செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்…
-
- 0 replies
- 701 views
-
-
அவசர போலீஸ் என்பதற்கு அர்த்தம் தெறிக்க உழைத்திருக்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டில் உள்ள ஆக்லேண்ட் போலீஸார். ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகத்தை ஒட்டிய சாலைப் பகுதி செம டேஞ்சரான ஏரியா. காரணம் - சாலையை ஒட்டிய சிறு இறக்கத்தில் ஆழ்கடல் ஆரம்பித்து விடுகிறது. எனவே, ‘கார், பைக்கில் வருபவர்கள் எப்போதுமே அலெர்ட்டாக இருக்க வேண்டும்’ என்கிற எச்சரிக்கைப் பலகையையும் தாண்டி கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்தி விட்டார், 63 வயதான அந்தப் பெண்மணி. கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் சொல்ல, தடாலென காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள் பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் என்னும் போலீஸ் அதிகாரிகள். ‘‘இது மிகவும் ஆழமான பகு…
-
- 6 replies
- 701 views
-
-
[size=4]கோவை: வால்பாறை அரசு பள்ளியில் அசாம் மாநிலக் குழந்தைகள் தமிழ் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள்.[/size] [size=3][size=4]கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தொழிலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் குடியேறிவிட்டனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சமாளிக்க அசாம், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அவர்களின் குழந்தைகள் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அங்கு அவர்கள் தமிழை மொழிப் பாடமாக படித்து வருகிறார்கள். இந்நிலையில் வால…
-
- 2 replies
- 701 views
-
-
அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 50 மில்லியன் டொலர் மாபெரும் பரிசை வென்ற சீட்டைத் தொலைத்த ஜோடியொன்று அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை தேவாலய தரையில் ஒருவர் கண்டுபிடித்து ஒப்படைத்ததையடுத்து தமக்குரிய பரிசை பெற்றுக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை கனடாவில் இடம்பெற்றுள்ளது. நைஜீரிய வம்சாவளி இனத்தவர்களான ஹக்கீமும் அபியோலா நொஸிரும் கடந்த ஜனவரி 17 ஆம் திககி இடம்பெற்ற லொட்டோ மக்ஸ் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் மாபெரும் பரிசை வென்றிருந்தனர். எனினும், அந்த பரிசுக்குரிய சீட்டை அவர்கள் தொலைத்திருந்ததால் அவர்கள் அந்தப் பரிசை உரிமை கோர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் பல மாதம் கழித்து தேவாலயத்தில அந்த பரிசுச்சீட்டை கண்ட நபரொருவர் அதனை மேற்படி ஜோடியிடம் ஒப்படைத்ததையடுத்து திங்கட்கிழ…
-
- 9 replies
- 701 views
-
-
புகழ்பெற்ற ஹோட்டல் வரவேற்பாளர் கொட்டாரப்பட்டு சாத்துகுட்டன் காலமானார் 2014-11-20 10:10:02 கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் 70 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி புகழ்பெற்ற வரவேற்பாளரான, கொட்டாரப்பட்டு சாத்துகுட்டன் நேற்று முன்தினம் தனது 94 ஆவது வயதில் காலமானார். சுமார் 150 வருடகால வரலாற்றைக் கொண்ட கோல்ஃபேஸ் ஹோட்டலில் 1942 ஆம் ஆண்டு முதல் சாத்துகுட்டன் கடமையாற்றினார். இலங்கையின் மிக வயதான ஹோட்டல் ஊழியராக அவர் விளங்கினார். இந்தியாவில் கேரள மாநிலத்தின் கொட்டாரப்பட்டு என்ற ஊரில் பிறந்த சாத்துகுட்டன் இளமைக்காலத்தில் வேலை தேடி இலங்கைக்கு வந்தவர். 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்த காலத்தில் அவர் கோல்ஃபேஸ் ஹோட்டல் வரவேற்பாளரா…
-
- 2 replies
- 701 views
-
-
கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது: மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 …
-
- 0 replies
- 700 views
-
-
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது: பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்! KalaiJan 07, 2023 16:37PM விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைப் பார்த்த அமெரிக்க நிறுவனமும் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதேபோன்று சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனமும் தனது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த சகபயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. AI 102 என்ற ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்…
-
- 0 replies
- 700 views
-
-
பணிவுக்கு வேலை கொடு . Tuesday, 26 February, 2008 12:05 PM . பெய்ஜிங்,பிப்.26: சுயநலம் மிக்க பயணிகள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக சீனாவில் மாபெரும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. . இதனை முன்னிட்டு பார்வை யாளர்களுக்கு இணக்கமான சூழ் நிலையை நாடு முழுவதும் ஏற்படுத் துவதில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போட்டியை காண வரும் பார்வையாளர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலவிதங்களில் அரசு வலியுறுத்தி வருகிறது. பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் வரிசையாக காத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. யாரை பா…
-
- 0 replies
- 700 views
-
-
'ஹிலாரி தேர்தலில் போட்டியிடுவதற்கே முதல்வர் ஜெயலலிதாதான் காரணம்!' சசிகலா புஷ்பா - முதல்வர் அறைதல் விவகாரம், இந்தியா முழுவதும் ட்ரெண்டாகும் ஒரு விஷயம். அதைக் கடந்து, ஹிட் அடித்து இருக்கிறார் குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு. 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஹிலாரி க்ளின்டன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்தார் ஹிலாரி. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஹிலாரி க்ளின்டனும், டொனால்டு ட்ரம்ப்பும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது, குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு பேசினார். அப்போது அவர், "தமிழக முதல்வர…
-
- 8 replies
- 700 views
-
-
ஜோத்பூர்: ஜோத்பூரில், அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் காது, மூக்கு, உதடு, தாடைகளை எலிகள் கடித்தன. பக்கவாத நோய் காரணமான ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், தற்போது மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு, கடந்த திங்களன்று பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அங்குள்ள மதுர தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் சேர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால், அசையக்கூட முடியவில்லை. வென்டிலேட்டர் கருவி மூலம், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதியவரைப் பார்க்க வந்…
-
- 1 reply
- 700 views
-
-
நான் பெற்ற துன்பம் நீங்களும் பெறுங்கள் ....
