Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். வருகிறார் அப்துல்கலாம்

Featured Replies

கலாமிற்கு கறுப்பு கொடி காட்டுவதால் இலங்கையில் இனபிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்றும்,

கறுப்பு கொடி காட்டாவிட்டால் தமிழர் நிம்மதியாக வாழுகின்றார்கள் என்றும் ஆகிவிடாது.

உந்த சிந்தனை வட்டத்தில் இருந்து தமிழன் வெளிவராவிட்டால் விடிவு இல்லை.நாட்டில் இன்று என்ன நடக்கின்றதேன்று உலகம் அறியாமல் இல்லை.

உலகம் மிக பெரியது. நாம் இன்னமும் அதே குண்டு சட்டிக்குள்?

  • Replies 72
  • Views 5.1k
  • Created
  • Last Reply

கலாமிற்கு கறுப்பு கொடி காட்டுவதால் இலங்கையில் இனபிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்றும்,

கறுப்பு கொடி காட்டாவிட்டால் தமிழர் நிம்மதியாக வாழுகின்றார்கள் என்றும் ஆகிவிடாது.

அப்படியும் இல்லை, இப்படியும் இல்லைன்னா,,

எப்படிதான் தமிழர் வாழணும் ,, டிஜிட்டல் திருவள்ளுவர் அர்ஜுன் அண்ணா? :)

வெரி சிம்பிள். சும்மா எல்லாவற்றையும் அரசியலாக்கி ஆதாயம் தேட முனையவேண்டாம்.

இங்கிருந்து செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துகொண்டு (இலங்கைக்கு விடுமுறை போவது உட்பட) அங்கிருப்பவர்களை ரகுமானின் கச்சேரிக்கு போகதே? கலாமிற்கு கறுப்பு கொடி காட்டு? இந்த குரங்காட்டி அரசியலை ஒருவனும் கண்டுகொள்வதில்லை .

உலகளவில் தாக்கம் வரக்கூடிய சில செயற்பாடுகளை செய்வதைவிட்டு எடுத்ததற்கெல்லாம் அரைகுறையாக எடுப்பு எடுத்தால் ஒன்றிற்கும் ஆகப்போவதில்லை.

உலகளவில் தாக்கம் வரக்கூடிய சில செயற்பாடுகளை செய்வதைவிட்டு

உலகம் முழுக்க நம்ம பிரச்னை தெரிஞ்சப்புறமும்,, அவங்க கண்டுக்கல ...

அப்போ புலியாலதான் எல்லாம் என்னீங்க!

இப்போ?? யாரால என்ன தடங்கல்... யாருக்கு?

இப்போ . உலகளவில் தாக்கம் வர பண்ணுறது எப்புடி ..அர்ஜுன் அண்ணா?

சுச்சூம்மா........... தக்கிலி குட்டி .......... சிக்கிலிகுட்டி...........

அப்பிடீன்னு கிச்சு கிச்சு மூட்டியா உங்கள கேட்க முடியும்?

நீங்களாவே சொல்லிடுங்க! :)

  • கருத்துக்கள உறவுகள்

யாரோடு இராஜ தந்திர உறவை மேற்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்?. பல மேற்கு, அமெரிக்கா,இந்தியா என நேரடியாகவும்.மறைமுகமாகவும் தமிழ் மக்களை கொன்றவர்கள்.எந்த நம்பிக்கையின்(trust) அடிப்படையில் இவர்களுடன் இராஜ தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வது?? அல்லது ஒரு fancy க்காக இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

நம்பிக்கையின் (trust) அடிப்படையிலான இராஜதந்திர உறவுகள் நிலைப்பதற்கான சாத்தியமும், வெற்றி பெறுவதற்கான சாத்தியமும் குறைவு. இருபக்க இலாபத்துக்கான (mutual benefit) மற்றும் பொது இலாபத்துக்கான (common benefit) இராஜதந்திர உறவுகள், நம்பிக்கையற்ற எதிரிகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டாலும் கூட, வெற்றி பெறும் சாத்தியம் மிகவும் அதிகமானது. விடுதலைப்புலிகள் பிரேமதாசா என்ற எதிரியுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி இந்திய இராணுவத்தை வெளியேற்றியது இதற்கு உதாரணமாக அமைகிறது.

சிரிப்புத்தான் வருது..

இவர்களுடன் நாம் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ளமுடியாது..

ஏன்? ஏனெண்டால் இவர்கள்தான் எமது எதிரிகள்.

சிங்கப்பூர் மக்களுக்கு ( இவர்கள் சீனரும் இந்தியரும்) மலேசியா சம உரிமைகள் வழங்காத நிலையில் போராடிய சிங்கப்பூர் மக்களின் தலைவர்களான லீ குவான் யூவும் தேவன் நாயரும், தமது எதிரிகளான மலேசிய அரசின் பிரதமராக போட்டியிட்ட துங்கு ரகுமானுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியே சிங்கபபூருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தனர்.

ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்ற ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக இருந்த எதிரியான பிரேமதாசவுடன் விடுதலைப்புலிகள் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி பிரேமதாச கொடுத்த ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய இராணுவத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி இந்திய இராணுவத்தை வெளியேற செய்தார்கள்.

இந்த உதாரணங்கள் காட்டுவது இராஜதந்திர உறவு நண்பர்களுடன் மட்டுமல்ல எதிரிகளுடனும் ஏற்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பதையும், அவ்வாறான உறவுகள் பெரும் வெற்றிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன என்பதையுமே.

சிங்கள தலைமைகள் தமது பிரதானமான எதிரியாக கருதிவரும் இந்தியாவுடன் இராஜதந்திர உறவுகளை வெற்றிகரமாக பேணி தமிழர்களை தொடர்ந்து அழித்து வருகிறது. விடுதலைப்புலிகள் எவ்வாறு தமது பரம எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள தலைமைகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி இந்திய இராணுவத்தை வெளியேற்றினார்களோ, அவ்வாறே இன்றைய ஈழத்தமிழர் தலைமைகள் இந்திய மத்திய அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி சிங்கள அரசு ஈழத்தமிழர்களை தொடர்ந்து அழிப்பதை நிறுத்த வேண்டும்.

இந்திரா காந்தி காலத்துக்கு பிறகு இந்திய மத்திய அரசுடன் ஈழத்தமிழர் தலைமைகள் வெற்றிகரமான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. சீன ஆதிக்கத்தை வலுச்சமநிலைக்கு கொண்டுவர இந்தியாவுக்கு இன்று ஈழத்தமிழர்களின் உதவி தேவையாக இருக்கிறது. அதை இந்தியாவுக்கு கொடுத்து ஈழத்தமிழர்கள் அதற்கு பிரதியீடாக நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கைக்கு வழி தேட முயற்சிக்க முடியும்.

உண்மை, அதிலும் ஒய்வுபெற்ற அவரால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது.

எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? இது உங்களுடைய அபிப்பிராயமா அல்லது ஆதாரங்களுடனான துல்லியமான தகவலா?

  • அப்துல் கலாம் இந்திய பாதுகாப்புடன் வந்து போவது எந்த வகையில் தமிழ்மக்கள் சிறிலங்காவில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்ற செய்தியை சொல்கிறது?
  • வந்து போகும் இராஜதந்திரிகள் நேரடியாகவே பார்த்து போகிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்று.
  • எனது அபிப்பிராயப்படி அப்துல் கலாமின் வருகை ஈழத்தமிழ் மக்களுக்கு தாம் செய்யவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களை பற்றிய செய்தியை சொல்வதற்கான இந்திய அரசின் திட்டமாகவே தெரிகிறது. இதே செய்தியை சிறிலங்காவிற்கும், சீனாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இந்தியா சொல்வதாகவே தெரிகிறது.

இது உங்களுடைய அபிப்பிராயம்.

கலாம் வந்து போவது என்பது ஒரு செய்தி.இந்திய ,சிறிலங்கா அரசுகள் இணைந்து ஒரு விடயத்தைச் செய்வது அவர்களின் நலனின் பாற்பட்டது என்பது அனுபவம், நலங்களே அரசியலைத் தீர்மானிக்கின்றன என்பதன் யதார்த்தம். இதில் துல்லியமான தகவல் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பது புரியவில்லை.இராஜதந்திரிகள் வந்து பார்த்துத் தான் அங்கு என்ன நடக்கிறது என்பதை அரசுகள் அறிவதில்லை.ஏனெனில் அரசுகளுக்கு வெளியகப் புலனாய்வுப் பிரிவு, வெளியுறவுத் துறை, ஊடகங்கள் என விடயங்களை அறிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. இவ்வாறான வியஜங்கள் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் வகையிலையே செய்யப் படுகின்றன.இதில் ஏன் கலாம் என்பவரை அனுப்புகிறார்கள் என்று சிந்தித்தால் அதன் தாற்பரியம் விளங்கும்.

தமிழ்க் கவிஞர் செயபாலன் மேலே எழுதிய வற்றை வாசித்தால் தெரியும் ,கலாம் என்னும் இந்திய முகமூடி எத்தகையது என.மக்கள் மனங்களில் நாம் ஒரு தமிழரை அதுவும் ஒரு இசுலாமியத் தமிழரை உங்கள்குறை கேட்க அனுப்புகிறோம் என்னும் மாயை உருவாக்குவது தான்.கலாம் என்னும் முகமூடியே தமிழர்களுக்கு இவர்கள் காட்டும் ஒரு மாய முகமூடி தான்.சிறிலங்கா அரசு கதிர்காமரைப் பாவித்தது போல்.

எனது கருத்து இந்த செய்தியே ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்யவிருக்கும் பொருளாதார மற்றும் அறிவியல் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியது என்பதே. ஆகவே இந்த செய்தி ஈழத்தமிழருக்கு கிடைக்கவுள்ள பயன்கள் பற்றியது. இந்தியா இந்த அபிவிருத்தியை செய்வது தனது நலன் கருதியே என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..

இந்திய வீட்டுத் திட்டத்திற்க்கு என்ன நடந்தது? அரசியல் அதிகாரம் இன்றி ,இராணுவ ஆட்சி ஒன்றிற்குள் எந்த அபிவிரித்தித் திட்டமும் மக்களுக்கு எந்தப் பயனையும் தராது என்பதே யதார்த்தம்.இவை வெறும் செய்தியாக பதிரிகைகளில் வர மட்டுமே முடியும்.

