கொள்கிறேன். நீ போய் அந்த ஆளைச் சேர்ந்துவிட்டு சீக்கிரம் திரும்பி வந்துவிடு!” என்றாள் நாவித ஸ்திரீ.

நெசவாளியின் மனைவி வெளியே சென்றாள். கொஞ்ச நேரத்தில் நெசவாளி கண்விழித்தான். கோபம் சிறிது தணிந்திருந்தது. ஆனால் கள்வெறி இன்னும் தொலைந்தபாடில்லை. அவளைப் பார்த்து, ”ஏ பொய் சொல்லி! இன்று முதல் வீட்டை விட்டுப் போக மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன் என்று சொல்! உன்னை விடுவிக்கிறேன்!” என்று சொன்னான்.

பேசினால் குரல் வேறுபாடு தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுமே என்று பயந்துபோய் நாவித ஸ்திரீ பதில் பேசாமலிருந்தாள். அவன் சொன்னதையே திருப்பவும் சொல்லிப் பார்த்தான். அதற்கும் அவள் பேசாமலே இருந்தாள். அவனுக்கு ஒரே ஆத்திரமாய்ப் போய்விட்டது. ஒரு கூரிய கத்தி எடுத்து வந்து அவளுடைய மூக்கை அறுத்துவிட்டான். ”வேசி! இங்கேயே கிட! உன்னோடு இனிமேல் நான் சந்தோஷமாயிருக்கப் போவதில்லை, போ!” என்று கத்திவிட்டு, மறுபடியும் நித்திரையில் ஆழ்ந்துவிட்டான்.

பணப்பை பறி கொடுத்ததினால் உண்டான மனோவேதனையும், பசியால் தொண்டை வறண்டுபோயிருந்த நிலைமையும், சேர்ந்து தேவசர்மாவுக்குத் தூக்கம் வரவொட்டாமற் செய்தன. படுத்துக்கிடந்த படியே அந்த ஸ்திரீயின் சகல நடவடிக்கைகளையும் அவன் கவனித்துக்கொண்டிருந்தான்.

நெசவாளியின் மனைவி தன் கள்ளக் காதலனோடு விருப்பம்போல் சுகித்துவிட்டுக் கொஞ்ச நேரத்தில் வீடு திரும்பினாள். ”ஏண்டீ நீ சரியாகத்தானே இருக்கிறாய்? நான் இல்லாதபோது இந்தப்பாவி எழுந்திருக்கவில்லையா?” என்று சிநேகிதியைக் கேட்டாள்.

”மூக்கு மட்டும் இல்லை, மற்றபடி உடம்புக்குச் சௌக்கியந்தான்! சீக்கரம் கட்டவிழ்த்துவிடு. அவன் எழுந்திருப்பதற்குள் விடுவித்துவிடு. வேகமாய் வீட்டுக்குப் போய்விடுகிறேன். இல்லாவிட்டால் இன்னும் மோசமாகக் காது முதலியவற்றை அறுத்துவிடுவான்” என்றாள் சிநேகிதி.

நாவித ஸ்திரீயைக் கட்டவிழ்த்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பெண் அவள் ஸ்தானத்தில் கட்டுண்டு நின்றாள். புருஷனை நிந்திக்கத் தொடங்கினாள். ”சீச்சீ, பரம முட்டாள்! நான் சாது, நான் மகாபதிவிரதை. என்னைக் கெடுக்கவோ, அங்கஹீனம் செய்யவோ யாரால் முடியும்? ஹே, உலகை ரட்சிக்கும் தெய்வங்களே, கேளுங்கள்.

சூரியனே! சந்திரனே! வாயுவே! அக்னியே! வானமே!

பூமியே! ஜலமே! மனமே! யமனே! பகலே! இரவே! காலை மாலைச் சந்திகளே! மனித நடத்தையின் நியாயத்தை அறியுங்கள்!

நான் பதிவிரதையானால் முன்போல் எனக்கு மூக்கு உண்டாகும்படி தேவர்கள் செய்யட்டும்; அப்படியில்லாமல் நான் பரபுருஷனை மனத்தால்கூட விரும்பியிருந்தால் என்னைச் சாம்பலாக்கட்டும்!” என்று சொன்னாள். மறுபடியும் கணவனைப் பார்த்து, ”துராத்மா! என்னைப் பார்! என் கற்பின் மகிமையால் முன்போலவே எனக்கு மூக்கு உண்டாகிவிட்டது!” என்றாள்.

நெசவாளி விளக்கு எடுத்துவந்து பார்த்தான். அவளுக்கு மூக்கு இருப்பதையும், தரையெல்லாம் ஒரே ரத்தவெள்ளமாயிருப்பதையும் கண்டுவிட்டு அவன் ஆச்சரியமடைந்து போனான். உடனே அவளைக் கட்டிலிருந்து விடுவித்து, பல இனிய மொழிகள் பேசி, அவளை திருப்தி செய்தான்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேவசர்மா ஆச்சரியத்தோடு பின்வருமாறு சொன்னான்:

உசனன் (அசுரர்களின் குரு) அறிந்த சாஸ்திரமு, பிரகஸ்பதி (தேவர்களின் குரு) அறிந்த சாஸ்திரமும் ஸ்திரீ சாகஸத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. இந்த நிலைமையில், ஸ்திரீகளைக் கட்டுப்படுத்தி வைப்பது சாத்தியமா?

பொய்யும் சாகஸமும், ஏமாற்றும் மடமையும், பேராசையும், அசுத்தமும், இரக்கமின்மையும் பெண்களின் கூடப்பிறந்த தோஷங்களாகும்.

பெண்ணழகுக்கு அடிமையாகிவிடாதே! உன்னைத் துன்புறுத்தக்கூடிய சக்தி அவர்களிடம் அதிகரிக்கச் செய்ய விரும்பாதே! சிறகொடிந்த பறவைகளுடன் விளையாடுவது போல் அடிமைப்படும் ஆண்களுடன் அவர்கள் விளையாடு கிறார்கள்.

பெண்கள் வாயில் தேனும், நெஞ்சில் நஞ்சும் இருக்கின்றது. அதனால்தான் ஆண் அவளது வாயிதழ்களைப் பருகுகிறான், நெஞ்சில் அறைகிறான்.

சந்தேகம் நிறைந்த குளம்; வணக்க மின்மையின் அரண்மனை; சாகஸத்தின் தலைநகர்; தோஷங்களின் சமூகம்; எண்ணிலா ஏமாற்றங்களின் இருப்பிடம்; அவநம்பிக்கையின் கோவில்; சகல மாயைகளும் நிரம்பித் தளும்பும் கலயம்; உத்தமர்கள் பெறத் தகுதியற்ற அமுதமயமான விஷம்; இதுதான் பெண். தர்மத்தை அழிப்பதற்கு இந்தக் கருவியை யார் சிருஷ்டித்தார்களோ?

கனமுலையும், சுடர்விழியும், பிறை நுதலும் போற்றப் படுகின்றன. சுருள் கூத்தலும், மென் சொல்லும், பரந்த நிதம்பமும், மட நெஞ்சும், சாகஸப் பேச்சும் பெண்களின் லட்சணங்கள். அவை தோஷங்களின் கூட்டுத்தொகை. மான் விழி மாதரை விலங்குகள் விரும்பட்டும், மனிதர்கள் நேசிக்க வேண்டாம்.

பெண்கள் அழுவதும் சிரிப்பதும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளத்தான். உன் நம்பிக்கையைப் பெற்றுப் பேணுகிறார்கள்; தாம் மட்டும் பிறரை நம்பவே மாட்டார்கள்; சுடுகாட்டுச் சட்டிகள் போன்ற இவர்களை குலமும் குணமும் உள்ள மனிதர்கள் விலக்கிவிட வேண்டும். பரந்து அடர்ந்த பிடரிமயிருடன் பயங்கரமாய்த் தோற்றமளிக்கும் சிங்கங்களும், மதஜலப் பெருக்கால் கன்னங்கள் பிரகாசிக்கும் யானைகளும், அறிவாற்றலில் மேதாவிகளாய் போரில் வீரர்களாய் விளங்குபவர்களும், ஸ்திரீகளின் முன்னே கோழையிலும் கோழையாகி விடுகின்றனர். உள்ளே விஷம் நிரம்பி, வெளியே அழகு சொட்டும் காஞ்சிரப்பழம் மாதிரி பெண்! இவளை யார் சிருஷ்டித்தார்களோ!

இப்படியெல்லாம் அந்தச் சந்நியாசி சிந்தித்தவாறே அன்றிரவு முழுவதும் கழிந்தது.

மூக்கறுபட்ட நாவித ஸ்திரீ வீடு போய் சேர்ந்தாள். ”இனி என்ன செய்வது? இந்தப் பெரிய அங்கஹீனத்தை மறைப்பதெப்படி?” என்று சிந்திக்கலானாள். இந்த யோசனைகளிலே இரவு முழுவதும் இவள் ஆழ்ந்திருக்க, இவள் புருஷன் அரண்மனையிலே காரியம் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் அவன் வீடு திரும்பினான். பலவிதமான நகர அலுவல்களைப் பார்க்க வேண்டியிருந்த அவசரத்தில் அவன் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு, அன்பே! ஷவரப் பெட்டியைச் சீக்கிரம் எடுத்துவா! நான் நகர வேலைகளைப் பார்க்கப் போகவேண்டும்” என்று பெண்டாட்டிக்குக் குரல் கொடுத்தான்.

மூக்கறுபட்ட மனைவிக்கு ஒரு யோசனை உதித்தது. வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு அவனை நோக்கி ஒரே ஒரு கத்தியை மட்டும் எடுத்து வீசி யெறிந்தாள். ஷவரப் பெட்டியைக் கேட்டாள் வெறும் கத்தியை மட்டும் எடுத்து வீசுகிறாளே என்று கோபமடைந்தான் நாவிதன். அந்தக் கத்தியை அவள்மேல் திருப்பி வீசினான். இதைச் சாக்காகக் கொண்டு அந்த துஷ்டப் பெண் வானை நோக்கி கைகளைத் தூக்கிக் கதறியழுதுகொண்டு வெளியே ஓடிவந்தாள். ”நான் பதிவிரதையாச்சே! என் மூக்கை அறுத்துவிட்டானே இந்தப் படுபாவி! ஐயையோ! என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று அலறினாள்.

ராஜ சேவகர்கள் வந்தார்கள். அவனை நையப்புடைத்து, பலமான கயிற்றால் கட்டி,பெண்டாட்டியுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துப் போனார்கள். நீதி வழங்கும் அதிகாரிகள், ”உன் மனைவிக்கு என்னு இப்படிப்பட்ட கொடுமை செய்தாய்?” என்று கேட்டனர். ஆச்சரியத்திலே நாவிதனுக்கு மூளை குழம்பிப் போயிருந்தது. ஒன்றும் பதில் பேசவில்லை. இதைக்கண்ட அதிகாரிகள் நீதி நூல்களில் கூறியிருப்பதை எடுத்துரைத்தனர்.

குற்றம் செய்து பயந்துவிட்ட மனிதன் குழறிய பேச்சும், வெளிறிய முகமும், மிரண்ட பார்வையும், ஒடுங்கிய கர்வமும் உடையவனாய்க் காணப்படுவான்.

தள்ளாடி தள்ளாடி நடப்பான்; முகம் வெளுத்துப் போகும்; நெற்றியில் வியர்த்துக் கொட்டும்; வார்த்தை திக்கித் திக்கி வரும்; உடல் நடுங்கிக் கொண்டிருக்கும்; பார்வை கீழ் நோக்கிச் செல்லும்; இந்த வெளிப்படையான அடையாளங் களைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இன்னொருபுறத்தில், களங்கமற்ற இனிய முகபாவமும், தெளிந்த பேச்சும், கோபிக்கும் பார்வையும், வெறுப்புத் தட்டிய முகமும், தன்மதிப்பு மிகுந்த தோரணையும் உடையவனாய் நிரபராதி நீதி மன்றத்தில் காணப்படுவான்.

ஆகையால் இவன் குற்றவாளியாகக் காணப்படுகிறான். பெண்ணைத் தாக்கும் குற்றத்துக்குத் தண்டனை மரணமே. இவனைக் கொண்டுபோய் கழுவில் ஏற்றுங்கள்?” என்றனர்.

நாவிதனைக் கொலைக்களத்திற்குள் கொண்டு போனார்கள். இதைத் தேவசர்மா பார்த்து, உடனே அதிகாரிகளிடம் போய், ”பெரியோர்களே! இந்தப் பரிதாபகரமான நாவிதனைக் கொல்வது அநியாயம். அவன் நல்லவனே. நான் சொல்வதைக் கேளுங்கள்!

”ஆட்டுச் சண்டையில் நுழைந்த குள்ளநரியும், ஆஷாடபூதியால் வஞ்சிக்கப்பட்ட நம்மை போன்றவர்களும், பிறர் காரியத்தில் தலையிட்ட அந்தப் பெண்ணும் தம் செய்கைகளாலேயே தீங்கு வரவழைத்துக் கொண்டார்கள்” என்றான். ”சந்நியாசியே, அது எப்படி?” என்று அதிகாரிகள் கேட்டதும், நடந்த மூன்று சம்பவங்களையும் அவன் விவரமாகத் தெரிவித்தான். எல்லோரும் ஆச்சரியமடைந்தார்கள். நாவிதனை விடுதலை செய்துவிட்டு, அதிகாரிகள் சொன்னதாவது:

”பிராம்மணனும், குழந்தையும், பெண்ணும், சந்நியாசியும், நோயாளியும், கொல்லத்தகாதவர்கள். அவர்கள் பெரிய குற்றம் புரிந்தால் அதற்குத் தண்டனை அங்கஹீனமே.

தன் செய்கையின் விளைவாக அந்தப் பெண் மூக்கு அறுபட்டான். அதற்குமேல் ராஜதண்டனையாக அவளது காதுகளையும் அறுத்தெறியுங்கள்!” என்றனர்.

தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு உதாரணங்களையும் கண்டு மனத்தை திடப்படுத்திக் கொண்டு தேவசர்மா மடாலயத்துக்குத் திரும்பிப் போனான்.

அதனால்தான் ‘ஆட்டுச் சண்டையால் குள்ளநரியும்…..’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்று கூறி முடித்தது தமனகன்.

”அப்படியா விஷயம்? சரி, இப்போது என்ன செய்யலாம்?” என்று கேட்டது கரடகன்.

”இந்த நிலைமைக்கு நாம் வந்துவிட்ட போதிலும் பரவாயில்லை. சஞ்சீவகனைப் பிங்களகனிடமிருந்து பிரித்து விடுவதற்கு எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றத்தான் போகிறது பார்! மேலும், நமது எஜமானர் பிங்களனகன் கெட்டவழியில் செல்கிறார்.

மன்னர்கள் மதிமயங்கிக் கெட்ட வழியில் பிரவேசிக் கின்றனர். ராஜசேவகர்கள் பல முயற்சிகள் செய்து வேத சாஸ்திரங்களைக் காட்டி அவர்களைத் தடுத்துத் திருத்து கின்றனர்

என்றது தமனகன்.

”எஜமானர் என்ன பாபம் செய்கிறார்?” என்று கேட்டது கரடகன்.

”உலகில் ஏழுவிதமான தீச்செயல்கள் உள்ளன. அவை:

காமம், கள், சூதாட்டம், வேட்டை, கடுஞ்சொல், குரூரச் செயல், பேராசை, இவை ஏழும் தீயசெயல்கள்.

ஆசை என்ற ஒரே துர்க்குணத்திலிருந்துதான் இந்த ஏழும் கிளை பிரிகின்றன” என்றது தமனகன்.

”என்ன? அது ஒன்றுதானா அடிப்படையானது? இதர அடிப்படையான தோஷங்கள் இல்லையா?”

”உலகில் ஐந்து விதமான தோஷங்கள் அடிப்படையாகவுள்ளன.”

”அவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன?”

”குறைவு, ஊழல், ஆசை, அழிவு, தவறான கொள்கை என்று தோஷங்கள் ஐந்து வகைப்படும். இதில் முதலாவது, குறைவு. அரசன், மந்திரி, மக்கள், கோட்டை, பொக்கிஷம், தண்டிக்கும் சக்தி, நண்பர்கள் என்கிற ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்று இல்லாமல் போனாலும் அதைக் குறைவு என்கிறோம்.

”இரண்டாவதாக ஊழல், வெளிநாட்டார்களோ அல்லது உள் நாட்டு ஜனங்களோ, தனி நபராகவோ அல்லது கூட்டமாகவோ குமுறிக் கொந்தளித்தால், அந்தத் தீய நிலைமையை ஊழல் என்று குறிக்கிறோம்.

”மூன்றாவதாக, ஆசை, இதைப்பற்றி ”காமம், கள், சூதாட்டம்…” என்கிற செய்யுளில் மேலே குறிப்பிட்டிருக் கிறோம். இதை இரண்டு வகுப்பாகப் பிரிக்கலாம். காமம், கள், சூதாட்டம், வேட்டை என்பவை காமத்தின் பாற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை. கடுஞ்சொல் முதலிய மற்றவை கோபத்தின் பாற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை. இதில் முதல் வகுப்பில் தோல்வி கண்டவர்கள் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த தீய பழக்கங்களில் இறங்குகின்றனர். காமத்தின் பாற்பட்ட வகுப்பைப் பற்றிய விஷயம் நன்றாகத் தெரிந்ததே. கோபத்தின் பாற்பட்ட வகுப்பு மூன்று வகையுள்ளது என்று முன்பே சொன்னோம். அதை இன்னும் கொஞ்சம் விரமாகச் சொல்ல வேண்டும். எதிரிக்குத் தீமை செய்யும் நோக்கத்தோடு சரிவர யோசிக்காமல் அனாவசியமாகக் குற்றம் கற்பிப்பதைத் தான் ‘கடுஞ்சொல்’ என்கிறோம். மரணதண்டனை, சிறையிலடைத்தல், அங்கஹீனம் செய்தல் முதலிய தண்டனை களில் அனாவசியமாக இரக்கமற்ற சித்திரவதைகளைச் செய்வதைத்தான் ‘குரூரச் செயல்’ என்கிறோம். அளவு முறை எதுவுமின்றி பணத்தின் மீது மோகம் கொள்வதையே பேராசை என்கிறோம். ஆசை என்பது இப்படி ஏழுவகை களாகப் பிரிந்துள்ளன.

