Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணே உன் பேதமை களையாயோ..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

international-womens-day--001.jpg

கல்பனா..

விண்வெளிக்கு போனாளாம்

சில்பா...

லண்டனில பரிசு வாங்கினாளாம்

குஸ்பு..

தாலியை கேலி செய்தாளாம்

"கற்பு என்றால் என்ன "

துணிந்து கேட்டாளாம்..!

இன்னொருத்தி

இமயத்தில் கொடியை நட்டாளாம்..

இதெல்லாம்

பெண் விடுதலையின் விளைவுகளாம்..!

பெண் மேலாளர் ஆனாளாம்

பெண் புத்தகம் தூக்கினாளாம்

பெண் வாகனம் ஓட்டினாளாம்

பெண் விமானம் செலுத்தினாளாம்

பெண் வீட்டை என்ன

நாட்டையே ஆள்கிறாளாம்..!

வையகத்துள்..

பெண்ணில்லா துறைகள்

இல்லை எனும் நிலையும் படைத்திட்டாளாம்

இவை எல்லாம் சாதனைகளாம்..!

பேதையரே

எப்போ

உம் நிஜக் கண் திறப்பீர்..

ஈழத்தில்

சிங்கள இன வெறிக்கு

தீனியாகும் தமிழச்சிகள்

பெண்ணில்லையோ..???!

அவள் ஆடை களைந்து

மானம் விற்கும்

சிங்களக் காடையரும்

அவர் தம் கூலிகளும்

தண்டனை இன்றி

கொடுமை செய்வது

உம் கண்ணில் சிக்கலையோ..???!

பெண்ணின் விடிவுக்கு

தூணாகி நின்ற

பெண்ணியமெல்லாம்

வெறும் ஈயமாகி

அங்கு உருகி நிற்கும்

பலவீனம் தான் காணீரோ..???!

மேடைப் பேச்சுக்கும்

மலர் கொத்துக்கும்

பட்டங்கள் பதவிக்கும்

வாயால் நீட்டி முழக்குவதும்

பக்கம் பக்கமாய் அறிக்கை விடுவதும்...

பேனா மை

கையில் கறையாய் படிய

எழுதித் தொலைப்பதுமல்ல

பெண் விடுதலை..!

பெண்ணின்

இருப்பும்

உயிர்ப்பும்

வாழ்வும்

உறுதிப்படுத்தும்

தகுதியே

பெண் விடுதலை..!

பெண்ணே

உன் இருப்புக் காக்க

போர் குணம் கொள்..!

Pink கலருக்குள்

உன்னை அடக்கி

மகிழும் சிறுமையில் இருந்து.....

இன்னும் பல

பேதமைகள் உனக்குள்

நீயே அறியாத அடிமையின்

சின்னங்களாய் ஒழிந்து கிடக்க..

நீயோ..

விளம்பரப் பொருளாகி

இருப்பது அறியாது..

விடுதலை என்று

கீச்சிடுகிறாய்..!

அது உன்

கோழமை சொல்லுது..

உன் நிலை தாழ்த்துது.....!

மார்ச் 8 லாவது

பெண்ணே

உன்

நிஜம் அறி...

பலவீனம் அறி..

நிஜப் புரட்சி செய்ய

சமூகக் களத்தில்

துணிந்து நில்

துணிந்து செல்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இந்த கவிதையை ஆங்கில மொழுக்கு மாற்றி YouTube, FB, BBC,... etcஅனுப்பினால் நல்லது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இந்த கவிதையை ஆங்கில மொழிக்கு மாற்றி YouTube, FB, BBC,... etc அனுப்பினால் நல்லது

இப்ப இல்ல என்றாலும் முயற்சிக்கிறன். நன்றி உங்கள் ஆலோசனைக்கு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இல்ல என்றாலும் முயற்சிக்கிறன். நன்றி உங்கள் ஆலோசனைக்கு..! :):icon_idea:

Quote: பேதையரே

எப்போ

உம் நிஜக் கண் திறப்பீர்..

