Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவா மாநாடு தொடர்பான த.தே.கூ.வின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கிறது: யாழ். பல்கலை மாணவர்கள்

Featured Replies

ஜெனீவா மாநாடு தொடர்பான த.தே.கூ.வின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கிறது: யாழ். பல்கலை மாணவர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான முடிவினைக் கேள்வியுற்று ஒட்டுமொத்தத் தமிழினமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, மக்களின் மனவிம்பங்களைப் பிரதிபலிக்க வேண்டிய தருணங்களில் மக்களுடனான கலந்துரையாடலின்றி, அவர்களின் விருப்பிற்கு எதிராக நம்பச் செய்து இறுதி நேரத்தில் எதிர்பாராத முடிவொன்றினை எடுத்தமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். போரில் நாம் இழந்த இழப்புக்களும் எமக்குச் சாதகமானதொரு சூழலைச் சர்வதேசத்தில் உருவாக்குவதற்குப் புலம்பெயர் உறவுகள் காட்டிவரும் அக்கறையினையும் அதற்கான அவர்களின் காத்திரமான பங்களிப்பினையும் பெறுமதியற்றதாக்கும் வகையிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனையொரு வரலாற்றுத் தவறாகவும் நாம் பதிவு செய்ய விரும்புகின்றோம். இவ்வாறான மக்கள் விருப்புக்கு முரணான முடிவுகளை எடுப்பது இது முதற்தடவையல்ல என்பதனையும் ஞாபகம் செய்வதுடன், இத்தீர்மானத்தின் பின்னரான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநாட்டின் காலப்பகுதிக்குள் அதில் பங்குபற்றுவது தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றினை விரைந்து எடுக்க வேண்டுகின்றோம்.

இன்றைய தேசிய சர்வதேசிய அரசியல் சூழ்நிலைக்குள் தமிழர் போராட்டமும் தமிழினம் முகங்கொண்ட இன அழிவுகளும் இராஜதந்திர அணுகுமுறைக்குள் முக்கியமானதொரு கருப்பொருளாகப் பார்க்கப்படும் இத்தருணத்தில் அதனைக் கருத்தின்றிச் செல்லுபடியற்றதாக்கும் வகையிலும் இழப்புக்களுக்குப் பொருளற்றதாக்கும் வகையிலும் எவரேனும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கேற்ற வகையிலும் மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய முறையிலான விருப்பொன்றிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமேயன்றி வேறெந்த சமூகத்தவர்களின் விருப்புக்களை உள்ளடக்கிய அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்ற, வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்கின்றதான அரசியல் செயன்முறைகளைக் கொண்டிருப்பதனை நாம் நிராகரிக்கின்றோம்.

குறிப்பாக தமிழ்த் தேசியம் தொடர்பான நிலைப்பாடுகளிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளிலும் தமிழ் மக்களின் விருப்புக்களிலான தீர்மானங்களையே எப்பொழுதும் எடுக்க முயலவேண்டும். அதற்கென்றே மக்கள் ஆணையும் வழங்கியுள்ளார்கள். இவ்வாணைக்குச் சாதகமாக புலத்திலுள்ள மக்கள் ஆதரவினையும் சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறான ஆணைக்கு எதிரான தீர்மானம் ஒன்றாகவே தற்போதைய முடிவினைக் கருதுகின்றோம்.

அத்துடன் ஜெனீவா மனிதவுரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் அரசாங்கமும் அதனோடு இணைந்துள்ள கட்சிகளும் காட்டிவரும் பிரதிபலிப்புக்களும் எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அதற்காக முழு அரச நிர்வாகங்களையும் பலாத்காரமாக நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் மனவுணர்வுகளுக்கு எதிரான விதத்தில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான பலாத்காரமான ஆட்சேர்ப்புக்களும் நாட்டில் இனரீதியான வேற்றுமையையும் சிங்களத் தேசியவாதத்தையுமே பிரதிபலிக்கின்றதேயன்றி வேறொன்றுமில்லை. இவ்வாறான தீவிர, தமிழர்களை அடிமைப்படுத்தும் மனநிலை கொண்டுள்ள அரசாங்கம் தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சிப்பதாகக் கூறுவதும் அதற்கான வேலைப்பாடுகளும் வெறும் ஏமாற்று வேலையே.

