அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா? அருண் நரசிம்மன் வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் வி…
-
- 1 reply
- 1.6k views
-
-
கூகுள் ஏர்த்[Google Earth] மென்பொருளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான சில இடங்களின் செய்மதி படங்களே இவை! நீங்களும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த பிரபல்யமான இடங்களின் படங்களை இங்கே இணையுங்கள்! Eiffel Tower The Statue of Liberty Sydney Opera House Sydney International Airport Niagara falls (படங்களின் மேல் அழுத்தி படங்களை பெரிதாக்கி பார்க்கவும், தலைப்புகளின் மேல் அழுத்தி குறிப்பிட்ட இடங்களை பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்)
-
- 27 replies
- 6.9k views
-
-
மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு! பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. …
-
- 22 replies
- 3.6k views
-
-
பட மூலாதாரம்,ESA/HUBBLE/DIGITIZED SKY SURVEY/NICK RISINGER 8 ஏப்ரல் 2023, 05:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே மிகப் பெரிய ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். டர்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அதி பிரம்மாண்ட கருந்துளையை, ஈர்ப்புவிசை லென்சிங் என்ற நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய முனைவர் ஜேம்ஸ் நைட்டிங்கேல், “இந்தக் கருந்துளை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ளவே” சிரமப்பட்டதாகவும் அதன் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளவே சிரமப்படும் அளவு…
-
- 3 replies
- 849 views
- 1 follower
-
-
வக்காறு தீவு | உள்படம்: கிரிஸ் பெர்ரி கிளி மீன் மாலத்தீவு ஆயிரக்கணக்கான தீவுகளால் ஆன ஒரு நாடு. அதில் ஒன்று வக்காறு (Vakkaru) தீவு. பவளப் பாறைகளால் சூழப்பட்ட, கடலுக்கு மேலே சற்றே தலையைத் தூக்கியமாதிரி இருக்கிற ஒரு திட்டு போன்ற தீவு. சற்றே புல் புதர். ஒரு சில மரங்கள் மட்டும். இதுதான் தீவு. கடலின் அடியிலிருந்து எழும் மலை போன்ற நிலப்பரப்பில் இந்தியாவில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன. ஆனால், மணல் படிந்து ஏற்பட்ட மணல் திட்டாக வக்காறு தீவு உள்ளது. அதாவது, மாலத்தீவுகளின் பல தீவுகள் பவளப் பாறைகளின் சிதைவு சிறுசிறு மணலாக மாறி தரையில் வீழ்ந்து பல ஆண்டுகளாக, படிந்து குவிந்து திரண்டு உருவாகி உள்ளன. எதால் ஆனது தீவு? மாலத்தீவுகளில் ஆங்காங்கே பவளப் பாறைகளைச் சுற்றிலும் வள…
-
- 2 replies
- 1.4k views
-
-
அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்க…
-
- 2 replies
- 570 views
-
-
கின்னஸ் புத்தகத்தில் ஹிந்து கோவில் தலைநகர் புது டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவில், உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் என்ற பெருமையின் அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பாப்ஸ் ஸ்வாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் 86,342 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இதன் நீளம் 356 அடி; அகலம் 316 அடி; உயரம் 141 அடி ஆகும். கோவிலுக்கு முன்புறம் அழகிய புல்வெளி அமைந்துள்ளது. கின்னஸ் புத்தக வெளியீட்டு நிர்வாகக் குழுவின் மூத்த உறுப்பினரான மைக்கேல் விட்டி கடந்த வாரம் புது டெல்லிக்கு வந்தபோது, உலகிலேயே பெரிய ஹிந்து கோயில் என்று அக்ஷர்தாம் கோவிலை அங்…
-
- 0 replies
