செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்…
-
- 5 replies
- 948 views
-
-
தனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகளை விட பெரியது என்றும் இதனால் தனக்கு வீட்டினுள் இருக்க முடியாது எனவும் இத்தாலிய ஆணொருவர் அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில் தற்போது அனைவரும வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுததப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நபர் இத்தாலிய அதிகாரிகளிடம், அவர் தனிமைப்படுத்தப்படவோ அல்லது வீட்டுக்குள்ளேயே இருக்கவோ தயாராக இல்லை, ஏனெனில் அவரது மனைவி மற்றொரு பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை விட அவரது மனைவி மிகப் பெரிய பிரச்சினை என்றும், தனிமைப்படுத்தப்பட வேண்டியதை விட வைரஸுடன் தொடர்பு கொள்வதை அவர் விரும்புகிறார் எனவும்…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன் என்பவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது. இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷியாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல…
-
- 0 replies
- 421 views
-
-
ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் தலையில் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மீது நன்னடத்தை போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிலர் தங்கள் தலையை மொட்டையடித்து அழகை குறைத்து கொண்டு பர்தா அணியாமல் வலம் வருகின்றனர். இந்த நிலையில் தங்களது மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்களும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மனைவியுடன் வெளியே செல்லும் ஆண்கள் தங்கள் தலையை துணியால் மறைத்து சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. http://www.seithy.…
-
- 3 replies
- 536 views
-
-
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் இராணுவ வசமாகிறது சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைப்படவுள்ளது. வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் பெரும் தொகையை செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 361 views
-
-
மனிதர்களைவிட நாய்கள் நல்லவை’ என்கிறார் 23 வயது ஆண்ட்ரூ. வீடில்லாதவர். சாலைகளில் வசிப்பவர். இவருக்கு உற்றத் துணை இவரது செல்ல நாய் ஸ்மோக்கிதான். என்னுடைய வாழ்க்கையைத் தவிர என்னுடன் தொடர்ந்து வருவது இந்த நாய்தான்’ என்று நன்றியுடன் சொல்லுகிறார் ஆண்ட்ரூ. இவர் மட்டும் அல்ல ரொறான்ரோ வீதிகளில் வசிக்கும் பல வீடில்லா அனாதைகளின் உற்ற தோழனாக நாய்கள்தாம் இருக்கின்றன. நாய்கள் வளர்ப்பதனால் இவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களை பல ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அங்கெல்லாம் நாய்கள் வளர்க்க தடை இருக்கிறது. ‘நாய்கள் வளர்ப்பது இவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களுடன் பழக முடியாத இவர்களூக்கு நாய்கள்தாம் வாழ்க்கையை நகற்ற உதவுகிறது’ என்கிறார…
-
- 2 replies
- 539 views
-
-
வேலை செய்யும் இடங்களில்,பல சுவாரசியமான சம்பவங்களை சந்தித்திருப்போம். அவற்றினைப் பகிர்வோமா. £250, 000 செலவு வைத்த ஈமெயில். இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் மேலை நாடுகளில் ஒரு பதட்டம். குறிப்பாக முஸ்லிம் பெயர் கொண்ட, அதிகமாக தமது மத நம்பிக்கைகள் குறித்து வெளிப்பாடாக பேசுவோர் குறித்த பதட்டம் கூடுதலாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்த 'Daimilar-Benz' கொம்பனியில் (அதுதான் நம்ம மேர்சீடிஸ் கார் கம்பெனி) ஒரு மத்திய கிழக்கு சேர்ந்த ஒருவர், help desk support ல் வேலை செய்து கொண்டிருந்தார். தமது மத நம்பிக்கைகள் குறித்து பீத்திக் கொண்டிருப்பார். அவரது முகாமையாளருக்கு, HR பகுதியில் இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது, குறித்த நபர் குறித்து கவனமாக இருக்குமாறும், எதற்கும் ஒரு கண் அவ…
-
- 0 replies
- 551 views
-
-
பறந்துக்கொண்டிருந்த விமானத்துக்குள் பாம்பு : பதற்றத்தில் பயணிகள் (படங்கள்) அலாஸ்காவின் அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான். இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக்…
-
- 0 replies
- 280 views
-
-
கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்து…
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கையில் உள்ளாடை பஞ்சம்? இலங்கையில் உள்ளாடைகள் இறக்குமதிக்குத்தடை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி ஊடகங்களில் கேலிசித்திரங்கள் வரை சென்றுள்ளது. இலங்கைக்குச் செல்வோர் எதை மறந்தாலும் ஜட்டிகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், மறந்தீர்களானால் கச்சை யுடன் தான் அலையவேண்டும். அந்த நாட்டின் சூடான காலநிலைக்கு "கச்சை " பல "இச்சை"களைத் தோற்றுவித்துவிடும் அபாயத்தையும் கவனத்தில் கொள்கவென சிலர் வாரிவிட ஊடகங்களோ ஜட்டிகளை அமெரிக்க தயாரிப்பாக்கி கோவணத்தை உள்ளுர் மட்டத்திற்கு இறக்கிவிட்டுள்ளன. https://www.thaarakam.com/news/ca993f8c-c683-4d4b-a50a-19dd94c6b2c4
