Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா வாழ்தமிழ்மக்களுக்கு.......

Featured Replies

Canadian PM calls snap election

Mr Harper's minority government has needed opposition support to pass bills

Canadian Prime Minister Stephen Harper has called an early election for 14 October in a bid to strengthen his minority Conservative government.

He met Governor General Michaelle Jean - the representative of Canada's head of state, Queen Elizabeth II - to request the dissolution of parliament.

The latest polls indicate the Conservatives are ahead of the opposition Liberals.

The PM, elected in 2006, has complained that parliament is deadlocked.

The vote will be Canada's third national election in four years.

Economic issues

Mr Harper's government has needed the support of the main opposition parties, the Liberals and the Bloc Quebecois, to pass legislation and adopt budgets.

The election call had been widely expected, with Mr Harper complaining in recent weeks that parliament was "dysfunctional".

Between now and October 14, Canadians will choose a government to look out for their interests at a time of global economic trouble

Stephen Harper

Holding the election this year breaks Mr Harper's own fixed-date election law, something he had said was necessary to prevent prime ministers calling elections when polls indicated they were in a favourable position.

Mr Harper has made it clear he is running on economic issues and criticised the Liberals' plan to tax greenhouse gas polluters while cutting other taxes.

"Between now and October 14, Canadians will choose a government to look out for their interests at a time of global economic trouble," Mr Harper said in a statement.

"They will choose between direction or uncertainty; between common sense or risky experiments; between steadiness or recklessness."

The opposition leaders are expected to make their own addresses later on Sunday.

Favourable polls

Mr Harper led the Conservatives to victory in the 2006 election, ending 12 years of Liberal government.

The party heads into the election with 127 of parliament's 308 seats. The Liberals have 95, the Bloc Quebecois has 48 and the New Democratic Party (NDP) 30.

There are three Independent MPs, the Green Party has one seat and four are vacant.

Opposition Liberal leader Stephane Dion proposes taxing polluters

An opinion poll held last week suggested support for the Conservatives had grown over the summer.

The Environics survey suggested that 38% of Canadians would vote for the Conservatives; 28% for the Liberals; 19% for the NDP, eight for the Bloc Quebecois and seven for the Greens.

The figures put the Conservatives within striking distance of a majority government, Donna Dasko, senior vice-president of Environics Research Group, told CBC News.

The leader of the separatist Bloc Quebecois, Gilles Duceppe, said his party was best positioned to stop the Conservatives gaining a majority.

The same Environics poll indicated increased support for the Conservatives in Quebec, where separatist ardour has faded in recent years.

Liberal leader Stephane Dion is staking his command of the party on his "Green Shift" plan, which would tax polluters but reduce other taxes.

If his party does not do well on 14 October, his leadership will likely come under scrutiny at a party convention in December.

Mr Dion has described Mr Harper as Canada's most right-wing prime minister in history.

Mr Harper supported the Iraq war while in opposition and withdrew Canada from the Kyoto Protocol that aims to cut greenhouse gases. He has also increased Canada's troop commitment to Afghanistan.

http://news.bbc.co.uk/2/hi/americas/7602864.stm

  • Replies 66
  • Views 10.5k
  • Created
  • Last Reply

இந்த முறை யாரும் இவருக்கு வாக்குப் போட்டிடாதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை யாரும் இவருக்கு வாக்குப் போட்டிடாதையுங்கோ.

வேற யாருக்கு போடுறதாம்? செரெவ்பான் டிஓன் (Stephan Dion) ஒரு தலைவர் மாதிரியே இல்லை. அந்தாள் தான் என்ன கதைக்கிறேன் எண்டே தெரியாம கதைக்குது. லிபரலின் தலைமைத்துவத்தில் எனக்கு சிறிதும் உடன் பாடு இல்லை. என்.டி.பி யும் அப்பிடி இப்பிடித்தான். அதனால ஸ்ரரீபன் காப்பர் தான் இந்த முறையும் வருவார் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தமட்டில், அந்தாள் வந்ததால கனடாக்கு பெரிசா ஒரு பாதகமும் இல்லை. இயக்கம் மற்றும் உலகத்தமிழரைத் தடை செய்ததற்கு மற்ற (முக்கியமாக லிபரல்) எதுவும் செய்யவில்லை. எல்லாமம் எம்மவரின் பிழை. சரியான அணுகுமுறை இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். எங்களுக்கை ஆயிரத்தெட்டு போட்டி பொறாமையளை வைத்துகொண்டு அவங்களை குறை சொல்லி என்ன பலன்? நான் முதன் முறையாக பி . சி க்கு வாக்களிக்க நினைத்திருக்கிறேன். ஆனாலும் வீட்டுக்கு வாக்கு கேட்க வருவோரிடம், அவர்களின் தடைபற்றி எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். அதை தமிழர் எல்லோரும் எல்லா கட்சி காரரிடமும் கதைத்தால் (முக்கியமாக ரொறன்ரோ) சில நேரம் எதிர்காலத்தில் ஏதாவது செய்யலாம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடையை எடுக்கபோவதில்லை. அதை விட மீண்டும் மைநோரிட்டி கவுண்மன்ற் தான் வரும் என நினைக்கிறேன்.

Edited by Sabesh

  • 3 weeks later...

வேற யாருக்கு போடுறதாம்? செரெவ்பான் டிஓன் (Stephan Dion) ஒரு தலைவர் மாதிரியே இல்லை. அந்தாள் தான் என்ன கதைக்கிறேன் எண்டே தெரியாம கதைக்குது. லிபரலின் தலைமைத்துவத்தில் எனக்கு சிறிதும் உடன் பாடு இல்லை. என்.டி.பி யும் அப்பிடி இப்பிடித்தான். அதனால ஸ்ரரீபன் காப்பர் தான் இந்த முறையும் வருவார் என நினைக்கிறேன்.

NDP Jack Layton மற்ற கட்சிகளோட சேந்து Coalition Government ஒன்றை அமைக்கிறதுக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கிது. யார் சிறந்த தலைவர் எண்டுற கருத்துக்கணிப்பில Jack Laytonதான் முதலாவதா நிக்கிறார். Jack Layton இந்தமுறை பிரதமரா வரக்கூடும்.

மொகரக்கட்டையப் பாத்து வாக்கு போடுறது எண்டால் ஸ் ரீபன் காப்பருக்கு போடலாம். லிபரல் Dionனிண்ட மொகரக்கட்டை அழகா இல்லை எண்டுறது தவிர, மற்றும்படி அவர் ஒரு சிறந்த தலைவர் மாதிரி இல்லை எண்டுறத ஏற்றுக்கொள்ள ஏலாது.