இந்திதமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருப்பது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தெரியும். வந்து போகும் இராஜதந்திரிகள் அதுபற்றி கரிசனை கொண்டுள்ளார்கள். அப்துல் கலாமுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுவது இனிமேல் உலகறிய செய்யப்பட வேண்டியுள்ளது என்பது சரியான கருத்தாக எனக்கு தெரியவில்லை.

உலகில் மக்கள் போராட்டங்கள் மூலமே அரசுகளின் செயற்பாடுகளை அவர்களின் திட்டங்களை முறையடிதிருகிறார்கள் என்பது வரலாறு. நாங்கள் வரலாற்றில் இருந்து பாடங்களைப் படிக்க வில்லை எனில் எம்மால் எந்த மாற்றத்தையும் அரசுகளின் நடவடிக்கைகள் கொள்கைகளில் கொண்டு வர முடியாது என்பது அரசியல் அடிப்படை. இனப் படுகொலை நடைபெற்றது என்பதை எல்லா அரசுகளும் அறிந்து இருந்தும் இது தொடர்பாக அவை ஏன் ஒரு நடவடிகையையும் எடுக்கவில்லை.இந்திய அரசு மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் இனப் படுகொலை நடைபெறவில்லை என சிறிலங்கா அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியதே , நீங்கள் அதனைப் படிக்க விலையோ ஜூட்?

அரசுகளின் கண்துடைப்பை அவ் அரசுகளின் நாடுகளின் மக்களும் ஊடகங்களும் அறியச் செய்ய வல்லன போராட்டங்கள்.அரபிய புரட்சியை மக்களே நாடாத்தினர்.அமெரிக்க வல்லாதிக்கம் தான் ஆண்டாண்டுகளாக ஆதரித்த அரசுகளை மாற்ற இப் போராட்டங்களே நிர்ப்பந்தித்திதன.

இராஜதந்திர நகர்வுகள் மற்றும் உறவுகள், குறிப்பாக உனக்கும் நன்மை எனக்கும் நன்மை (Win -Win) என்ற வகையிலான உறவுகள் மூலம் கிடைக்கும் அரசியல் பலம், போராட்டங்கள் மூலம் கிடைக்கும் அரசியல் பலத்திலும் பார்க்க வெற்றிகரமாகவும் நிலையாவும் இருந்திருக்கின்றது. இவ்வாறான அரசியல் பலம் மூலமே சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகி இன்று முதலாம் உலக நாடாக இருக்கிறது. அதற்காக சிங்கப்பூர் மக்கள் போராட்டமே நடத்தவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களின் போராட்டத்தின் நிறைவு இராஜதந்திர உறவினாலே கிடைத்தது.

இராஜதந்திர நகர்வுகள் பலத்தின் அடிப்படையிலையே நிகழமுடியும்.பலம் அற்றவனால் எந்த நகர்வையும் மேற்கொள்ள முடியாது.பலம் என்பது அரசியல்,இராணுவ பொருளாதாரப் பலங்கள்.அரசியற் பலம் என்பது மக்கள் போராட்டங்கள் மூலம் நிலை நிறுத்தப்படுகிறது.ஆகவே இராஜத்ந்திரம் நிகழ்வதற்க்கு போராட்டங்கள் அவசியம் ஆகின்றன. சீனாவின் ஆதரவினால் தான் நாம் சிறிலங்காவிற்க்கு உதவுகிறோம் என்று இந்தியா சொல்கிறது.அப்படியானால் சீனாவே சிறிலங்கா சம்பந்தமான இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கிறது.அப்படியானால் ஏன் தமிழர்கள் சீனாவுடன் உறவைப் பேண முனையாமால் இருகிறார்கள்? ஆசியப் பிராந்தியத்திலும் உலகிலும் சீனாவே தீர்க்கமான் சக்தி என இந்தியாவே நம்பும் போது, நாம் மட்டும் ஏன் இந்தியாவின் கொத்தடிமைகளாக இருக்க வேண்டும். நேராக சீனவிடமே செல்லலாமே இடையில் இந்தியா எதற்க்கு?

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. இந்த இரு நாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கின்றன. இந்த உறவு உருவான போது இஸ்ரேல் என்ற நாடே இருக்கவில்லை. யூதர்கள் என்ற அழிந்து போகும் இனம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவே அவர்களுக்கு நாட்டை உருவாக்கியது. போராட்டமும் நடந்தது, ஆனால் நாட்டை உருவாக்கும் அரசியல் பலம் இராஜதந்திர உறவு மூலமே கிடைத்தது. நாம் இராஜதந்திர உறவுகளை பெரிது படுத்தாமல், முடிவு தெரியாத போராட்டத்தை தொடருவது வெற்றி காணும் வழியாக தெரியவில்லை.

செய்திகளை சொல்வதற்காக போராட்டங்களை 50 வருடங்களாக நாங்கள் நடத்தி வருகிறோம். இந்த செய்திகள் ஏற்கனவே அறியப்பட்டவையே. செய்திகளை சொல்வதற்காக போராட்டங்களை இனிமேலும் தொடர்ந்து நடத்துவது பயனுள்ளதாக தெரியவில்லை. ஆனால் இராஜதந்திர நகர்வுகளை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப எமது மக்கள் திட்டமிட்டு செயற்படுவற்கு, நாம் குறிப்பிடத்தக்களவில் உதவுவதாக தெரியவில்லை.

இசுரேலின் இராஜத்ந்திரம் என்பது அதன் பொருளாதார அரசியல் இராணுவ வல்லமைகளின் அடிப்படியில் நிகழ்வது. நான் மேலே எழுதியவாறு தமிழரின் தற்போதைய பலம் என்பது கள அரசியற் போராட்டங்கள் சார்ந்தது.மக்கள் பலத்தின் அடிப்படியிலையே எம்மால் எந்த இராஜத்ந்திர நகர்வையும் மேற்கொள்ள முடியும்.

Emancipation movements See also: Jewish Emancipation, Haskalah

During the early stages of Jewish emancipation movements, Jews were simply part of the general effort to achieve freedom and rights that drove popular uprisings like the Revolutions of 1848. Jewish statesmen and intellectuals like Heinrich Heine, Johann Jacoby, Gabriel Riesser, Berr Isaac Berr, and Lionel Nathan Rothschild were active with the general movement towards liberty and political freedom.

Still, in the face of persistent anti-semitic incidents like the Damascus Blood Libel of 1840, and the failure of many states to emancipate the Jews, Jewish organizations started to form in order to push for the emancipation and protection of Jews. The Board of Deputies of British Jews under Moses Montefiore, the Central Consistory of Paris, and the Alliance Israelite Universelle all began working to assure the freedom of the Jews throughout the middle of the 19th century.

[edit] Socialist and Labor movements

See: Jewish left

Frustration with the slow pace of Jewish acceptance into European society, and a revolutionary utopianism, led to a growing interest in proto-socialist and communist movements, especially as early socialist leaders, like Saint-Simon, preached the emancipation of the Jews. Moses Hess played a role in introducing Karl Marx (who was descended from a long line of rabbis) and Friedrich Engels to historical materialism. The Jewish Ferdinand Lassalle, founded the first actual workers' party in Germany, the General German Workers' Association (which ultimately merged with other parties to become the Social Democratic Party of Germany) and made Jewish emancipation one of his goals.

The more intellectual socialist movements of the Jews in Western Europe never gathered steam as emancipation took hold. In Eastern Europe and Russia, however, the Bund – the General Jewish Labor Union – founded in 1897, became a key force in organizing Jews, and, at least initially, the major opponent of another Jewish political movement of the time, Zionism. There were other Jewish socialist parties in Russia, like the (territorialist) Zionist Socialist Workers Party and the Jewish Socialist Workers Party, which united their destinies in 1917 as the United Jewish Socialist Workers Party. Another left-wing Russian Jewish party was the Jewish Social Democratic Labour Party (Poalei Zion).

[edit] Zionist movements

Main article: Zionism

The aim of Zionism was to set up a secular state in the vicinity of the Biblical Land of Israel. Zionism, or the idea of a restored national homeland and common identity for the Jews, had already started to take shape by the mid-19th century, with Jewish thinkers such as Moses Hess whose 1862 work Rome and Jerusalem; The Last National Question argued for the Jews to settle in Palestine as a means of settling the national question. Hess proposed a socialist state in which the Jews would become agrarianised through a process of "redemption of the soil" which would transform the Jewish community into a "true" nation, in that Jews would occupy the productive layers of society rather than being an intermediary non-productive merchant class, which is how he perceived Jews in Europe. Hess, along with later thinkers such as Nahum Syrkin and Ber Borochov, is considered a founder of Socialist Zionism and Labour Zionism and one of the intellectual forebears of the kibbutz movement. Others like Rabbi Zvi Kalischer viewed a return to the Jewish homeland as the fulfillment of biblical prophecy through natural means.

Theodore_Herzl.jpg

magnify-clip.pngTheodor Herzl, a key figure in the development of Zionism

As the 19th century wore on, the persecution of the Jews in Eastern Europe where emancipation had not occurred to the extent it did in Western Europe (or at all) increased. Starting with the state-sponsored massive anti-Jewish pogroms following the assassination of Tsar Alexander II and continuing with the Dreyfus Affair in France in 1894, Jews were profoundly shocked to see the continuing extent of anti-Semitism from Russia to France, a country which they thought of as the home of enlightenment and liberty.

In reaction to the first, Judah Leib Pinsker published the pamphlet Auto-Emancipation on January 1, 1882. The pamphlet became influential for the Political Zionism movement. The movement was to achieve momentum under the leadership of an Austrian-Jewish journalist, Theodor Herzl, who published his pamphlet Der Judenstaat ("The Jewish State") in 1896. Prior to the Dreyfus Affair, Herzl had been an assimilationist, but after seeing how France treated its loyal Jewish subjects, he proposed building a separate Jewish state. In 1897 Herzl organized the First Zionist Congress in Basel, Switzerland, which founded the World Zionist Organisation (WZO) and elected Herzl as its first President. After the state's establishment Zionism, in its various forms, would become the largest Jewish political movement, although more Jews would participate in the national politics of the countries in which they resided.

