Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்லம்மாவின் கதை : தயா நெத்தசிங்க

Featured Replies

செல்லம்மாவின் கதை : தயா நெத்தசிங்க

Victims-without-Voice.jpg

நாங்கள் அவரை நெருங்கினோம். ‘அம்மா’ என்று அழைத்த உடனேயே அவரது வாடியிருந்த முகத்தில் தோன்றிய பிரகாசம், இன்னும் நினைவிலிருக்கிறது. எனினும், அடுத்த கணமே மழை மேகம் சூழ்ந்த வானம் போல அவரது வதனம் இருண்டது. அவரிடம் சொல்வதற்கு ஏதோ இருக்கிறது. எங்களால் அவரைத் தாண்டிச் செல்ல இயலாது.

“அம்மா, வியாபாரம் எப்படியிருக்கிறது?”

எனது பயணத் தோழன் கேட்ட கேள்விக்கு, அவர் வெறுமனே புன்னகைத்தார். எனினும் அடுத்த கேள்விக்கு தந்த பதிலோடு அவர் எங்களுடன் உரையாடத் தொடங்கினார்.

“எனது ஊர் பூந்தோட்டம், பிள்ளை. இந்தப் பிள்ளைகளைக் கண்டவுடன் எனக்கு எனது மகன் நினைவுக்கு வந்தார்.”

எனச் சொன்னவர், தனது இரு கன்னங்களையும் நனைத்தபடி, வடிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அம்மா என அழைத்த குரலோடு எழுந்த மூன்று வருடங்களுக்கு முந்தைய ஞாபகங்களுக்கு, அவர் எம்மை அழைத்துச் சென்றார்.

அவரது பெயர் வீ. செல்லம்மா. யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த அவர் யுத்தம் நடைபெற்ற காலத்தில், வவுனியா, பூந்தோட்டம் கிராமத்துக்குச் சென்று ஒரு மண்குடிசையாவது அமைத்துக் கொண்டு வாழ வேண்டுமெனத்தான் தனது வீட்டைக் கைவிட்டு விட்டு வந்தார். அன்றுதான் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு கிடைத்தது.

புதிய இடத்தில் வசிக்க ஆரம்பித்த குறுகிய காலத்துக்குள்ளேயே செல்லம்மாவுக்கு, அவரது கணவரை இழக்க நேரிட்டது. குடலில் ஏற்பட்ட காயம் உக்கிரமாகி அவர் இறந்துபோனார். செல்லம்மாவின் குடிசையைப் போலவே, விவசாய நிலமும் பாழடைந்து போயிற்று. மகள்மார் மூவர் மற்றும் ஒரே மகன் என செல்லம்மா மீது சுமத்தப்பட்ட சுமையானது இலேசுப்பட்டதல்ல. மகனான நிலேஷ் குமார் அச் சுமையைக் குறைப்பதற்காக சிறிய அளவில் ஒரு கோழிப் பண்ணையை ஆரம்பித்தார். தனது சகோதரிகளின் திருமணம் நிறைவேறும் வரையில் பண்ணையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அக்காவுக்கும், தங்கைகளுக்கும் ஆபரணங்களைச் செய்வதற்காகச் செலவளித்தார்.

இறுதியில் அவ் வீட்டில் செல்லம்மாவும் குமாரும் மட்டுமே எஞ்சினர். செல்லம்மா சுகவீனமுற்ற நேரங்களிலெல்லாம் மருந்துகள் கொண்டு வந்துகொடுப்பதுவும், சமையலறையைக் கவனிப்பதுவும் குமார்தான். பாதையோரத்திலிருந்து வெற்றிலை விற்க வேண்டி வருமென செல்லம்மா அக் காலத்தில் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை.

2008.06.02 அன்று, அந்த இருண்ட தினம் உதித்தது. அம்மா இருட்டில் இருப்பார் என நேரகாலத்துடன் வீட்டுக்கு வந்து குப்பி விளக்கையேற்றும் மகன், அன்றைய தினம் வவுனியா நகருக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. அம்மா மட்டும்தான் வீட்டிலிருப்பார் என்பதனால், அவர் எக் காரணத்தை முன்னிட்டும் முன்னர் ஒருபோதும் வீடு திரும்பாமல் இருந்தவரல்ல. சோற்றுப் பானை அடுப்பிலிருக்க, மகன் வரும்வரை வழி பார்த்து உறங்காமல் காத்திருந்த செல்லம்மா பசியை உணரவேயில்லை. அக் கொடிய இரவின் பின்னர், அடுத்த நாள் விடிகாலை வவுனியா நகருக்கு மகனைத் தேடி வந்த செல்லம்மாவுக்கு, வெள்ளை வேனில் வந்த ஒரு குழுவினர் தேவாலயத்துக்கு முன்பாக வைத்து தனது மகனைக் கடத்திச் சென்ற செய்தி கிடைத்தது.