-
- 4 replies
- 699 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். நியூயோர்க்கில் இடம்பெற்ற அறப்பணி நிகழ்வொன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/128646-2014-09-26-07-38-29.html
-
- 7 replies
- 699 views
-
-
ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு சில வருடங்களில் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும், அதை கட்டிய நபர் உயிர்வாழ்வதாகக் கூறுவார்கள். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற பெண்ணோ, 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த வீடு கட்டுவதற்காக செயற்கையான எந்தப் பொருளையும் உபயோகிக்காமல் கருங்கற்கள், மொசைக்கற்களின் துண்டுகள் என்று இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை சேகரித்து ‘க்ளோ கன்’ எனப்படும் பசை ஒட்டும் இயந்திரத்தின் உதவியுடன் அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக ஒட்டி இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு 35 வருடம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு சிரமப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்கப் போவதில்லை. ஓய்வுக் கால…
-
- 1 reply
- 699 views
-
-
-
- 0 replies
- 699 views
-
-
பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் – கருங்கடலில் இரகசிய மாளிகை உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புடின் ஆற்றும் உரைகளை எழுத்துவடிவமாக்கும் பதவியிலுள்ள Abbas Gallyamov என்பவர், புடின் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்ட…
-
- 5 replies
- 699 views
-
-
யேர்மனியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக உயர்வு இணையம் அறிகிறது. மாவீரர்நாள் காலப்பகுதியில் பல குழப்பங்களை யேர்மனியில் ஏற்படுத்தி வந்து பின் போட்டி மாவீரர்நாளை நடத்தி மூக்குடைபட்டு குறுகிய சிலர் மட்டும் கலந்து கொண்டு அவர்களால் நடத்தப்பட்ட போட்டி மாவீரர்நாள் வெற்றியளிக்காததால் மனமுடைந்து விரக்த்தியில் போட்டி நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கும் நிலைக்கு வந்துள்ள பலரையும் உச்சாகப்படுத்தும் நிமித்தம் பிரித்தானியாவில் தலைமைச்செயலகம் என்று சொல்லி தமிழர்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்தி வரும் சங்கீதன் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யேர்மனிக்கு வந்துள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. …
-
- 2 replies
- 698 views
-
-
Destroyed houses are seen in an abandoned conflict zone where Tamil Tigers separatists made their last stand before their defeat by the Sri Lankan army. Jonathan Kay Nov 8, 2011 – 8:00 AM ET | Last Updated: Nov 8, 2011 10:46 AM ET This isn’t a column about the Middle East. But to make my point, I’m going to start by asking readers to imagine a scenario from that part of the world. Imagine that, sometime in the next few months, Hamas attacks against Israel escalate to the point of all-out war. Hundreds of Israeli tanks roll into Hamas-controlled territory, supported by artillery barrages and round-the-clock bombing runs. Position after position is overr…
-
- 4 replies
- 698 views
-
-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் புலம்பி தவிக்கின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து பத்திரிகைகளோ.., தனது காதலியின் மூலம் தன்னுடைய அடுத்த வாரிசாக உருவாகியுள்ள ரகசிய குழந்தையை புதின் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என யூகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேய்வா(31) என்ற ரஷ்ய நாட்டு அழகு மங்கையுடன் புதின் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் காதல் உறவு வலுப்பெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் உலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய நாட்டு எல்லையில் உள்ள சாண்ட்டா அன்னா டி சார்ஜெனோ என்ற மருத்துவமனையில் புதினுக்கும் அலினா …
-
- 4 replies
- 698 views
-
-
விநாயகர் படம் பதித்த காலணிகள்.. பிரபல ஷூ நிறுவனம் விஷமம்.. குவியும் எதிர்ப்பு! இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை பிரபல ஷு நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்து கடவுளான விநாயகரும் முருகனும் உலகம் முழுக்க பல கோடி மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். இந்து மதத்தை சேராத சில மக்கள் கூட, இந்த இரண்டு கடவுள்களையும் அதிகம் விரும்பி வணங்கி வருகிறார்கள். இந்த நிலையில் விநாயகரை அவமதிக்கும் வகையில் ஹவாயை சேர்ந்த ''மயூ வோக்'' நிறுவனம் ஷுக்களை வெளியிட்டுள்ளது. மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடைகள், வித்தியாசமான உபகரணங்கள், காலணிகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளிலு…
