Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவுக்கும் பெயருண்டு

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தத் தாழம்பூவின் மணத்திற்கு தானே பாம்பு வரும்

நல்ல கேள்வி ரதியக்கா . தாழம் பூவில் பூநாகம் இருக்கிறதாய் கேள்விப்பட்டிருக்கின்றன் .

  • Replies 156
  • Views 50.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

37 கொன்றைப் பூ.

இதை தூங்கு இணர்க் கொன்றை என்றும் அழைப்பர் .

நற்றிணை 371 – ஒளவையார், முல்லைதிணை – தலைவன் சொன்னது

"காயாங் குன்றத்துக் கொன்றை போல

மா மலை விடர் அகம் விளங்க மின்னி

மாயோள் இருந்த தேஎம் நோக்கி

வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்

பெயல் தொடங்கினவே பெய்யா வானம்

நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி

அழல் தொடங்கினளே ஆயிழை அதன் எதிர்

குழல் தொடங்கினரே கோவலர்

தழங்கு குரல் உருமின் கங்குலானே"

27798865.jpg

538pxcassiafistulaflowe.jpg

cassias.jpg

38 கோங்கம் பூ .

48160885.jpg

இதை விரி பூங்கோங்கம் என்றும் அழைப்பர் .

  • கருத்துக்கள உறவுகள்

37 கொன்றைப் பூ.

27798865.jpg

538pxcassiafistulaflowe.jpg

cassias.jpg

ஆகா.. இந்தக் கொன்றைப்பூ.. மனதில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்..! ஹார்ட்லி கல்லூரிக்கு அருகில் இருந்ததாக நினைவு..! மரம் முழுவதும் மஞ்சளாக இருக்கும்..! காணக் கண்கோடி வேண்டும்..! :wub:

இதேமாதிரி சிவப்பு நிறத்திலும் கொன்றை இருக்கு என நினைக்கிறேன்..! :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

கொன்றையின் சிறப்பை நான் ஒரு பதிவிலிருந்து அறிந்து கொண்டேன் அவையாவன:

சமஸ்கிருத மொழியில் கொன்றையின் பெயர் குண்டலினி ஆகும். தங்க மலர்களில் சுருண்டு இருக்கும் மகரந்த்தாள்கள் பாம்பாக உருவமுள்ள குண்டலினி சக்தியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது.

இதற்கு சித்திரைக் கனிப்பூ என்ற பெயரும் உண்டு.

இதன் வேர், பட்டை, இலைகள், விதைகள், மருத்துவ குணம் கொண்டவை.

நல்ல பதிப்பு. தொடருங்கள்....

ஹாட்லி கல்லூரிக்கு வெளியே நான் காணவில்லை :unsure:. சிலவேளையில் உள்ளே கொன்றை மரம் இருந்திருக்கலாம் :) . மிக்க நன்றிகள் டங்கு :) .

கொன்றையின் சிறப்பை நான் ஒரு பதிவிலிருந்து அறிந்து கொண்டேன் அவையாவன:

சமஸ்கிருத மொழியில் கொன்றையின் பெயர் குண்டலினி ஆகும். தங்க மலர்களில் சுருண்டு இருக்கும் மகரந்த்தாள்கள் பாம்பாக உருவமுள்ள குண்டலினி சக்தியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது.

இதற்கு சித்திரைக் கனிப்பூ என்ற பெயரும் உண்டு.

இதன் வேர், பட்டை, இலைகள், விதைகள், மருத்துவ குணம் கொண்டவை.

நல்ல பதிப்பு. தொடருங்கள்....

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் கருத்துக்களுக்கும் , தகவல்களுக்கும் :):):) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் பல பூக்களையும்செடிகளையும் கனநாளைக்குப்பின்னர் காண சந்தோசமாக இருக்கிறது

நன்றி தகவலுக்கும் தங்கள் நேரத்திற்கும்.

  • தொடங்கியவர்

ஊரின் பல பூக்களையும்செடிகளையும் கனநாளைக்குப்பின்னர் காண சந்தோசமாக இருக்கிறது

நன்றி தகவலுக்கும் தங்கள் நேரத்திற்கும்.

