Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையை நீக்கிவிடுங்கள்!

Featured Replies

ஆமா நீங்கள் சொல்வது போல் எனக்கும் சாத்திரியின் அந்த போக்கு பிடிக்கவில்லை மற்றும்படி வேற எனத்துக்காக சாத்திரியின் தடையை ஆதரிக்கவேண்டும்?

கருத்துக் களத்தில் எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாதது என்பது அவர் அவர் விரும்ப்பம் அதே போல் எதை அனுமதிக்க வேண்டும் எதை அனுமதிக்க கூடாதது என்பது களத்தின் விதி களின் படி மட்டுநிறுத்தினர்களின் உரிமை..

என்னை பொறுத்த மட்டில் மோகன் அண்ணா மென்மையான போக்கை தான் தடைவிடயத்தில் கடைபிடிப்பவர், ஆகவே மட்டுநிறுத்தினர்கள் மோகன் அண்ணாகூட பேசி தடையை நீக்கலாம் என்பது எனது கருத்து.

ஒருவரின் மென்மையான போக்கை நானோ நீங்களோ எங்களுக்கு advantage ஆக எடுப்பது நியாயமான ஒரு செயலாக கணிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

களவிதிகளை மீறியவர் என்ற அடிப்படையில் நிர்வாகம் தனது கடமையை செய்யும் போது, அதை களத்தின் உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் எமது ஆதங்கத்தைத் தெரிவிப்பது தவறல்ல... இருப்பினும், இதே போன்று இன்னொரு தவறு நடக்காமல் இருக்க இந்த முடிவு முன் உதாரணமாக இருக்க உதவும் என்றே நினைக்கிறன். தினமும் ஒவ்வொரு உறுப்பினரும் தாம் பதிந்த பதிவினை தாமே வந்து காரணம் ஏதும் சொல்லாமல் நீக்கிவிட்டு செல்வதே வாடிக்கையாகிவிடக் கூடும் அல்லவா? மோகன் அண்ணா சாத்திரியின் தற்காலியத் தடைக்குரிய காரணத்தை ஏற்கெனவே கூறி இருப்பதால், களத்தின் உரிமையாளர் என்ற வகையில் அவருக்கு மரியாதை கொடுத்து அவரின் கருத்தை ஏற்றுக் கொள்ளவதே நியாயமானது என்று நினைக்கிறன்.

---

ஈஸின் அவத்தர் Noddy என்ற ஒரு சிறுவர் காட்டூனில் வரும் ஒரு கதாபாத்திரம்.

  • Replies 108
  • Views 7k
  • Created
  • Last Reply

எந்த ஒரு கள உறவுக்காகவும் தனிப்பட்ட நட்பு காரணமாக இன்னொருவர் நிர்வாக முடிவை மாற்றக்கேட்பது நேர்மையான நட்பாக இருக்கமுடியாது.

உண்மையான நட்பு என்பது முதல் தேவை நண்பர் இழைக்காமல் தடுப்பதில் இருந்திருக்க வேண்டும். இல்லை தவறைக்கண்டித்து மீண்டும் அவ்வாறான தவறுகளை இழைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்

அதேவேளை புரட்சிகர தமிழ் தேசிகனுக்கு திண்ணையில் நடந்த பிரச்சனைக்காக ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டது தானே. கள உறவுகள் அங்கும் அவரின் மீதான முடிவை பரிசீலிக்க கேட்டிருந்தனர் தானே.

நெடுக்காலபோவன் மீதான தடை 4 ஆண்டுகளுக்கும் மேலான கதை. ஆனால் புரட்சிகர தமிழ் தேசியன் மீதான தடை வெறும் 4 மாதங்களுக்கு முந்திய கதை..! அதை ஏன் நீங்கள் இங்கு முன்னிறுத்தவில்லை..???????????! :rolleyes::lol::icon_idea:

யாழ் கருத்துக்களத்தில் வருகின்ற பிரச்சனைகளுக்கெல்லாம் நான் குரல்கொடுக்கவேண்டும் என்று இல்லையே!

என்னுடைய அவதாரைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் வருகின்ற பிரச்சனைகளுக்கெல்லாம் நான் குரல்கொடுக்கவேண்டும் என்று இல்லையே!

ஆனால் நீங்கள் அதனையும் மேற்கோளிற்குள் கொண்டு வந்திருக்கலாம் தானே..! நிர்வாகத்தின் அந்த முடிவும் அவர்களின் நிர்வாகச் செயற்பாட்டிற்கான கடந்த கால வரலாறு தானே..! :):icon_idea:

  • தொடங்கியவர்

எந்த ஒரு கள உறவுக்காகவும் தனிப்பட்ட நட்பு காரணமாக இன்னொருவர் நிர்வாக முடிவை மாற்றக்கேட்பது நேர்மையான நட்பாக இருக்கமுடியாது.

