Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடம் நம்பிக்கை இல்லை தமிழ் மக்களின் தெளிவான குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indiax.jpg

தமிழர் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்தியாவில் நம்பிக்கை இல்லை என்ற கருத்தை இதுவரை தெளிவாக பதிவு செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா தூதுவர் ராப்பிடம் கருத்துரைத்த முல்லைத்தீவு மக்கள் இந்தியாவை நாம் நம்பவில்லை என்று தெட்டத் தெளிவாக உரைத்து அரசியல் நகர்வில் முக்கிய காலடி பதித்துள்ளார்கள். இது குறித்து வெளியான செய்தி வருமாறு..

நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான் அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்த உறவினர்கள் பலர் மூன்று வருடங்களாகிவிட்டபோதும் இதுவரை மீண்டும் வரவில்லை என்றும் அவர்களில் சிலரை இறந்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுமாறு இப்போது இராணுவத்தினர் கூறுகிறார்கள் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரிபன் ராப்பிடம் தெரிவித்தார்கள் முல்லைத்தீவு மக்கள்.

இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைத்த பிள்ளைகளின் ஒளிப்படங்களையும் ராப்பிடம் கையளித்த பெற்றோர்கள் அவர் முன் கதறியழுதபடி நீதி கிடைக்க வழிசமைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அரசு நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் விசாரணை தமக்குத் திருப்திகரமானதாக இல்லை என்றும் அங்கு தெரிவித்த பெற்றோர்கள், நீதியான சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ராப்பின் திடீர் பயணம்

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ராப் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். நேற்று அவர் கிளிநொச்சியில் சந்திப்புக்களை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதையொட்டி கிளிநொச்சியில் சிறிது பரபரப்பும் நிலவியது. ஆனால் திடீரென முல்லைத்தீவுக்கு இரகசியமாக வந்த ராப், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் யூதாததேயூ ஆலயத்தில் இந்தத் திடீர்ச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உடனடியான அழைப்பை ஏற்று சுமார் 25 வரையான பொதுமக்கள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இறுதிப் போரின்போது நடந்தவைகள் குறித்து ராப் அந்த மக்களிடம் விசாரித்தார். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். ஐ.நா. வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களை அந்த மக்களிடம் இருந்து அறிந்து கொள்வதிலும் அவர் ஈடுபாடு காட்டினார்.

பொதுமக்கள் அவரிடம் தெரிவித்ததாவது:

காணாமற்போனோர் இறுதிப் போரின்போது காணாமற்போனவர்கள் இரு வகைப்பட்டவர்கள். போர் நடந்துகொண்டிருந்தபோது காணாமற்போனவர்கள் ஒரு வகையினர். மற்றொரு தொகுதியினர் சரணடைவதற்காக இலங்கை இராணுவத்தினரிடம் உறவினர்களால் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள்.

வட்டுவாகலில் வைத்து இவர்கள் இராணுவத்தினரிடம் மனைவிமாராலும் தாய்மாராலும் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள். இப்படி ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்பதைப் பின்னால் வந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது கேட்டால் அப்படித் தாங்கள் யாரையும் பொறுப்பேற்கவில்லை என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.

தமது பிள்ளைகள் எங்கே என்று கேட்டுச் சென்ற தாய்மார்கள் சிலருக்கு, “உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் பதிலளித்துள்ளனர்.

ஆணைக்குழு விசாரணை நடிப்பு

நல்லிணக்க ஆணைக்குழு எங்களிடம் பகிரங்க இடத்தில் விசாரணை நடத்தியது. புலனாய்வுப் பிரிவினர் அங்கு நின்றிருந்தார்கள். உண்மையைச் சொன்னால் ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சம் காரணமாக நாங்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை. உண்மையில் எம்மால் அங்கு சுதந்திரமாகச் சாட்சியமளிக்க முடிந்திருக்கவில்லை.

அப்படி இருக்கையில் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் எப்படி ஏற்க முடியும்? அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. நீதி கிடைக்க சர்வதேச விசாரணை ஒன்றே நடத்தப்படவேண்டும்.

மீள்குடியமர்வு முடியவில்லை

இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் கடந்த மூன்று வருடங்களாகக் கிடையாது. அவர்களால் எந்த அச்சமும் இல்லை. ஆனால் பல இடங்களில் எம்மை மீளக்குடியமர விடுகிறார்கள் இல்லை. படையினர் தமக்குத் தேவை என்று பெரும் தொகையில் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் ஒரு முகாம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் காணி போதாதா? எதற்காக 400 முதல் 500 ஏக்கர் காணியைக் கேட்கிறார்கள்? அவ்வாறு கேட்பதால்தான் எங்களால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் இருந்துவிட்டு மீதியை மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கலாம்தானே?