-
- 0 replies
- 698 views
-
-
பாதுகாப்பாக 10 லட்சம் மைல் . Thursday, 28 May, 2009 01:42 PM . லண்டன், மே 28: பிரிட்டனைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் பாதுகாப்பான டிரைவர் விருதை வென்றிருக்கிறாராம். . பீட்டர் நீடின் என்னும் அந்த டிரைவருக்கு 63 வயதாகிறதாம். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தகாலத்தில் அவர் 10 லட்சம் மைல்களுக்கு மேல் பஸ் ஓட்டி சென்றுள்ளார். இதுவரை ஒருமுறை கூட விபத்துக்குள்ளான தில்லையாம். அவருடைய பஸ்சில் ஒரு சிறுகீறல் கூட விழுந்ததில்லையாம். அந்த அளவுக்கு மிகவும் கவனத்தோடு பஸ் ஓட்டி வந்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பான டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. நன்றி மாலைசுடர்
-
- 0 replies
- 698 views
-
-
மக்கள் நெருக்கடி நிறைந்த ஜப்பானில், சவப்பெட்டி அளவு கொண்ட, சின்னஞ்சிறு அறைகளில், மக்கள் வாழ்கின்றனர். உலகிலேயே, அதிக மக்கள் நெருக்கடி கொண்ட நகரங்களில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் ஒன்று. இந்நகரில் வேலை செய்ய, அந்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால், அங்கு இடநெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு களில், சவப்பெட்டி அளவை விட கொஞ்சம் பெரிய அளவு கொண்ட அறைகள், வாடகைக்கு விடப்படுகின்றன. வேலை பார்ப்பதற்காக நாள் முழுதும் அலுவலகங்களில் செலவிடுபவர்கள், தூங்குவதற்கு மட்டும், இந்த அறைகளை பயன்படுத்துகின்றனர். இந்த அறைகளில், சிறிய பொருட்களை மட்டும், வைத்துக்கொள்ள முடியும். மற்றபடி, படுக்கை விரித்து, அதில் தூங்கிக்கொள்ள…
-
- 4 replies
- 697 views
-
-
பிரான்ஸ் நாட்டில், புத்தாண்டு உற்சாகத்தில் பங்கேற்றவர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை எரித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டில், ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முதல் நாள் இரவு, புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் இளைஞர்கள், உற்சாக மிகுதியில், சாலை ஓரங்களில் உள்ள கார்களை, தீ வைத்து கொளுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் அரசு இதை வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக, புத்தாண்டு அன்று, 53 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், இதையும் மீறி, 1,067 கார்கள் எரிக்கப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,''எதிரிகளை பழிவாங்கும் நோக்கில், அவர்கள் புத்தாண்டு உற…
-
- 5 replies
- 697 views
-
-
லண்டன் : பிரிட்டனை சேர்ந்த தொழிலாளி தம்பதியருக்கு லாட்டரிப் பரிசு குலுக்கலில், 480 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. பிரிட்டன் குளோசெஸ்டர் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் நிகல் பேஜ் (43), அவரது மனைவி ஜஸ்டின் லேகாக் (41). வீடு, எஸ்டேட் போன்ற சொத் துக்களை பராமரித்து வரும் பணியில் இருப்பவர் நிகல். இருவரும் இரண்டாவது திருமணத்தின் மூலம் சேர்ந்துள்ளனர். முந்தைய திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு பிரிட்டன் கேம்லாட் நிறுவனம் நடத்திய ஜாக்பாட் பரிசு குலுக்கலில், 480 கோடி பரிசுத் தொகை கிடைத் துள்ளது. மொத்தம் 960 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த குலுக்கலில் மற்றொரு டிக்கெட் வாங்கிய ஸ்பெயின் நாட்டவருடன் இந்த தொகையை பெறுகின்றனர். இந்த 480 …
-
- 5 replies
- 697 views
-
-
அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது. ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி. ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த…
-
- 0 replies
- 696 views
-
-
நிர்வாண செல்பி கேட்டு நச்சரித்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்தினார் புதுப்பெண்! மும்பை: மும்பையில் வருங்கால கணவர் நிர்வாண செல்பி கேட்டதால், ஆத்திரமடைந்த கல்யாணப்பெண் கோபத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தானேயில் கால்செண்டரில் பணிபுரிந்து வரும் ஜிதேந்திரா என்ற 33 வயது இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இருவரும் கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினர். தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர். அதோடு தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், ஜிதேந்திராவுக்கு திடீரென விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது வருங…
-
- 11 replies
- 696 views
-