உண்மையான நட்பு என்பது முதல் தேவை நண்பர் இழைக்காமல் தடுப்பதில் இருந்திருக்க வேண்டும். இல்லை தவறைக்கண்டித்து மீண்டும் அவ்வாறான தவறுகளை இழைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது நட்புக்காக கேட்கப்படும் வேண்டுகோள் அல்ல. சாத்திரியுடன் எனக்கு எதுவிததொடர்பும் இல்லை. கருத்துக்களம் இயல்புநிலைக்கு திரும்புவதற்காகவே கேட்கப்பட்டுள்ளது. நியாயத்தின் அடிப்படையில் பார்த்தால் சாத்திரி விடயம் கையாளப்பட்டதில் நிர்வாகத்திலும் மகாதவறு உள்ளது. மற்றவர்கள் வேண்டுகோள்கள் மூலம் நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து படைப்பாளியுடன் கலந்தாலோசிக்காது நிர்வாகம் ஆக்கங்களை நீக்கம் செய்யமுடியுமானால் இது ஒன்றும் மகாதவறானது அல்ல.

என்னுடைய அவதாரைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்களா? :lol:

சும்மா ஒரு போது அறிவுக்குத் தான்.... :D:lol:

  • தொடங்கியவர்

ஆனால் நீங்கள் அதனையும் மேற்கோளிற்குள் கொண்டு வந்திருக்கலாம் தானே..! நிர்வாகத்தின் அந்த முடிவும் அவர்களின் நிர்வாகச் செயற்பாட்டிற்கான கடந்த கால வரலாறு தானே..! :):icon_idea:

உங்களுக்கும் தடை கிடைத்தது, கள உறவுகள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க தடை ஓரிரு நாட்களில் நீக்கப்பட்டது, அதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். தடைகிடைக்கும்படி நீங்கள் அப்போது அப்படி என்ன செய்தீர்கள் என்று கேட்காதீர்கள். வல்வைசகாறா, நிழலி, இதர கனேடிய உறவுகள் அனைவருக்கும் அனைத்து சம்பவங்களும் நிச்சயம் நினைவில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நட்புக்காக கேட்கப்படும் வேண்டுகோள் அல்ல. சாத்திரியுடன் எனக்கு எதுவிததொடர்பும் இல்லை. கருத்துக்களம் இயல்புநிலைக்கு திரும்புவதற்காகவே கேட்கப்பட்டுள்ளது. நியாயத்தின் அடிப்படையில் பார்த்தால் சாத்திரி விடயம் கையாளப்பட்டதில் நிர்வாகத்திலும் மகாதவறு உள்ளது. மற்றவர்கள் வேண்டுகோள்கள் மூலம் நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து படைப்பாளியுடன் கலந்தாலோசிக்காது நிர்வாகம் ஆக்கங்களை நீக்கம் செய்யமுடியுமானால் இது ஒன்றும் மகாதவறானது அல்ல.

சாத்திரியின் தடையால் கருத்துக்களம் இயல்பை இழந்துவிட்டதாக எதனை வைத்துச் சொல்கிறீர்கள்..?????!

இப்படி ஆளாளுக்கு ஒரு தலைப்பிடுவதன் வாயிலாகவா..???!

இல்ல.. கேட்னும் போல தோனிச்சு.. கேட்கிறம்...! :lol::):icon_idea:

அவர்களோ நீங்களோ அதனை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. வலைப்பூவில் அதற்கான பதிவுண்டு.

அன்றைய பொழுதில்.. எம்மக்களின் துயர் மிகு வேளையில்.. நடந்த அந்த சந்திப்பு சாதிக்கப் போவது என்ன என்று கேட்டிருந்தோம். அதையே பிரச்சனையாக்கினீர்கள். இன்றும் அந்தச் சந்திப்பின் பால்.. நீங்கள் சாதித்தது என்ன என்று கேட்பதை நிறுவ முடியாத நிலையில் தான் அது இருக்கிறது..!

அது முடிந்த வரலாறு..! ஆனால் நீங்கள் வழி தவறிய தடமாகவே எனக்குள் இப்போதும்..!

