Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர்

Featured Replies

'முயற்சி திருவினையாக்கும்'

(பழையதென்றாலும் என்றும் நிலைத்து நிற்பது. பிடித்தது)

சின்ன நூல்கண்டா நம்மைச் சிறுமைப்படுத்துவது

(நம்மைச் சுற்றிக் கட்டியிருக்கும் தாழ்வு மனப்பான்மையை விலக்க வேண்டும்)

தோல்வி, வெற்றிக்கான முதல் படி

நான் அடித்தால் 'செல்'

நீ அடித்தால் 'L'

(இது 'போக்குவரத்திற்கான போனஸ் 'பன்ச்' :D )

  • Replies 71
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி குட்டி, தப்பிலி(1).

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 65 + 1 = 66 டாலர்கள்.

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது, மற்றவர் நலனுக்கும் என்று கருதவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.............

....நன்றாக மென்று சாப்பிட்டால் நூறு வயசு வரை வாழலாம்..

பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.........

  • தொடங்கியவர்

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி குட்டி, நிலாமதி.

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : எமது இந்த அனுசரணை நிறைவு பெறுவதற்கு இன்னும் 21 நாட்களே உள்ளன. இது வரை உங்கள் பங்களிப்பை வழங்காதவர்கள் விரைவில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

இங்கு நீங்கள் வழங்கும் அறிவுரைகள் தமிழில் இலவசமாக பயன்படுத்த கூடிய iPhone Application இல் உள்ளடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, உங்கள் பொன் மொழிகளையும் இங்கு பொறித்து கொள்ளுங்கள்.

பிழை திருத்தம் : உருவாக்க படக்கூடிய - பயன்படுத்த கூடிய

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : எமது இந்த அனுசரணை நிறைவு பெறுவதற்கு இன்னும் 21 நாட்களே உள்ளன. இது வரை உங்கள் பங்களிப்பை வழங்காதவர்கள் விரைவில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

போக்குவரத்து,

முன்பு.. பங்களித்தவர்கள், மீண்டும் பங்களிக்கலாமா?

  • தொடங்கியவர்

தமிழ் சிறி,நீங்கள் வழங்கிய பங்களிப்பு (1 டாலர்) ஏற்கனவே இது வரை சேர்ந்த மொத்த பங்களிப்பு தொகையான 66 டாலர்களுடன் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒருவர் சார்பாக பங்களிப்பு தொகையாக 1 டாலர் மட்டும் சேர்க்கப்படும். ஆனால் ஒருவர் எத்தனை அறிவுரைகளையும் வழங்கலாம்.

நன்றி

**விழுவது இயற்கை; எழுவதே வாழ்க்கை.

**கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், அது குருட்டுத்தனமாய் இருக்கக் கூடாது.

**செல்வமும் சரி, சாமர்த்தியமும் சரி, முறையாக உபயோகித்தால்தான் பெருமை தரும்.

**உண்மையான செல்வம் பணமன்று; குணம்.

**தன்னம்பிக்கை ஒன்று-தான் மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/iKcKuPbjkNg

நான் எழுத வந்த பல அறிவுரைகளை இவங்க சொல்லிட்டாங்க.. போக்குவரத்து இந்தப் பாட்டைக் கேட்டிட்டிட்டு.. அதில் வரும் அத்தனை அறிவுரைக்கும்.. மரியாதையா கட்டணத்தை செலுத்திடனும். ஆமா சொல்லிப்புட்டன்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வு:

1. முடியாது என்பதற்கு முடிவுரை எழுதின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எல்லை இராது..!

2. பெண்ணும் போதையும் ஒன்று... இரண்டும் கண்ணை ஏமாற்றும் கவனத்தைச் சிதைக்கும்..!

3. இயற்கையை ரசிக்கக் கற்றுக் கொண்டவனுக்கு கவிதை என்று எழுதி காகிதத்தை சேதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..!

4. அழகை அடுத்தவரிடத்தில் தேடாமல்.. தன்னுள் தேடும் மனிதன் தனக்கும் பிறர்க்கும் அழகாகத் தெரிவான்.

