Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.                                                                                      25

ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே சான்று.

எனது பார்வை:

< ஆனால் இதில எனக்கு

ஒரு விசயம் இடிக்குது ? வள்வளுவர் ஐய்யா ஏன் போய் இந்திரனுக்கு உவ்வளவு

சேர்ட்டிபிக்கற் குடுக்கிறார் எண்டு :o ? இந்திரன் வில்லண்டம் பிடிச்ச ஆள் . நெடுக

தன்ரை ஏரியாவில ரம்பை , மேனகை , ஊர்வசி திலோத்தமை , ஆக்கடை டான்ஸ்சுகளை

பாத்துக்கொண்டு இருக்கிறவர் :icon_mrgreen:    . அந்த இந்திரன் போய் எப்பிடி ஐம்புலனை அடக்கினவர்

எண்டு இவர் சொல்லுறார்

கோமகன்ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தவர்களது வலிக்கு இந்திரன்உதாரணம் என வள்ளுவர் இந்திரனை இகழ்ந்து குறிப்பிடுகின்றார்.கௌதம முனிவரது சாபத்தால் இந்திரன் பெயர் கெட்டதைஇங்கே வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்றார்.உங்கள் விளக்கம் முற்றிலும் மாறியிருக்கின்றது.

  • Replies 179
  • Views 20.5k
  • Created
  • Last Reply

கோமகன்ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தவர்களது வலிக்கு இந்திரன்உதாரணம் என வள்ளுவர் இந்திரனை இகழ்ந்து குறிப்பிடுகின்றார்.கௌதம முனிவரது சாபத்தால் இந்திரன் பெயர் கெட்டதைஇங்கே வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்றார்.உங்கள் விளக்கம் முற்றிலும் மாறியிருக்கின்றது.

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் நேரத்திற்கும் , விமர்சனத்திற்கும் . உங்களைப் போல் எனக்கும் இந்தப்பகுதியில் பொருள் மயக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மை . முதலாவதாக ஐம்புலன்களை கட்டுக்கள் கொண்டு வராத மனிதர்களுக்கு இந்திரனை உதாரணம் காட்டியுள்ளார் என்று பொருள் படலாம் . இரண்டாவதாக ஐம்புலன்களை அடக்கியவனின் வலிமைக்கு இந்திரனே சாட்சி என்றும் பொருள் படுகின்றது . இது விமர்னத்துக்கு உள்ளாகவேண்டியதே நான் பார்த்த உரையாசிரயர்கள் பின்வருமாறு வியாக்கியானம் தருகின்றார்கள் .

1. புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான். ( கலைஞர் மு.க ).

2.அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான். (பேராசிரியர் சொலமன் பாப்பையா ).

3.ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.(டாக்டர் மு.வ ).

4.ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதிய சான்று ( பி எஸ் ஆச்சார்யா )

ஆக , இதில் கலைஞர் மட்டும் நீங்கள் கூறிய பார்வையைக் கொண்டுள்ளார் . மற்றையோர் நான் கூறிய இரண்டாவது வகைக்குள் வருகின்றார்கள் . மேலும் , இன்று மாலை திண்ணையில் கள உறவு மல்லையூரானிடம் கருத்துக்கேட்டேன் . அவர் நீங்கள் கூறிய பார்வையிலும் , எனது பார்வையிலும் விடைதந்தார் . அதாவது ,

< சரியாகத் தெரியவில்லை கோ. இந்திரன் தவத்தால் எதையாவது அடைந்த கதைகளைப்படித்த ஞாபகம் இல்லை. உடல் வலிமைக்கு தான் இந்திரன் சான்று.

இங்கே இந்திரன் என்பது வேதங்களின் கடவுளை சுட்டுகிறது போலிருக்கு.

1. பரவலாக இந்திரன் இரண்டு கருத்துகளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. சிவன் கருணை நிறைந்த துறவி- ஞானியாகவும், குரூரம் நிறைந்த தளபதியாகவும் காட்ட படுகிறான். அதுபோன்று நல்ல கடவுளாகவும் ஆசைகள் நிறந்த போர்த்தலைவனாகவும் கட்ட படுகிறான் இந்திரன்.

2. இந்தகாலத்தில் தமிழ் நாட்டில் இந்திரன் கடவுளாக அறிமுகம் செய்யப் பட்டிருக்கலாம். திருவள்ளுவர் காலத்தில் இந்திர வழிபாடு தற்காலிகமாக ஆரம்பித்து உடனேயே 100-200 ஆண்டுகளுக்குள் அழிந்து போயிருக்கலாம்.