அவர் இது தொடர்பாக, வவுனியா காவல்நிலையத்துக்குச் சென்று முறையிட்ட போதும், முறைப்பாடானது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மூன்று தினங்கள் தொடர்ந்து வவுனியா காவல்நிலையத்துக்குச் சென்று முறையிட்டு, நான்காவது தினமே அவரது முறைப்பாடானது, காவல்துறை முறைப்பாட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையே அவரால் செல்ல முடிந்த எல்லா இராணுவ முகாம்கள், காவல் நிலையங்களின் வாயில்களில் வீழ்ந்த அவரது கண்ணீர்த் துளிகள் எண்ணிலடங்காதவை. இறுதியாக கொழும்பு ‘தீவிரவாத விசாரணைப் பிரிவு (TID)’ க்கும் சென்று இது குறித்து முறையிட்ட போதும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தனது ஒரே மகனை இழக்க நேர்ந்த செல்லம்மா, அவ்வாறுதான் நடுத் தெருவுக்கு வர நேர்ந்தது.

செல்லம்மாவை நாங்கள் சந்தித்த இத் தினத்தில், கொழும்பு காலிமுகத்திடலில், யுத்த வெற்றியின் இரண்டாண்டுக் கொண்டாட்டங்களின் கௌரவ வேட்டுக்கள் சுடப்படுகின்றன. யுத்த வெற்றியின் உபசார விழாக்கள் நிறைவுறாத இக் கணத்தில், செல்லம்மாவுக்கு இன்னும் தனது மண் குடிசைக்குள் ஒழுங்காக உணவு சமைத்துக் கொள்ள முடியவில்லை.

“மகனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக வாழ வேண்டும்.”

இவ்வாறு மட்டுமே எண்ணும் செல்லம்மா, ஒரு பாக்குவெட்டியை மாத்திரமே எடுத்துக் கொண்டு வவுனியாவுக்கு வந்திருக்கிறார். ஒரு நாளைக்கு 40 வெற்றிலைச் சுருள்களை விற்கும் அவர், அதிலிருந்து கிடைக்கும் சிறிய இலாபத்தைக் கொண்டு வடையொன்றைச் சாப்பிட்டு, தண்ணீர் குடிப்பதன் மூலம் பகல்வேளையை சமாளித்துக் கொள்கிறார்.

“மகனில்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது. நான், உறவினர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு குடிசையில் வசிக்கிறேன். பிள்ளையே, நான் வெற்றிலையை விற்றபடி இச் சனத்துக்குள்ளிருந்து மகன் வருவானா எனத்தான் தெருவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் இப்பொழுது வேறொரு இடத்தில் குடியிருக்கிறேன். மகனுக்கு இப்போது நானிருக்கும் இடம் தெரியாதுதானே? மகன் வந்தால், மகனுடனே வீடு செல்ல நான் காத்திருக்கிறேன்.”

இக் காத்திருப்பு மூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் முடிவடையவில்லை.

“என் மகன் மட்டும் இருந்திருந்தால் எனக்கு இப்படி வெயிலில் காய்ந்திருக்க நேர்ந்திருக்காது.”

புழுதி படிந்த முகத்தின் மீது அடைமழையெனப் பெய்யும் கண்ணீர்த் துளிகள், வெற்றிலை மீது விழுந்திடா வண்ணம் அவர் சேலை முந்தானையால் துடைத்துக் கொள்கிறார். விடியற்காலையில் வவுனியா வரும் அவர் மாலையாகும்போது இரண்டு அப்பங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்.

“நான் இப்பொழுதும் உணவில் ஒரு பங்கை மகனுக்கென வைத்துவிட்டு, காலையில் வீசி விடுகிறேன். எனது மகன் எனக்கு இல்லாமல் போன பிறகு, அம்மா என நீங்கள் அழைத்தபோது என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.”

செல்லம்மா அவ்வாறு சொல்கிறார். 28 வயதான நிலேஷ் குமார் எங்கிருக்கிறார்? செல்லம்மா தனது மகனை சந்திப்பாரா? நடுத்தெருவில், புழுதிக் காற்றில் இன்னும் தனது மகனைத் தேடும் இந்த ஆஸ்த்மா நோயாளிக்கு ஒரு மாத்திரையொன்றையாவது கொண்டு வந்து கொடுப்பது யார்?

காணாமல் போன மகன் வரும்வரை சூரியகந்தையில் குஸுமாவதி அம்மா ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். செல்லம்மாவும் ஆண்டுகள் மூன்று கடந்தும் இன்னும் எதிர்பார்ப்பைக் கைவிடவில்லை. இவ்வாறான துயரங்கள் வேறு எவருக்குமே நிகழக் கூடாதென வானம் நோக்கிக் கேட்கும் பிரார்த்தனைகளும், ஊமையாகவுமில்லை. நிற்கவுமில்லை. உண்மையாகவே இழப்புக்களால் நிறைந்த, பறித்தெடுப்புக்களால் தாக்கப்பட்டுள்ள இவ்வுலகத்தை மாற்றும்படி, குஸுமாவதி அம்மாவினதும் செல்லம்மாவினது கண்ணீர்த் துளிகள் எம்மிடம் வேண்டி நிற்கின்றன.

- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

நன்றி: http://inioru.com/?p=22401

Edited by நிழலி

சிறு குறிப்பு ஆனால் பெரும் துயரத்தை சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒரு பதிவு, நிழலி!

