Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடையை நீக்கிவிடுங்கள்!

Featured Replies

கருத்துக்கள உறுப்பினர் நெடுக்காலபோவான் என்பவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், 10 நாட்களுக்கு கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர்களுக்கான பகுதியிலிருந்து தகவல்களை வெளியில் காவிச் சென்றமை மற்றும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையிலும், கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் வகையிலும் செயற்பட்டமை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

கருத்துக்கள நிர்வாகம்

கருத்துக்கள உறவுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க - தடை நீக்கி - மீண்டும் அனுமதித்துள்ளோம்.

இவ்வளவு நாட்கள்போதும், சாத்திரிக்கு இடப்பட்டதடையை உடனடியாக நீக்கி அவர் முன்புபோல் கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதியளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!

  • Replies 108
  • Views 7.1k
  • Created
  • Last Reply

கலைஞனுடன் சேர்ந்து நானும் அதற்கு வழிமொழிகிறேன். தண்டனைகள் என்பது தவறுகளை உணர்வதற்கும் திருத்துவதற்கும் மட்டுமே. சாத்திரி அதை இப்போது உணர்ந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். எனவே அவரின் தடையை நீக்கி/ குறைத்து, மீண்டும் அவரை எழுத வழிசமைக்குமாறு, ஒரு சக கருத்தாளன் என்ற முறையில் நிர்வாகத்தை கோருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

===============================================================================================

வணக்கம்,

யாழ் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (13.04.2007 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

2. தலைப்பு

  • நீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகள் நீளமானவையாக இருத்தல் ஆகாது.

    • சுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்
    • தலைப்பு (Topic Title) என்பதில் சுருக்கமான தலைப்பை எழுதலாம்.
    • விளக்கம் (Topic Description) என்பதில் விரிவான தலைப்பை எழுதலாம்.

    [*]யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது.

    [*]தலைப்புகள் பின்வரும் வகையில் அமைதல் ஆகாது:

    • வன்முறையையும், வக்கிரங்களையும் தூண்டும் வகையிலான தலைப்புகள்
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள்

    [*]பின்வரும் முறையில் தலைப்புக்கள் எழுதப்படல் ஆகாது:

    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)

3. மொழி

  • யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:

    • அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும்.
    • அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும்
    • அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.

4. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

5. அரட்டை

  • கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் [சாதுவாக], யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.
  • இருப்பினும், மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுப்பின் விதிமுறை "ஆ-5.1" செல்லுபடியாகும்.

6. படங்கள்

  • யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.
  • பின்வரும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது:

    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்
    • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள்

    [*]செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:

    • எ.கா.: [எச்சரிக்கை!] சுனாமியும் அதன் வடுக்களும்

    [*]படங்களின் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)

    [*]உங்கள் படம் அல்லாத வேறு ஒருவரின் படத்தை இணைக்கும் போது அவரது அனுமதி பெறப்படல் வேண்டும்.

7. மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் உங்களால் இணைக்கப்படும் ஆக்கம், உங்கள் சுய ஆக்கம் இல்லாது விடின்:

    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்
    • அது எப்போது எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்

    [*]மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது உங்களது ஆக்கம் இல்லை என்பதையாவது குறிப்பிடல் வேண்டும்.

    [*]எ.கா.: [தலைப்பு: யாழ் இணையமும் அது நடந்து வந்த பாதையும் | எழுதியவர்: மோகன் | காலம்: 25 March 2005 | மூலம்: யாழ் இணையம் | இணைப்பு: www.yarl.com/history/2005.html]

    [*]அதேபோல், கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:

    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

8. பொறுப்பு

  • கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.
  • கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவரவரே (உறுப்பினர்கள்) முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
  • அவரவர் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அரவரவரே பொறுப்பேற்க வேண்டும்.

ஆ) உறுப்பினர்கள்

1. உங்கள் பெயர்

  • யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

    • பயனர் பெயர் (user name): இது யாழ் கருத்துக்களத்தில் உங்கள் பதிவிற்கான பெயர். நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்கான பெயர்.
    • புனை பெயர் (nick name): இது உங்களை நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அடையாளப்படுத்துவதற்கான பெயர்.

    [*]இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.

    [*]பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாது.)