எமக்கு தெரிந்த இந்திரன் ஆயிரம் கண்ணுடைய ஆசையின் திருவுருவம்

தேவர்கள் பலவித நற்பண்புகளை உடையவர்கள். பெயருக்கேற்றாற்போல ஒளி பொருந்தியவர்கள். நல்லதே நினைப்பார்கள், நல்லதே செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு ’வீக்னஸ்’ உண்டு. புலன்களை, அதாவது இந்திரியங்களை அடக்குவதற்கு அவர்கள் பாடுபட வேண்டும். அவர்களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் என்றால் இந்திரியங்களுக்குத் தலைவன் என்பது பொருள். புலன்கள் விஷயத்தில் அவன் தவறு செய்து அவதிப்படுவான். புராணக் கதைகளில் புலனடக்கம் இல்லாமல் இந்திரன் தவறு செய்யும் நிகழ்ச்சிகள் அடிக்கடி வரும். அகலிகையிடம் அவன் தவறாக நடந்து கொண்டது மிகவும் பிரசித்தமானது. அதற்குக் காரணம், தேவனாக இருந்தாலும், புலனடக்கத்தில் தவறி விடுகிறான். http://thamizhan-thi...2010/12/21.html > .

ஆகவே இது பற்றிய தெளிவுகளை உங்களைப் போன்றோரே தொடர்ந்தும் கருத்திட வேண்டும் :):):) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்

கலைஞரையோ

மற்றும் சொலமன் பாப்பாவையோ

ஏன் மற்றவர்களையோ எடுத்துக்காட்டாக எடுப்பது சரி என்று எனக்குப்படவில்லை. காரணம் அவர்கள் எதற்காக, எந்தவேளையில், எந்தக்கருத்தருங்குகளில், என்ன தலைப்பின்கீழ் ,,,,,,,,,,,,,,,,,,, இவற்றுக்கு விளக்கம் சொன்னார்கள் என்பதற்கேற்ப விளக்கமும் மாறுபடும்.

இது எனது கருத்து மட்டுமே.

நன்றி.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

கருத்தை முன் வைக்கும் நாங்கள் இரண்டை பார்கக் கடமைப்பட்டுள்ளோம்.

1. வள்ளுவர் என்ன சொல்லுகிறார் (மூல ஆசிரியர்கள், எமக்கிருக்கும் தமிழ் பகுப்பறிவு என்பவற்றை பாவித்து)

2. காட்டப் படும் உதாரணங்களை குறளுக்கு தொடர்பில்லாத பொது அறிவைப் பாவித்து குறளை விளங்க முயல்தல்.

வாத்தியாரும், கருணாநிதியும் இரண்டாவதில் பெரிதும் தங்குகிறார்கள். ஆனால் முதலாவதில் அதிகமான உரை ஆசிரியர்கள்

தங்குகின்றார்கள். அதாவது குறளை நாம் அடைமொழிகளைத் தவிர்த்து பார்த்தோமானால் "ஐந்தவித்தான் ஆற்றல் இந்திரனே சாலும்" என்பதாகும். இதை நாம் இலகுவில் "ஐந்தவியாதான் ஆற்றலின்மை இந்திரனே சாலும்" என்று திருப்பலாமா என்பதானால்த்தான் உரையாசியர்கள் இந்திரன் என்பது இந்திரியங்களை வென்றவன் எனப்பொருள்பட வைத்து உரையாக்கம் செய்துள்ளார்கள் என்று எடுத்துக்கொள்ளாம்.

ஆனால் முடிவு பலவிடையங்களில் தங்கும்.

1. எப்போது புராணங்களில் இந்திரன் என்பதற்கு இந்திரியங்(ஐந்துறுப்பு) களை வென்றவன் என்ற பொருள் காட்டப் படுகிறது. திருவள்ளுவருக்கு முன்பா? பின்பா?

2. இராமாயணத்தில் வரும் பலமில்லாத இந்திரனின் கதை எப்போது இராமாயணத்தில் புகுத்தப்பட்டது.

3. தெய்வங்களையும் இந்திரனையும் ஒரே தளத்தில் வானாட்டார் என்று குறிப்பிடும் திருவள்ளுவர், வேதகாலத்து நிகரில்லாத இந்திரன் புரணகாலத்தில் தன் மகிமையை இழந்துவிட்டான் என்பதை அறிந்திருந்தவரா?