கருத்துக்களைக் கூறிய விசுகு அண்ணைக்கு மிக்க நன்றிகள் :):):) .

  • தொடங்கியவர்

37 கோடல்ப் பூ .

32530940.jpg

கோடல் என்பது வெண்காந்தள் மலர்.

குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

காந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு. முருகப்பெருமானுக்கு ஆறு தலை எனக் கற்பனை செய்கின்றனர். காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு. முருகனைக் கார்த்திகேயன் என்பார்கள். இவை எல்லாமே ஒப்புமைக் கற்பனைகள்.

பெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன எனப் பாடல்கள் உவமை காட்டுகின்றன.

சங்கு அடுத்துச் செய்த வளையல்கள் வெள்ளைநிறம் கொண்டவை. எனவே வெண்காந்தள் மலராகிய கோடல் மலரே இங்கு உவமையாக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

38 சண்பகப் பூ .

75921559.jpg

88323637.jpg

சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவிற் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும் பெண்களும் இதன் பூக்களை அழகுக்காகவும் இயற்கையான நறுமணத்துக்காகவும் தலையிற் சூடிக் கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் திகழ்வதற்காக நீர் மேலிடப்பட்டு வைக்கப்படுவதுடன், மணவறைக் கட்டில்களிலும் மணமாலைகளிலும் இதன் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சண்பகம் என்பது மிகுந்த நறுமணத்தைக் கொண்ட ஓர் அரிய தாவரம். அதனாலேயே இது பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை. தலையிற் சூடப்படும் போது இதன் தனியொரு பூவே சூடப்படுகிறது. சில வேளைகளிலேயே இது சிறிய கொத்தாகச் சூடப்படும். மிக அரிதாகவே இதனாற் செய்யப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன. மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும் உரோசாவும் போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் கொண்ட நீர்ப் பாத்திரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன. அழகு மிகுந்த இதனால், நறுமணத் தன்மை குறைந்த ஏனைய பூக்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது."

சண்பகப் பூவின் நறுமணத்தின் காரணமாக இது 'களிப்புறு நறுமண மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பல இல்ல நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

39 சிந்துப் பூ (சிந்துவாரம் ).

20959459.jpg

40 சுள்ளிப் பூ .

40648926.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ்.. இந்தப் பூக்கள் எல்லாமே தாய்நாட்டில் இருக்கின்றனவா? தெரிந்தவர்களும் எழுதலாமே??!!

  • தொடங்கியவர்

கோம்ஸ்.. இந்தப் பூக்கள் எல்லாமே தாய்நாட்டில் இருக்கின்றனவா? தெரிந்தவர்களும் எழுதலாமே??!!

இந்தப் பூக்கள் எமது மூதாதையர்கள் சங்க காலத்தில் பார்த்து ரசித்தவை . ஏறத்தாள தொன்னூற்றொம்பது வகையான பூக்கள் சங்ககாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன . அதில் ஒரு சில இன்று வழக்கொழிந்தும் , ஒருசில பாவனையிலும் உள்ளன . கபிலர் குறுந்தொகையில் இதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார் இசை . மேலும் யாராவது இதனை மேலும் மெருகுபடுத்தினால் மிகவும் சந்தோசமடைவேன் :):) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

41 செங்கோடுவரிப் பூ .

16541077.jpg

42 செம்மல்ப் பூ .

77902970.jpg

800pxflowersemmal.jpg

செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.

உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.

செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது.

குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர்.

அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகனுக்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

37 கோடல்ப் பூ .

32530940.jpg

கோடல் என்பது வெண்காந்தள் மலர்.

குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

காந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு. முருகப்பெருமானுக்கு ஆறு தலை எனக் கற்பனை செய்கின்றனர். காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு. முருகனைக் கார்த்திகேயன் என்பார்கள். இவை எல்லாமே ஒப்புமைக் கற்பனைகள்.

பெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன எனப் பாடல்கள் உவமை காட்டுகின்றன.

சங்கு அடுத்துச் செய்த வளையல்கள் வெள்ளைநிறம் கொண்டவை. எனவே வெண்காந்தள் மலராகிய கோடல் மலரே இங்கு உவமையாக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.

http://ta.wikipedia....%AE%B2%E0%AF%8D

38 சண்பகப் பூ .

75921559.jpg

88323637.jpg

சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவிற் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும் பெண்களும் இதன் பூக்களை அழகுக்காகவும் இயற்கையான நறுமணத்துக்காகவும் தலையிற் சூடிக் கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் திகழ்வதற்காக நீர் மேலிடப்பட்டு வைக்கப்படுவதுடன், மணவறைக் கட்டில்களிலும் மணமாலைகளிலும் இதன் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சண்பகம் என்பது மிகுந்த நறுமணத்தைக் கொண்ட ஓர் அரிய தாவரம். அதனாலேயே இது பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை. தலையிற் சூடப்படும் போது இதன் தனியொரு பூவே சூடப்படுகிறது. சில வேளைகளிலேயே இது சிறிய கொத்தாகச் சூடப்படும். மிக அரிதாகவே இதனாற் செய்யப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன. மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும் உரோசாவும் போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் கொண்ட நீர்ப் பாத்திரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன. அழகு மிகுந்த இதனால், நறுமணத் தன்மை குறைந்த ஏனைய பூக்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது."

சண்பகப் பூவின் நறுமணத்தின் காரணமாக இது 'களிப்புறு நறுமண மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பல இல்ல நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

http://ta.wikipedia....%AE%AE%E0%AF%8D

இது சிட்னியில் ஒரு உறவினர் வீட்டில் உள்ளது! அவர் இதை வெட்டி எறிய ஆயத்தமாகியபோது, இன்னொரு நண்பரால் இந்த மரம், தடுத்தாட்கொள்ளப் பட்டது!

இப்போது பூத்துக் கொட்டுகின்றது! மிகவும் அருமையான நறுமணம்!

கோமகனின் பதிவின் அருமை இப்போது விளங்குகின்றது!

நன்றிகள், கோமகன்!!!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நல்ல பதிவுகள் தொடருங்கள்

  • தொடங்கியவர்

43 செருந்திப் பூ .

serundhi.jpg

அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென

ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்

கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,

‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப்

பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,

அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்

வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,

கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்

நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,

மாலை மணியிதழ் கூம்பக் காலைக்

கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்

கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;

வாரார் கொல்? எனப் பருவரும்

தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!

http://treesinsangam...ae%a4%e0%ae%bf/

சங்கப்பாடல்களில் செருந்தி எனக்குறிப்பிடப்படும் புல்லை நெட்டுக்கோரை என்றும் வாட்கோரை என்றும் இக்காலத்தில் கூறுகின்றனர். ( நீளமாக வளர்வதால் நெட்டுக்கோரை. வாள் போல் பூ பூப்பதால் வாட்கோரை. )

41372698.jpg

44 செருவிளைப் பூ .

21912228.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

45 சேடல்ப் பூ .

144px1.jpg

சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று. வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம். பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் பொருத்தமானதே.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

74237485.jpg

பவழமல்லி அல்லது பவளமல்லி என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbortristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

40856370.jpg

இம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும்.

நீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். வட அத்த கோளத்தில் இம்மரம் செப்டெம்பர் -டிசம்பர் வரை பூக்கும்.

இதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லி ஆகும். அதன் அறிவியற் பெயர்: Millingtonia hortensis

பவளமல்லிப் பூவை பாரிஜாதமலர் என்றும் அழைப்பர் .

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

63797880.jpg

46 ஞாழல்ப் பூ .

