தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
பழமொழியில் இந்துமதம் - சுவாமிநாதன் தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்…
-
- 3 replies
- 5.3k views
-
-
பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று பழமொழிக்கு பல அர்த்தங்கள் உண்டு இது வரை நான் அறிந்த பழமொழிகளை பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்றும் பழமொழி என்றும் இருபதிவாக பதிவிட்டுள்ளேன். இப்பதிவில் நான் படித்த பலமொழிகளை தொகுத்துள்ளேன். பழமொழி என்றால் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு…
-
- 2 replies
- 9.5k views
-
-
ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன்…
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலை மாவட்டம் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்த அளவில் மிக முற்போக்கான ஒருமாவட்டமாக திகழ்ந்திருக்கின்றது எனலாம். இதற்கு எண்பிற்பாக ஈழத்தின் முதல் நாவல் எனச் சில்லையூர் செல்வராஜன் போன்ற சிலராலும், சித்திலெப்பை அவர்களின் ’அசென்பேயிண்ட சரித்திரம்’ நாவலுக்கு அடுத்த இரண்டாவது நாவலென கமாலுதீன் போன்ற வேறு சிலராலும் கூறப்படும் ’ஊசோன்பாலாந்தைகதை’ எனும் நாவல்(1891) திருகோணமலை பெரிய கடையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி அவர்கள் எழுதியதும், தமிழ் கூறும் நல்லுலகின் முதலாவது வரலாற்று நாவல் எனக் கூறப்படும் 'மோகனாங்கி 'யைப்(1895) படைத்த தி.த.சரவணமுத்துப் பிள்ளையைப்(1867-1922) பெற்றெடுத்த மண்ணும், புதுக்கவிதை எனும் வடிவம் தமிழில் சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' போன்ற பத்திரிகைகளில் வெளிவரத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பாமரர் வழக்கே பாவலர் வழக்கு தேர்வு முடிவு வெளியானதும் மாணவன் ஒருவன் “அஞ்சும் (ஐந்தும்) பாஸ்” என மகிழ்ச்சியில் குதிக்கிறான். அவன் ஐந்தும் எனச் சொன்னதை வைத்து அவன் எழுதிய தேர்வுத் தாள்கள் மொத்தமே ஐந்து என்பது நமக்குப் புலனாகிறது. “இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்” என நவில்வது தொல்காப்பியம். மேற்கூறிய எடுத்துக்காட்டில் மொத்தம் இவ்வளவுதான் என (இனைத்தென) அறிந்த சினை முதற்சொல் (ஐந்து) வினைச்சொல்லுடன் இணையும் இடத்தில் (‘பாஸ்’ செய்தல் என்ற வினைப்படு தொகுதியில்) “உம்” வேண்டும். “அஞ்சும் பாஸ்” எனச் சொன்னவன் தொல்காப்பியனை அறிந்திலன்; அதனைக் கேட்டு மொத்தம் ஐந்து தாள்கள் எனப் பு…
-
- 2 replies
- 946 views
- 1 follower
-
-
"தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற பாரதியாரின் கவிதை வரிகள் தனி ஒரு கவிதையாக உள்ளதா அல்லது கவிதையொன்றின் பகுதியாக உள்ளதா? தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.. பி.கு. இக் கவிதை வரிகள் கமல் நடித்த "மகாநதி" படத்திலும் வந்ததாக ஞாபகம்.
