Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவுக்கும் பெயருண்டு

Featured Replies

  • தொடங்கியவர்

பூவரசம்பூவை கன ஆண்டுகளுக்குப் பின்னால பார்த்தது என்னவோ மாதிரி ஆகிவிட்டது..! :unsure:

பூவரசம் பூ , இலை , தடி எமது வாழ்வில் ஒன்றாக வந்தவைதான் இசை :icon_mrgreen: . பூவரசம் தடிக்கு மயங்காத ( பயப்பிடாத ) ஆக்கள் என்றால் விரல் விட்டு எண்ணலாம் :lol: . கருத்துச்சொன்னதிற்கு மிக்கநன்றிகள் இசை :) :) .

  • Replies 156
  • Views 50.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

23 குடசம் பூ .

83243566.jpg

அரைக்காற்சட்டையோடு பூவரசின் இலைகளிலை பறித்து பீப்பீ ஊதி மேடைக்கச்சேரி நடாத்திய அந்த அழகான நாட்கள். நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன். தொடருங்கள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்..கோமகன்

பீ பீ மட்டுமா ஊதினீங்கள் சாத்தண்ணா...

  • தொடங்கியவர்

28 குவளைப் பூ.

90342949.jpg

கபிலர் குறுந்தொகையில் குவளைப் பூவை வைத்து குறஞ்சித்திணையில் ஓர் அழகான ஒப்பீடு செய்கின்றார் அதாவது..........

மாசுஅறக் கழீஇய யானை போலப்

பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்

பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்

நோய் தந்தனனே- தோழி!

பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே ( 13 ) .

விளக்கம்:

தலைவன் தோழியிடம் அவள் மனம் அமைதியுறும் வகையில் தன் பிரிவினைக் கூறிப் பிரிந்து செல்கிறான்.இந்நிலையில், தலைவன் பிரிவால் வருந்திய தலைவி தோழியிடம் கூறியது. மலை சார்ந்த சூழல் பின்னணியாய் அமைய, பெண்ணின் மனவுணர்வு காட்சியாய் விரிகிறது. மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.அங்கே குளிர்ச்சிக்குப் பஞ்சமில்லை.

தலைவியே சொல்கிறாள்… ‘குளிர்ச்சியான பாறைக்கல்லின் ஒரு பக்கத்தில் தலைவன் என்னோடு கூடியிருந்தான்.இப்போது என்னைப் பிரிந்து எனக்கு நோய் தந்தான். இதனால் ஏற்பட்ட வருத்தத்தினால் என் கண் மட்டுமல்ல;நின் கண்ணும் அல்லவா அழகிழந்தன.’என்று தன் தனிப்பட்ட துயரத்தோடு தோழியையும் உளப்படுத்திக் கூறுகின்றாள்.தலைவியின் இந்த அணுகுமுறையால் தோழியும் தலைவியின் துயரை நீக்குவதில் பெரும் முனைப்பு காட்டுவது இயல்புதானே?

இது அந்தக்காலக் காதல்!!!!!!!!!!!!!! :)

https://flowersinsan...ple-water-lily/

29 குருந்தம் பூ.

46859919.jpg

kurunthamflower.jpg

kurunthamfruit.jpg

குறுந்தொகை 148, -இளங் கீரந்தையார், முல்லை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

தலைவன் சொன்னபடி மழைக் காலத்திற்கு முன் வந்து விடுவான், இது கார் காலம்

இல்லை என்று கூறிய தோழிக்கு தலைவி உரைத்த பதில்

செல்வச் சிறாஅர் சிறு அடி பொலிந்த

தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்

காசி னன்ன போது ஈன் கொன்றை

குருந்தோடு அலம் வரும் பெருந்தண் காலையும்

கார் அன்று என்றி ஆயின் இது

கனவோ மற்றிது வினவுவல் யானே.