Edited by மல்லையூரான்

ஆகவே இது பற்றிய தெளிவுகளை உங்களைப் போன்றோரே தொடர்ந்தும் கருத்திட வேண்டும் :)   :)   :)  .

கௌதம முனிவர் தான் செய்த தவத்தால் கடவுளின் ஆசியைப் பெற்ற ஒரு முனிவர்.இவருடைய மனைவி அகலிகை . அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் ஒரு நாள் முனிவர் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கௌதம முனிவரைப் போலவே உருமாறி அகலிகையை ஆட்கொண்டான்.இருவரையும் பள்ளியறையில் கண்டு கொண்ட கௌதம முனிவர்இந்திரன் உடம்பெல்லாம் பெண்குறிகள் தெரியுமாறும்அகலிகை கல்லாக மாற்றம் அடையும்படியும் சாபமிட்டு விட்டார்.அதனால் இந்திரன் வெட்கமடைந்து ஒழித்து வாழ்ந்து முனிவரின் கட்டளைப்படி விநாயகரை வணங்கி பெண்குறிகள் எல்லாம் கண்களாக மாற்றம் அடைய சாப விமோசனம் அடைந்தான் .இதனால் இந்திரனுக்குக் கிடைத்த இன்னொரு பெயர் ஆயிரம் கண்ணுடையான்.அகலிகை இராமனின் பாதங்கள் பட்டு விமோசனம் பெற்றாள்.இதையே வள்ளுவர் இங்கே இந்தக்குறளில் இந்திரனின் செயலை இகழ்ந்து புகழ்கின்றார்.கௌதம முனிவரின் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்த வலிமையையும் அதனால் இந்திரனுக்குக் கிடைத்த சாபத்தையும் குறிக்காமல் குறித்து நிற்கின்றார்

திருக்குறளுக்கு பொருள் கண்டு பிடிப்பது ஒரு சுவாரசியமான வேலை. சரி பிழை வேறு.

இங்கே சில விவாதங்கள்.

திருவள்ளுவரின் காலம் எத்தனையாம் நூற்றாண்டு என்பதற்கு இவர்கள் கொடுக்கப் போகும் விளக்கம் மிகவும் தந்திரமானது.

அதாவது திருவள்ளுவர் இயேசு கிருஸ்துவுக்கு முன்னர் பிறந்தவர் என்பதை மறுத்து, அவருக்கு பின்னர்தான் பிறந்தார் என நிலைநாட்டப்பார்க்கிறார்கள்.

அத்துடன் இந்த "ஐந்தவித்தான்" விவகாரம்.

திருவள்ளுவர் ஐந்தவித்தான் என்பதை ஜேசுவைக் குறிக்கும் சொல்லாக இருப்பது என்பது.

ஐம்புலன்களையும் அடக்கியன் என்பதே ஐந்தவித்தான் என்பதன் அர்த்தம்.

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்

கோமான் இந்திரனே சாலுங் கரி"

என்னும் குறளைப் பார்த்தால் அவர் இந்திரனையே ஐந்தவித்தான் என்று சொல்வது தெரியவரும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்

ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்"

ஆனால் இவர்கள் இந்த ஐந்தவித்தான் என்னும் குறளில் வந்ததை வைத்து ஜேசு என்கிறார்கள்.

இதை ஜேசுவே மன்னிக்க மாட்டார்,

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/12912-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page__st__120

கோமகன்

கலைஞரையோ

மற்றும் சொலமன் பாப்பாவையோ

ஏன் மற்றவர்களையோ எடுத்துக்காட்டாக எடுப்பது சரி என்று எனக்குப்படவில்லை. காரணம் அவர்கள் எதற்காக, எந்தவேளையில், எந்தக்கருத்தருங்குகளில், என்ன தலைப்பின்கீழ் ,,,,,,,,,,,,,,,,,,, இவற்றுக்கு விளக்கம் சொன்னார்கள் என்பதற்கேற்ப விளக்கமும் மாறுபடும்.

இது எனது கருத்து மட்டுமே.

நன்றி.

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் . ஒருவர் பொதுமேடையிலோ , ஆய்வரங்குகளிலோ கூறும் குறளுக்கான விளக்கங்களை விவாதத்திற்கு எடுக்க முடியாது . ஆனால் , நான் மேலே குறிப்பிட்டவர்கள் திருக்குறளிற்கான உரையாசிரியர்களுள் முக்கியமானவர்கள் என்றவகையில் அவர்களது உரை விவாதப்பொருளாகின்றது :):):) .