”நான்காவதாக, அழிவு. இது எட்டு வகைப்படும். கடவுள், செயல், தீ, நீர், நோய், தொத்து வியாதி, கிலி, பஞ்சம், அசுர மழை ஆகியவற்றால் எட்டு வகை அழிவுகள் உண்டாகின்றன. மிதமிஞ்சிய மழையைத்தான் இங்கே அசுர மழை என்று குறிக்கிறோம். ஆக, இவை எட்டும் அழிவு என்பதைக் குறிக்கும்.

”கடைசியில் ஐந்தாவதாக, தவறான கொள்கை, சமாதானம், சண்டை, போர்த்தளம் மாற்றுதல், இடம் பெயராது இருத்தல், நேச உறவுகள் கொள்வது, கபடம்&& ஆகிய ஆறு உபாயங்களையும் பிசகாக உபயோகப் படுத்துவது, அதாவது, சமாதானம் செய்து கொள்ளவேண்டிய நிலைமையில் சண்டை செய்வது, சண்டைக்குப் போக வேண்டிய நிலைமையில் சமாதானம் பேசுவது, இது மாதிரியே இதர உபாயங்களைக் கையாள்வதிலும் தவறுகள் செய்வது. இதைத்தான் தவறான கொள்கை என்று குறிப்பிடுகிறோம்.

”குறைவு என்கிற கேடு இருக்கிறதே, அதில் நம் அரசர் பிங்களகன் விழுந்திருக்கிறார். சஞ்சீவகன்மீது ஒரே மோகம் கொண்டு விட்டதனால், ராஜ்யத்தைத் தாங்கி நிறுத்துகிற மந்திரி முதலான ஆறு வகை சாதனங்கள் எதிலும் கவனம் செலுத்தாமலே இருந்துவருகிறார். புல் தின்கிறவனின் தர்மத்திலும் கர்மத்திலும் கருத்துச் செலுத்தியபடி எப்பொழுதும் இருக்கிறார். வார்த்தை வளர்ப்பானேன்? எப்படியாவது பிங்களகனைச் சஞ்சீவகனிடமிருந்து பிரிக்க வேண்டும். விளக்கு இல்லாவிட்டால் வெளிச்சமும் இராதல்லவா?” என்று முடித்தது தமனகன்.

”உனக்குத்தான் அதிகாரம் இல்லையே, நீ எப்படிப் பிரித்துவிடுவாய்?” என்று கேட்டது கரடகன்.

”நண்பனே! இந்தப் பழமொழி எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது, பார்!

உடல் பலத்தால் ஆகாததை மனோபலத்தால் முடிக்க முடியும். பெண் காகம் பொன் மாலையை உபயோகித்துக் கருநாகத்தைக் கொன்றது”

என்றது தமனகன்

”அது எப்படி?” என்றது கரடகன். தமனகன் சொல்லத் தொடங்கியது:

http://puthu.thinnai.com/?p=4170

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொய்யும் சாகஸமும், ஏமாற்றும் மடமையும், பேராசையும், அசுத்தமும், இரக்கமின்மையும் பெண்களின் கூடப்பிறந்த தோஷங்களாகும்.

பெண்ணழகுக்கு அடிமையாகிவிடாதே! உன்னைத் துன்புறுத்தக்கூடிய சக்தி அவர்களிடம் அதிகரிக்கச் செய்ய விரும்பாதே! சிறகொடிந்த பறவைகளுடன் விளையாடுவது போல் அடிமைப்படும் ஆண்களுடன் அவர்கள் விளையாடு கிறார்கள்.

பெண்கள் வாயில் தேனும், நெஞ்சில் நஞ்சும் இருக்கின்றது. அதனால்தான் ஆண் அவளது வாயிதழ்களைப் பருகுகிறான், நெஞ்சில் அறைகிறான்.

பஞ்சதந்திரத்தில் பெண்ணெதிர்ப்பு மிகவும் தூக்கலாக இருக்கின்றது :( . கத்திரிக்க முடியாமல் அப்படியே இணைப்பதற்கு மன்னிக்கவும்

தொடர்ந்து இணையுங்கள் கிருபன். நேரங்கிடைக்கும் போதெல்லாம்.... முக்கியமாக நான் நித்திரை கொள்ள முன் இப்படியான வித்தியாசமான இரசனையுடைய கதைகளை ரசித்துப் படித்தபின்பே தூக்கம் வர வரம்பெற்று துயில முனைபவன். அந்த வகையில், தங்களது தொடர்..... எனக்கு ஒரு வரம் மாதிரி. தொடருங்கள்.... கிரு! :)

நான் இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கின்றேன் என்று சிரிக்காதீங்க! சொல்லிப்போட்டன்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கின்றேன் என்று சிரிக்காதீங்க! சொல்லிப்போட்டன்! :lol:

வேதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கதைகளை இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். நித்திரைக்கு முன்னர் படித்தால் கனவில் வேதாளம் வரலாம்! :lol:

வேதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கதைகளை இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். நித்திரைக்கு முன்னர் படித்தால் கனவில் வேதாளம் வரலாம்! :lol:

கிரு! கிரு! அதையும் இணையுங்கோ! ஆசையா இருக்கு! :wub: நான் பார்க்கிற வேதாளங்களைவிட :o அந்த விக்கிரமாதித்தன் பதில் சொல்லும் வேதாளங்கள் எவ்வளவோ மேல். :lol: யாழில இருக்கும் போது அம்புலிமாமாவில பார்த்து பயம் தெளிஞ்சுது. :rolleyes:அதனால பயமில்ல கிரு! கெதியாப் போடுங்கோ! படுக்கப் போறன்....! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்

அன்னபூர்னா ஈஸ்வரன்

ரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து பெரிதாவதற்கு முன்பே, அந்த மரத்தின் பொந்தில் இருந்த ஒரு கருநாகம் மேலேறி வந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். இந்த அக்கிரமத்தால் காக்கைக்கு எவ்வளவோ மனோ வேதனை ஏற்பட்ட போதிலும், வெகுகாலமாக வசித்த ஒரு பாசத்தால் அந்த ஆல மரத்தை விட்டு வேறு மரத்துக்குப் போக அதற்கு மனம் வரவில்லை.

எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் மானும், கோழையும், காகமும் இருக்கிற இடத்தை விட்டுப் பெயர்ந்து போக மாட்டார்கள். ஆனால், சிங்கமும், தைரியசாலியும், யானையும் உடனே வெளியேறி வேறிடம் செல்கின்றனர்.

கடைசியில் பெண் காகம் தன் கணவன் கால்களில் விழுந்து, ”நாதா! நம் குழந்தைகளையெல்லாம் இந்தக் கொடிய பாம்பு சாப்பிட்டு வருகிறது. அன்புக் குழந்தைகளை இழந்து என்னால் துக்கம் தாள முடியவில்லை வேறெங்காவது போய்விடலாம் என்று தோன்றுகிறது. வேறொரு மரத்துக்குப் போய்விட்டாலென்ன?

ஆரோக்கியத்துக்கு ஒப்பான நண்பன் வேறு யாருமில்லை; நோய்க்கு ஒப்பான விரோதி வேறு யாருமில்லை; குழந்தை அன்புக்கு ஒப்பான அன்பு வேறெதுவு மில்லை; பசிக்கு ஒப்பான வேதனை வேறெதுவுமில்லை.

நதிக்கரையில் நிலபுலன்களுடையவன், சோரம் போகும் மனைவியுடையவன், பாம்பு வாசம் செய்கிற வீட்டிலிருப்பவன் இவர்களுக்கு மனோ நிம்மதி என்றைக்கும் கிடையாது.

நாம் பிரணாபத்தான நிலைமையில் இருந்து வருகிறோம்” என்றது பெண் காகம்.

காக்கைக்கு ஒரே துக்கமாய்ப் போயிற்று. ”அன்பே! ரொம்ப நாளாக இங்கே இருந்து வருகிறோம். இதைவிட்டுச் செல்லமுடியாது. காரணம், கேள்!

நீரும், புல்லும் கிடைக்கிற இடத்திலெல்லாம் மான் வாழ முடியும். என்றாலும், மானை எவ்வளவவோ அவமானப் படுத்தினாலுங்கூட தான் பிறந்து வளர்ந்த காட்டை அது விட்டுச் செல்வதில்லை.

நீ பொறு, கொடிய சத்ருவும் படுபாவியுமான அந்தப் பாம்பை கொல்வதற்கு உபாயம் கண்டு பிடிக்கிறேன்” என்றது.

”கொடிய விஷமுள்ள பாம்பு ஆயிற்றே! நீங்கள் எப்படிக் கொல்வீர்கள்!”

”அன்பே! அதைக் கொல்ல எனக்குப் பலமில்லைதான் என்றாலும் பரவாயில்லை. நீதி சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்த நண்பர்கள் பலர் எனக்குண்டு. இந்தக் கெட்ட எண்ணங்கொண்ட துஷ்டனை நாசம் செய்வதற்குத் தகுந்த உபாயத்தை அவர்களிடம் கேட்டறிந்து வருகிறேன்” என்று ஆத்திரம் பொங்கக் கூறிவிட்டு இன்னொரு மரத்துக்குப் போயிற்று. அந்த மரத்தடியில் அதன் நெருங்கிய நண்பனான நரி ஒன்று இருந்தது. வணக்கத்துடன் நரியைக் கூப்பிட்டு காக்கை தன் சோகக் கதையைச் சொல்லிற்று. ”நண்பனே! என்ன செய்தால் சரி என்று நினைக்கிறாய்? குழந்தைகளைக் கொல்வது என்னையும் என் மனைவியையும் கொல்வது போலிருக்கிறது” என்றது.

”நண்பனே! நன்றாய் யோசித்தேன். நீ அதைரியப்படாதே. அந்தக் கருநாகத்துக்குச் சாவு சமீபத்துவிட்டதில் சந்தேகமில்லை. ஏனென்றால்:

தீமை புரிபவனுக்குக் கெடுதி செய்ய நீ யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதேயில்லை. நதிக்கரையிலுள்ள மரம் வீழ்வதுபோல் அவன் தானாகவே வீழ்ச்சியடைவான்.

இதைக்கேள்.

பேராசையுள்ள ஒரு கொக்கு நிறைய மீன் சாப்பிட விரும்பி நல்ல மீன் கெட்ட மீன் என்று வகை தொகை பாராமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு நண்டின் பிடியில் சிக்கி உயிர்விட்டது”

என்றது நரி.

”அது எப்படி?” என்று காக்கை கேட்க, நரி சொல்லத் தொடங்கியது.

கொக்கும் நண்டும்

எங்கோ ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு கிழட்டுக் கொக்கு. சிரமமில்லாமல் மீன்களைப் பிடித்துத் தின்பதற்கு என்ன வழி என்று அது யோசித்தது. குளக்கரையருகில் போய் நின்று கொண்டது. கிட்ட நெருங்கிய மீன்களைக்கூட அது கொத்தாமலே இருந்தது. மீன்களைத் தின்ன தனக்கு ஆசை எதுவும் இல்லாததுபோல் பாசாங்கு செய்தது.

அந்த மீன்கள் மத்தியிலே ஒரு நண்டும் இருந்து வந்தது. அது நெருங்கி வந்து, ”மாமா! வழக்கத்திற்கு மாறாக எதையும் தின்னாமல், விளையாடாமல் இன்றைக்கு இருக்கிறீர்களே, ஏன்?” என்று கேட்டது.

”மீன்களைத் தின்கிறவரை நான் புஷ்டியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து வந்தேன். உங்களை ருசி பார்த்துச் சுகமாகக் காலம் கழித்து வந்தேன். ஆனால் உங்களுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வரப்போகிறது. அதனால் கிழப்பருவத்தில் என் சுகஜீவனத்துக்கும் கேடு வரும். அதை நினைந்து மனம் சோர்ந்து நிற்கிறேன்” என்றது கொக்கு.

”அதென்ன ஆபத்து, மாமா?”

”குளக்கரையோரமாய்ச் செம்படவர்கள் பலபேர் பேசிக்கொண்டு போனதைக் கேட்டேன். ‘இது பெரிய குளம். மீன்கள் நிறைய இருக்கின்றன. நாளைக்கோ மறுநாளைக்கோ வந்து வலை வீசுவோம். இன்றைக்கு நகரத்தின் அருகிலுள்ள ஏரிக்குப் போகலாம்’ என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் நீங்களும் சாகப் போகிறீர்கள். நானும் உணவில்லாம் சாகப் போகிறேன். அதை நினைக்க நினைக்க எனக்கு வருத்தமாயிருக்கிறது. சாப்பாட்டில் இன்று மனம் செல்லவில்லை” என்றது கொக்கு.

அந்த வஞ்சகனின் சொற்களைக் கேட்டு ஜலராசிகள் எல்லாம் உயிருக்குப் பயந்து போயின. எல்லோரும் கூட, ”மாமா! அப்பா! அண்ணா! நண்பா! மதிவாணா! அபாயத்தைக் கேட்ட நீ உபாயமும் அறிந்திருப்பாய். சாவின் வாயிலிருந்து எங்களைக் காப்பாற்று!” என்று வேண்டிக்கொண்டன.

”நான் ஒரு பறவை. மனிதனோடு என்னால் சண்டைபோட முடியாது. ஆனால் ஒன்று செய்ய முடியும். உங்களையெல்லாம் இந்தக் குளத்திலிருந்து வேறொரு ஆழங்காணாத குளத்திற்கு மாற்றிவிட முடியும்” என்றது கொக்கு.

இந்தச் சாகஸப் பேச்சில் அவை எல்லாம் மதிமோசம் போய், ”மாமா! நண்பா! சுயநலமில்லாத பந்துவே! முதலில் என்னைக் கொண்டுபோ! இல்லை, என்னைக் கொண்டுபோ! இந்தப் பழமொழியை நீ கேட்டதில்லையா?

தன்னல மறுப்புடன் உதவி செய்வதில் உதவி செய்வதில் திடச்சித்த முடையவர்கள் எதற்கும் தயங்க மாட்டார்கள். உயிர் போனாலும் போகட்டும், நண்பனுக்கு நன்மை செய்தால் சரி என்று கருகின்றனர்

என்று ஒரே சமயத்தில் ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று கேட்டுக் கொள்ளத் தொடங்கின.

அந்தக் கிழட்டுப் போக்கிரி அதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டது. தன் மனதுக்குள்ளேயே, ”நம் புத்தி சாதுரியத்தால் மீன்கள் எல்லாம் நம் வசமாகிவிட்டன. இனி நிம்மதியாகச் சாப்பிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்துகொண்டது. அவை வேண்டிக்கொண்டபடி சபதம் செய்து, சில மீன்களை அலகால் தூக்கிக்கொண்டு கொஞ்சதூரம் போய் ஒரு கற்பாறை மீது வைத்துச் சாப்பிட்டது. ஒவ்வொருநாளும் இப்படி மீன்களைக் கொண்டு போவதிலே அதற்கு ஒரே கொண்டாட்டமும் திருப்தியுமாயிருந்தது. மீன்களைப் பார்க்கும் போதெல்லாம் புதிய புதிய பொய்களைச் சொல்லி நம்பவைத்து வந்தது.

மரணபயம் அடைந்த நண்டும் ஒருநாள் அதனையணுகி, “மாமா, என்னையும் சாவின் வாயிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று வேண்டிக் கொண்டது. கொக்கு யோசிக்கத்தொடங்கியது. “ஒரேமாதிரியான மீன் மாமிசம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்து விட்டது. இந்த நண்டை ருசி பார்த்தால் என்ன? அபூர்வமாயும் இருக்கும், விசேஷமாயும் இருக்கும்” என்று எண்ணம் கொண்டது. நண்டைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறந்தது. நீர்நிலை களையெல்லாம் விட்டுவிட்டு வெயிலில் காய்ந்த பாறையை நோக்கி கொக்கு பறந்து செல்வதைக்கண்ட நண்டு, “மாமா, ஆழங்காணாத குளம் ஒன்று இருக்கிறது என்று சொன்னீர்களே, அது எங்கே? “ என்று கேட்டது. கொக்கு சிரித்துக் கொண்டே, “அதோ வெய்யிலில் காய்ந்த விலாசமான அந்தக் கற்பாறை தெரிகிறதா? எல்லா ஜலராசிகளும் அங்கேதான் ஓய்வும் நிம்மதியும் கண்டன. இப்போது நீயும் காணப்போகிறாய்” என்றது.

நண்டு கீழே பார்த்தது. மீன்களின் எலும்புகள் மலைபோல் குவிந்து பலிபீடம் போல் காணப்பட்ட பயங்கரமான ஒரு பெரிய கற்பாறை தெரிந்தது. நண்டு உடனே யோசிக்கத் தொடங்கியது.

“ஐயையோ!

தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காகச் சினேகிதர்கள் சத்ரு ரூபத்திலும், சத்ருக்கள் சினேகிதர் ரூபத்திலும் வருகிறார்கள். இவர்களில் சிலரைத்தான் உலகில் கண்டுகொள்ள முடிகிறது.

நடிப்பு நண்பர்களோடும், முட்டாள் நண்பர்களோடும், சஞ்சலபுத்தி உள்ள நண்பர்களோடும், பாபநோக்கமுள்ள நண்பர்களோடும் சகவாசம் கொள்கிறதைக் காட்டிலும் பாம்புடன் விளையாடுவதும், துரோகமிழைக்கும் சத்ருவுடன் கூடி வசிப்பதும் எவ்வளவோ மேல்.

