Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

 

விதிமுறைகள்:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
  9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  1. அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம்…

  2. என்ன அண்ண ஆஸ்பத்திரி பக்கம் கந்தசாமியரோ கால்கிலோ கத்தரிக்காயும் கருவாடும் வாங்கிட்டு போக வந்தேன் இந்த குசும்பு தானே வேணாங்கிறது பின்ன ஆஸ்பத்திருக்கு வருவது என்னத்துக்காக இல்லை நீங்கள் ஆஸ்பத்திரி பக்கமே வாரது கிடையாது அதான் கேட்டேன் என்றார் விமலன் ஒன்றும் இல்லை லேசான தலைச்சுற்றாக இருந்தது அதுதான் வந்தன் என்றார் கந்தசாமியர் . ஓ அப்படியா உங்களுக்கு பிரசர் வந்திருக்கிறது சுகர், கொலஸ்ரோல் எல்லாம் செக் பண்ணுன நீங்களோ ?? இல்லை அந்த வருத்தங்கள் எல்லாம் இல்லையடா எனக்கு நீங்கள் சொல்லுவியள் ஆனால் உடம்ப செக் பண்ணுனால் தானே தெரியும் டகித்தர் வந்த பிறகு நான் கூட்டிக்கொண்டு கதைச்சு விடுறன் நீங்கள் இந்த வாங்கில இருங்கோ என்றுசொல்லி போனார் விமலன். விமலன் சொன்ன கதையை கேட்டு கந்தசாம…

  3. விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகர…

  4. இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று…

  5. ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலம் பல அழியாத நினைவுகளை நகர்த்திக் செல்கிறது. அவற்றில் பாடசாலைக் காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும் இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது மேற்பா ர்வையிலேயே நடைபெறும் . மனைவி மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் .. .மூத்தவன் கேசவனின் நண்பன் ..பக்கத்து வீட்டு பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள். கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி கற்றார்கள்…

  6. நம்பிக்கையும் ஏமாற்றமும். “என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள், பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். “ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி.“ என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச…

  7. நெகிழி குணாளனுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது. குணாளனின் தந்தையார் கந்தையருக்கும் கடுப்பேறிப் பேசிக்கொண்டே துப்பரவு செய்துகொண்டிருந்தார். கந்தையற்றை துணைவி பாக்கியமக்காவும் விடுவித்தகாணியைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட வேணுமெண்ட அவாவிலை ஷஷ துலைவாங்கள் நிலமெல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்கள்,, என்று புறுபுறுத்தவாறு குப்பைவாரியால் குப்பைகளை இழுத்து ஒன்றாக்குவதில் முனைப்போடு நின்றார். ஆனால் இழுக்க இழுக்க வளவுக்குளாலை ஒரே பொலித்தீனாகவே வந்துகொண்டிருந்தது.. " உவங்கள் கண்ணிவெடியை எடுத்து முடிச்சாலும் இது முடியாதுபோல கிடக்கென்று,, அங்கலாய்த்தவாறு இழுத்துக்கொண்டு நிற்க, அடுத்த வளவு அன்னம்மாக்காவும் தனது காணியை நோக்கி நடந்தவாறு " என்ன பாக்கியமக்கா மண்ணோட சண்டையோ! என்…

    • 16 replies
    • 4k views
  8. Started by nochchi,

    போர்ப்பரிசு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சுமதிபால அங்கேயிருந்த சீமேந்தாலான இருக்கையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி, தனது முழங்காலைத் தடவிக்கொண்டு பெருமூச்செறிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மா! என்ற சத்தம் அவனது சிந்தனையை சிதறடிக்க சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். அங்கே வெள்ளைப் பிரம்போடு ஒருவர் எழும்பமுயன்றுகொண்டிருந்தார். அருகே சென்ற சுமதிபால, அவரைத் தாங்கிக் கொண்டு வந்து தானிருந்த இருக்கையில் இருத்திவிட்டு, "வத்துறு பொனவத,, என்று கேட்டான். வெள்ளைப் பிரம்போடிருந்தவர் வேண்டமென்று தலையசைத்தார்.இவனே பேச்சைத் தொடர்த்தான். "கொய்த யன்ன,, என்று கேட்கவும், நான் தமிழ் என்று கூறிவிட்டு அமைதியாக, ஒரு சில மணித்துளிகள் அமைதியாகக் கழிந்தன. சுமதிபாலாவோ கொச்சைத…

