Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?

Featured Replies

நன்றி.

ஊரில் அதிகமாக பருவமடையும் வயது சராசரியாக 14 ஆக இருந்தது. புலத்தில் 9 வயதிலேயே பருவமடைவதைக் காணலாம். காரணம் வியாபார ரீதியாக குறுகிய காலங்களில் வளர்க்கப்படும் கோழி இறைச்சி, மரக்கறி உணவுகளை உண்பது என காரணங்கள் செவி வழிச் செய்தியாக வருகின்றன. இது உண்மையான மருத்துவ காரணமா?

இது உண்மையெனில், இப்படியான உணவுகளை உண்பதால் சகல வயதினர்களுக்கும் பலவியாதிகள் வரும். தடுப்பது எப்படி? புலத் தமிழர்களிடம் இதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகம் இல்லை. எப்படியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பிற்குறிப்பு

இது எனது முன்னைய கேள்வியினதும், அகூதாவின் கருத்தினதும் தொடர்ச்சியே.

இதனைப் பற்றிய விளக்கத்தை இந்தத் திரியில் முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும் பொழுது பதிவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

ஊரில் அதிகமாக பருவமடையும் வயது சராசரியாக 14 ஆக இருந்தது. புலத்தில் 9 வயதிலேயே பருவமடைவதைக் காணலாம். காரணம் வியாபார ரீதியாக குறுகிய காலங்களில் வளர்க்கப்படும் கோழி இறைச்சி, மரக்கறி உணவுகளை உண்பது என காரணங்கள் செவி வழிச் செய்தியாக வருகின்றன. இது உண்மையான மருத்துவ காரணமா?

இது உண்மையெனில், இப்படியான உணவுகளை உண்பதால் சகல வயதினர்களுக்கும் பலவியாதிகள் வரும். தடுப்பது எப்படி? புலத் தமிழர்களிடம் இதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகம் இல்லை. எப்படியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பிற்குறிப்பு

இது எனது முன்னைய கேள்வியினதும், அகூதாவின் கருத்தினதும் தொடர்ச்சியே.

இதனைப் பற்றிய விளக்கத்தை இந்தத் திரியில் முடியாவிட்டாலும் நேரம் கிடக்கும் பொழுது பதிவிடவும்.

ஆம்.. உங்கள் அவதானம் சரி.

பிள்ளைகள் குறிப்பாக மேற்கு நாடுகளில் வளரும் பெண் பிள்ளைகள் மிக இள வயதில் பூப்படைகின்றனர். இதற்கு பல்வேறு காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

முதன்மைக் காரணிகள்:

உணவும் உடற்பருமன் அதிகரிப்பும் (Obesity):

போதிய அளவு உணவும் சத்துக்களும் உள்ள நிலையில் பூப்படைய தேவையான சுரப்பிகளின் வளர்ச்சியும் அவை வழங்கும் இரசாயன தூண்டல்களும் பிள்ளைகள் இள வயதில் பூப்படையக் காரணமாகின்றன. பெண் பிள்ளைகளில்.. கறுப்பு.. வெள்ளையினப் பிள்ளைகள் 8 அல்லது 9 வயதில் பூப்படைகின்றனர். தெற்காசிய பிள்ளைகள் 10 - 12 இல் பூப்படைகின்றனர். அதிகரித்த கொழுப்பு.. மற்றும் உடற்பருமன் அதிகரிப்பும் இதனைத் தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

குடும்பச் சூழல்: தாய் தந்தை அல்லாத பிற ஆண்களோடு உறவாடுவது.

