Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நகரசபைத் தலைவரை கடத்த முற்பட்ட இராணுவ புலனாய்வு வெள்ளைவான் கடத்தல்காரரை மடக்கிப் பிடித்தனர் மக்கள் - கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

witewan-_CI.jpg

கொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் சென்றோர் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றிரவு இலங்கை நேரம் பத்து மணியளவில் வெள்ளை வானில் சென்றோர் கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் அதரவாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் வெள்ளை வானில் சென்றோர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை கொலன்னாவைச் சந்தியில் வைத்து நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

kolannava.jpg

கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் என மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை நேரம் இரவு 11.23 மணிக்கும் வெல்லம்பிட்டிய காவல்; நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பில் இருந்து தெரிவித்துள்ளார். கடத்தல் முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட வான் சேதமாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு;- இன்று கடத்த முற்பட்ட உதய சாந்தவின் சகோதரர் ஏற்கனவே கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில் இன்றுவரை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் இன்று இவரைக் கடத்த முற்பட்டவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைவாகவே செயற்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கொலன்னாவத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச் சந்திரவை பதவி இறக்கம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அமைப்பாளராக மாற்றியதன் பின் ஆரம்பித்த அரசாங்க உட்;தரப்பு மோதல் பின்னர் பாரதவின் கொலையில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொலன்னாவவில் இரண்டாக பிளவுபட்டதன் பின் கொலன்னாவ நகரசபைத் தலைவர் உதயசாந்த அரசாங்கத்துடன் முரண்பட்ட நிலையிலேயே அரச புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கடத்திக் கொலை செய்வதற்கான முயற்சியை தொடர்வதாக தெரிகிறது.

http://www.globaltam...IN/article.aspx

கடத்தல் முயற்சி தோல்வி -கொலன்னாவையில் வெள்ளைவான் அடித்து நொருக்கப்பட்டது- கோத்தா?

Published on March 10, 2012-7:21 pm ·

kotta.jpgகொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் வந்தோர் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இன்றிரவு 10 மணியளவில் வெள்ளை வானில் வந்தோர் கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் அதரவாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் வெள்ளை வானில் வந்தோர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை கொலன்னாவைச் சந்தியில் வைத்து நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் வந்தோர் இராணுவத்தினர் என்றும் இது கோத்தபாயாவின் கீழ் இயங்கும் கடத்தல் குழு என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தற்போது இரவு 11.30மணியளவில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கடத்தல் முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட வான் சேதமாக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkathir.com/?p=32175

  • கருத்துக்கள உறவுகள்

sinkalvanin ....unmaimukam velikkuthu...periya padamakap podungkiya..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்திருந்தால் ....வன்னிபோர் என்று சொல்லி மக்களை திசை திருப்பியிருக்கலாம் இப்ப புலியும் இல்லை....இப்ப அரசியல் நடத்திறது என்றால் கொஞ்சம் கஸ்டமாய்தான் இருக்கும்....

ஜயோ சிங்களவனுக்கு இடையில் ஒற்றுமையில்லை..

சிறிலங்காவில ஓடுற வான்கள் 90% வீத மானவை வேலையே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்திய கேட்க....ஏனோ காதுக்க மைனா இறகை விட்டு சுத்துற சுகம் வருது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ஸ்ரீ லங்கா பிச்சைஸ்.  வரியும் கட்டி, வாக்கும் போட்டு,பின் தம்மையே தம் காவலரிடம் இருந்து காக்கும் நிலை. 

இதற்குள் எழுபது பேர் சுவுசுல போய் பொய் சொல்லினம்.

Edited by KuLavi

Criminal white van record of Rajapakses exposed: culprits released unlawfully –hereunder are the startling facts -Murderous Rajapakses try to kill their own Mayor Idi Amin style using the Army para group

2091White_Van_Murders_EJ.jpg

http://www.lankaenews.com/English/news.php?id=12758

இதை நாங்கள் தமிழர் ஒரு நல்ல சகுனமாக எடுக்க முடியுமா ?

இதோட முடியக்கூடாது.. மேல செய்தி போட்ட enews காரரையும் கோத்த ஆள் வைச்சுக் கடத்தவேண்டும்..

அப்பத்தான் என்னும் நிம்மதியா இருக்கும்.

Edited by Sooravali

இதோட முடியக்கூடாது.. மேல செய்தி போட்ட enews காரரையும் கோத்த ஆள் வைச்சுக் கடத்தவேண்டும்..

அப்பத்தான் என்னும் நிம்மதியா இருக்கும்.

ஏன் இந்த கொலைவெறி? தமிழரசு நல்லது தானே செய்கிறார்?

ஏன் இந்த கொலைவெறி? தமிழரசு நல்லது தானே செய்கிறார்?

அட நான் அவரைச் சொல்லேல்ல... அக்கூதா கொணந்து போட்ட செய்தியை எழுதினவரைச் சொன்னேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.