நீங்கள் பழையதை இதற்குள் கொண்டு வந்ததால் இதனை எழுதுகிறேன்..! ஆக மொத்தத்தில்.. இது முன்னொரு நிகழ்வின் நீட்சியாக நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சாத்திரிக்கு தடை விலக்குவதல்ல உங்கள் நோக்கம். அப்படி என்று எடுக்கலாம் தானே..????????????! :):icon_idea:

Edited by nedukkalapoovan

வாய் இருக்குது என்பதற்காக சும்மா மெல்லுவதா?

கை இருக்கு என்பதற்காக விசைப்பலகையில் குத்துவதா? :lol:

  • தொடங்கியவர்

சாத்திரியின் தடையால் கருத்துக்களம் இயல்பை இழந்துவிட்டதாக எதனை வைத்துச் சொல்கிறீர்கள்..?????!

இப்படி ஆளாளுக்கு ஒரு தலைப்பிடுவதன் வாயிலாகவா..???!

இல்ல.. கேட்னும் போல தோனிச்சு.. கேட்கிறம்...! :lol::):icon_idea:

அதைதொடக்கி வைத்ததும் நீங்கள்தானே!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99625

அன்றைய பொழுதில்.. எம்மக்களின் துயர் மிகு வேளையில்.. நடந்த அந்த சந்திப்பு சாதிக்கப் போவது என்ன என்று கேட்டிருந்தோம். அதையே பிரச்சனையாக்கினீர்கள். இன்றும் அந்தச் சந்திப்பின் பால்.. நீங்கள் சாதித்தது என்ன என்று கேட்பதை நிறுவ முடியாத நிலையில் தான் அது இருக்கிறது..!

மற்றவர் விடயங்களில் இருந்து ஒருங்கியிருக்கப் பழக வேண்டும் நெடுக்ஸ். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதைதொடக்கி வைத்ததும் நீங்கள்தானே!

http://www.yarl.com/...showtopic=99625

இக்கதைக்கும் உங்கள் கற்பனைக்கும்.. தொடர்பு இருக்கலாமே தவிர.. யாழ் கள உறவு சாத்திரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..! :lol::D:icon_idea:

மற்றவர் விடயங்களில் இருந்து ஒருங்கியிருக்கப் பழக வேண்டும் நெடுக்ஸ். :lol:

ஒதுங்கி இருந்து தான் தமிழன் அடிமையாகக் கிடக்கிறான்..! துணிந்து நின்றால் தான் நியாயம் ஜெயிக்கும். அல்லது வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் குற்றம் சுமத்துபவர்களால் உண்மையாகக் காட்டப்பட்டு நிற்கும்..! தமிழர்களின் நியாயமான போராட்டம் பயங்கரவாதமானது போல..! :lol::icon_idea:

வாய் இருக்குது என்பதற்காக சும்மா மெல்லுவதா?

கை இருக்கு என்பதற்காக விசைப்பலகையில் குத்துவதா? :lol:

இரண்டும் இருந்தும்.. பாவிக்காமல் இருப்பதை விட.. இது உறுப்பு நலத்திற்காவது நல்லது தானே..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இக்கதைக்கும் உங்கள் கற்பனைக்கும்.. தொடர்பு இருக்கலாமே தவிர.. யாழ் கள உறவு சாத்திரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..! :lol::D:icon_idea:

கதைக்கும் யாழ் சாத்திரிக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். தலைப்பிற்கும் யாழ் சாத்திரிக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளதாகவே நான் காண்கின்றேன். மறைமுகமாக முதுகில் குத்துவது என்பது இதைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கும் யாழ் சாத்திரிக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். தலைப்பிற்கும் யாழ் சாத்திரிக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளதாகவே நான் காண்கின்றேன். மறைமுகமாக முதுகில் குத்துவது என்பது இதைத்தான்.

அப்படி என்று நீங்கள் கற்பனை செய்து கொள்வதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. அது உங்கட பிரச்சனை..! எமதல்ல..! நாம் தான் தெளிவாகச் சொல்லிவிட்டோம்..! :):lol:

  • தொடங்கியவர்

அப்படி என்று நீங்கள் கற்பனை செய்து கொள்வதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. அது உங்கட பிரச்சனை..! எமதல்ல..! நாம் தான் தெளிவாகச் சொல்லிவிட்டோம்..! :):lol:

