Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டார்கள் : விஜயகாந்த் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டார்கள் : விஜயகாந்த் ஆவேசம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும்.

ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர்க் குற்றங்கள் ஆகும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை அரசு தமிழினப் படுகொலையை நடத்தியதன் மூலம் இந்த இரு குற்றங்களையும் செய்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசு புரிந்துள்ள இந்த இரு குற்றங்களையும் ஐ.நா.வின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் இந்தியா தலையிட்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தன் விருப்பத்திற்கு இலங்கைக்கு ஆலோசனை கூறவோ அல்லது பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பவோ கூடாதென்றும், இலங்கை அரசின் சம்மதத்தை பெற்ற பிறகு ஐ.நா. செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை திருத்தியுள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைக் குழு எதைச் செய்தாலும் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்தியாவினுடைய திருத்தம் இலங்கை அரசின் சம்மதம் இன்றி ஐ.நா. மனித உரிமைக் குழு எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, இந்தியாவின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு, அப்படி திருத்தப்பட்ட தீர்மானம்தான் தற்பொழுது நிறைவேறியுள்ளது.

ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா இதற்கு காரணம் கற்பித்துள்ளது.

இறையாண்மை என்பதன் மூலம் தன் சொந்த குடிமக்களையே கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்கக் கூடாது என்பதாலும், உலக சமுதாயம் அதை வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதாலுமே ஐ.நா. மன்றம் அத்தகைய நாடுகளில் தலையிட்டு மனித சமுதாயத்தை காப்பாற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இறையாண்மை என்பதன் பெயரால் உலகளாவிய மனிதாபிமான உரிமைகளை தடுக்கவோ, தவிர்க்கவோ எந்த அரசுக்கும் உரிமை இல்லை.

போர்க் குற்றங்கள் நிகழ்ந்தாலோ, இனப் படுகொலை நடந்தாலோ அதை தடுத்து நிறுத்த எந்த நாட்டிலும் தலையிடலாம். அதை ஒரு நாடு உள் விவகாரம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படையிலேயே தமிழினப் படுகொலை சம்பந்தமான தீர்மானம் மனிதாபிமான அடிப்படையிலும், போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்ற அடிப்படையிலும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர் என்றால் இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போகச் செய்து விட்டது.

இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாகக் கருதுகின்ற அணுகுமுறையையே இந்திய அரசு மேற்கொண்டது என்று இந்திய அரசின் அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியா கொண்டு வந்த திருத்திய தீர்மானத்தின் மூலம் தங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சலுகையை செய்துள்ளது என்று இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

எனினும் ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்போது, இந்திய அரசு வெளிப்படையாக இலங்கை அரசின் பக்கம் சாயாமல் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் இலங்கை அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என்றாலும், கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளது என்பது திருப்தி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

இந்தாள எப்ப பாரு" நீர்" "மோர்" "பீர்" எண்டு தண்ணி நினைப்பு தான்..:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும்.. எம்மவர்கள் பலருக்கு இல்லாத சரியான புரிதல்.. அமெரிக்க தீர்மானம் குறித்து அவரிடம் உள்ளதே. அதை மக்கள் விளங்க எளிமையாகச் சொல்வது என்பது இலகுவான காரியம் அல்ல. அதற்காக விஜயகாந்தை பாராட்டலாம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் அனுமதியுடனும் ஒத்துழைப்புடனும் ஓர் உள்ளக விசாரணையை நடத்துவதற்கும், சுயாதீன விசாரணையொன்றை முடுக்கி விடுவதற்கும் பெரிய வேறுபாடுகளிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டிற்கும் அந்த நாட்டின் ஒத்துழைப்பு அவசியமாகும். வெளியிலிந்து விசாரணை செய்பவர்களுக்கு விஸாவைக் கூட வழங்காமல் இலங்கை அவர்களை உள்ளேவரத் தடை விதிக்கலாம். சுயாதீனமாக விசாரணை செய்வதைத் தங்களது அதிகாரத்தைப் பாவித்துக் குழப்பலாம். இலங்கையை முற்றாக அன்னியப்படுத்திச் செய்யப்படும் விசாரணைகளைத் தனது உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி நேசநாடுகளிடம் முறையிடலாம். நாடுகளுடனான நட்பும் இதனால் பாதிக்கப் படலாம். அதனால் மிகவும் நிதானமானதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதுமான அணுகுமுறைகளை ஆரம்பச் செயற்பாடுகளாக முன்னெடுப்பதே சரியான செயலாகும். அதனைக் கருத்திற்கொண்டே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பங்கரவாதத்திற்கெதிரான யுத்தமொன்றையே இலங்கை நடத்தியுள்ளதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இந் நிலையில், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்களுக்கும் இழப்புக்களுக்கும் சரியான பரிகாரமொன்றை கவனமான முறையில் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பை சர்வதேசம் மிக நிதானமாக எடுத்திருக்கிறது. இலங்கையின் நடவடிக்கை முற்றிலும் எதிரானதாக இருக்குமாயின் சர்வதேசத்தின் அணுகுமுறைகளிலும் சற்றுக் கடினத்தன்மை ஏற்படும். தமிழர்கள் அதுவரை தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்து போராட வேண்டியதே இன்றைய கடமையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இப்போதைக்கு வந்தவரைக்கும் லாபம் எண்டு நினைக்காமல்.........நீர்மோர் வடை பாயாசம் எண்டு கதைவிட்டுக்கொண்டு......

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நல்ல அரசியல்வாதி

தேர்தலில்தோல்வி வேறு.

இப்படித்தான் பேசுவார்.

நாம்தான் எமக்கானதைப்பொறுக்கணும்

தண்ணி கலக்காமல் கொஞ்சம் ஊத்த்திட்டார் போல கிடக்கு.

அரசிலில் இல்லாமல் உண்மையிலேயே தமிழர் நலன்கள் மீது அக்கரையுள்ளர்வர் என்றால் முதலைமைச்சருடன் கூட்டாட்சி நடத்தி அவரின் கைகளை மேலும் பலப்படுத்தி இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.