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

கருத்தை முன் வைக்கும் நாங்கள் இரண்டை பார்கக் கடமைப்பட்டுள்ளோம்.

1. வள்ளுவர் என்ன சொல்லுகிறார் (மூல ஆசிரியர்கள், எமக்கிருக்கும் தமிழ் பகுப்பறிவு என்பவற்றை பாவித்து)

2. காட்டப் படும் உதாரணங்களை குறளுக்கு தொடர்பில்லாத பொது அறிவைப் பாவித்து குறளை விளங்க முயல்தல்.

வாத்தியாரும், கருணாநிதியும் இரண்டாவதில் பெரிதும் தங்குகிறார்கள். ஆனால் முதலாவதில் அதிகமான உரை ஆசிரியர்கள்

தங்குகின்றார்கள். அதாவது குறளை நாம் அடைமொழிகளைத் தவிர்த்து பார்த்தோமானால் "ஐந்தவித்தான் ஆற்றல் இந்திரனே சாலும்" என்பதாகும். இதை நாம் இலகுவில் "ஐந்தவியாதான் ஆற்றலின்மை இந்திரனே சாலும்" என்று திருப்பலாமா என்பதானால்த்தான் உரையாசியர்கள் இந்திரன் என்பது இந்திரியங்களை வென்றவன் எனப்பொருள்பட வைத்து உரையாக்கம் செய்துள்ளார்கள் என்று எடுத்துக்கொள்ளாம்.

ஆனால் முடிவு பலவிடையங்களில் தங்கும்.

1. எப்போது புராணங்களில் இந்திரன் என்பதற்கு இந்திரியங்(ஐந்துறுப்பு) களை வென்றவன் என்ற பொருள் காட்டப் படுகிறது. திருவள்ளுவருக்கு முன்பா? பின்பா?

2. இராமாயணத்தில் வரும் பலமில்லாத இந்திரனின் கதை எப்போது இராமாயணத்தில் புகுத்தப்பட்டது.

3. தெய்வங்களையும் இந்திரனையும் ஒரே தளத்தில் வானாட்டார் என்று குறிப்பிடும் திருவள்ளுவர், வேதகாலத்து நிகரில்லாத இந்திரன் புரணகாலத்தில் தன் மகிமையை இழந்துவிட்டான் என்பதை அறிந்திருந்தவரா?

வித்தியாசமான அணுகுமுறை தொடருங்கள் மல்லையூரான் :):):icon_idea: .

கௌதம முனிவர் தான் செய்த தவத்தால் கடவுளின் ஆசியைப் பெற்ற ஒரு முனிவர்.இவருடைய மனைவி அகலிகை . அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் ஒரு நாள் முனிவர் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கௌதம முனிவரைப் போலவே உருமாறி அகலிகையை ஆட்கொண்டான்.இருவரையும் பள்ளியறையில் கண்டு கொண்ட கௌதம முனிவர்இந்திரன் உடம்பெல்லாம் பெண்குறிகள் தெரியுமாறும்அகலிகை கல்லாக மாற்றம் அடையும்படியும் சாபமிட்டு விட்டார்.அதனால் இந்திரன் வெட்கமடைந்து ஒழித்து வாழ்ந்து முனிவரின் கட்டளைப்படி விநாயகரை வணங்கி பெண்குறிகள் எல்லாம் கண்களாக மாற்றம் அடைய சாப விமோசனம் அடைந்தான் .இதனால் இந்திரனுக்குக் கிடைத்த இன்னொரு பெயர் ஆயிரம் கண்ணுடையான்.அகலிகை இராமனின் பாதங்கள் பட்டு விமோசனம் பெற்றாள்.இதையே வள்ளுவர் இங்கே இந்தக்குறளில் இந்திரனின் செயலை இகழ்ந்து புகழ்கின்றார்.கௌதம முனிவரின் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்த வலிமையையும் அதனால் இந்திரனுக்குக் கிடைத்த சாபத்தையும் குறிக்காமல் குறித்து நிற்கின்றார்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் நேரத்திற்கும் , கருத்துப்பகிர்வுகளுக்கும் . மேலும் , வலி வலிமை இந்த இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்து ஒன்று என்ற முடிவிற்கு வரலாமா :unsure::unsure: ?