-
- 0 replies
- 1.8k views
-
-
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அ…
-
- 4 replies
- 5.7k views
-
-
தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு. முத்தி தருபவன் அவனே; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே;பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்" எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுக…
-
- 0 replies
- 549 views
-
-
திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன. அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத் தெரியவில்லயே!" என்று பாடுகிறார். ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்…
-
- 2 replies
- 884 views
-
-
பிழை இருந்தால் திருத்துங்கள்!! மிதி வண்டிக்கான பாகங்கள் seat, saddle = குந்துகை, இருக்கை handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.) wheel = வளவி (கையில் போடுவதும் வளவி தான்.) mud guard = மட் காப்பு (மண்+காப்பு) stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.) carrier = தூக்கி pedal = மிதி spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழுக்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.) wheel rod = வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டையே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப்பலவற்ற…
-
- 19 replies
- 1.7k views
-
-
பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ? தவறு என்று தெரியாமல் செய்வது பிழை தெரிந்தே செய்வது குற்றம் பிழை மன்னிக்கப்படலாம் தவறு தண்டிக்கப்படும் பிழை வேறு குற்றம் வேறு
-
-
- 1 reply
- 571 views
- 2 followers
-
-
-
பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன் தர்மத்தின் மனிதன் என்று ஒருவனையாவது உங்களால் சுட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒன்றிலோ அல்லது மற்றொன்றிலோ அவர்கள் தம் தர்மத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மகாபாரதத்தில் தர்மத்தின் மனிதன் என்று சுட்டிக்காட்டும்படி ஒருவன் இருந்தான். இராமாயணத்தில் கும்பகர்ணனைப் போலத் தன் அண்ணன்களிடம் அபரிமிதமான பாசம் கொண்டவன், கர்ணனைப் போலச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன், தன் குடும்பப் பாரம்பரியத்தின் மேல் கொண்ட மரியாதையால் தன் அண்ணிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்ந்த போது அதைத் தட்டிக் கேட்டவன் அவன். அப்படிப்பட்ட தர்மவான் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. திருதராஷ்டிரனின் மகன்களில் ஒருவர் விகர்ணன். இவரது காதுகள் பெரிதாக இருந்தமையால…
-
- 1 reply
- 1.4k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள மலேயன் கஃபேயில் வடை+டி குடிக்க இன்று குந்தியபோது முன்னால் இருந்த கடையின் பெயர்ப் பலகை தென்பட்டது. புடைவை புடவை எது சரி. கொஞ்சம் தேடியதில் மண்டை காய்ந்து குழப்பம் அதிகமானதே தவிர வேறெதுவுமில்லை பரம்பொருளே. அவ்வையார் தனது வெண்பாவில் இப்படி கூறுகின்றார். கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய் எருதாய் முழப்புடவை யாகித் – திரிதிரியாய்த் தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே கோரைக்கால் ஆழ்வான் கொடை. சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறையில் இப்படி கூறுகின்றார். பொய்தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடங்கழிந்து மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமையூன்றிக் காணாமே இரவின்கண் செய்…
-
- 35 replies
- 8.2k views
-
-
-
புனைவு என்னும் புதிர்: ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம் ஷோபாசக்தி கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது. ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகி…
-
- 0 replies
- 987 views
-
-
புறம் கூறுதல்! வேறொரு பகுதியில் "புறம் கூறுதல்" என்ற சொல்லில் வருகின்ற "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கும் என்பதில் எனக்கும் நண்பர் நெடுக்காலபோவானிற்கும் ஒரு விவாதம் ஏற்பட்டுள்ளது. புறம் கூறுதல் என்பது ஒருவரிடம் நேரடியாக குறைகளை சொல்லாது அவர் இல்லாத நேரத்தில் குறையை கூறுவது ஆகும். இந்த விடயத்தில் இருவரும் ஒத்துப் போகிறோம். ஆனால் பிரச்சனை இங்கே "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதாகும் நெடுக்காலபோவன் "புறம்" என்ற சொல் "குறை" என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்று கூறுகிறார். நான் "புறம்" என்ற சொல் குறை கூறும் இடத்தை (அதவாது நேராக இன்றி புறமாக) குறிக்கும் என்கிறேன். இந்தச் சொல் கூறப்படுகின்ற விடயத்தை (குறையை) அடிப்படையாக இல்லாது, குறை கூறப்படுக…