[edit] Folkists

See also: Jewish Autonomism

In the aftermath of the 1905 pogroms in Russia, the historian Simon Dubnow founded the Folkspartei (Yiddishe Folkspartay) which had some intellectual audience in Russia, then, in independent Poland and Lithuania in the 1920-1930s where it was represented as well in the Parliaments (Sejm, Seimas) as in numerous municipal councils (incl. Warsaw) till in the late 1930s. The party did not survive the Shoah, the Holocaust.

[edit] Territorialists

Main article: Territorialism

The territorialists, who had split from the Zionists after the Seventh Zionist Congress in 1905, called for creation of a sufficiently large and compact Jewish territory (or territories), not necessarily in the Land of Israel and not necessarily fully autonomous. Some territorialist leaders, such as Nachman Syrkin, supported the Socialist versions of Zionism, while some others, such as Lucien Wolf, actively opposed Zionism and promoted anti-nationalist ideas. Isaac Nachman Steinberg, one of the founders of the Freeland League, held anti-authoritarian socialist views, as well as his close friend Erich Fromm, who supported Steinberg's territorialist ideas.

[edit] Anarchists

Main article: Jewish Anarchism

While the Jews in general played an important role in the international anarchist movements, many Jewish anarchists actively promoted Yiddish language and culture, focused on specifically Jewish issues. While most Jewish anarchists were irreligious or even vehemently anti-religious, some Jewish anarchist and anti-authoritarian thinkers, such as Martin Buber, rabbi Yehuda Ashlag, Isaac Nachman Steinberg and Gustav Landauer, were religious or religiously inclined and often referred to the Torah, Talmud and other traditional Judaic sources, claiming that anarchist ideas are deeply rooted in the Jewish tradition. The Jewish anarchists believe that in the stateless, free and diverse anarchist society the Jews would have more opportunities to express their individual and cultural autonomy. Many Jewish anarchists, while promoting universal internationalist values, had actively participated in the development of the Yiddish culture and Jewish community life.

There was some intersection between the Jewish anarchist, Folkist and Territorialist movements. For example, Isaac Nachman Steinberg, a renowned Territorialist leader, held anarchist views. Most Jewish anarchists supported anarcho-syndicalism and communist anarchism, while a few were individualist anarchists. The small contemporary anarchist movement in Israel is very active in peace and Palestinian solidarity actions.

[edit] Modern Jewish political movements

Zionism continues to be the central trans-national political movement of most Jews, although it has split into a variety of branches and philosophies that span the political spectrum from left-wing to right-wing. Jews are also active in government in many of the countries in which they live, as well as in Jewish community organizations that often take political positions.

[edit] In Israel

Main article: Politics of Israel

See also: List of political parties in Israel

[edit] Outside Israel

Over the past century, Jews in Europe and the Americas have traditionally tended towards the political left, and played key roles in the birth of the labor movement as well as socialism. While Diaspora Jews have also been represented in the conservative side of the political spectrum, even politically conservative Jews have tended to support pluralism more consistently than many other elements of the political right. Daniel J. Elazar connects this pluralist tendency to the fact that Jews are not expected to proselytize, and argues that whereas Christianity and Islam anticipate a single world-state, Judaism does not.[1] This lack of a universalizing religion is combined with the fact that most Jews live as minorities in their countries, and that no central Jewish religious authority has existed for over 2,000 years. (See list of Jews in politics, which illustrates the diversity of Jewish political thought and of the roles Jews have played in politics.)

There are also a number of Jewish secular organizations at the local, national, and international levels. These organizations often play an important part in the Jewish community. Most of the largest groups, such as Hadassah and the United Jewish Communities, have an elected leadership. No one secular group represents the entire Jewish community, and there is often significant internal debate among Jews about the stances these organizations take on affairs dealing with the Jewish community as a whole, such as antisemitism and Israeli policies. In the United States and Canada today, the mainly secular United Jewish Communities (UJC), formerly known as the United Jewish Appeal (UJA), represents over 150 Jewish Federations and 400 independent communities across North America. Every major American city has its local "Jewish Federation", and many have sophisticated community centers and provide services, mainly health care-related. They raise record sums of money for philanthropic and humanitarian causes in North America and Israel. Other organizations such as the Anti-Defamation League, American Jewish Congress, American Jewish Committee, American Israel Public Affairs Committee, Zionist Organization of America, Americans for a safe Israel, B'nai B'rith and Agudath Israel represent different segments of the American Jewish community on a variety of issues.

[edit] See also

http://en.wikipedia.org/wiki/Jewish_political_movements

யூதர்களைப் பற்றிக் கதைக்கும் முன்னம் அவர்களின் போராட்ட வரலாற்றை முதலில் படிப்பது நன்று. இற்றைக்கு இரு நூறு ஆண்டுகளின் முன் யூதர்கள் எப்படி இருதருந்தார்களோ அவ்வாறு தான் நான் இப் போது இருக்கிறோம்.ஆகவே யூதர்கள் எவ்வாறு அன்று போராடினார்கள் என் பதை நாம் முதலில் அறிய வேண்டும்.இன்று அவர்கள் ஒரு நாடுடன் ஒரு இராணுவத்துடன் அணு ஆயுதங்கள் ஏவுகணக்களுடன் இருந்து செய்யும் `இராஜத்ந்திரத்தை` நாங்களும் செய்யலாம் என்று கனவு காணுவதை விட்டு விட்டு முதலில் அவர்களின் வரலாற்றைப் படிப்பது நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

]

இந்திய வீட்டுத் திட்டத்திற்க்கு என்ன நடந்தது? அரசியல் அதிகாரம் இன்றி ,இராணுவ ஆட்சி ஒன்றிற்குள் எந்த அபிவிரித்தித் திட்டமும் மக்களுக்கு எந்தப் பயனையும் தராது என்பதே யதார்த்தம்.இவை வெறும் செய்தியாக பதிரிகைகளில் வர மட்டுமே முடியும்.

இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இந்தியா திரைமறைவில் முயற்சிப்பதாகவே தெரிகிறது. தனது திட்டங்கள் வெற்றிபெறுவது கடினமான இருப்பதை இந்தியா அறிந்தே இருக்கும். தமிழரின் ஆதரவை தேடுவது முதற்படியாக இருக்கலாம்.

உலகில் மக்கள் போராட்டங்கள் மூலமே அரசுகளின் செயற்பாடுகளை அவர்களின் திட்டங்களை முறையடிதிருகிறார்கள் என்பது வரலாறு. நாங்கள் வரலாற்றில் இருந்து பாடங்களைப் படிக்க வில்லை எனில் எம்மால் எந்த மாற்றத்தையும் அரசுகளின் நடவடிக்கைகள் கொள்கைகளில் கொண்டு வர முடியாது என்பது அரசியல் அடிப்படை.

தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் போராட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லையா? எமது 50 வருட வரலாறு எமக்கு என்ன சொல்கிறது? வெற்றிக்கான தெளிவான பாதையும் இராஜதந்திர திட்டமிடலும் சரியாக செய்யப்படாத நிலையில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் தோற்றுப் போய் விடுவதற்கு, ஈழத்தமிழ் மக்களின் 50 வருட மக்கள் போராட்டங்கள் சாட்சியமாக திகழ்கின்றன. தோற்றுப்போன வழியையே மீண்டும் மீண்டும் காட்டுகிறீர்களே? எமது சொந்த வரலாற்றிலிருந்தே நாம் பாடங்களை கற்று கொள்ள வேண்;டாமா?

SDC12905.JPG

ஈழத்தமிழரின் மக்கள் போராட்டங்களில் ஒன்று

sjv+selvanayagam+pillai+father+of+tamil+eelam.jpg

மக்கள் போராட்ங்களை நம்பி ஈழத்தமிழரை வழி நடத்தி தோற்றுப்போன தந்தை செல்வா

இனப் படுகொலை நடைபெற்றது என்பதை எல்லா அரசுகளும் அறிந்து இருந்தும் இது தொடர்பாக அவை ஏன் ஒரு நடவடிகையையும் எடுக்கவில்லை.இந்திய அரசு மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் இனப் படுகொலை நடைபெறவில்லை என சிறிலங்கா அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியதே , நீங்கள் அதனைப் படிக்க விலையோ ஜூட்?

சிறி லங்கா போர்க்குற்ற விசாரணைக்கு உட்படும் போது இந்தியாவின் பங்களிப்பும் விசாரணைக்கு உள்ளாகும் என்ற காரணத்தால் இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள செய்த முயற்சி அது.

மேலும் இது இராஜதந்திர முறைகளில் ஒன்று. இலங்கையை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வல்லமை தனக்கிருப்பதாக காட்ட இந்தியா செய்த முயற்சி இது. ஆனால் இன்று சீனாவின் ஆதரவை சிறிலங்கா பெற்றுள்ள நிலையில், அதற்கு இந்தியாவின் ஆதரவு அவசியமற்று போயிருக்கிறது. சீனாவுடனான வலுச்சமநிலையிலும் , சிறி லங்காவை கட்டுப்படுத்துவதிலும் இன்று இந்தியா மிகவும் சிக்கலான நிலையில் இருக்கிறது. ஈழத்தமிழரின் உதவி இந்தியாவுக்கு தேவையான காலம் இது. அதை ஈழத்தமிழர் தலைமைகள் பயன்படுத்த தவறினால் அது இன்னுமொரு வரலாற்று தவறாகலாம்.

அரசுகளின் கண்துடைப்பை அவ் அரசுகளின் நாடுகளின் மக்களும் ஊடகங்களும் அறியச் செய்ய வல்லன போராட்டங்கள்.அரபிய புரட்சியை மக்களே நாடாத்தினர்.அமெரிக்க வல்லாதிக்கம் தான் ஆண்டாண்டுகளாக ஆதரித்த அரசுகளை மாற்ற இப் போராட்டங்களே நிர்ப்பந்தித்திதன.