நாங்கள் போடுற வாக்கு போட்டியில வெற்றி பெறுவதற்கு உதவாவிட்டாலும், அடுத்த தேர்தலில குறிப்பிட்ட அந்த கட்சிக்கு பிரச்சாரத்துக்கு ஒதுக்கப்படுற பணத்தொகை அதிகரிக்கப்படுவதற்கு எங்கட வாக்குகள் உதவும். இந்தவகையில...

எமது தொகுதியில திரும்பவும் லிபரல்தான் நிச்சயம் வெற்றிபெறும் எண்டாலும் எனது வாக்கு இந்தமுறை NDP க்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு உண்மையை புரிந்தும் புரியாதமாதிரி கருத்துக்களை முன்வைக்கின்றீங்க.

அதாவது கனடாவிலை யார் பிரதமர் என்பது முக்கியமல்ல, அமெரிக்காவிலை யார் ஜனாதிபதி என்பதை கருத்தில்கொண்டு நீங்கள் கனடாவிலை யாருக்கும் வாக்களிக்கலாம்.

தலை அங்கே சரியாக ஆடினால் வால் கனடாவிலை சரியாக ஆடும் என்பது தான் நிஜம்.

அமெரிக்க லெக்சனுக்குப் பயந்து தான் இவர் அதற்கு முதல் வைக்கிறார்

இவர் அமெரிக்காவின் வால் என்று எல்லோருக்கும் தெரியும்

கனடாவில் ஆர் வந்தாலும் பரவாயில்லை அமெரிக்காவில் வாலுகள் வரக்கூடாது

அமெரிக்காவிலை யார் ஜனாதிபதி என்பதை கருத்தில்கொண்டு நீங்கள் கனடாவிலை யாருக்கும் வாக்களிக்கலாம்

கனடிய லெக்சனுக்கு பிறகு தான் அமெரிக்க லெக்சன் வருது அப்படி என்றால் எப்படி ???????

அமெரிக்க லெக்சனில் கனடியர் வாக்களிக்கலாமா ?????????????

NDP Jack Layton மற்ற கட்சிகளோட சேந்து Coalition Government ஒன்றை அமைக்கிறதுக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கிது. யார் சிறந்த தலைவர் எண்டுற கருத்துக்கணிப்பில Jack Laytonதான் முதலாவதா நிக்கிறார். Jack Layton இந்தமுறை பிரதமரா வரக்கூடும்.

மொகரக்கட்டையப் பாத்து வாக்கு போடுறது எண்டால் ஸ் ரீபன் காப்பருக்கு போடலாம். லிபரல் Dionனிண்ட மொகரக்கட்டை அழகா இல்லை எண்டுறது தவிர, மற்றும்படி அவர் ஒரு சிறந்த தலைவர் மாதிரி இல்லை எண்டுறத ஏற்றுக்கொள்ள ஏலாது.

நாங்கள் போடுற வாக்கு போட்டியில வெற்றி பெறுவதற்கு உதவாவிட்டாலும், அடுத்த தேர்தலில குறிப்பிட்ட அந்த கட்சிக்கு பிரச்சாரத்துக்கு ஒதுக்கப்படுற பணத்தொகை அதிகரிக்கப்படுவதற்கு எங்கட வாக்குகள் உதவும். இந்தவகையில...

எமது தொகுதியில திரும்பவும் லிபரல்தான் நிச்சயம் வெற்றிபெறும் எண்டாலும் எனது வாக்கு இந்தமுறை NDP க்குத்தான்.

நீங்கள் கூறுவது உண்மையே நானும் NDP க்குத்தான். கடந்த சில வருடங்களாக போட்டு வருகிறேன் ஏன் இவர்கள் ஒரு எதிர்கட்சியானாலும் பரவாயில்லையே

கனடியத் தமிழர்களுக்குத் தான் சங்கடம்

ஆய்வாளர்களும் ஊடகங்களும் யாருக்கு போடுங்கள் போடாதீர்கள் என்று சொல்ல முடியாமல் அடக்கி வாசிக்கிறார்கள்

தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக

நீங்கள் கூறுவது உண்மையே நானும் NDP க்குத்தான். கடந்த சில வருடங்களாக போட்டு வருகிறேன் ஏன் இவர்கள் ஒரு எதிர்கட்சியானாலும் பரவாயில்லையே

இந்த கோணத்திலான சிந்தனையே ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நமக்கு முன் உள்ள இரண்டு கேள்விகள்..!

1) ஹார்ப்பர் மறுபடியும் வரலாமா?

2) தமிழர் வாக்குபலம் என்னவென்று கட்சிகளுக்கு காட்டப்படல் வேண்டுமா?

முதலாவது கேள்விக்கு இல்லை என்பதே பெரும்பாலோரின் பதிலாக இருக்கும். ஆனால் இரண்டாவதைப் பொறுத்தவரையில், பெரும்பாலான தமிழர் வாக்குகள் லிபரலுக்கும், பு.ஜ. கட்சிக்கும் இடையே சிதறும்போது, தமிழர் பலம் கட்சிகளுக்கு தோற்றாது. ஆகையால் மறுபடியும் உதாசீனம் செய்யவே செய்வார்கள். அத்துடன் ஒன்ராரியோவில் பலம் குறைந்த பழமைவாதக் கட்சிக்கு மறைமுக நன்மையாகப் போய்விடலாம். :icon_mrgreen:

சிந்தித்துச் செயல்படுவோம்..!!

இன்று நமக்கு முன் உள்ள இரண்டு கேள்விகள்..!

1) ஹார்ப்பர் மறுபடியும் வரலாமா?

2) தமிழர் வாக்குபலம் என்னவென்று கட்சிகளுக்கு காட்டப்படல் வேண்டுமா?

முதலாவது கேள்விக்கு இல்லை என்பதே பெரும்பாலோரின் பதிலாக இருக்கும். ஆனால் இரண்டாவதைப் பொறுத்தவரையில், பெரும்பாலான தமிழர் வாக்குகள் லிபரலுக்கும், பு.ஜ. கட்சிக்கும் இடையே சிதறும்போது, தமிழர் பலம் கட்சிகளுக்கு தோற்றாது. ஆகையால் மறுபடியும் உதாசீனம் செய்யவே செய்வார்கள். அத்துடன் ஒன்ராரியோவில் பலம் குறைந்த பழமைவாதக் கட்சிக்கு மறைமுக நன்மையாகப் போய்விடலாம்.

சிந்தித்துச் செயல்படுவோம்..!!