    • 15 replies
    • 3.5k views
  9. கோபம் காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் . வேளைக்கு உணவின்றேல். புகைச்சலுடன் கோபம். ஏழைக்கு இறைவன் மீது கோபம் குழந்தை சிந்தும் உணவின் மேல் கோபம் குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம் உதட்டு அருகே வரும் உணவு கீழே சிந்திய கோவம் எரியும் அடுப்பில் காஸ் தீர்த்து விடடால் கோபம் .. ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் மீது கோபம் விரும்பியது கிடை க்கா விடடால் கோபம் . காத்திருக்கும் அவள்/அவன் வராவிடடால் கோபம் . பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் பசி வேளையில் உணவின்றேல் கோபம் நீண்ட வரிசையி ல் குற…

    • 15 replies
    • 2.5k views
  10. Started by yakavi,

    சுமை எனக்கு கவிதை எழுத கற்றுக் தந்தவன் நீ. ... கன தூரத்தில் இருக்கிறாய். ஆனால். . நான் உன் நினைவுகளை சுமந்த படி சுமையையுடன் இருக்கிறேன். .....

    • 14 replies
    • 1.4k views
  11. Started by விசுகு,

    ஆனந்தம் விளையாடும் வீடு இது ஆனந்தம் விளையாடும் வீடு 5 அன்றில்கள் ஒன்றான கூடு இது தான் அவர்களால் அவர்கள் வீட்டில் அநேகம் பாடப்பட்ட பாடல். அன்பான அம்மா அடித்தே இருக்காத அப்பா வசதியான நாடு திறமையான பிள்ளைகள் மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது சாதி வந்து குறுக்கிட்டது குடும்பம் சின்னாபின்னமாகியது தகப்பனார் கோமா நிலையில் வைத்தியசாலையிலிருந்தார் கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி அவர் பெற்ற பிள்ளை பாசமாக வளர்ந்த வளர்த்த படித்த பிள்ளை சொன்னது சாதி வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.

  12. சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ…

    • 13 replies
    • 1.2k views
  13. பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவு…

    • 13 replies
    • 2k views
  14. மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சி…

  15. Started by விசுகு,

    எனது சின்னமகன் பட்டப்படிப்பு முடியும் தருவாயில் 3 மாதம் வேலை செய்து அந்த வேலை சம்பந்தமான அறிக்கை சமர்ப்பித்து நேரடி பரீட்சையிலும் சித்தி பெறணும் அதன்படி பெரிய கம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தான் இவனோடு ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு ஆபிரிக்கர் இவன் என 3 பேரை அந்த நிறுவனம் எடுத்திருந்தது இவர்களுக்கு பொறுப்பானவர் ஒரு பிரெஞ்சுக்காறர். 3 மாதம் முடியும் தருணம் இவர்களுக்கு பொறுப்பானவர் வெளிநாட்டுக்காரரான இருவருக்கும் மிகவும் உதவியாக இருந்தார் பரீட்சைக்கு எவ்வாறு எழுதுவது நேர்முகத்தெர்வில் எவ்வாறு பதிலளிப்பது என்பது போன்று உதவியதோடு மட்டுமன்றி இறுதி நாள் நேரடி பரீட்சை நடைபெறும் இடத்துக்கும் நே…

  16. தோள் கொடுப்பான் தோழன் .......... ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய் காத்திருந்தாள். கணவன் அப்போது தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை …

  17. என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவ…

  18. 1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எ…

  19. அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்க…

  20. ஈஸ்டர் கவிதை பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன் வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர் செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே ஆக்கினையை உங்களுக்காய் அனுபவ…

    • 7 replies
    • 5.1k views
  21. ஏகாந்தமாய் இம்மாலையில் அன்பே, உன் தோள் சாய நான் தூங்காமல் காத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டுந்தான் நீ வருவாயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக்கிடக்கிறாய். நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே நடப்பதுவும் சேர்ந்தே விழிப்பதுவும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் மட்டும் முடிகிறது. உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதிற்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இருந்ததில்லை இருந்தும் ஏகாந்தத்தை இரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்…