மீன்கள் அனைத்தையும் தின்றுவிட்டிருக்கிறதே! அதோ குவியல் குவியலாக அவற்றின் எலும்புகள் சுற்றிலும் கிடப்பது தெரிகிறதே. இந்த நிலையில் எது செய்தால் சரி? சரிதான், இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?

தப்பானவழியில் போகிறவன், மமதை கொண்டிருப் பவன், கடமையறியாதவன்,-அவர்கள் உன் குருவாயிருந்தாலும் அவர்களைத் தண்டிக்க சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.

எதிரே வராதவரையில் பயப்படத்தக்கவைபற்றிப் பயப்படு. எதிரே வந்தபின் பயமின்றி அவற்றைத் தாக்கு!

ஆகவே, அங்கே என்னைக் கொண்டுபோய் போடுவதற்கு முன்பே எனது நான்கு கூரிய கொடுக்குகளால் கொக்கின் கழுத்தைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று தீர்மானித்தது.

அப்படியே அதன் கழுத்தை நண்டு தன் கொடுக்குகளால் பற்றிக்கொண்டதும் கொக்கு தப்பிக்க முயற்சித்தது. என்றாலும், கொக்குதான் மந்தபுத்தி உடையதாயிற்றே! நண்டின் கொடுக்குகளிலிருந்து தப்பிக்க வகைதெரியாமல் தலை வெட்டுண்டு செத்தது.

தாமரைத் தண்டு போலிருந்த கொக்கின் கழுத்தைக் கவ்வியபடியே நண்டு மிகவும் சிரமப்பட்டு மறுபடியும் பழைய குளத்துக்கு வந்து சேர்ந்தது. மீன்களிடம் வந்ததும், “அண்ணா நீ ஏன் திரும்பி வந்தாய்?” என்று அவை கேட்டன. நண்டு கொக்கின் தலையை அடையாளத்துக்காகக் காட்டியபடி, “ இந்தக் கொக்கு பொய்யும் புளுகும் சொல்லி, எல்லா ஜலராசிகளையும் ஏமாற்றி, அருகாமையிலுள்ள கற்பாறைமேல் கொண்டுபோய்ப் போட்டுத் தின்றுவிட்டிருக்கிறது. எனக்கு ஆயுள் கொஞ்சம் மிச்சமிருக்கிறது போல் தெரிகிறது. இது நம்பிக்கை துரோகம் செய்யும் என்று கண்டுகொண்டு கழுத்தைக் கொண்டுவந்தேன். கவலைப்படாதீர்கள். எல்லா ஜலராசிகளும் இன்மேல் சுகமாக இருக்கலாம்” என்றது.

அதனால்தான் ‘பேராசையுள்ள கொக்கு…‘என்றெல்லாம் சொல்லுகிறேன் என்றது நரி.

“நண்பனே, அந்த துஷ்டப் பாம்பைக் கொல்வதற்கு வழிசொல்” என்று காகம் கேட்டது.

“அரசன் வழக்கமாய் வரும் ஏதாவதொரு இடத்துக்குப் போ. அங்கே யாராவது ஒரு பணக்காரன் அஜாக்கிரதையாக வைத்துவிட்ட தங்கச் சங்கிலியையோ, மாலையையோ எடுத்துக்கொண்டு வா. அதைத் தேடி வருகிறவர்கள் பாம்பைக் கண்டுகொல்கிற இடமாகப் பார்த்து அங்கே அதைப் போட்டுவிடு” என்றது நரி.

.இதைக் கேட்டவுடனே, ஆண் காகமும், பெண் காகமும் எங்கெங்கோ பறந்து சென்றன. கடைசியில் பெண்காகம் ஏதோவொரு ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தது. அங்கே யாரோ அரசனுடைய அந்தப்புர ஸ்திரீகள் கரயோரத்தில் தங்கச் சங்கிலி, முத்து மாலை, துணிமணிகள், இதர நகைகள் எல்லாவற்றையும் வைத்துவிட்டு நீராடுவதைக் கண்டது. உடனே அது ஒரு தங்கச் சங்கிலியை கொத்திக்கொண்டு தன் மரத்தை நோக்கிப் பறந்தது. காவலாளிகளும், அலிகளும் அது கொத்திச் செல்வதைக் கண்டுவிட்டு தடிகளை எடுத்துக் கொண்டு பிந்தொடர்ந்து ஒரே ஓட்டமாய் ஓடினார்கள். தங்கச் சங்கிலியை காக்கை பாம்புப் பொந்தில் போட்டுவிட்டு, கொஞ்ச தூரம் தள்ளியிருந்த ஒரு மரத்தில் போய் உட்கார்ந்துகொண்டது. ராஜாவின் ஆட்கள் மரத்தில் ஏறியபோது பொந்தில் ஒரு பெரிய நாகம் படமெடுத்து ஆடுவதை கண்டனர். உடனே அதைத் தடிகளால் அடித்துக் கொன்றுவிட்டுத் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு வந்தவழியே திரும்பிப் போயினர். காக்கைக் குடும்பம் அதன்பின் நிம்மதியாக வாழ்ந்தது.

அதனால்தான் ‘உடல்பலத்தால் ஆகாததை மனோபலத்தால் முடிக்கமுடியும்..’ என்றெல்லாம் சொல்லுகிறேன்’ என்றது தமனகன். “மேலும் சொல்கிறேன், கேள்:

அஜாகிரதையால் கண்ணிழந்த சிலர் எதிரியைப் பலவீனன் என்று அலக்‌க்ஷயப் படுத்துகிறனர். ஆனால், முதலில் பலவீனனாயிருந்த எதிரி பின்னால் பலம்பெற்று, தீராத நோய்போல், கட்டுக்கடங்காமல் போகிறான்.

ஆகையால் புத்திசாலிக்குல் கிடைபதற்கு அரியது என்று உலகில் ஒன்றுமில்லை. ஒரு பழமொழி உண்டு,

அறிவே பலம்; அறிவில்லாதவனுக்கு பலம் கிடையாது. கர்வம் கொண்ட சிங்கத்தைக் காட்டில் முயல் கொன்றது.

என்றது தமனகன். “அது எப்படி?” என்று கரடகன் கேட்க, தமனகன் சொல்லிற்று:

http://puthu.thinnai.com/?p=4327

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்

அன்னபூர்னா ஈஸ்வரன்

சிங்கமும் முயலும்

ரு காட்டில் சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தது. எந்த மிருகத்தைக் கண்டாலும் அதற்குப் பிடிக்க வில்லை. இந்த நிலைமையில் மான், பன்றி, எருமை, எருது, முயல் முதலிய வன மிருகங்களெல்லாம் ஒன்று கூடின. எல்லாம் சேர்ந்து முகவாட்டத்துடன் சிங்கத்திடம் போயின. கால் முட்டுக்கள் பூமியைத் தொடும்படி மண்டியிட்டுத் தலை வணங்கின. மிகவும் தாழ்மையுடன், ”அரசே! இப்படி நீங்கள் அர்த்த மில்லாமல், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிப்பது மேலுலகத்துக்கு விரோதமாகும். இப்படிக் கொல்வதை நிறுத்துங்கள். அந்தச் செய்கையால் உங்களுக்கு மறுவுலகில் சுகம் கிடைக்காது.

மூடர்கள் ஒரு ஜன்மத்தில் செய்கிற பாபச் செயல்களால் உண்டாகிற துக்கம், அடுத்த ஆயிரம் ஜன்மங்களுக்கு அவர்களை வாட்டி வதைக்கும் என்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோமே! மேலும்,

பழியும், அபகீர்த்தியும், நரகமும் கிட்டுகிற வழியில் புத்திசாலிகள் எப்படி நடப்பார்கள்?

இந்தச் சரீரம் அசுத்தத்தின் இருப்பிடம்; இது நன்றி கெட்டது, அழியக்கூடியது. இதன் பொருட்டு மூடர்கள் தான் பாவம் செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் உணர்ந்து எங்கள் குலத்தை நாசம் செய்யாமல் இருங்கள். அப்படிச் செய்யாமலிருந்தால், நாங்களே தினந்தோறும் ஒவ்வொரு மிருகமாக நீங்கள் சாப்பிடுவதற்கென்று உங்கள் இருப்பிடத்துக்கே அனுப்பி வைக்கிறோம். இந்த ஏற்பாட்டினால் உங்கள் தீனிக்கும் குறைவு உண்டாகாது. எங்கள் மிருக குலம் அனாவசியமாகக் குறைந்து போகாது. இந்த முறையில் ராஜதர்மத்தை நிறைவேற்றுங்கள். ஒரு பழமொழி கூறுகிறபடி,

அமிருதத்தைச் சொட்டுச் சொட்டாகப் பருகி அனுபவிப்பதுபோல், எந்த அரசன் தன் சக்திக்கேற்றபடி ராஜ்யத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக அனுபவிக்கிறானோ அவனே முழு சுகத்தையும் பெறுகிறான்.

பைத்தியம் பிடித்துப்போய் ஆடுகளைக் கொல்வதுபோல் மக்களைக் கொன்று குவிக்கிற அரசன் முதல் கொலையிலேதான் திருப்தி காண்கிறானே தவிர மற்றவற்றில் என்றைக்கும் திருப்தி காண்கிறதில்லை.

தன்னலம் பேண விரும்பும் அரசன் நாட்டை விபத்திலிருந்து காக்க வேண்டும். தோட்டக்காரன் செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வளர்ப்பது போல் கொடை வழங்குவது, கௌரவிப்பது போன்ற காரியங்களைச் செய்து அரசன் நாட்டை வளமாக்க வேண்டும்.

நேரம் கிரமம் பார்த்துப் பசுவைக் கறந்தால் அதற்குத் தீங்கு உண்டாகாது. பசு காப்பாற்றப்படுகிறது. முறையின்றி கண்ட நேரத்திலெல்லாம் கறந்தால் பசுவுக்கு ஆபத்தாகும். அதைப்போலவே அரசனும் மக்களைக் காக்கவேண்டும். கொடிக்கு நீர் வார்த்தால்தானே பின்னால் அதன் பூவையும் பழத்தையும் பறிக்க முடியும்?

அரசன் என்கிற விளக்கு, மக்கள் தரும் வரிப்பணம் என்கிற எண்ணெயைக் கொண்டுதான் சுடர்விட்டு எரிகிறது. தன்னியல்பாய் அரசன் சோபிப்பதை யாரும் கண்டதில்லை. நுண்ணிய விதையின் முளையைச் சிரமப்பட்டுப் பாதுகாத்தால் உரிய காலத்தில் அது பயன் தருகின்றது. அதைப்போலவே நன்றாகப் பாதுகாக்கப்பட்ட மக்களும் பயன் தருவார்கள்.

பொன், தானியம், ரத்தினம், விதவிதமான பானங்கள் எல்லாம் மக்களிடமிருந்தல்லவா அரசனுக்குக் கிடைக்கிறது? நாட்டுக்கு நன்மை செய்யும் மன்னர்கள் செழித்து வளர்கின்றனர்; நாடு நாசமடைந்தால் மன்னனும் நலிகிறான்.

என்றெல்லாம் விளக்கி மந்தமதியிடம் வன விலங்குகள் முறையிட்டுக் கொண்டன.

”நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே செய்யுங்கள். ஆனால் என் இருப்பிடத்திற்குத் தினந்தோறும் ஒவ்வொரு மிருகத்தை அனுப்பத் தவறினால் உங்கள் எல்லோரையும் கொன்று தின்றுவிடுவேன்” என்று பதிலளித்தது மந்தமதி.

”அப்படியே ஆகட்டும்,” என்று அவை சத்தியம் செய்து கொடுத்து விட்டுச் சஞ்சலமின்றிக் காட்டில் நிர்ப்பயமாய் திரியலாயின. அந்தந்த மிருக ஜாதிக்கு முறையும், வரிசைக்கிரமமும் ஏற்படுத்தித் தினந்தோறும் ஒரு மிருகத்தை அனுப்பி வைத்தன. ஒவ்வொரு ஜாதியிலும் முறைப்படி முதலில் கிழடு தட்டியது. மனோ விரக்தியடைந்தது, துக்கத்தால் வருந்துவது, மகனோ மனைவியோ மரணமடையலாம் என்று பயப்படுவது போன்ற மிருகங்கள் ஒவ்வொன்றாகத் தினந்தோறும் பிற்பகலில் போயின.

பிறகு ஒருநாள் ஜாதி வரிசைப்படி முயலின் முறை வந்தது. எல்லா மிருகங்களும் கூடி முயலைப் போகச் சொல்லின.

”அந்தக் கெட்ட சிங்கத்தைக் கொல்வது எப்படி?” என்று முயல் யோசிக்கத் தொடங்கியது. ”என்ன இருந்தாலும்,

புத்திசாலிகளுக்கு எதுதான் முடியாது? முகஸ்துதியால் எதைத்தான் சாதிக்க முடியாது? முயற்சியுடையவர்களுக்கு எதுதான் கிட்டாது?

எனவே சிங்கத்தை நான் கொல்ல முடியும்” என்று தீர்மானித்தது.

முயல் மெல்ல மெல்ல நடந்து சென்று. சிங்கத்தின் சாப்பாட்டு நேரம் கழிந்துவிட்டது. சிங்கத்தைக் கொல்வதற்கு உபாயம் என்ன என்று சிந்தித்துத் கொண்டே கவலையோடு வழிநடந்து, சாயங்காலத்தில் முயல் சிங்கத்தை நெருங்கியது. சாப்பாட்டு நேரம் தவறி பசியால் தொண்டை வறண்டுபோய், சிங்கம் கோபத்துடன் விரல்களை நக்கிக் கொண்டிருந்தது. ”ஹ¥ம், காலையில் எல்லா மிருகங்களையும் கொன்று விடுகிறேன்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருக்கையில், முயல் மெதுவாக நெருங்கி வந்து வணங்கி நின்றது. நேரம்கழித்து வந்ததோடல்லாமல், உருவத்தில் முயல் சிறியதாயும் இருக்கக் கண்டு சிங்கம் உள்ளங் கொதித்துத் திட்டத் தொடங்கியது. ”நீசனே! நீ ஒரு பொடிப் பயல். அதோடு நேரம் கழித்து வேறு வந்திருக்கிறாய். இந்தக் குற்றத்துக்காக உன்னை இன்றே கொன்று நாளைக் காலையில் எல்லா மிருகங்களையும் துவம்சம் செய்கிறேன், பார்!” என்று உறுமியது.

முயல் வினயமாக வணங்கிவிட்டு, ”அரசே! குற்றம் என்னுடையதல்ல; மற்ற மிருகங்களுடையதுமல்ல. நிஜமான காரணத்தைக் கேளுங்கள்” என்று சொல்லியது. ”என் பற்களுக்கிடையே நீ செல்வதற்குள் சொல்லிவிடு. சீக்கிரம்!” என்றது சிங்கம்.

”அரசே, இன்று எல்லா மிருகங்களும் கூடி ஜாதி வரிசைப்படி பார்த்த போது முயல் இனத்தின் முறை வந்தது. நான் சிறியவனாக இருப்பதால் இதர ஐந்து முயல்களோடு நானும் அனுப்பப்பட்டேன். நடுவழியில் பூமியில் ஒரு பெரிய குழியிலிருந்து ஒரு சிங்கம் வெளிவந்து எங்களைப் பார்த்துவிட்டு, ”எங்கே போகிறீர்கள்? உங்களைக் கொல்லப் போகிறேன், இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்!” என்றது.

”எங்கள் எஜமானர் மந்தமதி என்கிற சிங்கத்திற்கு உணவாக ஒப்பந்தப் படி போய்க்கொண்டிருக்கிறோம்’ என்றேன் நான்.

‘அப்படியா சங்கதி? இது என்னுடைய காடு, எல்லா மிருகங்களும் ஒப்பந்தப்படி என்னோடுதான் விவகாரம் வைத்துக்கொள்ள வேண்டும். தெரிகிறதா? அந்த மந்தமதி ஒரு திருடன். அவனைச் சீக்கிரம் அழைத்து வா. இருவரும் சண்டைப் போட்டுப் பார்க்கிறோம். யார் தனது பராக்கிரமத்தால் அரசனாகிறானோ அவனே எல்லா மிருகங்களையும் சாப்பிடட்டும்’ என்றது. அதன் கட்டளைப்படியே தங்களிடம் வந்திருக்கிறேன். நேரம் தவறி வந்ததற்குக் காரணம் இதுதான். இனி உங்கள் இஷ்டம்” என்றது முயல்.

”நண்பனே! வா, சீக்கிரமே அந்தத் திருட்டுச் சிங்கத்தைக் காட்டு! மிருகங்களின் மேல் வந்த கோபத்தை அதன்மேல் காட்டித் தீர்த்துக் கொள்கிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

நிலம், நண்பன், பொன், இம்மூன்றும் சண்டையின் பலனாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றுகூடக் கிடைக்காது என்று தெரிந்தால் சண்டைக்குப் போகாதே!

சண்டை செய்வதில் பலனில்லை வெற்றியும் நிச்சயமில்லை என்று ஏற்பட்டால் புத்திசாலி சண்டை போட மாட்டான்; சகித்துக் கொண்டு போய்விடுவான்”

என்றது மந்தமதி.

”அரசே! அது உண்மை. தம் நாட்டுக்கு அவமானம் ஏற்படும் பொழுது க்ஷத்திரியர்கள் சண்டையிடுகின்றனர். அது கோட்டையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. கோட்டையிலிருந்து வெளி வந்து எங்களை மடக்கிற்று என்பது உங்களுக்குத்தான் தெரியுமே! அப்படிக் கோட்டைக்குள் இருக்கிற எதிரியை வெல்வது ரொம்பச் சிரமம். ஒரு பழமொழியுண்டு:

ஒரு கோட்டையால் சாதிக்க முடிகிற காரியத்தை ஆயிரம் யானைகளாலும், லட்சம் குதிரைகளாலும் அரசன் சாதிக்க முடியாது.

