Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிக்காய் பொரித்தேன்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவற்காய் என்று தான் பேச்சு வழக்கில் சொல்லுவதில்லை, ஆனால் பாவக்காய் என்று சொல்லுகிறோம் தானே? :unsure:

என்ன சந்தேகமெல்லாம் பிறக்க ஆரம்பித்துவிட்டதா? பேச்சுவழக்கில் சரியான பதம் தென்படாது :lol:

  • Replies 163
  • Views 34.8k
  • Created
  • Last Reply

என்ன சந்தேகமெல்லாம் பிறக்க ஆரம்பித்துவிட்டதா? பேச்சுவழக்கில் சரியான பதம் தென்படாது :lol:

1. அத்திக்காய்

3. இத்திக்காய்

4. கன்னிக்காய்

5. ஆசைக்காய்

6. பாவைக்காய்

12. இரவுக்காய்

13. உறவுக்காய்

14. ஏழைக்காய்

நாம் பேச்சுவழக்கில் மேற்கண்டவாறு சொல்லுவதில்லை.

மாறாக,

1. அத்திக்காக

3. இத்திக்காக

4. கன்னிக்காக

5. ஆசைக்காக

6. பாவைக்காக

12. இரவுக்காக

13. உறவுக்காக

14. ஏழைக்காக

என்றுதான் சொல்லுகின்றோம்.

சங்கத் தமிழ் இலக்கியங்களிலே தான் "ஆய்" விகுதியைக் காண்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, பாட்டில் வந்தவற்றை காவாலி எடுத்து வந்திருக்கிறார்..

இந்தப்பாடலில் சொற்கள் இறுக்கமாய் இல்லாமல் மிகத்தளர்வாய் மருவி வெளிப்பட்டிருக்கிறது. அப்படி மருவிய நிலையில் வைத்துப்பார்த்தால்தான் இப்பாடலுக்குச் சிறப்பு

கொடுந்தமிழையும் கொஞ்சுதமிழையும் ஓரிடத்தில் வைத்தால் நீங்கள் கொடுந்தமிழையா அல்லது கொஞ்சு தமிழையா இரசிப்பீர்கள்? :icon_mrgreen:

.

ஏதோ சமயல் ஐடமாக்கும் என்று எட்டிப் பார்க்கேல்ல.

நல்லாத்தான் இருக்கு சகாறா.

தமிழ் பாடல்களில் எங்களுக்கு ஞாபகம் இருப்பது இரண்டே இரண்டு வரி தான்.

(10ம் வகுப்பு)

"வாப்பா பார்த்தாரெண்டால்

வாளெடுத்து வீசிடுவார்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவற்காய் என்று தான் பேச்சு வழக்கில் சொல்லுவதில்லை, ஆனால் பாவக்காய் என்று சொல்லுகிறோம் தானே? :unsure:

குட்டி இந்தப் "பாவக்காய்" பதில் எழுதிவிட்டு நேற்றைய விடயம் காற்றோடு போயாச்சு என்று விட்டு விட்டேன்... இன்று வேலையில் நிற்கும்போது ஞாபகத்திற்கு வந்து பாவக்காய், பாவைக்காய் அர்த்தத்தை ஒழுங்காகப் புரிந்து கொண்டாயா என்று மனச்சாட்சி சண்டை பிடிக்கிறது அதுதான் சரி இந்த மருவிய பாவக்காய் அப்படி என்னதான் கருத்தை ஆட்டிப்படைக்கிறது என்று பார்த்தால்

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கேகாய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

கன்னிமீதான ஆசையால் காதல் கொண்ட தலைவனை இந்தக் பாவைக்காக அங்கே போய் காய் என்று சொல்வதாகவும் அமையும்

காதல் மோகத்தில் ஆசையாக தலைவன் கன்னியான என்னைக் காய்கின்ற அவனுடைய "பா"வைக்காய் என்றும் பொருள் படும்

அப்பாடி மூளைக்குள் விறாண்டிக் கொண்டிருந்த கருத்தை பதிந்தாயிற்று....

இப்படி இந்தப்பாடலை பல வகையாகவும் நோண்டலாம் உங்களுடைய மூளையில் பிரகாசமான பொருள் தென்பட்டால் இங்கு வந்து இணையுங்கள். :wub:

பாவை என்றால் பெண்

காய்- காய்வது (இங்கே நிலவு காய்வதைக் குறிப்பிடுகிறது)

அந்தப் பெண்ணுக்காக அங்கே போய் காய் என்று தானே பொருள்?

