Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கனடா-ஒட்டாவா மக்கள் உலக சாதனையை நிலைநாட்ட கூடிய கணக்கிலடங்கா பனி மனிதர்களை படைகள் போல் செய்துள்ளனர். ஞாயிற்றுகிழமை ஒரு மணித்தியாலத்தில் அதிகூடிய பனி மனிதர்களை செய்து முடித்ததால் கின்னஸ் உலக சாதனையில் ஒரு புதிய இடத்தை பிடிக்கலாம் என நம்புகின்றது ஒட்டாவா. நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து பனியில் இருந்து 1,299 விறைப்பான உருவங்களை அமைத்துள்ளனர். ஒட்டாவாவில் லான்ஸ்டவுன் பார்க்கில் கிட்டத்தட்ட 500-பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இச்சாதனை 2011-ல் சால்ட் லேக் சிற்றி, யுட்டா வில் 1,279 பனி மனிதர்களை உருவாக்கி பெற்றிருந்த உலக சாதனையை முறியடித்துள்ளது. 20-மேலதிக எண்ணிக்கையால் பழைய சாதனையை ஒட்டாவா முறியடித்துள்ளது. - See more at…

  2. மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அமெரிக்க பெண் கைதி ஒருவர் மிகப்பெரிய உணவு பட்டியலை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சாப்பிடத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெல்லி ரெனி கிசென்டானெர். தற்போது 46 வயதாகும் இந்த பெண்மணி மரண தண்டனை கைதி ஆவார். 1997–ம் ஆண்டு கணவர் டக்ளஸ் கிசென்டானெரை கள்ளக்காதலன் கிரிகோரி ஓவனின் உதவியுடன் கத்தி முனையில் கடத்திச்சென்று கொடூரமான முறையில் கெல்லி ரெனி கொன்றார். பின்னர், கணவரின் காரை தீ வைத்து கொளுத்தியதுடன், உடலை எரித்து காட்டு மிருகங்கள் தின்பதற்காக அடர்ந்த காட்டுக்குள்ளும் வீசினார். எனினும் போலீசின் பிடியில் கெல்லி ரெனி சிக்கினார். கணவரின் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகை மூலம் தனது வீட்டி…

  3. சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார். மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு மீனவர் தான் வழக்கமாக மீன் பிடிக்கும் உத்தா ஆற்றில் கார் ஒன்று பாதி மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூழ்கியிருந்த காரை மீட்புப் படையினரைக…

  4. நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வானில் விநோத உருவங்கள் வட்டமிடுவதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். காரணம், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக கூறப்படுகிறது. முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகளாக இருக்கும் என நினைத்த பொதுமக்கள், பின்னர் அவை மனித உருவத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மிக உயரத்தில் பறக்கும் இந்த விநோத உருவங்கள் திடீரென பூமிக்கு வெகு அருகில் வருவதாகவும், பின்னர் அவை மீண்டும் வானத…

  5. இலங்கையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்கள். பிரித்தானியாவில் இருந்து வந்த தாயும் மகனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த இருவரும் குறித்த வீட்டிலுள்ள பொருட்களையே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர். விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த தாயும் மகனும் அந்த வீட்டிலுள்ள சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1373603

  6. நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்ற…

  7. டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார். அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது …

  8. பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. த…

  9. பறக்கும் விமானத்தில் 'குவா குவா'! சீனாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், சீன பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சீன பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பிரவசம் பார்த்தார். குழந்தை சுகப்பிரவசமாக பிறந்தது. தொடர்ந்து அலாஸ்காவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/article.php?aid=53736

  10. உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேர…

  11. `மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது [08 - March - 2008] * `கடல்கோளின் பின் இலங்கைக்கு வந்து சென்றவர்' `மரணத்தின் வியாபாரி'யெனவும் `யுத்தப் பிரபு' என்றும் வர்ணிக்கப்பட்டவரும் உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவருமான விக்ரர் போட் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்டான விக்ரர் போட் பழைய சோவியத் ஒன்றியத்தின் விமானங்களில் லைபீரியா தொடக்கம் ஆப்கானிஸ்தான் வரையில் யுத்த களங்களுக்கு சென்று வந்தவராவார். தலிபன்கள், அமெரிக்க அரசாங்கம், ஆபிரிக்க யுத்தப் பிரபுக்கள், ஐ.நா. என்பன விக்ரர் போட்டின் வாடிக்…