விளக்கம்:

செல்வச் சிறாஅர் – பணக்காரச் சிறுவர்கள், சிறு அடி பொலிந்த – சிறிய கால்களில் விளங்கிய, தவளை வாய – தவளை வாய், பொலஞ்செய் கிண்கிணிக் – பொன்னால் செய்த கொலுசு, காசி னன்ன – காசைப் போன்றது – போது ஈன் கொன்றை – மலர் மொட்டை ஈன்ற கொன்றை, குருந்தோடு அலம் வரும் – குருந்த மரத்தோடு சுழலும், பெருந்தண் காலையும் – மிகுந்த குளிர்ச்சியுடைய பருவத்தையும், கார் அன்று என்றி ஆயின் – கார் காலம் இல்லை என்று நீ சொல்வது ஆனால், இது – இது, கனவோ மற்றிது – மற்று இது கனவோ ,வினவுவல் யானே – கேட்கின்றேன் நானே.

http://treesinsangam...AE%A4%E0%AF%81/

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

30 குளவிப் பூ.

நற்றிணை 376, கபிலர், குறிஞ்சி திணை – தோழி சொன்னது

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ

இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை

வரையோன் வண்மை போல பல உடன்

கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்

குல்லை குளவி கூதளம் குவளை

இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்

சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும்

நல் தார் மார்பன் காண்குறின் சிறிய

நன்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை

அணங்கும் அணங்கும் போலும் அணங்கி

வறும் புனம் காவல் விடாமை

அறிந்தனிர்அல்லிரோ அறன் இல் யாயே.

இந்தக் குளவிப் பூவை இப்பொழுது பன்னீர் பூ மரம் அல்லது மரமல்லிப் பூ என்றும் அழைப்பார்கள் .

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

42222947.jpg

31 குளவிப் பூ 01.

91873423.jpg

32 குறிஞ்சிப் பூ.

78501310.jpg

இந்தக் குறிஞ்சிப் பூவானது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கவல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக அருமையாக பிரயோசனமாக இருக்கிறது

நேரம் கிடைக்காமையால் அடிக்கடி எழுதமுடியவில்லை

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து இணையுங்கள் கோ! பிரயோசனமான அரிய விசயங்களை இணைக்கின்றீர்கள். இதற்கு தூண்டுதலாக இருந்த யாயினி அக்காவிற்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்..! :)

குறுந்தொகை இணைப்பு சங்ககாலத்தின் பாரம்பரியங்களையும் நமக்கு ஞாபகப்படுத்தும் விதமாக அமைவது சிறப்பு. அதற்கு என் நன்றிகளை சிறப்பாக... மனதார சொல்லிக் கொள்கின்றேன்!

மனமார்ந்த நன்றிகள். தொடருங்கள்! :)

  • தொடங்கியவர்

அழகாக அருமையாக பிரயோசனமாக இருக்கிறது

நேரம் கிடைக்காமையால் அடிக்கடி எழுதமுடியவில்லை

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் கருத்துகளிற்கு . உண்மையில் உங்கள் போன்றோரே என்னை இயங்கச்செய்யும் ஆதாரங்கள் :):):) .

  • தொடங்கியவர்

தொடர்ந்து இணையுங்கள் கோ! பிரயோசனமான அரிய விசயங்களை இணைக்கின்றீர்கள். இதற்கு தூண்டுதலாக இருந்த யாயினி அக்காவிற்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்..! :)

குறுந்தொகை இணைப்பு சங்ககாலத்தின் பாரம்பரியங்களையும் நமக்கு ஞாபகப்படுத்தும் விதமாக அமைவது சிறப்பு. அதற்கு என் நன்றிகளை சிறப்பாக... மனதார சொல்லிக் கொள்கின்றேன்!

மனமார்ந்த நன்றிகள். தொடருங்கள்! :)

உண்மை கவிதை . எவ்வாறு சங்ககாலப் பாரம்பரியங்கள் எமக்கு வியப்பூட்டுகின்றதோ ? அவ்வாறே எமது நவீன சங்ககாலப் பாரம்பரியப் பரணியும் வருங்கால சந்ததியினரால் உற்று நோக்கப்படும் . இந்த வேகம் போதவில்லை என்பது தான் எனது ஆதங்கம் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு :):):) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

33 கூவிரம் பூ .

