Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் விஜய் நம்பியார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nambiar-100x100.jpg

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த நம்பியார், “இனப்படுகொலையில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுவது உங்களில் உள்ள பிரச்சினை. இந்த விவகாரத்தில் மேரி கொல்வின் தொடர்புபட்டிருந்தார். தற்போது அவர் மரணமாகி விட்டார். எனது நிலையை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சிரியாவின் கடந்தவாரம் கொல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின், சிறிலங்காவில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த போது என்னுடன் தொடர்பு கொண்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவதற்கு தரகராக செயற்பட அவர் முனைந்தார். அவர் என்னுடன் பேசினார் என்பது உங்களுக்குத் தெரியும்.“ என்றார். அதையடுத்து இன்னர்சிற்றி பிரஸ், “சரணடைவதற்கு சாட்சியாக செல்லும்படி உங்களை கொல்வின் வலியுறுத்தினார் அல்லவா?“ என்று கேட்டது. அதற்கு அவர், ஆம் என்றார்.

“அங்கு போகும்படி கேட்கப்பட்டேன். இரண்டுமுறை நான் அமெரிக்க இராஜதந்திரி பொப் பிளேக்குடன் தொடர்பு கொண்டேன். நாம் இருவரும் அங்கு போகத் திட்டமிட்டிருந்தோம். கடல் வழியாக அனைத்துலுக செஞ்சிலுவைக் குழுவால் அங்கு போக முடியவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அனுமதி மறுத்து விட்டது. எம்மால் கட்டாயப்படுத்த முடியவில்லை. அங்கே எமக்கு வேறு வழி இல்லை.“ என்றார் நம்பியார். “சரணடைய முயன்றவர்கள் சாட்சிகளின்றிக் கொல்லப்பட்டது குறித்து வெளியில் ஏன் நீங்கள் பேசவில்லை?” என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பியது.

“அன்று நள்ளிரவு நேரம் மேரி என்னை அழைத்தார். இரண்டு பேர் – அவர்களின் பெயர்களை நான் மறந்து விட்டேன், ஒருவர், சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர் – சரணடைய விரும்புவதாக சொன்னார்.

சுதந்திரமாக சென்று சரணடைவதற்கான உறுதிப்பாட்டைப் பெறுத்தர வேண்டும் என்று கோரினார். நான் சரி என்று சொன்னேன். என்னால் அதைச் செய்ய முடியும். அதை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், அதிபர் ஆகியோரிடம் எடுத்துச் சென்றேன்.

சரணடையும் எவரையும் தாம் விரும்புவதாக அவர்கள் கூறினர். அதன்பின்னர் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.“ என்றார் நம்பியார். “உறுதிமொழியை நீங்கள் பெற்றுக் கொடுத்திருந்தால், அப்போது சாட்சியாக செல்வதற்கு தடுக்கப்பட்டது, நீங்கள் உறுதிமொழி பெற்றுக் கொடுத்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து ஏன் நீங்கள் வெளியே பேசவில்லை?“ என்று கேள்வி எழுப்பியது இன்னர்சிற்றி பிரஸ்.

“பின்னர் அவர்களின் ஆட்களாலேயே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். தடங்கல் ஏற்படும் என்று நான் எந்த ஊகத்தையும் கொண்டிருக்கவில்லை. பசில் ராஜபக்ச கூட அதனைச் சொன்னார். கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் அது முக்கியமானதாக இருந்தது.

அப்போதைய சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலித கொஹன்னவுடனும் பேசியிருந்தேன்“ என்று கூறியுள்ளார் நம்பியார்.

http://www.saritham.com/?p=51797

உறங்கிக்கிடக்கும் உண்மைகள் வெளியே வரும்!

தொடர்ந்தும் அயராது கொலைகாரர்களின் முகத்தை கிழிக்கும் இன்ரர்சிட்டி ஊடகவியலாளர் மத்தியூ லீ உண்மையிலேயே எமக்கு கிடைத்த புண்ணியவான்.