கோட்டைக்குள் இருக்கும் ஒரு வில்லாளி நூறு பேரை எதிர்க்கலாம். அதனால்தான் நீதி சாஸ்திரம் தெரிந்தவர்கள் கோட்டையைப் புகழ்ந்து போற்றுகிறார்கள்.

முன்காலத்தில் குருவின் கட்டளைப்படி, ஹிரண்யகசிபுவுக்குப் பயந்து, விஸ்வகர்மாவின் திறமையைக் கொண்டு இந்திரன் ஒரு கோட்டை கட்டுவித்தான். பிறகு இந்திரனே ஒரு வரம் அளித்தான்: ‘எந்த அரசன் கோட்டை கட்டிக்கொள்கிறானோ அவனே ஜெயிப்பான்’ என்று. அதனால் தான் பூமியில் பல கோட்டைகள் உண்டாயின.”

என்றது முயல்.

”நண்பனே, அது கோட்டையில் இருந்தால்தானென்ன? எனக்குக் காட்டு, அதை நான் கொன்று விடுகிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

பகைவனையும் நோயையும் தலை தூக்கியவுடன் பூரணமாக ஒழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவை வளர்ந்து பலம் பெற்று நம்மைக் கொன்றுவிடுகின்றன.

தன் சக்தியை உணர்ந்து தன் மதிப்பும் உற்சாகமும் கொண்டிருப் பவன்தான் பரசுராமரைப் போல் தன்னந்தனியே நின்று சத்துருக்களைக் கொல்ல முடியும்”

என்றது சிங்கம்.

”உண்மைதான், அரசே! ஆனால் அது பலசாலி என்பதை நான் பார்த்தேன். அதனுடைய சாமர்த்தியத்தை அறியாமல் எஜமானர் சண்டைக்குப் போவது அவ்வளவு சரியல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

தன் பலத்தையும் எதிரியின் பலத்தையும் அளந்தறியாமல், வெறும் உற்சாகத்தோடு சண்டைக்குப் போகிறவன் நெருப்பில் விழுகிற வீட்டில் பூச்சிபோல் நாசமடைகிறான்.

பலம் வாய்ந்த சத்துருவைக் கொல்ல பலமில்லாதவன் சண்டைக்குப் போனால், தந்தமுடைந்த யானைபோல், கர்வபங்கமடைந்து திரும்புகிறான்

என்றது முயல்.

”அதைப்பற்றி உனக்கென்ன கவலை? அது கோட்டையில்தான் இருக்கட்டுமே! முதலில் அதைக் காட்டு நீ!” என்றது சிங்கம்.

”சரி, அப்படியே ஆகட்டும். என்னோடு வாருங்கள்” என்று முயல் பதிலளித்து, முன்னேபோயிற்று. இரண்டும் ஏதோ ஒரு கிணற்றருகில் வந்து சேர்ந்தன. சிங்கத்திடம் திரும்பி, ”அரசே, உங்கள் பராக்கிரமத்தை யார்தான் எதிர்க்க முடியும்? உங்களைத் தூரத்தில் கண்டவுடன் அந்தத் திருடன் கோட்டைக்குள் போய் ஒளிந்து கொண்டு விட்டது. வாருங்கள், அதைக் காட்டுகிறேன்,” என்றது முயல்.

”நண்பனே, சீக்கிரமாகக் காட்டு!” என்றது சிங்கம்.

முயல் கிணற்றைக் காட்டிற்று. மந்தமதி ஒரு படுமோசமான முட்டாள். கிணற்றுத் தண்ணீரில் தன் நிழலைக் கண்டதும் ஏதோ வேறு ஒரு சிங்கம் கிணற்றுக்குள் இருக்கிறதாக நினைத்துக்கொண்டு அது கர்ஜித்தது. அதன் எதிரொலி இரண்டு மடங்கு பலத்துடன் கிணற்றிலிருந்து கிளம்பியது, மந்தமதி அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் எதிரி மிகுந்த பலசாலி என்று தீர்மானித்து கிணற்றுக்குள்ளே பாய்ந்தது. அவ்வளவுதான், சிங்கத்தின் உயிர் போயிற்று.

முயலுக்கு ஒரே சந்தோஷம். எல்லா மிருங்களும் ஆனந்தமடைந்தன. முயலைப் புகழ்ந்து வெகுவாகப் பாராட்டின. பிறகு முயல் சுகமாகக் காட்டில் இருந்து வந்தது.

அதனால்தான் ‘அறிவே பலம்….’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்றது தமனகன்.

”நீ சொல்வது, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்கிற கதையாக இருக்கிறது! முயல் ஜெயித்திருக்கலாம். என்றபோதிலும் பலவீனன் பலசாலியை எதிர்ப்பது சரியல்ல” என்றது கரடகன்.

”பலவீனனோ பலசாலியோ, யாராயிருந்தாலென்ன? செயல்புரிவதில் நெஞ்சுத் துணிவு இருக்க வேண்டும். இந்தப் பழமொழியைக் கேட்டிருப்பாயே!

விடா முயற்சியுள்ளவனுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். கோழைகள் தான் ‘விதி, விதி’ என்று சொல்கிறார்கள். உன் பலத்தால் விதியை வென்று உன் ஆண்மையைக் காட்டு! முயற்சி செய்தும் பலன் கிடைக்கா விட்டால் அதனால் தோஷமெதுவுமில்லை.

இன்னொரு விஷயம். முயற்சி செய்பவர்களுக்குக் கடவுள் கூட உதவி செய்கிறார். இதைக் கேட்டதில்லையா?

விஷ்ணுவும், விஷ்ணு சக்கரமும், கருடனும், நெசவாளியின் சண்டையில் துணை நின்றனர்: செயல் துணிவுள்ளவர்களுக்குத் தேவர் களும் துணை செய்வார்கள்.

நன்றாகத் திட்டமிட்ட சூழ்ச்சியின் முடிவைப் பிரம்மாவாலும் அறிய முடியாது; விஷ்ணு ரூபத்தில் ஒரு நெசவாளி சென்று அரசகுமாரியை அணைத்தான்”

என்றது தமனகன்.

”அதெப்படி? நன்றாகத் திட்டமிட்டு, துணிவோடு சூழ்ச்சியிலிறங்கினால் காரியசித்தி உண்டாகுமா?” என்று கரடகன் கேட்க, தமனகன் கூறத் தொடங்கியது.

http://puthu.thinnai.com/?p=4498

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; இன்னொருவன் நெசவாளி. இருவரும் தத்தம் வேலையில் நிபுணர்கள். அதனால் அவர்கள் தொழிலிலே சம்பாதித்த பணத்திற்குக் கணக்கு வழக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மென்மையான வேலைப்பாடுகளுள்ள, விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தினர். பூ, தாம்பூலம் அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். கற்பூரம், அத்தர், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை உபயோகித்தனர். பகலில் ஒன்பது மணி நேரம் வேலை செய்வார்கள். மற்ற நேரங்களில் நன்றாக அலங்கரித்துக் கொண்டு பொது ஸ்தலங்கள், கோவில்கள் முதலான இடங்களில் தினந்தோறும் ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றித் திரிவார்கள். நாடகங்கள், கூட்டங்கள், விழாக்கள் போன்ற ஜனக் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சுற்றிவிடட்டுச் சாயங்காலம் வீட்டிற்குத் திரும்புவார்கள். இப்படியே அவர்களுக்குப் பொழுது போய்க்கொண்டிருந்தது.

ஒருநாள் பெரிய விழா ஒன்று வந்தது.

ஜனங்கள் எல்லோரும் அவரவர்களுக்கு ஏற்றபடி அலங்கரித்துக் கொண்டு கோவில் முதலான இடங்களைச் சுற்றிவரப் புறப்பட்டார்கள். நெசவாளியும் தச்சனும் நன்றாக உடுத்தி அழகுபடுத்திக்கொண்டு வெளியே புறப்பட்டு, அங்கங்கே கூடி நிற்கும் அலங்காரமயமான ஜனங்களில் முகங்களைப் பார்த்துக்கொண்டே போனார்கள். அப்பொழுது, ஒரு வெள்ளை மாளிகையின் உப்பரிகையிலே, தோழிகள் புடைசூழ, ஒரு அரசகுமாரி அமர்ந்திருந்தாள். இளமையால் பொங்கித் திரண்ட ஸ்தனபாரம், பரந்த நிதம்பம், குறுகிய இடை, கார்மேகம்போல் கறுத்தடர்ந்து அலைபோல் புரளும் மிருதுவான பளபளப்பான கேசம், மன்மதன் கேளிக்கைக்குகந்த ஊஞ்சல் போல் தொங்கியாடும் தங்கத்தோடுகள் அணிந்த காதுகள், மென்மையும் ஒளியும் சிந்தும் அன்றலர்ந்த தாமரைக்கொப்பான முகம், விளங்கப் பேரெழிலுடன் அரசகுமாரி அங்கே, நித்திரை கவர்வதுபோல், சகல மக்களின் கண்களையும் கவர்ந்து ஒளிர்ந்தாள்.

அரசகுமாரியின் ஒப்புயர்வற்ற சௌந்தரியத்தைக் கண்ட நெசவாளி அந்த வினாடியே மன்மத பாணத்துக்கு இரையானான். மிகவும் சிரமப்பட்டு, மனோதிடத்துடன் தன் எண்ணங்களை மறைத்துக்கொண்டு, எல்லாத் திசைகளிலிருந்தும் அரசகுமாரியைப் பார்த்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வெப்பம் மிகுந்த நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டு படுக்கை விரிக்காத கட்டிலிலே விழுந்து அப்படியே கிடந்தான். அவளை எப்படிப் பார்த்தானோ அப்படியே மனத்தில் வர்ணித்துக்கொண்டும், நினைத்துப் பார்த்துக்கொண்டும் சுலோகங்களைச் சொல்லிக்கொண்டும் கிடந்தான்.

அழகுள்ள இடத்தில் குணமும் இருக்கும் என்ற கவிகள் பாடியிருப்பது தவறு. ஏனெனில் இவள் பேரழகியாயிருந்தும் என் இதயத்தில் வீற்றிருந்தபடியே என்னைப் பிரிந்து துன்புறுத்துகின்றாள்.

அல்லது இப்படியும் இருக்கலாமோ?

ஒன்று துன்பத்தால் நிறைந்திருக்க மற்றொன்றைக் காதலி கவர்ந்து செல்ல, இன்னொன்று உணர்ச்சிகளிலே ஊறித் தவிக்க என்னுள் எத்தனை இதயங்கள்தான் உள்ளனவோ?

நற்குணங்களால் உலகம் நன்மையே அடைகின்றது என்றால் பிறகு மான்விழியாளின் நற்குணங்கள் என்னைத் துன்புறுத்துவானேன்?

”அவனவன் தானிருக்கும் வீட்டைப் பத்திரமாகக் காக்கின்றான். அழகியே! என் இதயத்தில் நீ குடிகொண்டிருந்தும் அதை என்றென்றும் எரித்துக் கொண்டிருக்கிறாய்.

சிவந்த இதழ்களும், இளமைக் கர்வத்தில் ஓங்கிய கலசம் போன்ற ஸ்தனங்களும், குழிந்த நாபியும், இயல்பாய்ச் சுருண்ட நெற்றிக் கேசமும், நுண்ணிய இடையும், நினைத்தவுடன் துன்பமுண்டாக்குவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆனால் அவளுடைய பளபளப்பான கன்னங்கள் என்னை எரிப்பதுதான் சரியில்லை.

அவளது ஸ்தனங்களிலே விளையாடிக் களைப்படைந்து, குங்குமம் போல் சிவந்து மதயானையின் மத்தகத்தைப் போல் பரந்துள்ள நிதம்பத்தில் மார்பை வைத்து, அவளது கைக்கட்டிலே சிக்கிக் கிடந்து, கணப் பொழுது துயில்கொண்டு கணப்பொழுது கனவு காணப்பெறுவேனோ?

நான் இறக்க வேண்டுமென்று விதியிருந்தால் அந்த மான் விழியாள் தான். அதற்குக் காரணமாக வேண்டுமா? வேறு மார்க்கம் இல்லையா?

நெஞ்சே! காதலி வெகுதொலைவிலிருந்தாலும் அருகிலிருப்பதே போல் கண்டு களித்திருக்கிறாய் நீ! நீ கண்டு களைத்துப் போனால், பிறகு அந்த யோகத்தைக் கண்களுக்கும் உபதேசம் செய். தனிமையிலே அவளுடன் உறையும் உனக்குத் துக்கமே உண்டாகும். ஏனெனில் பிறர் பொருளை விரும்புகிறவர்கள் தன் மதிப்பால் சுகம் பெறுவதில்லை.

அந்த மெல்லியலான நிலவின் தண்ணொளியைத் தனதாக்கிக் கொண்டாள்; அதனால் சந்திரனின் வதனம் மங்கிவிட்டன; தாமரையின் பளபளப்பை அவள் கண்கள் உண்டன: என்றாலும் அவளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டுவார் யாருமில்லை. மதயானையின் நடையையும் கவர்ந்து விட்டாள். அது எப்படியோ நான் அறியேன்! என் இதயத்தையும் பறித்து விட்டான். என்ன விந்தையோ! என்ன மாயமோ!

மண்ணிலும், விண்ணிலும் திசையிலும், திக்கிலும், எங்கும் அவளைக் காண்கின்றேன். உயிர்ப்பின் இறுதித் துடிப்பின் போதும் என் நெஞ்சின் நினைவில் அவள் எங்கும் நிறைந்திருப்பான். விஷ்ணுபோல் அந்த மெல்லியலாள் எங்கும் நிறைந்திருக்கிறாள்.

மனோ நிலைகள் எல்லாம் அநித்தியம் என்னும் புத்தபகவான் வார்த்தை பொய். ஏனெனில் காதலியைப் பற்றிய எனது சிந்தனை நீடித்ததாய், நித்தியமாய் வளர்கின்றது.

இப்படி நெசவாளி பலவிதமாகப் பிதற்றியவாறு அலைபாயும் மனதுடன் துயர்பட, எப்படியோ இரவு கழிந்தது. மறுநாள் வழக்கம்போல் சரியான நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு தச்சன் நெசவாளியின் வீட்டுக்கு வந்தான். படுக்கை விரித்திராத கட்டிலிலே கைகளும் கால்களும் போட்ட இடம் தெரியாமல் நெசவாளி கிடப்பதைக் கண்டான். வெம்பிய பெருமூச்சு விட்டுக்கொண்டு, வெளிறிய கன்னங்களோடும் நீர் நிரம்பிய கண்களோடும் அவன் கிடப்பதைக் கண்டான். ”நண்பனே, உன் உடல்நிலை ஏன் இன்றைக்கு இப்படியிருக்கிறது?” என்று விசாரித்தான். பதில் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். நெசவாளி வெட்கத்தால் பதில் பேசவில்லை. தச்சன் சலிப்படைந்து இந்தச் செய்யுளைச் சொன்னான்:

தனது கோபத்தால் பிறரை மனம் சலிக்கும்படி செய்கிறவன் நண்பன் இல்லை; பயத்தோடு தன்னை உபசரிக்கும்படி செய்பவனும் நண்பன் இல்லை. ஒருவனைத் தாய்போல் பாவித்து நம்பிக்கை வைத்திருக்கிறாய் என்றால் அவன் உன் நண்பனே தவிர, சும்மா அறிமுகமானவன்தான் என்று எண்ணிவிடாதே!

இப்படிச் சொல்லிவிட்டு, நோய்க் குறிப்பு அறியும் கைவிரல்களால் அவனது மார்பையும் மற்ற அங்கங்களையும் தொட்டு பார்த்துவிட்டு, ”நண்பனே, உனக்குக் காய்ச்சல் ஒன்றும் இல்லை. உனது உடல் நிலைக்குக் காரணம் மன்மதன்தான் என்று நினைக்கிறேன்” என்றான்.

தச்சனே தன் உடல்நிலை விஷயத்தை உடைத்துச் சொன்னவுடன், நெசவாளி எழுந்து உட்கார்ந்துகொண்டு, பின்வரும் செய்யுளைச் சொன்னான்:

குணத்தை நன்கறிந்த எஜமானன், நம்பிக்கையுள்ள வேலையாள், பக்தி விசுவாசமுள்ள மனைவி, ஆதரவளிக்கும் நண்பன் ஆகியோரிடம் ஒருவன் தன் துக்கத்தை வெளியிட்டால் மனத்துக்கு நிம்மதியுண்டாகிறது.

நெசவாளி அரசகுமாரியைப் பார்த்தது முதலான விருத்தாந்தம் முழுவதையும் தச்சனிடம் தெரிவித்தான். தச்சன் யோசனை செய்துவிட்டு, ”அந்த அரசனோ ஒரு க்ஷத்திரியன். நீயோ வைசியன், அப்படியிருக்க, அதர்மத்துக்கு நீ பயப்பட வில்லையா?” என்றான்.

”சாஸ்திரத்தின்படி க்ஷத்திரியனுக்கு மூன்று மனைவிகள் உண்டு. அரசகுமாரி ஒருவேளை வைசிய ஜாதி மனைவியின் புத்ரியாக இருக்கலாம். அதனால்தான் எனக்கு அவள்மேல் காதை ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு கதையில் அரசன் சொன்னதுபோல்,

எனது பரிசுத்தமான மனது அவளை விரும்புகிறதென்றால் அவள் நிச்சயமாக க்ஷத்திரிய குலத்தில் உதித்தவளாக இருக்க வேண்டும். பகுத்தறிவு சொல்வதில் நல்லவர்களுக்குக் சந்தேகமேற்பட்டால் மனம் சொல்வதையே நியாயம் என்று முடிவு கட்டுகின்றனர்’.” என்றான் நெசவாளி.