-
- 94 replies
- 28.3k views
-
-
புல் மேலே பனித்துளி by என். சொக்கன் நூல்: நாலடியார் (நல்லினம் சேர்தல் #171) அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும், நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப் புல் பனிப் பற்று விட்ட ஆங்கு பாடியவர்: சமண முனிவர்கள் அறியாத பருவத்தில், அடங்காதவர்களோடு சேர்ந்து சில பிழைகளைச் செய்துவிட்டீர்களா? அதனால் பாவம் சேர்ந்து இப்போது வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இனிமேல் நீங்கள் நல்ல நெறியில் செல்கிறவர்களுடன் சேர்ந்து பழகி வாழுங்கள். அதன்மூலம் உங்களுடைய பழைய குற்றங்கள் தானாக மறைந்துவிடும். நம்பமுடியவில்லையா? அதிகாலையில் புல்தரையைக் கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு புல்லின் நுனியிலும் பனித்துளி படர்ந்து அதை நனைத்திருக்கும், ஆனால் பின்னர…
-
- 3 replies
- 954 views
-
-
பூவினத்தொடும் புள்ளினத்தொடும் - சுப. சோமசுந்தரம் உலகில் எந்த ஒரு தொன்மையான மனித நாகரிகமானாலும், அந்த 'நாகரிக' மனிதர்களின் வரையறையின்படி இப்போதும் 'நாகரிகமடையாத' தொல் பழங்குடி இனமானாலும் தாவரங்களுடனும் விலங்குகளுடனும் மனிதன் ஒரு இயைந்த வாழ்வையே கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. இந்த இணைப்பை நாம் தமிழ் இலக்கிய உலகில் நின்று ரசிக்கும்போது இது தொடர்பில் தமிழர்தம் மாண்பையே கூறுவதாய் அமைவது தவிர்க்க இயலாதது. இவ்வாறே ஏனைய மனிதர்க்கும் எனக் கொள்ளுதல் சிறப்பு - அனைவரும் இவ்வாறு இலக்கியமாய் எழுதி வைக்கவில்லை என்பதைத் தவிர. மேலும் நமக்கு வாய்த்ததை…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
பூவின் ஏழு பருவப் பெயர்கள் பூவின் பெயர்கள் பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம் பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும்வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது. பருவத்துக்கு ஒரு பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது. …
-
- 0 replies
- 7.7k views
-
-
இன்றைய சூழலில் எல்லாப் பெண்களும் மலரணிகிறார்கள். அவர்களிடம் ஏன் மலரணிகிறீர்கள்? என்று கேட்டால்....... அவர்கள் சொல்வார்கள்..... அழகுக்காக அணிகிறோம்..... மணத்துக்காக அணிகிறோம்..... என்று இன்னும் பல காரணங்களைக் கூறுவார்கள்..... எப்போதிருந்து மலர் அணிகிறீர்கள் என்று கேட்டால்..... நீண்ட காலமாகவே அணிகிறோம் என்பார்கள்............. அவர்களில் பலருக்குச் சங்க கால மகளிர் மலரணியும் மரபு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கும். ஆம்.... சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை. அவ்வாறு திருமணம் ஆகாத பெண் ஒருத்தி மலரணிந்திருந்தால் அவள் யாரையோ காதலிக்கிறாள்.... அவன் சூட்டிய மலர் தா…
-
- 0 replies
- 699 views
-
-
தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன எனினும் தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை. பேதை (07 வயதுக்குக் கீழ்) பெதும்பை(07 - 11 வயது) மங்கை(11 - 13 வயது) மடந்தை(13 - 19 வயது) அரிவை(19 - 25 வயது) தெரிவை(25 - 31 வயது) பேரிளம்பெண்(31 - 40வயது) இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை
-
- 23 replies
- 12.1k views
- 1 follower
-
-
பெண்ணைக் குறிக்கும் சொற்கள், தமிழில் ஏராளம் உண்டு. அதில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களுக்கும் தனித்தனிப் பெயர்கள். இவற்றைத்தவிர, வேறு சில சொற்களும் உள்ளன. அவை, அணங்கு, ஆடவள், ஆட்டி, இளம்பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பூவை, பெண்டு, மகடூ, மகள், மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை, நங்கை, மதங்கி, யுவதி, விறலி.
-
- 5 replies
- 13.3k views
-
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். +++ நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.
-
- 11 replies
- 1.4k views
-
-