  • கருத்துக்கள உறவுகள்

மேரி கொல்வின் இறந்தபின்னர் ஏன் இதையெல்லாம் சொல்லுறான்? :unsure:

வெள்ளைக்கொடி விவகாரம் இன்னும் பூதாகரமாக உருவெடுக்க வேண்டும்..!!

இந்தியக் காட்டுமிராண்டிகள், மலையாள சதிகாரர்கள் உண்மையை உளறுவதைத் தவிர வேறு வழியில்லை - என்னும் நிலை எம்மவர்களின் முயற்சிகளால் ஏற்பட்டுள்ளது. ஆனால் போகவேண்டிய தூரம் இன்னும் மிக மிக அதிகம்.

எத்தனுக்கு எத்தனான பிளேக்கை கண்டு பயப்படுகிறார் போலிருக்கு. பிளெக் தன்னுடன் நண்பனாக இருக்கும் போது எடுத்த தேவையான பதிவு நாடாக்களை அமெரிக்க அரசிடம் கையளித்திருக்கலாம் என்று நினைக்கிறார் போலும். இருந்தாலும் மேரி அம்மையார், மேற்பார்வை தேவையில்லை ஏன் எனில் இலங்கை தனக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது என்று இவர் கூறியதாகத்தான் கூறியிருந்தார். இப்போது தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்கிறார். அதற்கும் செஞ்சிலுவை சங்கம் போகமுடியாதிருந்ததையும் சொல்கிறார். அதாவது புலிகள்ஆயுத்ததை வைத்து சரணடைந்த பின்னர், இன்னொடு கூட்டம் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் பயணகள் ஆபத்தாக இருக்கத்தககதாக ஆயுத பிரயோகத்திலிருந்தது என்கிறார். இதைத் தெளிவாக இராணுவம் என்று கூறாமல் புலிகள் தங்களுக்குள்ளேயே சுடுபட்டதனால் வந்த ஆபத்தாக மறைவில் வருணிக்கிறார்.

சரணடந்த எல்லோரையும் மற்றவர்களை ஏற்றுக்கொள்ளப்பட மாதிரியான நிபந்தனைகளில் இவர்களும் ஏற்றுக்கொள்ளப்படபோவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். இது ஜனாதிபதிக்கு களநிலை தெளிவா தெரிந்திருந்ததையும், அவர் இராணுவத்தலைவர்களிடம் ஆலோசியாமல் முடிவெடுத்திருப்பதும், களநிலைகளின் படி இரணுவத்திற்கு சாதாரணமாக சரண் அடைவோரை ஏற்க முடிந்திருந்தது என்பதையும் காட்டுகிறது. இந்த நிலையில் செஞ்சிலுவை சங்கம் சரணடவோரை பார்க்க முடியாதிருந்த்தது இராணுவம் வேண்டுமென்றே தடுத்தனாலாகும். களநிலை கட்டுப்பாடில்லாமல் இருந்திருந்தால், செஞ்சிலுவை சங்கம் அணுகமுடியாதிருந்திருந்தால், அது புலிகளால் ஏற்பட்ட நிலைமையாக நம்பியாரோ, பிளேக்கோ, அல்லது ஜனாதிபதியோ கருத்தியிருதிருந்தால் புலித்த்லைவர்கள் சணடைய முன்னர் அதை நிவிர்த்திசெய்ய சொல்லி அவர்களை கேட்டிருப்பார்கள் என்ற முறையில் புலிகளின் பக்கத்திலிருந்து சூடுகள் நின்ற பின் நம்பியார் யானையை அழைத்து வந்து பொறிக்குள் விழுத்தினார் என்பது உண்மை. ஆகவே தான் ஊகமாக கூறுவதாக முழுப்பொய் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார். வெளியே வரத் தைரியம் வந்தது மேரி அம்மையாரின் இறப்பென்பது மறுக்க முடியாத உண்மை. சில உண்மைகளை சொல்லவது போல் நடிப்பது அமெரிக்கவிற்குப் பயந்து என்பதும் உண்மை.