    [*]பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள் (எ.கா.: சு.ப.தமிழ்ச்செல்வன்)
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
    • பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்)

    [*]பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:

    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • இலக்கங்கள் (எ.கா.: 12345678)
    • குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

2. உங்கள் படம்

  • யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.

    • பயனர் படம் (profile foto): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • சின்னம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.

    [*]இவை இரண்டும் உண்மையான உங்கள் படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.

    [*]படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:

    • பயனர் படம்: 90px * 90px
    • சின்னம்: 80px * 80px

    [*]பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் (எ.கா.: சு.ப.தமிழ்ச்செல்வன்)
    • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
    • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

3. கருத்தாடல்

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)

4. தனிமடற் சேவை

  • கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.
  • தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.
  • (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)
  • தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இ) வடிவம்

1. எழுத்து

  • கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் unicode எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகளுக்கு மட்டும் "அளவு 2" இனை பயன்படுத்தலாம்.
  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) - சரிந்த - கோடிட்ட" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.

2. நிறம்

  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (எ.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)

3. படம்

  • இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

[கருத்துகள நோக்கர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணையாது, பார்வையாளர் மட்டத்தில் மட்டும் இருப்பவர்கள் - கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வாசிப்பவர்கள்.

இவர்களுக்கு "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

மற்றும் "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் தரவிறக்கம்" பிரிவினைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அதேபோல் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது - ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

[விண்ணப்பித்தோர்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் இணைவதற்கு விண்ணப்பித்தவர்கள். கருத்துக்களத்தில் பதிவு செய்தபின் இவர்களுக்கு - இவர்கள் பதிவு செய்யும்போது கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம், தாம் கருத்துக்களத்தில் பதிவு செய்தமையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் கருத்துக்கள நிர்வாகத்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, யாழ் கருத்துக்கள உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுவர்.

[புதிய உறுப்பினர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்கள். அதாவது, பதிவு செய்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள்.

இவர்களுக்கு "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை" ஆகிய பிரிவுகளில் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி உள்ளது.

அது தவிர "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி, யாழ் தரவிறக்கம்" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அத்தோடு, ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது. ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

[கருத்துக்கள உறவுகள்]

யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்து, "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி" பிரிவில் தமது அறிமுகத்தையும் (கட்டாயம்), "யாழ் உறவோசை" பிரிவில் யாழ் இணையம் பற்றிய கருத்துக்களையும் (விரும்பின்) எழுதிய பின்னர், கருத்துக்கள நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டு வழங்கப்படும் அங்கத்துவ நிலை.

இவர்களுக்கு ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான முழுமையான அனுமதி உள்ளது. "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் முரசம்" பிரிவில் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கான அனுமதி இவர்களுக்கு இல்லை. அப் பிரிவில் கருத்துக்கள நிர்வாகத்தினர் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்க முடியும்.

கருத்துக்கள உறவுகள் நிலையில் இருப்பவர்கள் தாங்கள் எழுதும் கருத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி உள்ளது. ஒருவர் தான் எழுதிய கருத்தில் உள்ள இலக்கணப் பிழைகளை (எழுத்துப்பிழை, சொற்பிழை, வசன அமைப்புப் பிழை) திருத்துவதற்கும், தான் எழுதிய கருத்தில் மேலதிக ஆவணங்களை இணைப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் தனது கருத்தை எழுதியதன் பின் - மற்றவர்கள் அவரின் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - அவர் தன் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், எழுதப்பட்ட கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் - அந்தக் கருத்தை முற்றாக நீக்குவதற்கோ, அந்தக் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதற்கோ அனுமதியில்லை. (எனவே, ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் சிந்தித்து எழுதவும்.)

[கருத்துக்கள நிர்வாகம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் கருத்துக்களத்தை மட்டுறுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இவர்கள். கருத்துக்களத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய தலைப்பைத் தொடங்கவும், பதில் கருத்தெழுதவும், அனைத்து உறுப்பினர்களதும் கருத்துக்களை மட்டுறுத்தவும் முடியும்.

கருத்துக்கள உறவுகள் குழுமத்துள் இணைக்கப்படுவதற்கான நிபந்தனைகள்:

புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி" பகுதியில் தம்மைப் பற்றிய அறிமுகத்தை விளக்கமாக முன்வைக்கவேண்டும். அதாவது "யாழ் அரிச்சுவடி" பகுதியில் புதிய தலைப்பு ஒன்றினை தொடங்கவேண்டும். தமிழில் தட்டச்சு செய்து எழுதத் தெரியாதவர்கள், தமது அறிமுகத் தலைப்பில் எழுதிப் பழகலாம்.

