Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல் !

Featured Replies

ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல் !

http://naathamnews.com/?p=3794

AIM_73861.jpgஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை அமைக்க, இந்த எழுச்சி நிகழ்வு சர்வதேசத்தை வலியுறுத்தி நின்றது.

AIM_7340.jpg

AIM_7338.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில், சுவிசின் பல மாநிலங்களிலில் இருந்தும், பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் என ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும், ஒன்றுதிரண்ட மக்கள், ஐ.நா முன்றலை நிறைத்தனர்.

தமிழீழத் தேசியக் கொடியுடன், பல நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், சர்வதேசத்தை நோக்கிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் நின்றிருந்தனர்.

AIM_7339.jpg

கடந்த சனவரி மாதம் 28ம் நாள் லண்டனில் இருந்து, நா.தஅராசங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெய்சங்கர் முருகையா தலைமையில், தொடங்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம், பிரான்ஸ் வழியே இத்திடலை வந்தடைந்த போது சிறப்புடன் மக்கள் வரவேற்றுக் கொண்டனர்.

AIM_7372.jpg

சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, வெளிவிவகார அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு தூதரங்களுக்கும் அனுப்பி வைக்கவென வெளியிடப்பட்ட தபால் அட்டைகளில், 4000 அட்டைகள் மக்களினால் ஆர்வத்துடன் வாங்கி செல்லப்பட்டது.

IMG_0218.jpg

ஐ.நாவுக்கு எதிராகவும், சர்வதேசத்துக்கு எதிராகவும் கொழுப்பிலும், பிற இடங்களிலும் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களை, செய்திகளாக வெளியிட்டுள்ள பல சர்வதேச ஊடகங்கள் பலவும், ஜெனீவா ஐ.நா முன்றிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வினையும் எதிரெதிர் நிகழ்வுகளாக வர்ணித்து, செய்திகள் வெளியிட்டுள்ளன.

நிகழ்வுகள் :

AIM_7329.jpg

- அகவணக்கத்துடன் தொடங்கிய எழுச்சி நிகழ்வில், பொதுச்சுடரினை நா.த.அரசாங்கத்தின் உள்துற அமைச்சர் நகாலிங்கம் பாலசந்திரன் அவர்களும், ஈகைச் சுடரினை கே மேரி கொலின் – மற்றும் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான அருட் தெய்வேந்திரன், பாலன் சிவபாதம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

20120227_155605.jpg

- ஈகைப்பேரொளி முருகதாசன், சமீபத்தில் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகப்போராளி மெரி கொல்வின் ஆகியோரின் திருவுருவப்படத்துக்கான முதன்வணக்கத்தை, ஜெய்சங்கர் முருகையா செலுத்தினார்.

கௌரவிப்பு :

IMG_0172.jpg

சிறப்பு நிகழ்வாக நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்துக்கான கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது. நா.தஅரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வாழ்த்துக்கவி படிக்க, பிரதமர் வி.உருத்திரகுமாரனின் வாழ்த்துமடலை சின்னப்பு யோகராஜா அவர்கள் கையளிக்க, அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வாசித்து வழங்கி நடைப்பயணத்தை கௌரவித்தார்.

உரைகள் :

ஈழம்கவுன்சில் பிரதிநிதி அன்னா அனோர், ஈழஆதரவரவுச் சமூகச் செயற்பாட்டாளர் வெறேனா கிறாப் மற்றும் பிரான்சில் ஒபவில்லியஸ் பகுதியின் நகரபிதா ஜக் சல்வடோர் ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.

AIM_7350.jpgAIM_7392.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர், அவைத்தலைவர்பொன் பாலராஜன், தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ், மக்கள் பிரதிநிதிகளான ஜெய்சங்கர் முருகையா, மகிந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

AIM_7396.jpgAIM_7345.jpgAIM_7403.jpg

வெளியீடு :

ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சியப் பதிவாக, சர்வதேச இராஜதந்திரிகள், அரசுகள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் என பலமட்டங்களுக்கும் கையளிக்கவல்ல கையேடு ஒன்றும் இங்கு வெளியிடப்பட்டது.

செய்தியாளர் கலையழகன் அவர்கள் கையேடு குறித்து அறிமுக உரையை வழங்கினார்.

நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெயம் அவர்கள் வெளியிட்டு வைக்க பிரதிநிதிகள் கையேட்டடைப் பெற்றுக் கொண்டனர்.

AIM_7407.jpgAIM_7410.jpg

கலையரங்கு :

பிரான்சின் பிரபல கலைஞர் இந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களின் தேசியக் கலைவடிவமாகவுள்ள கூத்தின் பாடல்வடிவில், சர்வதேசத்தை நோக்கிய பாவொன்றினை வழங்கினார்.