இதற்குத் துணைபோகும் வகையிலோ, மக்களின் உணர்வுகளைச் சிதைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள எந்த முடிவுகளுக்கும் எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதுடன், அதற்காக ஜனநாயக ரீதியில் போராடவும் நாம் தள்ளப்படுவோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/36822-2012-03-01-08-42-15.html

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் பொருள் பொதிந்த வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நா.க.த.அரசு ஜெனிவா மாநாட்டுக்கு தனது பிரதிநிதி எவரையாவது அனுப்புகிறதா? செய்தி தெரிந்தவர்கள் அறியத்தரவும்.

  • தொடங்கியவர்

நா.க.த.அரசு ஜெனிவா மாநாட்டுக்கு தனது பிரதிநிதி எவரையாவது அனுப்புகிறதா? செய்தி தெரிந்தவர்கள் அறியத்தரவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98635

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98691

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் கூட்டமைப்பின் பங்கேற்பின்மையும் இந்தியாவின் மௌனமும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகம்

gunadasa.jpgஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அரசாங்கமே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் தேவைக்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணையை கொண்டு வருகிறது.

எனவே தான் இந்தியா மௌனத்தை கடைப்பிடிப்பதோடு பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்தினால் மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் இந்தியா எம்மை அச்சுறுத்துகிறது.

அத்தோடு கூட்டமைப்பினரை ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென்று இந்தியாவே தடுத்துள்ளது. இதன் பின்னணியில் எமது நாட்டுக்கு எதிரான பயங்கரமான சதித்திட்டம் மறைந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைக்கு 6 மாத கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு வழங்கலாம்.

அக்காலஅவகாசத்திற்குள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு இந்தியாவும் அமெரிக்காவும் எம் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும்.

அத்தோடு சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இது இன்று “தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்ட” நிலைமையை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றார்.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, மக்களின் மனவிம்பங்களைப் பிரதிபலிக்க வேண்டிய தருணங்களில் மக்களுடனான கலந்துரையாடலின்றி, அவர்களின் விருப்பிற்கு எதிராக நம்பச் செய்து இறுதி நேரத்தில் எதிர்பாராத முடிவொன்றினை எடுத்தமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். போரில் நாம் இழந்த இழப்புக்களும் எமக்குச் சாதகமானதொரு சூழலைச் சர்வதேசத்தில் உருவாக்குவதற்குப் புலம்பெயர் உறவுகள் காட்டிவரும் அக்கறையினையும் அதற்கான அவர்களின் காத்திரமான பங்களிப்பினையும் பெறுமதியற்றதாக்கும் வகையிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனையொரு வரலாற்றுத் தவறாகவும் நாம் பதிவு செய்ய விரும்புகின்றோம். இவ்வாறான மக்கள் விருப்புக்கு முரணான முடிவுகளை எடுப்பது இது முதற்தடவையல்ல என்பதனையும் ஞாபகம் செய்வதுடன், இத்தீர்மானத்தின் பின்னரான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநாட்டின் காலப்பகுதிக்குள் அதில் பங்குபற்றுவது தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றினை விரைந்து எடுக்க வேண்டுகின்றோம்.

தலைவணங்குகின்றேன்.

கூட்டமைப்பை வழிநடாத்தும் தகுதி எம்மைவிட தங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

  • தொடங்கியவர்

ஜெனீவா மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

-வவுனியா வளாக மாணவர் ஒன்றியம்

தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கூட்டமைப்பு,ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரிற்கு செல்வதில்லை என்ற தீர்மானமும் அதற்காக அவர்கள் கூறியுள்ள காரணமும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வவனியா வளாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி மாநாட்டிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரசன்னமாகி இலங்கையில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்த காலப்பகுதியில் மட்டுமல்ல அதற்கு முன்னரான 60 ஆண்டுகளாக போர்க்குற்றங்களும் மனித்தத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்பதனையும் அவை வெறும் போர்க் குற்றங்கள் மட்டுமல்ல திட்டமிட்ட இனஅழிப்பு என்பதனை பதிவு செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நாட்டு இராஐதந்திரிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள் என்ற காரணம் காட்டி கூட்டத்திற்கு செல்வதிலிருந்து கூட்டமைப்பு விலகிக் கொண்டமை தமிழ் மக்களது நலன் அடிப்படையில் அல்லாமல் பிறசக்திகளது நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே கருதவேண்டியுள்ளது.