அவனது துணிந்த முடிவைத் தச்சன் அறிந்து கொண்டான். ”இனிமேல் என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டான்.

”எனக்கு ஒன்றும் தெரியாது. நண்பனானதால் உன்னிடம் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு நெசவாளி மௌனியானான்.

கடைசியில், ”சரி, எழுந்திரு, குளித்துவிட்டுச் சாப்பிடு! நிராசையை விட்டு விடு, ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி நடந்தால் சீக்கிரமே அவளைக் கூடி நீ சுகபோகம் அனுபவிப்பாய்” என்று தச்சன் சொன்னான்.

நண்பன் அளித்த உறுதிமொழியால் மீண்டும் நம்பிக்கை அடைந்து நெசவாளி எழுந்தான். பழையபடியே தன் அலுவல்களைக் கவனித்தான். மறுநாள் தச்சம் வந்தான். வந்தவன், ஒரு கருட வாகனத்தையும் தன்னோடு கொண்டு வந்திருந்தான். அது மரத்தால் செய்யப்பட்டது; பல வர்ணங்களிலே சித்திர வேலை செய்யப்பெற்றிருந்தது. அதை இயக்குவதற்குப் பல யந்திர வேலைப்பாடுகளும் அதில் இருந்தன. நெசவாளியிடம் அதைக் காண்பித்து, ”நண்பனே, இதில் நீ ஏறிக்கொண்டு விசையை அழுத்தினால் விரும்புகிற இடத்துக்குப் போகலாம். எந்த இடத்தில் விசையை எடுத்து விடுகிறாயோ அங்கே இந்த வாகனம் இறங்கும். இதை எடுத்துக்கொள். ஊர் உறங்கும் நேரம் பார்த்து, இன்றிரவே, அலங்காரம் செய்துகொள். என் சாஸ்திர ஞானத்தைக் கொண்டு நீ விஷ்ணுரூபம் தரிசிக்கும்படி உனக்கு ஜோடனை செய்து விடுகிறேன். பிறகு இந்த கருட வாகனத்தின் மீது ஏறிக்கொண்டு போய் அரசகுமாரியின் அந்தப்புரத்தின் மாடியில் இறங்கிவிடு. பிறகு அந்த அரச குமாரியுடன் உனக்கு விருப்பமான ஏற்பாடு செய்துகொள். அவள் மேன் மாடத்தில் தனிமையிலே தூங்குகிறாள் என்று அறிந்து வந்திருக்கிறேன்” என்றான்.

இவ்வாறு சொல்லிவிட்டு தச்சன் போய்விட்டான். நெசவாளி பல மனக்கோட்டைகள் கட்டியபடியே அன்றையப் பகற் பொழுதைக் கழித்தான். இரவில் குளித்தான்; உடம்புக்குச் சாம்பிராணி புகை ஏற்றி, முகத்துக்கு வாசனைச் சுண்ணமும் தைலங்களும் பூசிக்கொண்டான்; தாம்பூலம் தரித்துக்கொண்டான்; விதவிதமான வர்ணமும் வாசனையும் நிறைந்த மலர்மாலைகளையும் வஸ்திரங்களையும் அணிந்து கொண்டான். இதர ஆபரணங்களையும் கிரீடத்தையும் தரித்தான். தச்சன் சொன்ன நேரத்தில் சொன்னபடியே கருட வாகனத்தில் ஏறிச் சென்றான்.

அரண்மனை மேன்மாடத்தில் அரசகுமாரி தனிமையில் படுக்கையிலே படுத்திருந்தாள். நிலவொளி அவள் மீது படர்ந்திருந்தது. சந்திரனைப் பார்த்த வாறு அவளது மனம் காதல் சிந்தனைகளிலே மூழ்கிப் போயிருந்தது. திடீரென்று கருட வாகனனாய் விஷ்ணு ரூபத்தில் இறங்கும் நெசவாளியை அவள் பார்த்துவிட்டாள். உடனே படுக்கையிலிருந்து பரபரப்புடன் எழுந்து சென்று அவனது பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, ”தேவதேவ! தங்கள் வருகையால் என்னை அனுக்ரஹித்ததின் காரணம் என்னவோ, தெரிவியுங்கள்! கட்டளைப்படி செய்கிறேன்!” என்று வேண்டிக்கொண்டாள்.

இந்தச் சொற்களைக் கேட்ட நெசவாளி, ”அன்பே! உன் பொருட்டாகவே நாம் இம்மண்ணுலகிற்கு விஜயம் செய்திருக்கிறோம்” என்று கம்பீரமாகவும், மிருதுவாகவும், மெதுவாகவும் வார்த்தை உதிர்த்தான்.

”நான் மானிடப் பெண்ணாயிற்றே!” என்றாள் அவள்.

”முன்பு நீ எம்தேவியே. சாபத்தால் மண்ணுலகில் பிறந்திருக்கிறாய். இத்தனை காலமாக நீ மனிதனுடன் சேராமல் உன்னை நாமே ரக்ஷ¢த்து வந்தோம். உன்னைக் காந்தர்வ மணம் புரிந்துகொள்ள மனம் கொண்டோம்” என்று பதில் அளித்ததான் நெசவாளி.

”மனிதன் பெறுவதற்கரிய பெரும்பேறு ஆயிற்றே இது!” என்று அரச குமாரி தனக்குள் யோசித்தாள். ”சுவாமி, அப்படியே ஆகட்டும்” என்று ஒப்புக் கொண்டாள். அவளைக் காந்தர்வ முறைப்படி நெசவாளி மணந்து கொண்டான்.

அதன்பிறகு தினந்தோறும் அவர்கள் காதலின்பத்தில் மூழ்கினார்கள். இருவருக்குமிடையே ஆசை வளர்ந்து கரை புரண்டோடியது. நாட்கள் பல சென்றன. இரவு நீங்குவதற்குச் சிறிது நேரமிருக்கும் பொழுதே, நெசவாளி தன் கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு ”வைகுண்டம் சென்று வருகிறோம்” என்று அவளிடம் விடைபெற்றுக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவான்.

பிறகு ஒரு நாள் அந்தப்புரத்தைக் காவல் காக்கும் சேடிமார் அரசகுமாரியின் உடம்பில் கலவிக் குறிகள் இருப்பதைக் கண்டுவிட்டார்கள். ‘இனி செத்தோம்’ என்று பயந்து போனார்கள். உடனே அசரனிடம் ஓட்டமாய் ஓடிச்சென்று, ”அரசே, தஞ்சம், தஞ்சம்! உம்மிடம் ஒரு செய்தி சொல்ல வந்திருக்கிறோம்” என்றார்கள். ”சொல்லுங்கள்!” என்று அரசன் கட்டளை இட்டான். ”அந்தப்புரத்தில் ஆண்கள் நுழையாதபடி எவ்வளவோ முயற்சித்துக் காவல் காத்தோம். இருந்தபோதிலும், அரசகுமாரி சுதர்சனாவின் உடம்பில் கலவிக்குறிகள் தெரிகின்றன. வேறொன்றும் எங்களுக்குத் தெரியாது. தங்கள் சித்தம்” என்று அவர்கள் தெரிவித்துக்கொண்டார்கள்.

அரசன் இதைக்கேட்டதும் மனக்கலக்கமடைந்து சிந்திக்கத் தொடங்கினான்.

பெண் பிறந்தாள் என்றாலே பெருங்கவலைதான்; யாருக்குக் கொடுப்பது என்பதும் பெரிய தொல்லை; கொடுத்த பின் சுகமாய் வாழ்கிறாளா என்பதும் ஒரு பெரிய கேள்விதான். பெண்ணுக்குத் தந்தையாக இருப்பது மிகவும் கஷ்டமே.

பெண் பிறந்தவுடன் தாயின் மனத்தை அபகரிக்கிறாள்; வளர்ந்தவுடன் பிராண சிநேகிதர்களையும் பிரிக்கிறாள்; மணந்த பிறகு களங்க மடைகிறாள். பெண்கள் என்றாலே கஷ்டந்தான்.

நல்லவனின் கையில் போய்ச் சேருமா? சேர்ந்து அவர்களை மகிழ்விக்குமா? தோஷ தூஷணைகள் இல்லாமல் இருக்குமா? என்று, தனது கவிதையைப் பற்றி கவிஞன் கவலை கொள்வது போல் பெண்களைப் பற்றி பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள்.

இப்படிப் பதலவிதமான எண்ணியபடியே அரசன் ராணியிடம் சென்றான். ”தேவி, சேடிமார் சொன்ன விஷயம் உனக்குத் தெரியுமா?” இப்படிப்பட்ட காரியம் செய்தவன் இன்றைக்கே யமனுக்கு இரையாவான்” என்று கூறிவிட்டுத் தான்கேட்ட விஷயத்தை ராணிக்குச் சொன்னான். ராணியும் மனக்கலக்கத்துடன் அரசகுமாரியின் அந்தபுரத்துக்குச் சென்றாள். அங்கே தனது புதல்வியின் உதட்டிலே பல்குறியும் அங்கங்களிலே நகக்குறியும் இருக்கக் கண்டாள். உடனே, ”அடிபாவி! நம் குலத்துக்கே களங்கம் ஏற்படுத்தி விட்டாயே! ஏன் இப்படி நடத்தை கெட்டுப் போனாய்? உன்னிடம் தொடர்பு கொண்டிருப்பவன் யார்? அவனுக்குச் சாவு நெருங்கி விட்டது. இந்தக் கேடு கெட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகாவது உண்மையைச் சொல்!” என்று இரைந்தான்.

அவமானத்தால் அரசகுமாரி முகம் கவிழ்ந்துக் கீழ்நோக்கியபடியே, விஷ்ணு ரூபத்தில் வந்த நெசவாளியின் விருத்தாந்தத்தை எல்லாம் வெளியிட்டாள். அதைக் கேட்டவுடனேயே ராணியின் முகம் மலர்ந்தது; உள்ளும் புறமும் பரவசமானாள். அரசனிடம் வேகமாக ஓடிச்சென்று, ”நாதா, தாங்கள் மிகவும் பாக்கியசாலி. தினந்தோறும் இரவில் விஷ்ணு பகவானே பிரசன்னமாகி நமது பெண்ணையடைகிறார். அவளைக் காந்தர்வ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். இன்றிரவு நீங்களும் நானும் ஜன்னல் வழியாக அவரைப் பார்க்க வேண்டும். மனிதருடன் அவர் பேசுவதில்லையாம்” என்று கூறினாள்.

அரசன் மிகவும் சந்தோஷமடைந்தான். அன்றையப் பகற்பொழுது போவது அவனுக்கு நூறு வருஷங்கள் போவதுபோல் இருந்தது. கடைசியில் இரவில் ஜன்னல் அருகில் ஒளிந்து கொண்டு, அரசி தன் பக்கத்தில் இருக்க, ஆகாயத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தான். அந்தச் சமயத்தில், கருட வாகனத்தில் அமர்ந்து சங்கும் சக்கரமும் கதாயுதமும் கைகளில் ஏந்தியபடி பொருத்தமான சின்னங்களுடன் ஆகாயத்திலிருந்து யாரோ இறங்குவதை அரசன் கண்டான். அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டவன்போல் தன்னை எண்ணிக்கொண்டான். ராணியைப் பார்த்து, ”தேவி! இவ்வுலகில் நம் இருவரைப் போல் புண்ணியம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. நமது பெண்ணை விஷ்ணு பகவானே நேரில் வந்து ஏற்கிறார். நமது இதயக் கனவுகள் எல்லாம் பலித்து விட்டன. இனி என் மாப்பிள்ளையின் வல்லமையைக் கொண்டு இந்தப் பூமி முழுவதையும் ஆளுவேன்” என்று கூறினான்.

நிற்க, தொண்ணூற்றென்பது லட்சம் கிராமங்களுக்கு அதிபதியான தென்னாட்டு மன்னன் ஸ்ரீவிக்கிரமசேனனின் தூதர்கள் ஒருநாள் இந்த அரசனிடம் வந்தார்கள். ஸ்ரீவிக்கிரமசேனனுக்கு ஆண்டுதோறும் இந்த அரசன் கப்பம் செலுத்துவது வழக்கம். அதை வசூலிக்கவே தூதர்கள் வந்தார்கள். சாட்சாத் மகாவிஷ்ணுவே தனக்கு மாப்பிள்ளையாக வாய்த்திருக்கிறார் என்கிற கர்வத்தால் அரசன் தூதர்களுக்கு முன்போல் மரியாதைகள் எதுவும் செய்ய வில்லை. அதனால் அவர்கள் கோபமடைந்து, ”அரசே, கப்பங்கட்ட வேண்டிய நாள் கடந்துவிட்டது. கிரமப்படி நீங்கள் செலுத்தவேண்டிய கப்பத்தைச் செலுத்தத் தவறியது ஏன்? எதிர்பாராத, அமானுஷ்யமான, சக்தி எங்கிருந்தோ உங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடும். இல்லாவிட்டால் நெருப்பு, புயல், விஷப் பாம்பு, யமன் முதலியோருக்குச் சமமான எமது அரசன் ஸ்ரீவிக்கிரமசேனனை எதிர்க்கத் துணிவீரா!” என்று கூறினர்.

இந்தப் பேச்சைக் கேட்ட அரசன் அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினான். தங்கள் காரியம் பலிக்காததால் தூதர்கள் திரும்பிப்போய், விஷயத்தை நூறாயிரம் மடங்கு மிகைப்படுத்திச் சொல்லி தங்கள் மன்னனைக் கோபமூட்டி விட்டனர்.

அதன் விளைவாக, ஸ்ரீவிக்கிரமசேனன் தனது நான்கு விதப் படை பலங்களையும் திரட்டிக்கொண்டு அந்த நாட்டின் மேல் படையெடுத்தான்.

“சமுத்திரத்துக்குள் ஓடி யொளிந்தாலும் சரி, இந்திரன் காக்கும் மேருமலையில் ஏறினாலும் சரி, அந்தக் கெட்ட அரசனைக் கொல்லாமல் விடப்போவதில்லை. இது என் சபதம்!” என்று கோபத்தோடு சபதம் செய்தான்.

ஸ்ரீவிக்கிரமசேனனின் படைகள் எவ்விதத் தடையும் இல்லாமல் முன்னேறின. கடைசியில் அந்த நாட்டை அடைந்து நாசஞ் செய்யத் தொடங்கின. கொல்லப்பட்டவர்கள் போக மற்றவர்கள் எல்லோலும் புண்டர வர்த்தன மன்னனின் அரண்மனையைச் சூழ்ந்து கொண்டு அரசனை நிந்திக்கலாயினர். அதைக் கேட்ட பிறகும் அரசனுக்குத் துளிகூட கவலை ஏற்படவில்லை.

மறுநாள் ஸ்ரீவிக்கிரமசேனனின் படைகள் நெருங்கி புண்டரவார்த்தன புரியைத் தாக்கின. மந்திரிகளும், புரோகிதர்களும் பெரியோர்களும், அரசனிடம் போய், ”அரசே, பலமுள்ள எதிரி வந்து நகரை முற்றுகை இட்டிருக்கிறான். நீங்கள் எப்படிக் கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

”உங்களுக்குக் கவலை வேண்டியதில்லை. எதிரியைக் கொல்வதற்கு ஒரு வழி யோசித்தது வைத்திருக்கிறேன். எந்த பலத்தைக் கொண்டு எதிரியைக் கொல்லப்போகிறேன் என்கிற விஷயம் உங்களுக்கு நாளை காலையில்தான் விளங்கும்” என்றான் அரசன். இவ்வாறு தெரிவித்து விட்டு, அரசன் கோட்டை வாயில்களை நன்றாக பலப்படுத்தினான். பிறகு அரசகுமாரி சுதர்சனாவை அழைத்து இனிய சொற்களில் பரிவுடன் பேசினான்: ”குழந்தாய்! உன் கணவன் பலத்தை நம்பித்தான் எதிரியுடன் சண்டை ஆரம்பித்திருக்கிறேன். ஆகையால் இன்றிரவு ஸ்ரீமந் நாராயணன் வரும்பொழுது இந்த எதிரியைக் காலையில் கொல்ல வேண்டும் என்று அவரிடம் சொல்!” என்றான்.

தந்தையின் வேண்டுகோள் முழுவதையும் சுதர்சனா இரவில் நெசவாளிக்கு விவரமாகச் சொன்னாள். அதைக்கேட்டு நெசவாளி சிரித்தான். ”அன்பே! முன்பு ஹிரண்யகசிபு, கம்சன், மதுகைடபர்கள் போன்ற பெரிய மாயாவி ராக்ஷசர்களையெல்லாம் நான் விளையாட்டாக் கொன்றிருக்கிறேனே! இந்த மனிதர்களுடன் சண்டை செய்வது எனக்கு எம்மாத்திரம்? ‘கவலை இல்லாமல் இருங்கள். காலையில் சக்கராயுதம் எறிந்து மகாவிஷ்ணு தங்கள் எதிரியின் படைகளைக் கொல்வார்’ என்று அரசனிடம் போய்ச் சொல்” என்றான்.

அரசகுமாரி இதைப் பெருமையுடன் தந்தையிடம் தெரிவித்தாள். அரசனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. வாயில் காப்போனை அழைத்து, ‘காலையில் சண்டையின்போது கொல்லப்படும் ஸ்ரீவிக்கிரமசேனன் தரப்பிலிருக்கும் தனமோ, தானியமோ, பொன்னோ, யானையோ, குதிரையோ, ஆயுதங்களோ எதுவானாலும் சரி, யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களுக்கே அது சொந்தம்’ என்று நகரெங்கும் பறைசாற்றும்படி உத்தரவிட்டான்.