இருந்தாலும் நேரத்தை எடுத்து மூளையை விறாண்டிக் கொண்டிருந்த கருத்தை எழுதியமைக்கு மிக்க நன்றி! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவை என்றால் பெண்தான் மறுக்கவில்லை

பாவைக்காய் என்றால், "பாட்டைக் காய்" என்றும் அர்த்தப்படும் இல்லையா "பா"வைக்காய்

பாவைக்காய் - பெண்ணுக்காக

"பா" வைக்காய் - பாடலைக்காய்

கொஞ்சம் மருவலாக

பாவக்காய் - மிகவும் கசப்பான ஒரு கொடிக்காய்.

"பா"வைக்காய் - பாடலை வைக்கவேண்டாம் என்றும் எண்ணலாம் தானே.. தமிழில் நன்றாக விளையாடலாம் இந்தப்பாடலில் மேலிருக்கும் இரு பொருட்களும் ஒரேசமயத்தில் வெவ்வேறான கருத்துக்களை இயம்பி நிற்கின்றன. கறள் தட்டின மூளைக்கு எண்ணெயைவிட்டு இயக்குவதுபோல குட்டியின் கருத்து அமைந்திருக்கிறது நன்றி குட்டி நானும் பொருள்தேடி தத்தி தத்திநடக்கிறேனாம். :lol: :lol: :wub:

Edited by வல்வை சகாறா

இந்த திரி தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் இதுவும் குண்டனின் இன்னொரு சமையல் குறிப்பு என்று. :icon_mrgreen:

Edited by nadodi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

ஏதோ சமயல் ஐடமாக்கும் என்று எட்டிப் பார்க்கேல்ல.

நல்லாத்தான் இருக்கு சகாறா.

தமிழ் பாடல்களில் எங்களுக்கு ஞாபகம் இருப்பது இரண்டே இரண்டு வரி தான்.

(10ம் வகுப்பு)

"வாப்பா பார்த்தாரெண்டால்

வாளெடுத்து வீசிடுவார்"

அடடா இந்த இரண்டு வரியும் ஞாபகத்தில் இருக்கிறதென்றால் நிச்சயமாக இதற்கு ஏதாவது பின்னணி இருக்கவேண்டுமே ஈசன் அதை இந்தப் பொரியல் சட்டியில் போட்டால் நாங்களும் அதன் மணம், குணத்தை அறியலாம்தானே :wub:

இந்த திரி தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் இதுவும் குண்டனின் இன்னொரு சமையல் குறிப்பு என்று. :icon_mrgreen:

குண்டன் இந்தப்பக்கம் வந்தால் எங்களை விளக்குமாறு :icon_mrgreen: கேட்பார்... வேண்டாம் குண்டுவைக் கிண்டிவிடவேண்டாம். :D :D

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது சகாரா காளமேகத்தின் சிலேடைப் பாடல்களைப் படிக்கும் போது யாம் பெறும் இன்பம் மற்றவரும் பெறட்டும் என்றே அவை எல்லாவற்றையும் இங்கே கொட்டினேன்.சரி இனி ஒவ்வொன்றாக பொருள் எழுதுவோமே!!!!!!!!!!!!!!

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்

இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!

பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..

எம் பெருமாளை திருவிழா காலத்தில் பருந்து வாகனத்தில் ஊர்வலம் கொண்டு செல்வதை கண்ட காளமேகம், நகைசுவையாக பருந்து காவிக்கொண்டு போகின்றது என்று பாடியுள்ளார்.

நல்ல முயற்ச்சி புலவர், விடாமல் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார்.

கரிக்காய்-கரி என்றால் யானை என்றும் பொருள்படும்.யானை வாழைக்காய் என்று ஒரு வாழையினம் உண்டு.ஆகவே கரிக்காய் பொரித்தேன் என்பதை வாழைக்காய் பொரித்தேன் என்றும் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கருத்துக்களத்தையும், அதன் உறுப்பினர்களையும் ஒரு வழி பண்ணுவது என்று முடிவெடுத்தாயிற்று. பிறகேன் தயங்குவான்??

நான் பாடல்களை இங்கு கொண்டு வந்து ஒட்டுவேன் பொருளெல்லாம் என்னிடம் எதிர்பார்க்கக்கூடாது... :icon_mrgreen:

நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் சத்தியமாக நான் அழுதிடுவேன்.. ஏனென்றால் எனக்கும் கன பாடலுக்குப் பொருள் தெரியாது. எல்லாம் சுயம்புலிங்கங்கள் மாதிரி தான்தோன்றித் தனமாக இருக்கும் ஆதாரத்தைக் கொண்டுவா என்றெல்லாம் அச்சுறுத்தல் செய்யக் கூடாது.