5. அன்பு செய்.. காதல் செய் என்று கெஞ்சாதே.. உன்னால் முடிந்தால் அவற்றை எதிர்பார்ப்பின்றி வாரி வழங்கு.. எவையும் குறைந்து விடாது.

6. அன்னைத் தமிழை சிலேட்டில் எழுதிப் படித்ததிலும் யாழ் இணையத்தில் எழுதிப் படித்தது அதிகம்.

7. ஊருக்கு உபதேசிப்பதில் 1% என்றாலும் நீ நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொள்..!

8. இளமையில் ஆண் - பெண் காதலை விட கல்வியைக் கைப்பற்றுவது.. முதுமையிலும் நீ சிறக்க உதவும்..!

9. பரீட்சை என்பது முயற்சிக்கான அடையாளம். வெற்றி தோல்விக்கான பந்தயம் அல்ல..!

10. காதல் என்பது தோற்பதில்லை.. மூளையில் அன்புணர்ச்சி ஊறும் வரை..!

11. கண்ணீரும் தண்ணீரும் ஒன்று. கண்ணீருக்கு கண்ணைகளைப் பாதுகாக்கும் தன்மை உண்டு. தண்ணீருக்கு உயிர்களை காக்கும் தன்மை உண்டு. தண்ணீரை மாசாக்காதீர்.. வீணாக்காதீர்..!

(இப்போதைக்கு இந்தப் 11 ஐயும் சமர்பிக்கிறம். காசு யாழ் இணையத்திற்கு போகுதோ என்று பார்த்திட்டு மிச்சம் எழுதுவன்.) :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்க்கர், குடுக்கிறது ஒரு டொலர். அதுக்குள்ளை.. கன கொன்டிசன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்க்கர், குடுக்கிறது ஒரு டொலர். அதுக்குள்ளை.. கன கொன்டிசன். :lol:

இதில் இருந்து என்ன தெரியுது.. அறிவுரை உலகத்தில மலிஞ்சு கிடக்குது என்று..! குறைஞ்சது அதுக்கு 1 டொலராவது கிடைக்குதே..!

1 டொலராவது வருகுதே என்று பஸ் பிச்சைக்காரன் கணக்கா.. பாடாத குறைதான். என்ன செய்வம்.. எங்கட இயலாமைக்கு இப்படியாவது ஒரு தீர்வு வரட்டுமென்..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நிறைந்த இன்சொல்,இரும்பு கதவைக் கூட திறக்கும்.:)

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நிறைந்த இன்சொல்,இரும்பு கதவைக் கூட திறக்கும். :)

இந்த ஒற்றை வரியில எங்கையோ போயிட்டீங்க தங்கச்சி. இதை வாசிச்ச இந்த அண்ணனின் கண்களில் சைட்டால கண்ணீர் ஓடிச்சுது.. துசைச்சுக்கிட்டு எழுதிறன்..! :):D:icon_idea:

  • தொடங்கியவர்

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி தமிழினி,nedukkalapoovn(1), யாயினி(1).

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 66 + 1 + 1 = 68 டாலர்கள்.

1. ஆயிரம் மைல் தொலைக்கான பயணம், முதல் அடியில் தான் உள்ளது.

nunavilan எழுதியுள்ள முதல் அறிவுரையில் உள்ளது.

இந்த அறிவுரைகளை iPhone/iPad application ஒன்றில் உருவாக்கி இலவச பயன்பாட்டுக்கு வெளிவிடும் முயற்சி சரி வந்தால் எதிர் காலத்தில் இப்படி வேறு விதமான application களை உருவாக்கி ஒரு நிலையில் இவற்றை விற்க கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கலாம். அப்படியான நிலையில் எல்லா பங்காளிகளும் வருவாயை பெறுவதற்கு சாத்தியம் உள்ளது.

இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு உங்கள் அமோக ஆதரவு தேவை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எழுதிய பதினொன்றில் ஒன்றுதான் யாழுக்கு

மிகுதி பத்தும் யாருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எழுதிய பதினொன்றில் ஒன்றுதான் யாழுக்கு

மிகுதி பத்தும் யாருக்கு

நெடுக்ஸ் எழுதின இரண்டாவது அனுபவப் பகிர்வை கவனீச்சனீங்களா வாத்தியார். :D

அனுபவப் பகிர்வு:

2. பெண்ணும் போதையும் ஒன்று... இரண்டும் கண்ணை ஏமாற்றும் கவனத்தைச் சிதைக்கும்..!

  • தொடங்கியவர்

எமது அனுசரணையின் பிரகாரம் ஒரு உறுப்பினர் எத்தனை அறிவுரைகளையும் வழங்கலாம். ஆனால் ஒரு உறுப்பினருக்கு பங்களிப்பு தொகையாக 1 டாலர் மட்டுமே வழங்கப்படும்.

எதிர் காலத்தில் இந்த அறிவுரைகள் மூலம் ஏதாவது வருவாய் கிடைக்கும் ஆக இருந்தால் உ+ம் iPhone/iPad application இல் இவை உள்ளடக்கம் செய்யப்பட்டு, அந்த application ஐயும் விற்க கூடிய ஒரு நிலை (ஒரு கதைக்கு) ஏற்படுமானால் அங்கு பாவிக்கப்படும் தரமான அறிவுரைகளை வழங்கியவர்களுக்கு அறிவுரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சன்மானம் வழங்கலாம்.

உ+ம்: வாத்தியார் வழங்கிய நான்கு அறிவுரைகள் அங்கு பயன்படுத்த பட்டால், அத்துடன் மொத்தமாக 100 அறிவுரைகள் அந்த application இல் பயன்படுத்த பட்டு இருந்தால் வாத்தியாருக்கு சன்மானத்திற்கு வழங்கப்படும் தொகையில் 4% கொடுக்க படலாம்.

ஆனால் இப்போதைக்கு ஒரு உறுப்பினரின் பங்களிப்புக்கு 1 டாலர் சன்மானம் வழங்குவதற்கு மேலாக, நீங்கள் மேலதிகமாக வழங்கும் அறிவுரைகளுக்கு எதுவித cash value வும் இல்லை.

அதே சமயம் இவை யாவும் யாழ் இணையத்தை பார்க்கும் வாசகர்களுக்கு பயன்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி

  • தொடங்கியவர்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 68 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எமது இந்த அனுசரணை நிறைவு பெறுவதற்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. இது வரை உங்கள் பங்களிப்பை வழங்காதவர்கள் விரைவில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

நன்றி

" பொறுமையையும் விடாமுயற்சியையும்

தன்னம்பிக்கையையும் உனது கொள்கைகளாக கொள் "

வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அதில் பல சவால்கள் வரும். சில இடத்தில் நண்பர்கள், ஆதரவு இருக்கும். பல இடத்தில் தனியாகவே பயணிக்கவேண்டி வரும். எனவே எப்பொழுதும் உங்களிடம் பொறுமையும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் - எதையும் வென்றுவிடலாம், வாழ்ந்துவிடலாம்.

  • தொடங்கியவர்

'உங்களால் முடியுமா' : ஒரு அறிவுரை = 1 டாலர் மொத்த பங்களிப்பு தொகை தற்போது 68 + 1 = 69 டாலர்கள் நன்றி

பொறுமையும் விடா முயற்சியும் தன் நம்பிக்கையும். வியாபாரத்திற்கும் இவை தான் அத்திவாரம்.

உங்கள் பங்களிப்புக்கும், அறிவுரைக்கும் நன்றி akootha.

  • தொடங்கியவர்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 69 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எமது இந்த அனுசரணை நிறைவு பெறுவதற்கு இன்னும் 18 நாட்கள் உள்ளன. இது வரை உங்கள் பங்களிப்பை வழங்காதவர்கள் விரைவில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால்... அறிவிக்கப் பட்ட, நான்கு பேரும் தங்களது அறிவுரையை கூறி விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தாடையில வளர்ந்தா தாடி.. பாடையிலே போனா பாடி..

ஆர்வம் & விடா முயற்ச்சி

வெற்றியின் ஏணிப் படிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.