அரசருடைய பிரகடனத்தைக் கேட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். ”நமது மன்னர் மிகுந்த பராக்கிரமசாலி; எதிரியின் சேனை பெரிதாக இருந்துங்கூட கவலை கொள்ளவில்லை. நிச்சயமாய்க் காலையில் கொன்று விடுவார்” என்று பேசிக்கொண்டு போனார்கள்.

நிற்க, நெசவாளியின் இன்பக்காதல் நினைவுகள் எல்லாம் பறந்து போயின. அவனைக் கவலை சூழ்ந்துகொள்ளவே, யோசிக்கத் தொடங்கினான்: ”இப்பொழுது என்ன செய்வது? கருடவாகனத்தில் ஏறிக்கொண்டு வேறு எங்காவது போய்விடலாமா? போய்விட்டால் இந்தப் பெண்மணியை மீண்டும் கூடமுடியாதே! ஸ்ரீவிக்கிரமசேனன் என் மாமனாரைக் கொன்று, அந்தப் புரத்திலிருக்கும் இவளைப் பிடித்துக்கொண்டு போய் விடுவானே! எனவே யுத்தம் செய்வதே சரி. நான் இறந்தால் என்னோடு என் மனவிருப்பங்களும் மண்ணாய்ப் போய்விடும். அவள் இல்லையென்றாலும் எனக்கு மரணமே. சுருங்கச் சொன்னால், இரண்டு வழிகளிலும் எனக்கு மரணமே. ஆகவே சண்டை செய்து சாவதே மேல். மேலும், நான் யுத்தம் செய்தால் கருடவாகனத்தின் மேல் அமர்ந்துவரும் என்னைக் காணும் எதிரிகள் என்னை சாட்சாத் மகாவிஷ்ணுவே என்று எண்ணி ஒரு வேளை ஓட்டம் பிடிக்கலாம்.

கஷ்டமும், சங்கடமும், பேராபத்தும் நேர்கிற சமயங்களில் மேலோர் தைரியத்தைக் கைவிட மாட்டார்கள். சிறந்த விவேகமும், தைரியமும் காட்டி விபத்துக்களை விலக்குகிறார்கள்

என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு நெசவாளி யோசித்து முடிவு செய்து பிறகு, வைகுண்டத்தில் நிஜமான மஹாவிஷ்ணுவிடம் நிஜமான கருடபகவான் சென்று, ”சுவாமி! மண்ணுலகில் இருக்கிற புண்டரவர்த்தன நகரத்தில் ஒரு நெசவாளி தங்கள் உருவம் தரித்துச் சென்று அரசகுமாரியை அனுபவித்து வருகிறான். புண்டர வர்த்தனத்தின் அரசனை மகா பலசாலியான ஒரு தென்னாட்டு அரசன் வேரறுக்க எண்ணங் கொண்டு படையெடுத்து வந்திருக்கிறான். தன் மாமனாருக்கு உதவி செய்ய நெசவாளி இன்றையதினம் நிச்சயித்திருக்கிறான். இதைத் தங்களிடம் தெரிவிப்பது என் கடமை. அந்த யுத்தத்தில் நெசவாளி ஒருவேளை இறக்க நேரிட்டால் தென்னாட்டு அரசன் மகாவிஷ்ணுவைக் கொன்றான் என்று மானிட உலகில் பழிச்சொல் கிளம்பும். அதனால் யக்ஞம் முதலிய சடங்குகள் நடக்காமற்போய், மேலுலகத்தாருக்கு நஷ்டம் ஏற்படும். விஷ்ணு கோவில்களை நாஸ்திகர்கள் நாசம் செய்து விடுவார்கள். திரிதண்டி ஏந்திய பக்தர்களோ தீர்த்த யாத்திரை செய்வதை நிறுத்திவிடுவார்கள். இதுதான் நிலைமை. இனி தங்கள் சித்தம்” என்று தெரிவித்துக் கொண்டார்.

மகாவிஷ்ணு யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, கருடபகவானை நோக்கி, ”பக்ஷ¢ ராஜனே! நீ சொல்வது சரி. இந்த நெசவாளி நமது ஒரு அம்சம்தான். இவனே அந்த அரசனைக் கொல்லக் கடவதாக! அதற்கு இதுவே உபாயம்: நீயும் நாமும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் அவனுடைய உடலில் பிரவேசிப்போம். நீயும் அவன் கருடவாகனத்திற்குள் பிரவேசி. நமது சக்கரம் அவன் சக்கரத்துக்குள் பிரவேசிக்கட்டும்” என்று கூறினார்.

”அவ்விதமே” என்று கருடபகவான் ஒப்புக்கொண்டார்.

பிறகு, மகாவிஷ்ணுவின் தூண்டுதலின் பேரில் நெசவாளி சுதர்சனாவுக்கு இவ்வாறு கட்டளையிட்டான்: ”அன்பே! நான் யுத்தத்திற்குப் புறப்படப் போகிறேன். எனக்கு மங்களச் சடங்குகள் எல்லாம் நடக்கட்டும்” என்றான். அவ்விதமே சகல மங்களச் சடங்குகளும் நடந்து முடிந்தன. யுத்தத்துக்குரிய ஆயுதங்களை அவனுக்கு அணிவித்தனர். கோரோஜனை, கஸ்தூரி, புஷ்ப வகைகளைக் கொண்டு அவனுக்குப் பூஜை செய்தார்கள்.

தாமரையின் காதலனான ஆயிரங்கிரணங்கள் கொண்ட சூரிய பகவான் கீழ்வானம் எனும் கங்கையின் வெற்றித் திலகம் போல் உதயமானான். போர் முரசங்கள் வெற்றி முழக்கம் செய்ய, அரசன் நகரை விட்டு வெளியே வந்து போர்க்களம் புகுந்தான். இருதரப்புப் படைகளும் அணிவகுத்து நின்று, காலாட்படைகள் போரிடத் தொடங்கின. அதேசமயத்தில், நெசவாளி கருடவாகனத்தின் மீது அமர்ந்து, விதிப்படி பொன்னும் முத்தும் தானம் செய்துவிட்டு வெண்மாளிகையிலிருந்து உயரக் கிளம்பி ஆகாயமார்க்கமாகச் சென்றான். அவனைப் பார்த்த ஜனங்கள் உற்சாகமடைந்து வணங்கினார்கள். நகருக்கு வெளியே தனது படைகளின் மேல் பறந்து வந்து, கம்பீரமாக ஒலி செய்யும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு எடுத்து நெசவாளி ஊதினான்.

சங்கநாதத்தைக் கேட்டதும் நால்வகைப் படைகளும் நடுங்கிப் போயின. வஸ்திரங்களை அடிக்கடி நனைத்துக் கொண்டன. சிலர் பயங்கரமாகக் கூக்குரலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர். சிலர் மூர்ச்சை போட்டு பூமியில் உருண்டனர். சிலர் பயத்தினால் ஆகாயத்தின்மேல் நிலை குத்திய பார்வையோடு ஸ்தம்பித்து நின்றனர்.

அந்தச் சமயத்தில் யுத்தத்தைப் பார்க்கவேண்டுமென்று ஆவல் கொண்டு தேவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்திரன் பிரம்மாவைப் பார்த்து, ”பிரம்மதேவா! அங்கென்ன, யாராவது ராக்ஷசனையோ அசுரனையோ கொல்ல வேண்டியிருக்கிறதா? பின் ஏன் ஸ்ரீமந் நாராயணனே கருடவாகனம் ஏறி யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கிறார்?” என்று கேட்டான். பிரம்மா யோசித்தார்:

தேவர்களின் பகைவர்களைக் கொன்று ரத்தங்குடித்த சக்கராயுதத்தை மகாவிஷ்ணு மனிதன்மேல் வீசமாட்டார். சிங்கத்தின் பாதம் யானைகளைக் கொல்லுமேயல்லாமல் கொசுக்களைக் கொல்லாது.

பின் ஏன் இந்த அதிசயமான காட்சி?” என்று பிரம்மாவும் மலைத்துப் போனார். ஆகையால்தான் நான்,

நன்றாகத் திட்டமிட்ட சூழ்ச்சியின் முடிவைப் பிரம்மாவாலும் அறிய முடியாது; விஷ்ணுரூபத்தில் சென்ற நெசவாளி அரசகுமாரியை அணைத்தான் என்று சொன்னேன்” என்றது தமனகன்.

தமனகன் கதையை மேலும் தொடர்ந்து சொல்லிற்று:

”இவ்விதம் ஆவல் நிறைந்தவர்களாய் தேவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நெசவாளி சங்ககராயுதத்தை ஸ்ரீவிக்கிரமசேனன் மீது பிரயோகித்தான். சக்கராயுதம் அந்த அரசனை இரண்டு துண்டமாக்கிவிட்டுத் திரும்பி நெசவாளியின் கைக்கு வந்து சேர்ந்தது. இதைக்கண்டு எல்லா அரசர்களும் தத்தம் வாகனங்களிலிருந்து இறங்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, ஸ்ரீமந் நாராயணன் ரூபத்திலிருக்கும் நெசவாளியை நோக்கி, ”சுவாமி! தலைவனற்ற சேனை தோற்றுவிடும் என்பதறிந்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள்!” என்று பிரார்த்தித்தனர்.

”உங்களுக்கு அபயம் அளித்தேன். அரசன் சுப்ரதிவர்மன் இடுகிற கட்டளைகளைத் தயக்கமின்றி என்றென்றும் பின்பற்றி வருவீர்களாக!” என்று நாராயண வடிவில் இருக்கும் நெசவாளி பதிலளித்தான்.

”சுவாமி! கட்டளைப்படியே நடக்கிறோம்” என்று எல்லா அரசர்களும் அங்கீகரித்தனர். எதிரிக்குச் சொந்தமான போர் வீரர்கள், யானைகள், குதிரைகள், ரதங்கள், பண்டங்கள் முதலிய சகல செல்வங்களையும் நெசவாளி சுப்ரதிவர்மன் வசமாக்கினான். அதன்பிறகு, வெற்றிப்புகழ் நாட்டிய நெசவாளி அரசகுமாரியுடன் இருந்து சகல சுகங்களும் அனுபவித்தான்.

அதனால்தான், ‘செயல் துணிவுள்ளவர்களுக்குத் தேவர்களும் துணை செய்வார்கள்…’ என்று சொல்கிறேன்” என்றான் தமனகன்.

”சரி, நீயும் துணிந்த முடிவுக்கு வந்து விட்டிருந்தால், விரும்பியபடியே வெற்றி தேடிச் செல். உனக்கு மங்களமுண்டாகட்டும்!” என்றது கரடகன்.

பிறகு, தமனகன் சிங்கத்திடம் போய் வணங்கிவிட்டு உட்கார்ந்தது, ”உன்னைக் கண்டு ரொம்ப நாள் ஆயிற்றே! காரணமென்ன!” என்று சிங்கம் விசாரித்தது.

”அரசே! தங்களிடம் இன்று ஒரு அவசர காரியமாய் வந்திருக்கிறேன். அது உங்கள் மனதுக்குப் பிடிக்காத விஷயந்தான் என்றாலும் அது உங்கள் நன்மைக்குத்தான் என்பதால் தெரிவிக்க வந்தேன். பிடித்தமான விஷயம், பிடிக்காத விஷயம் என்பவை எல்லாம் என்னைப்போல் அண்டிப் பிழைப்பவர்களின் கையில் இல்லை. அவசர அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம் நேரம் தவறிப்போய்விடுமோ என்ற பயத்தால் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். ஒரு பழமொழி தெரிவிப்பதுபோல்:

மந்திரிப் பதவி வகிப்பவர்கள் என்றென்றும் உண்மையே பேசுவது அவர்களின் திடமான எஜமான பக்தியைத்தான் காட்டுகிறது.

எஜமானனிடம் என்றைக்கும் இனிப்பாகப் பேசுபவனைக் காண்பது சுலபம். ஆனால், கசப்பான உண்மையைப் பேசுகிறவனையும் கேட்கிறவனையும் காண்பது மிகவும் அரிது.”

என்றது தமனகன்.

இந்தச் சொற்களைக் கேட்ட பிங்களகன் தமகனனின் பேச்சை நம்பலாம் என்று எண்ணி, ”நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று மரியாதைதோடு கேட்டது.

”அரசே! கெட்ட எண்ணங்கொண்டு தான் சஞ்சீவகன் உங்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. என் எதிரிலேயே பல தடவை ‘உன் எஜமானனிடமிருக்கும் கீர்த்தி பலம், புத்தி பலம், பொருள் பலம் ஆகிய மூன்றின் பலா பலங்களையும் தெரிந்துகொண்டு விட்டேன்; இனிச் சுலபமாக அவனைக் கொன்றுவிட்டு ராஜயத்தை நான் கைப்பற்றப் போகிறேன்’ என்று ரகசியமாகச் சொல்லி வந்திருக்கிறது. அந்தத் திட்டத்தைச் சஞ்சீவகன் இன்றைக்கே நிறைவேற்ற விரும்புகிறது. அதனால்தான் தங்கள் பரம்பரை ஊழியனாகிய நான் தங்களை எச்சரிக்க வந்தேன்” என்றது தமனகன்.

இந்தச் சொற்களைக் கேட்பது பிங்களனுக்குப் பேரிடிவிழுகிறதைக் கேட்பதைவிட பயங்கரமாக இருந்தது. மன வருத்தமும் திக்பிரமையும் கொண்டு பிங்களன் ஒன்றும் பேசாமல் இருந்தது. அதன் மனோநிலையை தமனகன் ஊகித்தறிந்து, “ மந்திரிகளுக்கு வந்துசேரும் பெரிய தர்ம சங்கடம் இதுதான்

அரசனோ மந்திரியோ அதிகமாக நிமிரும்போது பெண்ணாகிய லட்சுமி பாரம் தாங்கமாட்டாமல் அவ்விருவரில் ஒருவரை விட்டுச் செல்கிறாள்.

உடைந்த வெள்ளியையும், ஆட்டங்கண்ட பல்லையும், துஷ்ட மந்திரியையும், நீக்கிவிடுவதே மேல்; அதனால் துயரம் நீங்கிச் சுகம் வரும்.

ஒருவனை மட்டும் தனது மந்திரியாக அரசன் நியமித்துக் கொண்டால் அவன் அறிவீனத்தால் கர்வமடைகிறான்; பிறகு, அரசனுக்கு அடங்கிய நடப்பதையே வெறுக்கிறான்; அதன் விளைவாக, தானே யதேச்சையாக அரசு செலுத்த ஆசைப்படுகிறேன். அந்த ஆசையால் தூண்டப்பட்டு அரசனையே கொல்லச் சதி செய்கிறான்.

இப்பொழுதே பார்க்கலாமே, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சஞ்சீவகன் சகல காரியங்களையும் தன்னிஷ்டம் போலத்தான் செய்து வருகிறது!

ஒரு மந்திரிக்-கு சுயநல நோக்கங்கள் இல்லாமலிருக்கலாம். என்றாலும் அலட்சியமாக அலுவல்களைப் பார்த்தால் அவனை அரசன் விரும்புவதில்லை. எதிர்காலத்தை நிகழ்காலமல்லவா நிர்ணயிக்கிறது?

என்கிற பேச்சு ரொம்பச் சரி. அதுதான் போகட்டும். அரசனின் இயல்பும் இப்படி இருந்தால் பிறகு என்ன செய்யலாம்?

உண்மை அன்போடு ஒருவன் நன்மை செய்தாலும் அவன்மேல் சிலர் வெறுப்புத்தான் கொள்கின்றனர். சாதுரியமாக ஒருவன் தீமையே செய்தாலும் அவனோடு நேசம் பாராட்டுகின்றனர். அரசர்களின் மனத்தை ஆழம் காணவே முடியாது.

அரசனின் மனம் ஒருபோதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. யோகிகள்கூட அதைப் புரிந்துகொள்வது கடினம். அரசசேவை என்பது மிகவும் கஷ்டமான வேலை”

என்றது தமனகன்.

”அதுதான் என் வேலைக்காரன் ஆயிற்றே, எதிரியாக மாறுவானேன்?” என்று கேட்டது பிங்களகன்.

”வேலைக்காரனோ இல்லையோ, அதைக்கொண்டு எதையும் தீர்மானம் செய்துவிட முடியாது.

செல்வத்தை விரும்பாதவன் அரசனிடம் வேலை பார்க்க வரமாட்டான். வேறு வக்கு இல்லை என்றால்தான் ஒருவன் பிறருக்கு உழைக்கிறான்,

என்கிற பழமொழியை நீங்கள் கேட்டதில்லையா?” என்றது தமனகன்.

”நண்பனே, நீ சொல்கிறபடியே இருந்தாலும், எனக்கென்னவோ அதை வெறுப்பதற்கு மனம் இடங்கொடுக்கவில்லை. ஏனென்றால்,

உடம்பில் குற்றங் குறைகள் பல இருக்கின்றன. என்றாலும் அதை அவனவன் பிரியமாகப் பேணுவதில்லையா? ஒருவன் மேல் பிரியம் வைத்தது வைத்ததுதான்; பிறகு அவன் என்ன தவறுகள் செய்தாலும் பரவாயில்லை.

நாம் மனதார நேசிக்கிறவன் எவ்வளவுதான் வெறுக்கத்தக்க காரியங்கள் செய்தாலும் அல்லது நிஷ்டூரமாகப் பேசினாலும், நமது நெஞ்சம் அவனைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும்.”

என்றது பிங்களகன்.

”வாழ்க்கையில் செய்கிற பெரிய தவறே அதுதான்.” என்றது தமனகன், ”மற்றெல்லா மிருகங்களையும் விட்டுவிட்டு யார்மீது முழுஅன்பு செலுத்தினீர்களோ அதுவே உங்கள் பதவியைப் பறிக்க விரும்புகிறது.