நீங்கள் கூறுவது போல் வாக்குகள் சிதறுப்பட்டால் அது பழமைவாத கட்சிக்கு நன்மையே. அத்தோடு எந்த ஒரு கட்சியும் எம்மவரை கருத்தில் எடுக்காது. காப்பர் தான் வருவார் என்ற நம்பிக்கை பழமைவாத கட்சிக்கு இன்றுவரை அசைக்க முடியாமல் உள்ளது. யார் வந்தாலும் தமிழர்களின் பலம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அது எம்மை உதசீனம் செய்யாத கட்சிக்கு எமக்காக குரல் கொடுக்க கூடிய கட்சிக்கு போய் சேர வேண்டும். பெரும் எண்ணிக்கையில் வாழும் தமிழர்கள் ஒன்றுபட்டு இந்த தேர்தலில் பங்கெடுப்பது இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களின் வாக்குபலம் என்னவென்று காட்டப்படுதல் மிக முக்கியமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்கம் மற்றும் உலகத்தமிழரைத் தடை செய்ததற்கு மற்ற (முக்கியமாக லிபரல்) எதுவும் செய்யவில்லை.

ஏன் தடை கொண்டுவரப் பட்டபோது லிபரல் ஆட்சியிலா இருந்தது?

லிபரல் ஆட்சியில் கொன்சவேட்டிவ் கட்சியின் எத்தனை அழுத்தங்களுக்கு (உண்மையில் சிங்களவனின் அழுத்தம், கருவி கொன்சவேட்டிவ் கட்சி, குறிப்பாக Stockwell Day) மத்தியிலும் தடை கொண்டுவரப்படவில்லையே?

என்னைப் பொறுத்தவரைக்கும் வாக்குகள் சிதறாமல் லிபரலுக்கே போகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நமக்கு முன் உள்ள இரண்டு கேள்விகள்..!

நீங்கள் கூறுவது போல் வாக்குகள் சிதறுப்பட்டால் அது பழமைவாத கட்சிக்கு நன்மையே. அத்தோடு எந்த ஒரு கட்சியும் எம்மவரை கருத்தில் எடுக்காது. காப்பர் தான் வருவார் என்ற நம்பிக்கை பழமைவாத கட்சிக்கு இன்றுவரை அசைக்க முடியாமல் உள்ளது. யார் வந்தாலும் தமிழர்களின் பலம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அது எம்மை உதசீனம் செய்யாத கட்சிக்கு எமக்காக குரல் கொடுக்க கூடிய கட்சிக்கு போய் சேர வேண்டும். பெரும் எண்ணிக்கையில் வாழும் தமிழர்கள் ஒன்றுபட்டு இந்த தேர்தலில் பங்கெடுப்பது இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களின் வாக்குபலம் என்னவென்று காட்டப்படுதல் மிக முக்கியமே.

சுகன்,

அத்துடன் இன்னும் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கிறது. மூடிய செவிகளெல்லாம் சிறிது திறந்திருக்கும் காலம் இது. வாக்குச் சீட்டுகள் மூலம் மட்டுமல்லாது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியினூடும் நாம் எம் கருத்துக்களை முன் வைக்கலாம். சென்ற வாரம் பழமைவாதக் கட்சியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எங்கள் வீட்டின் முன் புறத்தில் தங்கள் கட்சியின் வேட்பாளர் பலகை வைக்க வேண்டுமாம். அப்போது நடந்த உரையாடலில் இந்தத் தேர்தலில் என் எனது தலையாய பிரச்சினை என்று கேட்டார்கள். கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை என்று ஆரம்பித்து ஹார்ப்பரின் அரைகுறை நடவடிக்கைகளை சுருக்கமாக விளக்கினேன்.

இந்தத் தேர்தலில் தமிழர்கள் லிபரலுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்பது என் கருத்து. அமெரிக்க குடியரசுக் கட்சி அமெரிக்காவில் தோற்கும் என்பதே பெரும்பாலான் கருத்து. அப்போது இங்கே லிபரல் வருவது அதற்கு தமிழர் ஆதரவு இருப்பதும் அவசியம். புதிய ஜனநாயகக் கட்சியும் நல்லதுதான். ஆனால் அவர்கள் கனடவில் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. தவறாக இருந்தால் சுட்டிக் காட்டவும்.

அதன் அடிப்படையில் லிபரலுக்கு வாக்களிப்பதே சிறந்தது. ஆனால் தமிழர்கள் தங்கள் தொகுதியிலுள்ள பழமைவாத, புதிய ஜனநாயக மற்றும் லிபரல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் தங்கள் அரசியல் நிலையைத் தெளிவுபடுத்த தவறக்கூடாது.

வேட்பாளர்களிடம் தொடர்புகொள்ளும்போது உங்கள் இலங்கை/ஈழம் தொடர்பான எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துங்கள். யாருக்குப் போடப்போகிறீர்கள் என்பதோ அவர்களிடம் எரிந்து விழுவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.

ஏன் தடை கொண்டுவரப் பட்டபோது லிபரல் ஆட்சியிலா இருந்தது?

லிபரல் ஆட்சியில் கொன்சவேட்டிவ் கட்சியின் எத்தனை அழுத்தங்களுக்கு (உண்மையில் சிங்களவனின் அழுத்தம், கருவி கொன்சவேட்டிவ் கட்சி, குறிப்பாக Stockwell Day) மத்தியிலும் தடை கொண்டுவரப்படவில்லையே?

என்னைப் பொறுத்தவரைக்கும் வாக்குகள் சிதறாமல் லிபரலுக்கே போகவேண்டும்.