இந்த புரட்சிகளின் பின்னணியில் இருந்த சக்திகளை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே? எவ்வாறு லிபியாவின் மக்கள் புரட்சி ஆயுதம் தாங்கிய புரட்சியாக மாறியது? நேச நாடுகளின் விமானப்படை எப்படி அவ்வளவு வேகமாக புரட்சியாளருக்கு உதவ ஆரம்பித்தது? சிரிய புரட்சிக்கு பின்னால் உள்ள சக்தி எது என்று உங்களுக்கு தெரியுமா?

ஏன் இந்த புரட்சிகள் எல்லாம் வழமையான மார்க்சிய புரட்சிகளாக இல்லாமல் இப்போது ஜனநாயக அமெரிக்க சார்பு புரட்சிகளாக அமைகின்றன? ஐ.நா.வின் அணுச்சக்தி துறைக்கு பொறுப்பாக இருந்தவர் எகிப்திய புரட்சிக்கு தலைமை தாங்கியிருந்தார். இவருக்கு பின்னால் இருந்தவர்கள் யார்? செய்தித்தாள்களில் நீங்கள் படிப்பவைக்கு பின்னால் பல விடயங்கள் மறைந்திருக்கின்றன. அவை இன்னுமொரு வைகி லீக்ஸ் ஏற்பட்டால் அல்லது 50 வருடங்களுக்கு பிறகு பகிரங்கப்படுத்தப்பட்டால் நீங்கள் அறிவீர்கள். அமெரிக்க அரசின், அமெரிக்க மக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என மட்டுப்படுத்தப்பட்ட சில தகவல்களை நான் அறிவேன். அவற்றை அமெரிக்காவுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள சட்டங்கள் தடையாகவுள்ளன.

இராஜதந்திர நகர்வுகள் பலத்தின் அடிப்படையிலையே நிகழமுடியும்.பலம் அற்றவனால் எந்த நகர்வையும் மேற்கொள்ள முடியாது.பலம் என்பது அரசியல்,இராணுவ பொருளாதாரப் பலங்கள்.அரசியற் பலம் என்பது மக்கள் போராட்டங்கள் மூலம் நிலை நிறுத்தப்படுகிறது.ஆகவே இராஜத்ந்திரம் நிகழ்வதற்க்கு போராட்டங்கள் அவசியம் ஆகின்றன.

இராஜதந்திர நகர்வுகளும் உறவுகளும் பலத்தின் அடிப்படையில் அல்ல, இருபக்க தேவைகளின் / இலாபத்தின் (Mutual Benefit) அடிப்படையிலும் பொது தேவைகள்/ இலாபத்தின் (common benefit) அடிப்படையிலும் இடம்பெறுகின்றன. இதனால் தான் இராணுவ பொருளாதார அரசியல் பலமற்ற சிறிய நாடுகள், பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணி இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள முடிகிறது. பலமற்ற மக்கள் கூட இவ்வாறாக பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பொது தேவைகள் (common interests)அல்லது இருபக்க தேவைகளின் (mutual interests) அடிப்படையில் ஏற்படுத்தி கொள்ள முடிகிறது. மக்கள் போராட்டங்கள் இந்த இராஜதந்திர நகர்வுகளின் திட்டமிட்ட ஒரு அங்கமாக இடம்பெறும் போது அவை வெற்றி பெறுகின்றன. மக்கள் போராட்டங்களின் காரணமாக அரசியல் பலம் உருவாகி அதன் விளைவாக இராஜதந்திர உறவுகள் உருவாவதாக தோன்றுவது ஒரு மாயத்தோற்றமே அன்றி உண்மையான நிகழ்வாக கருதப்படுவது தவறானது.

அமெரிக்க அரசு லிபியாவின் கடாபியை என்றும் நண்பராக கருதியதில்லை. ஆனால் அவரை அகற்ற வழி காண அமெரிக்க அரசுக்கு நீண்ட காலம் எடுத்திருந்தது. காலம் கனிந்து வந்த வேளை, ஏற்கனவே திட்டமிட்டிருந்த மக்கள் போராட்டம் ஆரம்பமாகி ஆயுதப்போராட்டமாகி அமெரிக்க தலையீட்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கா தான் ஆதரிக்கும் சர்வாதிகாரிகளை காலத்துக்கு காலம் பதவியில் இருந்து அகற்றி வந்திருக்கிறது. அந்த வகையில் எகிப்திய சர்வாதிகாரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் திரைமறைவில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் என்பதை பல ஆண்டுகளுக்கு பின்னர் உத்தியோகபூர்வ வரலாறுகள் காட்டக்கூடும்.

சீனாவின் ஆதரவினால் தான் நாம் சிறிலங்காவிற்க்கு உதவுகிறோம் என்று இந்தியா சொல்கிறது.அப்படியானால் சீனாவே சிறிலங்கா சம்பந்தமான இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கிறது.அப்படியானால் ஏன் தமிழர்கள் சீனாவுடன் உறவைப் பேண முனையாமால் இருகிறார்கள்?

ஆசியப் பிராந்தியத்திலும் உலகிலும் சீனாவே தீர்க்கமான் சக்தி என இந்தியாவே நம்பும் போது, நாம் மட்டும் ஏன் இந்தியாவின் கொத்தடிமைகளாக இருக்க வேண்டும். நேராக சீனவிடமே செல்லலாமே இடையில் இந்தியா எதற்க்கு?

இந்திய வெளியுறவு கொள்கையை சீனா தீர்மானிப்பதில்லை. ஆனால் இந்திய வெளியுறவு கொள்கையில் சீனா கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் போராட்டத்தை இந்தியா ஆயுதமயப்படுத்தியதற்கான முக்கியமான காரணம் சிறிமாவோ காலத்தில் இருந்தே சீனாவுடன் சிறி லங்கா கொண்டிருந்த நெருக்கமான உறவாகும்.

248px-Bandaranaike_Memorial_International_Conference_Hall.jpg

சிறி லங்காவுக்கு சீனா 1972இல் அன்பளிப்பாக கட்டிக்கொடுத்த பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம்

சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணத்தில் இயங்கியது. அதில் முக்கியஸ்தராக இருந்து மணியம் என்பவர் தான் விடுதலைப்புலிகளின் சிறையில் பெற்ற அனுபவத்தை தேனி என்ற இணையத்தில் தொடராக எழுதி வருகிறார். தமது கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கவில்லை என்று அவர் எழுதியிருக்கிறார். சீனா, சிறி லங்காவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால், அதற்கு தமிழருடன் இருபக்க தேவையோ (mutual interests) அல்லது பொது தேவையோ (common interests) இருக்கவில்லை. அதனால் சீன சார்பு கட்சிகளோ, மார்க்ஸிய அமைப்புகளோ தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு பெறவில்லை. சீனாவுக்கும் அவர்களை தேவைப்படவில்லை.

மாறாக இந்தியாவுக்கு ஈழத்தமிழரை தேவைப்பட்டது. ஈழத்தமிழருக்கும் இந்தியாவை ஆயுதம் முதல் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவிற்கு தேவைப்பட்டது. இந்த இருபக்க தேவை (mutual interests) காரணமாக இந்திரா காந்தி காலத்தில் ஈழத்து விடுதலைப் போராளிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவும் இராஜதந்திர நகர்வுகளும் இடம்பெற்றன. ஆனால் இந்த உறவை இந்திரா காந்திக்கு பிற்பட்ட காலத்தில் வெற்றிகரமாக தொடராத காரணத்தால் இருபகுதினருமே தமது நலன்களை இழந்து போக (loss-loss situation) நேர்ந்துள்ளது. இன்றும் இரு பகுதியினருக்கும் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டிய தேவைகள் உள்ளன. ஆகவே இந்த உறவை நாம் புதுப்பித்து கொண்டு இந்த முறை சிறப்பாக இரு பகுதியினரும் நமது தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி (win-win) கொள்ளவேண்டும்.

Edited by Jude

இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இந்தியா திரைமறைவில் முயற்சிப்பதாகவே தெரிகிறது. தனது திட்டங்கள் வெற்றிபெறுவது கடினமான இருப்பதை இந்தியா அறிந்தே இருக்கும். தமிழரின் ஆதரவை தேடுவது முதற்படியாக இருக்கலாம்.

இருக்கலாம் ,அப்படி இல்லாதும் இருக்கலாம்.இந்தியா இது வரை அவ்வாறான தகவல்கள் செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை, செய்த பின் நாம் ஆதரவு தரலாம்.

தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் போராட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லையா? எமது 50 வருட வரலாறு எமக்கு என்ன சொல்கிறது? வெற்றிக்கான தெளிவான பாதையும் இராஜதந்திர திட்டமிடலும் சரியாக செய்யப்படாத நிலையில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் தோற்றுப் போய் விடுவதற்கு, ஈழத்தமிழ் மக்களின் 50 வருட மக்கள் போராட்டங்கள் சாட்சியமாக திகழ்கின்றன. தோற்றுப்போன வழியையே மீண்டும் மீண்டும் காட்டுகிறீர்களே? எமது சொந்த வரலாற்றிலிருந்தே நாம் பாடங்களை கற்று கொள்ள வேண்;டாமா?.

போராட்டங்கள் தான் விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதே உலக வரலாறு.அதைத் தவிர வேறு வழி இல்லை.யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் போராடினர்.

சிறி லங்கா போர்க்குற்ற விசாரணைக்கு உட்படும் போது இந்தியாவின் பங்களிப்பும் விசாரணைக்கு உள்ளாகும் என்ற காரணத்தால் இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள செய்த முயற்சி அது.

மேலும் இது இராஜதந்திர முறைகளில் ஒன்று. இலங்கையை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வல்லமை தனக்கிருப்பதாக காட்ட இந்தியா செய்த முயற்சி இது. ஆனால் இன்று சீனாவின் ஆதரவை சிறிலங்கா பெற்றுள்ள நிலையில், அதற்கு இந்தியாவின் ஆதரவு அவசியமற்று போயிருக்கிறது. சீனாவுடனான வலுச்சமநிலையிலும் , சிறி லங்காவை கட்டுப்படுத்துவதிலும் இன்று இந்தியா மிகவும் சிக்கலான நிலையில் இருக்கிறது. ஈழத்தமிழரின் உதவி இந்தியாவுக்கு தேவையான காலம் இது. அதை ஈழத்தமிழர் தலைமைகள் பயன்படுத்த தவறினால் அது இன்னுமொரு வரலாற்று தவறாகலாம்.?.