இனி இந்தப் பொரியல் சட்டியில் என்ன பொரியல் என்று யோசிக்கிறீர்கள் தெரிகிறது. அநேகமாக இப்ப பதியப் போகும் பதிவு எல்லோருக்கும் மிகப் பிடித்தமானதாக இருப்பதோடு மட்டுமல்ல எல்லோரும் தத்தம் அனுபவங்களையும் சொல்ல வழிவகுக்கும் பகுதியாகும். யார் யாரிடமெல்லாம் நீங்கள் இப்படியான உதவிகளை எதிர்பார்த்து.... :D:lol: அவையடக்கமாக நின்றீர்களோ யாமறியோம் பராபரமே.

இன்று இங்கு "தூது" பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.

இலக்கியத்தில் இல்லாத " தூதா?"

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் "தூது " பாடல்களை தலைக்கு ஒவ்வொன்றாக இணையுங்கள் திரையிசையில் அழகான தூதுப்பாடல்கள் இருக்கின்றன. முக்கிய குறிப்பு ஆளுக்கு ஒரு பாடலைத்தான் இணைக்கலாம்..... ஒரு பதிவிலேயே பல பாடல்களை எங்கட அறிவிலி ஒட்டுகிற மாதிரி ஒட்டினா பொரியல் சட்டி கரிச்சட்டியாக மாறிவிடும் அதனால ஆளுக்கு ஒரு பாடல்தான் இணைக்கலாம். அப்போதுதான் ஒவ்வொருவருடைய இரசனையையும் அறிய முடியும். ஒருவர் இணைத்த பாடலை மற்றவர் இணைக்கக்கூடாது. அதே போல அழகான தூதுக் கவிதைகளையும் இணைக்கலாம். அப்போதுதான் நாம் அவற்றைப் பிரித்து மேய்ந்து தமிழை நயந்து வியந்து நடைபோடலாம் சரிதானே...

முதலில் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் தூது பாடல்

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி"

இதையே கவிஞர் கண்ணதாசன் இன்னும் இலாவகமாக ஒரு பாடலுக்குள் புகுத்திவிடுகிறார் மிகச்சிறிய மாற்றத்துடன்

தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..

தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..

தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு

துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

என்ன எல்லாருக்கும் தலைமுடியைப் பிய்த்துக்கலாம் போலத் தோன்றுகிறதா?

சரி ஒவ்வொரு முடியாகப் பிய்த்து எண்ணிக் கொண்டு தூது பற்றிய உங்கள் சொந்த அனுபவங்களையும் இங்கு பதிவிடுங்கள் உங்களுடைய தூதுகளை நாங்கள் எத்தகைய தூதுகளாக உவமிக்கலாம் என்று பார்ப்போம்

மறக்கவேண்டாம் ஆளுக்கு ஒவ்வொரு தூதுப்பாடல்..

இந்தத் "தாதி தூது தத்தும் தத்தை சொல்லாது" பாடலைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள் :rolleyes:

http://www.esnips.co...045&pid=4373589

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

ஓ... புலவர் நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்கள் கவனிக்காமல் நான் வேறொன்றை எடுத்துவந்து விட்டேன்.. மன்னித்துவிடுங்கள் இதற்கான பொருளையும் தூதுப் பாடல்களினுடே பேசுவோம் :rolleyes::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பங்கிற்கு ஒரு அருமையான பாடல் தூது பற்றியது.

http://www.youtube.com/watch?v=m0R80NdII48

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி - ஆஹா

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்

பருவம் தூங்குமே தலைவி

வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே

பேசலாகுமோ தோழி?

இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்

ஏங்கலாகுமோ தலைவி?

கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே

கலக்கம் வராதோ தோழி?

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்

மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை

மௌனத்தில் அறிந்தாள் தோழி

காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்

காத்திருந்தாள் அந்தத் தலைவி?

காவிய நாயகன் காதலன் வணிகன்

கோவலன் என்பான் மனைவி

ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

ஹூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து -

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்."