  22. புதுவருடமே. .........? புது வருடமே நீ வருகிறாய். .. தீராத வலி சுமக்கும் எமக்கு என்ன தரப்போகிறாய்? எங்கே என் தம்பி. .? எங்கே எம்டன் இருந்த உறவுகள் எங்கே? யாரிடம் கேட்பது?--....... பதில் காலத்தை கேட்பதா - இல்லை கடவுளை கேட்பதா ? தமிழனின் வாழ்க்கை இது என்று வாழ்வதா? வாழ்ந்தோம் வாழ்ந்தோம் சொந்த ஊரில் வாழ்ந்தோம் இழந்தோம் இழந்தோம்-- இன்று எல்லாம் இழந்தோம். கனவுகள் கலைந்து நினைவுகள் சிதைந்து காலோடு கால் தடுமாறி கொண்டு தெருவோரம் நடக்கின்ற குடிகாரன் போல் இருக்கின்ற இன்றைய வாழ்வில். ... புதுவருடமே வந்து என்ன செய்வசெய்வாய். ......?

  23. அழகோ அழகு பள்ளிச் சிறுமி பருவம் அடைந்ததும் பேரழகு பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு மணப்பெண்ணுக்கு மாலையிடட மணமகன் அழகு மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற அழகு அழகுக்கு குழந்தையின் மழலை ப் பேச்சு அழகு தத்தி த்தவளும் மழலையின் முதலடி அழகு தத்தி நடைபயிலும் மழலையின் ஒவ்வொரு அசைவும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு புரிந்து நடக்கும் மனையாள் ஆடவனுக்கு அழகு பெற்றோருக்கு முதற் குழந்தை பெருமித அழகு என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட அழகு ஆண் பிள்ளையும் ப…

  24. அன்பர் ஒருவர் நன்றாக மது அருந்துவார் வேலை முடிய சனி ஞாயிறு எப்பொழுதும் மது தேவை அதே நேரம் அவருக்கு எப்பொழுதும் ஒருவர் துணையாக மது அருந்தணும் இவரே செலவளிப்பார்... இவ்வாறு தான் அந்த நரி இவர் வீட்டுக்குள் வந்தது.... இவரை மதுவில் மயங்க வைத்து அல்லது வெளியில் அனுப்பிவிட்டு அவரது மூத்தமகள் மீது அது வெறிகொண்டது சகல வித மாயங்களுக்கும் மயங்க மறுத்த அவள் மீது பலாத்காரத்தை பயன்படுத்தி இச்சையை தீர்த்துக்கொண்டது நாளாக நாளாக அடுத்தவள் மீது பாய்ந்தது இறுமாப்போடு தொடர்ந்தது ஒரு நாள் இதைக்கண்ணுற்ற மூத்தவள் தற்கொலை செய்ய முனைந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்டு நிரந்தரமாக வலது குறைந்தவளானாள். காவல்த்துறை வரை ச…

  25. இரும்பாய் கனத்த என் இதயம் துடுப்பிழந்த படகைப்போல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு அன்னிய தேசத்தில் அனாதையாய் எங்கெங்கோ புலப்படும் ஒளி இழந்த மின் விளக்குகள் போல் தெரிகிறேன் கொஞ்சம் கொஞ்சமாய் ! என்னுள் அன்று இழந்தவையோ இருக்கின்றன இன்னும் அணையாமல் நினைவெனும் நினைவிடத்தில் ! என் நிதர்சனத்தின் நீண்ட பயணத்தில் நீங்காது நீள்கின்றன நீறு பூத்த ஆறாத ரணங்களாய் எட்டாண்டின் நினைவுகள் ! காலச்சுழற்சியில் கற்பனைகளும் கலைந்துப்போக வன்னி மண் நினைவுகள் மட்டும் என் உணர்வை விலை பேசியதாய் ஏன் தானோ நிலையாய் நிற்கின்றன? உணர்வுகள் உருக்குலைந்தன உறவுகளும் உடைந்துபோகின நிதானமான என்னை நிர்கதியாக்கின அன்றைய நாள்... என்னை நித்தமும் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.