Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிறது ஒரு அறிக்கை சுற்றுச்சூழல் கவலைகள் புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை அவற்றின் ஆபத்தான மட்டத்துக்கு கீழே வைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டன் அரசாங்கத்தின் அனுசரணையுடனான அறிக்கை ஒன்று கூறுகிறது. பனிப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, அதன் மூலம் உலகெங்கும் கடல்களின் நீர்மட்டம் உயரும் நிலையை நோக்கிய ஒரு பாதையில் உலகம் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்று பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை கூறியுள்ளது. பனிப் பாறைகளை உருகாமல் வைத்திருக்க கரியமில வாயுவின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவது தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும்,…

    • 9 replies
    • 4.7k views
  2. புகைப்பட ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முதல் கேமரா... கவனிக்க வேண்டிய விஷயங்கள்! ‘தடி எடுத்த எல்லோரும் தண்டல்காரன் ஆகிவிட முடியாது’ என்பார்கள். ஆனால், கேமரா வைத்திருக்கிற எல்லோரும் புகைப்படக்காரர் ஆகிவிடுகிறார்கள். திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் யார் புகைப்படம் எடுப்பவர் என்பதைக் கண்டுபிடிக்கவே சிரமமாய் இருக்கிறது. புகைப்படக்கலையைப் பொறுத்தவரை பிலிம் ரோலில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதே மிகப் பெரிய புரட்சிதான். இப்போது 15 ஆயிரத்தில் இருந்து DSLR கேமராக்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ சுற்றுலா என முடிவெடுத்துவிட்டால் முதலில் லிஸ்ட்டில் வருவது கேமராதான். இன்றயை காலத்தில் எல்லோர் வீடுகளிலும் ஒரு DSLR கேமரா இருக்கிறது. புகைப்படத் துறையில்…

  3. இந்த படங்கள் நிகோன் சிறிய உலகம் 2009 போட்டிக்காக அனுப்பப்பட்டவை. நீங்களும் கொஞ்சம் ரசிக்கலாமே. Arabidopsis thaliana (thale cress) anther கடுகு குடும்பத்தை சேர்ந்த Arabidopsis thaliana என்ற தாவரத்தின் மகரந்தம் Sonchus asper (spiny sowthistle) flower stem section sonchus asper தாவரம் finch's testicle ____ finch என்ற பறவையின் ஆணின் விதை gold finch fungal infection on a flowering plant root ஒரு பூக்கும் தாவரத்தின் வேரில் பங்கஸ் தொற்று

  4. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது: - மூளையின் செயல்திறன்! [Wednesday 2015-04-01 19:00] 1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியைமூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமதுஉடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள்இறக்க துவங்கிவிடும். 3. நாம் 11 வயதை அடையும் ப…

    • 9 replies
    • 1.4k views
  5. இன்றைய நவீன கைத்தொலைபேசிகளின் முடிசூடா மன்னராக விளங்குவது ஆப்பிளின் ஐ ஃபோன். அந்த நிலைக்கு சவால் விடும் வகையில் உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோக்கியாவும் உலகின் மிகப்பெரிய மேசைக்கணணிகளின் மேன்போரும் நிறுவனமுமான மைக்ரோசொவ்ட்டும் கைகோக்கவுள்ளன. Nokia agreed to make Microsoft's Windows Phone 7 its primary OS platform today, changing the cell phone landscape in major ways. Who's going to benefit from this, and who's going to lose out? Here are some of our preliminary guesses. The Winners Winner: Microsoft. Microsoft is the big winner here. Windows Phone 7 was a second thought for Samsung and HTC; now it's the number-one platform for the…

  6. இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது பெங்களூர், மார்ச்.4-: சந்திரனுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். சந்திரன் பற்றி ஆய்வு நடத்த ‘சந்திரயான்-1’ என்ற ராக்கெட்டை தயாரித்து அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான திட்டம் ஒன்றை இந்திய வானவெளி மையமான ‘இஸ்ரோ’' தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ரூ.386 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதை தொடர்ந்து ‘சந்திரயான்-1’ ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணி குறித்து த…