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். 38

ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலாது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும்

என் பார்வை:

நல்ல விசையங்களையும் அறத்தையும் ஒவ்வரு நாழும் செய்து கொண்டு வர உங்கடை வாழ்க்கை போற பாதையை சீராக்கித் தாற கல்லு ( இப்ப றோட்டு போடேக்கை கல்லுகள் எல்லாம் போட்டு படிமானங்கள் போட்டுத்தானே தார் ஊத்திறம் ) மாதிரி இருக்கும் :unsure::):icon_idea: .

If no day passing idly, good to do each day

you toil,

A stone it will be to block the way of future days of moil.

இவ்விடத்தில் வள்ளுவர் தன் மனதில் ஒருஆற்றை உருவகப்படுத்துகிறார் போலிருக்கிறது. இடைவிடாது உற்றெடுத்துப் பிறப்புக்கு மேல் பிறப்பாக பிரவாக்கிறது வாழ்கை என்னும் நதி. காடுகள், மலைகள் கூட அதை தடுத்து நிறுத முடியாது போய்விடுகிறது. இடையில் ஒரு கல்லணை ஒன்றைக்கட்டி விட்டால் அந்த ஆறால் தொடர்ந்து ஓடமுடியாது. (பற்றற்ற நிலையிலிருந்து) அறத்தை செய்வதினால் அந்த கல்லணையை கட்டி பிறவிப் பெருங்கடலை மேலும் பெருகாது தடுத்தி நிறுத்தி விடமுடியும் என்கிறார் போலும் வள்ளுவர்.

மிக்க நன்றிகள் மல்லையூரான் உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் . அப்ப ஒரு நல்ல பொறியலளார் போல இந்தக் குறளை எழுதியிருக்கிறார் எண்டு சொல்லுறியள் :lol::lol::lol::icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பகிர்வும் அருமை. :D

Edited by நிலாமதி

இன்றைய பகிர்வும் அருமை. :D

மிக்க நன்றிகள் நிலாமதியக்கா உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - இல்வாழ்க்கைப் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :) :) :) .

Posted Yesterday, 09:24 PM

தொடருங்கள் வாழ்த்துகள்!

< நல்ல அன்பும், கற்பும் பெண்ணிடம் இருந்தாலே போதும், அது அந்த சதியின் பதியை ஒழுக்கக் கேடான எந்தச் சதியில் இருந்தும் காப்பாற்றி விடும்! >

மிக்க நன்றிகள் சுவி உங்கள் நேரத்திற்கும் , கருத்துக்களுக்கும் . அப்படியானால் பல அரசியல் தலைவர்களின் ஒழுக்கக் கேடான செயல்களால் உலகம் நாறீச்சுதே ? இதில் இருந்து நீங்கள் சொல்லவருவது என்னவென்றால்................................. :) :) :):icon_idea: .

    • delete.png
      ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

< உங்கள் இல்வாழ்க்கையை பற்றிய வரைவிலக்கணம் மிக நன்று. இதனால் வாய்விட்டு, மனம் விட்டு சிரித்தபடியே இக்குறளை படிக்கலாம். தொடரட்டும் தங்கள் குறளோவியம்... >

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் :):):) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. 55

கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி , காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் ' பெய் ' என்றால் மழையும் பெய்யும்

இது நேரடியான அர்த்தம்! ஆனால் சமீபத்தில் பர்வீன் சுல்தானா (இசுலாமியப் பெண்) இதற்கு ஆணித்தரமாய் ஒரு பொருள் கூறினார். கணவனின் தேவை அறிந்து அதற்கேற்ப ஒழுகும் பெண்ணானவள் பருவத்தே பெய்யும் மழைக்கு அதாவது வளரும் பயிருக்கு தேவையான நேரத்தில் பெய்து கொடுக்கும் மழைக்கு ஒப்பாவாள்!

எனக்கு இது சரியெனப் பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் சுவி உங்கள் நேரத்திற்கும் , கருத்துக்களுக்கும் . அப்படியானால் பல அரசியல் தலைவர்களின் ஒழுக்கக் கேடான செயல்களால் உலகம் நாறீச்சுதே ? இதில் இருந்து நீங்கள் சொல்லவருவது என்னவென்றால்................................. :) :) :):icon_idea:

என்ன செய்வது அவர்களது மனைவியரிடம் அவ்வளவு ஆழமான அன்பு இல்லாமல் இருந்திருக்கும்!