Edited by மல்லையூரான்

'விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை' [ Saturday, 25 February 2012, 05:47.57 PM. ] pulithevan_nadesan_ltte.jpgஇலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் விஜய் நம்பியார் கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்போர், விடுதலைப் புலிகள், மனித உரிமை போரின் இறுதிக் கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன், சாமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைவது குறித்து தன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கு சில தகவல்களை அனுப்பப்பட்டதாக சிரியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் தெரிவித்திருந்தார்.

சரணடைபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் ஆனால் சரணடையச் சென்றோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது .

இந்த நிலைமையிலேயே, விடுதலைப் புலித் தலைவர்கள் சரணடைவதை மேற்பார்வை செய்ய தான் அனுமதிக்கப்படவில்லை என்று விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

ஐநா மன்றத்தில் தலைமைச் செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகராக (பர்மா விவகாரம்) உள்ள விஜய் நம்பியார், பர்மா நிலைமை தொடர்பில் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றி உங்களுக்கு என்ன விடயங்கள் தெரியும், அந்த நடவடிக்கைகளில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று விஜய் நம்பியாரிடம் கேள்வியொன்றைக் கேட்டார்.

இதன்போது, பர்மா சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்க முடியும் என்று விஜய் நம்பியாருக்கு அருகிலிருந்த ஐநா தலைமைச் செயலரின் துணைப் பேச்சாளர் கூறியதை அடுத்து, குறித்த ஊடகவியலாளருக்குத் தேவையானால் இலங்கை விவகாரம் குறித்து பின்னர் தனிப்பட்ட ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என்று விஜய் நம்பியார் கூறினார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த விஜய் நம்பியார், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவர் சரணைடைவதற்கு தான் ஏற்பாடு செய்ய முயன்றதாகக் கூறினார்.

'உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது'

சிரியாவில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட பிரி்ட்டிஷ் ஊடகவியலாளர் மேரி கொல்வின், தன்னுடன் தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இருவர் சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு கேட்டதாக விஜய் நம்பியார் கூறினார்.

இதன் பின்னர், தான் அமெரிக்க இராஜதந்திரி பிளேக்குடன் இரண்டு தடவைகள் தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் இருவரும் சரணடைவதை கண்காணிக்க செல்லத் திட்டமிட்டதாகவும், செஞ்சிலுவை சங்கத்தால் கடல்வழியாக செல்ல முடியாமல் இருந்ததாகவும் அரசாங்கம் தங்களுக்கு அங்கு செல்ல அனுமதியளிக்கவில்லை என்பதால் தம்மால் போகமுடியாமல் போனது என்றும் விஜய் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.

‘ நடு ராத்திரியில் மேரி எனக்கு அழைப்பு எடுத்தார். இரண்டு பேர், நான் அந்தப் பேர்களையும் மறந்துவிட்டேன்., ஒருவர் சமாதான அலுவலகத்தைச் சேர்ந்தவர், அவர்கள் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் வெளியில் வர ஒருவழியை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவாதம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மேரி கூறினார். சரி, நான் அதனைச் செய்கின்றேன் என்று கூறினேன். அது தொடர்பில் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன். அப்போது சரணடைபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது’ என்று அந்த ஊடகவியலாளரிடம் கூறினார் விஜய் நம்பியார்.

உங்களுக்கு உத்தவாதம் அளிக்கப்பட்டிருந்தால் ஏன் உங்களுக்கு சரணடையும் இடத்துக்குச் செல்ல அனுமதி தரப்படவில்லை? உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏன் நீங்கள் அதுபற்றி மௌனம் காத்தீர்கள்? என்று மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

‘அவர்கள் அவர்களின் ஆட்களாலேயே சுடப்பட்டிருக்க்க் கூடும். எந்த விதமான ஊகங்களுக்கும் செல்ல நான் தயாரி்ல்லை...’என்று பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார் போரின் இறுதித் தருணங்களில் இலங்கைக்குச் சென்றிருந்த ஐநா பிரதிநிதி விஜய் கே. நம்பியார்.