குறுந்தொகை 328, பரணர், நெய்தல் திணை – தோழி சொன்னது

சிறுவீ ஞாழல் வேர் அளைப் பள்ளி

அலவன் சிறுமனை சிதையப் புணரி

குணில்வாய் முரசின் இயங்கும் துறைவன்

நல்கிய நாள்தவச் சிலவே அலரே

வில்கெழு தானை விச்சியர் பெருமகன்

வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்

புலிநோக்கு உறழ்நிலை கண்ட

கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/

97180387.jpg

  • தொடங்கியவர்

47 தணக்கம் பூ ( பல் பூந்தணக்கம் ) .

27116005.jpg

69ae0aea4e0aea3e0ae95e0.jpg

69e0aea4e0aea3e0ae95e0a.jpg

48 தளவம் பூ .

இந்தப் பூவை இப்பொழுது ஜாதிமல்லிகை அல்லது செம்முல்லைப் பூ என்றும் அழைப்பர் .

222pxflowermullaithalav.jpg

18528884.jpg

17599263.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

49 தாமரைப் பூ .

19478858.jpg

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம் ,இந்தியா , சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

85271335.jpg

தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம்.ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார்

45940301.jpg

72971541.jpg

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.

தாமரைப்பூவில் முக்கியமான நிறங்கள் .

  • வெண்தாமரை --- வெள்ளை நிறத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மலர்.
  • செந்தாமரை --- சிவப்பு நிறத்தில் உள்ள சிவப்புத் தாமரை மலர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88

57089168.jpg

77967827.jpg

16284547.jpg

50 தாழைப் பூ .

13254638.jpg

குறுந்தொகை 117, இயற்றியவர் குன்றியனார், நெய்தல் திணை – தோழி சொன்னது .

மாரி ஆம்ப லன்ன கொக்கின்

பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு

கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்

கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்

வாராது அமையினும் அமைக

சிறியவும் உள ஈண்டு விலைஞர் கைவளையே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-fragrant-screw-pine/

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.. தாமரை மொட்டும், பூவும் அசத்தல்.. :D நன்றிகள் கோம்ஸ்..! :D

  • தொடங்கியவர்

51 திலகப் பூ .

72772147.jpg

52 தில்லைப் பூ ( கடி கமழ் கடிமாத் தில்லை ) .

74145687.jpg

புறநானூறு 252, பாடியவர்: மாற்பித்தியார்

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,

தில்லை அன்ன புல்லென் சடையோடு,

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.

தில்லை மரம்

95855257.jpg

பெண் தில்லைப் பூ

93823042.jpg

ஆண் தில்லைப் பூ

32679370.jpg

தில்லைப் பழம்

95925050.jpg

  • தொடங்கியவர்

வாவ்.. தாமரை மொட்டும், பூவும் அசத்தல்.. :D நன்றிகள் கோம்ஸ்..! :D

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் இசை :):) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன்! இவ்வளவு பொறுமையாக இருந்து இத்தொடரை முன்னெடுக்கின்றீர்கள்.அதுவும் இன்றையகால கட்டத்தில்.............வாழ்த்துக்கள். :wub:

கோமகன் பூங்காவுக்குள் புகுந்தாலே குதுகலம்தான்.

பார்க்காத பூக்கள் எல்லாம் பார்க்கலாம் இங்கே.

பூங்காவனம் அமைத்த கோமகனுக்கு

இப்பூக்களினால் மாலை அணிவிக்கிறேன்.

  • தொடங்கியவர்

53 தும்பைப் பூ .

48679602.jpg

தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. இலங்கையின் சில ஊர்களிற் தும்பங்காயைக் கறி சமைத்து உண்பர்.

34989476.jpg

இலையின் மருத்துவ குணங்கள

1 .குடற் புழுக்களை வெளியேற்றும் .

2 .வயிற்று வலியைக் குணப்படுத்தும் .

3 .மாதவிலக்கைத் தூண்டும் .

4 .சளியை இளக்கி வெளிப்படுத்தும் .

http://ta.wikipedia....%AE%AA%E0%AF%88

54 துழாஅய் பூ .

58389248.jpg

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.