அறிமுகம் என்றதும் உங்கள் பற்றிய தனிப்பட்ட விபரங்களைத் தரவேண்டும் என்று கட்டாயமல்ல. ஆனால், ஓரு வரி அறிமுகமாக அல்லாமல் விரிவான அறிமுகமாக அது அமைதல் வேண்டும். உதாரணமாக: நீங்கள் யாழ் இணையத்தை எப்படி, எப்போது அறிந்துகொண்டீர்கள், யாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்தமைக்கான காரணம், உங்கள் ஆர்வங்கள், யாழ் கருத்துக்களத்தில் உங்களுக்கு பிடித்த பிரிவுகள் போன்றவை பற்றி எழுதலாம்.

"யாழ் அரிச்சுவடி" பகுதியில் அறிமுகத்தை எழுதுவதும், அத்தலைப்பில் சக கருத்துக்கள உறுப்பினர்களுடன் கருத்தாடல் செய்வதுவும், ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ளவும் உதவும்.

அதேபோல், கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த நிலை அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது. எழுதப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே "கருத்துக்கள உறவுகள்" என்ற குழுமத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி "கருத்துக்கள நிர்வாகத்தால்" தீர்மானிக்கப்படும். குறிப்பாக, தமது அறிமுகத் தலைப்பில் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறவுகளோடு பண்போடும், நட்போடும் பழகுகிறார்களா போன்ற விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படுகின்றன.

கருத்துக்கள உறவுகள் குழுமத்துள் இணைக்கப்படுவதற்கு பரிந்துரைத்தல்:

அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்சு செய்து எழுத முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாராவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் - அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதில் எதுவித சிக்கலும் இல்லை என்றால் - உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

அப்படி உங்கள் நண்பர்களைப் பரிந்துரைக்க விரும்புவோர் எமக்கு (கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு) தனிமடலில் தெரிவித்தால், நாம் அதனை பரீசீலனை செய்து "கருத்துக்கள உறவுகள்" குழுமத்துள் இணைத்துவிடுவோம்.

செயல்நிலைக் குழுமங்கள்

[செய்திக் குழுமம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் யாழ் இணையத்தின் செய்திப்பிரிவை ஒருங்கமைப்பதற்காகவும், ஒழுங்கமைப்பதற்காகவும், செய்தி தொடர்பான ஆக்கங்களை உருவாக்குவதற்காகவும், அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட குழுமம். இவர்களின் முயற்சியின் பயனாய் வாரம் ஒரு கருத்துப்படமும், வாரம் ஒரு செய்தி அலசலும் யாழ் இணையத்தில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: கறுப்பி

[ஒஸ்ரேலிய குழுமம்]

நாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் யாழ் இணையக் குழுமம் இது. ஒஸ்ரேலியாவிலிருந்து கருத்தெழுதும் உறுப்பினர்கள் இக் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார்கள். யாழ் இணையம் சார்பாக ஒஸ்ரேலியாவில் சில முயற்சிகளை மேற்கொள்வதும், ஒஸ்ரேலியாவில் இருந்து புதிய உறுப்பினர்களை கருத்துக்களத்தில் இணைப்பதுவும், யாழ் இணையத்தை விளம்பரப்படுத்துவதும் இக்குழுமத்தின் செயற்பாடுகளில் சிலவாகும்.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: தூயா

* ஒஸ்ரேலியாவில் இருக்கும் உறுப்பினர்கள் இக் குழுமத்தில் இணைவதில் ஆர்வமிருப்பின், தூயாவுடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும்.