  12. 13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https:/…

  13. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம்பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். வேலை நாட்களை குறைப்பது மட்டுமின்றி, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றம் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல…

  14. பலாங்கொடை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கடன்அட்டையைத் திருடி ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் சந்தேகிக்கப்படும் பௌத்த துறவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியையின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளமை ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே மேற்படி சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் ஆஜர்செய்தபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/artic…

  15. மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை! மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். மார்ச் 20 அன்று கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு தின அழகிப் போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணையில் சந்தேக நபர் புத்தளத்தில் ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு குறித்த மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, சம்பவம் நடந்த உடனேயே அதை…

  16. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண் ஐதராபாத் சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சமீபத்தில் வீட்டிலிருந்து மாயமானார்.இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது 35 வயது பெண் ஒருவருடன் அந்த பெண் ஹைதராபாத்துக்கு சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக அவர்களை காரில் அழைத்து சென்ற ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் ஐதராபாத் முகவரியை கொடுத்தார். பின்னர் போலீசார் அங்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.காரணம் இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது, மேலும…

  17. பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல் ( எம்.எப்.எம்.பஸீர்) பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் இருந்து சென்றுள்ள பெண் ஒருவரே அவரை சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்புத் தரப்பின் உள்ளக தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது, கடந்த 2019 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாதாள உலகக்கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட சில கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கொலை செய்யப்ப…

    • 3 replies
    • 588 views
  18. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மூதாட்டி தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான மூதாட்டி ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்று க்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். …

    • 3 replies
    • 337 views
  19. பதுளை மற்றும் மஹியங்கனையில் மீன் மழை பதுளை மற்றும் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ‘விரானகம’ என்ற கிராமத்தில் மீன் மழை பொழிந்துள்ளது. கடந்த 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களிலும் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். வீடு மற்றும் வயல் நிலங்களுக்கு முன்னால் இவ்வாறு மீன்கள் விழுந்தன எனவும் இதற்கு முன்னர் இப்பகுதியில் இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர். மழைக்கு மத்தியிலும் மக்கள் வீதியில் இறங்கி, விழுந்த மீன்களை பக்கெட்டுகளில் சேமித்து எடுத்து சென்றுள்ள சம்பவமும் இடம்பெற்றது. குறித்த மழை மூலம் சுமார் 100 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் நிலத்தில் விழுந்திருக்ககூடும் எனவும், ஒரு சிலர் 30- 40 கிலோ வரை மீன…

  20. விலங்குகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவற்றின் கூட்டிற்குள் மனிதர்களின் கொண்டாட்டம்.! கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்பட…

  21. உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது. செரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது. இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில்…

  22. டெல்டா எயார்லைன்ஸ் நிறு­வன விமா­ன­மொன்றை முதல் தட­வை­யாக கறுப்­பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்­தினர் அமெ­ரிக்­காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில் முதல் தட­வை­யாக கறுப்­பின பெண்கள் இருவர் தலைமை விமா­னி­யா­கவும் துணை விமா­னி­யா­கவும் பணி­யாற்றி புதிய வர­லாறு படைத்­துள்­ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமா­னியும், டோன் குக் எனும் துணை விமா­னி­யுமே இப்­ பெண்­க­ளாவர். கடந்த ஞாயி­றன்று இவர்கள் முதல் தட­வை­யாக இணைந்து விமா­ன­மொன்றை செலுத்­தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றை கறுப்­பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்­றமை இதுவே முதல் தட­வை­யாகும் http://metronews.lk/?p=2900

  23. கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற கவிதா, புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எஸ்.டி.கே.எஸ். என்ற நர்சரி பள்ளியை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். எனக்கு லதா மகேஷ்வரி என்பவர் உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் மூலமாக கார்த்தி என்பவர் பழக்கமானார். கார்த்தி மூலம் சிலர் நண்பர்களானார்கள். என்னுடைய நர்சரி பள்ளியை லீசுக்கு கேட்டார்கள். பின்னர் திடீரென்று பவர் எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. எனக…

  24. இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை எம்.எஸ்.எம்.ஹனீபா அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்துள்ள இக்கட்டான இந்த காலக் கட்டத்திலும், பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். (R) https://www.tamilmirror.lk/அம்பாறை/இலங்கையில்-சுற்றுலாப்பயணிகளின்-நிலை/74-299582

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.