பயன் படுத்தலாம் ஆனால் பயன் படுத்தப்படக் கூடாது.தமிழர்கள் நலனைஇந்தியா முன் நிறுத்தினால் அதனை நாம் பயன் படுத்தத் தான் வேண்டும்.ஆனால் இது காலவரை இந்திய ஆளும் வர்க்கம் அவ்வாறு செயற்பட்டதில்லை.

ப்இந்த புரட்சிகளின் பின்னணியில் இருந்த சக்திகளை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே? எவ்வாறு லிபியாவின் மக்கள் புரட்சி ஆயுதம் தாங்கிய புரட்சியாக மாறியது? நேச நாடுகளின் விமானப்படை எப்படி அவ்வளவு வேகமாக புரட்சியாளருக்கு உதவ ஆரம்பித்தது? சிரிய புரட்சிக்கு பின்னால் உள்ள சக்தி எது என்று உங்களுக்கு தெரியுமா?

ஏன் இந்த புரட்சிகள் எல்லாம் வழமையான மார்க்சிய புரட்சிகளாக இல்லாமல் இப்போது ஜனநாயக அமெரிக்க சார்பு புரட்சிகளாக அமைகின்றன? ஐ.நா.வின் அணுச்சக்தி துறைக்கு பொறுப்பாக இருந்தவர் எகிப்திய புரட்சிக்கு தலைமை தாங்கியிருந்தார். இவருக்கு பின்னால் இருந்தவர்கள் யார்? செய்தித்தாள்களில் நீங்கள் படிப்பவைக்கு பின்னால் பல விடயங்கள் மறைந்திருக்கின்றன. அவை இன்னுமொரு வைகி லீக்ஸ் ஏற்பட்டால் அல்லது 50 வருடங்களுக்கு பிறகு பகிரங்கப்படுத்தப்பட்டால் நீங்கள் அறிவீர்கள். அமெரிக்க அரசின், அமெரிக்க மக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என மட்டுப்படுத்தப்பட்ட சில தகவல்களை நான் அறிவேன். அவற்றை அமெரிக்காவுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள சட்டங்கள் தடையாகவுள்ளன.

இராஜதந்திர நகர்வுகளும் உறவுகளும் பலத்தின் அடிப்படையில் அல்ல, இருபக்க தேவைகளின் / இலாபத்தின் (Mutual Benefit) அடிப்படையிலும் பொது தேவைகள்/ இலாபத்தின் (common benefit) அடிப்படையிலும் இடம்பெறுகின்றன. இதனால் தான் இராணுவ பொருளாதார அரசியல் பலமற்ற சிறிய நாடுகள், பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணி இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள முடிகிறது. பலமற்ற மக்கள் கூட இவ்வாறாக பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பொது தேவைகள் (common interests)அல்லது இருபக்க தேவைகளின் (mutual interests) அடிப்படையில் ஏற்படுத்தி கொள்ள முடிகிறது. மக்கள் போராட்டங்கள் இந்த இராஜதந்திர நகர்வுகளின் திட்டமிட்ட ஒரு அங்கமாக இடம்பெறும் போது அவை வெற்றி பெறுகின்றன. மக்கள் போராட்டங்களின் காரணமாக அரசியல் பலம் உருவாகி அதன் விளைவாக இராஜதந்திர உறவுகள் உருவாவதாக தோன்றுவது ஒரு மாயத்தோற்றமே அன்றி உண்மையான நிகழ்வாக கருதப்படுவது தவறானது.

அமெரிக்க அரசு லிபியாவின் கடாபியை என்றும் நண்பராக கருதியதில்லை. ஆனால் அவரை அகற்ற வழி காண அமெரிக்க அரசுக்கு நீண்ட காலம் எடுத்திருந்தது. காலம் கனிந்து வந்த வேளை, ஏற்கனவே திட்டமிட்டிருந்த மக்கள் போராட்டம் ஆரம்பமாகி ஆயுதப்போராட்டமாகி அமெரிக்க தலையீட்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கா தான் ஆதரிக்கும் சர்வாதிகாரிகளை காலத்துக்கு காலம் பதவியில் இருந்து அகற்றி வந்திருக்கிறது. அந்த வகையில் எகிப்திய சர்வாதிகாரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் திரைமறைவில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் என்பதை பல ஆண்டுகளுக்கு பின்னர் உத்தியோகபூர்வ வரலாறுகள் காட்டக்கூடும்..?.

சும்மா பம்மாத்து காட்ட வேண்டாம்.அரபியப் புரட்சியின் பின் பல தொழிற்சங்கங்கள் இடது சாரி அமைப்புக்கள் இருந்த்தன இருக்கின்றன.எதோ இவற்றை சிஅய் ஏ தான் நாடாத்தியது போல் இப்போது அமெரிக்கா தகவல்களைக் கசிய விட்டுள்ளது.அது விழுந்த்தாலும் மீசையில் மண் படவில்லை என்பதைப் போல்.இது தான் இன்னும் சண்டியன் தான் என்று நம்ப வைப்பதற்கான ஒரு முயற்ச்சியே தவிர அதில் உண்மை இல்லை.ஏனெனில் எகிப்ப்தில் அமெரிக்காவை பல ஆண்டுகளாக முபாரக்குகு பல உதவிகளைச் செய்தது. எல்லாப் போராட்டங்களும் மக்களே நாடாத்தினர்.அமெரிக்கப் படைகள் அல்ல.

இந்திய வெளியுறவு கொள்கையை சீனா தீர்மானிப்பதில்லை. ஆனால் இந்திய வெளியுறவு கொள்கையில் சீனா கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் போராட்டத்தை இந்தியா ஆயுதமயப்படுத்தியதற்கான முக்கியமான காரணம் சிறிமாவோ காலத்தில் இருந்தே சீனாவுடன் சிறி லங்கா கொண்டிருந்த நெருக்கமான உறவாகும்.

248px-Bandaranaike_Memorial_International_Conference_Hall.jpg

சிறி லங்காவுக்கு சீனா 1972இல் அன்பளிப்பாக கட்டிக்கொடுத்த பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம்

சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணத்தில் இயங்கியது. அதில் முக்கியஸ்தராக இருந்து மணியம் என்பவர் தான் விடுதலைப்புலிகளின் சிறையில் பெற்ற அனுபவத்தை தேனி என்ற இணையத்தில் தொடராக எழுதி வருகிறார். தமது கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கவில்லை என்று அவர் எழுதியிருக்கிறார். சீனா, சிறி லங்காவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால், அதற்கு தமிழருடன் இருபக்க தேவையோ (mutual interests) அல்லது பொது தேவையோ (common interests) இருக்கவில்லை. அதனால் சீன சார்பு கட்சிகளோ, மார்க்ஸிய அமைப்புகளோ தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு பெறவில்லை. சீனாவுக்கும் அவர்களை தேவைப்படவில்லை.

மாறாக இந்தியாவுக்கு ஈழத்தமிழரை தேவைப்பட்டது. ஈழத்தமிழருக்கும் இந்தியாவை ஆயுதம் முதல் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவிற்கு தேவைப்பட்டது. இந்த இருபக்க தேவை (mutual interests) காரணமாக இந்திரா காந்தி காலத்தில் ஈழத்து விடுதலைப் போராளிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவும் இராஜதந்திர நகர்வுகளும் இடம்பெற்றன. ஆனால் இந்த உறவை இந்திரா காந்திக்கு பிற்பட்ட காலத்தில் வெற்றிகரமாக தொடராத காரணத்தால் இருபகுதினருமே தமது நலன்களை இழந்து போக (loss-loss situation) நேர்ந்துள்ளது. இன்றும் இரு பகுதியினருக்கும் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டிய தேவைகள் உள்ளன. ஆகவே இந்த உறவை நாம் புதுப்பித்து கொண்டு இந்த முறை சிறப்பாக இரு பகுதியினரும் நமது தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி (win-win) கொள்ளவேண்டும்.

அன்றைய ஜேஆரின் அரசு அமெரிக்க சார்பானதாக இருந்த்தௌ அன்று இந்தியா ரசிய சார்பாந்தாக இருந்த்து.அதனால் தான் இந்திரா காந்த்தி ஆயுதங்களை வழங்கினார்.பின்னர் ஜே ஆர் இந்தியாவின் காலில் விழுந்த்தௌம் ஆயுதங்கள் களையப்பட்டன.உல்கம் இப்போது வேறு அணிகளாகப் பிரிந்து விட்டது.இந்தியா அமெரிக்க சார்பு நிலை எடுத்து விட்டது.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்ட நாட் பகை உண்டு.பிராந்திய வல்லரசான சீனாவை ,இந்தியாவும் அமஎரிக்காவும் அச்சத்துடன் நோக்குகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நாளுக்கு நாள் பொருளாதார ரீதியாக வலு விழந்து வருகிறது.இது இராணுவ ரீதியாகவும் பாதிப்பை உண்டு பண்ணும்.சீனா பொருளாதார ரீதியாக இராணுவ ரீதியாக தன்னை வலுவுள்லதாக்கி வருகிறது.

மாறி வரும் உலக வலுச் சமனிலையை நாங்கள் புரிந்து கொள்ளாமால் அல்லது புரிந்தும் எமக்கு விருப்பமான ஒரு நாட்டை அடி ஒற்றி எமது தலையை மண்ணில் புதைதுக்கொண்டு இருப்பதாலோ அல்லது எதோ இராசதந்திரம் இதில் இருப்பதாகவோ எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தேவையில்லை.

உலகம் முழுக்க நம்ம பிரச்னை தெரிஞ்சப்புறமும்,, அவங்க கண்டுக்கல ...

அப்போ புலியாலதான் எல்லாம் என்னீங்க!

இப்போ?? யாரால என்ன தடங்கல்... யாருக்கு?

இப்போ . உலகளவில் தாக்கம் வர பண்ணுறது எப்புடி ..அர்ஜுன் அண்ணா?

சுச்சூம்மா........... தக்கிலி குட்டி .......... சிக்கிலிகுட்டி...........

அப்பிடீன்னு கிச்சு கிச்சு மூட்டியா உங்கள கேட்க முடியும்?