- 953 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி செய்தியாளர் 25 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கவலைப்பட்டனர், ஆனால் பின்னர் அது பாதுகாப்பானது என்று அறிவித்தனர். இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டனர். ஆனால், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என்று சமீபத்தில் தெரிய வந்தது. அதே விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆ…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
ஆண்கள் மலட்டுத்தன்மையை அறிந்துகொள்ள..... இக்குறிப்பு ஆண்களுக்கு மட்டுமே வாசகர்களுக்கு இது ஆண்களுக்கு மட்டும் உரிய தகவல், திருமணம் செய்ய முன்னரும் செய்தபின்னரும் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் கவலை தனக்கும் தன் மனைவிக்குமாக குழந்தை பிறக்கவேண்டும் என்பதே சிறிது காலம் முயற்ச்சி செய்தும் குழந்தை பிறக்காவிட்டால் பயம் உச்சத்தின் எல்லைக்கே போய்விடும் அத்துடன் வைத்தியரிடம் போகவும் மறுப்பார்கள் காரணம் தன் மனைவி நன்றாக இருந்து தனக்குதான் மலட்டுத்தன்மை இருக்கு என்று வைத்தியர் சொல்லிவிடுவாரோ என்ற பயம். முழுப்பழியையும் எங்கள் சமூகம் அந்தப்பெண்ணிலேயே செலுத்திவிடும். வைத்திய ஆலோசனையுடன் குழந்தை பெறவும் ஆசை, அனால் போகவும் பயம் என்றிருப்பவகர்களுக்கு தாங்களாகவே தங்கள் மல…
-
- 29 replies
- 9.1k views
-
-
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான டன் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகளாக மாறி மாசு ஏற்படுத்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுத்து உபயோகமான பொருளாக மாற்ற தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதன் விளைவாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோககரமான டீசல் போன்ற எரிபொருளாக மாற்ற முடியும் என ஆய்வில் தெரிய வந்தது. எனவே, அதை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவின் இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஷாங்காய் ஆர்கானிக் கெமிஸ்டரி நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிஎத்திலீன் என்ற வேதி பொருளால் தயாரிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் இதன் தேவை அளவு 10 கோடி மெட்ரிக் டன் என கணிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 474 views
-
-
ஹைனாவின் சிரிப்பு எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா இன்று பை--பாஸ் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ,1960கள் வரை தேனியில், மலைகளின் அடர்ந்த வனப்பகுதியில் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் வாழ்ந்து வந்தன. இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வனங்கள் முழுதும் அழிக்கப்படுகிறது. மலையின் இதயத்தைப் பிளந்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவிட்ட.து. தவிர காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களது இல்லங்கள் அமைப்பதற்காக வனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 1980களில் கூட அங்கு செல்வதற்கே சற்று அச்சம் தரும் விதமாக வனம் இருக்கும். உடும்பு ,குள்ளநரி, முயல், காட்டுப்புறா ,மைனா ஏராளமான வறண்ட நில வாழ் பாம்புகள் வாழ்ந்த பூமி, இப்போது அவைகள் ஓட ஓட விர…
-
- 1 reply
- 867 views
-
-
அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு தான். அந்த சார்பியல் கோட்பாட்டை நிரூபிக்க அவர் எவ்வளவு கஷ்ரப்பட்டார் என்பதை இந்த காணொலி விளக்குகிறது. அத்துடன் மனிதர்களால் உருவாக்கபட்ட இனம், மதம், தேசபக்தி போன்ற விடயங்கள் மனித குலத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு தடையாக உள்ளது என்பதயும், இவ்வாறான இனவெறுப்பு, மதம், தேபக்தி போன்றன போர் வெறியை தூண்டி அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவு சக்திகளாக உபயோகிக்க தூண்டுதல் செய்யும் வரலாற்றையும் இக்காணொளி விளக்குகிறது.