  7. Started by nunavilan,

    SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்) இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு…

  8. தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்! இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை …

  9. விரைவில் வருகிறது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும் நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு…

  10. புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன. இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதி…

  11. Started by karu,

    "" மேலேயுள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஒரு கமராவினால் அண்ணளவாக 1சதுர மில்லி மீற்றர் பரப்பளவுள்ள தொளையினூடாக இரவில் எடுக்கப்பட்ட தெளிந்த வானத்தின் படம். அந்தக் கமராவினால் அந்தக் கணப்பொழுதில் நம் கண்முன்னே தெரியும் முழுவானத்தையும் படம் பிடிக்க முடியுமானால், கிட்டத்தட்ட 13000000 தடவைகள் ஒன்றையொன்று தழுவாத படங்களாகக் கிளிக் செய்ய வேண்டும். இது இலகுவானதொன்றல்ல. நமது பூமி விரைவாகச் சுற்றுகிறது. பூமத்திய ரேகையை வைததுக் கணக்கிட்டால் ஒருமுழு நாளான 23மணி 56நிமிடம் 4செக்கன்களில் பூமியின் அதிகூடிய அண்ணளவான விட்டமான 40,075 கிலோ மீற்றர்களைப் பூமி சுற்றிவிடுகிறது. அப்படி வைத்தப் பார்க்கும்போது பூமியின் வேகம் மணிக்கு 1667 கிலோ மீற்றர்களாகும். அதாவது அண்ணளவில் செக்கனுக…

    • 9 replies
    • 1.8k views
  12. சாம்சங் கேலக்சி S3 கனகாலமாக ஒரு கைத்தொலைபேசியைப் பாவிக்காமல் மட்டுமல்ல தேவையும் இல்லாமல் இருந்தது.ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய அந்தக் கைத் தொலைபேசிக்கு வீணாகப் பணம் செல்கின்றது என நினைத்து அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக ஒரு இடைத்தரகுக்கடை ஒன்றிற்குச் சென்றேன். வாசலில் விளம்பரப்பலகையில் சாம்சங் கலக்சி S 3 ஒப்பந்த அடிப்படையில் 1 யூரோவிற்கு விற்பனை என எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த சலுகை அடிப்படையிலான விற்பனை முதல் நாளுடன் முடிவடைந்துவிட்டது. ஒரு நாள் முந்தி வந்திருந்தால் அதை வாங்கியிருக்கலாம் என நினைத்துவிட்டுக் கடைக்காரரிடம் விசாரிக்கும்போது நீ இப்போது இந்த இடத்திலேயே புதிய ஒப்பந்த்ததிற்குத் தயார் என்றால் நான் உனக்கு அந்தக் கைத் தொலைபேசியை சலுகை அ…

  13. புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!

  14. சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று! சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும். இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது. …

  15. இனி நீங்கள் விரலால் கிறுக்குவதும் பாஸ்வேர்டாகும் கையடக்கத் தொலைபேசியில், கைவிரல்களால் இஷ்டம்போல், கிறுக்குவதையே, ´பாஸ்வேர்டு´ ஆக பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எழுத்து அல்லது எண்களை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் வசதி, தற்போதைய கைபேசிகளில் உள்ளது. அதிக விலையுள்ள போன்களில், கைரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், பாஸ்வேர்டு முறையை மேலும் எளிமைப்படுத்தி உள்ளனர். எண், எழுத்துக்களை பாஸ்வேர்டாக பயன்படுத்தும்போது, அவற்றை மறக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக, கையடக்கத் தொலைபேசியில், கைவிரல்களால் இஷ்டம்போல், கிறுக்குவதையே, ´பாஸ்வேர்டு´ ஆக பயன்படுத்தும் தொழில்…