காட்டாறு, மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

லிபரல் கட்சி மற்ற இரண்டு கட்சிகளையும் விட மோசமானது

தமிழர்களை தனக்கு சேவகம் செய்பவர்களாக மட்டுமே பார்க்கிறது தமிழருக்கு ஒரு தொகுதியும் வழங்க விரும்பவில்லை

தடை செய்யும் போது லிபரல் ஆட்சியில் இல்லை ஆனால் தடை செய்வது பற்றி ஆரம்பித்தவர்கள் லிபரல் தான் அவர்கள் தான் தடை செய்யவேண்டும் என்ற ஆவணத்தை தயாரித்தவர்கள்

ஆனால் தடைசெய்வதை பிற்போட்டு வந்தார்கள்

உங்களுடைய லிபரல் விசுவாசம் ஏன் என்று எனக்கு தேவையில்லை

ஆரம்பகால தமிழ் அமைப்புக்கள் விட்ட தவறுகள் அவர்கள் லிபரல் கட்சியில் மட்டுமே ஒட்டி தனது குடும்ப நலன்களையும் பார்த்துக் கொண்டார்கள் அதனால் அவர்களால் லிபரல் விசுவாசம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

எல்லாக கட்சிகளுடனும் சேர்ந்து இல்லாமல் ஒன்றுடன் ஒட்டியதால் இப்போது மற்றவர்கள் ஆட்சியைப் பிடித்தவுடன் அது நமக்கு பகையாக மாறுகிறது

இப்போது அதை தமிழர்கள் உணர்ந்து விட்டார்கள் மீண்டும் லிபரல் விசுவாசம் பேசுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம் அதை மற்றவர்களின் மேல் திணிக்காதீர்கள்

தவிர கனடிய அரசியலில் நீரோட்டத்தையும் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்

லிபரலோ கொன்சவேற்றி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்பதும் அது சிறுபான்மைக் கட்சியாக வரும் என்பதும் எல்லோருடைய ஊகம் ஆகும்

தங்களில் ஒருவர் தான் வரமுடியும் என்ற இவர்கள் இருவரினது இந்த நினைப்பை மாற்ற வேண்டும்

அதை மாற்றி ண்டிபி யும் ஒரு வலுவான கட்சியாக மாற்ற வேண்டியது அவசியம்

தமிழ்குரல்,

வேறு கோணத்தில் அமைந்த உங்கள் பார்வையை வரவேற்கிறேன். இப்படியான பல்வேறுவகைப்பட்ட விவாதங்கள்தான் நமக்கு இத்தருணத்தில் தேவை. என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு லிபரல் விசுவாசி அல்ல. ஆனால் தற்காலத்தில் தாயகத்தில் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்துக்குப் பயனளிக்கக்கூடிய ஏதாவது ஒரு ஒருமித்த முடிவை நாம் எடுக்கவேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

லிபரல் கட்சி மற்ற இரண்டு கட்சிகளையும் விட மோசமானது

தமிழர்களை தனக்கு சேவகம் செய்பவர்களாக மட்டுமே பார்க்கிறது தமிழருக்கு ஒரு தொகுதியும் வழங்க விரும்பவில்லை

எந்த ஒரு கட்சியும் ஒரு காரணமுமின்றி ஒரு இனத்தை ஒதுக்கி வைக்காது என்பது என் கருத்து. கட்சிகளின் தேவை சாதாரண குதிரைகள் அல்ல.. வெற்றிக் குதிரைகள்...! மார்க்கத்திலோ ஸ்காபுரோவிலோ தமிழர்கள் அதிகமிருந்தாலும் அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு தகுதி மட்டும் ஒரு தமிழரை வேட்பாளர் ஆக்கிவிடாது. அங்கு அதிகமிருக்கும் கட்சி சார்பில்லாத பல்லின சமூகத்தவரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டும். குறிப்பாக சீனர்களின் வாக்குகள். எம்மவர் வாக்குகள் மட்டும் அங்கே வெற்றியைத் தீர்மானிக்குமாக இருந்தால் நாம் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம் பலத்தை நிரூபித்திருக்க வேண்டும்.

மறுவளத்தில், புதிய ஜனநாயகக்கட்சியோ, பழமைவாதக் கட்சியோ எம்மவரில் ஒருவரை வேட்பாளராக்கியிருக்கிறதா? தமிழர்கள் லிபரலுடன் இருப்பதால் அவர்களை இக்கட்சிகள் வேட்பாளராக்கவில்லை என்பது ஏற்கப்பட முடியாதது.

முஸ்லீம்களுக்கு மேற்கில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போதும் ஒரு உதாரணத்துக்கு பாகிஸ்தானில் பிறந்த வாஜீத் கான் மிசிசாகாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆக முடிகிறது. லிபரல் சார்பாக இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பழமைவாதக் கட்சிக்கு தாவி மத்தியகிழக்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கு பிரதமரின் ஆலோசகராக இருக்கிறார். ஆக, இவர் செய்திருப்பது என்ன? லிபரலில் வேட்பாளராக நுழைந்து வென்று, அக்கட்சி ஆட்சிபீடம் ஏறாதபோது கட்சி மாறி, கனேடிய அரசில் முஸ்லிம்கள் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு பொறுப்புக்கு எப்படியோ வந்துவிட்டார்.

நமது தவறுகள் என்ன? ஒரு கட்சியில் வேட்பாளராகும் மற்றும் ஆட்சி விவகாரங்களில் அழுத்தம் செலுத்தக்கூடிய வல்லமையுடன் கூடிய தகைமைகளை வளர்த்துக்கொள்வதில்லை. வெறும் மக்கள் தொகையை மட்டும் வைத்துக்கொண்டு வேட்பாளராக நிறுத்தும்படி கேட்க முடியாது.

தடை செய்யும் போது லிபரல் ஆட்சியில் இல்லை ஆனால் தடை செய்வது பற்றி ஆரம்பித்தவர்கள் லிபரல் தான் அவர்கள் தான் தடை செய்யவேண்டும் என்ற ஆவணத்தை தயாரித்தவர்கள்

ஆனால் தடைசெய்வதை பிற்போட்டு வந்தார்கள்

உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப தடை பற்றி ஆலோசித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை. ஆனால் பழமைக் கட்சி வந்தவுடன் தடை செய்தார்கள். யார் இறுதியில் செய்தார்கள் / செய்யவில்லை என்பதே முக்கியம். இப்போது ஒஸ்திரேலியாவிலும்தான் தடைபற்றிய பேச்சு நடக்கிறது. அதனால் அது கேடுகெட்ட அரசு என்றோ எதிர்க்கட்சி நல்லது என்றோ கூற முடியாது.

