யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,
எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.
யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.
எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.
யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.
விதிமுறைகள்:
- யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
- கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
- ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
- யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.
"நாமார்க்கும் குடியல்லோம்"
நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
53 topics in this forum
-
ஒரு சாதாரண பயணம் இது கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை - எனது பல பயணங்களில் இதுவும் ஒன்று. இது முதற் தடவையும் இல்லை, இறுதியும் இல்லை - ஆனால் தொடரும் எனது பயணங்களில் ஒன்று. இங்கு இதே முறையில் பலதடவைகள் வந்திருந்தாலும், ஒவ்வொருமுறையும் புதிய அனுபவங்கள் + புதிய மனிதர்கள். முதற்தடவையாக பகிர்கின்றேன். பல பெயர்களை தவிர்த்துள்ளேன். கற்பனை கலக்காத ஒரு பதிவு இது. புதன் கிழமை மச்சான் நான் முதலாம் திகதி திரும்புறன் எப்படா வாறாய்? - தொலைபேசியில் ஒரு கதறலா அதட்டலா என்று புரியாத நண்பனின் குரல். இவனை சமாளிப்பது இலகுவான விடயமில்லை என்று எனக்கும் தெரியும். சிலவேளைகளில் அன்பினால் அதட்டுவதும் அதிக உரிமை எடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மச்சான், எனக்கு கொழும்ப…
-
- 36 replies
- 3.6k views
-
-
புதுவருடமே. .........? புது வருடமே நீ வருகிறாய். .. தீராத வலி சுமக்கும் எமக்கு என்ன தரப்போகிறாய்? எங்கே என் தம்பி. .? எங்கே எம்டன் இருந்த உறவுகள் எங்கே? யாரிடம் கேட்பது?--....... பதில் காலத்தை கேட்பதா - இல்லை கடவுளை கேட்பதா ? தமிழனின் வாழ்க்கை இது என்று வாழ்வதா? வாழ்ந்தோம் வாழ்ந்தோம் சொந்த ஊரில் வாழ்ந்தோம் இழந்தோம் இழந்தோம்-- இன்று எல்லாம் இழந்தோம். கனவுகள் கலைந்து நினைவுகள் சிதைந்து காலோடு கால் தடுமாறி கொண்டு தெருவோரம் நடக்கின்ற குடிகாரன் போல் இருக்கின்ற இன்றைய வாழ்வில். ... புதுவருடமே வந்து என்ன செய்வசெய்வாய். ......?
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம். ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும். ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும். இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும். இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மா…
-
- 52 replies
- 4.7k views
- 2 followers
-
-
கோபம் காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் . வேளைக்கு உணவின்றேல். புகைச்சலுடன் கோபம். ஏழைக்கு இறைவன் மீது கோபம் குழந்தை சிந்தும் உணவின் மேல் கோபம் குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம் உதட்டு அருகே வரும் உணவு கீழே சிந்திய கோவம் எரியும் அடுப்பில் காஸ் தீர்த்து விடடால் கோபம் .. ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் மீது கோபம் விரும்பியது கிடை க்கா விடடால் கோபம் . காத்திருக்கும் அவள்/அவன் வராவிடடால் கோபம் . பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் பசி வேளையில் உணவின்றேல் கோபம் நீண்ட வரிசையி ல் குற…
-
- 15 replies
- 2.5k views
-
-
சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள். அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது. அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது. அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும். சித்திரை வந்தாள் நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும் தத்திமித்தா தையெனும் ஓசை – அட எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே சித்திரையாள் என்னிடம் வந்தாள். கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட மிட்டதனை எங்ஙனம் சொல்வேன் - பிடித் த…
-
- 3 replies
- 1.7k views
-
-
உயிரே! உனக்கேன் என்னோடு பந்தம். .? வசந்தங்கள் உன்னோடு சொந்தம். எனக்கேன் உன் மீது மோகம் ...? இந்த விடை தெரியாத வினாக்கு விடை தேடலே என் வாழ்க்கையாய்போனது. நீ சில வேளைகளில் கண்ணைக் சிமிட்டும் போது ! அந்த நொடி சிதறி கிடந்த என் கவிதைகள் எழுந்து தடுமாறின. உன் விழிகள்இரண்டும் பேசியதால் என் உதடுகள் ஊமையானது. என் இதயம் ! உன் நினைவுகளை கூவிச் சென்றது. விடைபெறும் தருணத்தில் உன்னிடத்தில் சொல்ல விட்டு போகின்றேன். ஆனால் ! என்னுடன் வர மறுக்கின்றது. என் மனசு.......... நரகவேதனை என்றால் என்ன? என்பைத அப்போதுதான் உணர்கிறேன், அந்த நொடி என் மெளனங்களை படித்து பார். ஓராயிரம் அர்த்தங்களை செல…
-
- 1 reply
- 1.5k views
-
-
“அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு …
-
- 37 replies
- 3.3k views
-
-