நீங்களாவே சொல்லிடுங்க! :)

அண்ணை அறிவிலி ,உலகளவில தாக்கம் என்றால் உங்களுக்கு தெரிந்தது ஒரு மந்திரியை போடுதல் ,அவருடன் சேர்ந்து நாற்பது பொதுசனத்தை போடுதல்,தற்கொலைத்தாக்குதல் ,உந்த வாணவேடிக்கை உலகளவில் தாக்கம் என்று உங்ககளுக்கு படிப்பித்து விட்டு போய்விட்டார்கள் .நீங்களும் இனி ஒரு குண்டு வெடிக்காதா என வாயை பிளந்துகொண்டு நிற்கின்றீர்கள்.

புலி முடிந்த கதை என்றால் உடன மற்றவன் ஏதும் அடித்து பிரட்ட வேண்டுமோ? முப்பது வருடம் கனவில் இருந்த உங்களுக்கு இப்ப சுடுகுது மடியை பிடி என்றால் எப்படி?

அச்சாப்பிள்ளை கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்க்கோவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அறிவிலி ,உலகளவில தாக்கம் என்றால் உங்களுக்கு தெரிந்தது ஒரு மந்திரியை போடுதல் ,அவருடன் சேர்ந்து நாற்பது பொதுசனத்தை போடுதல்,தற்கொலைத்தாக்குதல் ,உந்த வாணவேடிக்கை உலகளவில் தாக்கம் என்று உங்ககளுக்கு படிப்பித்து விட்டு போய்விட்டார்கள் .நீங்களும் இனி ஒரு குண்டு வெடிக்காதா என வாயை பிளந்துகொண்டு நிற்கின்றீர்கள்.

புலி முடிந்த கதை என்றால் உடன மற்றவன் ஏதும் அடித்து பிரட்ட வேண்டுமோ? முப்பது வருடம் கனவில் இருந்த உங்களுக்கு இப்ப சுடுகுது மடியை பிடி என்றால் எப்படி?

அச்சாப்பிள்ளை கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்க்கோவன்.

ம்ம் அண்ணையை நம்புங்கோ. கடைசி மாலைதீவு மாதிரி ஒரு முடிவையாவது எடுத்து தருவார் என நம்புவோமாக.

//சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணத்தில் இயங்கியது. அதில் முக்கியஸ்தராக இருந்து மணியம் என்பவர் தான் விடுதலைப்புலிகளின் சிறையில் பெற்ற அனுபவத்தை தேனி என்ற இணையத்தில் தொடராக எழுதி வருகிறார். தமது கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கவில்லை என்று அவர் எழுதியிருக்கிறார். சீனா, சிறி லங்காவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால், அதற்கு தமிழருடன் இருபக்க தேவையோ (mutual interests) அல்லது பொது தேவையோ (common interests) இருக்கவில்லை. அதனால் சீன சார்பு கட்சிகளோ, மார்க்ஸிய அமைப்புகளோ தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு பெறவில்லை. சீனாவுக்கும் அவர்களை தேவைப்படவில்லை.

//

சீனா ஒரு கமூயினிச அணியாக இயங்கவில்லை.அது தனது தேசிய நலனை முன் நிறுதியே இயங்குகிறது. மார்க்ஸ் சொன்ன உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்னும் கோசம் , அறிவியல் அடிப்படையில் சரியானாதாக இருந்த போதும், உலகெங்கும் தேசியவாதமே வென்றது.ஆகவே நான் ஈழத் தமிழர்கள் மார்க்சிய அடிப்படியில் சீனச் சார்பாக இயங்க வேண்டும் என்று சொல்வதாக நீங்கள் கருதினால் அது மிகவும் தவறானது.

உங்களைப் போல் நான் பழைய சூத்திரங்களுடன் எமது அரசியலைப் பார்க்கவில்லை.

எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டம், அது தான் முதன்மையானது.சண்முகதாசன் முதலானோர் இதில் தவறிழைத்து உள்ளனர்.அது அவர்களின் தவறு, எனது தவறு அல்ல.ஆகவே கற்பனையில் நான் அவர்களை ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு எழுத வேண்டாம்.

நாளை அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ எமது சுயனிர்ணயத்தை ஆதரிக்கும் என்றால் நிச்சயமாக நாம் அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.ஆனால் எமது போராட்ட வரலாற்றையும் அதில் இந்திய ஆளும் வர்க்கம் காலம் காலமாக எடுத்த நிலைப்பாடுகளையும் பார்த்தோமெனில் அவர்கள் என்றுமே எமது சுயனிர்ணயத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என்பது தெளிவானது.

ஆகவே நாம் அவர்களுக்கு இருக்கும் சீனா சார்பான சிக்கலையும், மேற்குலகிற்கு சீனா சார்பாக இருக்கும் முரண்பாட்டையும் எமக்குச் சாதகமாகப் பாவிக்க வேண்டும்.

அதற்கு நாம் இவ் இரு சக்திகளும் பயப்படும் சீனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியம்.அதன் மூலமே அவர்களை நாம் விரும்பும் நிலைப்பாடுகளை நோக்கி நகர்த்த முடியும்.வெற்றி பெற்ற மகிந்த அதைத் தான் செய்தான்.இன்னும் பல ஆசியான் நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அதைத் தான் செய்கின்றன.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அறிவிலி ,உலகளவில தாக்கம் என்றால் உங்களுக்கு தெரிந்தது ஒரு மந்திரியை போடுதல் ,அவருடன் சேர்ந்து நாற்பது பொதுசனத்தை போடுதல்,தற்கொலைத்தாக்குதல் ,உந்த வாணவேடிக்கை உலகளவில் தாக்கம் என்று உங்ககளுக்கு படிப்பித்து விட்டு போய்விட்டார்கள் .நீங்களும் இனி ஒரு குண்டு வெடிக்காதா என வாயை பிளந்துகொண்டு நிற்கின்றீர்கள்.

புலி முடிந்த கதை என்றால் உடன மற்றவன் ஏதும் அடித்து பிரட்ட வேண்டுமோ? முப்பது வருடம் கனவில் இருந்த உங்களுக்கு இப்ப சுடுகுது மடியை பிடி என்றால் எப்படி?

அச்சாப்பிள்ளை கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்க்கோவன்.

புலிகள் செய்த சாதனைகளை பாராட்டமாட்டீர்கள் ஆனால் அவர்களை எப்போதும் குறை கூறுவதைமட்டும் மட்டுமே தலையாய கடமையைகொண்ட உங்களை போன்றோர் அதற்க்கு மாற்றீடாக உங்களிடமும் ஒருவிதமான திட்டங்களும் இல்லை அப்படியாயின் நாங்கள் என்னதான் செய்யவேண்டும் ? அதையாவது உங்களின் தலையிடம் கேட்டு சொல்லலாமே :rolleyes:

ஒகே..

ஒருபெரிய நாட்டை உபயோகித்து எங்கட பிரச்சினைக்கு தீர்வு கான்பதெண்டு முடிவெடுத்திருக்கு..

சீனா.. இவர்களுக்கு எமது உதவி தேவையில்லை.

இந்தியா.. (மேற்கு) எமக்கு உதவிசெய்தாலும் அதை உபயோகிக்க எம்மிடம் கட்டமைப்பு இல்லை..எப்படி உருவாக்குவது எண்டும் தெரியவில்லை..(எம்மில் அரைக்கு அரை துரோகிகளாக இருக்கிறார்கள்.. ஆ.. ஊ என்டால் உடனே போய் சிங்களவனின்ட காலில் விழுகிறார்கள்..) மற்றும்.. எங்கட தலைகளிடம் போய் ராஜதந்திரம் உறவு எண்டால் சிதம்பரசக்கரத்தை பேய் பார்ப்பதுபோல் பாப்பார்கள்.. இதை சரிசெய்ய வேண்டுமெண்டால்.. இந்திய/இலங்கை சாராத / சேர்ந்தியங்காத கூட்டமைப்புகள் தேவை.. இந்தக்கூட்டமைப்பு தமிழர்களுக்கு உதவிசெய்யும் அமைப்பாகவும் அதே நேரம் இலங்கையுடன் எந்ததொடர்பும் அற்றவர்களாகவும் இருக்வேண்டும்.

எது எப்படியோ இந்தியா, சீனா பலப்பரிட்சை எங்கட தலையில் நடக்கமல் பார்த்துகொள்ளுவதுதான் இப்பொது நாம் செயக்கூடிய ஒரே செயலாகும்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்கள் குண்டு மழையில் செத்துக் கொண்டிருந்த பொழுது ஒரு அறிக்கையாவது விடாத இந்தக் கலாம் இப்பொழுது எதற்கு வருகிறார்?பொதுவாக இந்திய குடியரசுத் தலைவருக்கு பெரிய அதிகாரங்கள் கிடையாது.அப்படின்னா இந்த முன்னாள் குடியரசுத் தலைவருக்கு எந்த மதிப்பும் கிடையாது.அப்படி இருக்க ஒரு கல்விமான் என்ற ரீதியில் கல்விக்கு (மரியாதை)முக்கியத்துவம் கொடுக்கும் யாழ்ப்பாணத்திற்கு இவரை அனுப்புவது ஏதோ சூழ்ச்சி திட்டமாகவே இருக்கும்.படிப்புக்கு கொடுக்கும் மரியாதையை மக்கள் சந்தோசமாக வாழுகிறார்கள் என்று மாற்றிக் காட்ட முயற்சிக்கும் தந்திரமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.பல முக்கிய திருப்பு முனைகளை நடத்திக் காட்டிய யாழ் பல்கலைக் கழகத்துக்கு வருகை தரும் பொழுது மாணவர்கள் அடையாள கறுப்புப் பட்டியுடன் கலந்து கேள்விகளால் கலாமை வறுத்தெடுக்க வேண்டும்.அரசியல் உரிமை அற்றவனுக்குஅறிவியல் கேள்விகள் அர்த்தமற்றவை.இந்தியாவின் நம்பிக்கைத்துரோகத்தை தோல் உரித்துக் காட்ட வேண்டும்.அவரின் வருகையால் தமிழர் வாழ்க்கையில் என்ன முன்னேற்றத்தை அவரால் எற்படுத்த முடியும் என்று முகத்தில் அடித்தால் போல் கேட்க வேண்டும்.கனவு காணச் சொல்லும் கதை எங்களுக்குத் தேவையில்லை.உயிர்வாழும் உரிமையே எமக்குத்தேவை அதை எம்மிடம் இருந்த தட்டிப் பறித்தது இந்தியாவே என்று அடித்துச் சொல்ல வேண்டும்.எங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்யப் போகிறார்கள் பொன்னாடை போர்த்தப் போகிறார்களா?புறக்கணிக்கப்போகிறார்களா?</p>

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பம்மாத்து காட்ட வேண்டாம்.அரபியப் புரட்சியின் பின் பல தொழிற்சங்கங்கள் இடது சாரி அமைப்புக்கள் இருந்த்தன இருக்கின்றன.எதோ இவற்றை சிஅய் ஏ தான் நாடாத்தியது போல் இப்போது அமெரிக்கா தகவல்களைக் கசிய விட்டுள்ளது.

