Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஈழக் காற்றில்...இந்திய நாற்றம்" (கவி-04)

Featured Replies

தமிழீழம் கிடைத்தது போல் ஈழமண் துள்ளியது!

எமதீழம் வந்து குந்தி... இந்தியமும் சொல்லியது!

அமைதி என்று வந்ததற்காய், கொஞ்சக் காலம்...

சொந்தங் கொஞ்சித்தான்... கோலம் போட்டார்கள்!!!

சில காலை விடிவதற்குள்... கோலங் கலைந்து,

அலங்கோலமான காலங்களில்... அரி மிஞ்சிய

அசிங்கங்களை அரங்கேற்ற ஆரம்பித்த பாரதம்,

பாதகம் தனைமட்டும் பதறாமல் தொடங்கியது!!!

பஞ்ச வேண்டுதலோடு பட்டினி கிடந்து போராடி... நலிந்து குறுகி,

பார்த்தீபன் மடிந்த போதுதான்... உணர்ந்திருப்பார் மகாத்மா,

கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று!

வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதோர் தியாகம்!!!

பாரத தேசத்தின் பாதகங்கள்... புலி தரித்த ஆயுதங்களையும்,

பறித்து விட்டல்லோ தொடங்கியது!

வயித்துக்குத்தை நம்பினாலும் வடமொழியரை நம்பலாமோ???

கழுத்தாயுதம் முதற்கொண்டு பழுதாயுதம் தனைமட்டும் பறிகொடுத்தர் வரியர்!!!

பார்த்தீபன் பின்... நஞ்சுண்ட பன்னிருவரையும் பறிகொடுத்துத் தவித்திருக்க,

பவ்வியமாய் பறந்துவந்து... வேட்டாபிசேகம் செய்ய வந்த பராவைகள்,

பாதித்தூரம் தாண்டமுன்னர் ... பாதிக்குமேல் பறந்தே போயினர்!

வரித்தலை பிடிக்கவந்த நரித்தலைகளுக்கு... தலையற்றுப் போனது!!!

சின்னப் பொடியரிடம் அடிவாங்கிய பெரிய நம்பியர்கள்

வஞ்சம் தீர்க்க...... அஞ்சிக் கெஞ்சிய அப்பாவிகள்,

"ஆடு பலி... அம்மனுக்கு வேள்வி" என்றானார்கள்!

கடவுளர்களும் கண்மறைந்து... காணாமல் போனார்கள்!!!

அதற்குப் பின் அதிகாலைகள்... அதிர்வுகளோடு ஆரம்பிக்க,

ஈழத்து வீதிகளில் இனம்புரியாத நாற்றம் அடிக்கடி அடித்தது!

இந்தியன் ஆமியை பத்தடிதூரத்தில் பார்த்தவருக்கு... இப்போதும்,

பக்கென்று மூக்கிலடிக்கும் இந்தியனாமி நாற்றமது!!!

பள்ளிவிட்டு வந்தவுடன் சின்னக் கவிதை கேட்பான்,

"அம்மா... இண்டைக்கு 'ரவுண்டப்போ'?" என்று...!!!

அம்மாவுக்கு இன்றுவரைக்கும் சொல்லவில்லை,

வரும்வழியெல்லாம்... அந்த நாற்றமடித்த கதையை!!!

இந்தியத்தின் நாற்றமதில் நானும் நொந்திருந்த வருடமதில்,

எனக்கான நாற்று ஒன்றும்... வாசனைப் பூவாய்....

பூமியில் பூத்ததாய்... பதினாறு வருடங் கழித்தே,

கண்ணூடாய்க்... கண்டுகொண்டேன் ! காதல் கொண்டேன் !!!

என் பதினாறு வருடக்கதையும் பாய்ந்துவரும் பொறுக்க...!

அதுமுன்... பொறுத்துக்கொள்ளவே முடியாத,

கண்முன் நடந்த பாரதத்தின் மகா பாதகக் கொலைகளையும்,

குருதி தோய்ந்து வரும் வரிகளையும்... வலிநினைவாய்ச் சுமக்க!!!

தொடரும்...

பாரதத்தின் "மகாபாதகப் போர்க் கதைகள்" கனக்கும்...!!!