அன்புள்ள அக்கா இது உங்களுக்கு நீங்கள் இதுவரை முகம் அறியாத உங்கள் தம்பிகளில் ஒருவன் எழுதுவது. காலங்கள் தம் சுவடுகளை பதிந்துவிட்ட அப்பால் நகர்ந்து செல்கின்றன. மனிதன் தன் வாழ்வின் எச்சங்களை இந்தப் பூமிப்பந்தில் விட்டே அப்பால் சென்றுவிடுகின்றான். அந்த எச்சங்கள் பல்கிப்பெருகி விழுதுகளாகிப் படர்ந்து இந்தப்பாரெல்லாம் பரவிக் கிடக்கின்றன. விரிந்த மணற்பரப்பில் பதிந்திருக்கும் அழகான ஆழமான சுவடுகளைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இடையிடையே அள்ளி வீசிய காற்றின் வேகத்தால் சுவடுகள் அழிந்து போயிருந்தன. சில தேடல்களின் பின்னர் அந்த அழகான சுவடுகள், என்மனதின் எதோ ஒரு மூலையில் உறங்கி கிடந்த அந்த ஆழமான சுவடுகள் அந்த மணற்பரப்பில் மீண்டும் என் கண் முன்னே தோன்றின.…
-
- 18 replies
- 2.7k views
-
-
-
இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற்…
-
- 66 replies
- 5.9k views
-
-
"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்கள…
-
- 40 replies
- 4.1k views
-
-
விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகர…
-
- 17 replies
- 4.1k views
-
-
தோள் கொடுப்பான் தோழன் .......... ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய் காத்திருந்தாள். கணவன் அப்போது தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை …
-
- 11 replies
- 3.9k views
-
-
பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவு…
-
- 13 replies
- 2k views
-
-
துருக்கியும்.... நானும். - தமிழ் சிறி. - நான் வேலை செய்யும், இடத்தில்... சந்தித்த, பல... துருக்கி ஆட்களின், 30 ஆண்டு கால... நினைவு மீட்டல். ------ ஒவ்வொரு துருக்கியரும்.... ஜனவரி முதலாம் திகதி பிறந்திருப்பார்.
-
- 143 replies
- 13.1k views
- 1 follower
-
-
அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை…
-
- 36 replies
- 6.6k views
-
-
எனது சின்னமகன் பட்டப்படிப்பு முடியும் தருவாயில் 3 மாதம் வேலை செய்து அந்த வேலை சம்பந்தமான அறிக்கை சமர்ப்பித்து நேரடி பரீட்சையிலும் சித்தி பெறணும் அதன்படி பெரிய கம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தான் இவனோடு ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு ஆபிரிக்கர் இவன் என 3 பேரை அந்த நிறுவனம் எடுத்திருந்தது இவர்களுக்கு பொறுப்பானவர் ஒரு பிரெஞ்சுக்காறர். 3 மாதம் முடியும் தருணம் இவர்களுக்கு பொறுப்பானவர் வெளிநாட்டுக்காரரான இருவருக்கும் மிகவும் உதவியாக இருந்தார் பரீட்சைக்கு எவ்வாறு எழுதுவது நேர்முகத்தெர்வில் எவ்வாறு பதிலளிப்பது என்பது போன்று உதவியதோடு மட்டுமன்றி இறுதி நாள் நேரடி பரீட்சை நடைபெறும் இடத்துக்கும் நே…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீன…
-
- 39 replies
- 3.1k views
- 1 follower
-
-
ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலம் பல அழியாத நினைவுகளை நகர்த்திக் செல்கிறது. அவற்றில் பாடசாலைக் காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும் இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது மேற்பா ர்வையிலேயே நடைபெறும் . மனைவி மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் .. .மூத்தவன் கேசவனின் நண்பன் ..பக்கத்து வீட்டு பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள். கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி கற்றார்கள்…
-
- 16 replies
- 2.1k views
-
-
என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவ…
-
- 11 replies
- 2.6k views
-
-
சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ…
-
- 13 replies
- 1.2k views
-
-
பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் …
-
- 27 replies
- 6.7k views
-
-
ஏகாந்தமாய் இம்மாலையில் அன்பே, உன் தோள் சாய நான் தூங்காமல் காத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டுந்தான் நீ வருவாயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக்கிடக்கிறாய். நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே நடப்பதுவும் சேர்ந்தே விழிப்பதுவும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் மட்டும் முடிகிறது. உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதிற்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இருந்ததில்லை இருந்தும் ஏகாந்தத்தை இரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று…
-
- 17 replies
- 3.5k views
- 1 follower
-
-
அழகோ அழகு பள்ளிச் சிறுமி பருவம் அடைந்ததும் பேரழகு பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு மணப்பெண்ணுக்கு மாலையிடட மணமகன் அழகு மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற அழகு அழகுக்கு குழந்தையின் மழலை ப் பேச்சு அழகு தத்தி த்தவளும் மழலையின் முதலடி அழகு தத்தி நடைபயிலும் மழலையின் ஒவ்வொரு அசைவும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு புரிந்து நடக்கும் மனையாள் ஆடவனுக்கு அழகு பெற்றோருக்கு முதற் குழந்தை பெருமித அழகு என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட அழகு ஆண் பிள்ளையும் ப…
-
- 6 replies
- 5k views
-