ஆரம்பகால தமிழ் அமைப்புக்கள் விட்ட தவறுகள் அவர்கள் லிபரல் கட்சியில் மட்டுமே ஒட்டி தனது குடும்ப நலன்களையும் பார்த்துக் கொண்டார்கள் அதனால் அவர்களால் லிபரல் விசுவாசம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

எல்லாக கட்சிகளுடனும் சேர்ந்து இல்லாமல் ஒன்றுடன் ஒட்டியதால் இப்போது மற்றவர்கள் ஆட்சியைப் பிடித்தவுடன் அது நமக்கு பகையாக மாறுகிறது

எப்போதுமே தம்மிலே வேட்பாளராக நிறுத்தக்கூடிய தகைமைகளைக் கொண்ட ஒரு இனம் பல கட்சிகளிலும் இருப்பது அவ்வினத்துக்கு நன்மை பயக்கும். உதாரணத்துக்கு சீனர்கள், முஸ்லீம்கள். ஆனால் சிறுபான்மையினரான நம்மினத்தில் அப்படிப்பட்டவர்கள் யாரும் களத்தில் இல்லை. மக்கள் பலமும் சிறு வட்டத்துக்குள்தான். அதனால் உள்ளதை வைத்துத்தான் முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. லிபரலில் கோபம் என்று புதிய ஜனநாயகக் காட்சிக்குப் போனால் அங்கே மட்டும் மதிப்பார்கள் என்று என்ன நிச்சயம். மதிப்பை விடுங்கள். அவர்களுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளதா? அல்லது பு.ஜ. கட்சி ஸ்காபுரோ, மார்க்கம், மிசிசாகா போன்ற தொகுதிகளில் வெற்றியீட்டும் வாய்ப்பாவது உள்ளதா?

இவை இரண்டு இல்லாதபோது, புதிய ஜனநாயகக் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பது தோற்கும் குதிரையில் பந்தயம் கட்டுவது போன்றது. இந்த நடவடிக்கை லிபரல் தோற்று பழமைவாதக்கட்சி மார்க்கம் போன்ற இடங்களில் வெற்றியீட்ட ஒருவேளை உதவலாம். அப்போது லிபரலும் மதியாது. பழமைவாதியும் மதிக்கமாட்டார். புதிய ஜனநாயகவாதிமட்டும் ஆறுதல் கூறிவிட்டும் போய்விடுவார்.

தவிர கனடிய அரசியலில் நீரோட்டத்தையும் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்

லிபரலோ கொன்சவேற்றி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்பதும் அது சிறுபான்மைக் கட்சியாக வரும் என்பதும் எல்லோருடைய ஊகம் ஆகும்

தங்களில் ஒருவர் தான் வரமுடியும் என்ற இவர்கள் இருவரினது இந்த நினைப்பை மாற்ற வேண்டும்

அதை மாற்றி ண்டிபி யும் ஒரு வலுவான கட்சியாக மாற்ற வேண்டியது அவசியம்

நீங்களே கூறுகிறீர்கள் லிபரலோ, பழமைவாதக்கட்சியோதான் ஆட்சிக்குவருமென்று. பிறகு புதிய ஜனநாயகக்கட்சிக்குப் போட்டு என்ன பயன்? அவர்களால் தமிழர் செறிந்து வாழும் தொகுதிகளில் தமிழர் ஆதரித்தாலும் வெல்லமுடியாது. அவர்களுக்கு அதிக வாக்குகளைப்போட்டு என்ன பிரயோசனம்?

தமிழர்களுக்கு மிகவும் இக்கட்டான இந்தக்காலகட்டத்தில், கனேடியக் கட்சிகளுக்குப் பாடம் புகட்டுவது எங்கள் நோக்கமாக இருக்கக் கூடாது. தமிழர் விடயத்தில் ஓரளவுக்கேனும் நியாயமாக நடந்துகொள்ளக்கூடிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டியதுடன் எமது தேர்தல் செய்தியும் எல்லோரின் காதுகளுக்கும் எட்டச் செய்யப்படவேண்டும். அவ்வகையில் லிபரலே சிறந்த தெரிவாக இருக்கும் என்பது என் கருத்து.

மேலும் உங்கள் கருத்துகளைத் முன்வையுங்கள். என் கருத்துகளில் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

நன்றி.

முதலில் இவற்றை அலசி ஆராய்வதற்குரிய தகுதியோ பின்னணி அறிவோ எனக்கு கிடையாது எனது மனதில் பட்டவையும் சிலரது உரையாடல்களிலிருந்தும் விவாதிக்க முற்படுகிறேன் மற்றப்படி யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

மறுவளத்தில், புதிய ஜனநாயகக்கட்சியோ, பழமைவாதக் கட்சியோ எம்மவரில் ஒருவரை வேட்பாளராக்கியிருக்கிறதா? தமிழர்கள் லிபரலுடன் இருப்பதால் அவர்களை இக்கட்சிகள் வேட்பாளராக்கவில்லை என்பது ஏற்கப்பட முடியாதது.

பழைவாதக் கட்சியின் சார்பில் சாமி அப்பாத்துரையும் புதிய ஜனநாயகக்கட்சியின் சார்பில் நீதனும் கடந்த தேர்தலில் போட்டியிட்டனர் அதுவும் நீதன் லிபரலில் கிடைக்காததால் பிரிந்து வந்தார் என்று சொல்லப்பட்டது

ஆகவே மற்ற இரு கட்சிகளும் தமிழருக்கு சந்தர்ப்பம் அளித்திருக்கின்றன ஆனால் லிபரல் முன்வரவில்லை என்று தான் சொல்லவேண்டும்

எந்த ஒரு கட்சியும் ஒரு காரணமுமின்றி ஒரு இனத்தை ஒதுக்கி வைக்காது என்பது என் கருத்து.

ஆனால் பழைவாதக் கட்சி அப்படித்தானே இருந்தது இப்போதும் அப்படித்தான் இருக்கிறதா தெரியாது

கொன்சவேற்றி 15 வருடங்களுக்கு பின்னர் சென்ற முறை ஆட்சியைப் பிடித்தவுடன் முதல் வேலையாக விடுதலைப்புலிகளைத் தடைசெய்தது

விடுதலைப்புலிகளோ தமிழர்களோ கனடிய அரசியலில் முதன்மையானவர்களாக இல்லாத போது ஒரு கட்சி பல காலங்களுக்கு பின்னர் ஆட்சி அமைக்கும் போது செய்தது

தமிழர்களின் மேல் உள்ள கசப்புணர்வு என்று தான் சொல்லவேண்டும்

கட்சிகளின் தேவை சாதாரண குதிரைகள் அல்ல.. வெற்றிக் குதிரைகள்...! மார்க்கத்திலோ ஸ்காபுரோவிலோ தமிழர்கள் அதிகமிருந்தாலும் அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு தகுதி மட்டும் ஒரு தமிழரை வேட்பாளர் ஆக்கிவிடாது. அங்கு அதிகமிருக்கும் கட்சி சார்பில்லாத பல்லின சமூகத்தவரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டும். குறிப்பாக சீனர்களின் வாக்குகள். எம்மவர் வாக்குகள் மட்டும் அங்கே வெற்றியைத் தீர்மானிக்குமாக இருந்தால் நாம் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம் பலத்தை நிரூபித்திருக்க வேண்டும்.