இதன் முன்னைய பதிவுகளைப் பார்க்க:

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

http://www.yarl.com/...showtopic=93656

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

http://www.yarl.com/...showtopic=93788

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - வடமராட்சி மண்ணில் வந்திறங்கிய விஜயர்கள்! (கவி - 02)

http://www.yarl.com/...showtopic=94021

ஊருக்குப் போக விருப்பமில்லை - உலகையே அதிரவைத்த கறுப்பு வீரன்! (கவி-03)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94461

  • கருத்துக்கள உறவுகள்

நேர் மோதும் எதிரியை,

நெஞ்சை நிமிர்த்தி,,

நேரில் மோதுகையில்,

நிலை குலைந்து போய்,

நீ வீழ்ந்து விட்டாலும்,

வீரன் நீயென்று,

வரலாறு எழுதி வைக்கும்!

வழு வழுத்துப் போனவன்,

வானரங்களிலும் இழிந்தவன்,

வேதங்களை விற்று,

வரலாற்றை மாற்றியவன்,

எரிகின்றவீட்டில் கூட,

ஏதேனும் தேடுபவன்,

நரிகளின் நண்பன் தான்,

நமக்கு எதிரி!

நாறட்டும் அவன் தேசம்,

நாளை, அவன் அலறுகையில்,

நாய் கூட,நாணத்தால்

மறுபக்கம் திரும்பும்!!!

நன்றிகள் கவிதை, நல்லதோர் கவிதைக்கு!!!>>>

Edited by புங்கையூரன்

< இந்தியத்தின் நாற்றமதில் நானும் நொந்திருந்த வருடமதில்,

எனக்கான நாற்று ஒன்றும்... வாசனைப் பூவாய்....

பூமியில் பூத்ததாய்... பதினாறு வருடங் கழித்தே,

கண்ணூடாய்க்... கண்டுகொண்டேன் ! காதல் கொண்டேன் !!! >

அருமை கவிதை!!!!!!!! இதில் இரண்டாவது நாற்றத்தை மனம்பூராக நிரவிக்கொண்டால் இல்லை மனதில் வலி . வாழ்துக்கள் :) :) :) 2 .

" வழு வழுத்துப் போனவன்,

வானரங்களிலும் இழிந்தவன்,

வேதங்களை விற்று,

வரலாற்றை மாற்றியவன்,

எரிகின்றவீட்டில் கூட,

ஏதேனும் தேடுபவன்,

நரிகளின் நண்பன் தான்,

நமக்கு எதிரி "

நிதர்சனமான உண்மை புங்கை வாழ்த்துக்கள் :):):):) 2 .

  • கருத்துக்கள உறவுகள்

எஙகட சகாற அக்காவின்ர "வேங்கையன் பூங்கொடி" மாதிரி இதுவும் நல்லாயிருக்கு கவிதை...தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இதுவும் "கவிதை" மொழியிலான எங்கள் வரலாறு தான் தொடர்ந்தும் படையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தை வதைத்ததில் சிங்களனா...இந்தியனா முன்னணியில் நிற்பது என்று ஒரு கேள்வியை வைத்தால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்?

இந்திய இராணுவக் காலங்கள் என்பது குறுகிய துயரங்களை எம்மக்களுக்கு விட்டுச் செல்லவில்லை மிக நீண்ட துயரங்களை எமக்குள் திணித்து நகர்ந்திருக்கிறது.

"மனைகளின் முகப்புக்களையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின"

என்பது இந்திய இராணுவக்காலத்திலேயே அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இந்தியா என்பது எமக்குத் துயரங்களைத் தரும் ஒரு கொடிய நாடாகவே இருக்கிறது. இனியும் அது மாறப்போவதில்லை.

கவிதை,

இன்னும் ஆழமாகப் போகவேண்டிய இடத்தில் நிற்கிறீர்கள். இந்திய இராணுவ வதைகள்பற்றி நுனிப்புல் மேயாமல் ஆழமாகச் சென்று எழுதுங்கள்....

இப்போது சிலமாதங்களுக்கு முன்னராகப் பேசப்பட்ட கிறீசு மனிதன்கூட இந்திய இராணுவக்காலத்தில் நடமாடியுள்ளான்.. அது எப்படி இந்திய இராணுவக்காலத்தில் இந்திய இராணுவத்தைச் சார்ந்தவர்கள் அப்படி உலாவினார்கள் இப்போது இலங்கை இராணுவர்?????...

கூட்டிக்கழித்துப்பாருங்கள் நாம் இப்போது எங்கு நிற்கிறோம் என்பது ஓரளவுக்கு விளங்கும்.

எம்மினத்தின் எதிரிகள் எப்படி ஒரே வகையான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்? அப்படியானால் வழிகாட்டல் எங்கிருந்து கிடைக்கிறது?