உங்களுக்கும் எனக்கும் கிடைச்ச மாதிரி எல்லோருக்கும் கிடைக்குமா என்ன! :D :D

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. 55

கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி , காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் ' பெய் ' என்றால் மழையும் பெய்யும்

இது நேரடியான அர்த்தம்! ஆனால் சமீபத்தில் பர்வீன் சுல்தானா (இசுலாமியப் பெண்) இதற்கு ஆணித்தரமாய் ஒரு பொருள் கூறினார். கணவனின் தேவை அறிந்து அதற்கேற்ப ஒழுகும் பெண்ணானவள் பருவத்தே பெய்யும் மழைக்கு அதாவது வளரும் பயிருக்கு தேவையான நேரத்தில் பெய்து கொடுக்கும் மழைக்கு ஒப்பாவாள்!

எனக்கு இது சரியெனப் பட்டது!

மிக்கநன்றிகள் சுவி உங்கள் நேரத்திற்கும் , கருத்துப்பகிர்வுக்கும் . மேலும் , மண்ணும் பயிரும் ஒத்துளைத்தாலே நல்வாழ்வு என்னும் தரமான விளைசல் கிடைக்கும் . இதில் ஒன்று பிழைத்தாலே பருவத்தே மழை பெய்தாலும் அறுவடை நன்றாக இருக்காது :lol::D:icon_idea: .

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - வாழ்க்கைத்துணை நலம் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :) :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ். 64

தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு , பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

எனது பார்வை:

இந்தக் குறளை படிக்க நல்லாய்தான் இருக்கு . ஆனால் , இது வெளிநாட்டுக்கு சரிப்பட்டுவருமா :unsure: ? எனக்கு இதைப்பாக்க அண்மைல நடந்த

ஞாபகம் வருகின்றது . நோர்வேயில தாய்தகப்பன் பிள்ளைக்கு கையால சாப்பாடு குடுக்க ,

கவுன்சில்காறன் வந்து தூக்கிகொண்டு போட்டான் :lol::icon_mrgreen: . இதை பிள்ளை செய்தாலும் தாய்

தகப்பனுக்கு நடக்கும் . ஏனெண்டால் இது சுத்தம் சுகாதாரம் சம்பந்தமானது . இதில

சென்ரிமன்ற் கலக்கிறது நல்லாயில்லை.............. :D:icon_idea: .

இதன் அர்த்தம் வேறு மாதிரியானது என்று நான் நினைக்கின்றேன்.

அவர்களது கையால் எதைச்செய்து தந்தாலும் அது அமுதமே என்ற பொருள்படும். கைகளால் துலாவுதல் என்பது கையில் வைத்து அசுத்தமாக்குதல் என்பதற்குள் வரும் என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்களின் கருத்தையும் பார்ப்போம்.

அதுவல்லசமாசாரம் விசுகண்னா!.

வள்ளுவர் செய்தது பின்வரும் சங்ககாலப்பாடலையே தனது பாணியில் ஒன்றரை வரிகளில் திருப்பி எழுதினார்.

பாட்டுக்கு முதல் இணையத்திலிருக்கும் இதை பாருங்கள்.

Tirukkural-On Virtue-On The Blessing Of Children-Kural 64

Courtesy : Ramananda Adigalar Foundation

Amiltinum aattra inithetham makkal

Cirukai alaaviya kool.

A parent's food is made sweeter than nectar, when his child

Has toyed with it, dipping his little fingers.

blessing-child-kural-64.jpg

Only a mother will really understand the significance of this statement, that the food in which her child has dabbled with its fingers will be sweeter to her than the sweetest nectar. The word 'Alaavudhal' is a peculiarly Tamil word. I have used the English word 'toyed' to convey the meaning, but Rajaji has used 'dabbled'. In actual fact it means much more than either.

would clarify the meaning of this expression as follows.

Puram : 188:

Ittum thottum kouviyum thulandhum

Neiyudai adisil meipada vidhirthum

It implies touching, taking, mouthing, spilling and strewing all over the place, including the body. These lines therefore, would certainly paint the picture that Valluvar had in mind

இனி புறநானூறுப்பாட்டுக்கு வருவோம்.

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெரும் செல்வர் ஆயினும்,இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,

இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

கருத்து:

பாண்டிய மன்னன் ஒருவன் தன் ஆட்சியில் குடிகள் துயரின்றி வாழ்கிறார்களா எனத் துப்பறிய ஏழைப் புலவன் போல வேடம் போட்டு தெருவில் நடக்கிறான்.