பிறநாடுகள் எப்போதும் தமது நலன்களை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பது வரலாறு. இதுவரை காலமும் தமிழ் மக்களது பிரச்சினையில் தலையிட்ட நாடுகள் தமிழ் மக்களை தமது நலன்களை அடைந்து கொள்வதற்காகவே பயன்படுத்திவந்துள்ளன என்பதும் கூட்டமைப்பினருக்குத் தெரியாத ஒன்றல்ல.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களது நலன் அடிப்படையில் சிந்தித்திருந்தால் நிச்சயம் ஜெனீவா சென்று தமிழர் தரப்பு நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதாவது தமிழ் மக்கள் மீது கடந்த அறுபது ஆண்டுகளில் புரியப்பட்ட இனஅழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நியாயம் பெற்றுக் கொள்ளுவதற்கு தமிழ்த் தரப்பிற்கு கிடைத்த முக்கயமாகதொரு சந்தர்ப்பத்தினை உரிய முறையில் பயன்படுத்தாது தவிர்த்துக் கொண்டதன் மூலம் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் சர்வதேச விசாரணை ஒன்றில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி புரிந்துள்ளனர்.

மனித உரிமைகள் மாநாட்டில் வாக்குரிமைகள் கொண்டுள்ள நாடுகளுக்கு எமது நிலைப்பாட்டை ஏற்கனவே எழுத்து மூலம் தெரிவித்து விட்டோம். செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம்.

ஆகவே அஞ்சத் தேவையில்லை. என்று கூறுவதும் வன்முறைச் சூழல் உருவாகும் என அஞ்சுகிறொம்.

அதனால் மீண்டும் எனதுமக்கள் பாதிப்படையக் கூடும் என அஞ்சுகிறோம். அவ்வாறு மக்கள் பாதிக்கப்படுவதனை விடும்பவில்லை. ஆகவே ஜெனிவாவுக்குச் செல்லவில்லை. என்று கூறுவதும் இனப்படுகொலையாளிகளுக்கு சாதகமாக தாம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் கூறும் நொண்டிச்சாட்டு.

கடந்த கால அரசுடன்மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் சிவில் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு, அதற்கான ஆக்கபூர்வமான பதிலேதும் கூட்டமைப்பினரிடமிருந்து கிடைக்கப்பெறாத நிலையில், மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.

தொடர்ந்தும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகளைத் தடுக்க சிவில் சமூகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக் கோருவதுடன் சிவில் சமூகத்தினருக்கு தமிழ் மக்கள பக்கபலமாக இருக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நடவடிக்கையானது, மாணவ சமுதாயமாகிய எங்களுக்கு கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=11176

Edited by akootha

  • தொடங்கியவர்

vavunaya_student_union_001.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இராசதந்திர ரீதியாக நகர்த்த வேண்டிய காய்களை நகர்தியுள்ளார். அவரது அமரிக்க சந்திப்புகள் அதற்க்கு நல்ல உதாரணம். சமந்தர் ஜெனீவா சென்றால் அங்கத்துவ நாடுகளின் ஊடகங்களுக்கும் அவைக்கும் அவர் புலிகள்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க நேரிடும். இது அரசுக்கு புலிகள்மீதான குற்றச்சாட்டுக்களை மையத்துக்கு நகர்த்த உதவும். புலிகளை குற்றவாளியாக்கும் மேற்க்கு நாடுகளின் ஆதாரங்களை சம்பந்தரால் விஞ்ஞானபூர்வமாக நிராகரிக்க முடியாது. இது தீர்மானத்துக்கு முன்னமே மேற்க்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும். இலங்கை அரசுக்குத்தான் அதன் நன்மைகள் கிட்டும். மேலும் கூட்டமைப்பு சர்வதேச நம்பகத் தன்மையை இழக்க நேரும். தமிழர்கள்போய் புதிய நிலமையை உருவாக்கும் வாய்ப்புகள் எதுவுமில்லை. அமரிக்காவின் விருப்பம் எதுவோ அதுதான் தீர்மானமாக வெளிவரும். அமரிக்காவை ஆதரிக்கும் நாடுகள் அதற்க்கு வாக்களிக்கும். தமிழர் அமைப்புகளும் தமிழ் நாடும் இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் சாத்தியங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. கூட்டணி ஜெனிவாவில் என்ன செய்துவிட முடியும்? புகள்மீதும் குற்றம் சுமத்தப் பட்டுள்ள ஒரு சர்வதேச அவையில் புலிச் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வாறு எடுத்துக்கொள்ளப் படும்? அத்தகைய செயல்பாடுகளுடன் சம்பந்தர் தன்னை அடையாலப் படுத்திக்கொள்வது உகந்த ராசதந்திரமா? பல கேழ்விகளுக்கு 100% சரியான பதில் ஏதுமில்லை.

