செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
நடுவர்களை துரத்திய குரங்குகள்; கால்பந்து போட்டி ரத்து! கொல்கத்தாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கார்தா மைதானத்தில் மேற்கு வங்க பிரீமியர் டிவிஷன்' பி' பிரிவு போட்டிகள் நேற்று நடைபெற்று கொண்டிருந்தன. யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன், ரயில்வே அணி வீரர்கள் களமிறங்க தயாரகிக் கொண்டிருந்தனர். போட்டி மதியம் 2.15 மணியளவில் தொடங்குவதாக இருந்து. போட்டி தொடங்குவதற்கு சற்று முன், 4 லங்கூர் குரங்குள் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்தன. அவற்றை போட்டி அமைப்பாளர்கள் துரத்தியுள்ளனர். தொடர்ந்து போட்டித் தொடங்கியுள்ளது. இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்திருந்தபோது, மீண்டும் மைதானத்திற்குள் புகுந்த குரங்குகள் பந்தை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளன. நடுவர்களையும் துரத்தியுள்ளன. எ…
-
- 1 reply
- 558 views
-
-
நடுவானில் 'சீட்' சண்டை: அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம். நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கை தொடர்பாக 2 பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூவார்க் நகரில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில் பறக்கையில் அதில் இருந்த பயணி ஒருவர் தனக்கு முன்பு இருந்த இருக்கை பின்னால் சாயாதவாறு இருக்க தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தினார். முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்த பெண் பயணி தனது இருக்கையை பின்புறமாக சாய்க்க அது சாயவில்லை. இதையடுத்து இருக்கை சாயாமல் இருக்கும்படி செய்த அந்த ஆண் பயணியின் முகத்தில் அந்த பெண் பயணி ஒரு கப் தண்ணீரை ஊற்றினார். உடனே அவர்கள் இருவருக்கும் இட…
-
- 0 replies
- 641 views
-
-
சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர். ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்…
-
- 1 reply
- 311 views
-
-
அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் டர்புலன்ஸ் (turbulence) எனப்படும் காற்றின் வலிமையான, திடீர் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் 4 பேர் காயமடைந்தனர். ஆனால் அந்த விமான நிறுவனம், விமானம் எந்த தடையுமின்றி ஓடுதளத்தில் தரையிறங்கியது எனத் தெரிவித்திருக்கிறது. காயம்பட்டவர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை விமானி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் பயணிகளில் யாரேனும் மருத்துவர் உள்ளார்களா என விமான குழு கேட்டு…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…
-
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
நடுவானில் மயங்கிய விமானி – விடுமுறையிலிருந்த விமானியின் உதவியால் தரையிறங்கிய விமானம்! பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் நிலைதடுமாறி பறப்பதை உணர்ந்த பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பரபரப்படைந்தனர். விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் அறையில் முடங்கினர். விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அனை…
-
- 1 reply
- 506 views
-
-
எகிப்து விமானத்தில் திடீரென நாகபாம்பு நுழைந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து, குவைத் நோக்கி, விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த, பாம்பு வியாபாரி, எகிப்தில் வாங்கிய நாகபாம்பை, கள்ளத்தனமாக எடுத்து வந்தார். திடீரென இந்த பாம்பு, 48 வயதான அந்த நபரை கடித்து விட்டது. இதனால், அவர் கையை உதறிய போது, அந்த பாம்பு அவரிடமிருந்து தப்பித்து, விமானத்தின் மற்ற இருக்கைகள் வழியாக சென்று விட்டது.இந்த பாம்பை அவர் பிடிக்க முயன்ற போது, விமான ஊழியர்கள் உஷாரடைந்து விட்டனர். ஆனால், பயணிகள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து, விமானம் உடனடியாக, அல் கர்தாகா நகரில் தரையிறக்கப் பட்டது.விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த…
-
- 13 replies
- 1.5k views
-
-
ஜெர்மனியிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற தம்பதி இடையே நடுவானில் சண்டை ஏற்பட்டதால், விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கணவன், மனைவி இடையே எப்போது சண்டை வரும், எப்போது ஒன்று சேருவார்கள் என்று கணிக்கவே முடியாது. திடீரெனச் சண்டைபோடுவார்கள், அடுத்த நிமிடமே சேர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், ஜெர்மனியின் ம்யூனிச் நகரிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்ற லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த தம்பதிக்கு இடையே, நடுவானில் தகராறு ஏற்பட்டது. அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி, பைலட்டிடம் மனைவி புகார் செய்தார். விமானப் பணியாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் சண்டையை…