இராணுவப் பிரசன்னம்

வன்னியில் இராணுவத்தின் பிரசன்னம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை. எந்த ஒரு நிகழ்வாயினும் படையினர் அங்கிருப்பர். சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று அரசு கூறுகிறது. பின்னர் ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் இராணுவத்தை நிறுத்துகிறது?

காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும்

நாங்கள் சிங்களவர்களுக்கு நிகராக சம உரிமைகளுடன் வாழ்வதற்கே விரும்புகிறோம். அதனையே கேட்கிறோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் கூடிய ஒரு மாகாண சபையையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒரு தீர்வை அரசு வழங்க அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மக்களின் கருத்துக்களைக் கேட்ட ஸ்ரிபன் ராப், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும் என்று தெரிவித்தார்.

http://www.vannionli...-post_3276.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இந்தியாவில் நம்பிக்கை இல்லை" மிகவும் தெளிவான குரல். ஓங்கி ஒலிக்கட்டும். நம்பி நம்பிக் கெட்டது போதும். ஈழம் தமிழன் தானாகக் கேட்கவில்லை. இந்தியாவால் கேட்க வைக்கப்பட்டது தான். சிங்களவன் ஓங்கி அடிக்கவில்லை. அவன் கிந்தியரால் ஒங்கியடிக்க வைக்கப்பட்டவன்.

தமிழர்கள் தெளிவான மனநிலைக்கு வந்து வெளியில் கூறுமளவிற்கு வந்துவிட்டார்கள். நிச்சயம் சுபீட்சம் கிடைக்கும்.

பல தசாப்த அனுபவத்தின் பின்னர் இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளிடம் (அது காங்கிரஸ் பயங்கரவாதிகளாக இருந்தாலும் அல்லது பி. ஜே. பி. தமிழின விரோதிகளாக இருந்தாலும்) நம்பிக்கை வைப்பவர்கள் கடைந்தெடுத்த மடையர்களாகவே இருப்பார்.

தற்கால உலகில் மிக மிக மிக மிக மட்டரகமான, நாகரீகமற்ற, கலாச்சாரமற்ற, மனிதப் படுகொலைகளில் ஆர்வமுள்ள, மனிதாபிமானம் தெரியாதவர்கள் (காட்டுமிராண்டிகள்) ஆட்சி செய்வது இந்தியாவில் மட்டுமே.

எனவே இந்தக் காட்டுமிராண்டிகளை மாறி மாறி ஆட்சி செய்யத் தெரிவு செய்தவர்களின் (இந்தியர்கள் எனப்படும் இழி மனிதர்களின்) இழிநிலை பற்றி சுலபமாக விளங்கிக்கொள்ளலாம்.

சுருக்கமாக தற்கால உலகில் மிக மிக மோசமான மனித இனத்தினரே இந்தியர்கள் எனப்படுபவர்கள்.

இந்த விடயங்களையெல்லாம் இந்தியாவிற்கே முதலில் அறிவித்திருப்பார்கள் அமெரிக்கர்கள். அவர்களிடம் போயும் இதைக் கூறினார்களே.தமிழர் போராட்டத்தின் அழிவிற்கு இந்தியாவிற்கு எத்தகைய பங்குண்டோ அதேயளவு பங்கு அமெரிக்காவிற்குமுண்டு.

உலகின் எந்த நாடும் போராட்டம் நடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி தமிழருக்கு ஆதரவாயிருந்ததா என்பது கேள்விக்குறி.

ஈழத் தமிழர்களுக்கான பிரச்சனைத் தீர்வில் இந்திய அழுத்தத்தைத் தவிர வேறெந்த நாட்டின் அழுத்தத்திற்கும் சிறிலங்கா அடிபணியாது. சீன உறவு என்பதெல்லாம் ஒருவகைப் பூச்சாண்டிதான்.

இந்திய ஆதிக்கம் மனம் வைத்தால்தான் ஈழத்தமிழர் ஒரு நிரந்தரமான தீர்வை அடைய முடியும் என்பது வெளிப்படையான உண்மை.

Edited by Iraivan

அமெரிக்காவை சிறிலங்கா தொடர்பில் வழி நாடாத்தியது இந்தியா. நோர்வேயின் அறிக்கையும் அதனையே சொன்னது.இன்று தெளிவாக மனித உரிமை விடயத்தில் இந்தியா மேற்குலகுடன் முரண் பட்டுள்ளது.இவை எல்லாம் நாம் அறிந்த விடயங்கள்.இதனை எவரும் மறுதலிக்க முடியாது.

அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு ஒரு இத்தாலிய சுயாதீன ஆவணப் படத் தயாரிப்பாளர் எனத் தன்னை அறிமுகம் செய்த ஒருவர் வந்திருந்தார்.தான் சிறிலாங்கா தொடர்பான ஒரு ஆவணப்படம் எடுப்பதாகச் சொன்னார்.அவர் சிறிலங்கா,இந்தியா சென்று தான் பலரைச் சந்தித்தாகாச் சொன்னார்.அவர் ஒரு மேற்குலக உளவாளியாகக் கூட இருக்க முடியும்.அவர் அன்று அங்கு நின்ற அனைவரிடமும் ஒரு கேள்வியைக் கேட்டார்.சீனா சிறிலாங்காவிற்குள் இவ்வளவு வலுவாகாக் காலூன்றுகிறது, ஆனால் இந்தியா அதனைத் தடுக்க முயலாமல் ஏன் தமிழர்களை இன்றும் ஒடுக்கிக் கொண்டு இருக்கிறது என்று. எங்களால் அதற்கு இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் தவறிழைக்கின்றனர் என்பதைத் தவிர வேறு எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை.

உண்மையில் இந்திய கொள்கைவகுப்பாளார்கள் தொடர்ந்தும் இந்திய பூகோள நலங்களுக்கு மாற்றாகவே செயற்பட்டு வருகின்றனர்.அதற்கு முக்கிய காரணம் இன்றைய ஆட்சியாளர்கள் தமிழரை ஒடுக்குவதை முன் நிலைப்படுத்தியும் ,இந்திய தேசிய நலங்களை அதற்காகப் பலியிட்டும் வருகின்றனர்.

இதனை இந்திய மக்கள் மத்தியில் அம்பலப்படுதுவது அவசியம்.அதற்கு முதலில் எமது தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளிப்படையாகவே இந்திய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும்.முக்கியமாக மேனன், நிருபாமா, நாரயாணன் போன்றோரின் செயற்பாடுகளை. இவர்கள் சிங்கள ஆட்ச்சியாளர்களால் வாங்கப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

அதை விட்டு விட்டு கண்மூடித்தனமாக இந்திய அடுவருடி அரசியலைச் செய்வதன் மூலம் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர்.

//இந்திய ஆதிக்கம் மனம் வைத்தால்தான் ஈழத்தமிழர் ஒரு நிரந்தரமான தீர்வை அடைய முடியும் என்பது வெளிப்படையான உண்மை.

//

இந்திய ஆதிக்கம் என்றும் மனம் வைக்கப் போவதில்லை என்பது வரலாறு.வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டு எமது போராட்ட வழிமுறையை நாம் தீர்மானிக்காவிட்டால் ,வரலாற்றின் ஓட்டத்தை எமக்குச் சாதகமாக எம்மால் மாற்ற முடியாது.

தொடர்ச்சியான இந்திய அடிவருடி நிலையில் இருந்து கொண்டு இதனைச் செய்ய முடியாது.இந்தியா என்பது அதன் ஆதிக்க வர்க்கம் மட்டும் அல்ல என்பதை எப்போது நாம் புரிந்து கொண்டு, அந்த ஆதீக்க வர்க்கத்தை முறையடிக்கும் போராட்ட வழிமுறைகளை எமது வழிமுறைகளாக்குகிரோமோ அப்போது தான் எமது போராட்டம் வெற்றி பெறும்.

நாரதர்,

அடிவருடித் தனத்திற்கும் உண்மைக்குமான இடைவெளிகள் நிறையவுண்டு. தமிழர்களின் எதிர்ப்போ, இந்தியாவை நம்பவில்லை என்ற கருத்தோ பயனில்லாதவை.

மேற்குலகும் இந்தியாவினதும் மனிதவுரிமை சம்ந்தப்பட்ட முரண்பாடென்பது இல்லாததொன்று. சிறிலங்காவின் போர் தொடர்பில் இந்தியாவின் பங்கை மேற்குலகும் நன்கறியும். ஆனாலும் அது பற்றி அவைகள் பெரிதாக வாய் திறப்பதில்லை. நோர்வேயின் அறிக்கை வெளிவந்த பின்பும், உண்மையிதுதானென அறிவிக்கப்பட்ட பின்பும் நிலைமைகள் அப்படியே இன்னமும் மாறாமலிருக்கிறது.

இப் பத்தி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தாற்போல் அமைந்திருந்தாலும், அமெரிக்கா அதனைச் செவிமடுத்தாலும் பிராந்தியத்தில் அது இந்தியாவை மீறிச் செயற்படாது.