தாய் குறித்த குழந்தையின் சொந்தத் தந்தையோடு வாழும் போது.. பெண் பிள்ளைகளின் பூப்படையும் காலமும் நீடிக்கிறது. தாய் குழந்தையின் சொந்த தந்தையைப் பிரிந்து பிற ஆண்களோடு வாழும் நிலையில்.. பிள்ளையின் பூப்புக் காலம் குறைவடைவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது தாய் சொந்தத் தகப்பன் அல்லாத வயது வந்த ஆண்களை வீட்டுச் சூழலில் கொண்டிருத்தல் என்பது ஒரு வகையில் பூப்படைதலை தூண்டுவதாக.. ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதேவேளை குழந்தைகள் மன அழுத்தம் நிறைந்த வீட்டுச் சூழலில் தொடர்ந்து வாழும் நிலையிலும் பூப்படைதல் காலம் குறியதாக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

(Studies of girls growing up in families indicate that if the father is absent or if an adult male who is not the girl's father is present, puberty will occur earlier)

கருத்தடைக்கு உபயோகிக்கப்படும்.. மற்றும் பிற ஓமோன்களின்.. இரசாயனங்களின் மாசு:

நாம் அருந்தும் நீர்.. உண்ணும் உணவில்.. பூப்படைதலைத் தூண்டக் கூடிய இரசாயனங்கள் கலந்திருப்பதும் ஒரு காரணம். மேற்கு நாடுகளில் இரசாயன வழி கருத்தடை மாத்திரைகளை அதிகம் பாவிக்கின்றனர். இவற்றில் உண்மையில் ஓமோன்களே இருக்கின்றன. அந்த ஓமோன்கள்.. மாசுகளாக நீர்.. உணவில் சேரும் போது.. அவை பூப்படைதலை தூண்டலாம் எங்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமாத்திரமன்றி உணவு பதனிடப் பயன்படும் இரசாயனங்கள்.. உணவுகளை தயாரிக்கும் வழிமுறைகளின் போது பிறக்கும் இரசாயனங்கள் என்பனவும் இவற்றிற்கு காரணமாக உள்ளன. பண்ணைகளில் பாவிக்கப்படும் உரம்.. கிருமி நாசினிகள் போன்றவற்றில் உள்ள இரசாயனங்களும் இவற்றில் அடங்கும்.

(Gender-bending chemicals used in food cans, shower curtains and toys may be triggering early puberty in girls - and putting them at greater risk of cancer and diabetes, researchers say.)

article-1264019-090744B5000005DC-342_468x170_popup.jpg

பிரித்தானியா சார்ந்தது.

அதிகரித்த தொலைக்காட்சிப் பார்வை: அதிகரித்த நேரம் தொலைக்காட்சிகளை பார்க்க அனுமதிப்பதும் குழந்தைகள் மத்தியில் பூப்படைதலுக்கான வயதைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

(Early puberty has even been linked to watching too much television. A few years ago, Italian scientists found that children who watched three hours a day produced less of the sleep hormone melatonin - low levels of the hormone play an important role in the timing of puberty.)

அதிகரிக்கும் அழகு சாதனப் பொருட்களின் பாவனை.

அழகு சாதனப் பொருட்களில் உள்ள இரசாயனங்கள் சிலவும் பூப்படைதலை தூண்டுவது ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

(Meanwhile, the data from the ongoing Avon study is being analysed by researchers at Emory University in Atlanta, Georgia - acknowledged world experts on environmental factors which affect human hormones.

These include a group of industrial chemicals called phthalates, which are linked to early puberty and have recently been banned from a vast range of cosmetics and household products.)

குடும்பத்தை விட்டு இளவயதில் பிரியும் பிள்ளைகள்:

குடும்பத்தை விட்டு இள வயதில் பிரியும் பிள்ளைகள் மத்தியிலும் விரைவில் பூப்படையும் தன்மை அதிகம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மன அழுத்தச் சூழலில் அவர்கள் வாழ்தல்.. கவனிப்பாரற்ற உணவு வழக்கம்.. பிற நடத்தைகள்.. காரணமாக இருக்க வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதர பிறப்புரிமையியல்.. சூழல் காரணிகளும்.. குறைபாட்டு நோய்களும்..!

Reference:

Factors identified as possible causes of early puberty

http://www.ourstolen...ntialcauses.htm

The Alarming Reason Why More Girls are Starting Puberty Early

http://articles.merc...erty-early.aspx

Precocious Puberty (Early Puberty)

http://www.med.umich...ics/puberty.htm

Study on early puberty advances breast cancer research

http://www.niehs.nih...ience-study.cfm

Should we be worried about early puberty?

http://www.guardian....t-early-puberty

Girls entering puberty by the age of six - but are drugs the answer?