87298835.jpg

குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் - கபிலர்

பாறையில் மலர் குவித்த பாவையர்

வள்இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான்பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,

விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை பிடவம், சிறுமா ரோடம்,

வாழை வள்ளி நீள்நறு நெய்தல்

தாழை தளவம் முள்தாள் தாமரை

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங் குரலி

கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை

அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,

தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக் கத்தி,

ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்

அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்

மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,

வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ (61-98)

விளக்கம்:

வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், ஆம்பல் மலர்,

குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், செங்கோட்டு வேரி, இனிய கனிகளைத்

தரும் மாம்பூ , செம்மணிப்பூ, தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,வில்வம்,

தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரம், வடவனம், வாகைப்பூ, வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,

பஞ்சாய்க்கோரை, வெண்காக்கண மலர், நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ, பயினிப்பூ, வானிப்பூ, பல கொத்துக்களையுடைய குரவ மலர், பச்சிலைப்பூ, மகிழம்பூ, கொத்தாய் மலர்ந்திருக்கும் காயாம்பூ, விரிந்த பூக்களையுடைய ஆவிரம், சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, சிறு பூளை,குன்றிப்பூ, முருக்கிலை, மருதப்பூ, விரிந்த பூக்களையுடைய கோங்கமலர், மஞ்சாடிப்பூ, திலக மரத்தின் மலர், தேன் மணக்கும் பாதிரிப்பூ, செருந்தி மலர், புனலி, பெரிய குளிர்ச்சியான சண்பக மலர், கரந்தைப்பூ, காட்டு மல்லிகைப்பூ, மிக்க மணம் வீசும் மாம்பூ, தில்லைப்பூ, பாலைப்பூ, கல்லில் படர்ந்திருக்கும் முல்லைப்பூ, கஞ்சங்குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்டிருக்கும் மணம் வீசும் நெய்தற்பூ, தெங்கம்பாளைப்பூ, செம்முல்லைப்பூ, முள்ளினையுடைய தண்டினைக் கொண்ட தாமரைப்பூ , ஞாழல்பூ, முல்லைப்பூ, குளிர்ந்த கொகுடிப்பூ, பவழமல்லிப்பூ, சாதிப்பூ, கருந்தாமக் கொடிப்பூ, கோடல்பூ, தாழைப்பூ, தாது முதிர்ந்து மணம் வீசும் சுரபுன்னைப்பூ, காஞ்சிப்பூ, நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேன் நாறும் கருங்குவளைப்பூ,பாங்கர்ப்பூ, ஓமைப்பூ, மரவப்பூ, பல பூக்களும் நெருங்கியிருக்கும் தணக்கம்பூ, இண்டம்பூ, இலவம்பூ, கொத்தாய் தொங்கும் சுரபுன்னைப்பூ, அடும்பம்பூ, ஆத்திப்பூ, நீண்ட கொடியில் மலரும் அவரைப்பூ, பகன்றைப்பூ, பலாசம்பூ, அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பைப்பூ, துளசிப்பூ, விளக்கின் ஒளி போன்றிருக்கும் தோன்றிப்பூ, நந்திவட்டப்பூ, நறவம்பூ, மணம் வீசும் புன்னாகம் பூ, பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பசுமையான குருக்கத்தி மலர், சந்தன மலர், அகிற்பூ, மிக்க மணத்தினையுடைய பெரிய புன்னைப்பூ, நாரத்தம்பூ, நாகப்பூ, நள்ளிரவிலே மணம் வீசும் இருவாட்சி மலர், கரிய பெரிய குருந்த மலர், வேங்கை மலர் முதலிய பிற பூக்களையும் சிவப்பு நிறத்தைப் பரப்பி வைத்தாற் போன்றிருக்கும் மிக்க அழகுடைய செம்பூவினையும் அங்கு இருந்த மிக்க காடு அடர்ந்த பகுதியில் மனமகிழ்ச்சியோடு உலவித் திரிந்து, ஆசையோடு மலர்களைப் பறித்து வந்தோம். மழை பெய்ததால்

கழுவி சுத்தம் செய்யப்பெற்ற அகன்ற மலைப்பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தோம்.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

34 கூவிளம் பூ.

47411200.jpg

கூவிளம் பூ இப்பொழுது வில்வம் பூ என்று அழைக்கப்படுகின்றது . வில்வ மரமும் ( கூவிரம் ) குறிஞ்சித் திணையில் ஓர் முக்கியமான மரமாகும் .