Edited by valvaizagara

  • தொடங்கியவர்

நேர் மோதும் எதிரியை,

நெஞ்சை நிமிர்த்தி,,

நேரில் மோதுகையில்,

நிலை குலைந்து போய்,

நீ வீழ்ந்து விட்டாலும்,

வீரன் நீயென்று,

வரலாறு எழுதி வைக்கும்!

வழு வழுத்துப் போனவன்,

வானரங்களிலும் இழிந்தவன்,

வேதங்களை விற்று,

வரலாற்றை மாற்றியவன்,

எரிகின்றவீட்டில் கூட,

ஏதேனும் தேடுபவன்,

நரிகளின் நண்பன் தான்,

நமக்கு எதிரி!

நாறட்டும் அவன் தேசம்,

நாளை, அவன் அலறுகையில்,

நாய் கூட,நாணத்தால்

மறுபக்கம் திரும்பும்!!!

நன்றிகள் கவிதை, நல்லதோர் கவிதைக்கு!!!>>>

நன்றி புங்கையூரன். மிருகங்கள் மாதிரி நடக்க எங்களுக்கு இஷ்டம் இல்லை என்றாலும், நாம் நமக்குரிய வேலையை சரிவரப் பண்ணின்... அந்த மிருகங்களின்.... ஊளையும் உறுமலும் தானாகவே அடங்கிவிடும்!!!

மிக்க நன்றி புங்கையூரன். :)

கவிதைகளால் பதில் சொல்வது அருமை. தொடருங்கள்...! 4

  • தொடங்கியவர்

< இந்தியத்தின் நாற்றமதில் நானும் நொந்திருந்த வருடமதில்,

எனக்கான நாற்று ஒன்றும்... வாசனைப் பூவாய்....

பூமியில் பூத்ததாய்... பதினாறு வருடங் கழித்தே,

கண்ணூடாய்க்... கண்டுகொண்டேன் ! காதல் கொண்டேன் !!! >

அருமை கவிதை!!!!!!!! இதில் இரண்டாவது நாற்றத்தை மனம்பூராக நிரவிக்கொண்டால் இல்லை மனதில் வலி . வாழ்துக்கள் :) :) :) 2 .

கோ...மகனே! உண்மையைச் சொல்லப் போனால்.... காதலை :o விட கழுத்தறுக்குற "றோ"சமா இந்தியாகூட பரவாயில்லை என்பேன். :lol:

க(வி)தையினை தொடர்ந்து படியுங்கள். பட்டுப் பழுத்த பலவித வலிகள் பலவிதமாய் வரும். நன்றி கோ! :)

கவிதை இதுவும் "கவிதை" மொழியிலான எங்கள் வரலாறு தான் தொடர்ந்தும் படையுங்கள்

ரதி அக்கா! இது என் வரலாறுதான். ஆனால், நான் வாழ்ந்த சமுதாயத்தினையும் காலத்தோடு மாறிய சூழ்நிலைகளையும் தொட்டுச் செல்லும். நிச்சயமாகத் தொடருவேன் .....நிகழ்காலம் வரைக்கும், எதிர்காலம் வரை....!

நன்றி அக்கா! :)

  • தொடங்கியவர்

எம்மினத்தை வதைத்ததில் சிங்களனா...இந்தியனா முன்னணியில் நிற்பது என்று ஒரு கேள்வியை வைத்தால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்?

இந்திய இராணுவக் காலங்கள் என்பது குறுகிய துயரங்களை எம்மக்களுக்கு விட்டுச் செல்லவில்லை மிக நீண்ட துயரங்களை எமக்குள் திணித்து நகர்ந்திருக்கிறது.

"மனைகளின் முகப்புக்களையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின"

என்பது இந்திய இராணுவக்காலத்திலேயே அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இந்தியா என்பது எமக்குத் துயரங்களைத் தரும் ஒரு கொடிய நாடாகவே இருக்கிறது. இனியும் அது மாறப்போவதில்லை.

கவிதை,

இன்னும் ஆழமாகப் போகவேண்டிய இடத்தில் நிற்கிறீர்கள். இந்திய இராணுவ வதைகள்பற்றி நுனிப்புல் மேயாமல் ஆழமாகச் சென்று எழுதுங்கள்....