தமிழர் போராட்டம் தற்போதைக்கு ஒரேயெரு நோக்கத்தில்தான் திரும்ப வேண்டும், அதுதான் பயன் கொடுக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இந்தியாவை ஈழத்தமிழர் விடயத்தில் தலையிட வைப்பதற்கு உலக நாடுகள் அழுத்தங்களை மேற்கொள்ளச் செய்ய வைத்தல் வேண்டும். இந்தியாவிற்கு மேற்குலகு மூலம் விடுக்கப்படும் கோரிக்கைகளோ அழுத்தங்களோ இந்தியாவினால் ஊதாசீனப்படுத்த முடியாது.

காரணம் பிராந்திய ஆதிக்கத்தை இந்தியா தக்கவைத்துக் கொள்வதற்கு இதுவொரு நல்ல வாய்ப்பாக இந்தியா கருதிக் கொள்ளும். இரண்டாவது இந்திய எதிர்ப்பு என்பது எவ்வளவு தூரம் வரைக்கும் செல்லுபடியானது?

இவைகளுக்காக இந்தியாவிடம் மண்டியிடத் தேவையில்லை. இந்தியாவை நாமும் இந்தியா நம்மையும் நாடிவரச் செய்வதற்கு இப்படியான வழிமுறைகள்தான் சிறந்தது. அமெரிக்காவிடம் கோரிக்கை விடுப்பதைவிடவும் சீனாவிடம் கோரிக்கைவிடத் தயங்குவதேன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றும் இன்றும் என்றும் நாம் இந்தியாவை நம்பமாட்டோம். இந்தியாவை நம்பமாட்டோம். இந்தியாவை நம்பமாட்டோம். இதுவே எமது தாரக மந்திரம்!

இறைவன், புலிகளை அழித்த பின்னும், சீனா சிறிலங்காவில் வலுவாகக் காலூன்றிய பின்னரும் ஏன் இந்தியா தமிழருக்கு உரிமை வழங்கும் விடயத்தில் சிறிலங்கா அரசு மீது எந்தவித அழுத்தங்களும் இல்லாத வண்ணம் தொடர்ந்தும் செயலாற்றி வருகிறது என்பதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்? மிகுதியை அதில் இருந்து பேசலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன், புலிகளை அழித்த பின்னும், சீனா சிறிலங்காவில் வலுவாகக் காலூன்றிய பின்னரும் ஏன் இந்தியா தமிழருக்கு உரிமை வழங்கும் விடயத்தில் சிறிலங்கா அரசு மீது எந்தவித அழுத்தங்களும் இல்லாத வண்ணம் தொடர்ந்தும் செயலாற்றி வருகிறது என்பதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்? மிகுதியை அதில் இருந்து பேசலாம்.

இந்தியன் இந்தியாவை ஆண்டாள் தானே நலன் பற்றி கவலைபடுவான். 

இரானிய கூட்டம் அரசியலிலும்,  ஊடக துறையிலும், எமது கோவிலுக்குள்ளும் அறுநூறு வருடங்களாக ஊடுருவி அழித்து வருகிறார்கள்.  

தெற்காசியாவை ஸ்ரீ இரானிய பிடியில் இருந்து  மீட்டெடுக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்திலும் உண்மையை உரைக்க தயங்கா எம் மக்களுக்கு தலைவணங்குகின்றேன்.

இங்கு இந்தியா அமெரிக்கா ஐரோப்பா என இச்செய்தி போகவேண்டியதில்லை.

உலகத்தமிழருக்கு போனால் போதும்.

இதுவே அந்த மக்களின் செய்தி.

அவர்களது பலமும் நம்பிக்கையும் நாம் மட்டுமே.

அதை உணர்வோம்.

பலமாவோம்.

யாரும் இல்லாதபோது நமக்கு இந்தியாவிடம் இருந்து உதவி வருமா என்று எதிர் பார்த்ததுண்டு.

இந்தியா மண் குதிரை.

உலகில் பத்திரிகைச் சுதந்திரம், மனித உரிமைகள், ஊழல், வருமான வித்தியாசம் (ஏழை, பணக்கரர்), பெண் உரிமை, துவேச அரசியல், மூடநம்பிக்கைகள் அற்ற மதச் சுதந்திரம் என்று இன்றைய உலகின் நாகரீக இயல்புகளாகக் கருத்தப்படும் விடயங்களில் எல்லாவற்றிலும் இந்தியாவின் சுட்டெண் முன்னேற்றமடைந்து வரும் நாடுகளுக்கு மிகவும் கீழ்.

இந்த நிலையில் இப்போது இந்தியாவிலிருந்து ஒரு தெளிவான பாதுகாப்புக்கொள்கைகளையோ, அயல் நாட்டு அரசியல் ராஜதந்திர அசைவுகளையோ எதிர் பார்க்க முடியாது.