[ஒரு பேப்பர் குழுமம்]

ஒரு பேப்பருடன் ஊடகத் தொடர்பைப் பேணவும், ஒரு பேப்பர் இதழில் யாழ் இணையத்தில் இடம்பெறும் ஆக்கங்களை பிரசுரிப்பது தொடர்பாக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளவும், யாழ் இணையத்தின் செய்திக் குழுமம் சார்பில் ஒரு பேப்பரில் செய்யப்படவிருக்கும் சிறப்புப் பக்கமான "விரியம்" தொடர்பான கருத்தாடலை நடாத்தவும் இந்தக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: குறுக்காலபோவான் ("விரியம்" தொடர்பான), வலைஞன்

[நேசக்கர அமைப்பு]

கருத்துக்கள உறவு Danklas ஆல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடிப்படையில் உருவானதே இந்த நேசக்கர அமைப்பு. தாயக மக்களுக்கான தெரிந்தெடுக்கப்பட்ட சில சிறு உதவித் திட்டங்களை ஒருங்கமைப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்குமான குழுமம் இது. இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்வோரோ இக் குழுமத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: டங்கிளஸ், சாத்திரி

* நேசக்கர அமைப்பின் செயற்திட்டங்களில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் Danklas அல்லது sathiri உடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குழுமங்களும், யாழ் இணையத்தில் இடம்பெறும் சில செயற்திட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுமங்கள் ஆகும். இந்தக் குழுமங்களுக்கான சிறப்புப் பிரிவுகள் யாழ் இணையக் குழுமம் என்கிற பிரிவின் கீழ் தனித் தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுமங்களுக்கான சிறப்புப் பிரிவுகளை கருத்துக்கள உறவுகள் அனைவரும் பார்க்கமுடியும். ஆனால், அதற்குள் இருக்கும் ஆக்கங்களை வாசிக்க முடியாது. அந்தந்தக் குழுமங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த சிறப்புப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், கருத்துக்களை எழுதவும் அனுமதி உள்ளது.

மேலும் சில விதிமுறைகள்.. காலத்துக்கு காலம் வலைஞனால் யாழில் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டவை இங்கு...!

http://www.yarl.com/...opic=22936&st=0

மேலும் ஒட்டுமொத்தமாக கள நிர்வாகத்தின் விதிமுறைகள் மற்றும் பதிவுளை காண இங்கே செல்லுங்கள்..

http://www.yarl.com/...hp?showforum=28

=======================================================================================================

இவ்வளவு தான் கள விதி. இதில் எங்கே இருக்குது கருத்துக்கள நாற் சந்தியில் இருந்து கருத்துக்களை வெளியில் பகரக் கூடாது என்று.

மேற்படி தடை தொடர்பில் வலைஞனிடம் விளக்கம் கேட்கப்பட்டு அவர் சரியான விளக்கம் தரவும் இல்லை..! வலைஞன் எங்களுக்கென்றே உருவாக்கின சிறப்பு பிரசுரிக்கப்படாத விதியின் கீழ் இட்ட தடை இது..!

ஆனால்.. தற்போது அப்படியான நிலை இல்லை. தற்போது கள விதிகளின் பிரசுரிக்கப்பட்ட விதிகளை மீறியோர் மீதே நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் கள உறவுகள் ஒரு மனதாக.. (ஏனோ புரட்சிகர தமிழ்தேசிகன் என்ற கள உறவு.. ஒரு மாதம் தடைசெய்யப்பட்ட போது யாரும் இப்படி ஒரு தலைப்பு திறக்கல்ல.. அவர் பாவம்... தண்டனையை ஏற்று.. ஒரு மாதம் தண்டனை அனுபவித்து அதை உணர்ந்து.. மீண்டும் வந்து நட்போடும்.. புரிந்துணர்வோடும் உறவாடுறார்..! உண்மையில் அவருக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டும். இருந்தாலும்.. நாங்கள் அவரின் மீதான நிர்வாகத்தின் முடிவை அறிந்து நிர்வாகம் அதை மீள்பரிசீலனை செய்ய நாற்சந்தியில் இருந்த ஒரு தலைப்பில் கோரினோம். ஆனால் அப்படி நிர்வாகம் செய்ய மறுத்துவிட்டது.) கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் தண்டனைக் குறைப்பு செய்யப்படுவதை ஆட்சேபிக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:lol::icon_idea: :icon_idea: :icon_idea:

சாத்திரியின் தடையை நீக்குவது தான் சாத்திரியின் ஆக்கத்துக்கு யாழ்களம் தரும் மரியாதை.,...

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனைக்காலம் போதுமானது என்பது தான் எனது தாழ்மையான கருத்தும்.அத்தோடு சாத்திரியார் தன்னுடைய நிலைப்பாட்டை எழுத சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

சாத்திரியின் தடையை நீக்குவது தான் சாத்திரியின் ஆக்கத்துக்கு யாழ்களம் தரும் மரியாதை.,...