சாத்திரி தடைசெய்யப்பட்டதும் நீங்கள் இப்படி ஓர் தலைப்பை ஆரம்பிக்கும்போது அதை எங்கள் கற்பனை என்று எடுத்துக்கொள்ளமுடியாது. அது வெறும் கற்பனையாக இல்லாத காரணத்தினாலேயே நிர்வாகத்தினர் உங்களைத்தொடர்புகொண்டு தலைப்பினை மாற்றுமாறு கேட்டுள்ளார்கள். அது வெறும் கற்பனையாக இல்லாத காரணத்தினாலேயே கள உறவுகள் தலைப்பு மாற்றம் பெற்றதும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

Edited by கலைஞன்

இது நட்புக்காக கேட்கப்படும் வேண்டுகோள் அல்ல. சாத்திரியுடன் எனக்கு எதுவிததொடர்பும் இல்லை. கருத்துக்களம் இயல்புநிலைக்கு திரும்புவதற்காகவே கேட்கப்பட்டுள்ளது. நியாயத்தின் அடிப்படையில் பார்த்தால் சாத்திரி விடயம் கையாளப்பட்டதில் நிர்வாகத்திலும் மகாதவறு உள்ளது. மற்றவர்கள் வேண்டுகோள்கள் மூலம் நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து படைப்பாளியுடன் கலந்தாலோசிக்காது நிர்வாகம் ஆக்கங்களை நீக்கம் செய்யமுடியுமானால் இது ஒன்றும் மகாதவறானது அல்ல.

நான் நினைக்கிறேன் தவறு உங்களில் தான் உள்ளது என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது சக உறவான சாத்திரியவர்களின் தடையை நீக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகின்றேன்.எனினும் அவர் இங்கு தொடர்ந்து எழுதுவதும் எழுதாமல்விடுவதும் அவரின் தனிப்பட்ட பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

இது நட்புக்காக கேட்கப்படும் வேண்டுகோள் அல்ல. சாத்திரியுடன் எனக்கு எதுவிததொடர்பும் இல்லை. கருத்துக்களம் இயல்புநிலைக்கு திரும்புவதற்காகவே கேட்கப்பட்டுள்ளது. நியாயத்தின் அடிப்படையில் பார்த்தால் சாத்திரி விடயம் கையாளப்பட்டதில் நிர்வாகத்திலும் மகாதவறு உள்ளது. மற்றவர்கள் வேண்டுகோள்கள் மூலம் நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து படைப்பாளியுடன் கலந்தாலோசிக்காது நிர்வாகம் ஆக்கங்களை நீக்கம் செய்யமுடியுமானால் இது ஒன்றும் மகாதவறானது அல்ல.

"இங்கு எச்சரிக்கை வழங்கி அதன்பின் நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையையும் சாத்திரி ஏற்படுத்தியிருந்தார். அதாவது எச்சரிக்கை வழங்கப்பட்டால் அக் காலப்பகுதியில் ஏனைய விடயங்களும் அழிக்கப்பட்டு விடலாம் எனக் கருதியிருந்தபடியாலும் எச்சரிக்கை எதுவும் வழங்கப்படாது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது." என்று மோகன் அண்ணா விளக்கம் கொடுத்துள்ளாரே!!!!.

நிர்வாகம் பொது விதிகளை அமைத்து விதிகளுக்கு அப்பால் பட்ட கருத்துக்களை நீக்க நிர்வாகத்துக்கு முழு உரிமையும் உள்ளது.வாசகர்கள் விரும்பாத கருத்துக்களை நிர்வாகம் நீக்குவதில் என்ன பிழை?.

நிர்வாகம் சகட்டுமேனிக்கு பலரின் ஆக்கங்கள்/கருத்துக்களை வெட்டியிருந்தால் ஒருவேளை நீங்கள் சொல்லும் "மகா பிழை" சரியானதாக இருக்கலாம்.

மீண்டும் சொல்கின்றேன் ஒரு தலைவர் உருவாகின்றார். அவர் வைத்ததுதான் சட்டம்.

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்,

சுருக்கமாக சில அவதானிப்புக்களை கூறிக்கொண்டு இத்திரியிலிருந்து விடைபெற்றுக்கொள்கின்றேன்.

மோகன் அவர்கள் வழங்கிய தகவற்படி சாத்திரி தனது பதிவுகளை நீக்கியதன் காரணத்தினாலேயே தொடர்ந்தும் சாத்திரி தானே தனது பதிவுகளை நீக்குவதை தவிர்ப்பதற்காக 15 நாட்கள் தடை வழங்கப்பட்டது. சாத்திரிமீது தடை வழங்கப்பட்டதற்கு வேறு காரணங்கள் இல்லை.