Gender-bending chemicals 'triggering early puberty in girls and putting them at risk of diabetes and cancer'

Fat toddlers 'risk early puberty'

Girls now reaching puberty before 10 – a year sooner than 20 years ago

http://www.telegraph...-years-ago.html

Early pubertal onset and its relationship with sexual risk taking, substance use and anti-social behaviour: a preliminary cross-sectional study

http://www.biomedcen...1471-2458/9/446

Edited by nedukkalapoovan

ஆண்களுக்கு எப்படி, நலம் எடுப்பது பற்றியும்... நெடுக்ஸ் விளக்கமாக சொல்ல வேணும் என்று, மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விரும்பிக் கேட்கின்றது.

wooden-hammers_250x250.jpg87969189_xs.jpg

மிகப் பயனுள்ள தகவல்களை வழங்கியுள்ளீர்கள்.

இரசாயணம் மாத்திரமன்றி கலாச்சாரம், பழக்கவழக்கங்களும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 'பருவமடைதல்' வெளியில் தெரிவதால் பாதிப்புகளை உணரக் கூடியதாக உள்ளது. வெளியில் தெரியாமல் உடலுக்கு எவ்வளவு தீங்குகளோ தெரியாது? உங்கள் நேரத்திற்கு நன்றி நெடுக்ஸ்.

ஊரில் வளர்ந்து, இங்கு கற்றவர் என்னும் வகையில் பல நன்மை தீமைகளை ஒப்பிட்டுப் ஆராயக் கூடியதாக இருக்கும். மருத்துவ ஆராய்ச்சி தெரிந்தவர் மற்றும் எழுதக் கூடியவர் என்னும் வகையில் சமூகத்திற்குத் தேவையான நிறைய நல்ல விடயங்களை வெளிக்கொணர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுள்ளவரை உருவாக்கலமோ இல்லையே..? இன்னொருத்தனை உருவாக்கி நாம என்ன பண்னுறது..?

குண்டலி நெற்றி பொட்டில் ஏற்றி நோக்கு வர்மம் போல நினைத்ததை சாதிக்கலமாம் .. கட்டை பிரம்ம சாரிகள் ஒருக்கா டிரை பண்ணுங்கோ... :) :)

  • தொடங்கியவர்

கேள்விகள் அருமை, பதில்கள் தெளிவானவை.

தெரிந்ததை சொல்லிக்கொடுக்கவேண்டும். தெரியாததை கற்கவேண்டும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் அலசல் அருமை, நன்றி பகிர்வுக்கு, இதை எமது இளய சமுதாயத்திற்கு மனதில் பதியும் படி படிப்பிக் வேண்டும்,

சூழல்...எல்லா வற்றையும் விட மனதில் ஆசை & விட முயற்ச்சி இருந்தால் எதுவும் கஷ்டமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கிடம் எப்படியெல்லாம் இலவசமாக வைத்தியம் பெறுகிறார்கள் பாருங்கள்

கில்லாடிகளப்பா. :lol::icon_idea:

ஆனால் நெடுக்கு ஒரு இடத்தில் பணமில்லாத காரணத்தால் ஒரு துறையை தான் இழந்ததாக இங்கு எழுதியதிலிருந்து அதே ஞாபகம் என்னை வாட்டுகிறது.

நாம் ஏதாவது செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கிடம் எப்படியெல்லாம் இலவசமாக வைத்தியம் பெறுகிறார்கள் பாருங்கள்

கில்லாடிகளப்பா. :lol::icon_idea:

ஆனால் நெடுக்கு ஒரு இடத்தில் பணமில்லாத காரணத்தால் ஒரு துறையை தான் இழந்ததாக இங்கு எழுதியதிலிருந்து அதே ஞாபகம் என்னை வாட்டுகிறது.

நாம் ஏதாவது செய்யலாமா?

படித்ததை பகிர்ந்து கொள்ளும் போதுதான் அறிவு கூர்மை அடையும் என்பது நிதர்சனமான உண்மை..!

மேலும் உங்கள் மேலான கரிசணைக்கு நன்றி.