  16. தமிழகத்தில் அதிக நீர் மின்உற்பத்தி செய்யும் மேட்டூரில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் சீனாவில் ஒரு அணையிலேயே 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர். சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ் அணையில் இருந்துதான் இவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். இதற்கு முன்பு உலகிலேயே அதிக நீர்மின் உற்பத்தி பிரேசில் நாட்டில் உள்ள இதைப்பூ அணையில் கிடைத்தது. அங்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. அதைவிட 2 மடங்கு மின்சாரம் திரீ கார்கஸ் அணையில் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஏராளமான அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மத…

  17. இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...! வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது. உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது. படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை…

  18. "சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? அண்மையில் பத்திரிகை ஒன்றில், வந்த‌ இரு விளம்பரங்களில்... Sat. றிசீவர் இல்லாமல் IP றிசீவர் மூலம் 25க்கும் அதிகமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்றும் அதற்கு வருட சந்தா 189 € என்றும் அறிவித்திருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை, இதனை யாராவது பாவிக்கின்றனீர்களா? எனக்கு சற்றலைற் சட்டி மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்க‌ பக்கத்து வீட்டு தோட்டத்தில் உள்ள மரம் பெரிய இடைஞ்சலாக இருப்பதால்... கடந்த ஆறேழு வருடம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்காமலே... காலத்தை கடத்தி விட்டேன். இனியும்.. என்னால், தாங்க முடியாது. வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... அறியத் தாருங்கள் உறவுகளே....

    • 9 replies
    • 1.5k views
  19. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்…

    • 9 replies
    • 2.4k views
  20. வீட்டுத்தோட்டம் நம்பி சாப்பிடலாம் ‘நன்னியோடு’ காய்கறிகள்... செயற்கை உரம், பிளாஸ்டிக் பைககளுக்குத் தடை... வீட்டுக்கு வீடு காய்கறி சாகுபடி கட்டாயம்... ஆயிரமும் ஐநூறும் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் காலை திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமண்காடு செல்லும் பேருந்து ஏறியிருந்தோம். ஏ.டி.எம்-மை நம்பியிருந்ததால் கைவசம் ரூ.60 மட்டுமே இருந்தது. பேருந்து கட்டணத்துக்கு மட்டுமே அது போதுமானது. கொலைப் பசி. இருவர் சாப்பிட வேண்டும். ஒரு நிறுத்தத்தில் கூடையோடு பேருந்தில் ஏறியவர், ‘‘இடியாப்பம், சுண்டல், ஆர்கானிக் அவியல் சாரே...” என்று கூவினார். மடிக் கணினி பையைக் கவிழ்த்துப்போட்டதில் கொஞ்சம் சில்லறைகள் தேறின. “நான்கு இடியாப்பம் 10 ரூவா, அவியல் 5 ரூவா... பிர…

  21. (1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது) அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது. விபத்துகள்:- முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்ப…

    • 9 replies
    • 1.8k views
  22. இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் Kadapa மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் 1985 இல் கண்டறியப்பட்டதும் தற்போது Sri Lankamalleswara விலங்குகள் சரணாலயத்தில் மிக சிறிய எண்ணிக்கையில் (25) வாழுகின்றவையுமான இந்த அழகான பறவைகளை (Jerdon's courser (Rhinoptilus bitorquatus)) அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்..! குறித்த விலங்குகள் சரணாலயத்தினூடு நீர்ப்பாசனத்துக்கான கால்வாய் வெட்டப்பட இருப்பதால் இப்பறவைகளின் வாழிடம் அழிக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனா இப்பறவைகளும் உலகில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றன..! எனவே இந்தப் பறவைகளை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்..! தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ ப…

    • 9 replies
    • 2.4k views
  23. சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய…

  24. Started by nunavilan,

    தத்துவமேதை காரல் மார்க்ஸ் ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார். இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர். திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார். பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு. தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் க…

    • 9 replies
    • 7.6k views
  25. மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு சித்தூர், ஆக. 7- ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவார…

    • 9 replies
    • 5.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.