வீடு 1: காட்சி 1:

இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,

இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்

தனது மழலைச் செல்வத்துக்கு ஊண் ஊட்டி, கழுவித் துடைத்து, பட்டுடுத்தி, விளையாட்டு பொருள்களைக் கையில் கொடுத்துப் போய்விளையாடு என்று விட்டுவிட்டு, கணவனுக்காக எவ்வளவோ கவனமெடுத்து பல கஸடங்களுக்கிடையில்த்தேடியவமுதை கணவனக்கும் படைத்துத் தானும் உண்ணவமர்கிறாள் தாய்.

வீடு 1: காட்சி 2:

அந்த நிலையில் அங்கே நடந்ததை எட்டி விடுப்பு பார்க்கிறார் நமது சங்கப்புலவர் அறிவுடை நம்பி.

இடையிடை மெல்ல மெல்ல சின்னக்காலால் நடந்து, வயிறு நிறைந்திருந்தாலும் தந்தையுடன் அமர்ந்திருந்து சாப்பிடும் தாயிடம் தனக்கும் கைநீட்டி, தான் விளையாடிக்கொண்டிருந்த கையால் அவளின் சாப்பாட்டை தொட்டு அது எப்படி இருக்கு என்று ஆராய்ந்து பார்த்தும், தான் கண்டு எடுத்த ஒன்றை அவளைச் சாப்பிடும் படி கூறி அவளின் சாப்பாட்டுக் கோப்பைக்குள் போட்டும், அவள் ஒரு பிடியை வாயுக்கு எடுத்துச் செல்லும் போது தான் அதை எட்டிக் கடித்து எடுத்தும், பின்னர் அவளின் கோப்பைக்குள் தன் கையைப்போட்டு துழாந்தும், எல்லாவற்றிக்கும் மேலாக அவள் கழுவித் துடைத்து புது ஆடை கட்டி விட்டுவிட, நெய் ததும்பின சோற்றை(சவர்க்காரம் கண்டுபிடியாத காலத்தில்) உடம்பெல்லாம் தாராளமாக அள்ளிப் பூசுக்கொண்டு, கஸ்டப்பட்டு சமைத்த சாப்பாடை ஆரத்தீர இருந்து சாப்பிடாமல்(சாப்பாடு குழம்பினாதாகவல்லப் பொருள்) இந்த சாப்பாட்டு புராணத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது அந்த வீட்டு மழலை. கண்டவற்றை ரசித்த படி வந்த வேலையை தொடருகிறார் புலவர்.

வீடு 2: காட்சி 1:

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெரும் செல்வர் ஆயினும்,

பாண்டிய மன்னர் அறிவுடை நம்பி தொடந்து நடந்து அடுத்த வீட்டில் என்ன சமாசாரம் என்று பார்க்க மூக்கை நீட்டுகிறார் அந்த பக்கம். அப்போது அவர்கண்டது.

செல்வம் கொளிக்கும் மன்னர் மாளிக்கைக்குச் சமான மனை.

இங்கே உணவு சாப்பாடு அல்ல. பல படையல்.

பால்ப் பொங்கல், புது நெல்லுச்சாதம், பல வகைக் கறிகள், நல்லெண்ணைப் பொரியல், ரசம், மோர், பப்படம், வடை, பாயாசம், பழம், வெத்திலை-பாக்கு..... இத்தியாதிகள்.

சேர்ந்துண்ண வந்திருந்த விருந்துகள், முழு சுற்றமும், ஊரில் உள்ள சிநேகிதங்களும் சேரும்.

வீட்டாரும் விருந்துகளும் ஒரு பிடி பிடித்து விட்டு ஆறத் தீர தொண்டருக்கும் உண்டகளை என்று ஆங்காங்கே அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வீடு 2: காட்சி 2:

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

இளைப்பாறுவோரை அங்கேயேவிட்டு தலையைத்திருப்புகிறார் மன்னர். என்ன! செல்வத்தைக் கணாதவரா அவர் இதைகண்டு பிரமிக்க. ஆனால் அங்கே ஒரு குறையை அவதானிக்கிறார் கலைரசனையுள்ள அந்தப் புலவர். எவ்வளவு படையல் இருந்தும், அந்த விருந்தை கலகலக்க வைக்க ஒரு குழந்தை கூட ஓடி விளையாடவில்லை அங்கே.

பிள்ளைகள் இல்லாத இந்த குடும்பத்தின் நிலை பரிதாபம் என்று கூறிவிட்டு தொடந்து நடக்கிறார் அறிவுடை நம்பி.

மல்லையூரான் நீங்கள் அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு இப்படியான விடயங்களை ஏன் இங்கு பதிவிடக்கூடாது. ஒன்றாக எல்லாவற்றையும் இணைக்காமல் நாளாந்தம் சிறிது சிறிதாக இணைத்து விளக்கங்களையும் எழுதலாமே.....