காலம்.. எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. காசில்லை என்றால் வாய்ப்பிருக்கும்.. வாய்ப்பில்லை என்றால் காசிருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் அமைவது என்பது அதிஸ்டமும் கூட..! எதை விட்டனோ அதைப் பிடிப்பன் என்ற நம்பிக்கையோடு செயற்படுறன்..! :lol:

எதை என்டாலும்.. நானா சாதிக்கனும்.. என்னிடம் உதவின்னு வந்தா அது உண்மைன்னா.. கேட்காம உதவனும்.. என்பதே எனது குறிக்கோள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்

தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்தருள்க.

எனக்கு தமிழர் நிமிரணும் நிமிர்த்தணும் என்பதைத்தவிர வேறு எதுவும் தெரிவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்

தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்தருள்க.

எனக்கு தமிழர் நிமிரணும் நிமிர்த்தணும் என்பதைத்தவிர வேறு எதுவும் தெரிவதில்லை

நல்லது செய்ய நினைத்து நல்லது செய்யக் கேட்பது எல்லாம் மனம் புண்படியான விடயங்களா விசுகு அண்ணா. நீங்கள் நல்லதே நினைச்சு.. நல்லதே செய்ய எண்ணினீர்கள். அதற்கு மன்னிப்பு வேறையா..??! ரெம்ப மன நெகிழ்ச்சியாக இருக்கிறது..!

தமிழர்களின் நிமிர்வில் தாங்கள் வைத்திருக்கும்.. ஆர்வத்திற்கு பாராட்டுகின்றேன். அது தொடரவும் வேண்டும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

என் விருப்பமும் இது தான் எவ்வளவு தூரத்திற்கு எங்களை முன்னேற்ற முடியுமோ அவ்வளவுக்கு முன்னேற்றிக் கொண்டே போகவேணும்..அதற்காக காலம் முழுக்க படிப்பு,படிப்பு வேலை என்றும் இருக்க கூடாது..நெ.கா.அண்ணா புரிந்து கொண்டால் சரி..lol

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன நெடக்ஸ் அண்ணா காதல்ல விழோணும் கல்யாணம் கட்டி அவஸ்த்தை படணும் என்று சொல்லுறீங்களா யா? அதெல்லாம் முடியாது அவருக்கு தன்னோட வாழ்கைய தனித்து நின்றே சாதிக்க விருப்பம்.பிறகு அந்த பொண்ணு சொல்லுவா நான் வந்தா பிறகு தான் அவர் சாதிச்சவர் என்று சோ நெடுக்ஸ் அண்ணா நான் சொல்லுறத சொல்லிட்டன் அப்புறம் உங்க இஸ்ட்டம்...........

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் பருவமடைவது தெரிந்த விடயம். தமிழர் கலாச்சாரத்தில் அதற்கான சடங்குகளும் உண்டு.

ஆண் பிள்ளைகள் பருவமடைவதை எப்படி அறிவது. அந்தக் காலப் பகுதியில் பெற்றோர்களின் பங்களிப்பு எதுவாக இருக்க வேண்டும்.

இந்தத் தப்பிலி மேல எனக்கு கொஞ்சநாளா ஒரு டவுட்..! :rolleyes::unsure:

நெடுக்கிடம் எப்படியெல்லாம் இலவசமாக வைத்தியம் பெறுகிறார்கள் பாருங்கள்

கில்லாடிகளப்பா. :lol::icon_idea:

ஆனால் நெடுக்கு ஒரு இடத்தில் பணமில்லாத காரணத்தால் ஒரு துறையை தான் இழந்ததாக இங்கு எழுதியதிலிருந்து அதே ஞாபகம் என்னை வாட்டுகிறது.

நாம் ஏதாவது செய்யலாமா?

விசுகு அண்ணா,

எனக்கும் ஏதாவது படிக்கலாமேண்டு ஒரு நினைப்பு..! எப்பிடி வசதி? :icon_mrgreen:

இந்தத் தப்பிலி மேல எனக்கு கொஞ்சநாளா ஒரு டவுட்..! :rolleyes::unsure:

அட அறிவுப் பசி உள்ள ஒருவனைப் பார்த்து சந்தேகப்படுகிறாங்கப்பா. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.