மேற்கு நாடுகளுக்கு இலங்கை மீதான தேவையை அதிகரிக்க வைத்து ஒரு தீர்வை தேடிக்கோண்டோமேயானால் அது நிரந்தரமானதாக இருக்கும். இளமையான(கோமாளித்தனமான) ஜனநாய இந்திய அரசியல் முதிர்ச்சியான, நிலையான ஒரு கட்டத்தை அடையும் வரை இந்தியாவுடன் எம்மைச்சேர்த்துகொள்வது எம்மை அந்தரத்தில் விட்டு விடும்.

தமிழரால் தம்மை பிரநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்படவர்கள் இன்னமும் இந்தியா அடிக்கடி போய் கதைத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள் .ஏதோ ஒரு செய்திவந்ததும் அதன் தாற்பரியம் என்ன நம்பகத்தன்மை என்ன என்று எதுவுமே தெரியாமல் உடனே மனக்கோட்டை கட்டுகின்றோம்.

//இந்திய ஆதிக்கம் மனம் வைத்தால்தான் ஈழத்தமிழர் ஒரு நிரந்தரமான தீர்வை அடைய முடியும் என்பது வெளிப்படையான உண்மை.

//

அதற்கு இந்தியா முயற்சித்து பட்டபாடு உலகறியும்.தமிழ்ஈழம் அல்லது சாம்பல் மேடு என்றவர்கள் நாம்.இப்ப அரை சாம்பல் மேட்டுடன் மிஞ்சிவிட்டோம்.நல்லவேளை வன்னிக்குள் மட்டும் போராட்டம் அடங்கியது அல்லது முழு சாம்பல் மேடுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இநிதியாவில் உண்மையானதும் பலமானதும் ஆன இளைஞர்களின் சக்தி முடக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் எல்லோரும் திரைப்பட போலிக்கதாநாயக பாத்திரத்திற்கு அலையவிட்டு அவர்களின் நாட்டுக்கான ஆக்கப+ர்வமான சக்தி அழிக்கப்பட்டு உத்வேகமுள்ளபோது அவர்களின் மனம் திரைப்பட கதாநாயகன் கனவில் அழிந்துவிடுகின்றது. இதனால் முதிர்ந்த அரசியலாளர்கள் தங்கள் சிம்மாசனத்தைத்தக்கவைத்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு நாட்டின் முதிர்ந்தவர்கள் அனுபவ முதிர்ச்சி இளைஞர்களை வழிநடத்தி அவர்களின் சக்தியை நாட்டின் வளமான எதிர்காலத்திற்குப்பயன்படுத்துவதைவிட்டு கனவுலகக்கதாநாயகன் கனவைப்புகுத்தி விடுகின்றார்கள். அதற்குப்பின்னால் அறிவிலா மக்கள் கூட்டம் அவர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலூற்றி பாலைவீணாக்குகின்றது. அந்தக்கட்டவுட்டுக்குப்பக்கத்தில் ஒரு ஏழை ஒரு நேர உணவிற்காகத் தவித்துக் கொண்டிருப்பான். இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெஞம்வரை இலங்கையில் என்ன பிரச்சனை என்பது தமிழ்நாட்டில் பெரும்பாலான நடிகர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியவே தெரியாது. சிலருடைய விளக்கங்கள்ஏதோ பட்டினியால் சாகிறாங்கள்வேணுமெண்டால்2பேரைத்தத்து எடுக்கின்றேன் என்று சொன்ன நடிகர்களும் உண்டு. இந்தியாவில் இளைஞர்கள் சக்தி வீணடிக்கப்படுகின்றமையால் தான் அங்கு சுதந்திர உணர்வு செத்துபோய் இருக்கின்றது. திரைப்படக்கதாநாயக பாத்திரமே அவர்களின் வாழ்க்கைக்கனவு. மனம் வருந்தத்தக்கது.

இறைவன், புலிகளை அழித்த பின்னும், சீனா சிறிலங்காவில் வலுவாகக் காலூன்றிய பின்னரும் ஏன் இந்தியா தமிழருக்கு உரிமை வழங்கும் விடயத்தில் சிறிலங்கா அரசு மீது எந்தவித அழுத்தங்களும் இல்லாத வண்ணம் தொடர்ந்தும் செயலாற்றி வருகிறது என்பதற்கான காரணத்தைச் சொல்லுங்கள்? மிகுதியை அதில் இருந்து பேசலாம்.

இந்திய சீன உறவுகளோ, இலங்கை இந்திய உறவுகளோ, இலங்கை சீன உறவுகளோ எவையும் சிக்கலான நிலையைக் கொண்டிருக்கவில்லை. அதுதான் காரணம்.

