Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு! கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். ... இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி. மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்திலேயே சனிக்கிரக்தை கணடறிந்தவர்கள் நம் முன்னோர்கள். சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்ற…

    • 6 replies
    • 1.4k views
  2. மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். கீழே உள்ள பாடலில் திரிபதாதி சொல் ஒளிந்துள்ளது. முன்னொரு ஊரின் பேராம் முதலெழுத்து இல்லாவிட்டால் நன்னகர் மன்னர் பேராம் நடுவெழுத்து இல்லாவிட்டால் கன்னமா மிருகத்தின் பெயர் கடையெழுத்து இல்லாவிட்டால் உன்னிய தேனின் பேராம் ஊரின் பேர் விளம்புவீரே !! விடை : மதுரை 1. துரை 2. மரை 3, மது இதே மாதிரி வேறு எதாவது திரிபதாதி பாடல் தெரிந்தால் பகிரவும்.

  3. இது ஒரு பழைய பாடல் தான்.. பல முறை கேட்டு கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அப்படி இல்லை. புத்தனுக்கு ஞானம் வந்ததுபோல், ஓர் மாலையில் காதில் விழுந்த இந்த வரிகளும் எண்ணுறக்கம் திண்கிறது. பாடல் வரிகளை கேட்பதனால் இன்பமா இல்லை அது மீட்டுத்தரும் நினைவுகள் இன்பமா தெரியவில்லை. பாடலில் ஒளிந்திருக்கும் மறைபொருள் இதுவோ!? அதுவோ ?!! என்று என் கற்பனைகளையும் அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது உடலெங்கும் இன்பம் தோய்கிறது. உங்கள் கற்பனைகளே.. உங்கள் உயிர்ப்பினை உறுதி செய்யும்..! கீழ் உள்ள வரிகள் உங்களுக்காக. சுட்டிக்காட்டிய வரிகளுக்கு பொருள் அறிந்தாலும் / புரிந்தாலும் பதிவிடுங்கள். அறிய ஆவல் !! மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மய…

  4. வணக்கம், இது தமிழ் மொழியின் தொன்மையும் அதன் பரம்பலும் பற்றிய ஒரு ஆய்வு காணொளி. இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.

  5. கடிதம் தமிழில்லையா ? ** தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எளிதாய் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். “இப்ப டைம் என்ன ?” என்பதில் எது ஆங்கிலச் சொல் ? ‘டைம்’ என்பது ஆங்கிலச் சொல். இது உடனே நமக்குத் தெரிகிறது. டைம் என்பதற்கு நேரம் நல்ல தமிழ்ச்சொல். ‘இப்ப நேரம் என்னாச்சு ?” என்று தமிழில் கேட்கலாம். “டைம் ஆச்சு. கிளம்புங்க” என்பதைப் போலவே “நேரம் ஆச்சு. கிளம்புங்க” என்று சொல்வதும் வழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தைப் போலவே வடசொற்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ”நல்ல உதாரணத்தோடு பேசினான்” என்பதில் வடசொல் எது ? ‘உதாரணம்’ என்பது வடசொல். உதாரணம் என்பதற்கு ‘எடுத்துக்காட்டு, சான்று’ ஆகியன தகுந்த தமிழ்ச்சொற்க…

    • 1 reply
    • 2.7k views
  6. நினைவு கூர்தலா, நினைவு கூறுதலா ? எது சரி ? நினைவு கூறுதல், நினைவு கூர்தல் என்னும் இருவகையான தொடர்களுக்குள் குழப்பம் வருகிறது. “என் இளமைக் காலத்தை நினைவு கூறுகிறேன்” என்று எழுதுவதா ? “என் இளமைக் காலத்தை நினைவு கூர்கிறேன்” என்று எழுதுவதா ? அத்தொடரின் பொருள் என்ன ? ஒன்றினை ஆழ்ந்து நினைத்துப் பார்க்கும் செயல் என்று தெரிகிறது. நினைவு மேலோட்டமானதாக இருக்கும்போது அதனை மேலும் துலக்கமாக எண்ணிப் பார்ப்பது. ஒன்றுக்கு இரண்டுமுறை நினைத்துப் பார்ப்பது. நினைவுக்குள் சரிபார்ப்பது. இதுதான் அத்தொடரின் பொருள். நினைவு கூறுதல் என்றால் என்ன ? கூறுதல் என்பதற்குப் பொருள் தெரியும். ஒன்றினைச் …

  7. திசை காட்டி எழுத்துக்கள்.