அப்படியானால் எதற்காக போன முறை வழங்கினார்கள் அவர்கள் ஒன்றும் படுதோல்வி அடையவில்லை கனிசமாண வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் ஆகவே இம்முறை வழங்காமல் விட்டதில் என்னவோ இடிக்கிறது

புதிய ஜனநாயகக் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பது தோற்கும் குதிரையில் பந்தயம் கட்டுவது போன்றது. இந்த நடவடிக்கை லிபரல் தோற்று பழமைவாதக்கட்சி மார்க்கம் போன்ற இடங்களில் வெற்றியீட்ட ஒருவேளை உதவலாம். அப்போது லிபரலும் மதியாது. பழமைவாதியும் மதிக்கமாட்டார். புதிய ஜனநாயகவாதிமட்டும் ஆறுதல் கூறிவிட்டும் போய்விடுவார்.

இப்போது மட்டும் என்ன மதிக்கிறார்களா ?

சரி எத்தனை தமிழர்கள் வாக்கு போட்டார்கள் என்று அறிய முடியும் ஆனால் எந்தக் கட்சிக்கு போட்டார்கள் என்று எப்படி அறிய முடியும் ????

நீங்களே கூறுகிறீர்கள் லிபரலோ, பழமைவாதக்கட்சியோதான் ஆட்சிக்குவருமென்று. பிறகு புதிய ஜனநாயகக்கட்சிக்குப் போட்டு என்ன பயன்? அவர்களால் தமிழர் செறிந்து வாழும் தொகுதிகளில் தமிழர் ஆதரித்தாலும் வெல்லமுடியாது. அவர்களுக்கு அதிக வாக்குகளைப்போட்டு என்ன பிரயோசனம்?

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று நான் பார்க்கவில்லை புதிய ஜனநாயகக்கட்சியோடு கூட்டு சேரக கூடிய வாய்ப்புத்தான் பெரும்பாலும் வரும் அதனால் அதன் விகிதாசாரத்தை கூட்டலாம் அவர்களுடைய அங்கத்துவத்தை பாரளுமன்றத்தில் கூட்டலாம்

தமிழர் விடயத்தில் ஓரளவுக்கேனும் நியாயமாக நடந்துகொள்ளக்கூடிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டியதுடன் எமது தேர்தல் செய்தியும் எல்லோரின் காதுகளுக்கும் எட்டச் செய்யப்படவேண்டும்.

அப்படி ஒரு கட்சியும் கனடாவில் இல்லை

அதற்கு தமிழர்கள் அமைச்சர்கள் ஆக வேண்டும்

முதலில் கனடாவில் எல்லா தமிழ்மக்களும் ஒருகுடையின் கீழ் ஒரு உறுதியான கொள்கையுடைய தமிழ்கட்சியின் பலத்துடன் முக்கியமான தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடன் தொடர்புகொண்டு...

தமிழர்வாக்காளர் இவ்வளவு தமிழ்வாக்காளர்களை எம்கட்சி கொண்டுள்ளது...உங்கள் கட்சிக்கு வாக்கு அளிப்பதானால் ஈழத்தமிழரின் அமைப்புகளின் தடைகளை எடுத்து ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒழுங்கு செய்தல் என்னும் ஒப்பந்தங்களின் கீழ் ஆதரவு வோட்டுகள் கிடைக்கும் என அறிவியுங்கள்...எக்கட்சி ஒப்புக்கொள்கிறதோ அதற்கு ஆதரவு கொடுங்கள்..அதிலும் பதவிக்கு வரக்கூடிய கட்சியிடம் எமக்கு ஆதரவுகொள்கைகள் ஒப்புதல்

பெற்று விட்டீர்கள் என்றால் மிகவும் பெரிய வெற்றி.....

இது ஒருவித நம்பிக்கை பேரம் பேசுதல் போன்றது... எமது வாக்குகளில் அவர்களுக்கு ஆவலை உண்டு பண்ணி எமக்கு சார்பாக கொண்டுவருதல்...

இதன் பலன் எல்ல நாடுகளிலும் வாழும் வாக்குரிமை பெற்றுள்ள எமது தமிழ் மக்களுக்கும் தொடராண

பலனைத்தரும்... எமது மக்கள் எமது இனத்தின் நிர்கதியை போக்க எல்லா வேறுபாடுகளையும் மறந்து இப்படியான செயல்பாடுகளின் மூலம் ஆதரவுகளைப்பெற்று இலங்கையின் அடிமை நிலையில் இருந்து தமிழ் மக்களை மீட்க வழிமுறையில் இதுவும் ஒன்று....என் அறிவிற்கு சொல்லியுள்ளேன்...

ஒன்று பட்ட இனம் என்றும் அழிவில்லாமல் வாழும்... சாதிக்கும். ஒற்றுமை நீங்கில் அழிவு நிட்சயம்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்குரல்,

நீதன் ஷன் மற்றும் சாமி அப்பாத்துரை ஆகியோர் 2006 தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டார்கள்? கீழே உள்ள இணைப்பில் என்னால் காண முடியவில்லை. :icon_idea:

2006 தேர்தல்

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்முறை எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பெரும் குழப்பமாகவே இருக்கின்றது. ஈழத்துப் பிரச்சனைகளை ஒவ்வொரு தமிழனும் முதலில் உணர்ந்திருக்க வேண்டும். தமிழரின் உணர்வுகளை மதிக்கின்ற கட்சியாக எனக்கு எந்த ஒரு கட்சியும் தென்படவில்லை. வரும் நாட்களில் ஏதோ ஒரு முடிவு தென்படலாம். ரொரண்டோவில் இருக்கும் தமிழர்கள் தங்களின் ஒட்டுமொத்தப் பலத்தை ஒற்றுமையைக் காட்ட வேண்டிய தருணம் என்பதை மறவாதீர்கள்.

நன்றி.

டங்குவார்

நீதன் மார்க்கம் அன் எக்லிங்டன்

சாமி அனேகமாக அதற்கு அடுத்த தொகுதி பிரிம்லி அன் எல்ஸ்மயார் தொகுதி வாரியாகத் தெரியாது

முதலில் கனடாவில் எல்லா தமிழ்மக்களும் ஒருகுடையின் கீழ் ஒரு உறுதியான கொள்கையுடைய தமிழ்கட்சியின் பலத்துடன் முக்கியமான தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடன் தொடர்புகொண்டு...

தமிழர்வாக்காளர் இவ்வளவு தமிழ்வாக்காளர்களை எம்கட்சி கொண்டுள்ளது

தமிழ்கட்சியா ?????? தமிழ் அமைப்புக்கள் ??