... முதலில் எமது தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளிப்படையாகவே இந்திய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும்.முக்கியமாக மேனன், நிருபாமா, நாரயாணன் போன்றோரின் செயற்பாடுகளை. இவர்கள் சிங்கள ஆட்ச்சியாளர்களால் வாங்கப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

அதை விட்டு விட்டு கண்மூடித்தனமாக இந்திய அடுவருடி அரசியலைச் செய்வதன் மூலம் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

போதைக்கு அடிமையானவன் அதிலிருந்து மீள்வது மிக மிகக் கடினம். அந்தாளின் போதைப் பழக்கத்தால் என்னதான் உடல், மன, குடும்ப பிரச்சினைகள் வந்தாலும் அவனால் போதையை விட்டு மீள்வது கடினம். அவனை அணு அணுவாக அழிக்கும் போதைப் பழக்கமே அந்தாளுக்கு சொர்க்கமாக தெரியும். தான், தனது குடும்பம் முழுமையாக அழியும்வரை நீண்ட அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் புத்தி இருக்காது.

அதுபோலவே பிச்சைக்கார இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள், ரோ எனப்படும் இந்தியப் பயங்கரவாதிகள் வீசும் எலும்புத்துண்டை நக்கி வாழ்ந்துவரும் ஒருசிலதுகளும் கடைசி வரை இந்திய ஓநாய்களின் அடிவருடிகளாகவே இருக்கும்.

இதையே நாம் அவ்வப்போது சில கருத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது.

கொதிக்கும் அளவிற்குக் கருத்துக்களைக் காணவில்லை. இது எலும்புத்துண்டும் நாயும் விளையாடும் விளையாட்டல்ல. இன்றைய நிலைக்கு யாரால் தீர்வு கிட்டலாம் அதை எப்படிப் பெற முடியும் என்பதுதான் சிக்கலானது. வரலாறு புகட்டியதை அவ்வளவு எளிதாக மறந்து விட்டார்கள் சிலர்.

யாருக்கும் பின்னால் கருத்தைப் பொறுக்காமல் சொந்தக் கருத்துகளையு தீர்வுகளின் வழிகளையும் ஆராய்வதுதான் சிறந்தது. எடுத்ததிற்கெல்லாம் காட்டுமிராண்டி, எலும்புத் துண்டு, நாய் இவைகள்தான் பருத்தாக வெளிப்படுவதை அனேக கருத்துக்களில் பார்த்துவிட்டேன். ஒன்றும் உருப்படியாயில்லை. போதையிலுள்ளவர்கள் அரற்றுவது போலுள்ளது.

இந்தியா மூலமான தீர்வுதான் ஈழத்தமிழருக்குச் சாத்தியம். அதைச் செயற்படுத்துவதாயின் மேற்குலகமும் அமெரிக்காவும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வழிகளை புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தமிழர் கூட்டமைப்பும் புலம்பெயர் மக்களும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதைவிடுத்து குரைப்பது சரியாகவராதுங்கோ.

போதைக்கு அடிமையானவன் அதிலிருந்து மீள்வது மிக மிகக் கடினம். அந்தாளின் போதைப் பழக்கத்தால் என்னதான் உடல், மன, குடும்ப பிரச்சினைகள் வந்தாலும் அவனால் போதையை விட்டு மீள்வது கடினம். அவனை அணு அணுவாக அழிக்கும் போதைப் பழக்கமே அந்தாளுக்கு சொர்க்கமாக தெரியும். தான், தனது குடும்பம் முழுமையாக அழியும்வரை நீண்ட அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் புத்தி இருக்காது.

அதுபோலவே பிச்சைக்கார இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள், ரோ எனப்படும் இந்தியப் பயங்கரவாதிகள் வீசும் எலும்புத்துண்டை நக்கி வாழ்ந்துவரும் ஒருசிலதுகளும் கடைசி வரை இந்திய ஓநாய்களின் அடிவருடிகளாகவே இருக்கும்.

இதையே நாம் அவ்வப்போது சில கருத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரால் தம்மை பிரநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்படவர்கள் இன்னமும் இந்தியா அடிக்கடி போய் கதைத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள் .ஏதோ ஒரு செய்திவந்ததும் அதன் தாற்பரியம் என்ன நம்பகத்தன்மை என்ன என்று எதுவுமே தெரியாமல் உடனே மனக்கோட்டை கட்டுகின்றோம்.

//இந்திய ஆதிக்கம் மனம் வைத்தால்தான் ஈழத்தமிழர் ஒரு நிரந்தரமான தீர்வை அடைய முடியும் என்பது வெளிப்படையான உண்மை.