சொல்லுறேன் என்று கோவிக்கக் கூடாது... யாழ் களத்திற்கும், கருத்துப் பதிந்த உறுப்பினர்களுக்கும் மரியாதை தராமல் விதிக்கப்பட்ட களவிதிகளை மீறி சாத்திரி தான் தனது ஆக்கத்தையே நீக்கிவிட்டாரே...

சொல்லுறேன் என்று கோவிக்கக் கூடாது... யாழ் களத்திற்கும், கருத்துப் பதிந்த உறுப்பினர்களுக்கும் மரியாதை தராமல் விதிக்கப்பட்ட களவிதிகளை மீறி சாத்திரி தான் தனது ஆக்கத்தையே நீக்கிவிட்டாரே...

ஆமா நீங்கள் சொல்வது போல் எனக்கும் சாத்திரியின் அந்த போக்கு பிடிக்கவில்லை மற்றும்படி வேற எனத்துக்காக சாத்திரியின் தடையை ஆதரிக்கவேண்டும்?

கருத்துக் களத்தில் எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாதது என்பது அவர் அவர் விரும்ப்பம் அதே போல் எதை அனுமதிக்க வேண்டும் எதை அனுமதிக்க கூடாதது என்பது களத்தின் விதி களின் படி மட்டுநிறுத்தினர்களின் உரிமை..

என்னை பொறுத்த மட்டில் மோகன் அண்ணா மென்மையான போக்கை தான் தடைவிடயத்தில் கடைபிடிப்பவர், ஆகவே மட்டுநிறுத்தினர்கள் மோகன் அண்ணாகூட பேசி தடையை நீக்கலாம் என்பது எனது கருத்து.

===============================================================================================

2. உங்கள் படம்

  • யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.

    • பயனர் படம் (profile foto): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • சின்னம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.

    [*]இவை இரண்டும் உண்மையான உங்கள் படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.

    [*]படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:

    • பயனர் படம்: 90px * 90px
    • சின்னம்: 80px * 80px

    [*]பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் (எ.கா.: சு.ப.தமிழ்ச்செல்வன்)
    • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
    • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

http://www.yarl.com/...hp?showforum=28

=======================================================================================================

இவ்வளவு தான் கள விதி. இதில் எங்கே இருக்குது கருத்துக்கள நாற் சந்தியில் இருந்து கருத்துக்களை வெளியில் பகரக் கூடாது என்று.

மேற்படி தடை தொடர்பில் வலைஞனிடம் விளக்கம் கேட்கப்பட்டு அவர் சரியான விளக்கம் தரவும் இல்லை..! வலைஞன் எங்களுக்கென்றே உருவாக்கின சிறப்பு பிரசுரிக்கப்படாத விதியின் கீழ் இட்ட தடை இது..!

ஆனால்.. தற்போது அப்படியான நிலை இல்லை. தற்போது கள விதிகளின் பிரசுரிக்கப்பட்ட விதிகளை மீறியோர் மீதே நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் கள உறவுகள் ஒரு மனதாக.. (ஏனோ புரட்சிகர தமிழ்தேசிகன் என்ற கள உறவு.. ஒரு மாதம் தடைசெய்யப்பட்ட போது யாரும் இப்படி ஒரு தலைப்பு திறக்கல்ல.. அவர் பாவம்... தண்டனையை ஏற்று.. ஒரு மாதம் தண்டனை அனுபவித்து அதை உணர்ந்து.. மீண்டும் வந்து நட்போடும்.. புரிந்துணர்வோடும் உறவாடுறார்..! உண்மையில் அவருக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டும். இருந்தாலும்.. நாங்கள் அவரின் மீதான நிர்வாகத்தின் முடிவை அறிந்து நிர்வாகம் அதை மீள்பரிசீலனை செய்ய நாற்சந்தியில் இருந்த ஒரு தலைப்பில் கோரினோம். ஆனால் அப்படி நிர்வாகம் செய்ய மறுத்துவிட்டது.) கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் தண்டனைக் குறைப்பு செய்யப்படுவதை ஆட்சேபிக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை..! :):icon_idea:

நெடுக்ஸ் - உங்களை யாரும் ஆட்சேபிக்கச் சொல்லி கேட்டார்களா என்ன?

ஏன் இவ்வளவு நீ ....ளமான பதிவு?