  8. திருக்குறள் 1330 குறள்கள் பொருளுடன்

  9. ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள் முன்னுரை - ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடலும் அதன் குடிவழிகளும் தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளி…

  10. குறிஞ்சி நில மக்களின் உணவு முறைகள்.. மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலச் சூழலுக்கு ஏற்றவாறு தம் வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றனர். இது பண்டைக்காலந்தொட்டு இன்றுவரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயற்கையான தொடர் நிகழ்வாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நில வாழ்வியலையும் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம். இவற்றுள் பாலையானது கரடுமுரடான பகுதியாகும். இங்கு வழிப்பறிகள் நடைபெறுவதுண்டு. இதுதான் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் தொழிலாக விளங்கியுள்ளது. தங்களின் நிலத் தன்மைக்கேற்றவாறே மக்களும் தங்களின் தொழில் முறைகளை உருவாக்கிக் கொண்டனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். அந்த வகையில் குறிஞ்சி நில மக்கள் மலை சார்ந்த பகுதிகளில் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை…

    • 2 replies
    • 14.8k views
  11. தவளை கத்தினால் மழை. அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம். தும்பி பறந்தால் தூரத்தில் மழை. எறும்பு ஏறில் பெரும் புயல். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை. மாசிப் பனி மச்சையும் துளைக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. புற்று கண்டு கிணறு வெட்டு. வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய். காணி தேடினும் கரிசல் மண் தேடு. களர் கெட பிரண்டையைப் புதை. கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. நன்னிலம் கொழுஞ்சிநடுநிலம் கரந்தைகடை நிலம் எருக்கு. நீரும் நிலமும் இருந்தாலும்பருவம் பார்த்து பயிர் செய். ஆடிப்பட்டம் பயிர் செய். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். மழையடி புஞ்சைமதகடி நஞ்சை. களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. உழவில்ல…

    • 1 reply
    • 1.6k views
  12. வடமொழியால் விளக்க முடியாததை வள்ளுவன் விளக்கினான்.எப்படி தெரியுமா? நீதியரசர் ராமசுப்ரமணியன்

  13. தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழித்தொடர்பு

    • 0 replies
    • 1.7k views
  14. உலக மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம்

    • 0 replies
    • 1.3k views
  15. ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர். ஆய்வும் எழுத்தும் ஆய்வு என்பது எழுத்து வடிவத்திற்குரிய விடயமாகவே நவீன ஈழத்து தமிழ்ச் சூழலில் புழங்கப்பட்டு வருகிறது. காரண காரிய ரீதியானஇ அறிவுபூர்வமான விடயங்களின் மொழியாகஇ வடிவமாகஇ ஊடமாக எழுத்து வடிவம் கொள்ளப்பட்டு வருகிறது. காலனியத்திற்கு முந்திய காலத்தில் வாய்மொழி மரபுகள் அறிவின் மொழியாக அமைந்த நீண்ட உறுதியான பாரம்பரியம் இருந்தும்இ ஆய்வின் மொழியாக எழுத்து வடிவத்தைத் தாண்டிச் சிந்திப்பது அல்லது கற்பனை செய்வது கூட சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. நவீன மயமாக்கம் என்னும் கலனியமயமாக்கம் திணித்துவிட்ட எழுத்தின் ஆதிக்கம், அதிகாரம் வாய்மொழி மரபுகளின் அறிவுருவாக்கல் பண்புகளை நிராகரித்துவி…