Edited by BLUE BIRD

'விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை'

மக்களை கூட கண்காணிக்க அனுமதி அளிக்கவில்லை.

ஏன்? இதற்கு ஐ.நா. என்ன நடவடிக்கை எடுத்தது?

ஏன் சிங்கள அரசை ஐ.நா. ஏன் தடுத்தாய் என கேட்கவில்லை??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆரை நம்பிய ஈழத் தமிழரா.. மலையாள நம்பியாரை நம்பிய சிங்களவரா...?

mgr.jpg

சிறீங்காவிற்கு எதிராக மனித உரிமைக் கமிஷன் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் மறைமுகமான வில்லனாக இருப்பவர் மலையாள நம்பியாரே..

எம்.ஜி.ஆரை நம்பிய ஈழத் தமிழர் அழிக்கப்பட்டு, இப்போது கிளைமாக்சில் நிற்கிறார்கள்.. எம்.ஜி.ஆர் காட்டிய தர்மமா.. இல்லை நம்பியார் காட்டிய அதர்மமா..? ஜெனீவாவில் ஜெயிக்கப் போவது.. யாரு..?

இப்படியொரு சுவாரஸ்யமான ஒப்பீட்டுடன் இன்றைய சிறீலங்கா செய்திகளுக்குள் நுழைகிறோம்…

சிறீலங்காவில் இடம் பெற்ற போர்க் குற்றங்களின் மல வாடை இன்றய மேலைத் தேய ஊடகங்களின் காலைச் செய்திகளில் நெடில் வீச ஆரம்பித்தது. சர்வதேச அரங்கில் சிறீலங்கா என்ற நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக சற்று முன் அவை சுட்டிக் காட்டியுள்ளன. மனித உரிமை அமைப்பு சிறீலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள 80 பக்க குற்றச்சாட்டுக்களை அடியொற்றி டேனிஸ் ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டுள்ளன.

2009 மே மாதம் வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பொது மக்கள் வாழிடங்களை குறி வைத்து சிங்களப் படைகள் தாக்குதல் நடாத்தின.. இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

வைத்தியசாலைகள் மீது திட்டமிட்ட ஷெல் வீச்சு நடாத்தப்பட்டது இது மறுக்க முடியாத உண்மை..

ja-3.jpgசரணடைந்த விடுதலைப் புலி பெண் போராளிகளில் பலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் இது மன்னிக்க முடியாத சர்வதேச குற்றம்.. உதாரணம் இசைப்பிரியா கூட்டுப் பாலியல் கொலை.. சிங்கள அரசே இதற்கு அப்பட்டமான முழுப் பொறுப்பு..

அந்த நிகழ்வில் 40.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், ஆனால் நன்கு ஆதாரங்கள் கிடைத்த மரணங்கள் 11.172 ஆகும். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சதாம் உசேன் கூட வெறும் 80 பேர் கொலைக்காகவே தூக்கிலிடப்பட்டார். உலகில் போர்க் குற்றம் சுமத்தப்பட்ட மிகப் பெரிய எண்ணிக்கை இதுவாக உள்ளது. உலகத் தலைவர்களை திகைக்க வைத்துள்ளது.

சிறீலங்காவின் போர்க்குற்ற விஷ நெடில் ரூனிசியா தலைநகர் ருனிஸ்சில் இருந்த உலக நாடுகளின் 60 வெளிநாட்டு அமைச்சர்களின் மூக்குகளையும் நேற்று விரல்விட்டு குடைந்தது.

நேற்று முன்தினம் சிரியாவில் கூடிய உலகின் 60 நாடுகளின் முக்கிய தலைவர்கள் சர்வாதிகாரி ஆஸாட்டின் அடாவடித் தனங்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான பேச்சுக்களை உறுதிபட நடாத்தினார்கள். அவர்கள் காதுகளுக்குள் சிறீலங்காவும் முன்மாதிரி படமாக இருக்கிறது என்பது தெரிந்ததே.