இதுவரை சம்பந்தர் எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியான இராசதந்திரமாகவே அமைந்துள்ளது என்று கருதுகிறேன்.

நாம் உள்ள கையறு நிலையில் கிலுகிலுப்பையைவிட பணியாரம்தான் முக்கியம்

Edited by poet

  • தொடங்கியவர்

பல செய்திகள் குவிக்கப்படுவதால் உண்மையில் ஜெனிவாவில் என்ன நடக்க உள்ளது என்பது தெளிவாக முன்வைக்கப்படவில்லை.

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படுகின்றது. இதை செய்ய சிங்களத்திற்கு அவகாசம் கொடுக்கப்படவுள்ளது, அடுத்த தொடர் வரைக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொள்வதை இந்தியாவே தடுத்தது _ வீரகேசரி இணையம் 3/1/2012 12:56:20 PM indai.jpg

தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வரும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும்போது ஏகாதிபத்தியத்தை மறுத்து விடுகின்றனர் என இடதுசாரி முன்னணி தெரிவித்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்ளவே இந்தியா முயற்சிப்பதாகவும் அம் முன்னணி அறிவித்தது.

இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார்.

அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டது.

ஆனால் இன்று பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கைவிட்டுள்ளது. இதனால் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இதனை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியா மௌனமாக உள்ளது. ஏனென்றால் இம் முறையும் இந்தியா இலங்கையிடம் ஏமாறத் தயாரில்லை.

எனவே பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்வதற்கான பலாத்காரத்தை இந்தியா பிரயோகிக்கின்றது. அவ்வாறு இலங்கை உறுதிமொழியை வழங்காவிட்டால் கதை கந்தலாகிவிடும்''

ஏனென்றால் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாமென கூட்டமைப்பினரை இந்தியாவே தடுத்து வைத்துள்ளது. இவ்வாறானதோர் நிலையில் இலங்கை உறுதியை வழங்காவிட்டால் கூட்டமைப்பினரை ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியா பணிப்புரை விடுக்கும்.

இதுதான் இந்தியாவின் மௌனத்திற்கு காரணமாகும். அதேவேளை, அமெரிக்காவின் பிரேரணையை சீனாவோ ரஷ்யாவோ எதிர்க்காது. ஏனெனில் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றே இது முன்வைக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென பிரேரணை கொண்டு வருவதற்கு எதிராக ஏகாதிபத்தியவாத எதிர்ப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் ஏகாதிபத்திய வாதிகளின் சொல்லைக் கேட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் வயிற்றில் அரசாங்கம் அடிக்கும்போது மௌனமாக இருக்கின்றார்கள். ஏகாதிபத்திய விரோதம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

இது புதுவிதமான தீர்ப்பு என்றார். ___

  • தொடங்கியவர்

இந்தியா தடுத்தது என்பது ஊகம், ஆனால், கூட்டமைப்பு அறிக்கை விட்டது உண்மை.

எனவே, உண்மையில் இந்தியா தடுத்திருந்தால், அது அறிக்கை ஒன்றை விட அனுமதித்து இருக்குமா?

இல்லை இந்தியாவே ஒரு கையால் போகவிடாமல் தடுத்து மறு கையால் அறிக்கையை விட அனுமதித்ததா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இல்லை இந்தியாவே ஒரு கையால் போகவிடாமல் தடுத்து மறு கையால் அறிக்கையை விட அனுமதித்ததா??" --இதுதான் உண்மையாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.