-
- 4 replies
- 951 views
-
-
புரட்சிக்கு முந்தைய கியூபாவின் வேளாண்மை என்பது நிலவுடைமையின் எச்சங்களுடனும் முதலாளித்துவ நடைமுறைகளுடனும் இணைந்ததாக இருந்தது. 1959 புரட்சிக்குப் பின்னரும்கூட கியூபா ரசாயன உரங்களையே பெரிதும் நம்பி வேளாண்மையை மேற்கொண்டுவந்தது. ஆனால், நம்மைப் போல் கண்மூடித்தனமாக அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை. ரசாயன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளை விரைவிலேயே புரிந்துகொண்டு, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ அரசு. இயற்கை வேளாண்மைப் பாதையில் அடியெடுத்து வைத்து, இன்று வெற்றிகரமாக அப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. நெருக்கடி தந்த தீர்வு கியூபாவின் உணவுத் தேவையைச் சோவியத் ஒன்றியம் அறுபது சதவீதம் பூர்த்தி செய்துவந்ததுடன், பெரும் பொரு…
-
- 3 replies
- 734 views
-
-
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரக ஐ-போன்களில் முதன் முறையாக தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது நவீன செல்பேசி யுகத்தில், தமிழ் உலகம், வரலாற்றில் பதிவு செய்யக் கூடிய ஒரு மறக்க முடியாத திருப்பு முனையாகும். இதுவரை வெளிவந்துள்ள திறன்பேசிகளில் (smart phone) அறிமுகப்படுத்தப்பட்ட iOS 7 எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் செல்பேசிகளில்தான் விசைத் தட்டுடன் (keyboard) கூடிய தமிழ் இயங்குதளம் அதன் மென்பொருளிலேயே சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்பதும் இதன்மூலம் தமிழ் விசைகளை நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றமாகும். இனி ஐபோன்களிலும் “முரசு அஞ்சல்” விசைத்தட்டுimage புதிய ஐ-போன் ரகங்களில் “தமிழ் 99” மற்றும் …
-
- 2 replies
- 2.3k views
-
-
விண்வெளிக்கு எல்லோரும் சுற்றுலாவாகச் சென்றுவர முடியுமா? காலம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. விண்வெளிச் சுற்றுலாவுக்கான உத்தேச விதிகளை (120 பக்கங்களுக்கும் அதிகம்) அண்மையில் அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்விதிகளில் பயணிகளின் உடல் - மருத்துவத் தகுதிகள் விண்வெளிப் பயணத்துக்கு முந்தைய பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தகுதி, சுற்றுலா பயணிகளின் பயிற்சிக்கான தேவைகள், கட்டாயப் பயிற்சி, விண்வெளிப் பயணப் பங்கேற்பாளர்கள் (பயணிகள்) வழங்க வேண்டிய ஒப்புதல் பற்றிய விபரங்களையும் இவை தெரிவிக்கின்றன. எனினும், `விண்வெளி வாகனங்கள்' பற்றிய விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதிக அளவு அரசின் தலையீடு இல்லாமல் `விண்…
-
- 0 replies
- 1.6k views
-
-
டார்வினின் பரிணாம வளர்ச்சித் தேற்றம் - அதுவே முதலும் முடிவும் அல்ல இந்தக் காணொளி ஒரு தேடலில் கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியம் மிகுந்ததாகவும் இருந்தது. அடிப்படை உயிரினங்களின் கட்டமைப்பு (கலங்கள், பக்டீரியா போன்றவை) மிக எளிமையானதாக இருக்கும் என பல காலம் காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் அவற்றின் அமைப்புத்தான் மிகவும் சிக்கலானது என்று இப்போது கண்டறிந்துள்ளது விஞ்ஞானம். இதை டார்வினின் இயற்கைத் தெரிவு கோட்பாட்டினால் விளக்க முடியாமல் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
-
- 0 replies
- 691 views
-
-
கல்யாணம் தொடங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்திற்குமே பத்திரிக்கை அடிக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது...இன்றைய சூழலில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,டிஜிட்டல் பிரிண்டர்ஸின் அதிவேக வளர்ச்சியில் தன் முகவரியை இழந்து- வருகிறது பழைய ட்ரடில் பிரிண்டிங் மிஷின் அச்சகங்கள் இன்னமும் அந்த முறையில் பிரிண்ட் செய்யும் சில அச்சகங்களை இன்னமும் நாம் காணலாம்.இதில் அச்சடிக்கப்படும் பத்திரிக்கைகள் காலத்தால் அழியாதவை காரணம் அதில் பயன்படுத்தப்படும் மை யின் தரம் அப்படிபட்டது...இப்போது உள்ள மையில் எல்லாம் அப்படிபட்ட தரம் இல்லை என கூற ஆரம்பித்தார் இன்னமும் பழைய அச்சுமுறையை பயன்படுத்தி புதுக்கோட்டையில் அச்சகம் நடத்தி வரும் அம்பாள் அச்சக உரிமையாளர் இராமையா. முன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்…
-
- 0 replies
- 2.5k views
-
-