இடதுசாரிகள் போராட்டம் நடத்தி அமெரிக்க சார்பு அரசுகளை அமைக்கும் போது, சீ ஐ ஏ யின் வேலையை அவர்களே செய்து கொடுத்து விடுகிறார்கள். அது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி.

ஏனெனில் எகிப்ப்தில் அமெரிக்காவை பல ஆண்டுகளாக முபாரக்குகு பல உதவிகளைச் செய்தது. எல்லாப் போராட்டங்களும் மக்களே நாடாத்தினர்.அமெரிக்கப் படைகள் அல்ல.

நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை தானே எழுத முடியும்? தெரியாததை எழுத முடியாது அல்லவா?

பனாமானவின் டானியேல் நொரிகாவுக்கும், ஈராக்கின் சதாம் குசைனுக்கும், சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவுக்கும் அமெரிக்கா நிறையவே உதவி செய்திருக்கிறது.

அதற்கு நாம் இவ் இரு சக்திகளும் பயப்படும் சீனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியம்.அதன் மூலமே அவர்களை நாம் விரும்பும் நிலைப்பாடுகளை நோக்கி நகர்த்த முடியும்.வெற்றி பெற்ற மகிந்த அதைத் தான் செய்தான்.இன்னும் பல ஆசியான் நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அதைத் தான் செய்கின்றன.

சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி கொள்வது பற்றியும் அதற்கான இரு பக்க தேவைகள் மற்றம் பொதுவான தேவைகள் அவற்றை அடையும் விதங்கள் பற்றியும் ஈழத்தமிழர் தலைமைகள் ஆராய்ந்து செயற்பட வேண்டும். நாரதரின் கருத்தே எனது கருத்தும். 2009ல் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்னரும் இவ்வாறாக நான் கருத்து தெரிவித்த போது அதற்கு மிகவும் குறைவான ஆதரவே கிடைத்தது. சீனா ஹொங்கோங் மக்காவோ போன்ற சுயாட்சி முறைகளை ஏற்படுத்த உதவ முடியும்.

சீனாவுடன் வெளிப்படையான உறவை தமிழீழ விடுதலைப்புலிகள் தவிர்த்தது தவறான வெளிநாட்டு கொள்கையாக அமைந்திருந்தது.

Edited by Jude

சீனா ஹொங்கோங் மக்காவோ போன்ற சுயாட்சி முறைகளை ஏற்படுத்த உதவ முடியும்.

ஹொங்கோங் ஆட்சி சீனாவை வற்புறுத்தி மேற்கு நாடுகள் செய்த ஒழுங்கு முறை. சீனாவுடன் செய்யதக்கதொன்றை வெறுமனே சீனாவின் நண்பனான இலங்கையில் தமிழீழத்திற்கு செய்வதற்கு, சீனாவை காரணம் காட்டி அவர்கள் கொடுக்கும் விளகங்கள் பொய் என்பதைத்தான் ஹொங்கோங் எடுத்து காட்டுகிறது.

மேலும் அப்துல் கலாம் மத்திய அரசின் ஆய்வாளர்களால் பெரியாற்றணைக்கு நிலநடுக்கத்தால் பயமில்லை என்று சொன்ன பிறகாவது அங்கே போய் ஒவ்வோருநாளும் தமது வாழ்வு அடிப்படைகளை இழக்கும் தமிழர்களை காப்பாற்ற உண்மைகளை கூறி கேரள அரசுக்கெதிராக அறிக்கைகள் விடுவாரா? இவர் கூடலூர் அணு மின் நிலையத்தில் வராத நிலநடுக்கம் பெரியாற்றணைக்கும் வராதென்று வாய் திறந்து சொல்வாரா?

Edited by மல்லையூரான்

இடதுசாரிகள் போராட்டம் நடத்தி அமெரிக்க சார்பு அரசுகளை அமைக்கும் போது, சீ ஐ ஏ யின் வேலையை அவர்களே செய்து கொடுத்து விடுகிறார்கள். அது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி.

Islamists are expected to dominate this first democratic poll in 60 years.

http://www.bbc.co.uk/news/world-africa-16388032

ஆமாம் சி அய் ஏ , இசுலாமிய அடிப்படைவாதிகளை ஆட்சியில் அமர்தத் தானே வேலை செய்கிறது.

நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை தானே எழுத முடியும்? தெரியாததை எழுத முடியாது அல்லவா?

பனாமானவின் டானியேல் நொரிகாவுக்கும், ஈராக்கின் சதாம் குசைனுக்கும், சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவுக்கும் அமெரிக்கா நிறையவே உதவி செய்திருக்கிறது..

தனக்குத் தேவையான தருணங்களில் அமெரிக்க அரசு இத் தகைய சர்வாதிகாரிகளையும் ஜனனாயக விரோத அரசுகளையும் ஆதரிக்கும், எங்கெல்லாம் மக்கள் கிழர்ந்து எழுந்து இத் தகைய அரசுகளை எதிர்த்துப் புரட்சி செய்கிறார்களோ அப்போதெல்லாம் அது திடீரென தனது ஆதரவை விலக்கி இருக்கிறது.ஏனெனில் வரும் ஆட்சி அமெரிக்காவுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்பதற்காக.ஆகவே அமெரிக்க அரசு தனது ஆதரவை மாற்ற வேண்டும் எனில் மக்கள் இத் தகைய ஆட்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.அதைத் தான் முதலில் இருந்தே நான் சொல்லி வருகிறேன்.போராட்டம் இன்றி அரசுகளின் ஆதரவினை மாற்ற முடியாது.அதனால் தான் தமிழ் மக்கள் இந்திய அமெரிக்க அரசுகளுக்கு எதிராகப் போராட வேண்டி உள்ளது.

உங்களுக்கு வேறு எதாவது தெரிந்தால் எழுதவும் இல்லாது விடின் சும்ம படம் காட்டுவதை தவிர்க்கவும்.

Can a Communist, who is an internationalist, at the same time be a patriot? We hold that he not only can be but also must be. The specific content of patriotism is determined by historical conditions. There is the "patriotism" of the Japanese aggressors and of Hitler, and there is our patriotism. Communists must resolutely oppose the "patriotism" of the Japanese aggressors and of Hitler. The Communists of Japan and Germany are defeatists with regard to the wars being waged by their countries. To bring about the defeat of the Japanese aggressors and of Hitler by every possible means is in the interests of the Japanese and the German people, and the more complete the defeat the better.... For the wars launched by the Japanese aggressors and Hitler are harming the people at home as well as the people of the world.

China's case, however, is different, because she is the victim of aggression. Chinese Communists must therefore combine patriotism with internationalism. We are at once internationalists and patriots, and our slogan is, "Fight to defend the motherland against the aggressors." For us defeatism is a crime and to strive for victory in the War of Resistance is an inescapable duty. For only by fighting in defense of the motherland can we defeat the aggressors and achieve national liberation. And only by achieving national liberation will it be possible for the proletariat and other working people to achieve their own emancipation. The victory of China and the defeat of the invading imperialists will help the people of other countries. Thus in wars of national liberation patriotism is applied internationalism.

"The Role of the Chinese Communist Party in the National War" (October 1938), Selected Works, Vol. II, p. 196. *

Quotations from Mao Tse Tung

http://www.marxists.org/reference/archive/mao/works/red-book/ch18.htm

Foreign relations

Main article: Foreign relations of Egypt

Foreign governments in the West including the US have regarded Mubarak as an important ally and supporter in the Israeli-Palestinian peace negotiations.[47] After wars with Israel in 1948, '56, '67 and '73, Egypt signed a peace treaty in 1979, provoking controversy in the Arab world. As provisioned in the 1978 Camp David Accords, which led to the peace treaty, both Israel and Egypt receive billions of dollars in aid annually from the United States, with Egypt receiving over US$1.3 billion of military aid each year in addition to economic and development assistance.[245] According to Juan Cole, many Egyptian youth feel ignored by Mubarak on the grounds that he is not looking out for their best interests and that he rather serves the interests of the West.[246] The cooperation of the Egyptian regime in enforcing the blockade of the Gaza Strip was also deeply unpopular among the general Egyptian public.[247

http://en.wikipedia....tian_revolution

The Revolutionary Socialists (Arabic: الاشتراكيون الثوريون‎; Egyptian Arabic: [elʔeʃteɾˤɑkejˈjiːn essæwɾejˈjiːn]) (RS) are a Trotskyist organisation in Egypt aligned with the International Socialist Tendency.[1] According to Mark LeVine, a professor of history at the University of California, the RS "played a crucial role organising Tahrir (during the Egyptian Revolution of 2011) and now in the workers movement" post-President Hosni Mubarak.[2] They are currently involved in establishing the Coalition of Socialist Forces.[4] Leading RS members include engineer and labour activist Sameh Naguib.[5] Other prominent members include journalists Gigi Ibrahim.The Socialist.[1]

2011 Egyptian Revolution

The RS, along with the rest of the Egyptian far left and the April 6 Youth Movement, played a key role in mobilising for January 25, 2011, marking the first day of the Egyptian Revolution. The various forces previously met and developed strategies, such as demonstrating in different parts of Cairo simultaneously, before marching on Tahrir Square, to avoid a concentration of security forces.[5]