நீங்களும் ஒருவகையில் விதியை மீறுபவர் தான். சினிமா பிரபலம் ஒருவரைத் தான் உங்கள் அவதாராக கொண்டுள்ளீர்கள். நீங்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் தான்.

இது ஒரு பெரிய விடயமல்ல, ஆனாலும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கருத்துக்கள உறவாக இத்தலைப்பில் பதில் அளிக்க எமக்கும் உங்களைப் போல அனைத்து உரிமைகளும் உண்டு தானே.. ஈஸ்..! :lol:

அவதார் பற்றிய விளக்கம் ஏலவே துரோகிக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை..! :):icon_idea:

ஏன் உங்களின் அவதாரும் பிரபல காட்டூன் சினிமா பிரபல்யத்தின் படம் தானே.. கார் உட்பட..! :lol::D

http://www.youtube.com/watch?v=QWtH5u-jOlY

Edited by nedukkalapoovan

கருத்துக்கள உறவாக இத்தலைப்பில் பதில் அளிக்க எமக்கும் உங்களைப் போல அனைத்து உரிமைகளும் உண்டு தானே.. ஈஸ்..! :lol:

அவதார் பற்றிய விளக்கம் ஏலவே துரோகிக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை..! :):icon_idea:

இல்லை என்று யார் சொன்னார்? :lol:

தடையை நீக்குங்கள் என்ற பதிவில், நீங்கள் ஆதரவாக அல்லது எதிராக ஒரு பதிலைப் போடலாம். அல்லது, பதில் போடாமல் இருக்கலாம்.

ஆனால் இப்படியான பதில்? நீங்கள் ஆட்சேபிப்பீர்களோ என்று நிர்வாகம் பயந்து கிடக்கிறதா என்ன? :(

அவதார் பற்றிய உங்கள் விளக்கம் பற்றி நான் அறியவில்லை. உங்கள் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

என்ன தான் விளக்கமாக இருந்தாலும், நீங்களும் விதியை மீறுகிறீர்கள் என்பதை மாற்றமுடியாது தானே. :lol:

ஏன் உங்களின் அவதாரும் பிரபல காட்டூன் சினிமா பிரபல்யத்தின் படம் தானே.. கார் உட்பட..! :lol::D

காட்டூன் - இது தான் வேறுபாடு. உயிர் கொண்டவரல்ல. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்று யார் சொன்னார்? :lol:

தடையை நீக்குங்கள் என்ற பதிவில், நீங்கள் ஆதரவாக அல்லது எதிராக ஒரு பதிலைப் போடலாம். அல்லது, பதில் போடாமல் இருக்கலாம்.

ஆனால் இப்படியான பதில்? நீங்கள் ஆட்சேபிப்பீர்களோ என்று நிர்வாகம் பயந்து கிடக்கிறதா என்ன? :(

அவதார் பற்றிய உங்கள் விளக்கம் பற்றி நான் அறியவில்லை. உங்கள் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

என்ன தான் விளக்கமாக இருந்தாலும், நீங்களும் விதியை மீறுகிறீர்கள் என்பதை மாற்றமுடியாது தானே. :lol:

காட்டூன் - இது தான் வேறுபாடு. உயிர் கொண்டவரல்ல. :lol:

கள உறவுகள் ஒரு மனதாக தீர்மானித்தால் அந்த தீர்ப்பை ஆட்சேபிக்க வேண்டியதில்லை என்பதை வேறு எப்படி சொல்வது..????!

இதனை நீங்கள் ஏன் நிர்வாகம் நமக்கு பயந்து கிடப்பதாக இனங்காட்ட முனைகிறீர்கள். இங்கு யாருமே யாருக்கும் பயப்பிட வேண்டிய தேவை இல்லை..! களவிதிக்கு உட்பட்டு நடந்தால் போதும்..! :)

சினிமா பிரபல்யம் என்று தான் களவிதி சொல்கிறதே தவிர உயிருள்ள.. உயிரற்ற.. அஃறிணை.. உயர்திணை பற்றி எல்லாம் விபரிக்கவில்லை. எந்த வகை சினிமா பிரபல்யமாகவும் அது இருக்கலாம். :lol:

எனது அவரர் சினிமா பிரபல்யம் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஒரு குழந்தை தயவு வேண்டி கரம் நீட்டுவது மனதை நெகிழச் செய்ததால் இட்டிருக்கிறேன். அவ்வளவே..! நிர்வாகம் இதன் மூலம்.. கள விதி மீறப்படுவதாகச் சொல்லி கேட்டுக் கொண்டால் அதை நீக்க நான் தயாராகவே இருக்கிறேன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சினிமா பிரபல்யம் என்று தான் களவிதி சொல்கிறதே தவிர உயிருள்ள.. உயிரற்ற.. அஃறிணை.. உயர்திணை பற்றி எல்லாம் விபரிக்கவில்லை. எந்த வகை சினிமா பிரபல்யமாகவும் அது இருக்கலாம்.