//

அதற்கு இந்தியா முயற்சித்து பட்டபாடு உலகறியும்.தமிழ்ஈழம் அல்லது சாம்பல் மேடு என்றவர்கள் நாம்.இப்ப அரை சாம்பல் மேட்டுடன் மிஞ்சிவிட்டோம்.நல்லவேளை வன்னிக்குள் மட்டும் போராட்டம் அடங்கியது அல்லது முழு சாம்பல் மேடுதான்

இந்தியா பட்ட பாடு என்றால் எது? உங்களை மாலைதீவிற்கு அனுப்பியதைச் சொல்லுறீகளா?? அல்லது 1987 இல் இருந்து 1989 வரை அது ஈழத்தில் செய்ததைச் சொல்லுகிறீர்களா?? அல்லது 2009 இல் முள்ளிவாய்க்காலில் செய்ததைச் சொல்லுகிறீர்களா???

கொதிக்கும் அளவிற்குக் கருத்துக்களைக் காணவில்லை. இது எலும்புத்துண்டும் நாயும் விளையாடும் விளையாட்டல்ல. இன்றைய நிலைக்கு யாரால் தீர்வு கிட்டலாம் அதை எப்படிப் பெற முடியும் என்பதுதான் சிக்கலானது. வரலாறு புகட்டியதை அவ்வளவு எளிதாக மறந்து விட்டார்கள் சிலர்.

யாருக்கும் பின்னால் கருத்தைப் பொறுக்காமல் சொந்தக் கருத்துகளையு தீர்வுகளின் வழிகளையும் ஆராய்வதுதான் சிறந்தது. எடுத்ததிற்கெல்லாம் காட்டுமிராண்டி, எலும்புத் துண்டு, நாய் இவைகள்தான் பருத்தாக வெளிப்படுவதை அனேக கருத்துக்களில் பார்த்துவிட்டேன். ஒன்றும் உருப்படியாயில்லை. போதையிலுள்ளவர்கள் அரற்றுவது போலுள்ளது.

இந்தியா மூலமான தீர்வுதான் ஈழத்தமிழருக்குச் சாத்தியம். அதைச் செயற்படுத்துவதாயின் மேற்குலகமும் அமெரிக்காவும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வழிகளை புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தமிழர் கூட்டமைப்பும் புலம்பெயர் மக்களும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதைவிடுத்து குரைப்பது சரியாகவராதுங்கோ.

நீங்கள் யார்?? அரசியல் ஞானியா அல்லது சோதிடரா?? எப்போ பார்த்தாலும், "இந்தியாவை ஒன்றும் புடுங்க முடியாது, அனுசரித்துத்தான் போகவேண்டும்" என்று அரசியல் உபதேசம் செய்கிறீர்கள்??

இவ்வளவிற்கும் இந்தியாவை நீங்கள் ஆதரிக்கும் காரணம் என்ன??? கூட்டமைப்பை அது ஆட்டுவிக்கிறது என்பதாலா?? உங்கள் கருத்துக்களை முன்னர் (2009 இற்கு முன்னர்) ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. இப்போது அருவருப்புத்தான் வருகிறது. உங்கள் இந்திய அபிமானத்திற்கு அளவேயில்லையா???

இந்திய சீன உறவுகளோ, இலங்கை இந்திய உறவுகளோ, இலங்கை சீன உறவுகளோ எவையும் சிக்கலான நிலையைக் கொண்டிருக்கவில்லை. அதுதான் காரணம்.

சீனத் தளபதி , இந்து சமுத்திரம் எமது பிராந்தியம் என்கிறார், அமெரிக்க அதிபர் நாம் எமது இராணுவத்தை அங்கே தான் பலப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். இங்கே மேற்குலகிற்கும் , சீனாவிற்கும் முரண்பாடு வலுவாக உள்ளது.

மேற்குலகம் , இந்தியாவைக் கொண்டு சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த நினைக்கிறது.அதனாலையே மேற்குலகம் இந்தியாவை அண்டி தமது கொள்கைகளை சிறிலங்கா தொடர்பில் தமிழர் தொடர்பில் வழி நடாத்த முயற்ச்சிக்கிறது. இத் திட்டத்திற்கு இந்தியா உடன் படாதவிடத்து ,மேற்குலகம் இந்தியாவிற்க்குள் அதற்கான வேலைத்திட்டங்களைச் செய்யும்.கில்லரியின் தமிழ்னாட்டுப் ப்யணம் அதில் ஒன்று.மனித உரிமை விடய்ங்களை சிறிலங்கா தொடர்பில் எழுப்புவது இன்னொன்று.இவை எவையும் இந்தியாவுக்கு உடன்பாடான விடய்ங்கள் அல்ல.