சில வருடங்களின் முன்னர் கரிகாலன் எனும் உறவும் இவ்வாறு மனஸ்தாபம் காரணமாக தனது பதிவுகளை நீக்கியபோது அப்போது வலைஞன் அவருக்குத்தடை விதிக்கவில்லை. மாறாக, எழுதிய பதிவுகளை திருத்தம் செய்யமுடியாதபடி அவரை கருத்துகள உறவுகள்' (கவனிக்கவும் ' ) எனும் பிரிவில் இணைத்தார். யாழ் நிர்வாகம் தடைக்குப்பதிலாக இவ்வாறு எழுதியதை திருத்தம் செய்யமுடியாதவாறு திருத்தம் செய்யும் வசதியை மட்டும் சாத்திரிக்கு உடனடியாக நீக்கி தொடர்ந்தும் களத்தில் இணைந்திருக்க அனுமதி கொடுத்திருக்கலாம். உணர்ச்சிவசப்படும்போது கள உறவுகளை பாதுக்கவேண்டிய தார்மீககடப்பாடு நிர்வாகத்திற்கும், ஏனைய கள உறவுகளிற்கும் உள்ளது. எதிர்காலத்தில் இப்படி யாராவது செய்தால் அவர்களுக்கு தமது பதிவுகளை திருத்தம் செய்யும் வசதியை மட்டும் நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

புரட்சிகரதமிழ்த்தேசியன் விடயத்தில் நடைபெற்ற பிரச்சனைகள், தடை கிடைக்குமளவிறகு அவர் என்ன செய்தார் என்பதுபற்றி எனக்கு ஏதும் தெரியாததால் (நான் அவைபற்றி அதிகம் அறியவில்லை) அவர்விடயத்தை இங்கு ஒப்பீடுசெய்யமுடியவில்லை.

இறுதியாக குமாரசாமி கூறியதுபோலவே வருவதும், போவதும், எழுதுவதும், எழுதாதுவிடுவதும் சாத்திரியின் முடிவு/விருப்பம். சககருத்தாளர் எனும்வகையில், அத்துடன் நேற்று, இன்று பிரச்சனைகளை ஆராய்ந்து யாழ் கருத்துக்களத்தில் மினக்கடுவதற்கு எனக்கு நேரம் உள்ளதால் இவைபற்றி பதிவுகளையிடமுடிகின்றது.

யாழ் கருத்துக்கள விதிமுறைகள், அவற்றில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் சம்மந்தமாக யாழ் உறவோசையில் மீண்டும் பின்னர் உரையாடுகின்றேன்.

நன்றி! வணக்கம்!

மீண்டும் சொல்கின்றேன் ஒரு தலைவர் உருவாகின்றார். அவர் வைத்ததுதான் சட்டம்.

arjunso.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தடைசெய்யப்பட்டதும் நீங்கள் இப்படி ஓர் தலைப்பை ஆரம்பிக்கும்போது அதை எங்கள் கற்பனை என்று எடுத்துக்கொள்ளமுடியாது. அது வெறும் கற்பனையாக இல்லாத காரணத்தினாலேயே நிர்வாகத்தினர் உங்களைத்தொடர்புகொண்டு தலைப்பினை மாற்றுமாறு கேட்டுள்ளார்கள். அது வெறும் கற்பனையாக இல்லாத காரணத்தினாலேயே கள உறவுகள் தலைப்பு மாற்றம் பெற்றதும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

தலைப்பு மாற்றம் கள உறவு சாத்திரி சார்ந்ததல்ல. தலைப்பு மாற்றம் வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று நிர்வாகமும்.. கள உறவுகளும் மீள மீள முன்னுறுத்திய கருத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததே அன்றி.. கதையோ தலைப்போ கள உறவு சாத்திரியை சார்ந்ததல்ல. இதனை விளக்கி ஒரு கள உறவுக்கு தனிமடலும் இட்டிருந்தேன்.

குறித்த கள உறவுக்கு முதலில்.. நான் சொன்னது.. நான் தலைப்பை மாற்ற முடியாது.. தலைப்பை மாற்றுவது சாத்திரிக்காக தலைப்பிட்டதாகக் காட்ட செய்யப்படும் என்று. நான் எதை அவருக்குச் சொன்னேனோ.. அதை நீங்கள் செய்து காட்டுகிறீர்கள்..!

குறித்த கதைக்கான தலைப்போ.. கதையோ கள உறவு சாத்திரிக்கானதல்ல. அதை மட்டும் சொல்லிக் கொள்ள முடியும். நம்புவதும் விடுவதும் உங்கள் பிரச்சனை..! இதற்கு மேல் இத்தலைப்பில் மிணக்கடுவது வீண்..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.