இதை தான் விதண்டாவாதம் என்று சொல்வார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் விதண்டாவாதம் என்று சொல்வார்களோ?

உங்களுக்கு இது மட்டுமே.. விதண்டாவாதமாகத் தெரிந்தால்.. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு இத்தலைப்பில் நடப்பது எல்லாமே கிட்டத்தட்ட விதண்டாவாதம் தான். :):icon_idea:

விதிகள் என்பன எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இல்லையேல் அந்த விதிகளுக்கு மதிப்பில்லை.

  • தொடங்கியவர்

வணக்கம்,

யாழ் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (13.04.2007 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

[*]கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

[*]சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.

[*]ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

இங்கு நீங்கள் முதலாவது பந்துவீச்சிலேயே மிடில் ஸ்டம்ப் பறந்து கிளீன்போல்ட்டே!

ஆதாரங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஒன்று, இரணடு அல்ல பல நூற்றுக்கணக்கானவற்றை இங்கு இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி யாழ் களம் கொதிப்படையப்போகிறது.

வெற்றி பெறுபவருக்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள். :lol::icon_idea: :icon_idea:

இதை தான் விதண்டாவாதம் என்று சொல்வார்களோ?

"திண்ணைக் கப்புக்கு மண் எடுப்பது" என்றும் சொல்லக் கேள்வி. :lol:

Edited by Eas

  • தொடங்கியவர்

விதிகள் என்பன எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இல்லையேல் அந்த விதிகளுக்கு மதிப்பில்லை.

அதைத்தான் நானும் இங்கு மேற்கோள் மூலம் காட்டி தடையைநீக்குமாறு கேட்கின்றேன். நெடுக்காலபோவான் அவர்களிற்கு கள உறவுகள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க 10 நாட்கள் தடையை ஓரிரு நாளில் நீக்கப்படமுடியுமாயின் சாத்திரி அவர்கள் தடையை 15 நாட்கள் நீடிக்கவேண்டும் என்றில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

இங்கு நீங்கள் முதலாவது பந்துவீச்சிலேயே மிடில் ஸ்டம்ப் பறந்து கிளீன்போல்ட்டே!

ஆதாரங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஒன்று, இரணடு அல்ல பல நூற்றுக்கணக்கானவற்றை இங்கு இணைக்கின்றேன்.

இதன் கீழ் என்னாலும் உங்கள் மீது பல ஆயிரம் குற்றச்சாட்டுக்களை முன் வைக்க முடியும். காரணம்.. பண்பு.. கண்ணியம் என்ற சொற்களுக்கு அளவீடு செய்வது கடினம்.

என்னளவில் இயன்ற வரை இதனை நான் கடைப்பிடிக்கவே செய்கிறேன். அது உங்களுக்கு கண்ணியக் குறைவாக.. பண்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் நிர்வாகத்திடம் இருந்து அவ்வகையான குற்றச்சாட்டுக்கள் வரவில்லை. வந்திருந்தால் அவற்றின் மீது நாமே அவர்களுக்கு சிரமம் இன்றி நடவடிக்கை எடுத்திருப்போம். எடுத்தே வருகின்றோம்..! மாறாக தொடர்ந்து கள விதிகளை மீறிக் கொண்டிருப்பதில்லை..! :):icon_idea:

  • தொடங்கியவர்

நிர்வாகத்திலிருந்து எதுவித குற்றசாட்டுக்களும் வராமலா உங்களுக்கு தடையும், எச்சரிக்கை புள்ளிகளும் கிடைத்தன நெடுக்காலபோவான்?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் இங்கு மேற்கோள் மூலம் காட்டி தடையைநீக்குமாறு கேட்கின்றேன். நெடுக்காலபோவான் அவர்களிற்கு கள உறவுகள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க 10 நாட்கள் தடையை ஓரிரு நாளில் நீக்கப்படமுடியுமாயின் சாத்திரி அவர்கள் தடையை 15 நாட்கள் நீடிக்கவேண்டும் என்றில்லையே!