-
- 19 replies
- 1.6k views
- 1 follower
-
-
நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி பிபிசி செய்தி தொகுப்பாளர் புதன்கிழமை நேரலையில் நடுவிரலை தூக்கி காண்பித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி, நேரடி ஒளிபரப்பப்பட்டபோது, அவர் தனது நடுவிரலை நீட்டியபோது "அணியுடன் கொஞ்சம் நகைச்சுவையாக" இருந்ததாகக் கூறினார். மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது, ஒரு வீடியோ 700,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அவர் விரைவாக சைகை செய்கிறார், பின்னர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் பற்றிய முதல் தலைப்புச் செய்தியை வழங்குகிறார். வியாழன் அன்று X இல் ஒரு இடுகையில், மோஷிரி 10 விரல்களை உயர்த்தி, அவற்றைக் கீழே எண்ணியபோது, இயக்குனர்…
-
- 4 replies
- 789 views
-
-
நடுவீதியில் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல்… July 15, 201511:02 am நடுவீதியில் ஒரு தகராறு – காரோட்டும் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல் – அதிரடி காணொளி……. http://www.jvpnews.com/srilanka/116595.html ஆடம்பர வாகனமும் அதிகார தோரணையும் அள்ளி வீசும் இந்த அம்மே!அரசியல் வாதியா? அல்லது போதைக்கும்பலா? எதற்கும் ஒரு தகுதி தராதரம் வேண்டுமோ?
-
- 1 reply
- 364 views
-
-
நட்ட நடு ரோட்டில்... பலரும் பார்க்க... ஒரு ஐ போனுக்காக இப்படியா? ஹாங்காங்: தனது பாய் ஃபிரண்ட் ஐ போன் 6 s வாங்கித் தரவில்லை என்பதற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாய் ஃபிரண்டுடன் பிசியான மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது தனக்கு ஐ போன் 6 s வாங்கி தருமாறு தனது பாய் ஃபிரண்டிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தற்போது வாங்கித் தர முடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த பெண், ஏன் வாங்கித் தரமுடியாது என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் …
-
- 1 reply
- 596 views
-
-
அமெரிக்காவின் வொஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் நண்டுகளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்குக் கொண்டு வந்தார். அதில் ஒரு நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் தெரிந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அதைப் பார்த்து வியந்தனர். அந்த நண்டின் உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமன்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் உருவம் போன்றும் தெரிந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39600
-
- 3 replies
- 769 views
-
-
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும். அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன. நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்…
-
- 2 replies
- 668 views
-
-
இந்த ஆண்டு கோடையில், இத்தாலி-அட்ரியா கடற்கரை நீல நிற நண்டுகளால் திண்டாடுகிறது. நீல நிற நண்டுகள், சிறு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கரையோர மீனவர்களின் வலைகளை அறுத்து, வலையில் சிக்கிய மீன்களைச் சிதைத்து மீனவர்களை அதிக எரிச்சல் அடைய வைக்கின்றன. அத்தோடு உல்லாசப் பயணிகள் விரும்பி உட்காரும் கடற்கரைகளில், அவர்களுக்குப் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. கடல் நீர் சூடாகி வருவதால்தான் நீல நிற நண்டுகள் இத்தாலிக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஏறக்குறைய 20 செ.மீ. அகலமும் 10செ.மீ. நீளமும் உள்ள ஒரு கிலோ அளவிலான நீல நண்டுகள் கடல்வாழ் மட்டிகளையும் அழித்து வருகின்றன. இதனால் ‘கடலின் கொலையாளி’ என்று இத்தாலியில் இவற்றை விழிக்கிறார்கள். நீல நண்டுகளால் மனிதருக…
-
- 1 reply
- 327 views
-
-
08 MAR, 2024 | 10:50 AM வர்த்தகரான தனது நண்பன் உறக்கத்தில் இருக்கும்போது அவரது பையில் இருந்த 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற நபர் ஒருவர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணத்தை திருடி தப்பிச் சென்றவர் கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர். …
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் குளில் நீர் நிறைந்து வழிந்த ஒரு குளத்தில் மூழ்கிய வேற்றின பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றும் எண்ணத்தோடு குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். மேற்படி விருது வழங்கும் வைபவம் கடந்த 12-10-2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் தலைநகராக ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது.[size=3][/size] மேற்படி வீரப் பதக்கங்கள் கனடாவில் தங்களது இழப்புக்களைளும் உயிரையம் பொருட்படுத்தாது மற்றவர்களை காப்பாற்றும் பொருட்டு அருஞ்செயல்களை செய்தவர்கள் மற்றும் அவ்வாறான சம்பவங்களில் உயிர் துறந்தவர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில…