இதனை நான் முன்னம் கேள்விப்பட்டனான், பிறகு எழதுகிறேன், நல்ல பாட்டு புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Paattum Barathamum

Song: Karpanaikku Meni Thanthu

Singer: TMS

Music: M S Visvanathan

Lyrics: Kannadasan

கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன்

கால் சல‌ங்கை போன‌ இட‌ம் க‌ட‌வுழுக்கும் தோன்ற‌வில்லை

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெரும் கூடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெரும் கூடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாடிப் ப‌ற‌ந்த‌த‌ம்மா இளம்குயில் பேடு

இளம்குயில் பேடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

நீர் வ‌ற்றிப் போன‌தென்று நினைவினில் வெடிப்பு

நெஞ்ச‌த்தில் தோன்றுதம்மா வ‌ச‌ந்த‌த்தின் துடிப்பு

மாம‌லை மேகம் இன்று க‌ண்க‌ளில் இருப்பு

மார்க‌ழி ப‌னி அன்றோ அவ‌ள‌து சிரிப்பு

அவ‌ள‌து சிரிப்பு !

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

Edited by உடையார்

.

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..

தேயாமலே பிறை போலாகிறேன்..

தாங்காது இனி தாங்காது..

மல்லிகையே மல்லிகையே தூதாக போ..

துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே..

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..

பெண்ணே....

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா..

தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா..

மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா...

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..

என்னை..

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்

மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்

ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ....

மல்லிகையே மல்லிகையே தூதாக போ...

.

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Movie: Paattum Barathamum

Song: Karpanaikku Meni Thanthu

Singer: TMS

Music: M S Visvanathan

Lyrics: Kannadasan

கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன்

கால் சல‌ங்கை போன‌ இட‌ம் க‌ட‌வுளுக்கும் தோன்ற‌வில்லை

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெரும் கூடு

ஆவிக்குள் ஆவி ஆன‌ந்த‌ ஏடு

அவ‌ளில்லையென்றால் நான் வெறும் கூடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு

பாடிப் ப‌ற‌ந்த‌த‌ம்மா இளங்குயிற்பேடு

இளம்குயிற்பேடு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

நீர் வ‌ற்றிப் போன‌தென்று நினைவினில் வெடிப்பு

நெஞ்ச‌த்தில் தோன்றுதம்மா வ‌ச‌ந்த‌த்தின் துடிப்பு

மாம‌லை மேகம் இன்று க‌ண்க‌ளில் இருப்பு

மார்க‌ழி ப‌னி அன்றோ அவ‌ள‌து சிரிப்பு

அவ‌ள‌து சிரிப்பு !

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

க‌ம்பனைக் கூப்பிடுங்க‌ள் சீதையைக் காண்பான்

க‌வி காளிதாச‌ன் அவ‌ள் ச‌குந்த‌லை என்பான்

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

நாய‌கியே என‌து காவிய‌ எல்லை

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

ந‌ரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழ‌வில்லை‌

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு

தேவிக்கு தூது சொல்ல‌ தென்ற‌லே ஓடு

http://www.dishant.c...hp?songid=59399

உடையார்,

இந்தப்பாடல் அந்தப்படம் பார்த்தபோது கேட்டதோடு சரி மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். எப்படி இந்தப்பாடலை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். இந்தப்பாடலையும் அதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் அல்லது மனதிற்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? :rolleyes:

எல்லோரும் தூது சொல்லிவிடக் கெஞ்சிக் கூத்தாடுவார்கள் இந்தப்பாடல் கொஞ்சம் வித்தியாசமாக தென்றலை "ஓடு" என்று கலைக்கிறது

Edited by வல்வை சகாறா

தொடருங்கள்.. நேரம் கிடைக்கும் போது படித்து பின்னுட்டம் இடலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

புலவர் இந்தப்பாடலில் அரசமரம்,மூங்கில், வேங்கைமரம், காட்டுமரங்கள், ஆல், அத்தி ஆகிய மரங்கள் பங்குபற்றியுள்ளன...

மரமது தேடி மரக்கும் உள்ளங்களுக்கு நாளை மாலையில் வந்து மறக்காமல் தெளிவான பொருளைக் கூறுகின்றேன் :rolleyes:

அதற்கிடையில் இலக்கியச் சிறுத்தைகள் யாராவது பதிவிட்டு அசத்திவிடமாட்டீங்களா... எல்லாம் ஒரு நம்பிக்கைதான்... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவே பயப்பிடுறீங்களா?

சும்மா ஒதுங்கி இருக்காமல் வாங்கோ...இங்கு படித்த பீதாம்பரங்கள் என்று எவருமில்லை. முடிந்தவரைக்கும் நாங்களே கூழ் முட்டைகளாகவும் குஞ்சு முட்டைகளாகவும் இருப்போம்.