தமிழரின் தேசிய உரிமைப் போராட்டமே இந்திய ஆதிக்கச் சக்திகளுக்கு பிரச்சினையான ஒன்று. இதில் நாங்கள் தெளிவாக எங்கள் எதிரி அன்றும் இன்றும் நாளையும் இந்திய அதிகார வர்க்கம் எங்கிறோம். ஏனெனில் அதன் நலங்கள் எமது நலங்களுக்கு நேர் எதிரானது எங்கிறோம். இந்த அதிகார சக்தியை உடைக்காமால் எமக்கான விடுதலை நாம் என்றைக்கும் பெற முடியாது. இந்தச் சக்திக்கு எதிரான சக்திகளுடன் இந்தியாவிற்க்குள் உள்ளேயும் வெளியேயும் நாம் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே எமக்கான விடுதலை நாம் பெற முடியும். இது வெறும் புலிகளுக்கும் சோனியாவுக்கும் இடையேயான் பிரச்சினை இல்லை. அதனால் தான் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் இந்திய அதிகார பீடம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது.

தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்பதை, சீனாவின் வெளியில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தலை விடத் தனது இருப்பை இல்லாது செய்யக் கூடிய ஒரு போராட்டமாக இந்திய ஆளும் வர்க்கம் கருதுவதாலையே அது அன்றும் இன்றும் நாளையும் எதிர்க்கும்.அதனாலையே அது சிறிலங்காவில் சீனாக் காலுன்றினாலும் பறுவாயில்லை புலிகளையும் அவர்கள் முன் நின்று நடாத்திய தமிழத் தேசியப் போரை அழிப்பதில் முன் நின்றது.

ஆகவே எமது போராட்டம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக இந்தியாவிற்கு உள்ளேயும் இந்தியாவிற்கு வெளியேயும் இயங்க வேண்டும்.இதன் மூலம் மட்டுமே எம்மால் எமது போராட்டத்தை வெல்லப் படக் கூடிய வழியில் கொண்டு செல்ல முடியும்.

//யுத்தக் காலங்களிலும் சரி, இன்றும் சரி, இலங்கையின் வலுவான கூட்டாளியாக இருக்கிற இந்தியாவையும் தனது செல்வாக்கின் கீழ் கொணர அமெரிக்கா முயல்கிறது.

இலங்கைக்கு பொறுப்புக் கூறுவதற்கு இன்னுமொரு வாய்ப்பைத் தருமாறு இந்தியா அமெரிக்காவைக் கோருகிறது. இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையறாத உரையாடல் நடந்து வருகிறது. இந்தியா முழுமையாக அமெரிக்கச் சார்பு நிலைபாடு எடுக்கும் எனச் சொல்ல முடியாது.

என்றாலும், இலங்கையை இந்த இக்கட்டிலிருந்து தப்ப வைப்பதற்காக தமி;ழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட எம்.எஸ்.கிருஷ்ணா வலியுறுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் பிரீசுக்கு ஒரிருநாட்கள் கால அவகாசம் தருமாறு கிருஷ்ணாவைக் கோரினார். //

டெலிகிராப் செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து, ஓரளவிற்க்கு என்ன நடக்கிறது அன்பதைச் சொல்லும் செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போதும் தனது நலனுக்காக ஈழ தமிழரையும் சரி ஏனைய தமிழர்களையும் பாவித்திருக்கின்றது சிலசமயங்களில் எமக்குள் மோதவிட்டு எம்மினத்தை அழித்துள்ளது இதற்க்கு எம்மினத்தில் உள்ள சில தலைவர்களும் விலை போயிருந்தனர் .....

தமிழரின் ஒட்டுமொத்த முதல் எதிரி இந்தியாதான் இந்தியா என்றொரு நாடு இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு கிட்டாது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை மீறி இன்னுமொரு வல்லமைமிக்க நாட்டை உள்நுழைப்பதிலேயே எமது விடிவு தங்கியுள்ளது..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை மீறி இன்னுமொரு வல்லமைமிக்க நாட்டை உள்நுழைப்பதிலேயே எமது விடிவு தங்கியுள்ளது..! :rolleyes:

அது இந்த வைக்கல் பட்டடை நாய் இருக்கும் வரை நடக்காது <_<

//பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டும்! - கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம்! //

இறைவன் இதையும் சிர மேற்கொண்டு இந்தியாவைச் சிலுவையில் சுமக்கப் போகிறீர்களா? இது நடந்தால் மக்கள் உங்களை நிச்சயமாக நிராகரிப்பார்கள். இந்திய மாயையில் இருந்து வெளியேறி கூட்டமைப்பு மக்கள் போராடங்களை நடாத்த வேண்டிய காலகட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.