அதேவேளை புரட்சிகர தமிழ் தேசிகனுக்கு திண்ணையில் நடந்த பிரச்சனைக்காக ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டது தானே. கள உறவுகள் அங்கும் அவரின் மீதான முடிவை பரிசீலிக்க கேட்டிருந்தனர் தானே.

நெடுக்காலபோவன் மீதான தடை 4 ஆண்டுகளுக்கும் மேலான கதை. ஆனால் புரட்சிகர தமிழ் தேசியன் மீதான தடை வெறும் 4 மாதங்களுக்கு முந்திய கதை..! அதை ஏன் நீங்கள் இங்கு முன்னிறுத்தவில்லை..???????????! :rolleyes::lol::icon_idea:

அதைத்தான் நானும் இங்கு மேற்கோள் மூலம் காட்டி தடையைநீக்குமாறு கேட்கின்றேன். நெடுக்காலபோவான் அவர்களிற்கு கள உறவுகள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க 10 நாட்கள் தடையை ஓரிரு நாளில் நீக்கப்படமுடியுமாயின் சாத்திரி அவர்கள் தடையை 15 நாட்கள் நீடிக்கவேண்டும் என்றில்லையே!

நெடுக்காலபோவான் அவர்களிற்கு கள உறவுகள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க 10 நாட்கள் தடையை ஓரிரு நாளில் நீக்கப்படமுடியுமாயின் ...அது தவறான நிர்வாக முடிவு என்பது எனது கருத்து.

அதற்காக அதை மேற்கோள் காட்டி அதே தவறை மீண்டும் செய்யக்கேட்பது, மகாதவறு.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திலிருந்து எதுவித குற்றசாட்டுக்களும் வராமலா உங்களுக்கு தடையும், எச்சரிக்கை புள்ளிகளும் கிடைத்தன?

ஆம். அப்போதைய நிர்வாகியாக இருந்த வலைஞன் முடிவெடுத்துவிட்டு தான்.. தனிமடல் போட்டிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட பதில் கேள்விகள் பலவற்றிற்கு அவர் சரியான விடையே தரவில்லை..! அது அன்றைய பொழுதுகளில் இருந்த கருத்தியல் கொதிநிலைக்கு ஏற்ப நிர்வாகம் எடுத்த முடிவுகள். அது அன்றைய பிரச்சனை. அதில் அவர்களுக்கு நியாயம் இருந்திருக்கலாம். எனக்கு அது அநியாயமாக இருந்திருக்கலாம். நான் அவற்றை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியும் இருந்தேன். கள உறவுகளும் சுட்டிக்காட்டி இருந்தனர். அது அவர்களின் முடிவை பரிசிலீக்க தூண்டி இருக்கலாம். அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறேன் என்று கோவிக்கக் கூடாது... யாழ் களத்திற்கும், கருத்துப் பதிந்த உறுப்பினர்களுக்கும் மரியாதை தராமல் விதிக்கப்பட்ட களவிதிகளை மீறி சாத்திரி தான் தனது ஆக்கத்தையே நீக்கிவிட்டாரே...

குட்டி சொல்வது சரியாகவே உள்ளது.

சாத்திரியார் தான் நீக்கிய பகுதிகளை, மீண்டும் அதே... தலைப்பில் இணைக்கச் சம்மதித்தால்....,

தண்டனைக் காலத்தை குறைத்து... இன்று மாலையே சாத்திரியாரை களத்தில் காண ஆசையாக உள்ளது.

இதற்கு, ஒரு சமரசப் பேச்சுவார்த்தையை சாத்திரியாருடன் நிர்வாகமோ.... யாழ் களமாளுமன்றமோ மேற்கொள்ளலாம்.

யாழ் களமாளுமன்றின் சார்பில் இந்நாள் முதல்வர் இசைக்கலைஞனும், முன்னாள் முதல்வர் வல்வை சகாறாவும் நிச்சயம் கலந்துகொள்வார்கள்.

மேலதிக உதவிகளுக்கு.... யாழ் கள பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஆஜராக தயாராக உள்ளார்கள். :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.