-
- 52 replies
- 5.2k views
- 3 followers
-
-
யாழ்.மாவட்டத்தில், மாறு வேடத்தில்... தலைமறைவாக இருந்த, கொலைச் சந்தேகநபர் கைது! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கொலை செய்த வழக்கி…
-
- 0 replies
- 315 views
-
-
ஆடிச் செவ்வாய் எனக் கூறி கோயிலுக்கு சென்ற தனது மனைவி கோயில் தர்மகர்த்தாவுடன் கோயிலு்ககுள் வைத்து அந்தரங்கமாக இருப்பதை அறிந்த கணவன் அங்கு சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ்ப்பகுதியில் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த கோவிலில் ஆடிச் செவ்வாய் என கூறி கும்பிடச் சென்ற தனது மனைவி அங்கு கோவிலு்ககு பொறுப்பாக உள்ள ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருப்பதாக கணவருக்கு தகவல் பறந்துள்ளது. தகவலையடுத்து அக் கோயிலு்ககு சென்ற கணவன் அங்கு மனைவியும் தர்மகர்த்தாவும் தனிமையில் இருப்பதை அவதானித்துள்ளார். அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் கோயில் தர்மகர்த்த அரை நிர்வாண நிலையில் கோயிலை சுற்றி சுற்றி ஓடியதாகவும் இருப்பினும் பெண்ணின் கணவர் அவ…
-
- 4 replies
- 554 views
-
-
இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன என்ற இளைஞரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். பழைய பொருட்களின் உதவியுடன் சிறிய கருவிகளை உருவாக்கிய இந்த இளைஞர் கையடக்க தொலைபேசியின் உதவியுடன் இந்த வெடிகளை வான் நோக்கி அனுப்பியுள்ளார். இந்த முயற்சியை காணொளியாக பதிவு செய்த இளைஞர் அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரின் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/156146
-
- 1 reply
- 383 views
-
-
(எம்.எப்.எம் பஸீர்) நான்கு வருடங்களாக பாடசாலை மாணவனொருவனை பாலியல் நடவடிக்கைககளுக்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலையொன்றின் கணினி ஆசிரியை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இதற்கான உத்தரவை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு பிறப்பித்தார். 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு அதிகாரிகள் நீதிமன்றிற்கு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து நீதிவான் இந்த…
-
- 5 replies
- 602 views
-
-
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க சரியான நேரம் வந்து விட்டது: ராஜபக்சேவுக்கு அமெரிக்கா கண்டிப்பு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சரியான நேரம் வந்து விட்டது என்றும், இனியும் காலம் கடத்தாமல் செயல்பட வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ராஜபக்சேவின் நிர்வாகம், தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும். இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் முகாம்களில் உள்ளார்கள். அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை செய்தால் தான், மனித உரிமைகள் மீது இலங்கை அரசு ம…
-
- 2 replies
- 589 views
-
-
இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ! [Friday, 2014-02-21 14:13:40] பூமிக்கு அடுத்தப்படியாக மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அங்கு ஒரு வழி பயணமாக செல்ல சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ள நிலையில் இஸ்லாமிய ஃபட்வாவின் படி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கு செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக அனுப்ப 'மார்ஸ் ஒன்' என்னும் நிறுவனம் விண்ணப்பங்களை பெற்றுவந்தது. இந்த பயணத்திற்கு உலகெங்கும் உள்ள 2,00,000 மக்கள் ஆர்வமாக விண்ணப்பித்திருந்தனர். அதிக பணச்செலவில் மேற்கொள்ளப்படும் இந்த…
-
- 1 reply
- 912 views
-
-
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் பொல்லார்ட். ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர் விந்துவும் அவரின் 54 வயது பிரித்தானிய மனைவி ஜைனாவின் முட்டையும் செயற்கை கருவுறுதல் மூலம் சுமக்க ஒப்புக் கொண்டவர் லூயிஸ் பொல்லார்ட். எட்டாவது வாரத்தில் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மான்செஸ்டர் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற போது ஸ்கேன் செய்து பார்த்ததில் இரட்டை குழந்தைகள் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இரட்டை குழந்தைகள் இருப்பதை கண்டு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார் லூயிஸ் பொல்லார்ட். ஓமர் பின் லேடன் தற்போது கத்தார் நாடுகளில் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டவர் அவர். பிரித்தானியாவில் இருக்கும் அவரின் மனைவி குழ…
-
- 0 replies
- 671 views
-
-
மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை (jealous) வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன. உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்க்குத் தமது பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாகத் தமது பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துவது போல் நடந்து கொண்டன. அதாவது நாயைப் போன்று குரைக்கக் கூடிய அசையும் பொம்மை நாய் மீது பாசத்தைக் காட்டுவது போன்று நடிக்கும் போது வளர்ப்பு நாய்கள் உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து குறித்த செய்கையைத் தடுத…
-
- 7 replies
- 817 views
-
-
இரும்பு பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு : மனைவி காயம்! Published By: NANTHINI 26 FEB, 2023 | 11:25 AM இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான பபோடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார். இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது விசாலமான இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த குறித்த நபரை மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த…
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
"50 வயதை நெருங்கும்போது 2வது குழந்தையை பெற்றெடுக்க என் அம்மா ஏன் கூச்சப்பட வேண்டும்?" பட மூலாதாரம்,ARYA PARVATHY 12 மார்ச் 2023, 12:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் “அம்மாவும் அப்பாவும் ஒருநாள் எனக்கு ஃபோன் பண்ணி அழுதாங்க. உன்கிட்ட கடந்த சில மாதங்களா நாங்க ஒரு உண்மைய மறைச்சிட்டோம்னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன்,” என்று மலையாளம் கலந்த தமிழில் குதூகலமான குரலில் கூறினார் கேரளாவை சேர்ந்த மோகினியாட்டக் கலைஞர் ஆர்யா பார்வதி. கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆர்யா பார்வதி, அவருடைய பெற்றோருக்கு கடந்த 23 ஆண்டுகளாக ஒர…
-
- 4 replies
- 320 views
- 1 follower
-
-
“கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,யோலந்தே நெல் பதவி,பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார். எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
சுனாமியில் காணாமல் போன மகள், நிச்சயம் ஒரு நாள் கிடைப்பார் என நம்பிக்கையுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தந்தை தேடி வருகிறார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (44). இந்திய விமானப்படை அதிகாரியான சங்கர் சுனாமி ஏற்பட்ட சமயத்தில் கார் நிக்கோபர் தீவில் தனது மனைவி மற்றும் அபூர்வா (8), அருண் (1) என இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக இருந்துள்ளார். என்ன நடக்கிறது என யூகிப்பதற்கு முன்னதாகவே சுனாமி அலை அவர்களது குடும்பத்தைப் பிரித்தது. அலையில் சிக்கி சிறிது நேரம் கழித்து தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற நிதானத்திற்கு சங்கர் வந்தபோது, அவரது மனைவி இடுப்பில் மகனை வைத்தபடி நண்பர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார். ஆனாலும், அச்சிறு…
-
- 3 replies
- 342 views
-
-
DOCTORS were baffled when a British man told them, "I can hear my eyeballs moving". But they finally diagnosed that Stephen Mabbutt had a rare ear condition, in which sounds inside the body were heard very loudly, The Sun reported. Mr Mabbutt, 57, could also hear his heart beating. When he chewed food, the noise was deafening. The dad of two was experiencing autophony, one of the symptoms of superior canal dehiscence syndrome, an illness that was unknown until 10 years ago. At first, he noticed that the internal sound of his own voice was beginning to drown out everything else around him. Over six years, the condition worsened as other bodily no…
-
- 0 replies
- 597 views
-
-
ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம்: பயத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள் (வீடியோ இணைப்பு) நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மாத்வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கு வளர்க்கப்படும் காண்டாமிருகங்களில் ஒன்று அங்கிருந்து வெளியேறி தெற்கு நேபாளத்தில் உள்ள கிடாயுடா நகருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகத்தை விரட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முயற்சி செய்தனர். ஆனால், காண்டாமிருகம், மிரண்டு தறிக்கெட்டு ஓடி சாலையில் சென்றவர்களையும் தாக்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். கா…
-
- 1 reply
- 338 views
-
-
மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!! சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அவருடைய மனைவி தவமணி (30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர். தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளார் மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்த…
-
- 34 replies
- 5.2k views
-