இப்போது சிலமாதங்களுக்கு முன்னராகப் பேசப்பட்ட கிறீசு மனிதன்கூட இந்திய இராணுவக்காலத்தில் நடமாடியுள்ளான்.. அது எப்படி இந்திய இராணுவக்காலத்தில் இந்திய இராணுவத்தைச் சார்ந்தவர்கள் அப்படி உலாவினார்கள் இப்போது இலங்கை இராணுவர்?????...

கூட்டிக்கழித்துப்பாருங்கள் நாம் இப்போது எங்கு நிற்கிறோம் என்பது ஓரளவுக்கு விளங்கும்.

எம்மினத்தின் எதிரிகள் எப்படி ஒரே வகையான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்? அப்படியானால் வழிகாட்டல் எங்கிருந்து கிடைக்கிறது?

நிச்சயமாக சகாறா அக்கா! "இந்தியன் ஆமி" என்பதைக் கேட்டாலே எனக்கு கடுப்பாகும். அந்த அளவுக்கு என் மனதில் ஆழமான வடுக்களைக் கொடுத்துவிட்டுப் போன ஒரு ஈன அரக்கர் கூட்டம்.

அந்த கோரப் பற்களைக் கண்ணூடாகப் பார்த்த சாட்சி நான்.

அப்போதைய சிறிலங்கா இராணுவம் எவ்வளவோ மேல் இந்த பரதேசி நாய்களைவிட... என என் வீட்டில் மட்டுமில்லை, பலபேர் வாயால் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்றுவரைக்கும் விடாமல் துரத்தும் வில்லங்கம். அது எப்பவுமே உதவாது என்பது பல பேருக்கு புரிவதில்லை!

நிச்சயமாக இன்னும் ஆழமாக சில சம்பவங்களுக்குள் போக வேண்டும். இந்திய இராணுவ,அரசியற் கொடூரர்களின் மேல் என் கோபத்தைக் கொட்ட வேண்டும் என காத்திருக்கின்றேன்! ம்ம்ம்ம்ம்ம்!

மிக்க நன்றி அக்கா! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

எஙகட சகாற அக்காவின்ர "வேங்கையன் பூங்கொடி" மாதிரி இதுவும் நல்லாயிருக்கு கவிதை...தொடருங்கள்...

சுபேஸ்! அதனோடு ஒப்பிடும்போது என்னுடையதில் "கவிநயம்" இல்லைத்தான்... என்பதனை அறிவேன். வேங்கையன் பூங்கொடி அருமை. :wub:

எனது க(வி)தை இன்னும் நிறையத் தூரம் போகவேண்டி இருக்கு. அதுக்குள்ள நம்ம சகாறா அக்காவிட்ட படிச்சிடுறன். :)

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை என்னுடைய பெயர் சகாறா திருத்தம் செய்யுங்கள்

  • தொடங்கியவர்

கவிதை என்னுடைய பெயர் சகாறா திருத்தம் செய்யுங்கள்

மன்னிக்கவும் அக்கா! தங்கள் பெயர் இன்னும் ஆங்கிலத்திலேயே இருப்பதனால் நான் தங்களை அவ்வாறு அழைத்து வந்திருக்கின்றேன். இதனை நான் முதன் முதலில் "சஹாரா" அக்கா என அழைக்கும்போது அது 'ஹா' இல்லை 'கா' என்று சொல்லியிருந்தால்... அப்பொழுதே மாற்றி அழைத்திருந்திருப்பேனே! :)

பி.கு:

இது தங்களின் பெயரினை மட்டும் குறித்தான எனது மாற்றமே ஒழிய... என் எழுத்துக்களுக்கான மாற்றம் இல்லை என்பதனை சொல்லிக்கொள்கின்றேன்.

ஏன் ? தற்கு? .....என புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதனால், இதற்காக கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் எனவும் நம்புகின்றேன்.

"அரசியற் காரணங்களுக்காக.... என்னை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை"

மன்னிக்கவும் சகாரா அக்கா!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... நீங்கள் என்னுடைய கருத்துகளுக்குக்கீழே உள்ள இணைப்பில் உள்ள பெயரைப்பார்க்கவில்லையோ?

உதாரணம் "வல்வை சகாறாவின் கவிதைகள் '

  • தொடங்கியவர்

என் தவறுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா! இனிமேல் தங்கள் இஷ்டப்படியே..... நான் தங்களை 'சகாறா' என அழைக்கின்றேன்.

இப்ப சந்தோஷம் தானே அக்கா?

தம்பியை பார்த்து முறைக்காமல்.... கொஞ்சம் சிரியுங்களேன் அக்கா! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.