நற்குலத்தவன் ஆனாலும், அறிவில்லாதவன் ஆனாலும், யார்மீது அரசனின் கிருமை அதிகமாக லயிக்கிறதோ அவன் மனம் ராஜ பதவியில் மோகம் கொள்கிறது.

என்பது மக்கள் வாக்கு. ஆகையால், எவ்வளவுதான் நேசித்திருந்தாலும் அது கெட்டவன் ஆகிவிட்டதால் அதனை விட்டுத் தொலைக்க வேண்டும்.

இந்தப் பழமொழி சரியானதே!

தோழனோ, சகோதரனோ, நண்பனோ, மகனோ, வணங்கத்தக்க பந்துவோ யாராயிருந்தாலும்சரி, அவர்கள் கர்வங்கொண்டு பகைவர்களாக மாறினால், காரியவாதி அவர்களை விலக்கி வைக்கிறான். ‘தங்கத்தோடு என்றால்தானென்ன, காதைப் புண்ணாக்குகிறது என்றால் எடுத்துவிட வேண்டியதுதான்’

என்று பெண்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? மேலும், இது பலசாலி, இதனால் நமக்குப் பிரயோஜனம் உண்டு என்று தாங்கள் நினைத்தீர்களேயானால் அதுவும் விபரீதந்தான். ஏனெனில்,

அரசனுக்குத் தொண்டு புரியாமல் கர்வங்கொண்டு திரியும் யானையினால் என்ன பிரயோஜனம்? பலசாலியோ இல்லையோ, உதவி செய்கிறவன் தான் நல்லவன்.

இன்னொரு விஷயமும் சொல்கிறேன். தாங்கள் அதன்மேல் அனுதாபமும் பரிவும் காட்டுவது சரியல்ல, எப்படி என்று கேட்டால்,

நல்ல வழியைவிட்டுக் கெட்ட வழியில் செல்கிறவன் காலக் கிரமத்தில் கஷ்டங்கள் பட்டு மனம் நொந்துபோகிறான். நண்பனின் நல்லுபதேசங்களை நாடிக் கேளாதவன் விரைவிலே தன் நிலையிழந்து, விரோதிகளை மகிழ்வித்து, தனது மடமையின் பலனை அனுபவிக்கிறான்.

காரியமறியாத மூடன், நல்வழியில் நாட்டமில்லாதவன். புத்தி மழுங்கிப்போனவன் இவர்களெல்லாம் நல்லோர் சொல்லும் வார்த்தையைக் கேட்பதில்லை.

முதலில் கசந்து முடிவில் இனிக்கிற வார்த்தையைச் சொல்பவனும் கேட்கிறவனும் எங்கிருக்கிறானோ அங்குதான் லட்சுமி தாண்டவமாடும்.

ராஜசேவகன் வஞ்சனை செய்யக்கூடாது; ஏனென்றால் அரசனின் கண்கள் உளவாளியைப்போல் அதைக் கண்டுபிடித்துவிடும். ஆகையால், அரசே! விஷயம் கடூரமாயிருந்தாலும் இதமாயிருந்தாலும் அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். உண்மை எப்பொழுதும் காதுக்கு இதமாக இருக்காது.

தேர்ந்து பழகிய சேவகர்களைக் கைவிட்டு, புதிய முகங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசாங்கம் நலிவதற்கு அதைப் போல் வேறு நோய் ஒன்றும் கிடையாது.”

என்றது தமனகன். இதைக்கேட்ட பிங்களகன், ”நண்பனே, அப்படிச் சொல்லாதே!

நல்லவன் என்று முன்பு அரச சபையில் புகழ்ந்துவிட்டு, பிறகு அவனை நாமே இகழ்தலாகாது. கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற பயம் நமக்கு இருக்க வேண்டும்.

சரணாகதியடைந்த அதற்கு முன்பு அபய வாக்குக் கொடுத்தேனே அது எப்படி நன்றி கெட்டவனாக ஆகமுடியும்?” என்று கேட்டது.

தமனகன் பதில் சொல்லிற்று.

துவேஷம் பாராட்டுவதற்குத் துஷ்டன் காரணம் தேடிக் கொண்டிருப்பதில்லை. அதேபோல, அறவழியில் நிற்பதற்கு நல்லவனும் காரணம் தேடிக்கொண்டிருப்பதில்லை. அது அவரவர்களின் சுபாவ குணம். கரும்பு இனிக்கிறதும் எலுமிச்சம் பழம் புளிக்கிறதும் அதனதன் இயற்கைக் குணத்தினால் அல்லவா?

எவ்வளவுதான் சிரமப்பட்டு நேசம் பாராட்டினாலும் கெட்டவன் கெட்டவனாகத்தான் இருப்பான். வியர்க்க வியர்க்க முயற்சித்தாலும் நாய்வாலை நிமிர்த்த முடியாது.

மேலோருக்குச் செய்யும் நன்மை சிறியதாக இருந்தாலும் மேன்மை அடைகிறது. இமய முடியைத் தொடும் சந்திர கிரணங்கள் கூடுதலான ஒளியுடன் பிரகாசிப்பதுபோல்! கீழோருக்குச் செய்யும் நன்மை நலிந்து நசிகிறது கறுத்த மலைமுகட்டின்மேல் விழும் சந்திரகிரணங்கள் மங்கி மறைவதுபோல்!

தீயவனுக்கு நூறு நன்மைகள் செய்தாலும் வீண்; அறிவிலிக்கு நூறு புத்திமதிகள் சொன்னாலும் வீண்; சொற்படி நடக்காதவனுக்கு நூறு யோசனைகள் சொன்னாலும் வீண்; புத்தி கெட்டவனுக்கு நூறு உபதேசம் செய்தாலும் வீண்; தகுதியில்லாதவனுக்குத் தானம் கொடுப்பதும், அறிவற்ற சோம்பேறிக்கு உதவி செய்வதும், நன்றியறிதலில்லாதவனுக்கு நன்மை செய்வதும், பண்பற்றவனிடம் பண்பு பழகுவதும் வீண்.

காட்டில் அழுவது; பிணத்துக்குப் புனுகு தடவுவது; தாமரையைத் தரையில் படரச் செய்ய முயற்சிப்பது; நாய் வாலை நிமிர்த்துவது; செவிடன் காதில் சங்கு ஊதுவது; குருடன் முகத்துக்கு அழகு செய்வது; இவையெல்லாம் மூடனுக்குப் புத்தி சொல்வதற்கு நேர்.

கனத்த மடியுள்ள பசுவென்று நினைத்து எருதைக் கறக்க முயற்சிப்பதும், அழகியை விட்டு விட்டு அலியை அணைத்துக் கொள்வதும், பளபளப்பான மணலில் ஆசையோடு வைடூரியத்தைத் தேடுவதும் முட்டாள் தனமாக மூடனுக்குச் சேவை செய்வதற்கு ஒப்பாகும்.

எனவே, என் ஆலோசனையைத் தாங்கள் கேட்கத் தவறாதீர்கள். ஏனென்றால்,

”புலியும், குரங்கும், பாம்பும் சொன்ன பேச்சை நான் கேளாமற் போனதால், ஒரு நன்றிகெட்ட மனிதன் என்னை வீழ்த்திவிடத்தெரிந்தான்” என்றது தமனகன்.

”அது எப்படி?’ என்று பிங்களகன் கேட்கவே தமனகன் சொல்லத் தொடங்கியது.

http://puthu.thinnai.com/?p=4695

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்

அன்னபூர்னா ஈஸ்வரன்

நன்றி கெட்ட மனிதன்

ரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் பிராமணன், ஒரு நாள் தூரப் பயணம் புறப்பட்டான். கொஞ்ச நாட்களிலேயே ஒரு காட்டுக்குள் புகுந்தான். பசியால் வாடி தண்ணீர் தேடியபடி திரிந்தான். அப்படித் திரிகிற நேரத்தில் ஒரு இடத்தில் பெரிய கிணறு ஒன்று இருக்கக் கண்டான். அந்தக் கிணற்றைச் சுற்றிப் புல் புதர்கள் செறிந்து வளர்ந்து கிடந்தன. கிணற்றை நெருங்கி எட்டிப் பார்த்தான். ஒரு புலியும், குரங்கும், பாம்பும், மனிதனும் கிணற்றில் இருப்பதைக் கண்டான். அவையும் இவனைப் பார்த்து விட்டன.

‘இவன் மனிதன்தான்’ என்று உணர்ந்த புலி, ”நல்லவனே! உயிர் காப்பது ஒரு பெரிய தர்மம். அதை எண்ணி என்னை வெளியே தூக்கிவிடு. அன்புள்ள மனைவி மக்கள் சிநேகிதர்களோடு நான் மீண்டும் கூடி வாழ்வேன்” என்றது.

”உன் பெயரைக் கேட்டாலே எல்லா ஜீவராசிகளும் நடுங்ப் போகின்றனவே! எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது” என்றான் யக்ஞதத்தன்.

புலி சொல்லிற்று: ”கேள்!

பிராம்மணனைக் கொன்றவனுக்கும் குடிகாரனுக்கும், நபும்சகனுக்கும், விரதம் மீறியவனுக்கும், சதிகாரனுக்கும், பெரியவர்கள் பிராயச்சித்ம் விதித்திருக்கிறார்கள். ஆனால் செய்ந்நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தம் எதுவும் கிடையாது.

என்னால் உனக்கு அபாயம் வராது என்று முக்காலும் சத்தியம் செய்கிறேன். இரக்கம் காட்டு: வெளியே தூக்கிவிடு!” என்று கேட்டுக் கொண்டது.

பிராமணன் யோசித்துவிட்டு, கடைசியில் ‘ஜீவராசிகளின் உயிரைக் காப்பதில் ஆபத்து ஏற்பட்டால் அதுவும் நன்மைக்கே’ என்று முடிவு செய்தான். புலியை வெளியே தூக்கிவிட்டான்.

பிறகு குரங்கும் அவனைப் பார்த்து, ”சாதுவே, என்னையும் தூக்கிவிடு” என்றது. அதையும் வெளியே தூக்கிவிட்டான்.

பாம்பு, ”பிராமணனே, என்னையும் தூக்கிவிடு” என்றது.

”உன் பெயரைக் கேட்டாலே உடல் நடுங்குகிறது. பிறகு தொடுகிறதைப் பற்றிக் கேட்கவேண்டுமா?” என்றான் பிராமணன்.

”கடிக்கிறதா வேண்டாமா என்பது எங்கள் கையில் இல்லை. யாருக்கு அப்படி விதி இருக்கிறதோ அவர்களைத்தான் கடிக்கிறோம். உன்னைக் கடிப்பதில்லை என்று மூன்று தரம் சத்தியம் செய்கிறேன். நீ பயப்படாதே!” என்றது பாம்பு. பிராமணன் பாம்பையும் தூக்கித் தரைமீது விட்டான்.

பிறகு அவையெல்லாம் அவனைப் பார்த்து, ”அதோ கிணற்றுக்குள் இருக்கிறானே, அந்த மனிதன்! அவன் சகல பாபங்களும் செய்யத் துணிந்தவன். சர்வ ஜாக்கிரதையாக இரு! அவனை மட்டும் வெளியே தூக்கி விடாதே, நம்பவே நம்பாதே!” என்று சொல்லின.

மேலும் புலி, ”அதோ, அங்கே பல சிகரங்களுடன் ஒரு மலை தெரிகிறதே, அந்த மலைக்கு வடபுறத்தில் ஒரு அடர்ந்த காட்டில் என் குகை இருக்கிறது. அங்கே ஒருநாள் நீ வந்து என்னைக் கௌரவிக்க வேண்டும். உனக்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்புகிறேன். அதனால் இந்த ஜன்மத் தோடு இந்தக் கடன் தீர்ந்து போகட்டும்” என்று சொல்லிவிட்டுக் குகையை நோக்கிப் போய்விட்டது.

பிறகு குரங்கு, ”அந்தப் புலியின் குகைக்கு எதிரேயுள்ள நீர் வீழ்ச்சிக்குப் பக்கத்திலே என் ஜாகை. வந்துவிட்டுப்போக வேண்டும் நீ!” என்று அழைத்து விட்டுச் சென்று விட்டது.

அதன்பிறகு பாம்பும் ”அவசியமேற்படுகிறபோது என்னை நினைத்துக் கொள், உடனே வந்துவிடுவேன்!” என்று சொல்லிவிட்டு வழியே போயிற்று.

பிறகு கிணற்றிலிருந்து மனிதன், ”ஏ பிராமணா! என்னையும் தூக்கிவிடு” என்று கூவினான். திரும்ப திரும்பக் கத்திக் கொண்டே இருந்தான். பிராமணனுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட்டது. ‘அவனும் நம்மைப்போல் ஒரு மனிதன்தானே’ என்று எண்ணி அவனை வெளியே தூக்கிவிட்டான். வெளி வந்ததும் அந்த மனிதன், ”நான் ஒரு தட்டான். பிருகுகச்சம் என்கிற நகரில் இருக்கிறேன். தங்கத்தில் ஏதாவது செய்ய வேண்டியதிருந்தாலும் என்னிடம் வா!” என்று சொல்லிவிட்டு வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போய்விட்டான்.

பிறகு பிராமணன் எங்கெங்கெல்லாமோ சுற்றிப் பார்த்தான். சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பி நடந்துகொண்டே போகையில் குரங்கு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அதன் ஜாகைக்குப் போய் குரங்கைக் கண்டான். அமிர்தத்துக்கு ஈடான நல்ல பழங்களைக் குரங்கு கொடுத்து உபசரித்தது. களைப்புத் தீர்ந்து உட்கார்ந்திருந்த அவனிடம், ”பழங்கள் வேண்டுமென்றால் இஷ்டப்பட்டபொழுது வந்துவிட்டுப்போ!” என்று சொல்லிற்று.

”ஒரு நண்பன் செய்ய வேண்டியதையெல்லாம் நீ செய்துவிட்டாய். எனக்கு இப்பொழுது புலியைக் காட்டு!” என்றான் பிராமணன்.

குரங்கு அவனை அழைத்துப்போய் புலியைக் காட்டியது. புலியும் அவனை அடையாளம் கண்டுகொண்டு, தங்கத்தாலான மாலை முதலிய நகைகளைப் பிரதியுபகாரமாகக் கொண்டுத்து, ”யாரோ ஒரு அரசகுமாரன் இவற்றை அணிந்துகொண்டு குதிரை மேலேறி வந்தான். குதிரை வழிதவறித் தனியே இந்தத் திசையில் ஓடி வந்தது. என் அருகில் வந்ததும் அரச குமாரனைக் கொன்று விட்டேன். அவன் அணிந்திருந்த இந்த நகைகளை யெல்லாம் எடுத்து உனக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். எடுத்துக் கொண்டு, விரும்பிய திசையில் போ” என்றது.

அவற்றைப் பெற்றுக்கொண்ட பிராமணனுக்குத் தட்டான் ஞாபகம் வந்தது. ‘இதை விற்பதற்கு அவன் உதவுவான்’ என்று நினைத்து அவனிடம் போனான் தட்டான் மரியாதையோடு அவனுக்கு கை கால் கழுவ நீர் கொடுத்து அர்க்கியம் ஆசனம் தந்து கௌரவித்தான். உணவும் நீரும் அளித்தான். இன்னும் பல நற்செய்கைகளையும் செய்துவிட்டு, ”உங்கள் கட்டளைப்படி செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றான்.

”நான் பொன் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீ விற்க வேண்டும்” என்று சொன்னான் பிராமணன்.

”எங்கே, அதைக் காட்டு, பார்க்கலாம்” என்று தட்டான் சொன்னதும், பிராமணன் தங்க நகைகளை எடுத்துக் காட்டினான். அவற்றைப் பார்த்ததும் தட்டான், ‘இவற்றை நான்தானே அரசகுமாரனுக்காகச் செய்து கொடுத்தது’ என்று தனக்குள்ளாகவே சிந்தித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தான். ”இவற்றை யாரிடமாவது காட்டி வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று பிராமணனிடம் சொல்லிவிட்டு நேராக அரண்மனைக்குப் போனான். அரசனிடம் அந்த நகைகளைக் காட்டினான். அவற்றைக் கண்ட அரசன், ”இவை உனக்கு எப்படிக் கிடைத்தன?” என்று கேட்டான்.

”என் வீட்டில் ஒரு பிராம்மணன் இருக்கிறான். அவன்தான் இவற்றைக் கொண்டு வந்தான்” என்று தட்டான் பதில் சொன்னான்.

இதைக் கேள்விப்பட்டதும், நிச்சயமாக அந்தத் துராத்மாதான் என் மகனைக் கொன்றிருக்க வேண்டும்; அதன் பலனை அவன் அனுபவிக்கட்டும்’ என்று அரசன் தீர்மானித்து, உடனே காவலாளிகளைப் பார்த்து, ”அந்தப் பிராம்மணப் பதரைக் கைது செய்து இரவு கழிந்தவுடன் கழுவில் ஏற்றுங்கள்” என்று உத்தரவிட்டான்.

காவலாளிகள் பிராம்மணனைக் கட்டிப்போட்டார்கள். அவன் பாம்பை நினைத்துக் கொண்டதும், பாம்பு அவனிடம் வந்து, ”என்னை இந்தக் கட்டிலிருந்து விடுவி” என்றான் பிராமணன். அதற்கு அந்தப்பாம்பு, ”நான் போய் அரசன் அன்பு வைத்துள்ள ராணியைக் கடிக்கிறேன். பெரிய பெரிய மந்திரவாதிகள் எல்லோரும் வந்து மந்திரம் ஓதுவார்கள். மற்ற வைத்தியர்களும் வந்து விஷத்தை முறிக்கும் மருந்துகள் தடவுவார்கள். ஒன்றுக்கும் மசியாமல் விஷத்தை எடுக்காமல் இருந்து கொள்கிறேன். நீ வந்து ராணியைத் தொடு உடனே விஷம் நீங்கிவிடும். உன்னை விடுதலை செய்து விடுவார்கள்” என்று கூறி, சத்தியம் செய்து கொடுத்துவிட்டுப் போய் பட்டத்து ராணியைக் கடித்தது. உடனே அரண்மனையெங்கும் கூக்குரல் எழுந்தது. ஊரெங்கும் கவலை பரவியது. கருட மந்திரம் அறிந்தவர்கள் என்ன, மந்திரவாதிகள் என்ன, தந்திரவாதிகள் என்ன, எல்லோரும் வந்தார்கள்.