அத்தருணம் கருத்துரைத்த சவுதி அரேபியா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், தன்னுடைய சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கும் ஒரு துவேஷ அரசுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு ஆயுதம் கொடுப்பது தவறே அல்ல என்று தொவித்தார்.

ja-2.jpgஇன்று அதிகாலை வெளியான சவுதி தொலைக்காட்சி செய்தியில் சவுதி இளவரசர் செயட் அல் பைசால் சிரிய சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான ஆயுதங்களை சிரிய போராளிகளுக்கு வழங்கத் தயார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சவுதி மன்னர் அமெரிக்காவின் கயிற்றில் ஆடும் ஒருவர் என்றாலும், அவருடைய குரல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச வரவேற்பு பெற்றுள்ளது.

சிறீலங்காவையும், சிரியாவையும் பார்த்து உலகம் கண்ணீர் வடிக்கிறது..

இரண்டாம் உலகப் போரின் போது ஆசிய விவகாரத்தில் மாபெரும் தவறை இழைத்துவிட்டதையும் உணர்கிறது. பல நாடுகளில் தப்பான இனவாத, துவேஷ, ஜாதிவெறி ஆட்சி, ஜனநாயகம் என்ற போர்வையில் நடைபெறுகிறது. இதை வேரோடு பிடுங்கி எறிய உலக சமுதாயம் முடிவெடுத்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையில் சீனா, ரஸ்யா ஆகிய மோசமான நாடுகள் இரண்டு வீட்டோவை பாவித்து சிரிய சர்வாதிகாரியை பாதுகாக்க முயற்சித்தன. இப்போது ஐ.நாவால் முடியாத விடயத்தை மறு வழியில் முடித்து வைக்க உலகம் அணி திரண்டுவிட்டது. மொத்தம் 60 நாடுகள் அணி ரூனிசியாவில் அணி திரண்டுவிட்டன.

இந்த எழுச்சியோடு சிறீலங்காவையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சிரியா போலவே அங்கும் குடும்ப ஆட்சி நடக்கிறது. சிரியா போலவே அங்கும் சொந்த நாட்டு மக்களை இனத்துவேஷத்துடன் சிங்கள இனவாத அரசு கொன்றுள்ளது. இன்று சிரியா கோம்ஸ் நகரில் நடாத்தும் அதே தாக்குதல்களை வன்னியில் சிங்கள அரசு 2009 ம் ஆண்டு நடாத்தியது.

ja-5.jpgசிறீலங்காவிற்கு உலக சமுதாயம் மன்னிப்பளித்தால் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கும் மன்னிப்பளிக்க வேண்டும். ஆகவேதான் இந்த இராஜதந்திர முனைப்பாக்கத்தில் இந்தியா வசமாக சிக்குப்பட்டு, சிங்களத்தை கைவிட வேண்டிய நெருக்கடிக்குள் மாட்டுப்பட்டுள்ளது.

இன்று சிறீலங்காவை விட மிகப்பெரிய சர்வதேச ஆபத்தில் இருப்பது இந்தியாவே. ஏற்கெனவே ஈரானின் எண்ணெயை இந்தியா இறக்குவதை நிறுத்தவில்லை. லிபியாவில் கடாபி வீழ்ச்சியடைய அவரிடம் இரவோடு இரவாக ஓயிலை ஏற்றுவதில் கண்ணாக இருந்த இந்தியாவை மேலை நாடுகள் மறக்கவில்லை. இப்போது இந்திய இராஜதந்திரம் சிறீலங்காவை கைவிடப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

ஈழத் தமிழ் மக்கள் குரலாக இந்தியா நின்றிருந்தால் இன்று சீனாவையும், ரஸ்யாவையும் புறந்தள்ளி மேலை நாடுகளுடன் கைகோர்த்து, இன்றைய உலக எழுச்சியின் பங்காளியாக மாறியிருக்கலாம். இனியாவது இந்தியா யூ ரேண் எடுக்க வேண்டும், அது ஈழத் தமிழ் மக்களுக்காக அல்ல, அவர்களுக்கு இனி இந்தியா தேவையில்லை. இந்தியா தன்னுடைய நலனுக்காக இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்.