The RS later issued a statement calling on Egyptian workers to instigate a general strike in the hope of finally ousting Mubarak: The regime can afford to wait out the sit-ins and demonstrations for days and weeks, but it cannot last beyond a few hours if workers use strikes as a weapon. Strike on the railways, on public transport, the airports and large industrial companies! Egyptian workers, on behalf of the rebellious youth and on behalf of the blood of our martyrs, join the ranks of the revolution, use your power and victory will be ours! Glory to the martyrs! Down with the system! All power to the people! Victory to the revolution! [15]

Gigi Ibrahim, an RS activist, claimed the revolution had been brewing since the Second Intifada of 2000.[7]

[edit] Post Mubarak

In the aftermath of Mubarak's resignation as President, the RS is calling for permanent revolution.[16] On May Day 2011, they chanted "A workers’ revolution against the capitalist government", while marching to Tahrir Square.[17] They argue that the working class, particularly of Cairo, Alexandria and Mansoura were the key players in ousting Mubarak, rather than the Egyptian youths' use of social networking sites, such as Facebook and Twitter, as has been widely reported.[18] The RS sees the role of the Muslim Brotherhood post-Mubarak as "counter-revolutionary".[19]

In March 2011, RS activist and journalist Hossam el-Hamalawy was among many protesters who stormed and seized offices of the State Security Investigations Service in Nasr City. The building had been used prior to the revolution to detain and torture many activists. El-Hamalawy was able to visit the cell where Hamalawy was able to visit the cell where he had been imprisoned, later writing on his Twitter feed that he could not stop crying.[20] "Entered the small compound where I was locked. Man, I can't believe it still... Many are literally crying. We can't find the interrogation rooms. This is a citadel."[21]

The RS calls for the dismantling of the ruling Military Council, the army and police force, and for Mubarak and his former regime, including Mohamed Hussein Tantawi and Sami Hafez Anan, (who currently form part of the Military Council) to stand trial.[22] They oppose the decree-law that criminalises strikes, protests, demonstrations and sit-ins imposed by the Council on March 24, 2011.[23]

The RS along with many other Egyptian leftist organisations are also seeking to establish a new workers party in the wake of Mubarak's downfall.[5][24] The party, named the Workers Democratic Party, aims to have "workers as the main players and leaders of the party joined by a number of intellectuals".[25] The establishment of such a party in Egypt is still illegal under the current government with the new Political Parties Law issued on March 29, 2011, where the establishment of class-based parties is strictly prohibited. Kamal Khalil - a leading RS member - responded by saying they are not concerned of the legality of the party: "We don't want a party based on paper, we want a party based in factories and workplaces".[3]

On May 10th, 2011, the RS along with four other left-wing Egyptian groups united to form a "socialist front" called the Coalition of Socialist Forces, which includes the Popular Democratic Alliance Party, The Socialist Party of Egypt, the Egyptian Communist Party and the Workers Democratic Party.[26]

[edit] Positions on international issues

In 2006, Sameh Naguib - a leading RS member - labeled Hezbollah's defeat of the Israeli Defence Forces in the Lebanon War "a very important victory for the anti-war movement worldwide", claiming it prevented or delayed US and Israeli plans to attack Iran and Syria.[27]

On March 2, 2011, during the US Wisconsin budget protests, the RS sent a message of solidarity to the US International Socialist Organization, urging them to build "a revolutionary socialist alternative" against "Zionism and imperialism".[28]

The RS were amongst many socialists who condemned the Robert Mugabe regime of Zimbabwe for arresting and torturing militants, amongst who were members of Zimbabwe's International Socialist Organisation, for hosting a meeting discussing the revolutions in Tunisia and Egypt. They said "[t]he masses in Tunisia and Egypt have proven that no matter how long autocratic regimes last, the revolution's earthquake can break the walls and dams. Be sure that the earthquake is coming and that Mugabe will fall--".[29]

On March 20, 2011, during the Libyan uprising, the RS condemned the UN Security Council, the European Union and the Obama Administration on their decision to implement a No-Fly Zone and foreign military intervention in Libya as "part of the counter-revolution." They accused them of remaining silent "for decades while Gaddafi, and his like among the Arab regimes, suppressed their people with the utmost brutality and piled up wealth... so long as these regimes implemented the recommendations of the International Monetary Fund for the abolition of any social support for the poor... as long as companies kept open their doors to global capitalism...".[30]

http://en.wikipedia....cialists_(Egypt)

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

.அதனால் தான் தமிழ் மக்கள் இந்திய அமெரிக்க அரசுகளுக்கு எதிராகப் போராட வேண்டி உள்ளது.

உங்களுக்கு வேறு எதாவது தெரிந்தால் எழுதவும் இல்லாது விடின் சும்ம படம் காட்டுவதை தவிர்க்கவும்.

விடுதலைப்புலிகள் அழிந்து போனதற்கான காரணங்களில் முக்கியமானவற்றில் உங்களை போன்ற கருத்து கொண்டவர்களும், பண்பாக கருத்து பரிமாறும் பழக்கமற்றவர்களும் ஈழத்தமிழர் மத்தியில் பெருமளவில் காணப்பட்டதும் ஒன்று.

தெளிவான பாதை தெரியாமல் போராடிப்போராடி அழிந்து போன இனங்கள் பல இருக்கின்றன. விடுதலைப்புலிகள் அழிந்தது போல, ஈழத்தமிழினமும் அழிந்து போவதற்கு நீங்கள் வழி காட்டுகிறீர்கள். ஆனால் இன்றைய ஈழத்தமிழரின் தலைமைகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த அரசு ஆகியவை உங்கள் வழிகாட்டலை பின்பற்றுவதாக தெரியவில்லை. ஈழத்தமிழ் இனம் அழியாது என்ற ஆறுதலை அது தருகிறது.

Edited by Jude

//அமெரிக்க அரசின், அமெரிக்க மக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என மட்டுப்படுத்தப்பட்ட சில தகவல்களை நான் அறிவேன். அவற்றை அமெரிக்காவுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள சட்டங்கள் தடையாகவுள்ளன.##

//நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை தானே எழுத முடியும்? தெரியாததை எழுத முடியாது அல்லவா?//

மேலே நீங்கள் எழுதிய பம்மாத்துக்கு நான் எழுதிய பதில் தான்,

//உங்களுக்கு வேறு எதாவது தெரிந்தால் எழுதவும் இல்லாது விடின் சும்ம படம் காட்டுவதை தவிர்க்கவும். //ல்.

எதோ உங்களுக்கு ஒரு பரம இரகசியம் தெரியும் ஆனா அதைச் சொல்ல மட்டன் என்னும் வகையில் பம்மாத்துக் காட்டுவது மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கும் செய்கை.இத் தகைய பண்பாடுடைய கருத்தாடலையும் மோசடியையும் தான் காலம் காலமாக நீங்கள் செய்து வந்திருகிறீர்கள்.

காலம் காலமாக நீங்கள் சொல்லி வந்த்த கருதுக்கள் ஆதரங்களுடன் பொய்கள் என நிரூபிக்கப்பட்ட நிலையில் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்னும் நிலையில் ஒடி ஒழிந்து விட்டு மீண்டும் ஒரு அடிவரிஉடித் தனமான கருத்துடன் தோன்றுவீர்கள்.

நாடு கடந்த்த அரசு என்ன நிலையில் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த விடயம் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.

சீனாவின் சிறிலங்கா மிதான கரிசனை பற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் சொல்லி இருப்பதையும், சம்ப்ந்த்தன் தன்னிடம் அதிகாரம் இல்லை என்று சொல்லி இருப்பதையும் தான் , நான் காலம் காலமாக இங்கே எழுதி வந்துள்ளேன்.

இசுலுலாமிய அடிப்படிவாதிகளைத் தான் சி அய் ஏ எகிப்தில் ஆட்சிக்குக் கொண்டு வர வேலை செய்த்தா? 1.5 பில்லியன் டொலர்கள் வரையிலான அமெரிக்க மக்களின் பணத்தை தாரை வார்த்து வளர்த்த முபாரக்கின் அரசைக் கவிழக்கத் தான் சி அய் ஏ வேலை செய்ததோ?

//விடுதலைப்புலிகள் அழிந்து போனதற்கான காரணங்களில் முக்கியமானவற்றில் உங்களை போன்ற கருத்து கொண்டவர்களும், பண்பாக கருத்து பரிமாறும் பழக்கமற்றவர்களும் ஈழத்தமிழர் மத்தியில் பெருமளவில் காணப்பட்டதும் ஒன்று.

//

விடுதலைப் புலிகளை அழிக்க எமக்கு அமெரிக்காவும்,இந்தியாவுமே உதவி புரிந்த்தன என மகிந்தவும், அது என்ன என்ன உதவி என்பதை விகி லீக்க்சு முதல் யாழ்க் களத்தில் சாத்த்ரி வரை எழுதிய தொடர்கள் அம்பலப் படுத்தி விட்டன.

சமாதானப் பேச்சுவர்த்தை என்னும் பொறியில் விளாதிர்கள், இராணுவ வலுச் சம நிலையை இழக்காதீர்கள் எனத் தான் , நான் சமாதான காலத்திலு ம் இங்கு எழுதி வந்திரிருக்கிறேன். அந்த்தக் காலத்தில் சிறிலங்கா இராணுவம் அரசியற் தலமை அற்று மிகப் பலவீனமான நிலையில் இருந்தது.அந்த நேரத்தில் புலிகள் தமது ஆயுத பலத்தின் மூலம் , திருகோணமலை முதலாய பூகோள வளங்களை தமது கட்டுப் பாடுக்குள் கொண்டு வந்து , சீன அரசுடன் பேசியும் இருந்தால், அமெரிக்காவும் இந்தியாவும் அன்றே தமிழர்களுக்கான தனி நாட்டை அங்கீகரித்து ஆதரவும் வழங்கி இருக்கும்.

நோர்வேயின் சொற்கேட்டும், இந்திய ரோ சதிகாரரின் ஆசை வார்த்தைகளுக்கும் மதி மயங்கி , உங்களைப் போன்ற அடிவருடிகளின் சொற்கேட்டுமே புலிகள் தமது பலத்தை இழந்தனர்.

Edited by narathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.