இனிய பொழுதில் ஓடியோடி பாடல்களை இணைக்கிற நீங்கள் இங்கு தூதுப் பாடல் இணைக்கச் சொல்லிக் கேட்டும் இணைக்கவில்லையே.... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dishant.c...hp?songid=59399

உடையார்,

இந்தப்பாடல் அந்தப்படம் பார்த்தபோது கேட்டதோடு சரி மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். எப்படி இந்தப்பாடலை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். இந்தப்பாடலையும் அதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் அல்லது மனதிற்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? :rolleyes:

எல்லோரும் தூது சொல்லிவிடக் கெஞ்சிக் கூத்தாடுவார்கள் இந்தப்பாடல் கொஞ்சம் வித்தியாசமாக தென்றலை "ஓடு" என்று கலைக்கிறது

இல்லை தேடினதில் பிடிச்சது, அப்படி ஏதும் விசேஷ காரணமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

அரச(ன்) மரம் மரத்தால் சொய்த தேரில் ஏறி மூங்கிலால் செய்த வில்லை தோளில் போட்டு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான்,

அரச(ன்) மரம் வேங்கை மரத்தை கண்டு மூங்கிலால் குத்தி

அரச(ன்) மரம் காட்டு வழி திரும்பி அரண்மனை போகும் போது

அரச(ன்) மரத்தை கண்ட மக்கள் ஆல்(+)அத்தி எடுத்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசன் குதிரையில் ஏறி வேலைத் தோளில் வைத்துக்கொண்டு வேட்டைக்குப் போனான்.அங்கு புலியை கண்டு வேலால் குத்திக் கொன்றான் வேட்டை முடிந்து அரண்மனைக்குச் சென்ற பொழுது பெண்கள் ஆராத்தி எடுத்து அரசனை வரவேற்றார்கள்.அரசன் அரசவைக் கவிஙரைப் பாரத்து புலவரே என் வேட்டை எப்படி இருந்தது என்ற பொழுது புலவர் பாடினார்.

மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது

மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.

ஒருவருக்கும் விளங்கவில்லை. புலவர் விளக்கினார்.

மரமது-அரசு என்பது ஒரு மரம்.அரசனாகிய மரம்.

மரத்திலேறி-குதிரைக்கு மா என்றும் பொருள் உண்டு.மா என்பது ஒரு மரம். ஆகவே மரமது மரத்திலேறி

வேல் என்பது ஒரு மரம்(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)வேலமரம்-வேப்பமரம்.(கருவேலமரம்-கருவேப்பமரம்) ஆகவே வேலாகிய மரத்தைத் தோளில் வைத்து

புலிக்கு வேங்கை என்றும் பொருள் உண்டு.வேங்கைமரம் என்று ஒரு மரம் இருக்கிறது.ஆகவே அரசனாகிய மரம் வேங்கையாகிய மரத்தைக்கண்டு வேலாகிய மரத்தால் வேங்கையாகிய மரத்தைக் குத்தி மரமாகிய அரசன் வெற்றியுடன் அரண்மனைக்குத் திரும்பும் பொழுது

மரமுடன் மரமெடுத்தார்.பெண்கள் ஆராத்தி எடுத்து வாழ்த்தினார்கள்.

ஆராத்தி =ஆல்+ ஆத்தி ஆல் என்பதும் அத்தி என்பதும் மரங்களின் பெயர்கள் ஆகவே மரமுடன் மரமெடுத்தார்.

ஆகவே இனியாராவது உங்களை மரம் என்று பேசினால் உங்களை அரசன் என்று புகழ்வதாக அவர்களுக்குச் சொல்லலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூது பற்றிய தேடல்களில் இந்தக் கரிக்காய்த் திரி தேடல்களை மேற்கொண்டுள்ளது தூது பற்றிய சுவையான சம்பவங்களை தமிழ் இலக்கியங்கள் நிறையவே வைத்திருக்கின்றன... தெரிந்தவற்றை அறிந்தவற்றை நீங்களும் இங்கு இணைக்கலாம்....

இப்போது நாரையைத் தூதாக்கிய சக்திமுத்தப்புலவரின் ஒரு பாடலைப் பார்ப்போம்.. நான் பாட்டை பதிகின்றேன் இதன் கருத்தையும் இந்தப்பாடலுக்கான சந்தர்ப்பத்தையும் நீங்கள் யாராவது பதிவிடுங்கள்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழுவிப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

White%20Stork-%20Chari%20Dhand.jpg

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.