ஐந்தோ ஆறு பாட்டுக்களை தமிழ் மலரில் படித்தேன்.

அதை வைத்து என்னா பண்ணா?. அறிந்தவர் எழுதும் போது அதை படித்து கருத்து எழுதுவது அதைவிட இன்பம். எப்படியும் ஞாபகம் வருபவற்றை இப்படிச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது புகுத்திக் கொள்வேன். கவலைபடாதீர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ். 64

தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு , பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

எனது பார்வை:

இந்தக் குறளை படிக்க நல்லாய்தான் இருக்கு . ஆனால் , இது வெளிநாட்டுக்கு சரிப்பட்டுவருமா :unsure: ? எனக்கு இதைப்பாக்க அண்மைல நடந்த

ஞாபகம் வருகின்றது . நோர்வேயில தாய்தகப்பன் பிள்ளைக்கு கையால சாப்பாடு குடுக்க ,

கவுன்சில்காறன் வந்து தூக்கிகொண்டு போட்டான் :lol::icon_mrgreen: . இதை பிள்ளை செய்தாலும் தாய்

தகப்பனுக்கு நடக்கும் . ஏனெண்டால் இது சுத்தம் சுகாதாரம் சம்பந்தமானது . இதில

சென்ரிமன்ற் கலக்கிறது நல்லாயில்லை.............. :D:icon_idea: .

இதன் அர்த்தம் வேறு மாதிரியானது என்று நான் நினைக்கின்றேன்.

அவர்களது கையால் எதைச்செய்து தந்தாலும் அது அமுதமே என்ற பொருள்படும். கைகளால் துலாவுதல் என்பது கையில் வைத்து அசுத்தமாக்குதல் என்பதற்குள் வரும் என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்களின் கருத்தையும் பார்ப்போம்.

தம் மக்கள், தமது சிறு கைகளால், முதன் முதலாகச் 'சட்டி பானை' விளையாட்டு விளையாடும் போது, சமைத்து உங்களுக்குத் தரும் கூழுக்கு, அமிர்தமும் நிகராகாது! என்ற பொருளாய் இருக்கலாம் என்பது எனது கருத்து!

வள்ளுவனின் குறள்கள், முக்காலத்தையும் வென்றவை!!!

ஐந்தோ ஆறு பாட்டுக்களை தமிழ் மலரில் படித்தேன்.

அதை வைத்து என்னா பண்ணா?. அறிந்தவர் எழுதும் போது அதை படித்து கருத்து எழுதுவது அதைவிட இன்பம். எப்படியும் ஞாபகம் வருபவற்றை இப்படிச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது புகுத்திக் கொள்வேன். கவலைபடாதீர்கள்.

நன்றி

மிக்க நன்றிகள் மல்லையூரான் உங்கள் நேரத்திற்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் . உங்கள் அகநாநூறை நானும் எதிர்பார்கின்றேன் :) .

தம் மக்கள், தமது சிறு கைகளால், முதன் முதலாகச் 'சட்டி பானை' விளையாட்டு விளையாடும் போது, சமைத்து உங்களுக்குத் தரும் கூழுக்கு, அமிர்தமும் நிகராகாது! என்ற பொருளாய் இருக்கலாம் என்பது எனது கருத்து!

வள்ளுவனின் குறள்கள், முக்காலத்தையும் வென்றவை!!!

மிக்க நன்றிகள் புங்கையூரான் உங்கள் நேரத்திற்கும் கருத்துகளிற்கும் . நீங்கள் கூறியபடியும் வரலாம் . இதை நான் தெளிவாகவே முதலில் குறிப்பிட்டேன் . குறளும் பொருளும் நன்றாக இருக்கின்றது என்று . ஆனால் , ஒரு சில கருத்துக்கள் இன்றய வாழ்வியலுடன் ஒப்பிடுகையில் தனிய சுவைக்க மட்டுமே முடிகின்றது :) .

< மல்லையூரான் நீங்கள் அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு இப்படியான விடயங்களை ஏன் இங்கு பதிவிடக்கூடாது. ஒன்றாக எல்லாவற்றையும் இணைக்காமல் நாளாந்தம் சிறிது சிறிதாக இணைத்து விளக்கங்களையும் எழுதலாமே..... >

நான் இதை வழிமொழிகின்றேன் வல்வை சகாறா :):) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.