ஈழத்தில்

சிங்கள இன வெறிக்கு

தீனியாகும் தமிழச்சிகள்

பெண்ணில்லையோ..???!

பெண் விடுதலை கொண்டாடும் நேரத்தில் இதை FB / YouTube இல் போட்டால் நல்லது, நெடூத்தீவு படத்துடன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கிறேன். எனக்கு அவ்வளவா.. ஆங்கில மொழியை பேசுபவர்களை கவரும் வகையில் ஆங்கிலத்தில் கவிதை எழுத வராது. எழுதக் கூடியவர்கள் இதனைச் செய்தால் நன்றாக இருக்கும்..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Indo-US Astronaut Kalpana put her feet on space

"Bollywood" Shilpa won the price on Big Brother

"Kollywood" Kushboo wore plastic "thali"

These women are called revolutionists

In south Asia..!

On other hand....

Women are managers in large firms

Women are academics in great Unis

Women are drivers of heavy duty vehicles

Women are pilots of modern air-crafts

Not only that….

One climbed to the top of the Mount Everest

These are called great success of women..!

But.. In Eelam (Ancient Tamil land in Sri Lanka)

Everywhere

Naked bodies of Tamil women..!

No one opens up their mouth

No words recorded

To punished racist killers and culprits..!

Entire women’s world

In silent…!

On TV screen

"Boobies" reveal ads

"Pinkies" show fashions

Still Roses wish women

For Women’s Day..!

How can

Women to be real revolutionists..??!

How can

They protect

Their rights to live safe

In globe..?!

Be vigilant

Be brave

Come out from your own barriers

Open up your mouth

Act as what you say or think..!

Then.. only

Women can win

Rights to enjoy

Self protected life on Earth..!

That would be a day

For Real MARCH 8.

(நன்றி அகூதா. உடனையே சரி பிழை பார்த்து.. திருத்தி அனுப்பியமைக்கு.)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
nadunthivu_child_002.jpg

எமது பெண்கள் சுதந்திரமாக முழு உரிமையுடன் வாழும் நாட்கள் மீண்டும் வரும்.

நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் தம்பி

நல்லதொரு முயற்சி

ஆனால் வேதனை என்னவென்றால் பெண்களுக்காக குரல் கொடுக்கவும் நாம்தானே வரவேண்டியுள்ளது.

1- ஆண்கள்

2- தாயகவிரும்பிகள்

:D :D :D

இதற்கும் சிரிப்பத்தானா??? :lol::icon_idea:

420165_401902729824583_100000145796525_1686183_1122798435_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எள் எண்டால் எண்ணையா நிக்கிறார் நெடுக்ஸ்..! வாழ்த்துக்கள்..!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எள் எண்டால் எண்ணையா நிக்கிறார் நெடுக்ஸ்..! வாழ்த்துக்கள்..!! :D

MARCH 8 எங்களுக்காக காத்துக் கொண்டு நிற்காதே..! :icon_idea:

நன்றி தலைவா..! :)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின்

இருப்பும்

உயிர்ப்பும்

வாழ்வும்

உறுதிப்படுத்தும்

தகுதியே

பெண் விடுதலை..!..........பகிர்வுக்கு நன்றி .......

நல்லதொரு ஆக்கத்துக்கும் உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் கவிதைக்கு.வீட்டினுள் இருந்த பெண்களை துப்பாக்கி ஏந்தி எதிரியை திணற வைக்கும் வீரப்பெண்களாக மாற்றிய பெருமை வி.புலிகளையே சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி.....ச்சா ஒரு பச்சை தானே போடக் கூடியதாக இருக்கு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நன்றாக இருக்கு நெடுக்கு, ஏதோ ஒரு வகையில் உலகத்திற்கு எடுத்து சொல்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.