இப்படியான னுபவக் கதைகள், எவ்வளவு தூரத்திற்கு சிங்கள மக்களைச் சென்றடைகின்றன?

இப்படியான படைப்புக்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது, எனத் தெரியப் படுதுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாத கதை..இப்படி எத்தனை செல்லம்மாக்கள் கேள்விக்குறியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்... தான் அறிந்த விடயத்தை எழுத்தில் பதிந்த அந்த மானுடம் சாகாத சிங்கள ந்ணபருக்கு நன்றியை தெரிவித்துவிடுங்கள்

  • தொடங்கியவர்

உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒரு பதிவு, நிழலி!

இப்படியான னுபவக் கதைகள், எவ்வளவு தூரத்திற்கு சிங்கள மக்களைச் சென்றடைகின்றன?

இப்படியான படைப்புக்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது, எனத் தெரியப் படுதுவீர்களா?

இப்படியான கதைகளை, செய்திகளை பெருமளவுக்கு எழுதிய பல சிங்கள பத்திரிகையாளர்கள் இருக்கினம். முன்னர் 'யுக்திய' பத்திரிகை, இன்று 'ஹிரு' ஊடவியலாளர்கள் என்று பலர் இருக்கினம். ஆனால் இவர்களின் குரலுக்கு முன் பெரும் தேசிய ஊடகங்களின் மூலம் இனவாதம் பேசும் சிங்களவர்களின் பெரும் குரலே பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் இடம்பெறுகின்றது

அத்துடன், தமிழ் தேசிய போராட்டத்தின் தவறுகளை. புலிகளின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஊடகவியலாளர்களை பெருவாரியான தமிழ் ஊடகங்கள் இன்று எப்படி 'துரோகி' என்று பட்டம் கொடுத்து ஒதுக்கி முழுச் சமூகத்தையும் ஊனமாக்கினார்களோ அதே போன்றுதான் சிங்கள பெருவாரியான ஊடகங்களும் இத்தகைய மக்களிற்கு முன் உண்மையை முன்வைக்கும் சிங்கள ஊடகவியலாளர்களையும் தேசியத் துரோகி என்று பட்டம் கொடுத்து ஊனப்படுத்தி வைத்திருக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகளை, செய்திகளை பெருமளவுக்கு எழுதிய பல சிங்கள பத்திரிகையாளர்கள் இருக்கினம். முன்னர் 'யுக்திய' பத்திரிகை, இன்று 'ஹிரு' ஊடவியலாளர்கள் என்று பலர் இருக்கினம். ஆனால் இவர்களின் குரலுக்கு முன் பெரும் தேசிய ஊடகங்களின் மூலம் இனவாதம் பேசும் சிங்களவர்களின் பெரும் குரலே பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் இடம்பெறுகின்றது

அத்துடன், தமிழ் தேசிய போராட்டத்தின் தவறுகளை. புலிகளின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஊடகவியலாளர்களை பெருவாரியான தமிழ் ஊடகங்கள் இன்று எப்படி 'துரோகி' என்று பட்டம் கொடுத்து ஒதுக்கி முழுச் சமூகத்தையும் ஊனமாக்கினார்களோ அதே போன்றுதான் சிங்கள பெருவாரியான ஊடகங்களும் இத்தகைய மக்களிற்கு முன் உண்மையை முன்வைக்கும் சிங்கள ஊடகவியலாளர்களையும் தேசியத் துரோகி என்று பட்டம் கொடுத்து ஊனப்படுத்தி வைத்திருக்கின்றனர்

கருத்துக்கு நன்றிகள், நிழலி!!!

இப்படியான கதைகள் எம்மிடையே பழக்கமாகிப் போய்விட்டதால் அதன் பாரதூரங்கள் எங்களுக்கு புரியாமல் இருப்பதென்பது எருமை மாட்டுக்குமேல் மழை பெய்த கதையாகி விடுகின்றது.

ஆனால், அதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவும் மனதால் படும் வேதனையை வெறும் வார்த்தைகளில் வரித்துவிட முடியாது.

என் ஆருயிர் நண்பன் ஒருவனை 2005 இல்.... வெள்ளைவானில் தொலைத்த நான், சில தினங்களுக்கு முன்... தற்போது இந்தியாவில் இருக்கும் அவனது அம்மாவோடு கதைத்தபொழுது... அந்தத் தாயின் அழுகுரலில் இருந்த ஏக்கங்களை பார்த்து மனம் வெதும்பினேன்!!! கொடுமைகளை அனுபவிப்பதிலும் கொடுமையான ஒரு விடயம் "தன் பிள்ளை இன்னும் இருக்கின்றானா?இல்லையா? என்ற விடைதெரியாத பரிதவிப்புத்தான்" :( :( :(

இந்தக் கதைக்குரிய அந்த சிங்கள அன்பருக்கும், மொழிபெயர்த்த நண்பருக்கும், அதனை இணைத்துப் பகிர்ந்த எம் நிழலி அண்ணாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் விடுதலையே செல்லம்மாக்களின்

பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.

இணைப்பிற்கு நன்றி நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.