பூமியில் ஒரு செயற்கைச் சூரியன் கண்ணுக்குத் தெரியாத அணுவுக்குள் அடங்கியுள்ள ரகசியங்களும் ஆற்றலும் கட்டுக்கடங்காதவை. அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டு இயற்பியல் வினைகள் மூலம் ஆற்றலை வெளிக்கொணர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக, கனமான யுரேனியம் போன்ற அணுக்களைப் பிளந்து எரிசக்தியைப் பெறும் உத்தி ஏற்கனவே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நீண்டகாலமாகவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அறிவியலாளர்கள் இப்போது வேறொரு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எளிய தனிமமான ஹைட்ரஜன் அணுக்களைப் பிணைத்து எரிசக்தி தயாரிக்கும் முயற்சி அது. சூரியனை பூமியில் படியெடுப்பதற்கு ஒப்பானது இது. சர்வதேச விண்வெளி மையம் அமைக்க பல்வேறு நாடுகள் ஒன்று கூடி எடுத்துவரும் முயற்சிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள். முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
குவாண்டம் எனும் பொய்மான் கரடு. spooky action குவாண்டம் எனும் பொய்மான் கரடு. ================================================= ருத்ரா இ பரமசிவன். குவாண்டம் என்பதை கையில் பிடிக்க முடியுமா? மேலே கண்ட தலைப்பு வேடிக்கையாய் இல்லை? நுண் உயிர் எதனையும் நாம் கையில் பிடித்த தில்லை.ஆனால் அவை நம் உடம்பில் உள்ளது.நுண் உயிரியையும் விட நுண்மையான அதாவது அணுக்கருப்பொருள் துகள்களான ஒரு எலக்ட்ரானை நம் கையில் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியே அங்கு வேறு விதமாக கேட்க பட்டுள்ளது.ஆற்றல் வடிவம் அலை வடிவமா? துகள் வடிவமா? என்ற கேள்வியே இங்கு இன்னும் ஊசி முனையாய் நம்மை உறுத்துகிறது.ஆனால் இந்த ஊசி முனையில் தான் இந்த பிரபஞ்சமே இயங்கிவருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்…
-
- 3 replies
- 917 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம் இன்னும் எத்தனை ஆண்டுகள்? மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி! தளவாய் சுந்தரம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால், ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது. கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்? தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து க…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர்- ப்ளூ மூன் ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது 30 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (2024 ஆகஸ்ட் 18-ம் தேதி சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டதையடுத்து 2023-ல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது) வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் ‘சூப்பர்- ப்ளூ மூன்’ (Super- Blue moon) ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது. அப்போது நிலவு திடீரென சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானில் தென்பட்ட இந்த அரிய காட்சியை பிரிட்டன் மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்பட்டாலும், நிலவு உண்மையில் நீல …
-
-
- 1 reply
- 574 views
- 1 follower
-
-
[size=3][size=4]வாஷிங்டன்: செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராயஅமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்…
-
- 7 replies
- 3.8k views
-
-
இணையவழி கல்வி - தமிழ் யாழ் இந்துக்கல்லுரி - நாட்டார் பாடல்கள்
-
- 0 replies
- 597 views
-
-
Adobe Flash போன்றவற்றின் பயன்பாடு நீங்கள் அறிவீர்கள். கானொளி பார்த்தல் ஒரு பிரயோகம். தற்போது புதியதொரு தொழிநுட்பம் வந்துள்ளது. இது படங்கள், கானொளிகள் என்பவற்றை மிக அழகாக ஒழுங்கு படுத்துகின்றது. எப்படி Flash ஐ தள நிர்வாகிகள் தமது தளங்களில் சேர்த்துக்கொள்ள, அத்தளங்களுக்கு வருபவர்கள் Flash Player ஐ பாவித்து கானொளி பார்க்கின்றார்களோ, உதாரணமாக ,Yuotube . அதைப்போலவே கூல் ஐரிஸ் என்னும் இந்த மென்பொருளை தளத்தில் ஏற்றிக் கொண்டு விட்டால் , தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் படங்கள் , வீடியோக்கள் என்பவற்றை தேடுதல், தெரிவுசெய்தல், பார்வை இடுதல் எல்லாமே மிக இலகு. அதன் முக அமைப்பு வடிவமே மிக அழகாக உள்ளது. ஒரு முறை பாவித்தீர்கள் என்றால் மனத்தை பறி கொடுப்பீர்கள். http:…
-
- 0 replies
- 1.3k views
-