டென்மார்கில் இருந்து வருகை தந்த நடனக்கலைஞர்கள், மக்களுக்க அரசியல் விழிப்பும், எழுச்சியும் ஊட்டும் வண்ணம், நடனங்களை வழங்கினர்.

IMG_0205.jpgAIM_7420.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு

2000 பேர் வரை பங்குபற்றினார்கள் என BBC இல் குறிப்பிட்டார்கள்.

சுவிசின் பல மாநிலங்களிலில் இருந்தும், பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் என ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும், ஒன்றுதிரண்ட மக்கள், ஐ.நா முன்றலை நிறைத்தனர்.

எனவே இத்தொகை போதாது.5 ஆம் திகதி எப்படி என்று பார்ப்பம்.

ஆனாலும் இலங்கைகெதிரான பிரேரணை ஐ.நா வில் சமர்ப்பித்தாலே இவர்களின் போராட்டங்கள் சர்வதேச முக்கியத்துவம் பெறும். இல்லாவிட்டால் தமிழர்களுக்கு மட்டும் தான் இது செய்தி.

முடிந்தவர்கள் இந்த அங்கத்துவ நாடுகளுக்கு சிங்களத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என கேட்டு ஒரு கடிதம் , ஒரு வரி என்றாலும், எழுதவும். நன்றிகள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=98651

ஜெனீவாவுக்கு போன உறவுகளுக்கு நன்றிகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு ஆதங்கம் நாமும் பலதடவைகள் ஐநா முன்றலில் எமது கோரிக்கைகளை ஐநாவில் பணிபுரிபவர்களின் செவிப்பறை கிளியுமளவுக்கு கத்தி உரத்து கூறிவுட்டோம் ஆனாலும் ஏன் எமக்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் !

சிலவேளை ஐநாவுக்குள் வேலைபார்ப்பவர்களுக்கு எந்த புலனும் வேலை செய்யவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு ஆதங்கம் நாமும் பலதடவைகள் ஐநா முன்றலில் எமது கோரிக்கைகளை ஐநாவில் பணிபுரிபவர்களின் செவிப்பறை கிளியுமளவுக்கு கத்தி உரத்து கூறிவுட்டோம் ஆனாலும் ஏன் எமக்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் !

சிலவேளை ஐநாவுக்குள் வேலைபார்ப்பவர்களுக்கு எந்த புலனும் வேலை செய்யவில்லையா ?

3 வருடத்துக்கு முன் உள்ள நிலையோடு ஒப்பிடும் போது தற்போது சிறு முன்னேற்றம் உண்டு தானே. தொடர்ந்து எமது முயற்சியில் தான் எமது முன்னேற்றம் தங்கியுள்ளது.

சிங்கள தலைவர்கள் நாடு நாடாக சென்று தமக்கு ஆதரவு தேடும் அதே வேளை எமது தலைவர்கள் சிறிலங்காவிலே தங்கி இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஊர்வலத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடத்துக்கு முன் உள்ள நிலையோடு ஒப்பிடும் போது தற்போது சிறு முன்னேற்றம் உண்டு தானே. தொடர்ந்து எமது முயற்சியில் தான் எமது முன்னேற்றம் தங்கியுள்ளது.

ஊர்வலத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி.

ஊர்வலத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி

வரலாற்று கடமையை செய்த உறவுகளுக்கு மிகுந்த நன்றிகள்

27 ஆம் திகதி என்னால் வேளையில் லீவு எடுக்கமுடியாத காரணத்தால்

5 ஆம் திகதியே நான் செல்ல இருக்கிறேன் உறவுகளே தயவு செய்து ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து நம் கடமையை செய்வோமா................

த தே கூட்டமைப்பு கூட போகவில்லை நாம் ஏன் போக வேண்டும் என நினைக்காதீர்கள் ஏனெனில் அது அரசியல் அதில் ஆயிரம் பொலிடிக்ஸ் இருக்கும்

உதாரணமாக கூட்டமைப்பினர் வந்தால் இவர்கள் சுதந்திரமாக வந்து தமது பிரச்சனையை பேசுமளவிற்கு கூட சிறிலங்காவில் சுதந்திரம் இருக்குது என்று கூறக்கூடிய நிலைமையை உலகமும் சொரிலன்காவும் உருவாக்கிவிடும் என்று கூட சிந்திக்கலாம் அல்லவா ???????? நான் அவர்கள் செய்தது சரி அல்லது பிழை என்பதற்கப்பால் கூறிக்கொள்வது என்னவென்றால் புலம்பெயர் வாழ் எம்மால் தான் எல்லாம் முடியும் என்பது என்பது தான்.... எனனில் சகல சுதந்திரத்தோடும் சகலவிதமான சாத்தியக்கூறுகளுடனும் நாம் மட்டும் தான் இந்த உலகில் மிஞ்சியிருக்கிறோம் .............. ஆகவே எம்மால் தான் ஜெனிவாவில் நிறைய சாதிக்கமுடியும்.........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.