நீங்கள் சொல்ல வந்தது நல்ல கருத்து

தற்போது தமிழருக்காக குரல் கொடுப்பது தமிழர்பேரவை அமைப்பு மட்டுமே அதை அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள்

தற்போது வானொலிகளின் இவர்களின் விளம்பரம் கேட்டிருப்பீர்கள்

தமிழர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களியுங்கள் என்று

ஆனால் கட்சி வாரியாக சொல்லவில்லை

இதில் ஒரு கருத்து ஒழிந்திருக்கிறது எனக்கு பட்டவரையில்

தமிழர்களின் பலம் என்பது அவர்களில் எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பது தான் எந்த க் கட்சிக்கு என்பது அல்ல

நான் நேரில் கண்டது தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று கட்சிக்காரர்கள் வாக்களித்தவர்களின் பெயர்களை சரி செய்து கொண்டு சென்றதை

அவர்களிடம் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் வைத்திருக்கிறார்கள் அதில் சரி செய்வார்கள்

ஆனால் அவர்களால் யாருக்கு வாக்களித்தது என்று கண்டு பிடிக்க முடியாது

ஆகவே தமிழர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் உங்களுக்கு விரும்பிய கட்சிகளுக்கு அது தான் எமது பலத்தை நிருபிக்கும்

தமிழர்கள் முதலில் வாக்களிப்பது முக்கியம் அதே நேரம் எந்தக் கட்சி என்பதும் முக்கயமாக எனக்குப்படுகின்றது. தமிழர்கள் ஒருமுகப்பட்டு வாக்களிப்பது சிறந்தது. எல்லாவற்றுக்கும் சிறந்தது தோற்றாலும் பரவாயில்லை சுயேட்சையாக நின்று இத்தனை வாக்குகள் எம்மிடம் இருக்கின்றது என்பதை ஒன்றுபட்டு வெளிப்படுத்துவது.

எமக்கு சாதகமாக எந்தக்கட்சியும் இல்லை என்ற நிலைப்பாட்டில் லிபறலும் பு ஜ கட்சியும் பழமைவாதக் கட்சிக்கு நிகராக பாதகமாக இல்லை. இந்த இரண்டு கட்சியில் பெரும்பான்மைத் தமிழர் எந்த கட்சிக்கு வாக்களிக்கின்றார்களோ அந்தக் கட்சிக்கு ஏனையவர்கள் வாக்களிக்கலாம். எமது வாக்கின் நோக்கம் முதலாவது தாயகத்தை மையப்படுத்தியதாக இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றுக்குத் தான் வாக்களிப்பேன் என்று முரண்டு பிடிக்கத் தேவையில்லை. எமது வாக்குப் பலம் நிருபிக்கப்பட வேண்டும், எமது ஒற்றுமை வெளிப்படுத்தப்பட வேண்டும் , எம்மை அலட்சியப்படுத்திய பழமைவாதக்கட்சிக்கு எமது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும், அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை எல்லோரும் முன்வைக்கின்றீர்கள், இதிலிருந்து பல மறைந்திருக்கும் அதாவது பலர் தெளிவடையவேண்டிய விடயங்கள் வெளிப்பட சாத்தியங்கள் உண்டு.

இதில் இறுதியாக சிலர் முன்வைத்த கருத்துக்கள் மிக மிக முக்கியமானவை.

நாம் யாருக்கு வாக்களிக்கின்றோம் என்பதை விட தகுதியுடைய அத்தனைபேரும் வாக்களிக்கவேண்டும், அப்போதுதான் எங்களது சக்தியை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதில் எந்த சக்தி எங்களுக்கு ஆதரவானது, விரோதமானது என்பதை சுட்டிக்காட்டுவது அவ்வளவு புத்திசாலத்தன்மை அல்ல என்பது எனது கருத்து.

இதற்கு உதாரனமாக கனடாவிலை தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான அமைப்பொன்று ஒரு பிரபல்யமான கட்சி ஆட்சிக்கு வருவதிற்காக தங்களது தொண்டர்களை பெரிதும்

வெளிப்படையாகவே பயன்படுத்தியது. அதுமட்டுமன்றி கட்சிக்காக நிதியுதவியும் வழங்கியதாக ஒரு வதந்தியும் அடிபட்டது.

இன்றைய ஆளுங்கட்சியினரின் தமிழ்த்தேசியத்தின் மேல் உள்ள விரோதத்தன்மைக்கு இதுவும் ஒரு காரனமாகவும் இருக்கலாமல்லவா? அடுத்ததாக ஒரு நண்பர் குறிப்பிட்டதுபோல் தமிழர்பேரவை என்ற அமைப்பின் செயல்பாடு போற்றப்படவேண்டியை.

தமிழ்த்தேசியத்தின்பால் அதிக உடன்பாடு கொண்டது மாத்திரமன்றி கனடிய அரசியல் மட்டத்திலும் எமது மக்களை சரியான பாதையில் நுனுக்கமான முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு முந்திய காலங்களிலும் இங்கு பல அமைப்புக்கள் இருந்தது உண்மை தான். ஆனால் அதில் செயல்பட்டவர்கள், மேடையில் முகங்கள் காட்டுவதிலும், பொன்னாடை, பட்டங்கள் போன்றவற்றில் தான் அதிக உடன்பாடுடையவர்களாக விளங்கினார்கள். ஆனால் இவர்கள் முகங்களையும், பெயர்களையும் பெரிதாக காட்டாது செயலில் அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அவர்களது தொண்டுகள் தமிழ்சமுதாயத்திற்கு தொடர்ந்து தேவை.

தமிழராய் இணைவோம்....

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதன் சாண், சாமி அப்பாத்துரை ஆகியோர் முறையே கில்வூட் மற்றும் ஸ்காபுரோ மத்தியில் மகாணசபைத்தேர்தலில் போட்டியிட்டனர். தற்போது நடைபெற இருப்பது கனேடிய பாராளுமன்ற தேர்தல்! 2006 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பழமை வாதக்கட்சியின் சார்பில் ஸ்காபுரோ தென் மேற்க்கு தொகுதியில் வின்சன் வீரசுந்தரம் என்ற தமிழர் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு தமிழர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது வேறு விடயம்.

தகுதியானவர்களுக்கு கட்சிகள் உரிய இடம் கொடுத்துக்கொண்டு தான் வருகின்றன. ஆனால் அவசரப்பட்டு சுயாதீனமாக செயற்ப்படுபவர்களுக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலே சான்று.

தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.. கூடாது என்பது இங்கு பெரிய பிரச்சினையில்லை. விடுதலைப்புலிகளைத்தடை செய்த ஸ்ரீபன் ஹர்பரா? அல்லது உலகத்தமிழரை தடைசெய்ய காரணமாக இருந்த விசாரனைகளை ஆரம்பித்து வைத்த லிபரலையா? ஒட்டுமொத்தமாக இரண்டும் ஒன்று! புதிய ஜனநாயகக் கட்சி கூட இன்று எம்மோடு இணைந்து திரிந்து ஏதோ சிறுபான்மைக்குழுக்களோடு உறவு வைப்பது போல இருந்தாலும் சந்தர்ப்ப சூழலில் அவர்களும் மாற்றம் பெறுவார்கள் இவர்களை விட வளர்ந்து வரும் பசுமைக்கட்சியோடு சேர்ந்து எதிர்கால அரசியல் திட்டத்தை வகுத்தல் நன்று போல இருக்கிறது.

ஏனெனில் வளர்ந்த கட்சிகளுக்கு எமது ஆதரவு என்பது தேவையற்றது. வளர்ந்து வரும் கட்சிகளுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

வாக்களிக்கும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது நல்ல சிந்தiனாயகப் படவில்லை. ஒரு சட்டம் பாராளுமன்றில் வரும் போது அதை குறைந்த பட்சம் எதிர்த்து பேச எமக்கு ஒருவர் வேண்டும் பாராளுமன்றில்...!

அதை நாம் செய்வோம்...! வாக்களியுங்கள் உங்கள் உரிமையையும் கடமையையும் சரிவரச்செய்யுங்கள்..!

கனேடிய தமிழர்களின் அரசியல் பற்றியோ அல்லது எந்த கட்சி ஆதரவாக இருந்தது என்பது பற்றியோ அதிகம் தெரியாது. வந்த புதிதில் தமிழர்கள் லிப்ரல்களோடு மட்டும் இணைந்திருந்தமையானது பழமைவாத கட்சியின் தீர்மாங்களில் செல்வாக்கு செலுத்தும் வலு இல்லாவிட்டாலும் அதிருப்தியை அல்லது எதிர்ப்பை காட்டுவதற்கு தன்னும் அந்த கட்சியில் தமிழர்கள் பெரிதாக இல்லை என கேள்விப்பட்டேன்.

எம்மை நாம் சரியாக சிந்தித்து வளர்த்துக்கொள்ளாவிட்டால் எம்மால் எந்த காலத்திலும் கனேடிய அரசியல் கட்சிகளின் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தமுடியாது. இந்த தலைப்பிற்கு பொருத்தமில்லாவிட்டாலும், எமது மக்களின் மன்ப்போக்கு மாற வேண்டும். வைத்தியமும், பொறியியலும் தான் படிப்பு என்பது போன்ற நிலையில் இருந்து பத்திரிகைத்துறை, அரசியல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும்.

வாக்களிப்பின் போது எமது பலத்தை காட்டும் அதே நேரம் அனைத்து கட்சிகளிலும் தமிழர்கள் பங்கேடுப்பதன் மூலமே எந்த கட்சி வந்தாலும் அவர்கள் தமிழர்களின் குறைந்தபட்டச நலனுக்காவது பாதமில்லாது நடந்துகொள்ள வைக்கமுடியிம்.

கீழே இணைத்தது வலைப்பதிவாளர் ஒருவர் எழுதியது. அவர் ஒரு இந்திய தமிழர் என நினைக்கிறேன். எமது உள்ளார்ந்த பார்வையை விட வெளியாள் ஒருவர் கனேடிய அரசியலில் எமது பங்களிப்பை பற்றி எப்படி நோக்குகிறார் என்பது ஒரு வித்தியாசமான கோணமாக இருக்கும் என்பதால் அதை இணைக்கிறேன்.

அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் - வெங்கட்

ஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.

டொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.

கனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.

http://uspresident08.wordpress.com/2008/09...®à®¿à®´/

நண்பனே!

நாளைய மழை அறியும் எறும்பாய் இருப்போம்

நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்

காளானாய் இருக்கமாட்டோம்!

வாக்களிக்காத தமிழர்க்கு

ஜனனாயகம் ஒருபோதும் கை கொடுக்காது

ஒக்ரோபர் 14,

கனடியத் தமிழர்களே வாக்களியுங்கள்

நன்றி-மருதம் -

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா சொல்லி இருக்கிறீனம். நானும் மேல ஏதோ சொல்லி இருந்தன். கனடா தேர்தல் பற்றிய செய்திகளை கடந்த சில கிழமைகளா கனேடிய ஊடகங்கள் மூலம் அறிஞ்சு கொண்டு வாறன். CBC, Globe & Mail, National Post.. எண்டு எல்லாம் பார்க்கிறது.

எனது வாக்கை பொறுத்த அளவில இந்த முறை தமிழர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கட்சி எப்படி ஆதரவு கொடுக்கும் எண்டுற வகையில நிச்சயம் நான் வாக்கு போடமாட்டன். இஞ்ச கனடாவில இருந்துகொண்டு முதலில கனடாவுக்கு முதன்மைகொடுத்து கனேடிய நலன்களில அதிக கவனம் செலுத்துவதுதான் கனேடிய பிரஜை எண்டுறவகையில எனக்கு முதன்மையானதா தெரியுது.

நான் ஆரம்பத்தில NDPக்கு போடுறதாக இருந்தாலும், எனது முடிவை மாற்றி இருக்கிறன். நான் பார்த்த அளவில இப்போதைக்கு இருக்கிற கனேடிய நிலமைக்கு எனது வாக்கு இந்தமுறை லிபரலுக்கு போடுவதுதான் எனக்கு சிறந்ததாக தெரியுது.

எல்லாத்தமிழரும் குறிப்பிட்ட ஒரு கட்சியுக்கு வாக்குபோடவேணும் எண்டு எதிர்பார்க்கிறது எல்லாம் சுத்த பம்மாத்து என்பது எனது அபிப்பிராயம். ஆட்டுக்க மாட்டை கலக்கமுடியாது. கனேடிய தேர்தலில ஊர்ப்பிரச்சனையை புகுத்துவது எண்டுறது எனக்கு சரியாகப்படவில்லை. ஊர்ப்பிரச்சனையை கனேடிய தேர்தலில தூக்கிப்பிடிக்கிற ஆக்களுக்குத்தான் நாங்கள் வாக்குபோடுவம் எண்டு நினைச்சால், அதுக்கு ஊரிலயேபோய் இருக்கலாம் எண்டு நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.