வைத்தியர்களும், மற்ற நாட்டினரும் வரவழைக்கப்பட்டார்கள். எல்லோரும் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பார்த்தார்கள். என்ன செய்தும் விஷம் இறங்கவில்லை. பிறகு ஊரெங்கும் முரசறைவித்தனர். அதைக்கேட்ட பிராமணன், ‘நான் விஷத்தை இறக்குகிறேன்’ என்று தெரிவித்தான். உடனே காவலாளிகள் அவனைக் கட்டவிழ்த்து அரசனிடம் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். ‘விஷத்தைத் தாங்கள் இறக்குங்கள்’ என்று அரசன் அவனைக் கேட்டுக் கொண்டான். பிராமணன் ராணியருகில் சென்று தொட்ட மாத்திரத்தில் விஷம் நீங்கிவிட்டது.

புத்துயிர் பெற்ற ராணியைக் கண்டான் அரசன். பிராம்மணனுக்குப் பூஜை முதலிய கௌரவங்கள் செய்தான். கொடை வழங்கினான். எலாம் ஆனபிறகு ”உண்மையைச் சொல்லுங்கள். அந்த நகைகள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று பிராமணனைக் கேட்டான்.

பிராமணன் தனது அனுபவங்களை ஆதியோடந்தமாய், நடந்தது நடந்தபடி, விவரித்தான். விவரமறிந்ததும் அரசன் அந்தத் தட்டானைக் கைது செய்து சிறையிலிட்டான். பிராமணனுக்கு ஆயிரம் கிராமங்கள் தானம் அளித்தான். தன் மந்திரியாகவும் நியமித்துக் கொண்டான். அந்தப் பிராமணன் போய் தன் குடும்பத்தை அழைத்து வந்து, உற்றாரும், கற்றாரும் சூழ இருந்து, உண்டு களித்தான். பல யாகங்கள் செய்து புண்ணியம் தேடிக் கொண்டு, எல்லா ராஜ்ய அலுவல்களையும் சீராகக் கவனித்துச் சுகமாக வாழ்ந்தான்.

ஆகையால்தான், ‘புலியும், குரங்கும், பாம்பும் சொன்ன பேச்சை…’ என்றெல்லாம் சொல்லலானேன்.

சுற்றத்தான், சிநேகிதன், அரசன், குரு இவர்கள் அத்துமீறி நடந்தால், அவர்களைத் தடுக்க வேண்டும். தடுக்க முடியாமற்போனால், பிறகு அவர்கள் போகிற போக்கிலே நீயும் போகவேண்டி நேரிடும்

என்றது தமனகன். மேலும் தொடர்ந்து, ”அரசே! (சஞ்சீவகன்) துரோகி, ஏனென்றால்,

நற்செய்கையுடையவனுக்கு ஆசைகள் இருக்கக்கூடாது; நண்பன் என்கிறவன் இடுக்கண்களை களைந்தெறிய வேண்டும். இதுதான் நன்னடத்தை என்று சான்றோர் சொல்கின்றனர். மற்றதெல்லாம் தீய நடத்தையே.

பாவம் செய்யாதபடி யார் தடுக்கிறானோ அவனே உண்மையான அன்பன்; நல்ல காரியம் என்பது குற்றமற்றிருக்கும்; எவள் கணவன் மனமறிந்து நடக்கிறாளோ அவளே நல்ல மனைவி; யார் பெரியோர்களால் புகழப் படுகிறானோ அவனே புத்திமான்; யார் கர்வம் கொள்வதில்லையோ அவனே புகழ் பெறுவான்: யார் பேராசை கொள்வதில்லையோ அவனே சுகம் பெறுவான்; யார் தயக்கமின்றி உதவிக்கு வருகிறானோ அவன் நண்பன்; யார் ஆபத்துக்காலத்திலும் மனச்சஞ்சலம் அடைவதில்லையோ அவனே மனிதன்.

நெருப்பில் தலைவைத்துப் படுத்தாலும் படுத்துக் கொள்; பாம்புகளைத் தலையணையாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்! ஆனால், தவறான வழியில் செல்கிறவன் உயிர் நண்பனாயிருந்தாலும் அவனை ஆதரிக்காதே.

ஆகையால், சஞ்சீவகனோடு தாங்கள் உறவு கொள்வதால் அறம், பொருள், இன்பம் மூன்றுக்கும் பாதகம் விளைக்கும் மூன்றுவித தவறுகள் செய்கிறீர்கள். பலவிதங்களிலும் சொல்லிப்பார்த்தேன்! என்ன வார்த்தையைக் கேட்காமல் இஷ்டம்போல் நடந்துவருகிறீர்கள். அதனால் எதிர்காலத்தில் கஷ்டங்கள்தான் வந்து சேரும். அப்போது என்னை நிந்தித்துப் பலனில்லை.

மமதை கொண்ட மன்னன் தான் செய்யும் காரியங்களையும், அவற்றின் நன்மை தீமைகளையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மதயானைபோல் தன்னிச்சையாக நடக்கிறான். பின்னால் மானபங்கம் அடைந்து, சோகக் குழியில் விழும்போது, வேலைக்காரன்மேல் பழி சுமத்துகிறான். தன் மண்டைக் கனத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை என்கிற பழமொழியைத் தாங்கள் கேட்டதில்லையா?” என்றது தமனகன்.

”சரி, நிலைமை அப்படியென்றால், அதனை எச்சரிக்கட்டுமா என்றது சிங்கம்.

”என்ன, எச்சரிக்கிறீரா? அதென்ன கொள்கை?

எச்சரிக்கப்பட்டவன், பயந்துபோய், கெடுதி செய்வதற்கோ தாக்கு வதற்கோ முந்திக்கொள்கிறான். ஆகவே பகைவனைக் காரியத்தால் எச்சரிக்க வேண்டுமே யல்லாமல் வார்த்தையால் எச்சரிக்கக்கூடாது” என்றது தமனகன்.

”கேவலம் புல் தின்கிற பிராணிதானே அது! மாமிச பக்ஷ¢ணியாகிய எனக்கு அது என்ன கெடுதி செய்ய முடியும்?” என்றது பிங்களகன்.

”வாஸ்தவந்தான். அது புல் தின்பது; நீங்கள் மாமிசம் தின்பவன். அது சாப்பாடு; நீங்கள் சாப்பிடுகிறவர். அப்படியிருந்தபோதிலும், தன்னால் கெடுதல் செய்ய முடியாமற் போனாலும் மற்றவர்களைக் கொண்டு அது கேடு விளைவிக்கலாம்.

வலிமையற்ற மூடன் தீமை செய்வதற்கு இன்னொருவனை ஏவிவிடுகிறான். சாணைக்கல் தானாகவே எதையும் வெட்டுவதற்குச் சக்தியில்லாமலிருக்கிறது. என்றாலும், அது கத்தியைக் கூர்மையாகத் தீட்டித் தருகிறது அல்லவா?

என்கிற பழமொழயைத் தாங்கள் கேட்டதில்லையா?” என்றது தமனகன்.

”அது எப்படி?” என்றது பிங்களகன்.

”உங்கள் உடம்பைப் பாருங்கள், கணக்கற்ற மதயானைகள், எருதுகள், காட்டெருமைகள், பன்றிகள், புலிகள், சிறுத்தைகளோடு சண்டைசெய்து நகங்களும் பற்களும் உண்டாக்கிய காயங்களின் வடுக்கள் உங்கள் உடம்பெல்லாம் இருக்கின்றன. சஞ்சீவகனோ எப்பொழுது பார்த்தாலும் தாங்கள் பக்கத்திலேயே இருந்து கொண்டு சாணமும் மூத்திரமும் கழித்து சுற்றிலும் அசுத்தம் செய்கிறது. அவற்றிலிருந்து கிருமிகள் உற்பத்தியாகும். அந்தக் கிருமிகள் பக்கத்திலிருக்கும் உங்கள் உடம்பிலே வடுக்கள் வாயிலாகப் புகுந்து குடைந்து கொண்டே போய்விடும். அதனால் தாங்கள் செத்த மாதிரி தான். இந்தப் பழமொழியைக் கேளுங்கள்:

முன்பின் தெரியாதவனுக்கு ஜாகை தராதே; டுண்டுகம் என்கிற தெள்ளுப் பூச்சியின் குற்றத்தால் மந்தவிசர்ப்பிணி என்ற என்கிற சீலைப்பேன் உயிர்விட்டது

ஒரு பழமொழி உண்டு” என்றது தமனகன்.

”அது எப்படி?” என்று பிங்களகன் கேட்க, தமனகன் சொல்லத் தொடங்கியது:

http://puthu.thinnai.com/?p=4926

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
அன்னபூர்னா ஈஸ்வரன்
 

சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

 

ரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு மடிப்பின் ஒரு ஓரத்தில் மந்த விசர்ப்பிணி என்னும் ஒரு சீலைப்பேன் இருந்துவந்தது. அரசன் தூங்கும்போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து அது வளர்ந்தது. பிள்ளையும் பேரனுமாகப் பெற்றெடுத்துப் பெரிய குடும்பமாக வாழ்ந்தது. அரசனின் ரத்தம் குடித்துக் குடித்து அதன் உடம்பு அழகாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது.

 

இப்படி இருக்கும்போது ஒரு நாள் காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு தெள்ளுப்பூச்சி அந்தப் பஞ்சணையின்மேல் விழுந்தது. டுண்டுகம் என்பது அதன் பெயர். வழவழப்பான மேல்விரிப்பு, தலையணைகள், கங்கை நதியின் மணற்பரப்பைப்போல் பரந்துகிடக்கும் மென்மையான வாசனை மிகுந்த படுக்கை, எல்லாவற்றையும் கண்டவுடனே தெள்ளுப்பூச்சிக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டுவிட்டது. அதை ஸ்பர்சிப்பதில் நிறைய சுகம் இருக்கக்கண்டு இங்கும் அங்கும் திரிந்துகொண்டே வந்தபோது, விதி வசத்தால் மந்தவிசர்ப்பிணியைச் சந்தித்தது.  அதைப் பார்த்துவிட்ட சீலைப்பேன், ”நீ எங்கிருந்து வந்தாய்? இது ராஜாக்களுக்குரிய படுக்கையாயிற்றே! இதை விட்டுப் போய்விடு, சீக்கிரம்!” என்றது.

 

அதற்கு டுண்டுகம் நயந்த குரலில், ”அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா! ஏன் என்று கேளுங்கள்!

 

பிராமணன் அக்னிக்கு மரியாதை செய்கிறான்; பிராமணனை மற்ற ஜாதியினர் மரியாதை செய்கிறார்கள்; கணவனை மனைவி மரியாதை செய்கிறாள்; விருந்தாளியை எல்லோரும் மரியாதை செய்கிறார்கள்.

 

நான் உங்களுடைய விருந்தாளி. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பலவிதமான மனிதர்களின் ரத்தத்தை நான் குடித்து ருசி பார்த்திருக்கிறேன். அது காரமாகவும், பசபசப்பாயும், சத்தில்லாமலும் இருக்கும். ஆனால் இதில் படுக்கிற அரசனின் ரத்தமோ மனோரம்மியமாய் அமிருதம்போல் கட்டாயம் இருக்கும். அடிக்கடி வைத்தியர்கள் தந்த மருந்து முதலான வைத்தியங்களால் இந்த ரத்தம் வாதம், பித்தம், கபம் மூன்றும் இல்லாமல் இருக்கும். நிலம், நீர், ஆகாயம் முதலியவற்றில் உள்ள உன்னதமான ஜந்துக்களின் மாமிசத்திலிருந்து தயாரித்த எண்ணெய், தைலம், இளந்தளிர்கள், சர்க்கரை, மாதுளை, சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி முதலியவற்றின் சத்தேறிய உணவுகளைச் சாப்பிட்டு விருத்தியடைந்திருக்கும் இந்த ரத்தம் எனக்கு ஜீவாம்ருதமாக இருக்கும். எனக்கு வளமும், மணமும், ருசியும், மகிழ்ச்சியும், தரும். அதை ருசி பார்க்க விரும்புகிறேன். கொஞ்சம் தயவு செய்யுங்கள்” என்றது.

 

”நீ கடித்தால் நெருப்பைப்போல் சுடுகிறது; உன் வாய் அப்படி” என்று சீலைப்பேன் சுட்டிக்காட்டி, ”உன்னைப் போன்றவர்களுக்கு இது லாயக்கான ஜாகை இல்லை. நீ போய்விடு!

 

இடம், நேரம், முறை, எதையும் அறியாமல் – எதிரியின் பலத்தையும் தனது திறனையும் உணராமல் – யோசனையின்றி நடந்துகொள்கிற மூடன் எந்தப் பலனும் பெறுவதில்லை.

 

என்கிற பழமொழியை நீ கேட்டதில்லையா? என்று பதிலளித்தது சீலைப்பேன்.

 

தெள்ளுப்பூச்சி விடவில்லை அதன் கால்களில் விழுந்து மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. கடைசியில் சீலைப்பேனுக்குத் தாட்சண்யம்  பிறந்தது. ‘சரி, போ’ என்று சொல்லிற்று. இப்படிச் சீலைப்பேன் ஒப்புக் கொண்டதற்கு ஒரு காரணமும் இருந்தது. ஒருநாள் மூலதேவன் என்கிற திருடனின் மகனைப் பற்றி யாரோ ஒருவன் அரசனுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தான். விரிப்பின் ஒரு மூலையிலிருந்துகொண்டு சீலைப்பேன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது யாரோ பெண்மணி கேட்ட கேள்விக்கு அந்த மூலதேவன்,

 

”காலில் விழுந்து கெஞ்சுகிறவனைக் கோபித்து மதிக்காமல் இருக்கிறவன் மும்மூர்த்திகளையும் அவமானப் படுத்துகிறான்”

 

என்று பதில் சொன்னானாம். அந்த வார்த்தை இப்போது ஞாபகத்துக்கு வந்ததினால் தான் சீலைப்பேன் ஒப்புக்கொண்டது. அதே பொழுதில், ”கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் எல்லாம் ரத்தம் குடிக்கப்போய் விடாதே” என்றும் சொல்லி வைத்தது.

 

”நான் புதிதாக வந்தவன். சரியான இடம், சரியா வேளை, எது என்பதொன்றும் எனக்குத் தெரியாதே!” என்றது தெள்ளுப்பூச்சி.

 

”அரசன் குடிபோதையிலிருக்கிற நேரம், அல்லது நல்ல அசதியிலே கிடக்கிற நேரம், அல்லது நித்திரை வசமாகியிருக்கும் நேரம் பார்த்துப் போ! சத்தம் போடாமல் போய்க் காலைக் கடி! சரியான வேளையும் இடமும் அதுதான்” என்றது சீலைப்பேன்.

 

”அப்படியே செய்கிறேன்” என்று தெள்ளுப்பூச்சி ஒப்புக் கொண்டது. ஆனால், சும்மா ஒப்புக்கொண்டால் மட்டும் போதுமா? அந்த முட்டாள் தெள்ளுப் பூச்சி ரத்தங்குடிக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது. அந்தி வேளையில் அரசன் சற்றுக் கண்ணயர்ந்தவுடனே அதுபோய் அரசன் முதுகில் கடித்தது. அதன் கடி தீ சுடுகிற மாதிரி, தேள் கொட்டிய மாதிரி, கொள்ளி செருகிய மாதிரி, அரசனுக்கு இருந்தது. துடிதுடித்துத் துள்ளியெழுந்து விட்டான். பலமாகச் சொறிந்துகொண்டான். வேலைக்காரனை வரவழைத்து, ”அடே, ஏதோ பூச்சி ஒன்று என்னைக் கடித்துவிட்டது. படுக்கையில் தேடிப் பார்!” என்று கத்தினான்.

 

அரசன் கட்டளையைக் கேட்டுப் தெள்ளுப்பூச்சி பயந்து நடுங்கியது. ஓடிச் சென்று கட்டிலின் ஒரு இடுக்கிலே புகுந்து கொண்டது. அரசன் கட்டளைப்படி வேலைக்காரர்கள் விளக்கை எடுத்து வந்து சர்வ ஜாக்கிரதையாகத் தேடினார்கள். சீலைப் பேனுக்கு வந்த கெட்டகாலம் அது விரிப்பின் இழைகளினூடே ஒளிந்து கொண்டிருந்ததைச் சேவகர்கள் கண்டு விட்டார்கள். அதைக் குடும்பசகிதமாகப் பிடித்து நசுக்கிக் கொன்றனர்.

 

ஆகையால்தான், ‘முன்பின் தெரியாதவனுக்கு ஜாகை தராதே…’ என்றெல்லாம் சொல்கிறேன். மேலும், இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். பரம்பரையாக வேலை பார்க்கும் ஆட்களை நீங்கள் புறக்கணித்தது பிசகு. எவ்விதம் என்றால், ஆப்த நண்பர்களை விட்டுவிட்டு கண்டவர்களோடு எல்லாம் சிநேகம் கொள்கிறவன், சண்டரவன் என்கிற மூடநரி போல், மரணமடைகிறான் என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்று பிங்களகன் கேட்கவே, தமனகன் சொல்லத் தொடங்கியது:

 

http://puthu.thinnai.com/?p=5145

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.