இந்தியா சிறீலங்கா வன்னியில் செய்த வேலைக்கு எதிராக உலகம் யூ ரேண் எடுத்துவிட்டது.

அன்று..

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருந்து எம்.ஜி.ஆர் பேர் பெற்றார்…

பின்பு..

சிங்களவருக்கு ஆதரவான மலையாள நம்பியாரை நம்பியது இந்திய அரசு..

உருப்படவா முடியும்…?

எம்.ஜி. ஆரை ஆதரித்த ஈழத் தமிழரா.. இல்லை நம்பியாரை ஆதரித்த சிங்கள அரசா.. ஒப்பீடு பொருத்தமாகத்தான் இருக்கிறது.. சிறீலங்கா அரசு நயவஞ்சகம் செய்துள்ளதாக மனித உரிமைக் கமிஷன் குறிப்பிட்டிருப்பது அவர்கள் செய்த வில்லன் வேலைக்கு பொருத்தமான தலைப்பாகவே உள்ளது.

தொடர்கிறது.. கூத்து..

அலைகள் தென்னாசிய, சிரிய விவகாரப் பார்வை.. 25.02.2012

http://www.vannionline.com/2012/02/blog-post_3996.html

  • கருத்துக்கள உறவுகள்

நம்பியார், நிரம்பச் சொதப்புகின்றார்?

இவருக்கெதிரான ஆதாரங்கள், எங்கோ இருக்கின்றன என்பதே அதன் கருத்து!!!

ஒரு உலக சபை ஒன்றின்,நிறைவேற்று நிலையில் உள்ள ஒரு அதிகாரி, எவ்வாறு ஒரு எதிரியின் வாக்குறுதியை நம்பலாம்?

ஆனால், பல உண்மைகள் வெளிவரப்போகின்றன!

நம்பியார், நிரம்பச் சொதப்புகின்றார்?

இவருக்கெதிரான ஆதாரங்கள், எங்கோ இருக்கின்றன என்பதே அதன் கருத்து!!!

ஒரு உலக சபை ஒன்றின்,நிறைவேற்று நிலையில் உள்ள ஒரு அதிகாரி, எவ்வாறு ஒரு எதிரியின் வாக்குறுதியை நம்பலாம்?

ஆனால், பல உண்மைகள் வெளிவரப்போகின்றன!

உண்மைகள் வெளிவரத்தொடங்கி விட்ட நிலையில் தான் தான் தப்ப தனித்தனியாக ( தாழும் கப்பலில் இருந்து தாவும் நிலை) அறிக்கைகளையும் ஆதரவையும் தேடும் நிலை தொடங்கிவிட்டது.

சம்பந்தப்பட ஐ.நா., அதன் அதிகாரிகள் தமிழர் தரப்புக்கு ஒரு சுயாதீன சுயநிர்ணய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலமே தமது கறைபடிந்த கைகளை சுத்தப்படுத்தாலம்.

நம்பியார், நிரம்பச் சொதப்புகின்றார்?

இவருக்கெதிரான ஆதாரங்கள், எங்கோ இருக்கின்றன என்பதே அதன் கருத்து!!!

ஒரு உலக சபை ஒன்றின்,நிறைவேற்று நிலையில் உள்ள ஒரு அதிகாரி, எவ்வாறு ஒரு எதிரியின் வாக்குறுதியை நம்பலாம்?

ஆனால், பல உண்மைகள் வெளிவரப்போகின்றன!

மிகச்சரியான கருத்து. உண்மைகள் உறங்குவதில்லை. ஒருநாள் வெளிவரவே செய்யும்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, விரைவில் ஏதாவது நடக்கும் என நம்புவோம், தங்களின் நலனுக்காக ஆடாமல் உண்மை வெளிக் கொணர வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.