  16. சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் .. உருவெழு கூளியரும் .. சங்க இலக்கியங்கள் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்துப் பேசுகின்றன. சங்கக் கலைஞர்கள் கலைகளை வளர்ப்பதற்கென்றே தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டுள்ளனர். கலைவேறு வாழ்கை வேறு என்று அறிய முடியா வண்ணம் அவர்களின் வாழ்வியல் கலையோடு பின்னிப்பிணைந்திருந்தது. அவ்வகையில் இரவலர்க் கலைஞர்களாக அறியப்பெறும் குறுங்கூளியர் குறித்தும், அவரில் மற்றொரு பிரிவினரான உருவெழு கூளியர்கள் குறித்துமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் விரவியேக் காணப்படுகின்றன. இக்கலைஞர்கள் குறித்து உரையாசிரியர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவற்றில் உள்ள சில புரிதல்களை முன்வைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.…

  17. தமிழர் பண்பாட்டில் கள் .. திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்…

    • 1 reply
    • 2.3k views
  18. போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக. ➵ உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா? ➵ ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன? ➵ இது தமிழின் குறைபாடா இல்லையா? இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு. என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப…

    • 7 replies
    • 3.6k views
  19. ஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி

  20. உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்களின் பங்கு உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்களின் பங்கு — கமலநாதன் பத்திநாதன், களுவன்கேணி — உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்கள் மற்றும் மரபுத்தொடர்களின் வகிபாகம் உலக இயங்கியலிலே மனித வலுக்களின் பெறுதியானது மிகத் தேவைப்பாடானதாகும். தனித்தனி மனிதர்களின் கூட்டு வடிவமான சமூகம், அதன் உறுப்பினர்களான ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடைமுறைகளிலும் சிறப்பான செல்வாக்கை செலுத்துகின்றது. அவ்வாறான வாய்ப்புக்களையும், இருப்புக்களையும் உரிய வகையில் பயன்படுத்தியோரும், தவறாக பயன்படுத்தியோரும் பெறும் பயன்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இவ்வ…

    • 0 replies
    • 1.9k views
  21. 01. உங்களின் பெயர்களை சங்க காலத்து தமிழியிலும் , பல்லவர் காலத்து தமிழ் வட்டெழுத்திலும் எழுதிப்பார்த்துக்கொள்ளுங்கள். 02. உங்களின் சூழலிலுள்ள பழந்தமிழ்க்கல்வெட்டுகள் , ஏடுகளை நீங்களாகவே உச்சரித்து வாசியுங்கள். உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள் 247 எழுத்துக்களையும் பார்க்க - https://drive.google.com/.../1KJRwelxSbZeRr.../view

  22. கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள் முன்னுரை எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது மனித இயல்பு. இருப்பினும், பழமையை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. அத்தகைய பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை. கலை, இலக்கியங்கள் மரபைப் பின்பற்றியதால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மரபின் அடிப்படையிலேயேயாக்கப் பெற்றுள்ளன. இவ்வகத்திணைப் பாடல்கள் மிகப் பழமையனவாக இருப்பினும், இன்றும் அவை ஆளுமைத்தன்மை மிக்கதாக விளங்குவதைக் காணலாம். சங்க அகப்பாடல் உருவாக்கத்தில் திணை, துறை அமைப்புகள் வழி நின்று கபிலர் எத்தகைய மரபைப் பின்பற்றியுள்ளார் என்பதை சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அகமும் புறமும் சங்கப்பாடல்களை அகம், புறம் என்ற இரு பெரும்பிரிவுகளுள்…

  23. சங்கத் துறைமுகம் - முசிறி முன்னுரை ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்…

    • 1 reply
    • 9.5k views
  24. ஐங்குறுநூற்றில் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் .. முன்னுரை ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இந்நூலில் மொத்தம் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் காணப்படுகின்றன. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றுத் திணைகளில் ஐந்தாவது திணையாகவும் மற்றும் இறுதித் திணையாகவும் இடம்பெறுவது முல்லைத் திணையாகும். இம்முல்லை நிலமே ஆய்வுக்களமாக அமைகின்றது. இம்முல்லைத் திணையின் ஆசிரியர் பேயனார் ஆவார். இத்திணையில் செவிலி கூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து…

    • 1 reply
    • 3.4k views
  25. Started by Eelathirumagan,

    நண்பர்களே!! தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள். அன்புடன் - ஈழத்திருமகன் -

    • 69 replies
    • 37.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.