-
- 1 reply
- 370 views
-
-
மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார். உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர். பிரான்ஸின் கேனேரி தீவுகளில் தொடங்கிய அவர்களது கடல் பயணம், ஸ்பெயின் கடல்பகுதி கடந்து கரீபியக் கடற்பகுதி வழியாக ஆர்டிக் கடலுக்குள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மோனிக் உடனான பயணம்…
-
- 0 replies
- 211 views
-
-
சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் யங் என்பவர் வீதியோரத்தில் நின்று தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் மஸ்டிப் என்ற நாயும் இருந்தது. நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென யங்கின் ஆணுறுப்பை மஸ்டிப் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால் யங் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் யங்கை வைத்தியசாலையில் சேர்த்தனர். இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்;கள் சுமார் ஆறுமணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யங்வுடன…
-
- 10 replies
- 1.1k views
-
-
[size=2] [/size][size=2] [size=3]நண்பர்களே.......[/size] [size=3]நமது மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.....[/size] [size=3]சமூக வலைத்தளங்களில் நாம் செலவிடும் நேரத்தில் 1மணி நேரம் விக்கீப்பீடியாவில் எழுதினால் போதும்....[/size] [size=3] வரும் தலைமுறையினர் நம் மொழி , இனம்,கலாச்சாரம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள மிக நல்ல வாய்ப்பை விக்கீப்பிடியா கொடுத்துள்ளது[/size][/size]
-
- 0 replies
- 537 views
-
-
தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார். தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார். இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என ச…
-
- 14 replies
- 1.2k views
-
-
நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்து அவரது கருப்பபையிலிருந்த குழந்தையைக் களவாடிய பெண் நிறை மாதக் கர்ப்பிணியான தனது நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்த பின்னர், அவரது வயிற்றைக் கத்தியால் கிழித்து அவரது கருப்பபையிலிருந்த குழந்தையைக் களவாடி அதனைத் தனது குழந்தையென உரிமை கோரிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற…
-
- 0 replies
- 405 views
-
-
நத்தார் பரிசு யேர்மனிய மொழி பேசும் நாடுகளில் "கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 மாலை ஆரம்பமாகின்றது. பெரும்பாலான குடும்பங்களில் "பரிசு வழங்குதல்" மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு நித்திரைக்குப் போன ஒரு பெண்மணி நடு இரவில் விழித்துக் கொண்டார். யேர்மனி ரோசன்ஹைம் (Rosenheim) நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடிந்து இரவு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்மணிக்கு (47) நடு இரவில் விழிப்பு ஏறப்பட்டது. வீட்டின் கதவை உதைத்து, உடைத்து யாரோ உள்நுளையும் அரவமும் கேட்டது. படுக்கையில் இருந்து எழுந்த பெண்மணி பின் கதவால் வீதிக்கு ஓடி வந்து பொலீஸுக்கு அழைப்பை எடுத்து விடயத்தைச் சொன்னார். பொலிஸார் வரும்வரை…
-
-
- 5 replies
- 523 views
-
-
எருது இந்துக்களின் புனித சின்னமாக நோக்கப்படுவது என்பது வழமை என்பதிலும் ஜீவகாருணியத்தின் அடிப்படை என்று கொள்ளலாம். மனித உரிமைகள் தொடங்கி மிருக உரிமைகள் வரை காக்கும் மேற்குலகில் காச நோய்க் கிருமிக்கான சோதனையில் தோல்வி கண்டு காச நோய்க்கான கிருமியைக் கொண்டிருந்ததற்காக கொல்லப்பட இருந்த எருது ஒன்று இங்கிலாந்தில் சட்டத்துறையை ஒரு கை பார்த்துவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இந்துக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த எருதைக் கொல்வதற்கு தடை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்பு பொதுசன மற்றும் மிருகங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. காச நோய் உள்ள மனிதர்கள் எவரையும் கொல்லும் உரிமை மருத்துவ உலகத்துக்கு இல்…
-
- 1 reply
- 1.4k views
-
-
போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளார். குருநாகல் வடகட வீதியில் பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமையும் தெரியவந்துள்ளது. ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் மேலும், பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களின…
-
- 5 replies
- 655 views
- 1 follower
-