  • கருத்துக்கள உறவுகள்

அட ரொம்ப நல்லாயிருக்கு கோமகன்.....சில பூக்களை நான் பாத்திருந்தும் உங்கள் பதிவின் மூலம் பெயர்களை அறிந்துகொண்டேன்...தொடர்ந்து இணையுங்கள்... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வில்வம்பூ சீ.. வில்வம் இல்லையும் தானே மருத்துநீருக்கு சேர்க்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இணைத்த அரைவாசி பூக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை

  • தொடங்கியவர்

அட ரொம்ப நல்லாயிருக்கு கோமகன்.....சில பூக்களை நான் பாத்திருந்தும் உங்கள் பதிவின் மூலம் பெயர்களை அறிந்துகொண்டேன்...தொடர்ந்து இணையுங்கள்... :)

இணைச்சால் போச்சு :lol::lol: . நன்றிகள் சுபேஸ் :):) .

இந்த வில்வம்பூ சீ.. வில்வம் இல்லையும் தானே மருத்துநீருக்கு சேர்க்கிறது?

இதை ஐய்யரிட்டைத் தான் கேக்கவேணும் ஜீவா :lol: . ஆனால் , சிவனுக்கு பூஜிக்க உகந்த இலை எண்டுறது படிச்ச ஞாபகம் . நன்றிகள் உங்கள் கருத்திற்கு :) .

கோமகன் இணைத்த அரைவாசி பூக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை

சரி................. இப்ப கேள்விப்படுகிறியள் தானே ரதியக்கா :lol: . உங்கள் கருத்துக்கும் நன்றி சொல்லுறன் :icon_idea: .

கோமகன்... பூக்களின் பெயரைக் கேள்விப்பட்டதுண்டு. அதிகமானவற்றைப் பார்க்கவில்லை. உங்கள் பதிவின்மூலம் பார்த்தேன். உங்கள் பதிவு மிகப் பிரயோசனமானது. உங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

கோமகன்... பூக்களின் பெயரைக் கேள்விப்பட்டதுண்டு. அதிகமானவற்றைப் பார்க்கவில்லை. உங்கள் பதிவின்மூலம் பார்த்தேன். உங்கள் பதிவு மிகப் பிரயோசனமானது. உங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் கருத்துக்களுக்கு சிரம் தாழ்த்துகின்றேன் செண்பகன் :):):) .

  • தொடங்கியவர்

35 கைதைப் பூ.

இந்தப் பூ வைத் தாழம் பூ என்றும் அழைப்பர் .

28006143.jpg

தாழை மலர் தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று தாழந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.

கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை , கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.

தாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

36 கொகுடிப் பூ.

இந்தப் பூவை நறந்தண் கொகுடி என்றும் அழைப்பர் .

81029928.jpg

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

35 கைதைப் பூ.

28006143.jpg

இதுதானே தாழம்பூ??

  • தொடங்கியவர்

இதுதானே தாழம்பூ??

அதே.................... தாழம் பூ தான் . ஞாபகப்படுத்தியதிற்கு மிக்க நன்றிகள் இசைக்கலைஞன் :):):) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதானே தாழம்பூ??

மணற்காட்டுப் பக்கம் இந்த மரம் இருக்குதெல்லே???

  • கருத்துக்கள உறவுகள்

35 கைதைப் பூ.

இந்தப் பூ வைத் தாழம் பூ என்றும் அழைப்பர் .

28006143.jpg

36 கொகுடிப் பூ.

இந்தப் பூவை நறந்தண் கொகுடி என்றும் அழைப்பர் .

81029928.jpg

இந்தத் தாழம்பூவின் மணத்திற்கு தானே பாம்பு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் தாளம் பூவைத் தெரிந்து கொண்டேன்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மணற்காட்டுப் பக்கம் இந்த மரம் இருக்குதெல்லே???

வட் மணல்காடு? :D யூ மீன் சம் றூறல் ஏரியா? :wub:

ஐ ஷுட் கோ ஃபோர் காம்பிங் வன் டே..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட் மணல்காடு? :D யூ மீன் சம் றூறல் ஏரியா? :wub:

ஐ ஷுட் கோ ஃபோர் காம்பிங் வன் டே..! :lol:

முடியலைப்பா சாமி.. உலகமகா நடிப்புங்கோ சாமியோவ்.. :icon_mrgreen::lol:

உங்கடை தேனிலவு அங்கை நடந்ததாய் தானே மாமோய் பட்சி சொல்லுது????? ^_^:wub::lol::icon_idea:

  • தொடங்கியவர்

இன்றைய பதிவைக் கலகலப்பாக்கிய இசைக்கலைஞன் ஜீவாக்கு மிக்க நன்றிகள் :):) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.